தமிழ் பெயர் பலகைகளை சேதப்படுத்துவோரை கைது செய்யுமாறு பிரதமர் உத்தரவு!!

பிரதமர் உத்தரவு

வீதிகளில் காணப்படும் தமிழ் பெயர்ப் பலகைகளை சேதப்படுத்துவோரை கைது செய்யுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலையடுத்து இடம்பெற்ற ஆட்சி மாற்றத்தினை தொடர்ந்து பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள தமிழ் பெயர் பலகைகளில் எழுதப்பட்டிருந்த ஊர்களின் பெயர்கள் அடையாளம் தெரியாத நபர்களால் சேதப்படுத்தப்பட்டு வருகின்றது.

இது தொடர்பில் சமூக வளைதளங்களில் பல்வேறு தரப்பினராலும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில், இவ்வாறு வீதிப் பெயர்ப் பலகைகளை சேதப்படுத்தும் தரப்பினரை உடனடியாக கைது செய்யுமாறு பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறான கு ற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு எ திராக சட்டத்தை அமுல்படுத்த வேண்டுமெனவும் பிரதமர் அறிவித்துள்ளார்.

கணவன் மா யம் : மா மியாரை தி ட்டம் போட்டு க டத்திய மருமகள்!!

க ணவன் மா யம்

தமிழகத்தில் ம றைந்த அதிமுக பிரமுகரின் மனைவி பத்மினியை அவரது மருமகளே சொத்திற்காக க டத்திச் சென்று அ டைத்து வை த்து சி த்ரவ தை செய்துள்ளது தற்போது வெ ளிச்சத்திற்கு வந்துள்ளது. சென்னை தாம்பரம் அருகே உள்ள படப்பையை சேர்ந்தவர் பத்மினி(70). இவர் ம றைந்த அதிமுக பிரமுகர் சுப்பராயனின் மனைவி ஆவார். இவருக்கு செந்தில், ராஜு என 2 மகன்கள் உள்ளனர்.

இரண்டு பேருக்கும் திருமணம் ஆகிவிட்டதால், இருவரும் தனித்தனியே வசித்து வந்துள்ளனர். இருப்பினும் பத்மினிக்கு சொந்தமாக 5 ஏக்கர் நிலம் 10க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் வீடுகள் இருப்பதால், சொ த்து த கராறு காரணமாக மகன்கள் இருவருக்கும் அ டிக்கடி பி ரச்சனையில் ஈடுபட்டதாக கூறப்பட்டுகிறது.

இந்த சொத்துக்காக இளையமகன் ராஜ்குமார் கொ லை செ ய்யப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், மூத்த மகன் செந்திலை அப்போதிருந்தே கா ணவில்லை.

இந்நிலையில், செந்தில் மனைவி மேனகா, 5 கோடி ரூபாய் சொத்துக்காக மாமியார் பத்மினியை து ப்பாக்கியை கா ட்டி மி ரட்டி, ஆள்வை த்து க டத்தி, அ றையில் அ டைத்து வை த்து சி த்ரவதை செய்வதாக பொ லிசாருக்கு தகவல் கிடைத்தத நிலையில், பொலிசார் மேனகாவை கை து செய்து வி சாரணை மேற்கொண்டனர்.

அப்போது மேனகா அளித்த வா க்குமூலத்தில், என்னுடைய சொந்த ஊர் பெரியபாளையம் அருகே இருக்கும் கொமக்கம்பேடு கிராமம். எனக்கு செந்திலுடன் திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர்.

என் மாமனார் சுப்பராயன் கான்ட்ராக்ட் வேலை பார்த்து வந்தார். அவருக்கு உதவியாக என் கணவர் இருந்தார். ஆனால் சொத்துக்களை பி ரிக்கும்போது, முக்கியமான இடம் ஒன்றை என் கொழுந்தனார் ராஜ்குமாருக்கு மாமனார் தந்துவிட்டார்.

இது குறித்து செந்தில் கேட்ட போது, வா க்குவாதம் மு ற்றியதால், இது கொ லையில் போய் முடிந்துவிட்டது. இதன் காரணமாக என் கணவர் சி றையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் எல்லாம் கடந்த 2014-ஆம் ஆண்டு நடந்தது.

கணவர் சி றைக்கு சென்ற பின் எனக்கு ஆதரவாக டிரைவர் ராஜேஷ் கண்ணாவின் மனைவி இருந்தார். சி றையில் இருந்த என் கணவன் செந்தில் ஜாமீனில் இருந்து வெளியே வந்தார்.

ஆனால், வெளியே வந்த அவர் வீட்டிற்கு வரவில்லை, அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. 2018-ல் என் மாமனாரையும் கொ லை செய்த வ ழக்கில் எனக்கு உதவி செய்த ராஜேஷ் கண்ணாவை பொலிசார் கை து செய்தனர்.

இதையடுத்து மீதமிருக்கும் சொத்துக்களை வாங்கவே, என் மாமியாரை வீட்டிற்கு அழைத்து சென்றேன். அவரை க டத்தவி ல்லை, மி ரட்டவி ல்லை என்று மேனகா பொலிசாரிடம் கூறியுள்ளார்.

க டத்தவில்லை, மி ரட்டவில்லை என்றால் அவர் ஏன் ச த்தம் போட வேண்டும்? எங்களுக்கு பு கார் அளிக்க வேண்டும் என்ற கேள்விக்கு மேனகா சரியான பதில் அளிக்காத்தால், பொலிசார் அவரிடம் கி டுக்குப்பிடி வி சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் மருமகள் மேனகாவிடமிருந்து மீ ட்கப்பட்ட பத்மினி கூறுகையில், என்னை மேனகா சொத்துக்காக க டத்தினாள், கையெழுத்து போடும் படி சிலரை வை த்து மி ரட்டினாள்.

மொத்தம் 3 நாட்கள் என்னை அ டைத்து சி த்ரவ தை செய்தாள். பகல் நேரத்தில் காட்டுப் பகுதி பக்கம் அழைத்து சென்றுவிடுவார்கள். இரவு நேரத்தில், ஒரு இ ருட்டு அ றையில் அ டைத்து வைப்பார்கள்.

அப்போது அவர்கள் எனக்கு சாப்பிட இட்லி, டீ கொடுப்பார்கள், ஆனால் அதில் வி ஷம் இருக்குமோ என்ற பயத்தில் நான் சாப்பிடவில்லை.

இந்த சொத்துக்காக என் கணவன், 2வது மகனை ப றிகொடுத்துட்டேன். முதல் பையன் செந்தில் எங்கே இருக்கான் என்றே தெ ரியவில்லை என்று வே தனையுடன் க ண்கல ங்கிய படி கூறியுள்ளார்.

டிக்டாக்கில் தாயும், பிள்ளையுமாக நடித்த இரு இளம் பெண்களுக்கு நேர்ந்த கதி : ஒரு எச்சரிக்கை செய்தி!!

ஒரு எச்சரிக்கை செய்தி

தமிழகத்தில் டிக் டாக்கில் தாயும், பிள்ளையுமாக நடிப்புத்திறமையை காட்டிய இரண்டு பெண்கள் வீட்டை விட்டு துரத்தப்பட்டு தற்போது அனாதையாக தவிக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது.

மதுரை மாவட்டம் ஒத்தக்கடையை சேர்ந்த தோழிகளான மீனாட்சியும் கயலும் பாரம்பரிய உடையான சேலையுடன் டிக்டாக்கில் தோன்றி தாயும் பிள்ளையுமாக நடிப்புத்திறமையை வெளிக்காட்டுவது வழக்கம்.

இருவருக்கும் திருமணமான நிலையில் டிக்டாக் செயலிக்கு அடிமையானதால் அவ்வப்போது ஆன்மீகம், நையாண்டி, நகைச்சுவை போன்ற வீடியோக்களையும் டிக்டாக் செயலியில் பதிவிட்டு வந்தனர்.

இந்நிலையில், மீனாட்சிக்கு டிக்டாக் மூலம் தேனியைச் சேர்ந்த சுகந்தி என்ற பெண்ணின் நட்பு கிடைத்துள்ளது. ஒரு கட்டத்தில் சுகந்திக்கும் மீனாட்சிக்குமிடையே க ருத்து வே றுபாடு ஏற்பட்டு டிக்டாக் செயலியில் நட்பை துண்டித்து கொண்டனர்.

மீனாட்சியுடனான நட்பு துண்டானதும் ஆ த்திரம் அடைந்த சுகந்தி, தனது ஆண் நண்பர் செல்வா என்பவருடன் சேர்ந்து மீனாட்சி மற்றும் தோழி கயல் ஆகியோரின் டிக்டாக் வீடியோக்களை பதிவிறக்கம் செய்து, இருவரையும் விலை மாதர்களாக சித்தரித்து டிக்டாக் செயலியில் பதிவிட்டதால் இருவரது குடும்பத்திலும் புயல்வீசத் தொடங்கியது.

கயலின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவர் அவர் சேலையை கிழித்து வீட்டை விட்டு து ரத்தியதால் தற்போது காப்பகத்தில் தவித்து வருகிறார். மீனாட்சிக்கும் வீட்டில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இது குறித்து இருவரும் பொலிசில் புகார் அளித்த நிலையில் பொலிசார் சுகந்தி, செல்வா மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து பொலிஸ் பிடியில் இருந்து தப்பிக்க முன்ஜாமீன் பெற்ற சுகந்தியிடம் இரு செல்போன்களும் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், டிக்டாக், வாட்ஸ் ஆப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஒரு வருடம் கருத்து பதிவிட அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

குடும்பப் பெண்கள் பலர் பொழுதுபோக்கு என்ற பெயரில் முழுநேரமாக டிக்டாக்குக்கு அடிமைகளாகி வருவதால் தங்கள் வாழ்க்கையை இழக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம்.

அக்கா தூ க்கில் தொ ங்குவதை பார்த்து அலறிய தம்பி!!

அ லறிய தம்பி

தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி மாணவி தூ க்குபோ ட்டு த ற்கொ லை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் கருணாகரன். இவருடைய மனைவி பூரணசெல்வி. இந்த தம்பதியினருக்கு மரிய ஐஸ்வர்யா (16) என்கிற மகளும் ஒரு மகனும் உள்ளார்.

ஐஸ்வர்யா அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன் இரண்டு நாட்கள் விடுமுறை எடுத்துவிட்டு ஐஸ்வர்யா பள்ளிக்கு சென்றுள்ளார்.

இதனால் கணினி அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வரும் ஞானப்பிரகாசம் என்பவர், ஐஸ்வர்யாவை தி ட்டி தோப்புக்கரணம் போடச்சொன்னதாக தெரிகிறது.

இதனால் ம னஉ ளைச்சலுக்கு ஆளான ஐஸ்வர்யா, பள்ளியில் நடந்த சிறப்பு தேர்வுக்கு கூட செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இதுகுறித்து பெற்றோர் கேட்டபோது, தனக்கு பள்ளிக்கு செல்ல விருப்பமில்லை என மாணவி கூறியுள்ளார்.

இதனையடுத்து சிறுமியின் பெற்றோரும் வேலைக்கு சென்றுவிட்டனர். இதனால் வீட்டில் ஆள் இல்லாத சமயம் பார்த்து சி றுமி த ற்கொ லை செய்துகொண்டுள்ளார்.

அப்போது பள்ளி முடிந்து வீடு திரும்பிய ஐஸ்வர்யாவின் தம்பி, அக்கா தூ க்கில் தொ ங்குவதை பார்த்து க தறி து டித்துள்ளான். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், உடனடியாக ஐஸ்வர்யாவின் உ டலை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள் சி றுமி, ஏற்கனவே உ யிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் அறிந்து வந்த பொலிஸார் சி றுமியின் உ டலை கைப்பற்றி பி ரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு, பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெற்ற தாய்க்கு கோவில் கட்டி வியக்க வைத்த மகன் உ யிரிழந்த ப ரிதாபம்!!

தாய்க்கு கோவில்

தமிழகத்தில் தாய்க்கு கோவில் கட்டிய மகன் சா லை விபத்தில் ப ரிதாபமாக உ யிரிழந்த சம்பவம் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சியின் திருவெறும்பூரை சேர்ந்தவர் ராஜராஜசோழன். வழக்கறிஞராக இருந்தார். இவர் தாய் அமுதா உ யிரிழந்துவிட்ட நிலையில் கடந்தாண்டு அவருக்கு ராஜராஜசோழன் கோவில் கட்டினார்.

இதோடு அமுதாவுக்கு சிலை திறப்பு விழாவை விமர்சையாக நடத்தினார். இந்நிலையில் ராஜராஜசோழனும் அவர் மகன் சேரலாதனும் நேற்று பைக்கில் சென்று கொண்டிருந்த போது நின்று கொண்டு இருந்த லொறி மீது பைக் மோ தி வி பத்துக்குள்ளானது.

இதில் வழக்கறிஞர் ராஜராஜசோழன் ச ம்பவ இ டத்திலேயே உ யிரிழந்தார். படுகாய த்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த அவர் மகன் சேரலாதனும் சி கிச்சை ப லனின்றி உ யிரிழந்தார். இந்த கோர விபத்து சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ம ர்மமாக இ றந்த கு ழந்தை : சி றுமியின் வாக்குமூலத்தால் சிக்கிய தாய்!!

சிக்கிய தாய்

வேலூர் மாவட்டத்தில் குழந்தையின் வாயில் துப்பட்டாவை தி ணித்து கொ லை செய்த தா யை பொலிஸார் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்தை சேர்ந்த கௌரிசங்கர் என்பவரும் பவித்ரா (23) என்ற பெண்ணும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.

இந்த தம்பதியினருக்கு 8 வயதில் ரம்யா, ஒன்றரை வயதில் மௌலிக்கா என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். ஓராண்டிற்கு முன் கௌரிசங்கருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு, அவருடன் ஓட்டம் பிடித்துள்ளார். இதனால் குழந்தைகளுடன் தனியாக தவித்து வந்த பவித்ரா, கணவரின் ஊரில் இருக்க பிடிக்காமல், வாலாஜாபேட்டை பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து குழந்தைகளுடன் தங்கி வந்துள்ளார்.

மகள் ரம்யாவை அருகாமையில் உள்ள பள்ளியில் மூன்றாம் வகுப்பில் சேர்த்து விட்டதோடு, தினமும் வேலைக்கு செல்லும் நேரத்தில் மௌலிக்காவை பக்கத்து வீட்டாரின் பொறுப்பிலும் ஒப்படைத்துவிட்டு சென்றுள்ளார். இரவு வீடு திரும்பிய பிறகு குழந்தையை வாங்கிக்கொள்வார். ஆதரவாக வேறு யாரும் இல்லாததால் பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் உதவியாக இருந்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் 2 நாட்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த பவித்ரா, நேற்றிரவு திடீரென ச த்தம்போட்டுள்ளார். இதனை கேட்டு அ திர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர், கு ழந்தை மௌலிக்கா சு யநினை விழந்து கிடப்பதை பார்த்து, உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சில மணி நேரங்களுக்கு முன்பு கு ழந்தை இ றந்திருப்பதை உறுதி செய்து, பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் விரைந்து வந்த பொலிஸார், பவித்ரா மற்றும் அவரின் மூத்த மகளிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த சிறுமி, அ ழுதுகொண்டிருந்த மௌலிக்காவின் வாயில் பவித்ரா துணியை வைத்து அ ழுத்தியதாக கூறியுள்ளது.

இதனை கேட்டு சந்தேகமடைந்த பொலிஸார், பவித்ராவிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். வேலைக்கு செல்லாமல் ஏற்கனவே மனஅ ழுத்ததில் இருந்த போது, குழந்தை விடாமல் அழுதுகொண்டிருந்ததால், எரிச்சலடைந்து துணியை வாயில் வைத்து அழுத்தியதாக பவித்ரா பொலிசாரிடம் கு ற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

மேலும், குழந்தையின் அ ழுகையை நிறுத்துவதற்காகவே அழுத்தினேன். மாறாக, கொ லை செய்யும் நோக்கில் இல்லை என்று கூறியுள்ளார். இந்த நிலையில் பொலிஸார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பாலத்தில் இருந்து பறந்து விழுந்து விபத்துக்குள்ளான கார் : குலைநடுங்க வைக்கும் காணொளி!!

பறந்து விழுந்து விபத்துக்குள்ளான கார்

இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தில் பாலத்தில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று விழுந்து விபத்தில் சிக்கியதன் காணொளி காட்சிகள் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள கட்ச்பவுளி பகுதியில் பயோடைவர்சிட்டி மேம்பாலத்தில் இந்த விபத்து நடந்துள்ளது.

மேம்பாலத்தில் அதிவேகமாக வரும் சிவப்பு நிற கார் ஒன்று அதன் வளைவில் தன் கட்டுப்பாட்டை இழந்து பக்கசுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

கார் அசுரவேகமாக வந்ததால் பக்கசுவரில் இடித்து மேலே இருந்து கீழே பறந்து வந்து விழுந்தது. இதில் கீழே நடந்து சென்று கொண்டிருந்த பாதசாரிகள் மீது கார் மோதியது. அங்கு நிறுத்தப்பட்டிருந்த சில வாகனங்களும் சேதம் அடைந்தன.

மேலிருந்து கீழே விழுந்த கார் மோதியதில் சாலையில் சென்று கொண்டிருந்த பெண் ஒருவர் ம ரணமடைந்துள்ளார்.

கார் சாரதி உள்ளிட்ட இருவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துக்குள்ளான மேம்பாலம் 3 நாட்களுக்கு மூடப்பட்டும் என ஹைதராபாத் மாநாகராட்சி அறிவித்துள்ளது.

வவுனியாவில் அமைதிக் கல்வித்திட்ட சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!!

வவுனியா தேசிய கல்வியற் கல்லூரி

வவுனியா தேசிய கல்வியற் கல்லூரியின் அமைதிக் கல்வித்திட்ட சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கல்லூரியின் மண்டபத்தில் இன்று (24.11.2019) இடம்பெற்றது.

இந்நிகழ்வானது கல்வி திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் கீத்தா கரந்தவல தலைமையில் நடைபெற்றது.

தேசிய கல்வியல் கல்லூரியில் ஆசிரியர்களாக கல்வி பயிலும் மாணவர்களுக்கு அமைதி கல்வித்திட்டம் தொடர்பாக பயிற்சிகள் வழங்கப்பட்டிருந்தது. அக்கல்வித்திட்டத்தில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்ட்டது.

அமைதி, மதிப்பை உணர்தல், உள்ளேயிருக்கும் வலிமை, தன்னை உணர்தல், தெளிவு, புரிந்துகொள்ளல், தன்மானம், தேர்ந்தெடுத்தல், நம்பிக்கை மற்றும் திருப்தி போன்ற ஆற்றல்மிகு பாடத்திட்டங்கள் ஆசிரிய மாணவர்களுக்கு முன்னெடுக்கப்பட்டிருந்தது.

கல்வியல் கல்லூரி மாணவர்களால் அமைதி கல்வித்திட்டம் தொடர்பான நாடகம் ஒன்றும் அரகேற்றப்பட்டிருந்தது. நிகழ்வு ஏற்பாட்டாளர்களால் அதிதிகளுக்கு நினைவுப்பரிசில்கள் வழங்கி வைக்கப்படடது.

நிகழ்வில் உப பீடாதிபதிகளான திருநானந்தம் ஜெயகாண்டீபன், பொ.சத்தியநாதன், விரிவுரையாளர்களான செ.இந்திராதேவி, க.சிவகுமார், சிரேஸ்ட பொறியாளர் சோபா தயாளன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

க.பொ.த.சாதாரண பரீட்சையை முன்னிட்டு பரீட்சைத் திணைக்களம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

முக்கிய அறிவிப்பு

க.பொ.த சாதாரணதர பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 2ஆம் திகதி முதல் 12 ஆம் திகதிவரை இடம்பெறவுள்ள நிலையில் பரீட்சைகள் திணைக்களம் முக்கிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.

அதன்படி இந்த ஆண்டு க.பொ.த சாதாரணதர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான கருத்தரங்குகள், பகுதி நேர வகுப்புகள் என்பவற்றை நடத்த எதிர்வரும் 27ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இம்முறை 4987 பரீட்சை மத்திய நிலையங்களில் இடம்பெறவுள்ள க.பொ.த சாதாரணதர பரீட்சையில் 7 இலட்சத்து 17 ஆயிரத்து 8 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர். மேலும் விசேட பரீட்சை மத்திய நிலையங்கள் எட்டும் அமைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

வவுனியாவில் வீதி விபத்தை தடுக்க பொலிசாரினால் விசேட திட்டம் முன்னெடுப்பு!!

வீதி விபத்தை தடுக்க..

பொலிஸ் மா அதிபரின் ஆலோசனைக்கு அமைவாக வீதி விபத்துக்களை தடுக்கும் முகமாக பாதசாரிகள் மற்றும் சாரதிகள் ஆகியோருக்கு வீதி ஓழுங்கு முறை தொடர்பான விசேட விழிப்பூட்டல் நடவடிக்கை ஒன்றை வவுனியா போக்குவரத்து பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.

பொலிஸ் மா அதிபரின் ஆலோசனைக்கு அமைவாக இன்றில் இருந்து ஒருவார காலத்திற்கு பாதசாரிகள் மற்றும் சாரதிகளுக்கு வீதி ஒழுங்கு முறை தொடர்பில் விழிப்புணர்வூட்டும் செயற்பாடு நாடு பூராகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக வவுனியா நகரப்பகுதியிலும் வீதி ஒழுங்குமுறைகள், வீதிச் சட்டங்கள் தொடர்பில் பாதசாரிகள் மற்றும் சாரதிகளுக்கு தெளிவூட்டும் விழிப்புணர்வு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸ் பரிசோதகர் அசோக, உப பொலிஸ் பரிசோதகர் திஸநாயக்க, மக்கள் தொடர்பாடல் பொலிஸ் சார்ஜன்ட் பிரேம திலக ஆகியோரின் நேரடி பங்குபற்றுதல்களுடன் போக்குவரத்து பொலிசாரும், சமுதாய பொலிஸ் குழுவும் இணைந்து இதனை முன்னெடுத்தனர்.

இதன்போது வீதியில் நடந்து சென்றவர்கள், துவிச்சக்கர வண்டியில் பயணித்தோர், மோட்டர் சைக்கிளில் பயணித்தோர், முச்சக்கர வண்டியில் பயணித்தோர், சிறியரக வாகனங்களில் பயணித்தோர் என பலரையும் மறித்து தெளிவூட்டல் வழங்கப்பட்டது.

இதன்படி 150 சாரதிகளுக்கும், 350 பாதசாரிகளுக்கும் முதல் நாளில் இவ்வாறு விழிப்புணர்வூட்டல் இடம்பெற்றது.

அத்துடன் ஒரு வார காலத்திற்கு இவ் விழிப்பூட்டல் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் போக்குவரத்து பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

வவுனியாவில் புதையல் தோண்டிய ஆறு சந்தேகநபர்கள் கைது!!

ஆறு சந்தேகநபர்கள் கைது

வவுனியா, நைனாமடு பகுதியில் நேற்றைய தினம் புதையல் தோண்டிய குழுவினரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நைனாமடு பகுதியிலுள்ள வெற்றுக்காணி ஒன்றில் 6 பேரடங்கிய குழுவினர் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக புளியங்குளம் பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதன் அடிப்படையில் ஸ்தலத்திற்கு சென்ற பொலிஸார் புதையல் தோண்டிய அறுவரையும் சம்பவ இடத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.

அவர்களிடமிருந்து புதையல் தோண்ட பயன்படுத்தப்பட்ட மண்வெட்டி, பூஜைப் பொருட்கள், மோட்டார்சைக்கிள், முச்சக்கரவண்டி என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்கள் மரக்காரம்பளை, ஓமந்தை, நெடுங்கேணி பகுதிகளை சேர்ந்தவர்கள் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள அறுவரையும் மேலதிக விசாரணைகளின் பின் இன்று வவுனியா நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் பிரான்ஸ் வைத்திய குழுவின் இலவச மருத்துவ முகாம்!!

இலவச மருத்துவ முகாம்

வவுனியா – வைரவபுளியங்குளம் கிராம அபிவிருத்திச் சங்க மண்டபத்தில் இன்று (24.11.2019) காலை 8.30 மணி முதல் மாலை 4.00 மணி வரை இலவச மருத்துவ முகாம் இடம்பெற்று வருகின்றது.

வவுனியா தமிழ் விருட்சம் மற்றும் விண்மீன்கள் அமைப்பு இணைந்து ஏற்பாடு செய்த இம்மருத்துவ முகாமில் பிரான்ஸ் நாட்டிலிருந்து இலங்கைக்கு வருகை தந்த 3 வைத்தியர் குழாம் நரம்பு, எலும்பு, தசைக்கான மசாஜ் வைத்தியத்தினை நோயாளர்களுக்கு மேற்கொண்டு ஆலோசனைகளையும் வழங்கி வருகின்றனர்.

வவுனியா மாவட்டத்தில் இவ்வாறான வைத்திய சிகிச்சை நிலையங்கள் கணிசமானளவு காணப்படவில்லை எனினும் இன்றைய இலவச மருத்துவ முகாமில் வயது வேறுபாடு இன்றி பெருமளவனோர் கலந்து கொண்டு பயனடைந்து வருகின்றனர்.

இன்றைய ஆரம்ப நிகழ்வில் தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் எஸ்.சந்திரகுமார், செயலாளர் மாணிக்கம் ஜெகன், சிறிசபாரத்தினம் அறக்கட்டளையின் ஆலோசகர் சபாநாதன், விண்மீன் அமைப்பின் தலைவர் புவிகரன் ஆகியோர் கலந்து கொண்டு இலவச மருத்துவ முகாமினை ஆரம்பித்து வைத்திருந்தனர்.

பன்றிகள் கூட்டத்தினால் ஏற்பட்ட கோர விபத்து : 60 அடி பள்ளத்தில் பாய்ந்த லொறி!!

கோர விபத்து

பலாங்கொடை பகுதியிலிருந்து  ஹட்டன் பகுதிக்கு மரக்கறி ஏற்றிச்சென்ற சிறிய ரக லொறி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

பொகவந்தலாவ – ஹட்டன் பிரதான வீதியில் பொகவந்தலாவ ஜெப்பல்டன் பகுதியில் வைத்து, குறித்த சிறிய ரக லொறி வீதியை விட்டு விலகி சுமார் 60 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று (24.11) காலை 5.30 மணியளவில் இவ் விபத்து நேர்ந்துள்ளதாக பொகவந்தலாவ போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து ஏற்பட்ட பகுதியில் பன்றிகள் கூட்டமாக பிரதான வீதியில் குறுக்கே சென்றமையினால் வாகனத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாக இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

லொறியில் சாரதியும், உதவியாளரும் பயணித்துள்ளதாகவும், எனினும் தெய்வாதீனமாக உ யிர் த ப்பியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த லொறியின் இருந்த பெறுமதியான மரக்கறி வகைகள் சேதமமைந்துள்ளதாகவும், எனினும் சில மரக்கறி வகைகளை பிரதேச மக்களின் உதவியுடன் மற்றுமொரு லொறிக்கு ஏற்றிச்செல்ல நடவடிக்கை மேற்கொண்டனர்.

சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் விவசாய நிலமாக மாறிய மன்னார் பிரதான வீதி!!

மன்னார் பிரதான வீதி

வவுனியா மன்னார் பிரதான வீதி விவசாய நிலமாக மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்து வீதியின் நடுவே வாழை மரம் ஒன்று வைக்கப்பட்டுள்ளது.

வவு­னியா மன்­னார் முதன்மை வீதி, நெளுக்­கு­ளம் ஊடாக வீரபுரம் செல்­லும் வீதி, பூவ­ர­சங்­கு­ளம் ஊடாக செட்­டி­கு­ளம் செல்­லும் வீதி, குழு­மாட்­டுச் சந்­தி­யூ­டாகச் சுந்­த­ர­பு­ரம் செல்­லும் வீதி, பிரமனா­லங்கு­ளம் பெரிய தம்­பனை வீதி, கோவில்­குளம் ஊடாக சிதம்­ப­ர­பு­ரம் செல்­லும் வீதி,

ஓமந்தை சேம­மடு வீதி, சாந்­த­சோலை – பூந்­தோட்­டம் பிர­தான வீதி உள்­ளிட்ட மக்­கள் பாவனை அதி­க­முள்ள வீதி­கள் அடங்­க­லாக வவு­னியா மாவட்­டத்­தின் மூன்­றில் இரண்டு பகுதி மக்­கள் பயன்­ப­டுத்­து­கின்ற வீதி­கள் அனைத்­தும் போக்­கு­வ­ரத்­துக்கு ஒவ்­வாத வீதி­க­ளா­கவே காணப்ப­டு­கின்றன.

வடக்­கின் மிக முக்­கிய போக்­கு­வ­ரத்து மைய­மான வவு­னி­யா­வின் வீதி­கள் சீர­ழிந்து உள்­ளமை வவு­னியா மக்­க­ளுக்கு மட்­டு­மன்றி வேறு மாவட்­டங்­க­ளில் இருந்து வரும் மக்­க­ளுக்­கும் சிர­மத்தை ஏற்­ப­டுத்­து­கின்­றது.

குறிப்­பாகத் தின­மும் மன்­னார் நக­ரத்­தில் இருந்­தும் மன்­னார் மாவட்­டத்­தின் எல்­லைப்­புறக் கிரா­மங்­க­ளில் இருந்­தும் வவு­னி­யா­வுக்­குப் பய­ணம் செய்­யும் ஆயி­ரக் கணக்கானவர்க­ளும் இத­னால் பாதிக்­கப்­ப­டு­கின்­ற­னர்.

போ ர்க் காலங்­களை விட தற்­போது தான் வீதி­க­ளின் நிலை கேவ­ல­மாக உள்­ளன. அதே நேரத்தில் கண்துடைப்பிற்காக குழிகளை அடைக்கும் பணிகளே வருடாவருடம் இடம் பெறுகின்ற போதும் குழிகளும் முழுமையாக அடைக்கப்படவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந் நிலையில் பிரமணாலங்குளம் பகுதியில் வவுனியா மன்னார் பிரதான வீதியில் வீதியின் நடுவே மன்னார் வீதி விவசாய நிலமாக மாற்றப்பட்டுள்ளது என்ற வாசகத்தினை தாளில் எழுதி அதனை வாழை மரத்தில் கட்டி வாழை மரத்தினை வீதியில் நடுவே காணப்பட்ட குழியினுள் நாட்டப்பட்டுள்ளது.

10வருடங்களுக்கு மேலாக குன்றும் குழியுமாக காணப்படும் வவுனியா – மன்னார் பிரதான வீதி எப்போது செப்பனிடப்படும்?

தென்னிலங்கை கடற்கரையில் சி க்கிய வெளிநாட்டு கடல்சிங்கம்!!

கடல்சிங்கம்

தென்னிலங்கை கடற்பரப்பில் வெளிநாட்டு கடற்சிங்கம் ஒன்று சி க்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெலிகம, மிதிகம பிரதேசத்தில் கடல் சிங்கம் என கருதப்படும் கடல் விலங்கு ஒன்று கரை ஒதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று பிற்பகல் ஒரு மணியளவில் இந்த விலங்கு கரைக்கு அ டித்து வந்ததாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். கடற்சிங்கத்தை பார்வையிடுவதற்கு பெருமளவு மக்கள் அவ்விடத்திற்கு வருகைத்தந்துள்ளனர்.

இதனை முதலில் பார்த்த மக்கள் உடனடியாக பொலிஸாரிடம் அறிவித்துள்ளனர். குறித்த விலங்கின் உ டலின் பல இ டங்களில் கா யம் ஏற்பட்டுள்ளமையினால் உடனடியாக சி கிச்சை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பணப்பையை தவறவிட்ட வெளிநாட்டு தம்பதியினர் : சாரதியின் மனித நேய செயற்பாடு!!

மனித நேய செயற்பாடு

முச்சக்கரவண்டியில் தவறவிட்டு சென்ற பணப்பையை, அதன் சாரதி சுற்றுலா பயணியிடம் கொண்டு சேர்த்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. ஜேர்மனி நாட்டை சேர்ந்த இளம் தம்பதியினர், சிவனொளிபாதமலைக்கு யாத்திரைக்காக கடந்த வெள்ளிக்கிழமை ஹட்டனிலிருந்து முச்சக்கரவண்டியொன்றில் சென்றுள்ளனர்.

இந்நிலையில், இவர்கள் பயணித்த குறித்த முச்சக்கரவண்டியில், சுமார் 8000 ரூபா பணம், 50 யூரோக்கள் மற்றும் ஜேர்மனி நாட்டினுடைய வங்கி அட்டைகள் உள்ளடங்கிய பணப்பையை தவறவிட்டுள்ளனர்.

இதன்போது, முச்சக்கரவண்டியின் சாரதி முச்சக்கரவண்டியை நேற்றிரவு சுத்தம் செய்ய சென்றபோது பணப்பை ஒன்று இருப்பதை கண்டு சுற்றுலா பயணிகள் தங்கியிருந்த நல்லதண்ணி நகரில் அமைந்துள்ள விடுதியின் உரிமையாளருக்கு அறிவித்தார்.

இந்நிலையில், இன்று காலை 11.30 மணியளவில் அவர்களிடம் குறித்த பணப்பையை முச்சக்கரவண்டி சாரதி ஒப்படைத்துள்ளார். குறித்த சுற்றுலா பயணிகள் இருவரும் சாரதிக்கு நன்றி தெரிவித்ததுடன், அவருக்கு சன்மானம் வழங்கினர்.