விடிந்தால் தங்கைக்கு திருமணம் : அண்ணன் தி டீர் ம ரணம் : க ண்ணீரில் மூ ழ்கிய குடும்பம்!!

விடிந்தால் தங்கைக்கு திருமணம்..

தங்கையின் திருமணம் நடைபெறவிருந்த வேளையில் தி டீரென அண்ணன் உ யிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சியை சேர்ந்த விவசாயி சண்முகம்-செல்லத்தாயி தம்பதியினருக்கு மூன்று மகள்கள் ஒரு மகன் உள்ளனர்.

இவர்களுடைய இரண்டு மகள்களுக்கும் திருமணம் முடிந்த நிலையில் நேற்று கடைசி மகள் மீனாவுக்கும், அவர்களுடைய உறவினரின் பையன், குமார் என்பவருக்கும் திருமணம் நடைபெற இருந்தது.

நேற்றைக்கு முன்தினம் இரவு பெண் அழைப்பு நிகழ்ச்சி நடைபெற இருந்ததால் மீனாவின் சகோதரன் தனபால் (29), சமையல் உள்ளிட்ட வேலைகளில் தீ விரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்துள்ளார்.

சனிக்கிழமை இரவு இயற்கை உ பாதையினை கழிப்பதற்காக தனபால், வயல்பகுதியில் இருள்சூழ்ந்த பகுதிக்கு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் தி ரும்பாததால் ச ந்தேகமடைந்த அவருடைய தந்தை தே டிச்சென்றுள்ளார்.

அப்போது தண்ணீர் இல்லாத கிணற்றுக்குள் தனபால் த வறி கி டப்பதை பார்த்து அ திர்ச்சியடைந்துள்ளார். இதனையடுத்து உடனடியாக மீட்கப்பட்டு தனபால் ம ருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு ப ரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள் தனபால் ஏ ற்கனவே உ யிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதனை கேள்விப்பட்டு அந்த கிராமமே சோ கத்தில் மூ ழ்கியது. இதனால் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்த திருமணம் வேறு திகதிக்கு மாற்றப்பட்டது.

அவுஸ்திரேலியாவில் மலர்ந்த காதல் : சீனப் பெண்ணை மணந்த தமிழ் இளைஞர்!!

சீனப் பெண்ணை மணந்த தமிழ் இளைஞர்

அவுஸ்திரேலியாவில் மருத்துவராக பணிபுரிந்து வரும் தமிழக இளைஞர், சீனாவை சேர்ந்த இளம்பெண்ணை தமிழ் முறைப்படி திருமணம் செய்துள்ளார். சேலத்தை சேர்ந்த பரசுராமன் என்பவரது மகன் அருண்பிரசாத் (34). இவர் அவுஸ்திரேலியாவில் உள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.

இவருக்கும், அங்கு உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் மனிதவள மேம்பாட்டு துறை அதிகாரியாக பணியாற்றி வரும் சீனாவை சேர்ந்த கிறிஸ்டல் ஜியாங் (31) என்கிற பெண்ணுக்கும் அறிமுகம் கிடைத்துள்ளது.

இருவரும், பகுதிநேரமாக அவுஸ்திரேலியாவில் வேறு ஒரு இடத்தில் வேலை பார்க்கும்போது பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மலர்ந்தது.

முதலில் அருண்பிரசாத் காதலை கூறும்போது கிறிஸ்டல், ஏற்றுக்கொள்ள தயங்கியுள்ளார். பின்னர் சிறிது நாட்கள் கழித்து கிறிஸ்டலும் காதலுக்கு சம்மதம் தெரிவிக்க, அந்த காதல் 5 வருடங்களாக தொடர்ந்துள்ளது.

இதற்கிடையில் இருவரும் தங்களுடைய வீட்டில் திருமணத்திற்கு சம்மதம் பெற்றுள்ளனர். இந்த நிலையில் இவர்களது திருமணம் தமிழில், கிறிஸ்தவ முறைப்படி நேற்று காலை சேலத்தில் உள்ள ஒரு ஆலயத்தில் நடைபெற்றது.

இதில் அருண்பிரசாத் சார்பில் ஏராளமான உறவினர்களும், கிறிஸ்டல் ஜியாங்கின் பெற்றோரும் கலந்துகொண்டுள்ளனர். அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் தம்பதியினரின் திருமண வரவேற்பு சீனாவில் நடைபெறும் எனவும் திருமண வீட்டார் தெரிவித்துள்ளனர்.

இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சியான தகவலை வெளியிட்ட நிதியமைச்சு!!

மகிழ்ச்சியான தகவல்

நாட்டில் ஏற்பட்டுள்ள சமையல் எரிவாயு நெ ருக்கடிக்கு சில தினங்களில் தீர்வு காணப்படும் நிதியமைச்சு அறிவித்துள்ளது. கடந்த சில வாரங்களாக நாட்டின் பல பகுதிகளில் எரிவாயுக்கு தட்டுபாடு காணப்படுகிறது.

உடனடியாக அதனை நிவர்த்தி செய்யும் வகையில் 12 ஆயிரம் மெற்றிக் தொன் சமையல் எரிவாயுவை இறக்குமதி செய்யப்படவுள்ளது. முதற்கட்டமாக 3600 மெற்றிக் தொன் சமையல் எரிவாயுவை ஏற்றிய கப்பல் ஒன்று நாளையதினம் கொழும்பு துறைமுகத்தை வந்தடையும் என அமைச்சு தெரிவித்துள்ளது.

3600 மெற்றிக் தொன் சமையல் எரிவாயுவை ஏற்றிய கப்பல் ஒன்று கடந்த சனிக்கிழமை நாட்டை வந்தடைந்தது. இந்த நிலையில் சனிக்கிழமை மேலும் 3600 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றிய மற்றுமொரு கப்பலும் இலங்கை வரவுள்ளது.

அவசர கொள்வனவின் கீழ் ஆறாயிரம் மெற்றிக் தொன் சமையல் எரிவாயுவை ஏற்றிய இரண்டு கப்பல்கள் அடுத்த வாரம் இலங்கை வரவுள்ளதாகவும் நிதியமைச்சு தெரிவித்துள்ளது. எரிவாயு தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் மற்றும் ஹோட்டல்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரான்சில் ப யங்கர வி பத்து : இலங்கையர்கள்.. பிரித்தானியர்கள் உட்பட 33 பேரின் நிலைமை?

பிரான்சில்..

பிரான்சில் வெளிநாட்டு பயணிகளுடன் பயணித்த தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான பேருந்து விபத்துக்குள்ளான சம்பவம் ப ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐரோப்பா முழுவதும் பேருந்து சேவை வழங்கி வரும் ஜேர்மனி-யின் FlixBus நிறுவனத்திற்கு சொந்தமான பேருந்து, 33 பேருடன் பிரான்ஸ் தலைநகர் பாரிஸிலிருந்து, பிரித்தானியா தலைநகர் லண்டனுக்கு புறப்பட்டுள்ளது.

வடக்கு பிரான்ஸ் Somme, Saint-Quentin அருகே ஏ1 மோட்டார் பாதையில் சென்றுக்கொண்டிருந்த போது மழை மற்றும் காற்று காரணமாக சறுக்கிய பேருந்து, சாலை ஓரத்தில் அமைக்கப்பட்டிருந்த பா துகாப்பு வேலியை உ டைத்துக்கொண்டு தாறுமா றாக உ ருண்டு சென்றுள்ளது.

இந்த கோ ர விபத்தில் பேருந்தில் பயணித்த பெண் ஓட்டுநர் உட்பட 32 பயணிகள் என அனைவரும் பா திக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும், பேருந்தில் இங்கிலாந்து, பிரான்ஸ், அமெரிக்கா, ஸ்பெயின், அவுஸ்திரேலியா, ருமேனியா, மொரீஷியஸ், ஜப்பான் மற்றும் இலங்கை ஆகிய ஒன்பது நாடுகளை சேர்ந்தவர்கள் பயணித்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளது. பேருந்தில் 10 பிரித்தானியர்கள் பயணித்ததை உள்ளுர் பொலிசார் உறுதி செய்துள்ளனர்.

சம்பவம் குறித்து பொலிசர் வெளியிட்டுள்ள தகவலில், கா யமடைந்த பலருக்கு சம்பவயிடத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது மற்றவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். நான்கு பேருக்கு ப லத்த கா யம் ஏற்பட்டுள்ளது என கூறினர்.

பயங்கர வி பத்தை அடுத்து மீட்பு பணிக்காக அவசர சேவை, 50 தீய ணைப்பு வீரர்கள், 30 பொலிசார் மற்றும் 10 ஆம்புலன்ஸ் சம்பவயிடத்திற்கு விரைந்துள்ளனர்.

பேருந்திற்குள் சி க்கிய பயணிகளை வா கனத்தின் பின்புறத்தில் து ளையிட்டு மீட் புக்குழுவினர் மீட்டுள்ளனர். வி பத்திற்கான காரணம் குறித்து பிராந்திய பொலிசார் விசாரணை முன்னெடுத்துள்ளனர்.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டவர்களை த விர்த்து மற்ற பயணிகள் அனைவரும், FlixBus அனுப்பிய மற்றொரு பேருந்து மூலம் லண்டன் பயணித்துள்ளனர். மேலும், பா திக்கப்பட்டவர்கள் குறித்து தகவல் அறிய உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா வைத்தியசாலையில் ப தற்றநிலை : ஐவர் கா யங்களுடன் வைத்தியசாலையில்!!

மின்சார சபையினர் மீது..

வவுனியா, ஆச்சிபுரம் பகுதியில் மின் து ண்டிப்புக்கு சென்ற மின்சார சபையின் மீது மே ற்கொள்ளப்பட்ட தா க்கு தலில் 5 பேர்  கா யமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், வாகனம் ஒன்றும் சே தமடைந் துள்ளது.

வவுனியா, ஆச்சிபுரம், 10 ஆம் ஒழுங்கைப் பகுதியில் மின்சார பட்டியல் நிலுவையில் உள்ள வீடுகளின் மின்சாரத் து ண்டிப்புக்காக மின்சார சபையினர் சென்றுள்ளளர். இதன்போது குறித்த வீட்டாருக்கும், மின்சார சபையினருக்கும் இ டையில் மு ரண்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து அப்பகுதியில் ஒன்றுகூ டிய பலர் மின்சார சபை வாகனத்தை ந கரவிடாது த டுத்து நி றுத்தியமையால் கு ழப்பம் ஏற்பட்டது.

இதன்போது மின்சார சபையினர் மீது க ம்பிகளால் தா க்கப்பட்ட மையால் 5 பேர் கா யமடைந்துள்ளதாக தெரியவருகிறது. மின்சார சபை வாகனம் ஒன்றும் சே தமாக்க ப்பட்டுள்ளது.

கா யமடைந்த 5 பேரும் வவுனியா வை த்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மின்சார சபையினரால் 119 பொலிசாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து அங்கு சென்ற வவுனியா பொலிசார் 3 பெண்களை கை து செய்துள்ளதுடன், இது தொடர்பில் மேலும் ப லரை தே டி வருகின்றனர்.

இதேவேளை, குறித்த பகுதிக்கான மின்சாரம் து ண்டிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலையடுத்து இலங்கை மின்சார சபையின் பிராந்திய காரியாலயத்தினை தொடர்பு கொண்ட போது குறித்த பகுதிக்கான மின்சாரம் து ண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்ததுடன் அதற்கான காரணத்தினை தெரிவிக்க ம றுத்துவிட்டனர்.

கணவர் இல்லாமல் வாழ மூடியாது : 6 வயது மகளுடன் பெண் செய்த செயல்!!

அவர் இல்லாமல்….

தமிழகத்தில் கணவர் ம ரணம டைந்த சோ கத்திலிருந்து மீ ளமுடியாத பெண் ஒருவர் தனது மகளுடன் த ற்கொ லை செய்துகொண்ட சம்பவம் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 33 வயது சரசு என்பவர் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரிந்து வந்துள்ளார். கணவர் கார்த்திகேயனுடன் சென்னையில் குடியிருந்து வந்த இந்தத் தம்பதிக்கு 6 வயதில் வைஷாலி என்ற பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் அலுவலகத்தில் ஏற்பட்ட பி ரச்னை காரணமாக 6 மாதத்துக்கு முன்பு கார்த்திகேயன் தூ க்கிட்டுத் த ற்கொ லை செய்துகொண்டுள்ளார். அந்த அ திர்ச்சியிலிருந்து மீள மு டியாமல் தன் குழந்தை வைஷாலியுடன் நேமூரில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு சென்ற சரசு அதன்பிறகு பணிக்குத் திரும்பவில்லை.

தனது கணவர் இ றந்த வி ரக்தியில் இருந்த சரசு, அவர் இல்லாம எப்படிம்மா என்று தனது பெற்றோருடன் அடிக்கடி கூறி வந்திருக்கிறார். மேலும் யாருடனும் சரியாகப் பேசாமல் இருந்த அவர் குழந்தையுடன் மட்டுமே நேரத்தை செலவிட்டு வந்திருக்கிறார்.

இந்த நிலையில், இன்று காலை சுமார் 4 மணிக்கு குழந்தை வைஷாலியை து ப்பட்டாவால் தன்னுடைய இbடுப்பில் கbட்டிக்கொண்டு தனது வீட்டுக்கு அருகில் இருந்த விவசாயக் கி ணற்றில் கு தித்து த ற்கொ லை செய்துகொண்டுள்ளார்.

வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த மகளையும் பேத்தியையும் கா ணாமல் தே டியிருக்கிறார்கள் சரசுவின் பெற்றோர். இதனிடையே விவசாயக் கிணற்றின் அருகில் ஒரு செல்போனும் செருப்பும் இருப்பது குறித்து ச ந்தேகமடைந்த ஒருவர் கிணற்றில் எட்டிப் பார்த்திருக்கிறார்.

அப்போது இ டுப்பில் க ட்டிய தன் கு ழந்தையுடன் உ யிரிழந்து மி தந்திருக்கிறார் சரசு. உடனே அருகாமையில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார்.

அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற காவல்துறையினர், தீய ணைப்புத் துறையினரின் உதவியுடன் சரசு மற்றும் குழந்தை வைஷாலியின் உ டல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விவகாரம் தொடர்பில் காவல்துறையினர் வழக்கு விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

வவுனியா உட்பட அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் மகிழ்ச்சியான செய்தி!!

மகிழ்ச்சியான செய்தி

நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து பாடசாலைகளையும் எதிர்வரும் 15ஆம் திகதி முற்பகல் 11.15 மூடுவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய அனைத்து மாவட்டங்களிலும் காணப்படுகின்ற கல்வி பணிமனைகளுக்கு குறித்த அறிவித்தல் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தெரியவருகின்றது.

னைத்து பாடசாலைகளையும் எதிர்வரும் 15ஆம் திகதி முற்பகல் 11.15 மூடுவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

மனைவியின் த ற்கொ லையை தடுக்காமல் பொறுமையாக வீடியோ எடுத்த கணவன்!!

வீடியோ எடுத்த கணவன்

இந்தியாவின் உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஒரு நபர் தனது மனைவியைத் தடுத்து நிறுத்துவதற்குப் பதிலாக தற்கொ லை செய்துகொள்வதை வீடியோவாக படமெடுத்துள்ளார்.

அக்டோபர் 29, செவ்வாயன்று உத்தரபிரதேசத்தின் புடான் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்ததாக தெரியவந்துள்ளது. தற்கொ லை சம்பவத்தை படமாக்கியதாக அங்கு வேலை செய்துவந்த பணிப்பெண் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து,

இந்த விடயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. வரதட்சணை கோரியதற்காக அந்த பெண் தற்கொ லை செய்துகொண்டதாக மாமியார் மீது புகார் அளித்தார். இ றந்தவர் சுவாதி என்றும், கு ற்றவாளி கோவிந்த் என்றும் பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

பணிப்பெண்ணின் கூற்றுப்படி, இந்த ஜோடி கடந்த மே மாதம் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்ததிலிருந்தே இருவரும் மகிழ்ச்சியற்று இருந்ததாகவும், சுவாதியின் மாமியார் தொடர்ந்து வ ரதட்சணை கோரியதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சுவாதி க ழுத்தில் கயிற்றை கட்டிக்கொண்டு மின் விசிறியில் தொ ங்குவதை தடுக்காமல், அதனை கோவிந்த் வீடியோ எடுத்துக்கொண்டிருந்ததாக பணிப்பெண் கூறியுள்ளார். பின்னர் அந்த காட்சிகளை ஒன்லைனில் பகிர்ந்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

சம்பவம் நடந்த உடனேயே அங்கு குவிந்தவர்களிடம், சுவாதி மாரடைப்பு ஏற்பட்டு இ றந்துவிட்டதாக கோவிந்த் கூறியுள்ளார். இருப்பினும், பணிப்பெண் கொடுத்த முரண்பட்ட அறிக்கையின் அடிப்படையில் பொலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து இதுவரை கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என்றாலும், ஒன்லைனில் பரபரப்படும் தற்கொ லை வீடியோ குறித்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பல்வரிசை சரியில்லை : கணவனின் முடிவால் த விக்கும் இளம்பெண்!!

இளம்பெண்

பல்வரிசை சரியில்லை எனக்கூறி மனைவிக்கு முத்தலாக் அளித்துள்ள அ திர்ச்சி சம்பவம் இந்தியாவின் தெலங்கானாவில் நிகழ்ந்துள்ளது. ஹைதராபாத்தில் வசித்து வருபவர் ரக்‌ஷனா பேகம். அவரது கணவர் முஸ்தபா. தனக்கு பல் வரிசையாக இல்லை எனக் கூறி தனது‌ கணவர்‌ மு‌ஸ்தபா பல‌மாதங்களாக தன்னை த வறாக பேசி வந்ததாக ரக்‌ஷனா பேகம் தெரிவித்துள்ளார்.

திடீரென ஒரு நாள் அவர் தனக்கு மூன்று முறை தலாக் கூறிவிட்டுச் சென்றுவிட்டதாகவும், தான் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட‌போது, இருவருக்கும் இடையில் எவ்வித உ றவும் இல்லை என அவர் கூறியதாகவும் ரக்‌ஷனா தெரிவித்துள்ளார். எனவே தனக்கு நீதி கிடைக்க வேண்டும் என ரக்‌ஷனா பேகம் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பேசிய ரக்‌ஷனா, ”திருமணத்தின் போது முஸ்தபா குடும்பத்தினர் கேட்டதையெல்லாம் நாங்கள் செய்தோம். ஆனால் திருமணத்துக்கு பிறகும் நகை வேண்டும், பணம் வேண்டுமெனக் கேட்டு அவர்கள் என்னை சி த்ரவ தை செய்தனர்.

என் சகோதரரிடம் இருந்த இரு சக்கர வாகனத்தையும் முஸ்தபா எடுத்துக்கொண்டார். என்னை தொடர்ந்து து ன்புறுத்திய முஸ்தபா, என் பற்கள் வரிசையாக இல்லையெனக்கூறி என்னை பிடிக்கவில்லை எனத் தெரிவித்தார்.

முஸ்தபா குடும்பத்தினர் என்னை 10-15 நாட்கள் வீட்டுக்குள்ளேயே அ டைத்து வை த்திருந்தனர் என தெரிவித்துள்ளார் தற்போது முத்தலாக் தடை சட்டம் அமலில் உள்ளது. அதன்படி, த டையை மீறி முஸ்லிம் ஆண் ஒருவர் முத்தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்தால், அவர் மூன்று ஆண்டுகள் சி றைவாசம் அனுபவிக்க நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

18 மணி நேர போ ராட்டம் : ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சி றுமி உ யிரிழப்பு!!

5 வயது சி றுமி

அரியானா மாநிலத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சி 4றுமி 18 மணி நேர போ ராட்டத்திற்கு பின் மீ ட்கப்பட்ட நிலையில் சி கிச்சை ப லனின்றி உ யிரிழந்துள்ளார்.

அரியானா மாநிலம் கர்னல் மாவட்டத்தை சேர்ந்த ஷிவானி என்கிற 5 வயது சி றுமி ஞாயிற்றுக்கிழமை மாலை தி டீரென மா யமாகியுள்ளார். இரவு 8.30 மணியை தாண்டியும் மகள் வீடு வந்து சேராததால் ச ந்தேகமடைந்த பெற்றோர் அக்கம்பக்கத்தில் தே ட ஆரம்பித்துள்ளனர்.

அப்போது திறந்த வெளியில் இருந்த 50 அடி ஆழ்துளை கிணற்றில் சி றுமி வி ழுந்திருக்கலாம் என ச ந்தேகித்து ஒரு கைபேசியில் கயிற்றை கட்டி உள்ளே அனுப்பினர். வீடியோ பதிவில் உள்ளே சி றுமி சி க்கியிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து உடனடியாக உள்ளூர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மீ ட்பு நடவடிக்கைக்கு துவங்கியது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீய ணைப்பு மற்றும் தேசிய மீ ட்பு ப டை அதிகாரிகள் முதலில் கயிற்றை கட்டி கு ழந்தையை வெளியில் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். கு ழந்தை தலைகீழாக விழுந்திருந்தால் ஆரம்பகட்ட முயற்சிகள் தோல்வியடைந்தன.

இதனையடுத்து, சி றுமியை வெளியே இழு க்க வேறு வழிமுறைகளை முயற்சித்தனர். இறுதியில் பக்கவாட்டில் குழி தோண்டி திங்களன்று ஷிவானி வெளியே எடுக்கப்பட்டார். ஆனால் குழந்தையின் உ டல் அ சைவு எதுவும் காணப்படவில்லை.

உடனே கல்பனா சாவ்லா மருத்துவக் கல்லூரிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை ப லனின்றி உ யிரிழந்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. முன்னதாக 2 வயது குழந்தை சுஜித் வில்சன், தமிழ்நாட்டின் நாடுகட்டுப்பட்டி கிராமத்தில் ஒரு போர்வெல்லில் த வறி வி ழுந்தார்.

து ரதிர்ஷ்டவசமாக, மீ ட்பு நடவடிக்கையின் நீண்ட மணிநேரங்களுக்குப் பிறகு, இ றந்த நிலையில் அவருடைய உ டல் மீ ட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கூகுள் குரோம் பயன்படுத்துபவரா நீங்கள் : ஆபத்து.. உடனடியாக இதைச் செய்யுங்கள்!!

கூகுள் குரோம்

அன்ரோயிட் சாதனங்களாக இருந்தாலும் சரி iOS சாதனங்களாக இருந்தாலும் சரி இணையப் பயன்பாட்டிற்கு அனேகமானவர்கள் கூகுள் குரோம் உலாவியையே பயன்படுத்தி வருகின்றனர்.

இவ்வாறு கூகுள் குரோம் உலாவியை பயன்படுத்தும் பல மில்லியன் கணக்கானவர்களுள் நீங்களும் ஒருவர் ஆயின் உடனடியாக குறித்த இணைய உலாவி அப்பிளிக்கேஷனை அப்டேட் செய்யுங்கள்.

காரணம் ஹே க்கர்கள் குறித்த உலாவியின் ஊடாக புகுந்து பயனர்களின் தரவுகளை திருடும் ஆபத்து காணப்பட்டது. எனினும் இணைய ஜாம்பவான் ஆன கூகுள் குறித்த குறைபாட்டினை நிவர்த்தி செய்து புதிய பதிப்பினை வெளியிட்டுள்ளது.

குரோம் 78 எனும் புதிய பதிப்பானது மொபைல் சாதனங்களுக்காக மாத்திரமன்றி விண்டோஸ் மற்றும் லினக்ஸ் போன்ற இயங்குதளங்கள் பயன்படுத்தப்படும் டெக்ஸ்டொப், லேப்டொப் கணினிகளுக்காகவும் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா சிதம்பரபுரம் ஈழத்து பழனி முருகன் ஆலயத்தில் இடம்பெற்ற சூரசம்காரம்![?]

வவுனியா சிதம்பரபுரம் ஈழத்து பழனி முருகன் ஆலயத்தின்  கந்த சஷ்டி  உற்சவத்தின்  ஆறாவது நாளான   02.11.2019  அன்று  முருகப்பெருமான் சூரபத்மனை வதம் செய்யும்   சூரசம்காரம்  சிறப்பான முறையில் இடம்பெற்றது.

மேற்படி சூரசம்கார நிகழ்வில்  நூற்றுக்கணக்கான  முருகனின் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

வவுனியாவில் இன்றும் நாளையும் இடம்பெறும் தபால் மூல வாக்களிப்பு!!

தபால் மூல வாக்களிப்பு

2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட தபால் மூல வாக்களிப்பு இன்றும் நாளையும் நடைபெறவுள்ளது.

வவுனியாவில் எதிர்வரும் 16ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின் தபால் மூல வாக்களிக்க தகுதிபெற்றோர் இன்று காலை 7.00 மணி முதல் வாக்களிப்பு நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர்.

பொலிஸார், தேர்தல் அலுவலகங்கள் மற்றும் மாவட்ட செயலக அதிகாரிகள் தவிர்ந்த ஏனைய அனைத்து அரச நிறுவனங்களின் அதிகாரிகளுக்கான தபால் மூல வாக்களிப்பு கடந்த 31ம் திகதி மற்றும் 1ம் திகதி இடம்பெற்றிருந்ததுடன்,

இன்று (04.11.2019) பொலிஸ் உத்தியோகத்தர்கள் , மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள், தேர்தல் அலுவலக உத்தியோகத்தர்களுக்கான தபால் மூல வாக்களிப்பு நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

பொலிஸாருக்கான தபால் மூல வாக்களிப்பு வவுனியா பொலிஸ் நிலையத்தில் இடம்பெறுவதுடன் மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள், தேர்தல் அலுவலக உத்தியோகத்தர்களுக்கான தபால் மூல வாக்களிப்பு வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுவருகின்றது.

இவர்களுக்கான தபால் மூல வாக்களிப்பு நாளைய தினமும் (05.11.2019) இடம்பெறவுள்ளதுடன் வாக்களிக்க தவறிய ஏனைய அரச உத்தியோகத்தர்கள் வருகின்ற 7ம் திகதி வவுனியா மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்து வாக்களிக்க முடியுமென மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும், மாவட்ட அரசாங்க அதிபருமான ஐ.எம்.ஹனீபா தெரிவித்திருந்தார்.

வவுனியா நகரசபை கடிதத்தினை பயன்படுத்தி போலி ஆவணம் தயாரித்த தமிழரசுக் கட்சியின் நகரசபை உறுப்பினர்!!

வவுனியா நகரசபை கடிதத்தினை பயன்படுத்தி போலி ஆவணம் தயாரித்த கு ற்றச்சாட்டில் வவுனியா – இறம்பைக்குளம் வட்டார உறுப்பினர் ஒருவர் மீது நகரசபை செயலாளர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக நகரசபையின் தவிசாளர் இ.கௌதமன் தெரிவித்தார்.

குறித்த நகரசபை உறுப்பினர் மீது கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னரும் இவ்வாறான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருந்தன.

ஆனால் அவ் முறைப்பாடுகள் தொடர்பில் போதிய ஆதாரங்கள் இன்மையினால் எம்மால் நடவடிக்கை மேற்கொள்ள முடியவில்லை. கடந்த வெள்ளிக்கிழமை (01.11.2019) சோலைவரி பெயர் மாற்றத்திற்காக பொதுமகனொருவர் நகரசபைக்கு வருகை தந்திருந்தார். அந்த சமயத்தில் குறித்த பொதுமகனின் கையில் நகரசபையினால் வழங்கப்பட்டதென ஓர் ஆவணம் இருந்தது.

குறித்த ஆவணத்தினை ஊழியர்கள் பரீட்சித்த சமயத்தில் அக் கடிதம் போ லியாக தயாரிக்கப்பட்டது என கண்டறியப்பட்டது. அதனைத்தொடர்ந்து நாம் கடிதத்தினை எடுத்து வந்த பொதுமகனை அழைத்து விசாரணை மேற்கொண்ட சமயத்தில் வவுனியா தமிழரசுக் கட்சியின் இறம்பைக்குள உறுப்பினர் தான் எனக்கு சோலைவரி பெயர் மாற்றம் செய்ததாக தெரிவித்து இக் கடிதத்தினை தந்ததாக தெரிவித்தார்.

நகரசபையின் கடிதத்தினை போட்டோ பிரதி செய்து கடிதத்தினை மாற்றி நகரசபை செயலாளரின் சின்னம் மற்றும் அவரின் கையெழுத்தினை போலியாக இட்டு குறித்த நகரசபை உறுப்பினரால் அவருக்கு வழங்கப்பட்டுள்ளதுடன்,

தமிழரசு கட்சியின் இறம்பைக்குளம் வட்டார உறுப்பினருக்கு எமது நகரசபையினால் வேறொரு தேவைக்கான அனுப்பிய கடித்தினையே அவர் மாற்றியமைந்திருந்தமை அவருக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தின் காணப்பட்ட இலக்கமும் குறித்த போலி கடிதத்தின் இலக்கமும் ஒன்றாக காணப்பட்டதன் அடிப்படையில் கண்டறியப்பட்டது.

இவ்வாறான விடயங்களின் அடிப்படையில் கடந்த வெள்ளிக்கிழமை (01.11.2019) நகரசபை செயலாளரினால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டதுடன்,
இன்றையதினம் (04.11.2019) விசாரணைக்காக பொலிஸார் இரு தரப்பினையும் அழைத்திருந்தனர்.

இதன் போது குறித்த தமிழரசுக் கட்சியின் நகரசபை உறுப்பினர் போலி கடிதத்தினை தானே தயாரித்தாகவும் அதற்கு மன்னிப்பு கடிதம் ஒன்றினையும் தருவதாக எமக்கு தெரிவித்தார்.

அதன் அடிப்படையில் நகரசபை உறுப்பினரின் நலனை கருத்தில் கொண்டு முறைப்பாடு மீளப்பெற்றுக்கொள்ளப்பட்டதுடன் குறித்த நகரசபை உறுப்பினருக்கு இனி இவ்வாறான செயலில் ஈடுபட்டால் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படமென பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

அத்துடன் குறித்த நகரசபை உறுப்பினர் தொடர்பில் எமக்கு இரு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன் குறித்த நகரசபை உறுப்பினரினால் பாதிக்கப்பட்ட மக்கள் உங்களது ஆவணங்களை நகரசபையில் வந்து உண்மையில் நகரசபையினால் வழங்கப்பட்டதா? என சரிபார்த்து கொள்ளுங்கள் என தெரிவித்தார்.

போலி கடிதத்திற்கு இலஞ்சம் ஏதேனும் வழங்கப்பட்டுள்ளதா என ஊடகவியலாளர்கள் வினவிய சமயத்தில்,

இக் கடிதத்திற்கு இலஞ்சம் வழங்கப்பட்டுள்ளதாக என எமக்கு தெரியவில்லை. கடித்தினை வைத்திருந்த நபருக்கும் நகரசபை உறுப்பினருக்கும் நெருங்கிய தொடர்பு இருந்துள்ளது எனவும் அவரிடமிருந்து நகரசபை உறுப்பினர் பல உதவிகளை பெற்றுள்ளார் எனவும் கடிதத்தினை வைத்திருந்த நபரினால் எமக்கு தெரியப்படுத்தப்பட்டிருந்தது.

அதே சமயம் இன்று பொலிஸ் நிலையத்தில் அவர்களுக்கிடையே (கடிதம் வந்திருந்த நபர் – நகரசபை உறுப்பினர்) ஏற்பட்ட வா ய்த்தர்க்கத்தில் தனக்கு தறுமதியான பணத்தினை இன்று தருமாறும் கூறியிருந்தாக தெரிவித்தார்.

வவுனியாவில் நேற்றிரவு கை து செய்யப்பட்ட குடும்பப் பெண் : காரணம் இதுதான்!!

குடும்பப் பெண்

வவுனியாவில் நேற்றிரவு குடும்பப் பெண்ணொருவர் ஓமந்தை பொலிஸாரால் கை து செய்யப்பட்டுள்ளார். தாண்டிக்குளத்திலிருந்து, கள்ளிக்குளத்திலுள்ள தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் குறித்த பெண் பயணித்துள்ளார்.

இதன்போது நொச்சிமோட்டை பாலத்தடியில் கடமையில் இருந்த பொலிஸார் ச ந்தேகத்தின் அடிப்படையில் குறித்த பெண்ணை சோ தனையிட்டுள்ளனர். இந்த சந்தர்ப்பத்தில் அந்த பெண் தம்வசம் 500 கிராம் கே ரளா க ஞ் சாவை வைத்திருந்துள்ளார்.

இதனையடுத்தே வவுனியா, கள்ளிக்குளத்தை சேர்ந்த 40 வயதுடைய அந்த பெண் கை து செய்யப்பட்டுள்ளதுடன், அவர் பயணித்த மோட்டார்சைக்கிளும் பொலிஸாரால் கை ப்பற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளின் பின், ச ந்தேக நபரான பெண்ணை வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆ ஜர்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பெற்றோர் கண்முன்னே ப ரிதாபமாக இ றந்த 3 வயது கு ழந்தை : நடந்த வி பரீதம்!!

3 வயது குழந்தை

தமிழகத்தில் மாஞ்சா நூல் அறுத்து 3 வயது மகன் பெற்றோர் க ண்முன்னே இ றந்த சம்பவம் மிகுந்த சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கொண்டித்தோப்பு பகுதியை சேர்ந்தவர் கோபால்.

தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் இவருக்கு சுமித்ரா என்ற மனைவியும், அபிமன்யு என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் கோபால் தனது மகன் மற்றும் மனைவியுடன் கொருக்குப்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டிற்கு இரு சக்கர வாகனத்தில் சென்றுவிட்டு, அதன் பின் மீண்டும் வீட்டிற்கு திரும்பியுள்ளார்.

அப்போது கொருக்கு பேட்டை மீனாம்பாள் நகர் மேம்பாலத்தில் சென்ற போது, காற்றில் ப றந்து வந்த மா ஞ்சா நூல் மோட்டார் சைக்கிளின் முன்பகுதியில் இருந்த அபின்மன்யுவின் க ழுத்தில் வெ ட்டியது.

இதனால் அ திர்ச்சியடைந்த கோபால் மற்றும் அவரது மனைவி உடனடியாக மகனை அருகில் இருக்கும் ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு குழந்தையை சோ தித்து பார்த்த மருத்துவர்கள், சிறுவன ஏ ற்கனவே இ றந்துவிட்டதாக கூற, தங்கள் கண்முன்னே மகனை ப றிகொடுத்துவிட்டோமே என்று அவர்கள் இருவரும் க ண்ணீர்வி ட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ஆர்.கே.நகர் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மா ஞ்சா நூலால் வடசென்னை பகுதியில் ஏற்பட்ட உ யிரிழப்புகளை தொடர்ந்து, தமிழக அரசு காத்தாடி மற்றும் மா ஞ்சா நூலுக்கு த டை விதித்தது குறிப்பிடத்தக்கது.