நயினாதீவு கடலில் சிக்கிய 2,000 கிலோ சுறா கடலில் விடுவிப்பு!!

சுறா

சர்வதேச மீனவர்கள் தினமான நேற்று சுமார் 2,000 கிலோ எடைகொண்ட Whale Sharks என்றழைக்கப்படும் சுறா மீனொன்று யாழ்.நயினாதீவு கடற்பகுதியில் வலையில் சிக்கியுள்ளது. கரைக்கு இழுத்துவரப்பட்ட மீனை மீண்டும் கடலுக்குள் யாழ். மீனவர்கள் விடுவித்துள்ளனர்.

யாழ்.நயினாதீவு கடற்பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மீனவர் ஒருவரின் வலையிலேயே இந்த சுறா மீன் சிக்கியுள்ளது. குறிப்பிட்ட பகுதியில் மீன்டிபியில் ஈடுபட்டிருந்த வேளை வழமைக்கு மாறாக அதிக எடை கொண்ட மீன் சிக்கியிருப்பதை அவதானித்துள்ளார். இது தொடர்பில் சக மீனவர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

ஏனைய சில மீனவர்கள் அங்கு வந்த போதும், வலையில் சிக்கிய மீனை படகில் ஏற்ற முடியாததால் மீனை கரைக்கு இழுத்து வந்தனர். மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் மீன் கரைக்கு இழுத்துவரப்பட்ட போது, சுறா இனத்தை சேர்ந்த Whale Sharks என்று அழைக்கப்படும் மீனினம் என தெரியவந்துள்ளது.

அருகிவரும் மிகவும் பெறுமதி வாய்ந்த உயிரினம் என்பதாலும் மீனை உணவுக்காக பயன்படுத்த முடியாது என்பதால் மீண்டும் அதை கடலிலேயே விட்டுவிட்டதாக மீனவர்கள் தகவல் தெரிவித்திருந்தனர்.

யாழில் இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒருவர் ப லி!!

யாழில்..

யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரிக்கு அருகாமையில் நேற்று இரவு இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒருவர் உ யிரிழந்துள்ளார்.

குறித்த பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையில் இடம்பெற்ற இந்த விபத்தில் ஒருவர் உ யிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கி வந்த இரவு நேர தபால் புகையிரதம் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

உ யிரிழந்தவரின் ச டலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வவுனியாவைச் சேர்ந்த வைத்தியர் அரவிந்தனை வட மாகாண ஆளுநராக நியமிக்க பரிந்துரை!!

தே.அரவிந்தன்

வடமாகாண ஆளுநர் நியமனம் தாமதமாகிவரும் நிலையில் ஆளுநராக நியமிக்க பலரது பெயர்கள் ஜனாதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந் நிலையில் வவுனியாவைச் சேர்ந்த விசேட சத்திர சிகிச்சை நிபுணர் தே.அரவிந்தனின் பெயரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வைத்திய கலாநிதி தே.அரவிந்தன் யாழ்ப்பாணம் , வவுனியா, அனுராதபுரம் மாவட்டங்களில் விசேட சத்திர சிகிச்சை வைத்தியராக பணியாற்றிய நிலையில் தற்போது கொழும்பில் பணியாற்றி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

-தமிழ்வின்-

70 வயது முதியவருடன் 20 வயது அழகிய பெண்ணுக்கு நடந்த திருமணம் : வரதட்சணை எவ்வளவு தெரியுமா?

70 வயது முதியவருடன்..

தாய்லாந்தில் 70 வயதான முதியவருக்கும் 20 வயதான அழகான இளம்பெண்ணுக்கு திருமணம் நடந்துள்ளது. தாய்லாந்தில் உள்ள Khao Shong என்ற காபி தயாரிப்பு நிறுவனத்தின் தலைவராக 70 வயதான நபர் உள்ளார். இவர் இத்தனை ஆண்டுகாலமாக திருமணம் செய்து கொள்ளாமலேயே வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில் இவருக்கும் 20 வயதான இளம்பெண்ணுக்கும் சமீபத்தில் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். இது தொடர்பான செய்தி தாய்லாந்து மட்டுமின்றி சீனா, மலேசியா, தைவான் இணையதளத்திலும் வைரலானது.

இந்த திருமணத்தின் போது மணப்பெண்ணுக்கு 20 மில்லின் baht வரதட்சணையாக கொடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து மணமகன் கூறுகையில், இந்த திருமணம் குறித்து முன்னரே முடிவு செய்யப்பட்டது.

நான் இந்த உலகில் எந்த மூலையில் இருந்தாலும் சரி, என் மனைவியை கரம் பிடிக்க சரியான நேரத்தில் வந்துவிடுவேன் என முன்னர் கூறியது போல வந்துவிட்டேன் என கூறியுள்ளார்.

இளம்பெண் பா ழடைந்த பாடசாலை வளாகத்தில் ச டலமாக மீ ட்பு : அ ம்பலமான அ திர்ச்சிப் பின்னணி!!

பாழடைந்த பாடசாலை வளாகத்தில்..

அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக மா யமான இ ளம்பெண் ஒருவர் பா ழடைந்த பா டசாலை வளாகத்தில் ச டலமாக மீ ட்கப்பட்ட சம்பவம் அ திர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

வடமேற்கு இந்தியானா மாகாணத்தில் உள்ள Portage பகுதியை சேர்ந்தவர் 27 வயதான Adriana Saucedo. கடந்த செவ்வாய் முதல் மா யமான இவரை கேரி பகுதியில் உள்ள பாழடைந்த பாடசாலை வளாகத்தில் இருந்து து ப்பாக்கியால் கொ ல்லப்பட்ட நிலையில் மீ ட்டுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பில் அவரது பேஸ்புக் நண்பர்கள் இருவரை பொலிசார் கை து செய்துள்ளனர். கைதான இருவருக்கும் 16 மற்றும் 17 வயது என தெரியவந்துள்ளது.

கொ ள்ளை சம்பவத்தினிடையே இளம்பெண் அட்ரியானா கொ ல்லப்பட்டிருக்கலாம் என பொலிசார் ச ந்தேகம் தெரிவித்துள்ளனர். குறித்த பேஸ்புக் நண்பர்களிடம் இருந்து ம ரிஜுவானா வாங்கும் பொருட்டு அட்ரியானா தமது குடியிருப்பில் இருந்து காரில் சென்றதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பில் மூன்றாவது இளைஞரை பொலிசார் தே டி வருகின்றனர். அட்ரியானா கொ ல்லப்பட்டது, இந்த மூவரில் ஒருவரது வாகனத்துக்குள் வைத்தாக இருக்கலாம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கொ லைக்கு பின்னர் கேரியில் உள்ள பா ழடைந்த பாடசாலை வளாகத்தில் கைவிட்டு சென்றுள்ளனர். குறித்த பாடசாலையானது 2005 ஆம் ஆண்டு முதல் பயன்பாட்டில் இல்லை என கூறப்படுகிறது.

கேரி பொலிசார் சிறப்பு குழு அமைத்து மேற்கொண்ட வி சாரணையின் முடிவிலேயே அட்ரியானாவின் ச டலத்தை க ண்டுபிடித்துள்ளனர். கைதான இருவரும் சி றார்கள் என்பதால் அவர்கள் தொடர்பில் எந்த தகவலையும் வெளிப்படுத்த பொலிசார் மறுத்துள்ளனர்.

நள்ளிரவில் உள்ளாடையுடன் சுற்றித் திரியும் மர்ம நபர் : பீதியில் மக்கள்!!

நள்ளிரவில்..

சென்னையில் நள்ளிரவு நேரங்களில் உள்ளாடையோடு அரை நி ர்வாணமாக திரியும் ம ர்ம நபரால் மக்கள் பீ தியடைந்துள்ளனர். சென்னை போரூர், சமயபுரம் 5வது தெருவில் உள்ள குடியிருப்புகளில் சிசிடிவி கமெராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த கமெராக்களை யாரோ இரவில் திருப்பி வைத்திருப்பது காலையில் தெரிய வந்தது.
இதனால் அ திர்ச்சியடைந்த குடியிருப்புவாசிகள், அதில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர்.

அதில், உள்ளாடைகள் மட்டுமே அணிந்து முகத்தை மறைத்த நபர் ஒருவர், கையில் கத்தி உள்ளிட்ட ஆ யுதங்களுடன், சுவர் ஏறி குதித்து, வீடுகளை நோட்டம் விட்டு வந்துள்ளார்.

அதுமட்டுமின்றி கையில் நீளமாக ஒரு கட்டையை வைத்துக்கொண்டு இருக்கிறார். தனது முகம் சிசிடிவிவில் பதிவாகக்கூடாது என்பதற்காக அவர் சிசிடிவி கமெராக்களை மேலே பார்க்கும்படி திருப்பி விடுகிறார். பின்னர் வீடுகளின் ஜன்னல் கதவைத் திறந்து வீட்டில் ஆட்கள் நடமாட்டம் உள்ளதா என்றும் சோதனை செய்கிறார்.

இதுகுறித்து வளசரவாக்கம் பொலிசாருக்கு தகவல் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. அ சம்பாவித சம்பவங்கள் நடப்பதற்கு முன், அரை நி ர்வாணக் கோலத்தில் திரியும் நபரை பிடிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கொதித்துக் கொண்டிருந்த சாம்பார் பாத்திரத்தில் தவறி விழுந்த சி றுவன்!!

சாம்பார் பாத்திரத்தில்..

இந்தியாவில் கொதித்துக் கொண்டிருந்த சாம்பார் பாத்திரத்தில் தவறி விழுந்த சி றுவன் ப ரிதாபமாக உ யிரிழந்துள்ளான். தெலுங்கானாவின் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் நடந்த ஒரு விழாவில், மிகப்பெரிய பாத்திரத்தில் சாம்பார் சமைத்து கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த மூன்று வயது சிறுவன் தி டீரென அதில் தடுமாறி வி ழுந்துள்ளான். இதனை பார்த்து ப தறிப்போன சி றுவனின் தந்தை உடனடியாக ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

ப லத்த கா யங்களுடன் மீ ட்கப்பட்ட சி றுவன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தான். இந்த நிலையில் சி றுவன் சிகிச்சை பலனின்றி உ யிரிழந்துவிட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முன்னதாக இதேபோல இம்மாத ஆரம்பத்தில், பாத்திரத்தில் கொ தித்துக்கொண்டிருந்த நீரில் 6 வயது சிறுவன் தவறி விழுந்து உ யிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

புதுப்பெண்ணை பு தைக்க கணவர் வீட்டு வாசலில் தோண்டப்பட்ட பெரிய குழி : அதன்பின்னர் நடந்த எதிர்பாராத சம்பவம்!!

எதிர்பாராத சம்பவம்

திருமணமான 4 மாதத்தில் புதுப்பெண் த ற்கொ லை செய்த நிலையில் அவரை பு தைக்க கணவர் வீட்டு வாசலில் பெரிய குழி தோண்டப்பட்டதால் ப ரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சை மாவட்டத்தின் முடச்சிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் நவீன்குமார் (30). இவருக்கும் புவனேஸ்வரி(24) என்ற பெண்ணுக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் கருத்து வே றுபாடு காரணமாக நவீன்குமார், புவனேஸ்வரி இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ம னவேதனை அடைந்த புவனேஸ்வரி கடந்த 18ம் திகதி உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்கு ளித்தார்.

பின்னர் அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உ யிரிழந்தார். இதனால் ஆ த்திரமடைந்த அவருடைய உறவினர்கள் நேற்று நவீன்குமாரின் வீட்டு வாசலில் புவனேஸ்வரியின் உ டலை பு தைக்க அதிரடியாக முடிவு செய்தனர்.

அதன்படி வீடு முன்பு திரண்ட உறவினர்கள் அங்கு எந்திரம் மூலம் பெரியளவில் பள்ளம் தோண்டி புவனேஸ்வரி ச டலத்தை பு தைக்க தயாரானார்கள். அப்போது வீட்டில் இருந்த பொருட்களை புவனேஸ்வரியின் உறவினர்கள் சே தப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த பொலிசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று புவனேஸ்வரியின் உறவினர்களை சமாதானம் செய்து வீட்டு வாசலில் உ டலை பு தைக்கும் முடிவை கைவிட வைத்தனர்.

ஆனால் பின்னர் நேற்று மாலை நவீன்குமார் தோட்டத்தில் புவனேஸ்வரி உ டல் பு தைக்கப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையில் புவனேஸ்வரி த ற்கொ லை தொடர்பாக பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அமெரிக்க இளம் பெண்ணை காதலித்து கரம்பிடித்த தமிழ் இளைஞன்!!

தமிழ் இளைஞன்

அமெரிக்காவில் பொறியியலாளராக பணிபுரிந்து வரும் தமிழக இளைஞர், அங்குள்ள பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார்.

புதுவையில் ரேடியர் மில் மேலாளராக பணியாற்றி வந்த சந்திரசேகர், என்பவரது மகன் தீபக் முரளி. இவர் தனது இன்ஜினியரிங் படிப்பை முடித்துவிட்டு அமெரிக்காவில் ராப்லஸ் என்ற நிறுவனத்தின் துணைத்தலைவராக பணியாற்றி வருகிறார்.

இவருக்கும் அங்கு வேறு ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் தாரா பையர்ஸ் என்கிற வெள்ளைக்கார பெண்ணுக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது.

இதனையடுத்து இருவரும் திருமணம் செய்துகொள்ள ஆசைப்பட்டனர். இவர்களுடைய காதலுக்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து, தமிழ் முறைப்படி, புதுவை ஆனந்தா திருமண மண்டபத்தில் இன்று கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.

இதில் கலந்துகொள்வதற்காக தாரா பையர்ஸின் உறவினர்கள் 25 பேர் அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு வருகை தந்திருந்தனர்.

கைகளில் இருந்து நழுவிய கிரிக்கெட் மட்டையால் பரிதாபமாக ப றிபோன உ யிர்!!

பள்ளியில் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த போது மட்டை நழுவி தா க்கியதில் சி றுவன் பரிதாபமாக உ யிரிழந்துள்ளான்.

கேரளாவில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமையன்று வகுப்பறையில் இருந்த சி றுமியை பா ம்பு க டித்ததில் ப ரிதாபமாக உ யிரிழந்தார்.

இந்த சம்பவத்தால் மாநிலங்களின் பல இடங்களிலும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் போ ராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதிலிருந்து அரசு இன்னும் மீளாத நிலையில், பள்ளியில் கிரிக்கெட் மட்டை தா க்கியதில் மற்றொரு சி றுவன் உ யிரிழந்துள்ளான்.

கேரளாவின் மவ்லிகேராவில் உள்ள சுனகர உயர்நிலைப்பள்ளியில் சிறார்கள் சிலர் மதிய வேளையில் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்துள்ளனர்.

அப்போது 6 ஆம் வகுப்பு மாணவர் நவநீத், உணவை முடித்துவிட்டு கைகழுவ சென்றுகொண்டிருந்துள்ளான். எதிர்பாராமல் சிறுவனின் கைகளில் இருந்து தவறிய கிரிக்கெட் மட்டை நவநீத்தின் பின் தலையில் பலமாக தா க்கியுள்ளது.

இதில் ப லத்த கா யமடைந்த சிறுவனை உடனடியாக அங்கிருந்த ஆசிரியர்கள் மீ ட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் சி றுவன் சிகிச்சை ப லனின்றி ப ரிதாபமாக உ யிரிழந்துள்ளான்.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக மாணவர்களிடம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஈழத்தை சேர்ந்த இளம் நடிகை பிரசாந்தி க டத்தப்பட்டாரா?

நடிகை பிரசாந்தி

இலங்கையை சேர்ந்த தமிழ் நடிகையான பிரசாந்தி தொடர்பான வழக்கில் புதிய திருப்பமாக அவர் குடும்பத்துடன் சொந்த நாடுக்கு சென்றுவிட்டார் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பிரபல திரைப்பட இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் சென்னை நீதிமன்றத்தில் தா க்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில் கடல்குதிரைகள் என்ற திரைப்படத்தை நான் இயக்கி வருகிறேன். அதில் இலங்கையை சேர்ந்த பிரசாந்தி (20) என்ற பெண்ணை நடிக்க வைத்தேன். இவர் பெற்றோர் அகதியாக தமிழகம் வந்தனர்.

இந்நிலையில் பிரசாந்தியை கியூ பிரிவு பொலிசார் ம ர்மமான இடத்தில் அடைத்து வைத்துள்ளனர், அவரை மீட்க வேண்டும் என கோரினார். ஆனால் பொலிசார் அளித்த பதில் மனுவை தொடர்ந்து புகழேந்தி தங்கராஜின் மனுவை நேற்று நீதிபதி தள்ளுபடி செய்தார்.

இந்நிலையில் நீதிபதி மற்றும் பொலிசார் நீதிமன்றத்தில் விரிவாக பேசியது குறித்து தற்போது தெரியவந்துள்ளது. நீதிபதி கூறுகையில், வடபழனி பொலிசில் பாலகணேசன் என்பவர் மீது பிரசாந்தி புகார் கொடுத்ததாகவும், அது குறித்து பிரசாந்தியை பொலிசார் அழைத்து விசாரித்ததாகவும் மனுதாரர் புகழேந்தி கூறியது தவறு.

பிரசாந்தி போலி பாஸ்போர்டை பெற்ற ஒரு வழக்கில் பாலகணேசனும் ஒரு கு ற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். வழக்கு தொடர்பாக பிரசாந்திக்கு நோட்டீஸ் அனுப்பிய போது அவர் இந்தியாவில் இல்லை என திரும்ப வந்துள்ளது. எனவே பிரசாந்தி குடும்பத்துடன் இலங்கைக்கு சென்றுவிட்டார் என கூறப்படுகிறது.

அதுவும் அவர்கள் இலங்கைக்கு கள்ளத்தோண்டியில் சென்றனரா அல்லது முறையாக சென்றனரா என்பது குறித்து கியூ பிரிவு பொலிசார் விசாரித்து வருகின்றனர் என்பதை நீதிமன்றத்தில் தெளிவுப்படுத்தியுள்ளனர். இதன் காரணமாகவே மனுவை தள்ளுபடி செய்கிறேன் என தெரிவித்துள்ளார்.

அன்று 12 கை விரல் 20 கால் விரல்களுடன் பிறந்த குழந்தை : இன்று சூனியக்காரி : பரிதாப பின்னணி!!

20 கால் விரல்களுடன் பிறந்த குழந்தை

இந்தியாவில் 12 கை விரல்கள் மற்றும் 20 கால்விரல்களுடன் பிறந்த பெண் ஒருவர் தற்போது தன்னுடைய 63 வயதில் சூனியக்காரி என்ற முத்திரை குத்தப்பட்டு, உறவினர்களால் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளார்.

ஒடிசாவின் Ganjam பகுதியை சேர்ந்தவர் Kumar Nayak. 63 வயதான இவர் பிறக்கும் போதே 12 விரல்கள் மற்றும் 20 கால் விரல்களுடன் பிறந்துள்ளார். தற்போது 63 வயதாகும் இவர் மிகுந்த வேதனையுடன், நான் பிறக்கும் போதே இதே போன்று தான் பிறந்தேன்.

எங்கள் குடும்பம் ஏழ்மையான குடும்பம் என்பதால் சிகிச்சை செய்ய முடியவில்லை. ஒரு சில நேரங்களில் நான் இதை நினைத்து மிகுந்த வேதனையடைந்ததுண்டு, 63 வயதாகும் நான் உண்மையை சொல்ல வேண்டும் என்றால் ஒரு சாதரண வாழ்க்கை வாழவில்லை.

என்னுடைய உறவினர்கள் நான் ஒரு சூனியக்காரி என்று ஒதுக்கி வைக்கிறார்கள், என்னுடைய இந்த அரிய நிலை காரணமாக நானே சிலரிடம் என்னை விட்டு விலகி இருங்கள் என்று கூறியிருக்கிறேன்.

என்னிடம் சிலர் நெருங்கி வந்து பார்ப்பதற்கே பயப்படுவர், இதன் காரணமாகவே நான் வீட்டுக்குள்ளே அடங்கி கிடப்பேன். ஒரு சிலர் என்னை அனுதாபத்தின் அடிப்படையில் பார்க்க வருவர், வீட்டிக்குள்ளே இருப்பேன், வித்தியாசமாக உறவினர்களால் நடத்தப்படுவேன் என்று வேதனையுடன் கூறி முடித்தார்.

உறவினர் ஒருவர் இவரின் நிலை குறித்து கூறுகையில், இது ஒரு பிரச்னை இல்லை, சரி செய்துவிடலாம் என்று தெரியும், ஆனால் அந்தளவிற்கு எங்களிடம் வருமானம் இல்லை, அவளுக்கு சிகிச்சை அளிக்கக்கூட முடியாத நிலைக்கு இருக்கிறோம் என்று வருந்ததிய காலங்கள் உண்டு என்று அவர் கூறியுள்ளார்.

தாலி கட்டிய சில மணி நேரங்களில் கணவனை காதலிக்கு விட்டுக் கொடுத்த இளம் பெண் : அதன் பின் நடந்த சம்பவம்!!

தாலி கட்டிய சில மணி நேரங்களில்..

தமிழகத்தில் தாலி கட்டிய சில மணி நேரத்தில் முதல் மனைவிக்கு கணவனை கல்லூரி மாணவி விட்டுக் கொடுத்த நிலையில், பொலிசார் புதுமாப்பிள்ளையை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு ஒக்கநாட்டு பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ். 22 வயதான இவர் திருப்பூரில் இருக்கும் தனியார் பனியன் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வந்தார்.

அப்போது தனியார் கல்லூரியில் படித்து வந்த திருப்பூரை சேர்ந்த சத்யப்பிரியாவை, சந்தோஷ் காதலித்துள்ளார். இதையடுத்து இருவரும் நேற்று காலை தஞ்சாவூர் அருகே இருக்கும் கோவில் ஒன்றில் திருமணம் செய்து கொண்டனர்,

திருமணம் செய்த சில மணி நேரங்களில், திருப்பூர் காவல்நிலையத்தில் தனது மகளை கா ணவில்லை என்று சத்யப்பிரியாவின் தந்தை பிரபாகரன் புகார் அளிக்க, பொலிசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சத்யப்பிரியா, சந்தோஷுடன் சென்றது தெரியவந்த நிலையில், இருவரும் காவல்நிலையத்திற்கு வந்துள்ளனர்.

பொலிசார் நடத்திய விசாரணையில், நாங்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்தனர். அப்போது திடீரென்று காவல் நிலையத்துக்குள் புகுந்த ஒக்கநாட்டைச் சேர்ந்த ரவி, மல்லிகா தம்பதியின் மகள் சரண்யா புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

அதில், சந்தோஷ் தன்னை காதலித்ததாகவும், நாங்கள் இருவரும் பல்வேறு பகுதிகளுக்கு தனியாக சுற்றியதாகவும், இருவரும் உல்லாசமாக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். அதோடு சந்தோஷுடன் ஒன்றாக இருந்த புகைப்படங்களை காண்பித்துள்ளார்.

இதையடுத்து சத்யப்பிரியா சரண்யாவுக்கு சந்தோஷை விட்டு கொடுத்து விட்டு தனது பெற்றோருடன் செல்வதாக கூறிவிட்டுசென்றார். அதன் பின்சரண்யா கொடுத்த புகாரின் அடிப்படையில் பொலிசார் சந்தோஷை கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

48 மணி நேரம் தொடர்ந்து படபிடிப்பு : மாரடைப்பால் உயிருக்கு போ ராடும் இளம் நடிகை!!

கெஹனா வசிஸ்த்

தொடர்ந்து 48 மணி நேரம் படபிடிப்பில் பிஸியாக நடித்துக்கொண்டிருந்த இளம் நடிகைக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ள சம்பவம் திரையுலகினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

தமிழ், தெலுங்கு, இந்தி சினிமாவில் பிரபலமாக பேசப்பட்டு வரும் நடிகை கெஹனா வசிஸ்த்(31). இவர் தமிழில், கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான பேய்கள் ஜாக்கிரதை என்ற படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருக்கிறார்.

இந்நிலையில், தற்போது வெப் சிரியஸ் ஒன்றில் நடித்து வரும் கெஹனா வசிஸ்த் சரியாக சாப்பிடாமல், தொடர்ந்து 48 மணி நேரம் நடித்துக் கொண்டிருந்த காரணத்தால், அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, உடனடியாக கெஹனா மும்பையில் உள்ள ரக்‌ஷா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதையடுத்து, கெஹனாவை சோதித்து பார்த்த மருத்துவர்கள் கெஹனாவின் உடல்நிலை மோசமாக இருப்பதாக கூறியுள்ளனர்.

மருத்துவர்கள் மேலும் கூறியதாவது, கெஹனாவுக்கு சர்க்கரை நோய் உள்ளது. அவரின் ஷுகர் அளவு அதிகமாக உள்ளது. மேலும் ரத்த அழுத்தம் மிகவும் குறைந்துள்ளது.

அவர் சர்க்கரை நோய் மற்றும் சில பிரச்சனைகளுக்கு மருந்து சாப்பிட்டு சில எனர்ஜி டிரிங்ஸ் குடித்துள்ளார். அவருக்கு மூச்சுவிடும் பிரச்சனை உள்ளது. அதனால் சுவாசக் குழாய் பொருத்தப்பட்டுள்ளது என்றார்.

வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் பாலர் பாடசாலையின் 26 வது கலை விழா!!

26 வது கலை விழா

சுத்தானந்த இந்து இளைஞர் பாலர் பாடசாலையின் 26 வது கலை விழா நிகழ்வு இன்று (23.11.2019) சுத்தனந்த மன்றத்தின் தலைவர் கலாநிதி. நா.அகளங்கன் தலைமையில் நடைபெற்றது.

சுத்தானந்த இந்து இளைஞர் நடராசா மண்டபத்தில் நடைபெற்ற கலைவிழா நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக கலாபூசணம் கந்தையா கனகேஸ்வரன் மற்றும் கலாபூசணம் விமலலோஜினி கனகேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

முன்னதாக அதிதிகள் பாடசாலை சிறார்களால் மாலை அணிவிக்கப்பட்டு அழைத்து வரப்பட்டு மங்கள விளக்கேற்றலைத் தொடர்ந்து, வவுனியா குடியிருப்பு சித்திவிநாயகர் ஆலயத்தின் பிரத குரு சிவசிறி மு.க.கந்தசாமி குருக்களின் ஆசிச் செய்தியை தொடர்ந்து நிகழ்வுகள் ஆரம்பமாகியது.

சுத்தானந்தா பாலர் பாடசாலை கலைவிழா நிகழ்வில், பாடசாலை கீதம், வரவேற்பு நடனம், குழுப்பாடல், கரகம், வில்லிசை, நல்விருந்து. காவடி நடனம் மற்றும் கண்ணன் நடனம் போன்ற நிகழ்வுகளை சிறார்கள் திறம்பட நிகழ்த்தியிருந்தனர்.

நிகழ்வில் பாலர் பாடசாலை மாணவர்கள், பெற்றார்கள், நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

வவுனியா பூந்தோட்டம் பிரதேச முன்பள்ளிகளின் ஆசிரியர் தின நிகழ்வும் கலைவிழாவும்!!

சிரியர் தின நிகழ்வும் கலைவிழாவும்

வவுனியா பூந்தோட்ட பிரதேச முன்பள்ளிகளுக்கு இடையிலான கலைவிழாவும் ஆசிரியர் தினமும் மிக சிறப்பான முறையில் பூந்தோட்டம் நரசிங்கர் ஆலய கலாசார மண்டபத்தில் இன்று (23.11.2019) நடைபெற்றது்.

இந் நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வவுனியா நகரசபையின் முன்னாள் நகர பிதாவும், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினருமான ஜி.ரீ.லிங்கநாதன், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் செ.மயூரன்,

நகரசபையின் முன்னாள் உப நகரபிதாவும், தற்போதைய நகரசபைஉறுப்பினருமான க.சந்திரகுலசிங்கம் (மோகன்), ஸ்ரீ நாகராஜா வித்தியாலய ஆசிரியரும், வவுனியா நகரசபையின் உறுப்பினருமான சு.காண்டீபன், முன்பள்ளி கோட்ட இணைப்பாளர் திருமதி சசிகலா, முதியோர் சங்கத் தலைவர் வேலாயுதம்பிள்ளை ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

பிரதேச முன்பள்ளி சிறார்களின் கலை நிகழ்வுகள், ஆசிரியர் கௌரவம் என்பன சிறப்பாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.