கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ள அனர்த்தம் காரணமாக 257 வீதிகளும், 57 பாலங்களும் சேதமடைந்துளளன என மாவட்டச் செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வீதி அபிவிருத்தி அதிகார சபை, வீதி அபிவிருத்தி திணைக்களம், பிரதேச சபைகள், மற்றும் நீர்ப்பாசனத் திணைக்கள வீதிகளே இவ்வாறு சேதமடைந்துள்ளன. இவற்றுள் பல வீதிகள் மிகவும் மோசமாகவும், ஏனையவை பகுதியளவிலும் சேதமுற்றுள்ளன.
இவ்வாறு சேதமுற்றுள்ள வீதிகளை விசேட நிதி ஒதுக்கீட்டின் கீழ் விரைந்து புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இல்லையெனில் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பெரும் இடையூறாக காணப்படும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தியாவில் இரண்டு வயதில் அப்பாவால் ஆசிட் வீசப்பட்ட பெண் இப்போது 23 வயதில் பல பெண்களுக்கு உதவி செய்து வருகிறார். மும்பையைச் சேர்ந்தவர் Anmol Rodrigous, இவர் இரண்டு வயது இருக்கும் போது இவருடைய தாய் மற்றும் இவர் மீது தந்தை ஆசிட் வீசியதால், பலத்த தீக்காயம் அடைந்தார்.
ஆனால் அவரது தாய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் இரண்டு வயதில் ஆசிட்டால் பாதிக்கப்பட்ட பெண் இப்போது எப்படி இருக்கிறார் என்பது பற்றி பிரபல ஆங்கில பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.
அதில் Anmol Rodrigous-க்கு தற்போது 23 வயது ஆகிறது எனவும், தனியாக இருக்கும் இவர் இத்தனை ஆண்டுகள் கடந்து வந்த பாதை மிகவும் கடினமானது என குறிப்பிட்டுள்ளது.
இருப்பினும் உலகின் சந்தோஷமான பெண் நான் தான் என்றும் அவர் கூறிக் கொள்கிறார். இவர் NGO Acid Survivor Sahas Foundation ஒன்றை நடத்தி வருகிறார். அதில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அறுவைசிகிச்சை செய்ய மற்றும் மருத்துவ செலவு போன்றவற்றி உதவி செய்து வருகிறார்.
இவர் இதுவரை 20 பெண்களுக்கு உதவி செய்துள்ளதாகவும், அதில் மிகவும் கஷ்டப்பட்ட தன்னுடைய நண்பர் ஒருவருக்கு திருமணமும் செய்து வைத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், நான் என்னுடைய வாழ்க்கையை விரும்புகிறேன். நான் வித்தியாசமாக இருக்கிறேன். ஒற்றை கண், எரிந்த தோல் இருப்பினும் நான் இதை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டேன்.
என்னுடைய தன்னம்பிக்கை அதிகரித்துள்ளது, நான் இரண்டு வயதில் இருக்கும் போது இந்த சம்பவம் நடந்தது, இதற்காக நான் பல ஆண்டுகள் சிகிச்சை எடுத்தேன், ஆனால் என் அம்மா இறந்துவிட்டாள். அங்கிருந்த மருத்துவர்கள், செவிலியர்கள் என்னை நன்றாக பார்த்து கொண்டனர். நான் மற்றவர்களை விட வித்தியாசமாகத் தான் இருக்கிறேன், என் முகத்தை பார்க்கும் போது பயம் இருக்கலாம். கல்லூரி படிப்பை நன்றாக முடித்தேன்.
ஆனால் கல்லூரியில் எனக்கு ஒரு நண்பர்கள் கூட கிடையாது. தனியாகவே சாப்பிடுவேன். யாரும் என்னிடம் பேசமாட்டார்கள். நான் என் அம்மா உயிரோடு இருந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன், அம்மாவை மிகவும் மிஸ் செய்கிறேன், ஒரு நண்பர் என் மீது அன்போடு இருந்தால் போதும், அது தான் வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும் Anmol-க்கு பெண் அரசியல் தலைவர்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் பலருடன் நண்பராக உள்ளார். இதுவரை யார் ஒதுக்கினாலும், இவர் அவர்கள் மூலம் மற்ற பெண்களுக்கு வேலை வாங்கு தருவதாக கூறப்படுகிறது.
ஆசிட் வீசிவிட்டால் அவ்வளவு தான் வாழ்க்கை என்று நினைக்கும் என்று பெண்களுக்கு மத்தியில் ஒரு தன்னம்பிக்கையின் உருவமாக Anmol இருப்பது பல பெண்களுக்கு மட்டுமல்ல தன்னம்பிக்கை இழந்து நிற்கும் அனைவருக்கும் ஒரு உதாரணம் தான்.
இரவு விமானத்தில் தனி ஆளாக பயணித்த இளம் பெண்ணுக்கு ஊழியர்களால் சிறப்பு உபச்சாரம் அளிக்கப்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸின் Davao நகரிலிருந்து தலைநகர் Manilaவுக்கு PR 2820 ரக பயணிகள் விமானம் இரவு பயணமாக கிளம்பியது. விமானத்தில் லூயிசா எரிப்ஸி என்ற இளம்பெண் மட்டுமே தனியாக பயணிக்க தயாரானார். காரணம் வேறு யாருமே வரவில்லை. இதையடுத்து லூயிசா, விமான பணியாளர்கள் மற்றும் விமானியுடன் விமானம் கிளம்பியது.
தனியாளாக பயணம் செய்ததால் லூயிசா உற்சாகமாக காணப்பட்டார், அவருக்கு உணவுகள், பானங்கள் என சிறப்பான உபச்சாரம் செய்யப்பட்டது. வாழ்க்கையில் ஒரு முறை மட்டும் கிடைக்கும் இது போன்ற அரிதான பயணத்தை மகிழ்ச்சியுடன் கழித்தார் லூயிசா.
பின்னர் விமானத்தில் இருந்த ஊழியர்கள் லூயிசாவுடன் புகைப்படம் எடுத்து கொண்டனர். விமான நிலையத்துக்கு விமானம் வந்தவுடன் லூயிசாவின் உடைமைகள் மட்டும் தனியாக பரிசோதனை செய்யப்பட்டு அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
பொகவந்தலாவ பெற்றசோ தோட்டபகுதியில் வேன் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 16பேர் பொகவந்தலாவ பிரதேசவைத்தியசாலையில் அனுமதி பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து இன்று மாலை 03மணி அளவில் இடம் பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இரத்தினபுரி அப்புகஸ்தன பகுதியில் இருந்து அட்டன் பகுதியை நோக்கி பயணித்த குறித்த வேண் வண்டி பொகவந்தலாவ பலாங்கொட பிரதான வீதியின் பெற்றசோ பகுதியிலே விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும் குறித்த வேன் வண்டியில் தடையாளி கோளாரு காரணமாகவே இந்த விபத்து இடம் பெற்றுள்ளதாக காயமடைந்தவர்களுள் சிறுவர்கள் உட்பட் மொத்தம் 16பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்கட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இரத்தினபுரி பகுதியில் இருந்து அட்டன் பகுதிக்கு கிருஸ்த்துவ ஆலயம் ஒன்றிற்க்கு சென்ற வேன் வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கபடுகிறது. காயமடைந்த 16பேரும் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் காயடைந்தவர்கள் குறித்து கவலை படவேண்டிய அவசிய இல்லை என பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி ஏஸ்.கே.ஜயசூரிய தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.
இந்தியாவில் அப்பா சொன்னதைப் போல இருக்கும் மதிப்பெண்ணை விட, அதிக மதிப்பெண் பெற்று இளைஞர், நீங்கள் சொன்னதை நிறைவேற்றிவிட்டேன் அப்பா என்று கூறி மதிப்பெண் புகைப்படத்தை வெளியிட்டிருப்பது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
டெல்லி ஐஐடியின் முன்னாள் மாணவரான கர்க், கடந்த 2002-ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரி ஆனார்.
அதன் பின் படிப்பின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் மேக்ரோ எகனாமிக்ஸ் படித்துவந்தார்.
இந்நிலையில் இவர் அதில் இருக்கும், மூலதன உருவாக்கம் மற்றும் வளர்ச்சி’ என்னும் தேர்வில் 170-க்கு 171 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
இது குறித்து அவர் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில், என்னுடைய அப்பா, நான் பள்ளியில் படிக்கும்போது தேர்வில் 10-க்கு 10 மதிப்பெண்கள் பெற்றால் போதாது. எப்போதும் 10-க்கு 11 மதிப்பெண்கள் பெற முயற்சிக்க வேண்டும் என்று அடிக்கடி கூறுவார்.
நான் என்னுடைய மாணவப்பருவத்தின் கடைசி கட்டத்தில் இருக்கிறேன். இதில் இறுதி தேர்வில் நான் 170-க்கு 171 மதிப்பெண் பெற்றிருக்கிறேன். நான் எடுத்த மதிப்பெண்ணை பார்த்து உச்சகட்ட மகிழ்ச்சியாக ஹார்வர்ட் பல்கலைக் கழகப் பேராசிரியர் ஜெப்ரி ப்ராங்கல் இதில் கையெழுத்து போட்டுள்ளார்.
இது உங்களுக்காகத்தான் அப்பா என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் எப்படி 170-க்கு 171 மதிப்பெண் எடுத்தேன் என்பதை அவர் தெளிவாக குறிப்பிடவில்லை. ஜெப்ரி ப்ராங்கல், ஹார்வர்டில் பணியாற்றும் சர்வதேச முன்னணிப் பொருளாதார பேராசிரியர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியைக் கண்ட பலரும் 170-க்கு 171 மதிப்பெண்ணா அது எப்படி சாத்தியம் என்று ஆச்சரியப்பட்டதுடன், அதற்கான விளக்கத்தை கொடுக்கும் படி கேட்டு வருகின்றனர்.
பிரித்தானியாவில் முட்டை திடீரென வெடித்ததால் இளம்பெண் தற்காலிகமாக கண் பார்வையை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Newcastle நகரை சேர்ந்தவர் கோர்ட்னி வுட் (19). இவர் கடந்த 26ஆம் திகதி பாக்சிங் தினத்தன்று தனது வீட்டில் இருந்த மைக்ரோ ஓவன் உள்ளே முட்டையை வைத்துள்ளார்.
பின்னர் முட்டையை அங்கிருந்து வெளியில் எடுத்தபோது திடீரென முட்டை வெடித்தது. இதில் கோர்ட்னியின் கண்கள் பாதிக்கப்பட்ட நிலையில் அவரால் எதையும் பார்க்க முடியவில்லை. இதையடுத்து வலியால் துடித்த கோர்ட்னி முகத்தில் குளிர்ந்த நீரை ஊற்றி கொண்டபின் நண்பருக்கு போன் செய்துள்ளார். இதன்பின்னர் இருவரும் மருத்துவமனைக்கு சென்றனர்.
அங்கு செய்யப்பட்ட பரிசோதனையில் கோர்ட்னியின் இரண்டு கண்களும் பாதிக்கப்பட்டதும், ஆனால் இது தற்காலிகமானது தான் எனவும் தெரியவந்தது. சில நாட்கள் மருத்துவமனையில் கோர்ட்னி தங்கி சிகிச்சைபெற்ற நிலையில் வலது கண் பார்வை முழுவதுமாக குணமானது. ஆனால் இடது கண்ணில் தொடர்ந்து அவருக்கு பிரச்சனை உள்ளது.
இது குறித்து கோர்ட்னி கூறுகையில், கண் மருந்துகளும், மாத்திரைகளும் எனக்கு கொடுக்கப்பட்டுள்ளது. தினமும் நான் கண் மருத்துவரை சென்று பார்க்கவேண்டும், இடது கண் முழுவதுமாக குணமாக சில வாரங்களோ அல்லது அதற்கு மேலாக கூட ஆகலாம் என மருத்துவர்கள் கூறிவிட்டனர். என் வாழ்க்கையில் நான் அனுபவித்த பயங்கரமான வலி இதுதான், இது போல யாருக்கும் நடக்கக்கூடாது என கூறியுள்ளார்.
வவுனியா புதூர் நாகதம்பிரான் ஆலயத்திற்குச் செல்லும் வீதியில் சந்தேகத்திற்கிடமான நடமாட்டம் இருப்பதாக கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் நேற்று இரவு சென்ற பொலிசாரை கண்ட சந்தேக நபர் தனது கையிலிருந்து பொதியை தூக்கி எறிந்துவிட்டு ஓடித்தப்பியுள்ளார். இதையடுத்து பொதியை பார்வையிட்ட பொலிசாருக்கு பேரதிச்சியளித்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
நேற்று இரவு 7.30 மணியளவில் புதூர் நாகதம்பிரான் ஆலய வீதியில் சந்தேகத்திற்கிடமான நடமாட்டம் இடம்பெறுவதாக புளியங்குளம் பொலிசாருக்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து பொலிசார் அப்பகுதிக்கு சிவில் உடையில் நான்கு பேர் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர்.
இதையடுத்து அவ்வீதியில் சென்ற இனந்தெரியாத நபர் ஒருவர் தனது கையில் வைத்திருந்த மர்மப் பொதியை தூக்கி எறிந்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிச் சென்றுள்ளார். பொலிசார் அவரைத்துரத்திச் சென்றபோதும் அவர் தலைமறைவாகியுள்ளார்.
இந்நிலையில் குறித்த பொதியை பொலிசார் பார்வையிட்டபோது அதனுள் கைத்துப்பாக்கி அதற்குரிய ரவைகள், கைக்குண்டுகள் நான்கு, ஸ்மாட் கைத்தொலைபேசிகள் 2 அதற்குரிய மின்கலத்துடனான மின் வழங்கி என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து பொலிசார் புளியங்குளம் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு தகவல் வழங்கியுள்ளனர். இந்நிலையில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உதவிப் பொலிஸ்மா அதிபருக்கு தகவல் வழங்கியதுடன் இராணுவத்தினர், விஷேட அதிரடிப்படையினர் , மோப்ப நாய்களுடன் வரவழைக்கப்பட்டு இரவு எட்டு மணியளவில் சம்பவ இடத்திற்குச் சென்றதுடன் அப்பகுதி பொலிசாரின் பூரண கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளதுடன் தேடுதல் நடவடிக்கையும் முடக்கிவிடப்பட்டுள்ளதுடன் குறித்த சந்தேக நபர் ஒருவரைத் தேடி வலைவிரித்துள்ளனர்.
எனினும் இன்று மதியம் 12 மணியரையும் பொலிசார் மற்றும் இராணுவத்தினரின் நடவடிக்கை முடிவிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. எனினும் சந்தேக நபர் எவரும் இன்று மாலை வரையில் கைது செய்யப்படவில்லை.
ஸ்மாட் கைத்தொலைபேசியின் விபரத்தினை வைத்துக்கொண்டு விசாரணை மேற்கொள்ளப்பட்ட போது தொலைபேசி சிம் அட்டைக்குரிய நபர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் என்று ஆரம்பக்கட்ட விசாரணைகளின்போது தெரியவந்துள்ளதாகவும் எனினும் குறித்த சந்தேக நபர் 35வயது தொடக்கம் 40வயதிற்குட்பட்டவர் என்றும்,
அவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறையைச் சேர்ந்தவராக இருக்கக்கூடும் என்று பொலிசார் சந்தேகம் தெரிவித்துள்ளதுடன் குறித்த நபர் கைத்துப்பாக்கியை இயக்கி தாக்குதல் மேற்கொள்வதற்கு தயார் நிலையில் காணப்பட்டுள்ளதாகவும் பொலிசாரை அல்லது இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் குறித்த நபர் வந்திருக்கலாம் என்று பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்நடவடிக்கைக்கு வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுர அபேயவிக்கிரம தலைமையில் கீழ் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரி.எம்.எஸ்.எம்.தென்னக்கோன், புளியங்குளம் பிரிவு உதவி பொலிஸ் அதிகாரி பொன்சேகா ஆகியோரின் கண்காணிப்பில் புளியங்குளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் கீழ் பொலிஸ் உத்தியோகத்தர்களான பண்டார, ரத்நாயக்க, ஜெயலத், ரமேஷ், அத்தநாயக்க, ஹேரத், சேனாரத்ன ஆகியோர் ஈடுபட்டுள்ளதாக புளியங்குளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சுபுன் விதானகே தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில், கட்டப்பட்டு வரும், 26 மாடிகளைக் கொண்ட ராணுவக் குடியிருப்பின் 19-வது மாடியில் இருந்து மனைவியைத் தூக்கி வீசி கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் தாழம்பூரில், 26 மாடிகளைக் கொண்ட ராணுவக் குடியிருப்பு கட்டுமானப் பணி நடந்து வருகிறது.
கட்டுமானப் பணியில், ஜார்க்கண்டைச் சேர்ந்த சந்தோஷ்குமார், பியூலாதேவி ஆகியோர் ஒப்பந்தத் தொழிலாளர்களாக அங்குள்ள கூடாரத்தில் தங்கி வேலைபார்த்து வந்தனர். கடந்த 27-ந் திகதி 19-வது மாடியில் பணியில் இருந்த பியூலா தேவி, தவறி விழுந்து இறந்ததாக கூறப்பட்ட நிலையில் இது குறித்து அதிகாரிகள் விசாரித்தனர்.
அப்போது இச்சம்பவத்தில் பொலிசாருக்கு சந்தேகம் ஏற்பட்ட நிலையில் பியூலாதேவி கணவர் சந்தோஷ் குமாரைப் பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார். சம்பவம் நடந்த அன்று, 19-வது மாடியில் துப்புரவுப் பணியில் ஈடுபட்ட பியூலாதேவியிடம், சந்தோஷ் குமார் வாக்குவாதம் செய்ததை நேரில் பார்த்ததாக சிலர் தெரிவித்தனர்.
இதையடுத்து, அவரிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் பியூலாதேவியை தலையில் அடித்து 19-வது மாடியில் இருந்து தூக்கி வீசி கொலை செய்ததை சந்தோஷ்குமார் ஒப்புக்கொண்டார்.
கடந்த 3 மாதமாக அங்கு தங்கி இருக்கும் நிலையில், பியூலாதேவி கட்டுமானப்பணியில் ஈடுபட்டுள்ள மற்ற தொழிலாளர்களுடன் சகஜமாக சிரித்து பேசிவந்ததாக கூறப்படுகிறது. அப்படி பழகக் கூடாது என்று கணவர் எச்சரித்தும் தனது பழக்கத்தை தொடர்ந்துள்ளார் பியூலாதேவி.
சம்பவத்தன்றும் ஒருவரிடம் அவர் சிரித்து பேசியதால், தங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ள சந்தோஷ்குமார், அப்போது உண்டான ஆத்திரத்தில் மனைவியின் தலையில் தாக்கியதோடு, அவரை 19-வது மாடியில் இருந்து தூக்கி வீசி கொடூரமாக கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து பொலிசார் சந்தோஷ்குமாரை கைது செய்தனர்.
தமிழகத்தில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுப்பட்டவர்களை அரிவாளுடன் விரட்டியடித்த பெண்ணிற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
கோவை மாவட்டம் துடியலூர் அடுத்துள்ள பன்னிமடை ஸ்ரீ வாரி கார்டன் பகுதியில் வசிப்பவர் ஸ்ரீனிவாச பிரபு. இவருக்கு கவிதா என்ற மனைவி உள்ளார், இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் இவர்கள் சொந்த ஊருக்கு சென்றிருந்த நிலையில், 31ஆம் திகதி அதிகாலை 1 மணியளவில் இவர்கள் வீட்டில் திருடர்கள் புகுந்துள்ளனர்.
அப்போது ஸ்ரீனிவாச பிரபு வீட்டின் அருகில் வசிக்கும் மலர்விழி என்பவர், இரவில் நாய் சத்தம் போடுவதால் யானைகள் வந்திருக்குமோ என்ற பயத்தில் தனது வீட்டில் உள்ள சி.சி.டி.வி கேமராவைப் பார்த்துள்ளார்.
அப்போது அதில், ஸ்ரீனிவாச பிரபுவின் வீட்டினுள் ஒருவர் செல்வதைப் பார்த்த மலர்விழிக்கு சந்தேகம் வரவே, உடனடியாக கவிதாவிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.
அவர் நாங்கள் வீட்டில் இல்லையே என்று பதட்டமடைய மலர்விழி, அவரது கணவர் மற்றும் ஹரிஸ் என்பவரையும் அழைத்துக்கொண்டு கையில் அரிவாளுடன் ஸ்ரீனிவாச பிரபு வீட்டுக்குச் சென்றுள்ளார்.
வீட்டின் அருகே சென்றதும், திருடர்கள் உள்ளே இருப்பதை புரிந்து கொண்ட அவர்கள், திருடன் திருடன் என கூச்சலிட, உள்ளே இருந்த திருடர்கள் பதறியடித்து அங்கிருந்து காம்பவுண்ட் சுவர் எகிறி குதித்து தப்பிச் சென்றிருக்கிறார்கள்.
இவர்களும் அரிவாளுடன் துரத்த, மின்னல் வேகத்தில் திருடர்கள் தப்பிவிட்டனர். அதன் பின் இந்த தகவல் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த பொலிசார்
வீட்டில் சோதனை செய்தபோது, வீட்டின் பீரோவில் இருந்த செயின், மோதிரம், கம்மல், வளையல் உள்ளிட்ட நகைகளை அவர்கள் திருடியிருப்பது தெரியவந்தது. அவை சுமார் 2 லட்சம் மதிப்புள்ள 10 பவுன் நகைகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், திருடர்கள் நிறுத்தி வைத்திருந்த டூவிலரை சோதனை செய்தபோது டூவிலரில் ஒரு பையில் நகைகள் இருந்துள்ளதாகத் தெரிகிறது.
இதை போலீஸார் எடுத்துக்கொண்டு ஸ்ரீனிவாச பிரபு கொடுத்த புகாரில் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருடர்களைத் குடும்பத்துடன் தைரியமாக விரட்டிய மலர்விழிக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
வவுனியாவில் வீதியால் சென்றபெண்ணின் சங்கிலியை அறுத்துச்சென்ற சம்பவம் ஒன்று வவுனியா மயிலங்குளம் பகுதியில் நேற்றுமாலை 6 மணியளவில் நடைபெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
வவுனியாவிலிருந்து ஆசிகுளத்தில் உள்ள தனது வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் ஆசிரியர் மயிலங்குளம் பகுதியில் சென்றுகொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இனம்தெரியாத இரு நபர்கள் அவர் அணிந்திருந்த தங்க சங்கிலியை அறுத்துச்சென்றுள்ளனர்.
சம்பவத்தில் நிலை குலைந்த பெண் ஆசிரியர் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்துள்ளார். அதனால் சிறு காயங்கள் ஏற்பட்டநிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அறுத்துசெல்லபட்ட தங்கச்சங்கிலி ஒரு பவுண் மதிப்பிலானது என்று கூறப்படுகின்றது.
சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசாருக்கு தெரியப்படுத்தபட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற தந்தைக்கு துணையாக இருந்த சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முகாமைச் சேர்ந்த ஒருவர் கடந்த மாதம் 26-ம் திகதி விபத்தில் சிக்கிய நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அந்த நபருக்கு உதவியாக அவரது 10 வயது மகள் மருத்துவமனையில் இருந்துள்ளார். இந்நிலையில் மருத்துவமனைக்கு எதிராக உள்ள பேக்கரி ஒன்றில் தன் தந்தைக்குத் தேவையானவற்றை அவ்வப்போது சிறுமி வாங்கினார்.
பேக்கரியில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்த சரவணன் என்பவர் அந்தச் சிறுமியிடம் பரிவாகப் பேசி அவரைப் பற்றிய விவரங்களை அறிந்துள்ளார். வழக்கம் போல் டீ வாங்கச் சென்ற அந்தச் சிறுமிக்கு தனது பணத்தில் பன் வாங்கிக் கொடுத்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்குள்ள பழைய கழிப்பறைக்குக் கூட்டி செல்லப்பட்ட அந்தச் சிறுமியை சரவணன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அந்த சிறுமி சத்தம் போட்டுள்ளார்.
சிறுமியின் அலறலைத் தொடர்ந்து அங்கிருந்து சரவணன் தப்பி ஓடிவிட்டார். சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட சரவணனை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மன்னாரில் மீட்கப்பட்டுவரும் மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் காபன் பரிசோதனைக்காக எதிர்வரும் 30ஆம் திகதி புளோரிடாவிற்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ இன்று தெரிவித்துள்ளார்.
மன்னார் மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் கடந்த 10 தினங்களாக இடை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று மீண்டும் 122ஆவது நாளாகவும் அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் குறித்த அகழ்வு பணிகள் தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
இன்றைய தினம் மனித எலும்புக்கூடுகள் அகழ்வு செய்யப்படவில்லை. காலநிலை மாற்றத்தினால் ஏற்பட்ட மழை காரணமாக அகழ்வு செய்யப்படும் பகுதி பாதிப்படைந்திருந்தது.
இந்நிலையில் அவற்றை சீர் செய்து அகழ்வு இடம்பெறும் பகுதியைச் சுற்றி மறைப்பு வேளி அமைக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
மன்னார் நீதவானுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. குறிப்பாக அகழ்வு மேற்கொள்ளப்படும் பகுதிகளில் உள்ள வீதிகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.
மேலும் பெற்றுக்கொள்ளப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் காபன் பரிசோதனைக்காக புளோரிடாவுக்கு இம்மாதம் 30ஆம் திகதி அனுப்பி வைக்கப்படவுள்ளது.
இதன்போது மரணம் தொடர்பிலும் ஏனைய விடயங்கள் தொடர்பாகவும் அறிந்து கொள்ள முடியும். மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் மன்னார் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் தற்போது வரை 280 மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
மேலும் அவற்றில் 274 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டு மன்னார் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளில் 20 மனித எலும்புக்கூடுகள் சிறுவர்களுடையது என நம்பப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இம்முறை உயர்தர பரீட்சையின் கலை பிரிவில் முதலாம் இடத்தை பிடித்த மாணவி தொடர்பில் முன்னாள் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார்.
முதலாம் இடத்தை சர்வதேச பாடசாலை மாணவி ஒருவரே பெற்றுள்ளார். அவர் சூழ்ச்சியின் மூலம் முதலாம் இடத்தை பிடித்துள்ளதாக பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
இந்த கருத்து தொடர்பில் முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணி வீரர் மஹேல ஜயவர்தன கருத்து வெளியிட்டுள்ளார். டுவிட்டர் பதிவொன்றின் ஊடாக அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
அவரது டுவிட்டர் பதவில், “பந்துல குணவர்தவனின் கருத்து தொடர்பில் நான் எனது வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன். இலவசமாக அல்லது கட்டணம் செலுத்தி கல்வி பயின்றாலும், அனைத்து சந்தர்ப்பங்களிலும் எதிர்கால சந்ததியினரை தைரியப்படுத்த வேண்டும்.
சித்தியடைந்த அனைத்து மாணவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். விசேடமாக அகில இலங்கை ரீதியில் ஐந்தாம் இடம்பெற்ற மாணவிக்கு எனது வாழ்த்துக்கள். சிறப்பாக செயற்பட்டுள்ளீர்கள்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐரோப்பிய நாடான இத்தாலியில் புத்தாண்டு பிறந்து சில நொடிகளில் பிறந்த குழந்தைகள் சாதனை குழந்தைகளாக பார்க்கப்படுகிறது.
உலகமெங்கும் நேற்று புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டியிருந்தன. இதன்போது இத்தாலியின் வைத்தியசாலையில் நான்கு குழந்தைகள் பிறந்துள்ளன.
இதில் இலங்கையை சேர்ந்த தம்பதிக்கு பிறந்த இதலோ பண்டார என்ற குழந்தையும் உள்ளடக்கும்.
புத்தாண்டு ஆரம்பித்து 10வது நொடிப் பொழுதில் இத்தாலியின் ரோம் தூய பிலிப் நேரி வைத்தியசாலையில் 4.8 கிலோ கிராம் நிறையுடன் இதாலோ என்று இலங்கை குழந்தை பிறந்துள்ளது. இந்தக் குழந்தை 01.01.2019 திகதியில் 00.00.10 நொடிப்பொழுதில் பிறந்துள்ளது.
பல வருடங்களாக இத்தாலியின் ரோம் நகரில் வாழ்ந்த பிசாத பண்டார மற்றும் மதுபாஷினி யாப்பா தம்பதிக்கு இந்த குழந்தை பிறந்துள்ளது. அதன் காரணமாக கௌரவமாக இத்லோ பண்டார என குழந்தைக்கு பெயரிடப்பட்டுள்ளது.
இலங்கை பெற்றோருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்கு ரோம் நகர மேயர் வர்ஜினியா ரெஜ்ஜி நேற்று காலை வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.
இலங்கையின் ஹொரனை பிரதேசத்தை சேர்ந்த இந்த குடும்பத்தில் பல வருடங்களாக ரோம் நாட்டில் தொழில் செய்வதாக குறிப்பிடப்படுகின்றது.
ஹல்துமுல்லை, சோரகுனே ஒக்வேல் தோட்டத்தில் வசித்து வந்த 69 வயதான நபர், கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அவரது 72 வயதான மனைவியை ஹல்துமுல்லை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஓய்வுபெற்ற தோட்டத் தொழிலாளியான முத்துசாமி பெரியசாமி என்ற நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
தந்தை உயிரிழந்துள்ளதாக மகன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். இதனையடுத்து மரண விசாரணைக்கு சென்றிருந்த திடீர் மரண விசாரணை அதிகாரி கே.ஆர்.ரத்தனவீர, இந்த மரணம் ஒரு கொலை சம்பவம் என கூறியதால், நீதவான் விசாரணைகளுக்கு உத்தரவிடப்பட்டது.
நீதவான் விசாரணைகளின் உத்தரவுக்கு அமைய மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட ஹல்துமுல்லை பொலிஸார், கொலை செய்யப்பட்ட நபர் மதுபானத்திற்கு அடிமையாகி இருந்ததாகவும் பணம் தொடர்பாக மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து மனைவியை சந்தேகத்தின் பேரில் கைது செய்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். கணவன் நித்திரையில் இருக்கும் போது வாயை மூடி,கயிறை பயன்படுத்தி கழுத்தை நெரித்து கொன்றதாக மனைவி பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
கொலைக்கு பயன்படுத்திய கயிற்றை வழக்கு தடயமாக பொலிஸார் கைப்பற்றினர். சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆசியாவில் பெறுமதியற்ற நாணயமற்ற பட்டியலில் இலங்கை ரூபாயும் இணைந்துள்ளதாக சர்வதேச ஊடாக ரொய்ட்டர் செய்தி சேவை அறிவித்துள்ளது.
கடந்த வருடம் ரூபாயில் ஏற்பட்ட பாரிய வீழ்ச்சி காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2ஆம் திகதி அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி 153.46 ரூபாவாக காணப்பட்டது. எனினும் அது வருட இறுதியில் 184.63 ரூபாயாக பதிவாகியுள்ளது.
அதற்கமைய கடந்த வருடத்தில் அமெரிக்க டொலருடன் ஒப்பிடும் போது நூற்றுக்கு 19 வீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலைமை அடுத்த வருடத்தில் நாட்டின் பொருளாதாரத்தை எந்தளவு பாதிக்கும் என்பது தொடர்பில் பொருளாதார வல்லுனர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
ரூபாவின் பெறுமதியை வலுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கொழும்புப பல்கலைக்கழக பொருளாதார பிரிவின் சிரேஷ்ட பேராசிரியர் பிரியங்க துனுசிஙக தெரிவித்துள்ளார்.
இந்த நிலைமையில் இருந்து தப்பிப்பதற்கு ஏற்றுமதி மற்றும் வெளிநாட்டு முதலீட்டுகளை அவசியம் ஊக்குவிக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.