வவுனியாவில் அண்மைய நாட்களாக பெய்துவரும் மழை காரணமாக பாரியளவில் டெங்கு நுளம்புகள் பெருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வவுனியா நகர்ப் பகுதிகளில் பெருகிவரும் பாரிய டெங்கு நோயை, கட்டுப்படுத்தும் நடவடிக்கை கடந்த சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இதன்போது வவுனியா நகர்ப் பகுதியில் 761 வீடுகளில் பார்வையிடப்பட்டு அங்கு பரிசோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அன்றைய தினத்தில் 335 நுளம்பு பெருக்கெடுக்கும் இடங்கள் அழிக்கப்பட்டுள்ளதுடன் பத்து இடங்களில் நுளம்புக் குடம்பிகள் கண்டெடுக்கப்பட்டு அவற்றின் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை இந்நடவடிக்கை எதிர்வரும் சில தினங்கள் தொடர்ச்சியாக இடம்பெறுவதுடன் எதிர்வரும் 28ஆம் திகதி வரையும் பொது சுகாதாரப் பரிசோதகர்களினால் கால அவகாசம் வழங்கப்பட்ட பகுதிகள் பார்வையிடப்பட்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
நேற்று வரை 310இற்கும் அதிகமான டெங்குநோயாளர்கள் அடையளம் காணப்பட்டுள்ளனர். அந்தவகையில், வவுனியாவில் டெங்கு கட்டுப்பாடு தொடர்பான நடவடிக்கைகளை பிரதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் எம்.மகேந்திரன் கவனித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மன்னார், தாழ்வுபாடு கடற்கரைக்கு மீன் பிடிக்கச் சென்ற இளைஞன் ஒருவர் கடலில் விழுந்து உ யிரிழந்துள்ளார். குறித்த இளைஞன் சக மீனவருடன் இன்று காலை தாழ்வுபாடு கடலில் கண்ணாடி இழை படகு ஒன்றில் மீன் பிடிக்கச் சென்றுள்ளார்.
குறித்த படகினை ஓட்டிச் சென்ற அந்த இளைஞன் படகில் இருந்து திடீரென கடலில் வீழ்ந்துள்ளார். இதையடுத்து விரைந்து செயற்பட்ட சக மீனவர்கள் கடலில் அவரை தேடிய போது உ யிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
உ யிரிழந்தவர் மன்னார் தாழ்வுபாடு கிராமத்தைச் சேர்ந்த 23 வயதுடைய எஸ்.பெப்சிகர் பீரிஸ் என்பவர் எனத் தெரியவருகின்றது. குறித்த இளைஞனின் ச டலம் மன்னார் பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மன்னார் வைத்தியசாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நோர்வூட் பிரதான நகரில் இன்று (25.11.2019) காலை 6.30 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சில்லறை கடை, இருவெட்டு கடை, பழக்கடை மற்றும் வடைக்கடை ஆகிய நான்கு கடைகள் முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இத் தீவிபத்தில் எவருக்கும் உ யிராபத்தோ, கா யங்களோ ஏற்படவில்லை. எனினும் பொருட்கள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.
பிரதேச பொதுமக்கள், நோர்வூட் பொலிஸார் ஆகியோர் இணைந்து தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். எனினும் பொருட்கள் மற்றும் ஆவணங்கள் என அனைத்தும் தீக்கிரையாகியுள்ளன.
தீ ஏற்பட்டதற்கான காரணம் கண்டறியப்படவில்லை என்றும் மின்சார ஒழுக்கு காரணமாக இத் தீ ஏற்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது.
ஏற்பட்ட தீ காரணம் தொடர்பாகவும், சேதவிபரங்கள் தொடர்பாகவும் நோர்வூட் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கொழும்பில் இன்று பிற்பகல் பெய்த கடும் மழையின் காரணமாக சில பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
கொழும்பு, கொட்டாஞ்சேனை உள்ளிட்ட பகுதிகளில் இவ்வாறு கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக போக்குவரத்து நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
நேற்றிலிருந்து இலங்கையில் பெரும்பாலான இடங்களில் தொடர்ச்சியாக பெய்துவரும் கனமழை காரணமாக பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சியில் தொடர் மழை : வெள்ளத்தில் மூழ்கிய இந்துக் கல்லூரி!!
கிளிநொச்சியில் பெய்து வரும் கடும் மழையின் காரணமாக கிளிநொச்சி இந்துக் கல்லூரி வளாகம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
நேற்றிரவிலிருந்து தொடர்ச்சியாக பெய்து வரும் மழையின் காரணமாக அப்பகுதி மக்களின் இயல்பு நிலையும் பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், கிளிநொச்சியில் உள்ள குளங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாகவும், போக்குவரத்து நடவடிக்கைகளும் பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வவுனியா – மன்னார் பிரதான வீதி புனரமைக்க நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளதாக வவுனியா வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதான அதிகாரி தெரிவித்துள்ளார்.
நீண்டகாலமாக புனரமைப்புச் செய்யப்படாதிருந்த வவுனியா – மன்னார் பிரதான வீதி மற்றும் வவுனியா உள்ளூர் வீதிகளின் புனரமைப்பு பணிகள் எதிர்வரும் ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடனுதவியுடன் இணைக்கப்பட்ட வீதிகள் புனரமைப்புத் திட்டத்தின் கீழ் வடக்கு மாகாணத்தில் 343 வீதிகள் மொத்த நீளம் 1034.18 கிலோ மீற்றர் வீதிகள் புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அவற்றின் புனரமைப்புப் பணிகள் இரண்டு வருடங்களில் முடிவுறும் வகையில் ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளது.
இதில் உள்ளடக்கப்பட்ட சில வீதிகளில் வவுனியா – மன்னார் பிரதான வீதி, பறயனாளங்குளம் வரையும், நெளுக்குளம் – நேரியகுளம் வீதி, பூவரசன்குளம் – செட்டிகுளம் ஆகிய பிரதான வீதிகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் ஜனவரி மாதங்களில் புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்க உள்வாங்கப்பட்டுள்ளது மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத நல்லிணக்கம் மட்டுமே இன நல்லிணக்கத்தை நோக்கிச் செல்லும். குறித்த படத்தில் உள்ள பிக்கு சிவலிங்கம் தமக்கு உரித்தான கடவுள் என்ற எண்ணப்பாடு அன்றி பூஜை வழிப்பாட்டில் ஈடுபட்டிருந்தால் நிச்சயமாக பாராட்டலாம்.
ஆம் இரத்தினபுரி ரக்வென பகுதியில் சகோதர மதத்தை சேர்ந்த பௌத்த பிக்குவான பகவந்தலாவ ராகுல தேரர் பிரதோஷத்தை முன்னிட்டு சிவலிங்கத்திற்கு பூஜைகள் செய்த சிறந்த தருணம் இது. இந்த தீவினிலே தற்போதுள்ள சூழலில் இது ஒன்றே அவசியம். இன நல்லிணக்கம் அற்று காணப்படும் இத்தீவில் மத நல்லிணக்கமே இன நல்லிணக்கத்தை நோக்கி செல்ல வழிவகுக்கும்.
மனிதம் இங்கே ம ரணித்துக்கொண்டிருக்கும் தருவாயில் மத நல்லிணக்கம் பற்றி நாம் அனைவரும் அறிந்துவைத்திருக்க வேண்டியது அவசியமான ஒன்றாகும்.
இலங்கை வளர்ச்சி பாதையை நோக்கி வேகமாக பயணிக்கும் நாடாகும். வளமானதும் அழகானதுமானமான நாடாகும். நாட்டின் வளர்ச்சியை மேலும் முன்னேற்றகரமானதாக மாற்ற வேண்டுமாயின் இங்கு வாழும் மக்கள் இன, மத பேதமில்லாமல் ஒன்றிணைய வேண்டும்.
அனைத்து சமூகங்களையும் ஒன்றிணைக்க கூடிய ஆற்றல் மொழிக்கு மாத்திரமே உண்டு. இனங்களுக்கிடையிலான பாலமாக மொழி விளங்குகின்றது. இவற்றிற்கு வழிவகை செய்யும் முதற்படியாக அமையக்கூடியது மத நல்லிணக்கம் என்றால் மிகையாகாது.
உண்மையான மத நல்லிணக்கம் எல்லா மதங்களையும் வளர்க்குமேயல்லாமல் எந்த ஒரு மதத்தையும் அ ழிக்காது. மத நல்லிணக்கம் என்பது மக்களிடையே நட்பை, அன்பை, அமைதியை உருவாக்கக் கூடியது. மத நல்லிணக்கம் என்பது மனிதத்தைக் காக்கும் முக்கிய காரணிகளில் ஒன்று.
உங்களுக்கு தெரியும், அண்மையில் முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் நடந்த சம்பவம் பெரும் விரக்தியையும் அதிருப்தியையும் எம்மவர் மத்தியில் ஏற்படுத்தியிருந்தது. அதுவும் குறிப்பாக நீதிமன்ற உத்தரவையும் மீறி அந்த சம்பவம் அரங்கேறியது. இப்படியான மத நல்லிணக்கத்திற்கு களங்கம் விளைவிக்கக்கூடிய செயல்கள் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
இந்நிலையிலேயே, சிவலிங்கத்திற்கு பூஜை செய்கிறார் சகோதர மொழியை சேர்ந்த பௌத்த பிக்குவான பகவந்தலாவ ராகுல தேரர். குறித்த பிக்கு சிவலிங்கம் தமக்கு உரித்தான கடவுள் என்ற எண்ணப்பாடு அன்றி பூசை வழிப்பாட்டில் ஈடுபட்டிருந்தால் நிச்சயமாக பாராட்டலாம்.
ஏன் என்றால்? மத நல்லிணக்கம் என்பது அலங்கார வார்த்தையாக பயன்படுத்தப்படும் ஒரு சொல் அல்ல. அது மனப்பூர்வமாக நடை முறையில் செயல் படுத்தப்பட வேண்டிய விடயம். மத நல்லிணக்கம் என்பது இன்றைய உலகின் அவசியத் தேவை. உலகிலே எந்த ஒரு சமுதாயமும், எந்த ஒரு நாடும் தனித்து இயங்க முடியாது என்கிற அளவிற்கு பொருளாதார, சமூக, கலாச்சார இணைப்புகள் அதிகமாகி வருகின்றன.
இந்த நிலையிலே மத நல்லிணக்கம் தவிர்க்க முடியாத ஒன்று என்பதை அனைவரும் புரிந்துகொண்டு அதற்கேற்றாற்போல் செயற்பட்டால் இந்த இலங்கை தீவில் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலைக்கும் என்பதில் ஐயமேதுமில்லை.
கடந்த அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட நியமனங்கள் இரத்து செய்யப்பட்டமைக்கு எதிராக வடக்கு மாகாண சுகாதார தொண்டர்களினால் க வனயீர்ப்பு ஆ ர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
வடக்கு மாகாணத்தின் பிராந்திய சுகாதார சேவை திணைக்களத்திற்கு முன்னால் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று (25.11.2019) முன்னெடுக்கப்பட்டது.
வடக்கு மாகாண சுகாதார அமைச்சினால் அண்மையில் சுகாதார தொண்டர்களாக பணியாற்றியவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டபோது,
ஏற்பட்ட கு ழப்பத்தின் காரணமாக மீண்டும் நேர்முகத்தேர்வு இடம்பெற்று தெரிவுசெய்யப்பட்டு அவர்களுக்கான நியமனக் கடிதங்கள் அனுப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் புதிதாக பதவியேற்ற ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய அனைத்து புதிய நியமனங்களும் இரத்து செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டதை அடுத்து அனைத்து நியமனங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் புதிதாக தெரிவு செய்யப்பட்ட சுகாதார தொண்டர்களுக்கான நிரந்தர நியமனத்துக்கான கடிதம் அவர்களது முகவரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன் இன்றைய தினம், கடமையை பொறுப்பேற்குமாறு கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
எனினும் நிர்வாகத்தில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக குறித்த கடிதங்கள் நியமனதாரர்களுக்கு அனுப்பபட்டதாகவும் தற்போது அரச சுற்றுநிரூபத்தில் நிறுத்தும்படி அறிவிக்கப்பட்டதன் காரணமாக குறித்த நியமனத்திற்கு கையெழுத்திட அனுமதிக்க முடியாது எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்ததை அடுத்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அவ்விடத்தை விட்டு விலகிச் சென்றுள்ளார்கள்.
வவுனியா சைவப்பிரகாச ஆரம்பப் பாடசாலையில் ஸ்மார்ட் வகுப்பறை திறப்பு விழாவும் பரிசளிப்பு விழாவும் இன்று (25.11.2019) காலை இடம்பெற்றது.
பாடசாலை வளாகத்தில் அமைக்கப்பட்ட ஸ்மார்ட் வகுப்பறை பிரதம , சிறப்பு விருந்தினர்களினால் திறந்து வைக்கப்பட்டது.
அதன் பின்னர் பாடசாலை முன்றலிருந்து அதிதிகள் பாண்ட் மற்றும் மாணவர்களின் நடனத்துடன் வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் மாணவர்களின் நடனம் இடம்பெற்றதுடன் பரிசளிப்பு நிகழ்வும் , சஞ்சிகை வெளியீட்டு நிகழ்வும் இடம்பெற்றது.
பாடசாலையின் அதிபர் தியாகசோதி யுவராஜா தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண மாகாணக்கல்வித் திணைக்கள பிரதிக்கல்வி பணிப்பாளர் ஆ.சு.சற்குணராஜா,
சிறப்பு விருந்தினராக வவுனியா தெற்கு வலய கல்விப் பணிப்பாளர் முத்து இராதாகிருஷ்ணன், கௌரவ விருந்தினராக வவுனியா தெற்கு ஆரம்பக்கல்வி உதவிக்கல்விப் பணிப்பாளர் ச.முரளிதரன்,
மற்றும் விருந்தினர்களாக அயல் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
முல்லைத்தீவு- மாங்குளம் பகுதியில் இன்று(25.11.2019) காலை தனியாா் பயணிகள் சொகுசு பேருந்தும் டிப்பா் வாகனமும் நேருக்கு நோ் மோதி விபத்துக்குள்ளாகியிருக்கின்றது.
தொடா்ச்சியாக மழை பெய்து கொண்டிருந்தமையினாலேயே இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.
இந்த விபத்து தொடா்பான மேலதிக விபரங்கள் வெளியாகவில்லை.
வடகிழக்கு பருவப்பெயர்ச்சி காலநிலை தீவிரமடைந்துள்ளதனால் நாட்டில் மேலும் மழை பெய்யும் என்று எதிர்வு என்று வானிலை அவதான மையம் இந்த எதிர்வுக்கூறலை வெளியிட்டுள்ளது.
இதன் காரணமாக திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, மொனராகலை, பதுளை மற்றும் பொலநறுவை ஆகிய பிரதேசங்களில் 150 மில்லிமீற்றர் வரை எதிர்வரும் நாட்களில் மழைபெய்யும்.
முல்லைத்தீவு, வவுனியா, அநுராதபுரம், ரத்தினபுரி, கேகாலை, களுத்துறை, நுவரெலியா, காலி மாத்தறை மற்றும் மன்னார் ஆகிய இடங்களில் 100 மில்லிமீற்றர் வரை மழை பெய்யும்.
இதேவேளை வடக்கு வடமத்திய, வடமேற்கு மாகாணங்கள் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் 50 கிலோமீற்றர் வரையான காற்று வீசக்கூடும் என்றும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.
ஐரோப்பாவிற்கு 100க்கும் அதிகமான பு லம்பெயர்ந் தோருடன் சென்ற படகு பு யலில் சி க்கி கடலில் க விழ்ந்ததில் குறைந்தபட்சம் 20 பேர் உ யிரிழந்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
ஐரோப்பாவிற்கு நூற்றுக்கணக்கான பு லம்பெயர் ந்தோரை ஏற்றிச் சென்ற படகு இத்தாலிய தீவான லம்பேடுசா அருகே சென்றுகொண்டிருக்கும் போது, பு யலில் சி க்கி க டலில் கவி ழ்ந்துள்ளது. இதில் குறைந்தது 20 பேர் உ யிரிழந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சனிக்கிழமை நடந்த விபத்தைத் தொடர்ந்து, 13 பெண்கள் மற்றும் மூன்று குழந்தைகள் உட்பட 149 பு லம்பெயர்ந்தோர் மீ ட்கப்பட்டுள்ளனர். ஆனால் 12க்கும் அதிகமானவர்களை இன்னும் கா ணவில்லை என்று இத்தாலிய கடலோர காவல்படை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஐந்து பெண்களின் உடல்கள் மட்டும் ஐரோப்பிய கடலோர கா வல்படை யினரால் மீ ட்கப்பட்டுள்ளது.
முதற்கட்ட தகவல்களின்படி, படகு 160 க்கும் மேற்பட்டவர்களை ஏற்றிக்கொண்டு முந்தைய நாள் லிபியாவிலிருந்து புறப்பட்டிருந்துள்ளது. மோ சமான பு யலின் காரணமாக ப டகு க விழ்ந்து விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.
ஸ்பெயினின் தன்னார்வ தொண்டு நிறுவனமான ப்ரோக்டிவா ஓபன் ஆர்ம்ஸ் தனது ட்விட்டரில், அதிகாலையில் ப டகில் போ ராடிய 73 புலம்பெ யர்ந்தோரை மீ ட்டதாகவும், அவர்கள் இன்னும் அ திர்ச்சியில் உறைந்திருப்பதாகவும் கூறியுள்ளது. அவர்களில் சிலரின் உ டல்களில் து ப்பாக்கிசூ ட்டு கா யங்கள் இருப்பதாகவும், சிலருக்கு தீ க்கா யங்கள் ஏற்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளது.
நிமோனியாவால் பாதிக்கப்பட்டு உ யிரிழக்கும் கு ழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது உலக சுகாதார நிறுவனம்.
அதுவும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள், இதுகுறித்து விரிவாக தெரிந்து கொள்ளலாம். வைரஸ் மற்றும் பக்டீரியா தொற்றால் நுரையீரலில் ஏற்படும் தொற்றே நிமோனியா ஆகும்.
அறிகுறிகள்
இருமல்
குளிர் காய்ச்சல், நடுக்கம்
வேகமாக மூச்சுவிடுதல், மூச்சுத் திணறல்
வயிற்றுப்போக்கு
உதடுகள் வெளிறிப்போதல் அல்லது நீலம் பூத்தல்
நெஞ்சு வலி
பசியின்மை, உடல் சோர்வு
அதிகப்படியான இதய துடிப்பு
யாருக்கெல்லாம் வரலாம்? நோய் எ திர்ப்பு சக்தி குறைவான குழந்தைகளை எளிதில் தாக்குகிறது, இதுமட்டுமின்றி 65 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கும் ஏற்படலாம்.
சர்க்கரை நோய், பு கை பி டிப்பது மற்றும் ம து அ ருந்தும் ப ழக்கம் உள்ளவர்கள், ஆஸ்துமா, உள்ளிட்ட நெஞ்சு சளி பிரச்சினை உள்ளவர்கள், இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள், சிறுநீரக பா திப்பு உள்ளவர்கள்,
பக்கவாதத்தால் மருந்துகளை தொடர்ச்சியாக எடுத்துக் கொள்பவர்கள், புற்றுநோயிற்கு அளிக்கப்படும் சில மருந்துகள் போன்றவற்றின் காரணமாகவும் நிமோனியா தாக்குவதற்கு வாய்ப்புண்டு.
எப்படி தடுக்கலாம்? பிறந்த குழந்தைகளுக்கு கண்டிப்பாக 6 மாத காலம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். தடுப்பூசியை சரியான கால அளவில் குழந்தைகளுக்கு போட வேண்டும்.
50 வயதை கடந்தவர்களாக இருப்பின் ஒரு தடவையாவது தடுப்பூசி போட்டுக் கொள்வது அவசியம். நாம் வாழும் இடத்தை சுத்தமாக பராமரிக்க வேண்டும், சளி, இருமல் இருந்தால் கைக்குட்டையை பயன்படுத்துவது அவசியம்.
கிழக்கு ஆபிரிக்கா நாடான கென்யாவில் கடும் மழையால் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் சிக்கி உ யிரிழந்தோரின் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளது.
கென்யாவின் மேற்கு போகோட் மாகாணத்தில் பொழிந்து இடைவிடாத கடும் மழை மற்றும் வெள்ளதால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக பல கிராமங்கள் பூமியின் கீழ் பு தைந்துள்ளது. இதனால், பெருமளவிலான மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.
கா ணாமல் போனதாக நினைத்த பலர் இ றந்ததால் ப லி எண்ணிக்கை 36-ஐ எட்டியுள்ளது என மாகாணத்தைச் சேர்ந்த செனட்டரான சாமுவேல் போகிசியோ தெரிவித்துள்ளார்.
மேற்கு போகோட் மாவட்ட ஆளுநர் ஜான் லோனியாங்காபுவோ கூறுகையில், இறந்தவர்களில் 11 பேர் ஒரே வீட்டைச் சேர்ந்தவர்கள். அதிகமான மக்கள் தப்ப முடியாத இடத்தில் சிக்சி தவித்து வருகின்றனர். முழு கிராமமும் வெள்ளத்தால் அழியும் அபாயத்தில் உள்ளது என தெரிவித்துள்ளார்.
தக்மால் கிராமத்தில் நிலச்சரிவில் சிக்கி 17 பேரும், பருவா மற்றும் தபாச் கிராமங்களில் நிலச்சரிவில் சிக்கி 12 பேரும் உ யிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தால் பா திக்கப்பட்டவர்களுக்கு உதவ அரசாங்கம் ராணுவ மற்றும் பொலிஸ் ஹெலிகாப்டர்களை அனுப்பியது, ஆனால் பே ரழிவின் தா க்கம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என உள்துறை அமைச்சரவை செயலாளர் பிரெட் மத்தியாங்கி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பா திக்கப்பட்ட குடும்பங்களுக்கு கென்யாவின் ஜனாதிபதி உஹுரு கென்யாட்டா ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அமீரகத்தின் ஷார்ஜா மாகாணத்தில் மா யமான சிறுவன் தொடர்பில் பொலிசார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். ஷார்ஜா மாகாணத்தில் குடியிருந்து வருபவர்கள் இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்த சந்தோஷ் ராஜன் மற்றும் பிந்து சந்தோஷ் தம்பதி.
இவர்களின் அமேயா சந்தோஷ் என்ற 15 வயது மகனே கடந்த வெள்ளிக்கிழமை முதல் கா ணவில்லை என மாகாண பொலிசார் தே டி வருகின்றனர். ஷார்ஜாவில் உள்ள பாடசாலை ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்துவரும் அமேயா, தேர்வு கண்டு அஞ்சி மா யமானதாகவும் தகவல் பரப்பப்படுகிறது.
ஆனால், கல்வி தொடர்பில் தாங்கள் எந்த அ ழுத்தமும் அமேயாவுக்கு தந்ததில்லை என பெற்றோர்கள் பொலிசாரிடம் தெரிவித்துள்ளனர். வெள்ளியன்று பகல், கல்வி மையத்தின் அருகே அமேயாவை விட்டுவிட்டு வந்ததாகவும், ஆனால், அதன் பின்னர் அமேயா அந்த கல்வி மையத்தின் உள்ளே சென்றதில்லை எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அமேயாவிடம் காசு எதுவும் இல்லை எனவும், அவரது மொபைல் போன் தற்போது அணைத்து வைக்கப்பட்டுள்ளது எனவும் பெற்றோர் தெரிவித்துள்ளனர். மேலும், தற்போது குளிர் காலம் என்பதால் இரவு அமேயா எங்கே படுத்துறங்குவான் என கேட்டு, தாயார் க ண்ணீர் வடித்துள்ளார்.
அமேயா இதுவரை பெற்றோரையோ, நண்பர்களையோ தொடர்புகொள்ளவில்லை எனவும் கூறப்படுகிறது. மட்டுமின்றி அமேயா பொதுவாக யாருடனும் பழகுவதில்லை எனவும், உதவி கேட்டு யாரையும் நாடும் குணம் கொண்டவர் அல்ல எனவும் பெற்றோர்கள் பொலிசாரிடம் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே மா யமான சிறுவன் தொடர்பில் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர் ஷார்ஜா மாகாண பொலிசார். சி றுவன் தொடர்பில் தகவல் தெரியவரும் பொதுமக்கள் பொலிசாரை நாடவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பிரித்தானியாவில் அபூர்வ நோயால் பா திக்கப்பட்டு முகம் சி தைந்த பெண்மணி ஒருவர் தாம் எதிர்கொண்ட ஏளனம் குறித்தும் தமது வாழ்க்கையை மாற்றிய காதல் குறித்தும் முதன் முறையாக பகிர்ந்து கொண்டுள்ளார்.
பிரித்தானியாவின் மான்செஸ்டர் பகுதியில் குடியிருப்பவர் இரண்டு பிள்ளைகளின் தாயாரான அனா ரோமன். கடந்த 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தி டீரென்று சு ருண்டு வி ழுந்த அனாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு மூளையில் புற்றுநோய் இருப்பதை உறுதி செய்தனர்.
இது அவரது நோய் எ திர்ப்பு சக்தியை சி தைத்ததுடன், இன்னொரு அரிதான நோய்க்கும் வழிவகுத்தது. அதனால் அனாவின் மூக்கு விரூபமானது. இந்த ஒரே காரணத்தால் நாளடைவில் அனா கொ டூரமாக சொற்களை எதிர்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டார்.
பேய் என்று கூறியவர்களைவிட ராசியில்லாத முகம் என ஏளனம் செய்தவர்களே அதிகம் என அனா நினைவு கூர்ந்துள்ளார். வாழ்க்கையை வெறுத்துப் போயிருந்த அனா, மருத்துவர்களை நாடியதுடன், ஆறு மணி நேரம் நீண்ட அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்.
இதனால் அவரது முகம் மீண்டும் அ கோரமானது. இந்த நிலையிலேயே அனா தமது தற்போதைய கணவரை சந்தித்திருக்கிறார். இருவரும் ஒத்த கருத்துடையவர்கள் என தெரியவந்த நிலையில், கடந்த மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
புற்றுநோய்க்கான சிகிச்சையால் கடுமையாக பா திக்கப்பட்டிருந்த அனாவால் மீண்டும் பிள்ளை பெற்றுக்கொள்வது கடினம் என மருத்துவர்களால் கூறப்பட்ட நிலையில் அனா தற்போது கருவுற்றிருக்கிறார்.
ஆனால் அவரது நரம்பு மண்டலம் பா திக்கப்பட்டுள்ளதால் உரிய சிகிச்சைக்காக அவர் தமது பிறந்த நாடான ருமேனியாவுக்கு திரும்பியுள்ளார். மீண்டும் பிரித்தானியாவுக்கு திரும்பும் மன நிலையில் தாம் இல்லை எனவும் அனா வருத்தமுடன் தெரிவித்துள்ளார்.