தற்கொலை தாக்குதலுக்காக மனைவியை கொடுமைப்படுத்திய தீவிரவாதி : விசாரணையில் வெளிவந்த தகவல்கள்!!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்ட பாத்திமா தொடர்பில் அவரது தாயார் பல தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார்.

தற்கொலை தாக்குதல் தொடர்பில் பொலிஸாரினால் தேடப்பட்ட முக்கிய நபர்களில் பத்திமா லதீபாவும் ஒருவராகவும்.

கடந்த ஏப்ரல் மாதம் 26ஆம் திகதி மாலை 1 – 2 மணியளவில் மாவனெல்ல பகுதியில் தனது தநதையின் வீட்டில் வைத்து பத்திமா கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட பாத்திமாவுக்கு 24 வயதாகின்றது. அவர் பாத்திமா சஹீடா என்றோ அழைக்கப்படுகின்றார்.

பாத்திமா மாவனெல்ல பகுதியிலுள்ள புத்தர் சிலைகளை உடைக்கும் சம்பவத்தின் பிரதான சந்தேக நபரான 29 வயதுடைய மொஹமட் இப்ராஹிம் சாதிக் அப்துல்லாவின் மனைவியாகும். சாதிக் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு தொடர்புடைய பிரதான சந்தேக நபர் என தற்போது பாதுகாப்பு பிரிவினர் கண்டுபிடித்தனர்.

இந்நிலையில், பொலிஸார் சில புகைப்படங்களை வெளியிட்டு அவர்களை கண்டுபிடித்துகொடுக்குமாறு கேட்டுக்கொண்டனர்.

அதற்கமைய கைது செய்யப்பட்ட பாத்திமா சஹீடாவிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கமைய பல தகவல் வெளியாகியுள்ளது.

கணவர், பாத்திமாவை அழைத்து சென்று மறைந்திருந்தார். பொலிஸாருக்கு தகவல் வழங்கினால் கொலை செய்து விடுவேன் என மிரட்டி பாத்திமாவுக்கு ஒரு போலி அடையாள அட்டையும் வழங்கியுள்ளார். அந்த அடையாள அட்டை மாத்தறை பிரதேசத்தை சேர்ந்த பெண்ணுடையதென தெரியவந்துள்ளது.

கடந்த 26ஆம் திகதி பாத்திமா தனது குழந்தையுடன் தாய் வீட்டிற்கு சென்ற நிலையில் சாதிக் கண்டி பகுதிக்கு சென்றுள்ளார் என பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

பாத்திமா சென்றது வெள்ளிக்கிழமை தினத்திலாகும். ஓய்வு பெற்ற ஆசிரியரான தனது தந்தை பள்ளிவாசலுக்கு சென்றிருந்தார். வீட்டின் முன் பகுதி பூட்டியிருந்தமையினால் பின்வாசல் பகுதியில் தாயை பாத்திமா அழைத்துள்ளார்.

இதன் பின்னர் நடந்த சம்பவம் குறித்து பாத்திமாவின் தாயார் தெரியப்படுத்தியுள்ளார்.

“எனது மகளின் பெயர் பாத்திமா லதீபா என ஊடகங்களில் வெளியாகியது. எனினும் பாத்திமா சஹீடா என்பதே அவரது உண்மையான பெயராகும். அவர் எனது மூத்த மகளாகும். எனக்கு 4 மகள்கள் உள்ளனர். நால்வரும் படிப்பில் சிறந்தவர்களாகும். பாத்திமாவும் பல்கலைக்கழகம் செல்வதற்கு வாய்ப்பு பெற்றவாகும். எனினும் 2015ஆம் ஆண்டு அவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது.

கிடைத்த வரணுக்கமைய அவருக்கு திருமணம் நடந்தது. மகளின் மாமனார் மிகவும் நல்ல மனிதராகும். அவர் ஒரு மௌலவி. சிறந்த குணம் படைத்த ஒருவராகும். எனினும் அவரது மகன் இவ்வாறு நாட்டுக்கு தீ வைப்பார் என நினைக்கவில்லை.

எனது மகளுக்கு ஒன்றும் தெரியாது. புத்தர் சிலை உடைப்பு விவகாரத்தின் பின்னர் எதுவும் சொல்லாமல் மருமகன் அவரை அழைத்து சென்றுள்ளார். மகள் தொடர்பில் தகவல் அறிந்தால் அறிவிப்பதாக பொலிஸாருக்கு நாங்கள் வாக்குறுதி வழங்கினோம். நாங்களும் நல்ல மக்களுடன் தான் வாழ்கின்றோம். எங்களும் இந்த நாட்டின் சமாதானமே முக்கியமாகும்.

அதற்கமைய பின்வாசல் வழியாக வந்த மகள், தந்தை எங்கே? தந்தையுடன் பொலிஸ் நிலையம் செல்ல வேண்டும் என மகள் கூறினார். அப்போதே மகளுக்கு ஒன்றும் தெரியாதென்பது எனக்கு தெரியவந்தது.

மகளிடம் பேசினேன் இது தொடர்பில். அப்போது கணவன் தன்னை மிகவும் கொடுமைப்படுத்தியதாகவும், தன்னை மனைவியாகவே பார்க்கவில்லை எனவும் மகள் கூறினார்.

தான் செய்யும் விடயங்களை வெளியே கூறினால் கொலை செய்யப்படுவார் என கணவர் மிரட்டியுள்ளார். பல இடங்களில் மகளை அடைத்து வைத்துள்ளார்.

திடீரென அவருக்கு அதிகம் பணம் கிடைத்துள்ளது. வீட்டிற்கு தேவையான அனைத்திற்கும் அதிகமாக பணம் செலவிட்டுள்ளார். எனினும் குண்டுத்தாக்குதல் இடம்பெற்ற தினத்தன்று கணவர் பதற்றமாக இருந்துள்ளார். எனினும் பாத்திமாவுக்கு அந்த தகவல் தெரியாது.

கணவனின் கொடுமைகளை தாங்கிக்கொண்டு பாத்திமா அமைதியாகவே இருந்துள்ளார். அத்துடன் நாங்கள் நினைப்பது போன்று அல்ல அவர், மிகவும் ஆபத்தானவர் எனவும் அவருக்கு பெரிய குழு ஒன்றும் உள்ளதெனவும் பாத்திமா கூறியுள்ளார். அதற்கமைய பாத்திமாவின் தந்தையை அழைப்பதற்காக பள்ளிவாசலுக்கு சென்றேன்.

அவருடன் பேசிய பின்னர் மகள் இருக்கும் இடத்தை பொலிஸாருக்கு தெரியப்படுத்தினேன். மகள் கைது செய்யப்பட்டு 24 மணித்தியாலத்திற்குள் மருமகன் கைது செய்யயப்பட்டார்” என பாத்திமாவின் தாயார் குறிப்பிட்டார்.

-தமிழ்வின்-

வவுனியாவில் ஊடகவியலாளர் வெளியேற்றப்பட்டு மூடிய அறைக்குள் கலந்துரையாடல்!!

வவுனியாவில் எழுநூறு வெளிநாட்டு பிரஜைகளை குடியேற்றுவது தொடர்பான கலந்துரையாடல் வவுனியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்றுவரும் நிலையில் ஊடகவியலாளருக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் குறித்த கலந்துரையாடல் இன்று (08.05) நடைபெற்று வருகின்றது.

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.கனீபா தலைமையில் நடைபெற்று வரும் குறித்த நிகழ்விற்குச் சென்ற ஊடகவியலாளர்கள் பொலிசாரின் உதவியுடன் வெளியேற்றப்பட்டு மூடிய அறைக்குள் ரகசியமாக கலந்துரையாடல் நடைபெற்று வருகின்றது.

நாட்டில் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பின் காரணமாக ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு குறித்த வெளிநாட்டு பிரஜைகளை வவுனியாவில் தங்கவைப்பதற்கான ரகசிய கூட்டம் வவுனியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்று வருகின்றது.

வவுனியா பூந்தோட்டத்தில் வெளிநாட்டு பிரஜைகள் எழுநூறு பேர் தங்கவைக்கப்படுவது தொடர்பாக நடைபெற்றவரும் ரகசிய கலந்துரையாடலில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன கலந்து கொண்டுள்ளதுடன் வவுனியா மாவட்ட பிரதேச செயலாளர்கள், உள்ளுராட்சி மன்றத்தின் தலைவர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

குறித்த கலந்துரையாடலிற்கு பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் மத குருமார்கள் எவரும் அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விளையாடும் போது ஆணியை விழுங்கிய 5 வயது சிறுவன் : எக்ஸ்ரே எடுத்த போது அதிர்ந்த மருத்துவர்கள்!!

தமிழகத்தில் இரும்பு ஆணியை விழுங்கிய 5 வயது சிறுவனுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. ஓசூர் அருகே உள்ள போடிச்சிப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த கல் உடைக்கும் தொழிலாளியின் மகன் விஸ்வநாத் (5). விஸ்வநாத் வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்த போது ஆணியை விழுங்கியுள்ளான்.

இதனைத் தொடர்ந்து உடனடியாக சிறுவனை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பெற்றோர்கள் அழைத்துச் சென்றனர். ஆனால் மருத்துவர்களால் ஆணியை எடுக்க முடியவில்லை. இதனையடுத்து மருத்துவர்களின் அறிவுரையின் பேரில் உடனடியாக ஓசூர் அரசு மருத்துவமனையில் சிறுவனை பெற்றோர்கள் அனுமதித்தனர்.

அங்கு அவனுக்கு எக்ஸ்ரே எடுத்து பரிசோதிக்கப்பட்ட போது விஸ்வநாத் விழுங்கிய ஆணி அவனது வயிற்றுப் பகுதியில் சிக்கி கொண்டதை பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து, கிருஷ்ணகிரியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிறுவனை மருத்துவர்கள் அனுப்பி வைத்தனர்.

மருத்துவர்கள் விஸ்வநாத்தின் வயிற்றில் இருந்து ஆணியை எடுக்க சிரமப்பட்டு வருவதால் அவன் பெற்றோர் சோகத்திலும், கலக்கத்திலும் உள்ளனர்.

8 வருட காதல்: திருமணமாகி 7 நாட்களில் உயிரை மாய்த்துக்கொண்ட புதுமாப்பிள்ளை!!

விழும்புரம் மாவட்டத்தில் திருமணமாகி 7 நாட்களில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் 26 வயதான சந்தோஷ் குமார் என்பவரும் மீனாவும் கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பெற்றோரின் எதிர்ப்பை மீறி கடந்த வாரம் இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டு சென்னை மேற்கு மாம்பலத்தில் வாடகை வீட்டில் குடியேறினர்.

மீனா அசோக் நகரில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியையாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில், பெற்றோர் தன் காதல் திருமணத்தை ஏற்கவில்லையே என நினைத்து சந்தோஷ்குமார் சில நாட்களாக மிகுந்த மன வருத்தத்தில் இருந்துள்ளார்.

இதற்கிடையில், தனது மனைவி கோயிலுக்கு சென்ற பிறகு வீட்டில் தனியாக இருந்த சந்தோஷ் குமார் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தனது காதல் கணவரை இழந்துவிட்ட மீனா கதறி அழுதுள்ளார். இது குறித்து பொலிசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

40 வயது மாமியாரை கத்தியால் குத்தி கொன்ற 32 வயது மருமகன் : குடிபோதையில் நடந்த வெறியாட்டம்!!

தமிழகத்தில் மாமியாரை கத்தியால் குத்தி கொலை செய்த மருமகனை பொலிசார் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் ஆதனூர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (32). இவர் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு சுஷ்மிதா (24) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

தம்பதிக்கு 4 வயதில் மகள் உள்ள நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் சதீஷ்குமாருக்கும், சுஷ்மிதாவிற்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதனால் தனது கணவருடன் கோபித்துக் கொண்டு சுஷ்மிதா தனது தாய் சித்ரா (40), வீட்டிற்கு சென்றுவிட்டார். இதற்கிடையே சதீஷ்குமார் தனது மனைவியை குடும்பம் நடத்த வருமாறு பலமுறை அழைத்தும் அவர் வர மறுத்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சதீஷ்குமார், குடிபோதையில் மாமியார் வீட்டிற்கு சென்று மாமியார் சித்ராவிடம் சுஷ்மிதாவை தன்னுடன் வாழ்வதற்கு அனுப்பி வைக்கும்படி கேட்டுள்ளார்.

அதற்கு சித்ரா தன் மகளை அனுப்பி வைக்க மறுத்துள்ளார். இதனால் சித்ராவிற்கும், சதீஷ்குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த சதீஷ்குமார், மறைத்து வைத்திருந்த காய்கறி வெட்டும் கத்தியால் சித்ராவின் வயிற்று, கழுத்துப் பகுதியில் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதில் படுகாயமடைந்த, சித்ரா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவலறிந்த பொலிசார் சம்பவ இடத்துக்கு வந்து சித்ராவின் சடலத்தை கைப்பற்றினார். பின்னர் தலைமறைவாக இருந்த சதீஷ்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

16 வயதில் காதல் : சினிமா பாணியில் ஒன்றாக உடம்பைக் கட்டிக்கொண்டு காதல் ஜோடி எடுத்த சோக முடிவு!!

கூடலூர் மாவட்டத்தில் இளம் வயது காதல் ஜோடி தங்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் உடலை துப்பாட்டாவில் கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டனர்.

ஆலத்தூர் கிராமத்தை சேர்ந்த 10 ஆம் வகுப்பு படித்து வந்த 16 வயதான அபிராமியும், 18 வயதான சிவரஞ்சனும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதல் விவகாரம் அவர்களின் பெற்றோருக்கு தெரிய வந்தது. இதனால் அவர்கள் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி அப்பகுதியை சேர்ந்த வேந்தன் என்பவரது விளைநிலம் பகுதியில் இருந்து கிணற்றுக்கு அருகில் பேசிக்கொண்டிருந்தனர். இதனை பார்த்த வேந்தன் அவர்களை விரட்டியுள்ளார்.

இந்நிலையில், இவர்கள் இருவரையும் பெற்றோர் தேடி வந்த நிலையில், தனது விளைநிலத்தில் இவர்களை கடைசியாக பார்த்த வேந்தன், மீண்டும் அங்கு சென்று பார்த்தபோது காதல் ஜோடியின் செருப்புகள் இருந்துள்ளன.

உடனே அவர் பொலிசாருக்கும், சிவரஞ்சன், அபிராமி ஆகியோரது பெற்றோருக்கும் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார், சிவரஞ்சனும், அபிராமியும் துப்பட்டாவால் உடலை சுற்றி கட்டிய நிலையில் நீரில் மூழ்கிக் கிடந்தது தெரியவந்ததையடுத்து அவர்களை மீட்டனர்.

இதையடுத்து பொலிசார் 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.புன்னகை மன்னன் படத்தை மிஞ்சும் அளவுக்கு இந்த இளம் காதலர்களின் தற்கொலை முடிவு இருந்துள்ளது. இவர்களின் சடலத்தை பார்த்து பெற்றோர் கதறி அழுதுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டுக்குள் மகளை உயிரோடு தீவைத்து எரித்துவிட்டு : வெளியில் காத்திருந்த தந்தை : புதுப்பெண்ணுக்கு நடந்தது என்ன?

மகாராஷ்டிர மாநிலம் அகமதுநகர் மாவட்டத்தில் தனது மகள் வேறு சமூகத்தை சேர்ந்த நபரை திருமணம் செய்து கொண்ட காரணத்தால் கோபம் கொண்ட தந்தை அவரை உயிருடன் எரித்துக்கொலை செய்த தந்தையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ருக்மணியும் மங்கேஷ் ரான்சிங்கும் கடந்த 6 மாதத்திற்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர். இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள்.

மங்கேஷ் குடும்பத்தினர் இந்த திருமணத்தை ஏற்றுக்கொண்டனர். ஆனால் ருக்மணி குடும்பத்தினருக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை. புதுமணதம்பதியினரை அவ்வப்போது மிரட்டி வந்துள்ளனர்.

இந்நிலையில், ருக்மணியின் பெற்றோர் அவரை ஏப்ரல் 30-ம் தேதி தங்கள் வீட்டுக்கு அழைத்துள்ளனர், தனது பெற்றோரின் அழைப்பை ஏற்று சென்ற ருக்மணியை அவரது பெற்றோர் கொடுமையாக அடித்துள்ளனர்.

இதனால் தனது கணவருக்கு போன் செய்து தன்னை வந்து அழைத்து செல்லுமாறு ருக்மணி கூறியுள்ளார். இதனால் மே 1 ஆம் திகதி மங்கேஷ், ருக்மணியின் வீட்டுக்குச் சென்றுள்ளார்.

ருக்மணியின் சித்தப்பாவும், மாமா உட்பட தந்தை ஆகியோர் ஒன்று சேர்ந்து ருக்மணி – மங்கேஷ் இருவரையும் அவர்கள் தாக்கினர். இருவரையும் கட்டிவைத்து அவர்கள் மீது பெட்ரோல் ஊற்றித் தீவைத்தனர். புதுமணத் தம்பதியான அவர்கள் இருவரும் உயிரோடு எரிந்துகொண்டிருந்தபோது அவர்கள் அனைவரும் கதவை சாத்திவிட்டு வெளியில் காத்திருந்தனர்.

இவர்களின் அலறல் சத்தம் கேட்ட அருகில் இருப்பவர்கள் விரைந்து வந்து ருக்மணி – மங்கேஷ் இருவரையும் புனே சசூன் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 60-65 சதவீதம் தீக்காயம் அடைந்திருந்த ருக்மணி மே 5-ம் தேதி உயிரிழந்தார்.

40-45 சதவீதம் தீக்காயம் அடைந்த மங்கேஷ் நிலையும் கவலைக்கிடமாகவே உள்ளது. இருவரும் எரிக்கப்பட்ட இடத்தில் இருந்து பெட்ரோல் பாட்டில் உள்ளிட்ட சில பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. விசாரணை நடந்துவருகிறது என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ருக்மணியின் பெற்றோர் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகிறார்கள் என பொலிசாரிடம் புகார் தெரிவித்தும் அவர்கள் அலட்சியம் காட்டினர் என மைத்துனர் மகேஷ் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக, ருக்மணியின் மாமா கணஷியாம் மற்றும் சித்தப்பா சுரேந்திர பாபுலால்பாரதி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். ருக்மணியின் தந்தை ராம ராம்பால் பாரதியா தேடப்பட்டு வருகிறார் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

விமான சக்கரத்தில் சிக்கி பலியான ஊழியர் : குவைத்தில் பயங்கரம்!!

குவைத் விமானநிலையத்தில் விமானத்தின் சக்கரத்தில் சிக்கி இந்தியர் ஒருவர் பலியான சம்பவம் அங்கு சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மரணமடைந்த நபர் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஆனந்த் ராமச்சந்திரன் என தெரியவந்துள்ளது. குவைத் ஏர்வேஸின் தொழில்நுட்ப பிரிவில் இவர் பணியாற்றிவருகிறார். இந்தச் சம்பவம் குவைத் சர்வதேச விமானநிலையத்தில் நிகழ்ந்துள்ளது.

சம்பவத்தின்போது விமானம் காலியாக இருந்துள்ளது. விமான நிலையத்தின் 4 ஆம் முனையத்திலிருந்து விமானத்தை அதன் நிறுத்துமிடத்துக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

அப்போது விமானத்துக்கு அருகில் நின்று கொண்டு அதனை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த ஆனந்த் விமானத்தின் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக பலியானதாக குவைத் ஏர்வேஸ் தெரிவித்துள்ளது.

இவரது உடல் புதன் கிழமை அவரது சொந்த ஊருக்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பில் தேவையான விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. ஆனந்த் குவைத் ஏர்வேஸில் 2009 முதல் பணியாற்றி வருகிறார் என கூறப்படுகிறது.

இச் சம்பவம் ஆனந்த் ராமச்சந்திரனின் நெருங்கிய உறவினர்கள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

உனது மகளை நீ இனி பார்க்கவே முடியாது : சொந்த மகளை எரித்து கொன்ற கொடூர தந்தை!!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கணவன் தமது மனைவியை எச்சரித்து விட்டு சொந்த மகளை உயிருடன் எரித்து கொலை செய்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நியூயார்க்கின் குயின்ஸ் பகுதியில் திங்களன்று இந்த நடுங்க வைக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் பேசிய கொல்லப்பட்ட 3 வயது சிறுமியின் தாயார், அந்த நபர் தம்மை காயப்படுத்துவார் என்றே கருதியதாகவும், ஆனால் பிஞ்சு குழந்தையை இவ்வாறு கொடூரமாக கொலை செய்வார் என நினைக்கவில்லை என கண்ணீர்மல்க கூறியுள்ளார்.

குயின்ஸ் பகுதியில் குடியிருந்து வருபவர்கள் மார்டின் பெரேரா மற்றும் சேரான் கோல்மேன் தம்பதி. இவர்களுக்கு ஸோய் பெரேரா என்ற 3 வயது மகள் உள்ளார். தற்போது பிரிந்து வாழும் இந்த தம்பதி தங்களது மகள் யாருடன் வாழ வேண்டும் என்பதிலேயே போராடி வந்துள்ளனர்.

இந்த நிலையில், சம்பவத்தன்று கோல்மேனை தொடர்பு கொண்ட பெரேரா, உனது மகளை இனிமேல் நீ பார்க்கவே முடியாது என கொக்கரித்துள்ளார். இதன் பின்னரே பெரேராவுக்கு சொந்தமான ஆடி A6 காரில் இருந்து கருகிய நிலையில் சிறுமி ஸோய் உடலை பொலிசார் மீட்டுள்ளனர்.

கடந்த சில வாரங்களாகவே தமக்கும் கணவருக்கும் இடையே தங்களது மகள் தொடர்பில் சட்டப்போராட்டம் நீடித்து வந்ததாகவும், தமது மகளை அவர் சந்திக்கும் தருணங்களை கட்டுப்படுத்தும் வழிமுறைகளை தேடி வந்ததாகவும், ஆனால் நீதிமன்றம் ஒப்புக்கொள்ள மறுத்ததாகவும் கோல்மேன் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து வார இறுதி நாட்களின் சிறுமியை சந்திக்கும் வாய்ப்பு பெரேராவுக்கு வழங்கப்பட்டது. நீதிமன்றத்தின் தீர்ப்பை தாம் மறுத்திருந்தால் தற்போது தமது மகள் உயிருடன் இருந்திருப்பார் என கண் கலங்கியுள்ளார். இதனால் தாம் சிறைக்கு செல்ல நேர்ந்தாலும், தமது மகள் உயிருடன் இருந்திருப்பார் என்றார் கோல்மேன்.

இந்த விவகாரம் தொடர்பில் தற்போது பொலிசார் பெரேராவை கைது செய்துள்ளனர். சொந்த குழந்தையை காருடன் நெருப்பு வைத்து கொளுத்தியபோது, அவருக்கும் தீக்காயம் ஏற்பட்டுள்ளது.
மேலும், சிகிச்சைக்கு பின்னரே அவரிடம் பொலிசார் விசாரணை மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர்.

வெளிநாட்டு இளம் பெண்களை ஏமாற்றி திருமணம்.. பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் கொடூரம் : சீனர்களின் கைவரிசை!!

ஆசிய நாடான பாகிஸ்தானில் அப்பாவி பெண்களை ஏமாற்றி போலி திருமணம் செய்து கடத்தி செல்லும் சீனர்கள் அவர்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திவரும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பாகிஸ்தானில் பணி நிமித்தமாக அல்லது சுற்றுலாவிற்காக வரும் சீனர்கள் அங்குள்ள சட்டவிரோத திருமண மையங்கள் மூலமாக கிறிஸ்துவர்கள், இஸ்லாமியர்கள் என போலி ஆவணங்களை கொடுத்து அப்பாவி பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொள்கின்றனர்.

நல்ல வசதி, நல்ல வாழ்க்கை என்று பொய் வாக்குறுதி அளிக்கப்பட்டு அந்த பெண்கள் சீனா அழைத்து செல்லப்படுகின்றனர்.

இதில் பெரும்பாலான பெண்கள் கடத்தி அழைத்து செல்லப்படுகின்றனர் மற்றும் பாலியல் தொழிலில் ஈடுபடுவதற்கு கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.

இந்நிலையில் பாகிஸ்தான் அரசு, திருமணம் செய்வதாக கூறி இளம்பெண்களை சீனாவிற்கு கடத்தும் கும்பல்கள் குறித்து நடவடிக்கை எடுக்கும்படி சமீபத்தில் மத்திய புலனாய்வு அமைப்புக்கு உத்தரவிட்டு இருந்தது.

இதனையடுத்து இளம்பெண் கடத்தல் தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு விசாரணையை தொடங்கியது. லாகூர் அருகே பசிலாபாத்தில், அந்நாட்டு பெண்ணுக்கும், சீனர் ஒருவருக்கும் திருமணம் நடந்தது.

அப்போது 2 சீனர்களை புலனாய்வு அமைப்பு கைது செய்தது. மேலும் இந்த விவகாரத்தில் தொடர்புடைய சீனாவை சேர்ந்த 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து மத்திய புலனாய்வு அமைப்பின் பஞ்சாப் இயக்குனர் தாரிக் ரஷ்டைன் கூறுகையில்,

பாகிஸ்தான் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதற்காக கடத்தும் கும்பலை சேர்ந்த சீனாவை சேர்ந்த ஒரு பெண் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். லாகூரில் கடந்த ஓராண்டாக வசித்து வந்த இந்த கும்பலின் தலைவன் கேன்டிசி என்பவனும் கைது செய்யப்பட்டுள்ளான்.

சீனர்களால் கையகப்படுத்தப்பட்ட இளம்பெண்கள் திருமணம் தொடர்பான ஆவண நடவடிக்கைகள் முடியும் வரை லாகூரில் வாடகை வீடுகளில் தங்கவைக்கப்படுகின்றனர். அங்கு அவர்களுக்கு சீனா மொழி கற்றுக் கொடுக்கப்படுகின்றது. அதற்கு பின்னர் அவர்கள் சீனா அழைத்து செல்லப்படுகின்றனர்.

அங்கு அவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுவதற்கு கட்டாயப் படுத்தப்படுகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் 100க்கும் மேற்பட்ட இளம்பெண்கள் இதுபோன்று கடத்தப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

மனிதத் தன்மையற்ற கொடூரர்கள் : ஈஸ்டர் தாக்குதலில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணின் கண்ணீர்!!

ஈஸ்டர் நாளில் தீவிரவாதிகள் முன்னெடுத்த வெடிகுண்டு தாக்குதலில் பெற்றோரை இழந்த இளம்பெண் ஒருவர் தமது நிலையை பகிர்ந்துள்ளார். நீர்கொழும்பு பகுதியை சேர்ந்த 21 வயதான தெரஞ்சலி பெர்னாண்டோ என்பவரே தமக்கு ஏற்பட்ட சோக நிகழ்வை தற்போது பகிர்ந்துகொண்டுள்ளார்.

இலங்கையில் ஐ.எஸ் ஆதரவு தீவிரவாதிகள் தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் முன்னெடுக்கும்போது தெரஞ்சலி பெர்னாண்டோ சீனாவில் மருத்துவம் பயின்று வந்துள்ளார்.

அவரது நண்பர்களே அந்த கொடூர தகவலை அவருக்கு பகிர்ந்துள்ளனர். ஆனால் இதுவெறும் புரளி எனவும், தம்மை கிண்டல் செய்ய நண்பர்கள் முயல்வதாகவும் அவர் எண்ணியுள்ளார்.

அதுவும் தேவாலயங்களை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் முன்னெடுக்கப்படுவது என்பதை இலங்கையில் போர் காலகட்டத்தில் கூட கேள்விப்படாத ஒன்று.

அந்த தகவலை உறவினர்களிடம் இருந்து உறுதி செய்த பின்னர் அப்படியே ஒருகணம் உறைந்துபோனதாக கூறும் தெரஞ்சலி பெர்னாண்டோ,

உடனடியாக இலங்கை திரும்ப அவரது உறவினர் கோரிக்கை விடுத்ததாகவும், குறித்த தாக்குதலில் சிக்கிய தமது பெற்றோர் படுகாயங்களுடன் மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர் என்றார்.

ஆனால் இலங்கை வந்து சேர்ந்தபின்னர் தான் தெரியவந்தது, தமது பெற்றோர் அந்த வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டனர் என்று.

தெரஞ்சலியின் தந்தை சனத் ரோஹன் பெர்னாண்டோவும் பிரபலமான மருத்துவர். தமது சமூகத்திற்கு தொண்டாற்றுவதைவிட வெளிநாட்டு பணம் புகழ் எதுவும் ஈடாகாது என குறிக்கோளுடன் சொந்த நாட்டில் மருத்துவப் பணியாற்றியவர் என தந்தை குறித்து தெரஞ்சலி நினைவு கூர்ந்துள்ளார்.

வாழ்க்கையில் தாம் விரும்பிய அனைத்தையும் நிறைவேற்றித் தந்தவர்கள் தமது பெற்றோர், ஆனால் அவர்கள் இருவரும் தற்போது இல்லை என்பதை கற்பனையிலும் நினைக்க முடியவில்லை என கூறும் தெரஞ்சலி, மனிதத் தன்மையற்ற கொடூரர்களால் மட்டுமே ஈவு இரக்கமற்ற தாக்குதல்களை முன்னெடுக்க முடியும் எனவும் கண்கலங்கியுள்ளார்.

இலங்கையில் உயர் தரத்தில் கற்கும் மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!!

இலங்கையில் அரச பாடசாலைகளில் கல்வி கற்கும் உயர் தர மாணவர்களுக்கான டெப் கருவிகளை இலவசமாக வழங்கும் வேலைத்திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று வாராந்த அமைச்சரவை கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது. இதன்போது, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தினால் குறித்த திட்டம் தொடர்பான யோசனை முன்வைக்கப்பட்டது.

மேலும், இந்த திட்டத்திற்காக 350 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த திட்டம் கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

க.பொ.த சாதாரண தர மற்றும் உயர் தர மாணவர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு!!

க.பொ.த சாதாரண தரப்பரீட்சை மற்றும் உயர் தர பரீட்சைகளுக்கு தோற்றும் பரீட்சாத்திகள் அடையாள அட்டையை பெற்று கொள்ள உரிய முறையில் முழுமையாக்கப்பட்ட விண்ணப்பப்படிவத்தை மார்ச் மாதம் 31ஆம் திகதிக்கு முன் அனுப்பி வைக்குமாறு ஆட்பதிவு திணைக்களம் அறிவித்துள்ளது.

பாடசாலை அதிபர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை பரீட்சாத்திகள் அடையாள அட்டையை பெற்று கொள்வதற்கான விண்ணப்பங்கள் 50 சதவீதமே கிடைத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

விண்ணப்பப்படிவங்களை அனுப்பி வைப்பதில் காலம் தாமதத்தை ஏற்படுத்துவதால் பரீட்சைகளுக்கு முன் அடையாள அட்டையை பெற்றுக் கொடுப்பதில் சவாலை சந்திக்க நேர்வதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, உரிய முறையில் முழுமையாக்கப்பட்ட விண்ணப்பப்படிவங்களை அனுப்பாதவர்கள் விரைந்து அனுப்பி வைக்குமாறு ஆட்பதிவு திணைக்களம் கோரியுள்ளது.

வவுனியா தெற்கு பிரதேச சபையில் வட்டாரத்தின் தேவைகளை முதன்மை அடிப்படையில் தெரிவு செய்ய வாக்கெடுப்பு!!

வவுனியா தெற்கு பிரதேசசபைக்குட்பட்ட 13 வட்டாரங்களிலும் முன்னுரிமை அடிப்படையில் அடையாளங்காணப்பட்ட தேவைகளை வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்யும் கூட்டம் வவுனியா தெற்கு பிரதேச சபை தவிசாளர் து.நடராஜசிங்கம் தலைமையில் இன்று (07.05.2019) காலை 10 மணியளவில் இடம்பெற்றது.

வட்டார அடிப்படையிலான பொதுமக்களினால் அடையாளம் காணப்பட்ட தேவைகளை பூர்த்தி செய்வதற்காக முதன்மை அடிப்படையில் வட்டாரங்கள் தெரிவு செய்யும் கூட்டத்தில் பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச சபை அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், பிரதேசசபைக்குட்பட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது தெரிவு செய்யப்பட்ட வேலைத்திட்டங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததுடன் முதன்மை வேலைத்திட்டத்தின் வாக்கெடுப்பு நடவடிக்கையும் இடம்பெற்றிருந்தது.

முதல் சுற்று வாக்கெடுப்பின் போது முதலாவது வேலைத்திட்டமாக சமயபுரம் – சுந்தரபுரம் பாடசாலை வீதி தார் இடல் – 6 கிலோமீற்றர் வேலைத்திட்டம் தெரிவுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா பெரியகோமரசங்குளம் மகாவித்தியாலயத்தில் குளவி தாக்கி ஆசிரியர் உட்பட நால்வர் வைத்தியசாலையில்!!

வவுனியா – பெரியகோமரசங்குளம் மகாவித்தியாலயத்தில் இன்று(07.05) குளவிகொட்டுக்கு இலக்காகி ஆசிரியர் உட்பட நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாடசாலையின் மைதானத்திற்கு அருகே காணப்பட்ட குளவிக்கூடு காற்றினால் கலைந்து தாக்கியதினால் ஆசிரியரொருவரும் , மூன்று மாணவர்களும் பாதிக்கப்பட்ட நிலையில் சிதம்பரபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனையடுத்து பாடசாலை மாணவர்களை அதிபர், ஆசிரியர்களின் உதவியுடன் பாதுகாப்பான முறையில் வெளியேற்றப்பட்டதுடன் 11.00 மணியுடன் பாடசாலை மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சியில் துப்பாக்கி மற்றும் வாள்களுடன் ஒருவர் கைது!!

கிளிநொச்சி- பூநகரி, முட்கொம்பன் பிரதேசத்தில் இடியன் வகை உள்ளூர் துப்பாக்கிகள், ஏகே ரவைகள் மற்றும் வாள்கள் உள்ளிட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் சந்தேகத்தின் பேரில் ஒருவரை பூநகரி பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர். குறித்த பிரதேசத்தில் பொலிஸாரும் படையினரும் இணைந்து திடீர் சோதனை நடவடிக்கையில் இன்று ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது அப்பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து துப்பாக்கிகள், ரவைகள் மற்றும் சந்தேகத்திற்கிடமான பல பொருட்களை அவர்கள் மீட்டுள்ளனர். பின்னர் அவ்வீட்டிலிருந்தவரையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்து பொலிஸார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

மேலும் இந்த சுற்றிவளைப்பின்போது சந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிள் மற்றும் மோட்டார் இலக்க தகடு ஆகியவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சம்பவம் தொடர்பில் பூநகரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.