மீண்டும் திறக்கப்பட்டுள்ள கொச்சிக்கடை புனித அந்தோணியார் : மனதுருகிய மக்கள்!!

இலங்கையை உலுக்கிய பாரிய வெடிகுண்டுத் தாக்குதலுக்கு இலக்கான கொச்சிக்கடை புனித அந்தோணியார் தேவாலயம் நீண்ட நாட்களின் பின்னர் இன்றைய தினம் தேவ ஆராதனைகளுக்காக திறந்து விடப்பட்டுள்ளது.

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோணியார் தேவாலயத்தின் ஒரு பகுதி முழுமையான பாதுகாப்பின் கீழ் இவ்வாறு திறந்து விடப்பட்டுள்ளது.

இதன்போது கொச்சிக்கடை புனித அந்தோணியார் ஆலயத்தை அண்மித்த பகுதியில் வசிக்கும் பெரும்திரளான மக்கள் மத வேறுபாடுகளின்றி ஆலயத்திற்கு சென்று புனித அந்தோணியாரை மனதுருகி வழிபட்டுச் சென்றனர்.

மேலும், செவ்வாய்க்கிழமைக்கான விசேட ஆராதனைகளும் அருட்தந்தைகளால் இதன்போது நடத்தப்பட்டன. இதன்போது பாதுகாப்பு கடமைகளில் பெருமளவிலான கடற்படையினர் இருந்ததோடு வழிபாடுகளிலும் கலந்து கொண்டனர்.

வவுனியா சாலம்பைக்குளம் பகுதியில் வீடொன்றிலிருந்து அடையாள அட்டைகள் உட்பட பல ஆவணங்கள் மீட்பு!!

வவுனியா மன்னார் வீதி சாலம்பைக்குளம் பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து இன்று (07.05.2019) காலை பதினைந்து அடையாள அட்டை மற்றும் பல ஆவணங்களை பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் கைப்பற்றியுள்ளனர்.

இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் இணைந்து சாலம்பைக்குளம் பகுதியில் முன்னெடுத்த சோதனை நடவடிக்கையின் போது பூட்டியிருந்த வீட்டிலிருந்து அச்சுப்பிரதி செய்து லெமனேட்டிங் செய்யப்பட்ட பதினைந்து அடையாள அட்டைகள் மற்றும் சில ஆவணங்களை மீட்டெடுத்துள்ளனர்.

மீட்க்கப்பட்ட அடையாள அட்டைகள் மற்றும் ஆவணங்கள் பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்தில் இராணுவத்தினர் ஒப்படைத்துள்ளனர்.

எனினும் இது தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் நூற்றிற்கு மேற்பட்ட தனியார் கல்வி நிலையங்களிருந்தும் மூன்று நிலையங்கள் மட்டுமே பதிவு!!

வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் இயங்கும் நூற்றிற்கு மேற்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் மூன்று நிலையங்கள் மட்டுமே பிரதேச செலயகத்தில் பதிவு செய்யப்பட்டு நகரசபைக்கு வருடா வருடம் தொழில் வரி செலுத்தி வருவதாக நகரசபையினர் தெரிவிக்கின்றனர்.

தகவல் அறியும் சட்டத்தினூடாக நகசரபைக்குட்பட்ட பகுதிகளில் இயங்கும் தனியார் கல்வி நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட நிலையங்களின் விபரங்களை கோரியபோதே மேற்கண்டவாறு நகரசபையினால் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

வவுனியா நகரில் தனியார் கல்வி நிலையங்கள் நூற்றுக்குமேற்பட்டது இயங்கி வருகின்ற நிலையில் பிரதேச செலயகத்தில் பதிவு செய்யப்பட்டு நகரசபைக்கு தொழில் வரி செலுத்திவரும் தனியார் கல்வி நிலையங்களாக மூன்று நிலையங்கள் மட்டுமே பெயர் குறிப்பிடப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

நகரில் இயங்கும் பல தனியார் கல்வி நிலையங்களை அரச சேவையிலுள்ள ஆசிரியர்களே இயக்குநர்களாக வழிநடாத்தி வருகின்ற நிலையில் அரச சட்டங்களை நடைமுறைப்படுத்தி பிரதேச செயலகம், நகரசபையின் சட்ட திட்டங்களுக்கு அமைவாக செயற்பட தவறியுள்ளதையே இவ்விடயம் எடுத்துக்காட்டி நிற்கின்றது.

மாணவர்களுக்கான அடிப்படை வசதிகளை தமது தனியார் கல்வி நிலையங்களில் ஏற்படுத்தி கொடுக்கப்படவில்லை. வசதிகளற்ற நிலையங்களை அமைத்து மாணவர்களிடம் பணம் வசூலிக்கும் கல்வி நிலையங்களை நடாத்திவரும் தனியார் கல்வி நிர்வாகத்தினர் நகரிலுள்ள சட்டதிட்டங்களை பின்பற்றத் தவறியுள்ளனர்.

நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் செயற்படும் நூற்றுக்கு மேற்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் குறித்த மூன்று நிலையங்கள் மட்டுமே பிரதேச செயலகத்தில் பதிவு செய்து அனுமதியைப் பெற்று ஒவ்வொரு வருடமும் நகரசபையில் தொழில் வரியினை மாத்திரம் செலுத்திவருவதாக நகரசபையினருக்கு தகவல் அறியும் சட்டத்தில் கோரிய தகவல்களுக்கு இவ்வாறு பதில் வழங்கப்பட்டுள்ளதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா பட்டானிச்சூர் பகுதியில் கிழக்கு மாகாணத்தினைச் சேர்ந்த ஒருவர் கைது!!

வவுனியா பட்டானிச்சூர் பகுதியில் கிழக்கு மாகாணத்தினைச் சேர்ந்த ஒருவரை இன்று (07.05.2019) காலை வவுனியா பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வவுனியா பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பட்டானிச்சூர் பகுதியில் குறித்த நபரிடம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

விசாரணைகளின் போது அவரது அடையாள அட்டை கிழக்கு மாகாணத்தினை கொண்டதாக காணப்பட்டதினையடுத்து குறித்த நபரை பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் கைது செய்து வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரிடம் கையளித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகளை வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் சொப்பர் விமானங்களைத் தாக்கும் குண்டுகள் மீட்பு!!

வவுனியா ஈரப்பெரியகுளம் பொலிசாரினால் சொப்பர் விமானங்களைத்தாக்கும் 85 குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா ஈரப்பெரியகுளம் பொலிசாருக்குக் கிடைத்த இரகசியத்தகவல் ஒன்றின் அடிப்படையில் நேற்று மாலை அலகல்ல அளுத்கம பகுதியிலுள்ள காட்டுப்பகுதியில் மோப்ப நாயின் உதவியுடன் சொப்பர் விமானங்களைத்தாக்கும் 85 குண்டுகள் மீட்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் நீதிமன்ற அனுமதியுடன் அப்பகுதியில் மேலும் குண்டுகளைத்தேடி விஷேட அதிரடிப்படையினர் தேடுதல் நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக ஈரப்பெரியகுளம் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

வவுனியா ஆச்சிபுரம் பகுதியில் இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவரின் சடலம் மீட்பு!!

வவுனியா ஆச்சிபுரம் முதலாம் ஒழுங்கை பகுதியிலிருந்து இன்று (07.05.2019) அதிகாலை இரண்டு பிள்ளைகளின் தாயொருவரின் சடலத்தினை வவுனியா பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர்.

ஆச்சிபுரம் முதலாம் ஒழுங்கையில் குறித்த பெண் அவரது இரு பிள்ளைகளுடன் வசித்து வந்துள்ளார். வேலை நிமித்தம் புதுக்குடியிருப்புக்கு சென்றிருந்த அவரது கணவர் நேற்றையதினம் வீடு திரும்பிய சமயத்தில் இன்று அதிகாலை குறித்த பெண் வீட்டிற்கு முன்பாகவுள்ள மரத்தில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளார்.

10 மற்றும் 6 வயதுடைய இரு பிள்ளைகளின் தாயான 32 வயதுடைய சதீஸ்குமார் நவநீதமலர் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற கிராம சேவையாளர் , வவுனியா பொலிஸாருடன் இணைந்து தடவியல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆலய கொடியேற்றத் திருவிழாவில் தாலியை பறி கொடுத்த பெண்!!

யாழ்ப்பாணம் கச்சேரி – நல்லூர் வீதியில் சென்ற பெண்ணிடம் 13 தங்கப் பவுண் தாலிக்கொடி அறுக்கப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆலயத்துக்குச் சென்று திரும்பிய பெண்ணிடம் தாலிக்கொடி அறுக்கப்பட்டுள்ளது என தகவல் கிடைத்துள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு கொள்ளையர்களால் தாலிக்கொடி இழுத்து அறுக்கப்பட்டதால் கழுத்துப்பகுதியில் படுகாயமடைந்த பெண், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் நல்லூர் மகா விஷ்ணு ஆலய கொடியேற்றத் திருவிழாவுக்குச் சென்று கச்சேரி – நல்லூர் வீதியால் நேற்று பிற்பகல் வீடுதிரும்பிய அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இடைமறித்து தாலிக்கொடியை அறுத்தெடுத்து தாலியுடன் கொண்டு சென்றுள்ளனர்.

மேலும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு : தீவிரவாத அமைப்பின் சொத்து விபரம் வெளியானது!!

இலங்கையில் தொடர் தற்கொலை குண்டுதாக்குதலை நடத்திய தீவிரவாத அமைப்பின் சொத்து விபரங்களை பொலிஸார் இன்று வெளியிட்டுள்ளனர்.

இதன்படி, தாக்குதல் நடத்திய தீவிரவாத குழுவிற்கு சொந்தமானது என கூறப்படும் 140 மில்லியன் ரூபாய் நிதி குறித்த தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த பயங்கரவாத குழுவிற்கு சொந்தமானது என கருதப்படும் 7 பில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்கள் தொடர்பிலும் தகவல்கள் திரட்டப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், பணத்தில் ஒரு தொகுதி கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், ஏனைய நிதி வங்கி கணக்குகளில் இருப்பதாகவும், அந்த வங்கி கணக்குகளை தடை செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், பயங்கரவாத குழுவின் சொத்துக்கள் அனைத்தும் தடைசெய்யப்பட்டு, அவை அரசுடமையாக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இதுவரை 73 பேர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸார் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பதவியில் இருந்து விலகப்போவதில்லை : மைத்திரி திட்டவட்டம்!!

உயிர்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் இடம்பெற்ற குண்டுவெடிப்புக்களுக்கு பொறுப்பேற்று தாம் பதவிவிலகப்போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பிபிசி செய்திச்சேவைக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக்குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக புலனாய்வினரின் தகவல் உயர் மட்டம் வரை கிடைத்துள்ளது.

எனினும் அதனை தாம் உரியவகையில் கருத்திற்கொள்ளவில்லை எந்த நாட்டிலாவது வன்முறைகளுக்கு பொறுப்பேற்று தலைவர்கள் விலகியதுண்டா?

எனவே தாமும் இந்த தாக்குதலை தடுக்கமுடியாமல் போனமைக்காக பதவிவிலகப்போவதில்லை என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஸ்கை செய்தி சேவைக்கு அண்மையில் வழங்கிய செவ்வியிலும், ஜனாதிபதி இதே கருத்தை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

இந்த அழகிய பெண்ணை எல்லோரும் தவறாக நினைக்கிறார்களாம் : உண்மையில் இவர் யார் தெரியுமா?

கதவைத் தட்டி வேலைக்கு வந்திருக்கும் இந்த பிரித்தானிய பெண்ணை எல்லாரும் மொடல் என்று நினைத்துக் கொள்கிறார்களாம்.

Creweவைச் சேர்ந்த Carly Gayle (30), 15 வயது முதல் பிளம்பராக பணிபுரிந்து வருகிறார். ஆனால் அவர் இருக்கும் அழகுக்கு, அவரை ஒரு மொடல் என்று எண்ணிக் கொள்ளும் மக்கள் எங்கே உங்களுடன் வந்த ஆண் என்று கேட்கிறார்களாம்.

தன் கல்லூரியில் படித்த 200 மாணவர்களில் இரண்டே பேர்தான் பெண்கள் என்கிறார் Carly. ஆண்டுக்கு 36,000 பவுண்டுகள் சம்பாதிக்கும் Carlyக்கு ஒரே ஒரு வருத்தம்தான், அது பாலின ரீதியான தாக்குதல்கள்.

ஒரு அழகான பெண் எப்படி பிளம்பர் வேலை செய்ய முடியும், வேண்டுமென்றால், யாரோ ஒரு ஆண் பிளம்பருடன் பணிபுரியும் உதவியாளராக இருக்க முடியும் என மக்கள் நினைக்கிறார்களாம்.

அதேபோல், அவரால் பிளம்பர் வேலை செய்ய முடியுமா, முறையாக தொழில் கற்றிருக்கிறாரா என சந்தேகிப்பவர்கள் முன் தன் அடையாள அட்டையை எடுத்து காட்ட வேண்டியிருக்கிறதாம் Carlyக்கு.

சினிமாவை மிஞ்சிய உண்மை சம்பவம் : காதலனை திருமணம் செய்த குடும்பத்தையே கொன்று வீசிய தாய்!!

சண்டிகர் மாநிலத்தில் பூஜா என்ற பெண்மணி தனது காதலனை திருமணம் செய்துகொள்வதற்காக குடும்பத்தையே கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பூஜா என்ற பெண்மணி தனது இரண்டு மகள்களான ரேகா, சீமா ஆகிய இருவரையும் தனது காதலன் உதவியோடு கொலை செய்து கால்வாயில் வீசியுள்ளார்.

சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டு பொலிசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், பூஜாவின் கணவர் கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் இறந்துபோனது தெரியவந்துள்ளது.

தனது காதலன் அஜய்யை திருமணம் செய்துகொள்வதற்கு கணவர் மற்றும் இரண்டு மகள்கள் இடையூறாக இருப்பதால் கோபம் கொண்ட பூஜா, தனது குடும்பத்தையே கொலை செய்ய தனது காதலனுடன் சேர்ந்து திட்டம் போட்டு அதனை நடைமுறைப்படுத்தியுள்ளார்.

தனது கணவரை கொலை செய்வதற்கு கூலிப்படைக்கு 3 லட்சம் பணம் கொடுத்துள்ளார். அதன்படியே, கூலிப்படையினர் கொலை செய்து வீசியுள்ளனர்.கூலிப்படையை சேர்ந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டதையடுத்தே பூஜா தனது மகள்களை கொலை செய்த உண்மையும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக அஜய் தலைமறைவாகியுள்ள நிலையில் பூஜா கைது செய்யப்பட்டுள்ளார். தனது காதலுக்காக கட்டிய கணவன் உட்பட, இரண்டு மகள்களையும் கொலை செய்த தாயின் வெறிச்செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

9 மணி நேரம் அறுவை சிகிசிச்சை… இளம்பெண்ணை சடலமாக விட்டு தப்பி சென்ற மருத்துவர்!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் தாடை அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இளம்பெண், சடலமாக ஒப்படைக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த தனுஸ்ரீ ஜாதவ்(19) என்கிற இளம்பெண்ணுக்கு பற்களின் வளர்ச்சி சரியாக அமையவில்லை. தாடையில் அறுவை சிகிச்சை செய்தால் சரியாகிவிடும் என மருத்துவர் ராம் பட்டில், தனுஸ்ரீ பெற்றோரிடம் கூறியுள்ளார்.

அதன்படி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தனுஸ்ரீக்கு, ஏப்ரல் 23ம் திகதியன்று அறுவை சிகிசிச்சை மேற்கொள்ளப்பட்டது.

9 நேரம் கடந்தும் கூட மருத்துவர்கள் அறுவை சிகிச்சை குறித்து எந்த தகவலும் தெரிவிக்காமல் இருந்துள்ளனர். இதனால் உறவினர்கள் அனைவரும் பெரும் குழப்பமடைந்திருந்த வேளையில், தனுஸ்ரீ அவசர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார். அப்போது தனுஸ்ரீ சுயநினைவில்லாமல் இருப்பதை உறவினர்கள் கவனித்துள்ளனர்.

இந்த சமயத்தில் வேறு ஒரு மருத்துவரிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு, மருத்துவர் ராம் பட்டில் தன்னுடைய வீட்டிற்கு கிளம்பியுள்ளார்.

12 நீண்ட நேரம் கழித்து வெளியில் வந்த மருத்துவக்குழு தனுஸ்ரீ இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த தனுஸ்ரீயின் உறவினர்கள் பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். மேலும் உடலை வாங்க மறுத்து, மருத்துவரை கைது செய்ய வலியுறுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து தனுஸ்ரீயின் மாமா கைலாஸ் ஜாதவ் நிக்டி கூறுகையில், இது ஒரு கொலை. தனுஸ்ரீ நல்ல உடல்நிலையில் தான் இருந்தார். அவருக்கு பற்கள் அதிகமாக இருந்ததால் மட்டுமே அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

சிறிய அறுவை சிகிச்சை என்று தான் நாங்கள் நினைத்திருந்தோம். ஆனால் நீண்ட நேரம் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது எங்களுக்கு பயத்தை அதிகரித்தது.

அவசர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்ட போது நாங்கள் பலமுறை போன் செய்து பார்த்தோம். மருத்துவமனையில் இருந்து கிளம்பிய மருத்துவர் எங்கள் போன் அழைப்பிற்கு எந்த பதிலும் அளிக்கவில்லை என கூறியுள்ளார்.

இதுகுறித்து மருத்துவர் கூறுகையில், தனுஸ்ரீ ஒரு அரிதான கஷ்டத்தை அனுபவித்தார். அறுவை சிகிச்சை 9 மணிநேரம் மேற்கொள்ளப்படும் என அவருடைய குடும்பத்தாரிடம் முன்னமே நாங்கள் கூறியிருந்தோம். அறுவை சிகிச்சைக்கு பின்னர் அவர் உணர்ச்சியுடன் தான் இருந்தார். என்னுடைய கேள்விகளுக்கு பதில் கொடுத்தார என தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார், மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட ஆவணங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருமணம் செய்துகொண்ட காதல் ஜோடியை தீ வைத்து எரித்த உறவினர்கள்!!

மகாராஷ்டிராவில் கலப்பு திருமணம் செய்துகொண்ட காதல் ஜோடியை உறவினர்கள் தீ வைத்து எரித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 23 வயதான மங்கேஷ் ரான்சிங், கடந்த 6 மாதத்திற்கு முன்பு ருக்மிணி (19) என்பவரை காதலித்தது திருமணம் செய்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் ருக்மணியின் வீட்டில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ருக்மணி தன்னுடைய கணவருடன் சண்டையிட்டு தாய் வீட்டிற்கு கிளம்பியுள்ளார்.

அவரை அழைத்து வருவதற்காக சென்ற மங்கேஷை, ருக்மணியின் தந்தை ராம பாரதி மற்றும் அவருடைய மாமன்கள் இரண்டு பேர் கடுமையாக தாக்கியுள்ளார்.

இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது திடீரென புதுமணத்தம்பதியினர் இரண்டு பேரின் மீதும் மண்ணெண்னையை ஊற்றி, ருக்மணியின் உறவினர்கள் தீ வைத்து கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ருக்மணியின் மாமா சுரேந்திர பாரதியா மற்றும் கன்சன் சரோஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், தலைமறைவாக இருக்கும் ராம பாரதியை தீவிரமாக தேடி வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், 70 சதவீத தீக்காயங்களுடன் ருக்மணியும், 50 சதவீத தீக்காயங்களுடன் மங்கேஷும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருமணமான பின்பு கணவனுக்கு தெரிந்த மனைவியின் காதல் : அதன் பின் நடந்த விபரீத சம்பவம்!!

தமிழகத்தில் திருமணம் செய்த பெண் ஒருவர் தன்னுடைய காதலனை மறக்க முடியாத காரணத்தினால், அவருடன் சேர்ந்து தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே கொடுக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவருக்கு பிரபு என்ற மகன் உள்ளார். பட்ட்லியன் சமூகத்தைச் சேர்ந்தவரான பிரபு, அங்கிருக்கும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றில் படித்து வந்துள்ளார்.

அப்போது அதே கல்லூரியில் படித்த உடையார்பாளையம் அருகேயுள்ள முனையதிரையன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கயல்விழி என்பவருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியுள்ளது.

இவர்களின் காதல் கயல்விழியின் பெற்றோருக்கு தெரியவரவே அவர்கள் உடனடியாக சென்னை தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் விஜய் என்பவருடன் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

இருவரும் தனிக்குடித்தனமாக இருந்த நிலையில், கயல்விழிக்கு காதலனின் நினைவுகள் மறக்க முடியாமல் இருந்துள்ளது. இது எப்படியோ கணவன் விஜய்க்கு தெரியவர, இருவருக்குமிடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. அதன் பின் திடீரென்று கயல்விழி தன்னுடைய காதலனை தொடர்பு கொண்டு ஊருக்கு வரும் படி கூறியுள்ளார்.

அதன் படி ஊருக்கு வந்த காதலனுடன், கயல்விழி வீட்டை விட்டு வெளியேறி செல்ல, வீட்டிற்கு வந்த கணவன் மனைவியை காணவில்லை என்று பெற்றோரிடம் கூற, இருவரும் ஆண்டிமடம் அருகே கூவத்தூர் கிராமத்திலுள்ள பாலத்திற்கு அருகில் இன்னும் கொஞ்ச நேரத்தில் இச்சம்பவம் ஊர் உலகத்திற்குத் தெரிந்துவிடும்.

ஜாதி என்ற காரணத்தால் நம்மை வாழவிடமாட்டார்கள். நம்மைப் பிரித்துவிட்டார்கள். இனி நாம் சாவிலாவது ஒன்று சேர்வோம் என்று இருவரும் ஊசிபோட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.

இதில் கயல்விழி மயங்கிவிட, ஆனால் பிரபுவிற்கு ஒன்றும் ஆகாததால், அவளே இறந்துவிட்டாள் இனி நாம் எதற்கு என்று அருகில் இருந்த மரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இது குறித்த தகவல் உடனடியாக பொலிசாருக்கு தெரியவர விரைந்து வந்த பொலிசார் பிரபுவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, கயல்விழியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அவருக்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருதால், பொலிசார் இது குறித்து விசாரணை நடத்துவதற்காக சம்பவம் நடந்த பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு பார்த்த போது, ஊசி ரத்தத்துடன் தரையில் கிடந்துள்ளது. அதுமட்டுமின்றி பிரபு, கயல்விழி இருவரும் அணிந்திருந்த காலணிகளைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருமணத்தில் நாற்காலியில் அமர்ந்து சாப்பிட்டதற்காக இளைஞர் அடித்துக்கொலை : துடிதுடித்து இறந்த சோகம்!!

உத்ரகாண்ட் மாநிலத்தில் திருமண நிகழ்வின் போது நாற்காலியில் அமர்ந்து சாப்பிட்ட பட்டியலினத்தை சேர்ந்த இளைஞர், மர்ம கும்பலால் விரட்டி விரட்டி அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

உத்ரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த ஜிதேந்திர தாஸ் (26) என்கிற இளைஞர் தன்னுடைய மாமா எலம் தாஸ் மற்றும் நண்பர்கள் சிலருடன் திருமண விழா ஒன்றிற்கு சென்றுள்ளார்.

அங்கு எலம் தாஸ் உள்ளிட்ட நண்பர்கள் சிலர் ஒரு இடத்தில் அமர்ந்திருந்த போது, ஜிதேந்திர தாஸ் மட்டும் தன்னுடைய நண்பர் ஒருவருடன் திருமண விருந்தில் இரவு உணவு சாப்பிட சென்றிருக்கின்றார்.

அங்கு நாற்காலியில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்த போது, அதனை பொறுக்க முடியாத உயர்ந்த வகுப்பை சேர்ந்த சிலர், தாஸ் சாப்பிட்டு கொண்டிருந்த தட்டை கீழே தள்ளியுள்ளனர். நாற்காலியை ஓங்கி மிதித்து தாஸை கீழே விழ வைத்துள்ளனர். பின்னர் நடத்தப்பட்ட சரமாரி தாக்குதலில் இருந்து தப்பி, அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளார்.

ஆனாலும் ஆத்திரம் தீராத அந்த கும்பல் விரட்டி விரட்டி கொடூரமாக அடித்துள்ளது. வலியுடன் துடிதுடித்து போன அந்த இளைஞர் ஒரு வழியாக தப்பி வீடு சேர்ந்துள்ளார்.

வீட்டிற்குள் நுழையாமல், நடந்தவை பற்றி தன்னுடைய தாயிடம் கூட கூறாமல் வாசலிலே படுத்துறங்கியுள்ளார். மறுநாள் காலை சுயநினைவிழந்து வாசலில் மகன் கிடப்பதை பார்த்த தாய், உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள் தாஸ் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக தற்போது வரை 7 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்ற தமிழ் பெண் : வீடியோ அழைப்பில் அவரை பார்த்த போது அதிர்ச்சியில் உறைந்த கணவன்!!

வெளிநாட்டில் வேலைக்கு சென்ற பெண் அங்கு சித்ரவதைகளை அனுபவிப்பதாகவும், அவரை உடனே மீட்க வேண்டும் எனவும் கணவர் கண்ணீர் மல்க புகார் கொடுத்துள்ளார்.

தமிழகத்தின் ஈரோட்டை சேர்ந்தவர் நவாஸ்கான். டீக்கடை நடத்தி வருகிறார். இவர் மனைவி யாஸ்மீன் (45). இவர்கள் வீட்டில் வறுமை வாட்டிய நிலையில் நவாஸ்கானின் அக்கா மகன், குவைத்தில் வயதான தம்பதிகளுக்கு சமைத்து கொடுக்கும் வேலை இருப்பதாகவும், மாதம் ரூ 25000 சம்பளம் கொடுப்பார்கள் எனவும் கூறினார்.

இதை தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் 11ஆம் திகதி நவாஸ்கானின் மனைவி யாஸ்மீன் ஏஜண்ட்கள் மூலம் குவைத்துக்கு சென்றுள்ளார். பின்னர் நவாஸ்கானின் அக்கா மகன் மாலத்தீவுக்கு வேலைக்காக சென்று விட்டார்.

இந்நிலையில் தனது மனைவி யாஸ்மீன் குவைத்தில் பெரும் கொடுமைகளை அனுபவிப்பதாகவும், அவரை மீட்க வேண்டும் எனவும் ஈரோடு எஸ்.பிடம் நவாஸ்கான் புகார் அளித்துள்ளார்.

நவாஸ்கான் கூறுகையில், குவைத்துக்கு சென்றபிறகு எனது மனைவியிடம் பேசவே முடியவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு எனது மனைவியிடம் இருந்து எனது செல்போனுக்கு வீடியோ கால் வந்தது.

அவரின் முகத்தில் காயம் இருந்த நிலையில் அழுது கொண்டே பேசினார், இது எனக்கு அதிர்ச்சியை கொடுத்தது. சம்பளம் கேட்டால் என்னை அடித்து கொடுமைப்படுத்துகிறார்கள். என்னை உடனே அழைத்து செல்லுங்கள், இல்லையெனில் செத்து விடுவேன் என கூறினார்.

வீடியோ காலில் யாஸ்மீன் கதறுவதை தாங்க முடியவில்லை.
அவரின் இரு கைகளையும் கொதிக்கும் தண்ணியில் முக்கி கொடுமைப்படுத்தியுள்ளனர் என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.