வவுனியாவில் விவசாயியின் மகன் 3A சித்திகளைப் பெற்று சாதனை!!

தங்கராசா பிரதீஸ்

எனது தந்தை விவசாயம் மேற்கொண்டு கஸ்டப்பட்டு தான் என்னை படிக்க வைத்தார். அவர் சிந்திய வியர்வையின் பலனை தற்போது நான் அடைந்துள்ளேன் என வவுனியா மாவட்டத்தில் வர்த்தகப் பிரிவில் முதலாவது இடத்தினை பெற்ற தங்கராசா பிரதீஸ் தெரிவித்தார்.

வெளியாகிய உயர்தரப் பரீட்சைப் பெறுபேற்றில் வவுனியா புதுக்குளம் மகா வித்தியாலயத்தினை சேர்ந்த தங்கராசா பிரதீஸ் 3A சித்திகளைப் பெற்று மாவட்டத்தில் முதல் நிலை பெற்றுள்ளார்.

தனது பரீட்சைப் பெறுபேறு குறித்து கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

தினசரி 5 கிலோமீற்றர் பேருந்தில் பயணித்து தான் பாடசாலைக்கு வருகை தந்து கல்வி கற்றேன். தினமும் பாடசாலையில் கற்பிக்கும் பாடங்களை வீட்டிற்கு சென்றதும் மீளப்படிப்பேன் அத்துடன் பரீட்சை தாள்களும் செய்து பார்ப்பது வழமை. எனது தந்தை விவசாயம் மேற்கொண்டு என்னை கற்பித்தார்.

சட்டத்தரணி ஆகவதே எனது எதிர்கால இலட்சியமாக கொண்டு இப் பரீட்சை பெறுபேற்றினை பெற்றுள்ளேன். கஷ்டம் என்பது பெரிய ஒரு விடயமே இல்லை. எமது மனநிலை படிப்பில் மாத்திரம் இருந்தால் சிறந்த பேறுபேற்றை அடைய முடியும் என தெரிவித்தார்.

வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலய மாணவி சுலக்சனா சாதனை : சாதனைக்கு வறுமை தடையல்ல!!

மாணவி சுலக்சனா

பாடசாலை தினசரி இரண்டு கிலோமீற்றர் தூரம் துவிக்கச்கரவண்டியில் சென்று கல்வி கற்றே நான் இந்த நிலமையினை அடைந்துள்ளேன். சாதனைக்கு வறுமை தடையல்ல என வவுனியா மாவட்டத்தில் உயிரியல் பிரிவில் முதலாவது இடத்தினை பெற்ற மதனமோகன் சுலக்சனா தெரிவித்தார்.

வெளியாகிய உயர்தரப் பரீட்சைப் பெறுபேற்றில் வவுனியா புதுக்குளம் மகா வித்தியாலயத்தினை சேர்ந்த மதனமோகன் சுலக்சனா 3A சித்திகளைப் பெற்று மாவட்டத்தில் முதல் நிலை பெற்றுள்ளார். தனது பரீட்சைப் பெறுபேறு குறித்து கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

நான் தரம் 1 தொடக்கம் உயர்தரம் வரையில் புதுக்குளம் மகா வித்தியாலயத்தில் தான் கல்வி கற்கு வருகின்றேன். எனது வீட்டிலிருந்து தினசரி 2 கிலோமீற்றர் தூரம் துவிச்சக்கரவண்டியில் பயணித்து தான் பாடசாலை சென்று கல்வி கற்றேன்.

நான் அம்மம்மா மற்றும் சித்தியுடன் இருந்து தான் கல்வி கற்கு வருகின்றேன். என்னை படிப்பித்தது முழுவதுவே அவர்கள் தான் அத்துடன் எனது எதிர்கால இலட்சியமாக வைத்தியராக வரவேண்டும் என்பது அதன் முதற்கட்ட படியினை தற்போது நான் அடைந்துள்ளேன்.

அத்துடன் அனைத்து மாணவர்களும் உற்சாகமாக படித்தீர்கள் என்றால் நீங்களும் சிறந்த பேறுபேற்றினை அடைய முடியும் என தெரிவித்தார்.

குறித்த மாணவி கா.பொ.த சாதாரண தர பரீட்சையில் 9A சித்திகளை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டில் உ யிரிழந்த யாழ் இளைஞன்: சோ கத்தில் குடும்பத்தினர்!!

யாழ் இளைஞன்

யாழ்ப்பாணத்து இளைஞர் ஒருவர் இந்தோனேசியாவில் உ யிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

யாழ்ப்பாணம் மருதனார்மடத்தினை சேர்ந்த ஜேம்சன் என்ற இளைஞனே இந்தோனேசியாவில் உ யிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த இளைஞன் இந்தாண்டு வெளிநாடு சென்றுள்ள நிலையில் நேற்றைய தினம் உ யிரிழந்த தகவல் கிடைத்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

உ யிரிழந்தமைக்கான காரணம் இதுவரை வெளியாகாத போதும், இளைஞரின் ம ரணம் தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

71 பேரின் பரீட்சை பெறுபேறுகள் இரத்து!!

பரீட்சை பெறுபேறுகள்

2019 ஆம் ஆண்டிற்கான உயர்தர பரீட்சையில் 71 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கான உத்தியேகப்பூர்வ காரணங்கள் வெளியிடப்படவில்லை.

ஓகஸ்ட் 5ஆம் திகதி முதல் ஓகஸ்ட் 31ஆம் திகதி வரை நடைபெற்ற க.பொ.த. உயர்தர பரீட்சையில் 3 லட்சத் 37 ஆயிரத்து 704 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர். எனினும் இவர்களில் ஒரு லட்சத்து 81 ஆயிரத்து 126 பரீட்சார்த்திகள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான மீள்பரிசீலனை விண்ணப்பங்களை ஜனவரி மாதம் 17 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் கணித பிரிவில் சாதனை படைத்த மாணவன்!!

சிவராசா ரேனுஜன்

இந்த வருடம் இடம்பெற்ற க.பொ.த உயர்த பரீட்சை பெறுபேறுகள் நேற்று (27.12) பிற்பகல் பரீட்சை திணைக்களத்தால் வெளியிடப்பட்டது. வெளியான பெறுபேறுகளின்படி கணித பிரிவில் கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய மாணவன் மாவட்ட ரீதியில் முதல் இடத்தை பெற்றுள்ளார்.

கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வி கற்ற சிவராசா ரேனுஜன் என்னும் மாணவனே இவ்வாறு மாவட்ட ரீதியில் முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

கடந்த ஓகஸ்ட் 5ஆம் திகதி முதல் ஓகஸ்ட் 31ஆம் திகதி வரை நடைபெற்ற க.பொ.த. உயர்தர பரீட்சையில் 337,704 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.

அவர்களில் ஒரு லட்சத்து 81 ஆயிரத்து 126 பரீட்சார்த்திகள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் 71 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் வறுமையிலும் சாதனை படைத்த மாணவன் : கண்ணீர் மல்க சாதனையை விபரித்த சோகம்!!

இராமகிருஷ்னன் துலக்சன்

வறுமையிலும் சாதிக்க முடியும் என்பதை உலகிற்கு வெளிக்காட்ட வேண்டும் என்ற எனது தன்னம்பிக்கையே மாவட்ட மட்டத்தில் முதலிடத்தைப் பெற முடிந்தது என வவுனியா மாவட்டத்தில் பௌதிக விஞ்ஞானதுறையில் முதலிடம் பெற்ற இராமகிருஷ்னன் துலக்சன் தெரிவித்தார்.

வெளியாகிய உயர்தரப் பரீட்சைப் பெறுபேற்றில் வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகாவித்தியாலயத்தினை சேர்ந்த இராமகிருஷ்னன் துலக்சன் 3A சித்திகளைப் பெற்று மாவட்டத்தில் முதல் நிலை பெற்றுள்ளார்.

தனது பரீட்சைப் பெறுபேறு குறித்து கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வெளியாகிய பரீட்சைப் பெறுபேற்றில் மாவட்டத்தில் முதலிடம் பெற்றமை மகிழ்ச்சியாக இருக்கின்றது. எனது தந்தை கமம் செய்துதான் என்னை கற்பித்தார் எனது குடும்பம் மிகவும் வறுமைக்கோட்டிற்குட்பட்டது.

நான் தினசரி 6 கிலோமீற்றர் தூரம் துவிச்சக்கரவண்டியில் பயணித்து தான் எனது கல்வியினை தொடர்ந்தேன். தனது குடும்பத்தின் நிலமையினை அறிந்த பாடசாலை ஆசிரியர்கள் என்னிடம் பாடசாலை சார்ந்த எவ்வித கட்டணங்களும் அரவிடவில்லை.

அத்துடன் நான் ஒர் ஆசிரியர் வீட்டிருந்து தான் எனது கல்வியினை தொடர்ந்தேன். தற்போது மகிழ்ச்சியாக இருக்கின்றது. எனது பரீட்சை பெறுபேற்றினை கேள்வியுற்றதுடன் எனது வீட்டில் நேற்றிரவு அனைவருமே உணவு உண்ணவில்லை. அந்த அளவிற்கு மிக சந்தோசத்தில் எனது வீட்டார் இருக்கின்றனர்.

இரவு 12 மணிவரை நான் கல்வி கற்பேன். அவ்வாறு கல்வி கற்றதன் பிரதிபலிப்பே இப் பரிட்சை பெறுபேற்றினை அடைந்துள்ளேன். எதிர்காலத்தில் பொறியலாளராக வருவதே எனது இலட்சியமாகும்.

இறுதியில் கண்ணீர் விட்டு அழுது வறுமையினை ஒர் காரணமாக வைத்து படிப்பினை கைவிட வேண்டாம் என தெரிவித்துடன் தனக்கு கற்பித்த பாடசாலை ஆசிரியர்கள் , தனியார் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் எனது கல்விக்கு உதவிய அனைவருக்கும் நன்றிகள் என தெரிவித்தார்.

உயிரியல் பிரிவில் யாழ். இந்துக்கல்லூரி மாணவன் சாதனை!!

கிருஷிகன் ஜெயனாந்தராசா

க.பொ.த உயர்தர பரீட்சைக்கான பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில், உயிரியல் (Bio) பிரிவில் யாழ். இந்துக்கல்லூரி மாணவன் கிருஷிகன் ஜெயனாந்தராசா அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.

அத்துடன், குறித்த மாணவர் யாழ். மாவட்டத்தில் முதல் நிலையையும் பெற்றுள்ளார். இவருடைய செட் வெட்டுப்புள்ளியானது 3.19 என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, 2019ம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தர பரீட்சைக்கான தமது பெறுபேறுகளை https://doenets.lk/examresults இல் மாணவர்கள் பார்வையிட முடியும்.

உயர்தர பரீட்சை பெறுபேறுகளை, சுட்டெண் மாத்திரமின்றி தேசிய அடையாள அட்டை இலக்கத்தினை பதிவு செய்வதன் மூலமும் பார்வையிட முடியும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின : 181,126 பேர் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு!!

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள்

2019ம் ஆண்டிற்கான உயர்தர பரீட்சை பெறுபேறுகள் நேற்று இரவு வெளியாகியுள்ளன. அதனடிப்படையில் ஒரு லட்சத்து 81 ஆயிரத்து 126 பரீட்சார்த்திகள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் 71 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான மீள்பரிசீலனை விண்ணப்பங்களை ஜனவரி மாதம் 15ம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

2019ம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தர பரீட்சைக்கான தமது பெறுபேறுகளை https://doenets.lk/examresults இல் மாணவர்கள் பார்வையிட முடியும்.

அதேவேளை உயர்தர பரீட்சை பெறுபேறுகளை, சுட்டெண் மாத்திரமின்றி தேசிய அடையாள அட்டை இலக்கத்தினை பதிவு செய்வதன் மூலமும் பார்வையிட முடியும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கணிதம் மற்றும் வர்த்தக பிரிவிலும் யாழ். இந்து கல்லூரி மாணவர்கள் சாதனை!!

சிவானந்தம் ரகுராஜ்

2019ம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தர பரீட்சைக்கான பெறுபேறுகள் நேற்று மாலை வெளியிடப்பட்டுள்ளன.

வெளியாகியுள்ள முடிவுகளின் அடிப்படையில், கணிதம் மற்றும் வர்த்தக பிரிவிலும் யாழ். இந்து கல்லூரி மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொண்டுள்ளனர்.

இதன்படி, வர்த்தகப் பிரிவில் யாழ். இந்துக் கல்லூரியைச் சேர்ந்த சிவானந்தம் ரகுராஜ் எனும் மாணவன் யாழ். மாவட்டத்தில் முதலிடத்தையும், அகில இலங்கை ரீதியில் 107வது இடத்தையும் பெற்றுள்ளார்.

கணிதப்பிரிவிலும், யாழ். இந்துக் கல்லூரியைச் சேர்ந்த ரவீந்திரா யதுசன் எனும் மாணவன் யாழ். மாவட்டத்தில் முதல் இடத்தையும், அகில இலங்கை ரீதியில் 12ம் இடத்தையும் பெற்றுள்ளார்.

இதேவேளை, உயிரியல் (Bio) பிரிவில் யாழ். இந்துக்கல்லூரி மாணவன் கிருஷிகன் ஜெயனாந்தராசா அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடத்தை பெற்று சாதனை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இறுதி யு த்தத்தில் தந்தையை இழந்த மாணவி படைத்த சாதனை : குவியும் பாராட்டுக்கள்!!

இரவிச்சந்திரன் யாழினி

இறுதி யு த்தத்தில் த ந்தையை தொ லைத்துவிட்டு சிறு வயதிலிருந்து ஒரு கையை இ ழந்த தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வணிகத்துறையில் முல்லைத்தீவு மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்று சாதித்துள்ளார் மாணவி இரவிச்சந்திரன் யாழினி.

நேற்று (27.12) பிற்பகல் வெளியாகியுள்ள பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் தேவிபுரம் பகுதியைச் சேர்ந்த புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவி இரவிச்சந்திரன் யாழினி வணிகத்துறையில் மாவட்ட ரீதியில் முதலிடத்தை பெற்றுள்ளார்.

இ றுதிக்கட்ட யு த்தத்தின் போது தனது தந்தையை தொ லைத்து கா ணாமல் போனவர்கள் பட்டியலில் தந்தையை தேடிக்கொண்டிருக்கும் குறித்த மாணவி ஒரு கையை இ ழந்த தன்னுடைய தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வரும் நிலையில் வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளில் வணிகத்துறையில் மாவட்ட ரீதியில் முதலாமிடம் பெற்று சாதித்துள்ளார்.

இவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துவரும் நிலையில் இவருடைய தாயாரையும் பாராட்டி வருகின்றனர். வ றுமையிலும் கணவர் காணாமல் போயுள்ள நிலையிலும் தனது இரண்டு பிள்ளைகளையும் கல்வியில் முன்னேற்றுவதற்காக உ ழைக்கிறார் இந்த தாய்.

வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலய மாணவன் வர்த்தகப் பிரிவில் மூன்றாம் இடம் பிடித்து சாதனை!!

கிருஷ்ணகுமார் கிஷாந்தன்

இந்த வருடம் இடம்பெற்ற க.பொ.த உயர்த பரீட்சை பெறுபேறுகள் நேற்று (27.12.2019) பிற்பகல் பரீட்சை திணைக்களத்தால் வெளியிடப்பட்டது.

வெளியான பெறுபேறுகளின்படி வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலய மாணவன் வர்த்தக பிரிவில் வவுனியா மாவட்டத்தில் மூன்றாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்ற கிருஷ்ணகுமார் கிஷாந்தன் என்ற மாணவனே இவ்வாறு வர்த்தக பிரிவில் வவுனியா மாவட்டத்தில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார்.

கடந்த ஓகஸ்ட் 5ஆம் திகதி முதல் ஓகஸ்ட் 31ஆம் திகதி வரை நடைபெற்ற க.பொ.த. உயர்தர பரீட்சையில் 337,704 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கணிதப் பிரிவிலும் யாழ் இந்துக்கல்லூரி மாணவன் சாதனை!!

ரவீந்திரா யதுசன்

நேற்று வெளியான க.பொ.த உயர்தர பரீட்சைப் பெறுபேறுகளின் படி கணிதப் பிரிவில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியைச் சேர்ந்த ரவீந்திரா யதுசன் எனும் மாணவன் யாழ் மாவட்டத்தில் முதல் இடத்தையும் அகில இலங்கை ரீதியில் 12 ம் இடத்தையும் பெற்றுள்ளார்.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியைச் சேர்ந்த ரவீந்திரா யதுசன் எனும் மாணவன் யாழ் மாவட்டத்தில் முதல் இடத்தையும் அகில இலங்கை ரீதியில் 12 ம் இடத்தையும் பெற்றுள்ளார். கணிதப்பிரிவில் சாதனை படைத்த யதுசனுக்கு வாழ்த்துக்கள்.

கடந்த ஓகஸ்ட் 5ஆம் திகதி முதல் ஓகஸ்ட் 31ஆம் திகதி வரை நடைபெற்ற க.பொ.த. உயர்தர பரீட்சையில் 337,704 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் மிகவும் பின்தங்கிய கிராமமான நெடுந்தீவில் இம்முறை 3A : தமிழ் மாணவன் சாதனை!!

யேசுதாசன் கிறிஸ்துராஜன்

இவ்வருடம் இடம்பெற்ற க.பொ.த உயர்தர பரீட்சைக்கான பெறுபேறுகள் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

கிடைக்கபெற்ற தகவலுக்கு அமைய இலங்கையில் மிகவும் பின்தங்கிய கிராமமான நெடுந்தீவு மகாவித்தியாலயத்தினை சேர்ந்த மாணவன் யேசுதாசன் கிறிஸ்துராஜன் 3A சித்திகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

கலைப்பிரிவில் 3A சித்திகளைப் பெற்றுள்ளதுடன், மாவட்ட நிலையில் 03வது இடத்தினையும் பெற்று கொண்டுள்ளார். இதேவேளை, தேசிய ரீதியில் 288வது இடத்தினையும் பெற்று யேசுதாசன் கிறிஸ்துராஜன் பாடசாலைக்கும் பெருமை தேடித்தந்துள்ளார்.

உயர்தர பரீட்சையில் சித்தியடையத் தவறிய ரஞ்சன் ராமநாயக்க!!

ரஞ்சன் ராமநாயக்க

இன்று வெளியான க. பொ. த உயர்தர பரீட்சையில் முன்னாள் அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க சித்தியடையத் தவறியுள்ளார். சட்டத்தரணியாகும் கனவில் இம்முறை உயர்தர பரீட்சை எழுதிய ரஞ்சன் ராமநாயக்க பரீட்சையில் தோல்வியடைந்துள்ளார்.

தனது பரீட்சை பெறுபேறுகளை ரஞ்சன் ராமநாயக்க தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அதற்கமைய அவர், அரசியல் S, தகவல் தொடர்பு மற்றும் ஊடகம் S, கிறிஸ்தவம் F, ஆங்கிலம் A, பொது அறிவு 50 புள்ளிகளையும் அவர் பெற்றுள்ளார்.

இந்த பெறுபேறுகளுக்கமைய சட்டக்கல்லூரியில் கற்கும் வாய்ப்பை ரஞ்சன் ராமநாயக்க இழந்துள்ளார். 56 வயதான ரஞ்சன் ராமநாயக்க இம்முறை உயர்தர பரீட்சை எழுதியமை பலருக்கும் முன்னுதாரணமாக அமைந்திருந்ததாக பலரும் பாராட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

த ற்கொ லை செய்துகொண்ட நடிகர் : கடிதம் சிக்கியது!!

நடிகர்

Kushal Punjabi(37) என்ற நடிகர் நேற்று இரவு த ற்கொ லை செய்து கொண்ட நிலையில் அவரின் த ற்கொ லை கடிதம் சிக்கியுள்ளது.

முப்பையை சேர்ந்த Kushal Punjabi தொலைக்காட்சி தொடர்களில் நடித்துவந்துள்ளார். 2015ஆம் ஆண்டு இவருக்கு ஐரோப்பாவை சேர்ந்த காதலி Audrey Dolhen என்பவருடன் திருமணமான நிலையில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்த தம்பதிக்கு 3வயதில் Kian என்ற மகன் உள்ளான். மணவாழ்வு மு றிவு உள்ளிட்ட பல குழப்பத்தில் இருந்த Kushal Punjabi நேற்றிரவு மகனின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதன் பின் சில மணி நேரத்தில் த ற்கொ லை செய்துகொண்டர் Kushal.

காலையில் உறவினர்கள் பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். பதிவிட்ட புகைப்படம் (instagram) சம்ப இடத்திற்கு விரைந்த பொலிசார் உடலை மீட்டு பி ரேத ப ரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, அவர் கைப்பட எடுதிய த ற்கொ லை கடிதம் ஒன்று சிக்கியுள்ளது. அதில் “என் இறப்பிற்கு யாரும் காரணம் இல்லை. என் சொத்தில் 50 சதவிகிதத்தை பெற்றோருக்கும், சகோதரிக்கும் பிரித்து வழங்கவும்.

மேலும், 50 சதவிகிதத்தை என்றுடைய மூன்று வயது மகனுக்கு வழங்கவும்” என்று குறிப்பிட்டுள்ளார். இதனை தொடர்ந்து பொலிசார் த ற்கொ லைக்கு வேறு காரணங்கள் உள்ளனவா என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், ரசிகர்கள் இ றப்பு குறித்து டிவிட்டர் பக்கத்தில் தங்கள் வருத்ததை பதிவிட்டு டிரெண்ட் செய்து வருகின்றனர்.

இரத்தக் கறையும் கா யங்களும் இல்லை : பிரபல மொடல் ம ரணத்தில் விலகாத ம ர்மம்!!

பிரபல மொடல்

தொலைக்காட்சி தொகுப்பாளினியும் பிரபல மொடலுமான ஜாகி ஜான் ம ரணத்தில் வேறு நபர்களின் தொடர்பு உள்ளனவா என பொலிசார் தீவிர விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

குடும்ப நண்பரும் பொதுமக்களும் அளித்த தகவலின் அடிப்படையில் டிசம்பர் 23 ஆம் திகதி கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் ஹில் கார்டன் பகுதியில் அமைந்துள்ள ஜாகி ஜானின் குடியிருப்புக்கு சென்ற பொலிசார்,

பூட்டிய கேட்டின் உள்ளே ஜாகியின் தாயார் எந்த சலனமும் இன்றி நின்றிருப்பதை கண்டுள்ளனர். அந்த குடியிருப்பின் முன் வாசலும், பின் வாசலும் திறந்த நிலையில் இருந்துள்ளது. குடியிருப்புக்குள் சென்ற பொலிசார், சமையலறையில் ம ரணமடைந்த நிலையில் கிடந்த ஜாகியின் ச டலத்தை மீட்டுள்ளனர்.

மேலும், சமையலுக்கு தயாராக காய்கறிகள் நறுக்கிய நிலையில் இருந்துள்ளது. சமையலறையில் ஜாகி தடுக்கி விழுந்ததில், தலையின் பின்பகுதியில் ஏற்பட்ட காயமே ம ரண கா ரணமாக இருக்கலாம் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

ர த்தக் க றையோ கா யங்களோ அவரது உ டலில் காணப்படவில்லை. 45 வயதான ஜாகி சமையலறையில் தடுக்கி விழுந்தாரா அல்லது இரண்டாவது நபர் அவரை தள்ளிவிட்டாரா என்பது தொடர்பில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், உடற்கூராய்வுக்கு பின்னரே ம ரண காரணம் என்ன என்பது உறுதி செய்ய முடியும் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ஜாகியின் மொபைல் போனை கைப்பற்றியுள்ள பொலிசார், தற்போது அவரை தொடர்பு கொண்டவர்கள் மற்றும் இவர் தொடர்பு கொண்டவர்களின் தகவல்களை சேகரிக்க முடிவு செய்துள்ளனர்.

ஜாகியின் தாயார் முரணான தகவல்களை பொலிசாருக்கு அளித்துள்ளதாகவும், 10 ஆண்டுகளுக்கு முன்னர் சாலை விபத்தில் மகனும் கணவரும் கொல்லப்பட்ட பின்னர் அவர் உ ளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,

அதனாலையே ஜாகியின் ம ரணம் தொடர்பில் அவரால் தெளிவான தகவல்களை பொலிசாருக்கு தெரிவிக்க முடியாமல் போனது எனவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். 7 ஆண்டுகளுக்கு முன்னர் விவாகரத்து செய்து கொண்ட பின்னர் ஜாகி தாயாருடனே வசித்து வந்துள்ளார்.