வவுனியா பட்டாணிச்சூரில் தீ விபத்து : இரண்டு மணிநேர போராட்டத்தின் பின் தீ கட்டுப்பாட்டுக்குள்!!

பாரிய தீ விபத்து

வவுனியா மன்னார் வீதி பட்டாணிச்சூர் பகுதியில் இன்று (30.03.2019) மதியம் 3 மணியளவில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து சுமார் இரண்டு மணிநேர போராட்டத்தின் பின்னர் நகரசபையின் தீயணைப்பு பிரிவினரினால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

பட்டாணிச்சூர் பகுதியில் அமைந்துள்ள மரத்தளபாட விற்பனை நிலையத்தில் மதியம் 3 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த நிலையத்தின் ஊழியர்கள் மற்றும் பொதுமக்களினால் வவுனியா நகரசபை தீயணைப்பு பிரிவினருக்கும் பொலிஸாருக்கும் தகவல் வழங்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் போக்குவரத்தினை சீர்செய்ததுடன் நகரசபையின் தீயணைப்பு பிரிவினர் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டனர்.

தீ விபத்து ஏற்பட்டு 30 நிமிடங்களில் பகுதியளவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட சமயத்தில் தீயணைப்பிரிவு வாகனத்தில் தண்ணீர் நிறைவடைந்தது. இதன் போது தீயணைப்பு பிரிவினருக்கும் பொதுமக்களிடையே கருத்து முறன்பாடுகள் ஏற்பட்டிருந்தது.

அதன் பின்னர் சுமார் 10 நிமிடங்களில் பின்னர் வவுனியா பொலிஸார் மற்றும் நகரசபையின் தண்ணீர் பவுசர் வரவழைக்கப்பட்டது. தீயணைப்பு பிரிவினருடன் பொதுமக்களும் இணைந்து சுமார் இரு மணி நேர போராட்டத்தின் பின்னர் தீ விபத்து முற்றாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

எனினும் இவ் தீ விபத்து காரணமாக பல லட்சம் பெறுமதியான மரத்தளபாடங்கள் மற்றும் மரங்கள் முற்றாக எரிந்து நாசமாகியதுடன் வர்த்தக நிலையமும் முற்றாக சேதமடைந்துள்ளது.

இத் தீ விபத்து காரணமாக வவுனியா – மன்னார் வீதியின் போக்குவரத்து இரண்டு மணி நேரமாக தடைப்பட்டதுடன் போக்குவரத்தினை சீர்செய்யும் பணியில் வவுனியா போக்குவரத்து பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

வவுனியாவில் அதிகரித்துள்ள வெப்பத்தினால் மரத்தளபாட நிலையத்தின் தகரத்தில் வெப்பம் ஏற்பட்டு கீழேயிருந்த மரங்களில் தீ பற்றியிருக்கலாம் அல்லது மின்சார ஒழுக்கினால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்ற இரு கோணங்களில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வவுனியா மன்னார் வீதியில் தீ விபத்து : முற்றாக எரிந்து நாசமான மரத்தளபாட நிலையம்!!

எரிந்து நாசமான மரத்தளபாட நிலையம்

வவுனியா மன்னார் வீதி பட்டாணிசூர் பகுதியில் இன்று நண்பகல் 3.15 மணியளவில் திடீரென ஏற்பட்ட தீவிபத்தில் மரத்தளபாட நிலையம் ஒன்று முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது..

வவுனியா மன்னார் வீதி பட்டாணிசூர் பகுதியில் மரவேலை மற்றும் விற்பனை நிலையம் 3.15 மணியளவில் தீப்பற்றி எரிந்துள்ளது. உடனடியாக உரிமையாளரால் நகரசபை தீயணைப்புப்பிரிவு மற்றும்பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த நகரசபையின் தீயணைப்புப் பிரிவினர் மற்றும் பொலிசார் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

இருப்பினும் பல லட்சம் பெறுமதியான மரத்தளபாடங்கள் மற்றும் மரங்கள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன. இத் தீவிபத்து காரணமாக மன்னார் வீதியின் போக்குவரத்து ஒருமணி நேரத்திற்கு மேலாகவும் தடைப்பட்டுள்ளது.

வவுனியாவில் போரின்வடு சுமந்த மாற்றுத்திறனாளி மாணவி படைத்த சாதனை!!

மாற்றுத்திறனாளி மாணவி படைத்த சாதனை

வன்னி இறுதிப்போரின் போது எறிகணை வீச்சினால் தனது வலது காலை முழுமையாக இழந்த வவுனியா கிழவிக்குளம், பாலமோட்டைச் சேர்ந்த செல்வி ச.பிரியங்கா 2018 ம் ஆண்டு நடைபெற்று அண்மையில் வெளியான க.பொ.த.சாதாரண தரப்பரீட்சையில் 6A, B, C என்ற பெறுபேறுகளைப் பெற்று சாதனை படைத்து வலி சுமந்த வன்னி மண்ணுக்குப் பெருமை சேர்த்துள்ளார்.

அத்துடன் இவரது தாயார் அதே சம்பவத்தில் இடது கையை முழுமையாக இழந்து போரின் வடுக்களோடும், குடும்ப வறுமையோடும் வாழ்ந்து வருபவர் என்பவர் குறிப்பிடத்தக்கது.

மன வலிமையோடு கல்வி கற்று சாதாரண தரப்பரீட்சைக்குத் தோற்றி சாதனை புரிந்து தன் தாய்க்கும் மண்ணுக்குப் பெருமை சேர்த்த செல்வி ச.பிரியங்காவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதில் வவுனியா நெற் பெருமையடைகின்றது.

-நன்றி பொன்னம்பலம் சிவபாதம்-

இதே போன்று உடல் அவயங்களை இழந்த மாணவி ஒருவர் இலங்கையில் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சிறந்த சித்தி பெற்றுள்ளார். எஹேலியகொட பிரதேசத்தில் இரண்டு கைகள் மற்றும் ஒரு காலினை இழந்த மாணவி அபார சாதனை படைத்துள்ளார்.

அவர் சாதாரண தர பரீட்சையில் ஒன்பது பாடங்களில் 8A, B சித்தியை பெற்று பாடசாலைக்கும் குடும்பத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார். எஹெலியகொட தேசிய பாடசாலையில் கல்வி கற்கும் ரஷ்மி நிமேஷா குணவர்தன என்ற மாணவி இம்முறை சாதாரண தர பரீட்சையில் சிறந்த சித்தியை பெற்றுள்ளார்.

ஆசிரியர்கள், பெற்றோர்கள், தனது பாடசாலை நண்பர்களின் உதவியுடன் பரீட்சையில் விசேட வெற்றியை பெற்று கொள்ள முடிந்ததாக ரஷ்மி குறிப்பிட்டுள்ளார்.

தன்னிடம் உள்ள ஒரு பாதத்தை மாத்திரம் பயன்படுத்தி அவர் பரீட்சைக்கு முகம் கொடுத்துள்ளார். அவரது தாய் மற்றும் தந்தை அதே பாடசாலையில் ஆசிரியராக பணியாற்றி வருகின்றனர். இரண்டு கைகள் மற்றும் ஒரு காலின்றி வாழும் இந்த மாணவி, இலங்கை மக்களுக்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டாக மாறியுள்ளார்.

மன தைரியத்தை மாத்திரம் கொண்டு இந்த மாணவி சாதாரண தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்றிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாக பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இவர்களைப் போன்ற மாணவர்கள் மற்ற மாணவர்களுக்கு எடுத்துக்காட்டாக திகழ்வதுடன் சாதிப்பதற்கு உடற்குறை ஒரு தடையல்ல என்பதை நிரூபித்துள்ளனர்.

இரு கைகளும் இன்றி கால்களால் பரீட்சை எழுதி அபார சாதனை படைத்த மாணவி : குவியும் பாராட்டுக்கள்!!

அபார சாதனை படைத்த மாணவி

உடல் அவயங்களை இழந்த மாணவி ஒருவர் இலங்கையில் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சிறந்த சித்தி பெற்றுள்ளார். எஹேலியகொட பிரதேசத்தில் இரண்டு கைகள் மற்றும் ஒரு காலினை இழந்த மாணவி அபார சாதனை படைத்துள்ளார்.

அவர் சாதாரண தர பரீட்சையில் ஒன்பது பாடங்களில் 8A, B சித்தியை பெற்று பாடசாலைக்கும் குடும்பத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார். எஹெலியகொட தேசிய பாடசாலையில் கல்வி கற்கும் ரஷ்மி நிமேஷா குணவர்தன என்ற மாணவி இம்முறை சாதாரண தர பரீட்சையில் சிறந்த சித்தியை பெற்றுள்ளார்.

ஆசிரியர்கள், பெற்றோர்கள், தனது பாடசாலை நண்பர்களின் உதவியுடன் பரீட்சையில் விசேட வெற்றியை பெற்று கொள்ள முடிந்ததாக ரஷ்மி குறிப்பிட்டுள்ளார்.

தன்னிடம் உள்ள ஒரு பாதத்தை மாத்திரம் பயன்படுத்தி அவர் பரீட்சைக்கு முகம் கொடுத்துள்ளார். அவரது தாய் மற்றும் தந்தை அதே பாடசாலையில் ஆசிரியராக பணியாற்றி வருகின்றனர். இரண்டு கைகள் மற்றும் ஒரு காலின்றி வாழும் இந்த மாணவி, இலங்கை மக்களுக்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டாக மாறியுள்ளார்.

மன தைரியத்தை மாத்திரம் கொண்டு இந்த மாணவி சாதாரண தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்றிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாக பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

55 வருடங்களுக்கு பின் க.பொ.த. சாதாரணதர பரீட்சையில் தமிழ் மாணவியின் வரலாற்றுச் சாதனை!!

தமிழ் மாணவியின் வரலாற்றுச் சாதனை

க.பொ.த. சாதாரணதர பரீட்சையில் 9A சித்திகளை பெற்று கேகாலை சாந்த மரியாள் தமிழ் மகா வித்தியாலயத்தில் 55 வருடங்களுக்கு பின் டி லக்ஷிகா எனும் மாணவி சாதனை படைத்துள்ளார்.

மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்த இப்பாடசாலையில் இம் மாணவியின் பரீட்சை முடிவால் பாடசாலைக்கு மட்டுமல்ல தமிழ் மொழி மற்றும் அப்பகுதிக்கும் மிகப் பெரும் பாக்கியம் என ஊர் மக்கள் கூறுகின்றனர்.

2018 ஆம் ஆண்டு கல்வி பொது தராதர பத்திர சாதாரண தரப் பரீட்சை கடந்த டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் அமைக்கப்பட்டிருந்த 4 ஆயிரத்து 661 பரீட்சை நிலையங்களில் இடம்பெற்றது. அதில், 6 லட்சத்து 56 ஆயிரத்து 641 பரீட்சாத்திகள் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதே வேளை இம்முறை பரீட்சை எழுதிய பரீட்சாத்திகளில் 9413 பேர் 9 ஏ சித்திகளை பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இரவு வேலைக்கு சென்ற கணவன் : வீட்டில் தனியாக இருந்த பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்!!

பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்

மதுரையில் வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் முருகன் என்பவருக்கும் 22 வயதான கவுசல்யாவுக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.

கவுசல்யா பலசரக்கு கடை ஒன்றையும் நடத்தி வருகிறார். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் நேற்று இரவு கணவர் இரவு பணிக்கு சென்றுவிட்டார். மனைவி கவுசல்யா அந்த பகுதியில் நடைபெற்ற ஊர்திருவிழாவில் கலந்துகொண்டு விட்டு வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

இந்நிலையில் காலையில் வெகுநேரமாகியும் கவுசல்யா வீட்டு கதவை திறக்கவில்லை. கடைக்கு வந்தவர்கள் ஜன்னல் வழியாக வீட்டின் உள்ளே பார்த்தபோது கவுசல்யாக வெகுநேரமாகியும் அசைவற்று கிடந்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து விரைந்து வந்த பொலிசார் வீட்டின் உள்ளே சென்றுபார்த்தபோது, கவுசல்யா கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. கவுசல்யா கழுத்து மற்றும் காதில் அணிந்திருந்த 8 பவுன் நகையை காணவில்லை.

சம்பவத்தன்று இரவு நடந்த கோவில் திருவிழாவிற்கு செல்வதற்காக அவர் நகைகளை அணிந்து சென்று இருக்கிறார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் கவுசல்யா பின்னாலேயே வந்து அவரை கொலை செய்து விட்டு நகையை எடுத்து சென்றிருக்கலாம் என பொலிசார் சந்தேகத்தித்துள்ளனர்.

மேலும் கவுசல்யா பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக பொலிசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பேஸ்புக் காதலால் வந்த வினை : திருமணம் முடிந்த 3 மாதத்தில் அம்பலமான காதலனின் உண்மை முகம்!!

பேஸ்புக் காதலால் வந்த வினை

பேஸ்புக் மூலம் காதலித்து திருமணம் செய்துகொண்ட கணவன், ஆபாச புகைப்படங்களை வைத்துக்கொண்டு மிரட்டுவதாக இளம்பெண் தர்ணாவில் ஈடுபட்டுள்ளார்.

பொள்ளாச்சியை சேர்ந்தவர் மகாலட்சுமி. இவர் பேஸ்புக்கில் பழக்கமான மதுரையை சேர்ந்த அஜித்குமார் என்பவரை காதலித்தது கடந்த 3 மாதங்களுக்கு முன் திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றினை அளித்த மகாலட்சுமி, திடீரென தர்ணாவில் ஈடுபட ஆரம்பித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், திருமணம் முடிந்ததிலிருந்தே கணவரின் பெற்றோர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாகவும், ஆபாச படங்களை வைத்துக்கொண்டு கணவன் மிரட்டுவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

கொழும்பில் இளம் பெண்களை ஏமாற்றி விபச்சார தொழிலுக்கு அனுப்பும் கும்பல்!!

விபச்சார தொழிலுக்கு அனுப்பும் கும்பல்

கொழும்பில் இளம் பெண்களை ஏமாற்றி விபச்சார தொழிலுக்கு அனுப்பும் கும்பல் தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது. கொட்டாவை – மஹல்வராவ பிரதேசத்தில் அழகு கலை நிலையம் ஒன்றை நடத்தி செல்லும் நோக்கி இளம் பெண்களை ஏமாற்றி விபச்சார தொழிலுக்கு அனுப்பும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.

கஞ்சா, ஹசிஷ் போன்ற போதைப்பொருட்களுக்கு பெண்களை அடிமையாக்கி பல காலங்களாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கையினை 38 வயதான பெண் மற்றும் 17 வயதான இளைஞனும் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.

பல பெண்களை ஏமாற்றி அவர்களை நுட்பமான முறையில் பணத்திற்கு விற்பனை செய்யும் நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறித்து பொலிஸார் கண்டு பிடித்துள்ளனர். பெண்களை கொள்வனவு செய்பவர்களின் கையடக்க தொலைபேசிகளுக்கு விருப்பமான பெண்களை தெரிவு செய்யுமாறு புகைப்படங்கள் அனுப்பி வைக்கப்படுகின்றது. அதற்கமைய தரகர்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபடும் பெண்ணுடன் தொலைபேசி ஊடாக தொடர்பு கொள்வதனை வழக்கமாக்கி கொண்டுள்ளனர்.

ஒரு இரவு தங்குவதற்கு ஒரு பெண்ணுக்கு 40000 ரூபாய் விலை நிர்ணயிக்கப்படுகின்றது. இந்த பணத்திற்கு பெண்களை பெற்று கொண்டதன் பின்னர் இந்த பெண்களுக்கும் கொள்வனவாளர்களும் போதைப்பொருள் வழங்கப்படுகின்றது. அதனை 17 வயதான இளைஞன் வழங்கி வந்துள்ளார்.

பொருளாதார நெருக்கடியினால் சில பெண்கள் இந்த கும்பலிடம் சிக்கிக் கொள்வதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பில் பொலிஸார் சுற்றிவளைப்பு ஒன்றையும் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய மாணவி : இரு கைகளும் இன்றி அபார சாதனை!!

அபார சாதனை

உடல் அவயங்களை இழந்த மாணவி ஒருவர் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சிறந்த சித்தி பெற்றுள்ளார். எஹேலியகொட பிரதேசத்தில் இரண்டு கைகள் மற்றும் ஒரு காலினை இழந்த மாணவி அபார சாதனை படைத்துள்ளார்.

அவர் சாதாரண தர பரீட்சையில் 8A, B சித்தியை பெற்று பாடசாலைக்கும் குடும்பத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார். எஹெலியகொட தேசிய பாடசாலையில் கல்வி கற்கும் ரஷ்மி நிமேஷா குணவர்தன என்ற மாணவி இம்முறை சாதாரண தர பரீட்சையில் சிறந்த சித்தியை பெற்றுள்ளார்.

ஆசிரியர்கள், பெற்றோர்கள், தனது பாடசாலை நண்பர்களின் உதவியுடன் பரீட்சையில் விசேட வெற்றியை பெற்று கொள்ள முடிந்ததாக ரஷ்மி குறிப்பிட்டுள்ளார்.

தன்னிடம் உள்ள ஒரு பாதத்தை மாத்திரம் பயன்படுத்தி அவர் பரீட்சைக்கு முகம் கொடுத்துள்ளார். அவரது தாய் மற்றும் தந்தை அதே பாடசாலையில் ஆசிரியராக பணியாற்றி வருகின்றனர்.
இரண்டு கைகள் மற்றும் ஒரு காலின்றி வாழும் இந்த மாணவி, இலங்கை மக்களுக்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டாக மாறியுள்ளார்.

மன தைரியத்தை மாத்திரம் கொண்டு இந்த மாணவி சாதாரண தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்றிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாக பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் கசிப்புடன் ஒருவர் கைது!!

கசிப்புடன் ஒருவர் கைது

வவுனியா புதியபேருந்து நிலையத்தில் ஓரு போத்தல் சட்டவிரோத சாராயத்தினை (கசிப்பு) உடமையில் வைத்திருந்தகுற்றசாட்டில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக வவுனியா பிரதிபொலிஸ்மா அதிபரின் கீழ் செயற்படும் விசேடபோதை ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர். இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.

நேற்றயதினம் புதிய பேருந்துநிலைய பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிசார் நபர் ஒருவரிடம் சோதனையில் ஈடுபட்டபோதே குறித்த சட்டவிரோத மதுபானம் மீட்கப்பட்டதுடன் அதனை உடமையில் வைத்திருந்தார் என்ற குற்றசாட்டின் அடிப்படையில் பதுளை பகுதியை சேர்ந்தநபர் ஒருவரையும் கைதுசெய்துள்ளனர்.

குறித்த நபர் கிளிநொச்சி பகுதிக்கு திருமண வைபவம் ஒன்றில் கலந்துகொள்வதற்காக சென்றுவிட்டு மீண்டும் பதுளைநோக்கி செல்வதற்காக வவுனியா பேருந்துநிலையத்தில் காத்திருந்தபோதே கைதுசெய்யபட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

முல்லைத்தீவில் பார்வையற்ற இரண்டு மாணவர்களின் சாதனை!!

இரண்டு மாணவர்களின் சாதனை

விடுதலைப் புலிகளின் காலத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்ட இனிய வாழ்வு இல்லத்தில் வசிக்கும் கண்பார்வை அற்ற இரண்டு மாணவர்கள் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் தோற்றி சித்தியடைந்துள்ளனர்.

முல்லைத்தீவு – வள்ளிபுனம் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்கும் அ.அபிசேக், ச.அரவிந்தன் என்னும் கண்பார்வையற்ற இரண்டு மாணவர்களும் பிரெயில் எழுத்து முறை மூலம் பரிட்சையில் தோற்றி சித்தியடைந்துள்ளனர்.

முல்லைத்தீவு வள்ளிபுனம் பகுதியில் 1997 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இனிய வாழ்வு இல்லத்தில் விழிப்புலன், செவிப்புலன், பேச்சுத்திறன் குன்றிய 50க்கு மேற்பட்ட மாணவர்கள் தற்போது வரை சிறப்பு கல்வி கற்று வருகின்றனர்.

இந்நிலையில் இனிய வாழ்வு இல்லத்தில் வசிக்கும் கண்பார்வை அற்ற இரண்டு மாணவர்கள் வள்ளிபுனம் மகாவித்தியாலயத்தில் 2018 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தர பரீட்சையில் தோற்றி சித்தியடைந்துள்ளனர்.

இது தொடர்பில் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் தோற்றி சித்தியடைந்த கண்பார்வையற்ற மாணவர்களின் ஒருவரான அருள்பிரகாசம் அபிசேக் கருத்து தெரிவிக்கையில்,

இனிய வாழ்வு இல்லத்தின் சிறப்பு கற்றல் செயற்பாடுகள், ஊக்கத்துடன் முல்லைத்தீவு வள்ளிபுனம் மகாவித்தியாலயத்தில் கடந்த மூன்று வருடங்களாக கல்வி கற்று வருகின்றேன். 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.சாதரன பரீட்சையில் பிரெயில் எழுத்து முறை மூலம் பரீட்சை எழுதி சித்தியடைந்துள்ளேன்.

2018 க.பொ.த சாதாரண தர பரீட்சை கடினமாக இருந்த போதும் இனியவாழ்வு இல்லத்தில் அனைவரதும் ஊக்கம் காரணமாகவும் எனது ஆசிரியர்களின் வழிகாட்டலுக்கு அமைய நான் நிறைவாக படித்து அவர்களின் பெயரையும், பெருமையும் காப்பாற்றியுள்ளேன்.

மேலும் எனது அம்மா, அப்பா சிறுவயதில் இருந்து எனக்கு மிகவும் கஸ்டப்பட்டு கல்வி கற்பித்துள்ளனர். அவர்களின் எதிர்பார்ப்பையும் நான் நிறைவேற்றியுள்ளளேன். இதன் மூலமாக எனக்கு மிகவும் சந்தோசமாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

பங்களாதேஷ் தீ விபத்து : இலங்கையர் உள்ளிட்ட 19 பேர் பலி!!

இலங்கையர் உள்ளிட்ட 19 பேர் பலி

பங்களாதேசின் தலைநகர் டாக்காவில் இடம்பெற்ற அடுக்குமாடி கட்டட தீ விபத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டாக்காவின் பானானி பகுதியில் அமைந்துள்ள 22 மாடி கட்டடத்தில் நேற்றைய தினம் 8வது மாடியில் ஏற்பட்ட தீ விபத்து 11வது மாடி வரையில் சென்றுள்ளதுடன் கட்டடத்தின் அருகிலிருந்த இரண்டு கட்டடங்களுக்கும் பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

தீ விபத்தின் போது உயிர்தப்பிக்க கட்டடத்தில் இருந்து குதித்தவர்கள் உள்ளிட்ட 19 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், தீயணைப்பு படைகள், இராணுவம், விமானப்படை ஒன்றாக இணைந்து தீயை அணைக்கும் பணியை மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர்களுள் இலங்கையர் ஒருவரும் உள்ளடங்குவதாக வெளிவிவாகார அமைச்சு உறுதிப்படுத்தியது.

அத்துடன் இந்த விபத்தில் சிக்குண்ட 73க்கும் மேற்பட்டவர்கள் காயங்களுடன் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களின் பலரது நிலைமைகள் கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் கடும் வறட்சி காரணமாக மயங்கி வீழ்ந்து உயிரிழந்த முதியவர்!!

மயங்கி வீழ்ந்து உயிரிழந்த முதியவர்

யாழ்ப்பாணத்தில் நிலவும் கடும் வரட்சி காரணமாக மற்றுமொருவர் இன்று உயிரிழந்துள்ளார். யாழ்.தல்லையப்புலம், கரவெட்டியைச் சேர்ந்த 67 வயதான கார்த்திகேசு இராசதுரை என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.

தல்லையப்புலம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வேளையில், கடும் வெப்பத்தால் மயங்கி வீழ்ந்துள்ளார். எனினும் உடனடியாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த போதும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இலங்கை முழுவதும் கடும் வெப்பமான காலநிலை நிலவி வருவதாக வருவதாக வளிமண்டவியல் திணைக்களம் எச்சரித்து வருகிறது. இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் மாத்திரம் கடும் வெப்ப நிலை காரணமாக இதுவரை மூன்று பேர் உயிரிழந்துள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடும் வெப்பத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ள அதிக நீர் அருந்துமாறும், மதிய வேளையில் வெளியில் செல்வதை தவிர்க்குமாறு சுகாதார துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இலங்கையில் கணவனை கொன்று விட்டு கோடாரியுடன் சரணடைந்த மனைவி!!

கோடாரியுடன் சரணடைந்த மனைவி

தனது கணவனை கோடாரியால் தாக்கி கொலை செய்த பெண்ணொருவர், அந்த கோடாரியுடன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் அனுராதபுரம் பரசன்கஸ்வெவ பிரதேசத்தில் நடந்துள்ளது. பரசன்கஸ்வெவ, அடுகெட்டியாவ போதி மவத்தை பகுதயில் உள்ள வீடொன்றில் இந்த கொலை சம்பவம் இன்று நடந்துள்ளது.

தச்சு தொழிலாளியான 43 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையே இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளார். இந்த நபர் வேறு ஒரு பெண்ணுடன் கொண்டிருந்த கள்ள தொடர்பே கொலைக்கு காரணம் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கொலை சம்பவம் தொடர்பாக 35 வயதான மனைவியை கைது செய்துள்ள பொலிஸார் நாளைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த உள்ளனர்.

சூடு பிடித்துள்ள கொழும்பு அரசியல் : கூட்டமைப்பு அதிரடி நடவடிக்கை?

ஜெனிவா மனித உரிமைகள் கூட்டத்தொடர் நிறைவடைந்துள்ள நிலையில், கொழும்பு அரசியல் களம் என்பது மிகவும் பரபரப்படைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 40வது கூட்டத்தொடர் நிறைவடைந்துள்ள நிலையில், இலங்கை தொடர்பில் புதிய பிரேரணை ஒன்று கொண்டு வரப்பட்டு வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த பிரேரணைக்கு இலங்கை இணை அனுசரணை வழங்கியுள்ளது. எனினும், ஜெனிவா தீர்மானம் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று தனது கடுமையான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருந்தார்.

அதாவது, அரசியல் அமைப்பை மீறி எந்தவொரு விடயங்களையும் செய்யப்போவதில்லை எனவும். ஜெனிவாவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டாலும் அது இலங்கையின் அரசியல் அமைப்புக்கு உட்பட்டு தான் அவற்றை நிறைவேற்ற முடியும் என அவர் கூறியுள்ளார்.

அத்துடன், சர்வதேச நீதிபதிகளுக்கு உள்நாட்டில் இடமே இல்லை எனவும் அவர் கூறியிருந்தார். மேலும், ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் வதிவிட பிரதிநிதி இணை அனுசரணை வழங்கியுள்ள உடன்படிக்கை குறித்தும் எவ்வித பொறுப்பும் ஏற்கமுடியாது எனவும் கூறியிருந்தார்.

எனினும், ஜனாதிபதியின் இந்த கூற்றை தமிழ் தேசியக் கூட்டமைப்பு நிராகரித்துள்ளது. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன்,

“2015ம் ஆண்டில் வெளிநாட்டு நீதிபதிகள் இங்கு வருவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணக்கம் வெளியிட்டிருந்தார்.

அத்துடன், கடந்த ஆண்டு பல முறை ஜனாதிபதி அரசியல் அமைப்பை மீறியதாகவும், அதனை கூட்டமைப்பினரே காப்பாறியதாகவும் எம்.ஏ.சுமந்திர் கூறியுள்ளார்.

இந்நிலையிலேயே, தற்போது கொழும்பு அரசியல் களம் சூடுபிடித்துள்ளதாக அரசியல் அவதானிகள் கூறியுள்ளனர். அத்துடன், இந்த உள்நாட்டு விவகாரம் சர்வதேச ரீதியில் தாக்கத்தை செலுத்தும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எவ்வாறாயினும், இந்த விடயத்தில் கடும் அதிருப்பியில் இருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, அதனை அவர்கள் வெளிக்காட்ட தயாராகி வருவதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

இதன் வெளிப்பாடாகவே பிரதமர் மற்றும் ஜனாதியுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் முக்கிய சந்திப்புகளை நடத்தவிருப்பதாக கொழும்பு அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

-தமிழ்வின்-

வவுனியாவில் மத நல்லிணக்க மேம்பாட்டிற்கான பௌத்த மாநாடு!!

பௌத்த மாநாடு

வடமாகாணத்தில் மத நல்லிணக்க மேம்பாட்டிற்கான பௌத்த மாநாடு இன்று (29.03) வவுனியா கண்டிவீதியில் அமைந்துள்ள ஸ்ரீபோதி தட்சிணாராம விகாரையில் நடைபெற்றது.

வடக்கு கிழக்கு மாகாணங்களின் தலைமை சங்கநாயக்க தேரரும், வவுனியா ஸ்ரீபோதிதக்சினராமாய விகாரதிபதி சங்கைக்குரிய சியம்பலாகஸ்வௌ விமலசார நாயக்க தேரர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு மாநாட்டை ஆரம்பித்து வைத்தார்.

வடக்கு மாகாணத்தை மையமாக கொண்டு புத்தசாசன அமைச்சின் ஒத்துழைப்புடன், வட மாகாண பௌத்த சம்மேளனத்தின் ஏற்பாட்டில் சமய நல்லிணக்கத்தையும், இனங்களுக்கிடையில் சமாதானத்தையும் ஏற்படுத்தும் நடவடிக்கையாக வவுனியாவில் பௌத்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நிகழ்வில் அதிதிகள் இந்து, பௌத்த மற்றும் முஸ்லிம் கலாசார நடனங்களுடன் அழைத்து வரப்பட்டதுடன், மத அனுஸ்டானங்களுடன் பௌத்த தேரர்கள் மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டு சர்வமத சமய பெரியார்களின் ஆசிச் செய்தியுடன் பௌத்த மாநாடு ஆரம்பமாகியது.

புத்த சாசன அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் வடமாகாணத்தின் அனைத்து பௌத்த வணக்கஸ்தலங்களின் நாயக்க தேரர்கள், வணிகத்துறை பிரதி அமைச்சர் புத்திக்க பத்திரண, வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.கனீபா, வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான், வவுனியா இராணுவ பாதுகாப்பு படை கட்டளை தளபதி, வட மாகாண கடற்படை மற்றும் விமானப்படை கட்டளைத் தளபதிகள், வன்னி பிரதி பொலிஸ் மா அதிபர், வவுனியா மாவட்ட செயலகத்தின் உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.