சம்பந்தனுடன் முரண்பட விரும்பவில்லை : எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் மனம் திறந்த மகிந்த!!

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இழந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரா.சம்பந்தன் புலம்பிக் கொண்டிருப்பதாக மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அத்துடன், சம்பந்தனின் புலம்பல் சரியா? பிழையா? என்பதை அவரின் மனச்சாட்சியே சொல்லட்டும். நாங்கள் அவருடன் முரண்பட விரும்பவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

நாடாளுமன்றத்தில் நான் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினராகவே தொடர்ந்து செயற்படுகின்றேன்.

தற்போது எதிரணியில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கே அதிக உறுப்பினர்கள் உள்ளனர். இதனால் பிரதான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை நாம் பெற்றுள்ளோம்.

அத்துடன், எதிர்க்கட்சித் தலைவர் பதவியும் எம்மைத் தேடி வந்தது. எவரிடமும் மண்டியிட்டு இந்தப் பதவியை நாம் பெறவில்லை.

எல்லாவற்றுக்கும் ஆமாம் போட்டு அடிமைகளாக இருக்க நாம் இரும்பவில்லை. பலமான எதிர்க்கட்சியாக திகழ்வோம் என கூறியுள்ளார்.

வவுனியாவில் மழையினால் இயல்புநிலை பாதிப்பு!

வவுனியாவில் இன்று காலையில் இருந்து மழை மற்றும் கடும் குளிருடனான காலநிலை நிலவி வருகின்றது. இதனால் மக்களின் இயல்புநிலை பாதிப்படைந்துள்ளது.

மேலும் கடந்த சில நாட்களாக கடும் குளிரான காலநிலை நீடித்து வருகின்றது. இன்று காலை முதல் இடைவிடாது மழை பெய்துவருவதுடன் மக்களின் இயல்பு நிலையும் பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்தும் மழையுடனான காலநிலை நிலவி வருவதால் வர்த்தக நிலையங்களில் மக்கள் வருகை குறைந்து காணப்படுகின்றது. மாணவர்களும் இக் காலநிலையால் பாதிப்படைந்துள்ளனர்.

பிரதமரின் விசேட அறிவித்தல் : எரிபொருட்களின் குறைப்பு விபரங்கள்!!

எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உடனடியாக குறைக்கப்படுவதாக பிரதமர் சபையில் சற்று முன்னர் அறிவித்துள்ளார்.

இன்று காலை 10.30 மணிக்கு நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமாகியிருந்தது. இதில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உரையாற்றும் போதே குறித்த அறிவிப்பினை விடுத்துள்ளார்.

அத்துடன் ஊடகங்கள் மீது பிரதமர் கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார். தற்போது கறுப்பு ஊடகங்கள் தான் நாட்டில் செயற்படுகின்றன.

ஜனாதிபதிக்கு நான் அனுப்பாத பெயர்களை கூட ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. அது எவ்வாறு என்று தெரியவில்லை.

ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதிக்கு பின்னர் ஊடகங்கள் மாறிப்போயுள்ளன. கறுப்பு ஊடகங்கள் குறித்து சபையில் விவாதம் நடத்த வேண்டும்.

ஊடகங்களை நாம் இல்லாமல் செய்ய முயலவில்லை. ஆனால் கறுப்பு ஊடகங்களை வெளிப்படுத்த வேண்டும்.

நாங்கள் தான் ஊடக சுதந்திரத்திற்காக போராடினோம் எனினும் கறுப்பு ஊடகங்களை வெளிப்படுத்துவதற்கு ஜனவரி மாதம் விவாதம் ஒன்று நடத்தப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இன்று நள்ளிரவு முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகள் குறைக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.

இன்று நாடாளுமன்றத்தில் இடைக்கால கணக்கறிக்கை சமர்ப்பிக்கும் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

எரிபொருள விலை எவ்வாறு குறைவடையும் என்பதற்கான விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

அதற்கமைய ஒரு லீற்றர் ஒக்டேன் 92 மற்றும் ஒக்டேன் 96 பெற்ரோல் 10 ரூபாவினாலும், ஒக்டேன் டீசல் ஒரு லீற்றர் 5 ரூபாவினாலும் குறைக்கப்படவுள்ளது.

சுப்பர் டீசல் ஒரு லீற்றர் 10 ரூபாவினால் குறைவடைவதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலக சந்தையில் எரிபொருள் விலையில் பாரிய வீழ்ச்சியடைந்துள்ளமை காரணமாக இந்த விலைக் குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வவுனியா ஓமந்தை பொலிசாரால் போதை கலந்த இனிப்புகள் மீட்பு : ஒருவர் கைது!!

 

 

வவுனியா ஓமந்தை பொலிஸாரினால் நேற்று மாலை போதை கலந்த இனிப்பு பண்டங்கள் ஒரு தொகுதி கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அதனை கொண்டு சென்ற ஒருவருடன் வாகனமொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து சிரேஸ்ட பிரதிபொலிஸ் மா அதிபர் ரொசான் பெர்ணான்டோவின் வழிநடத்தலில் வன்னி பிரதி பொலிஸ் மா அதிபர் அனுர அபயவிக்கிரமவின் கண்காணிப்பில் பொலிஸ் அத்தியட்சகர் ஜெனத் பொன்சேகாவின் வழிகாட்டலில்,

ஓமந்தை பொலிஸ் நிலைய உதவி பொலிஸ் பொறுப்பதிகாரி வசந்தா சேனாநாயக்கவின் தலைமையிலான பொலிஸ் சார்ஜன் இலங்க ரட்ண, வன்னிநாயக்க மற்றும் சமிந்த ஆகியோர் நடத்திய வாகன சோதனையின்போது கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்லப்பட்ட போதை இனிப்பு பண்டங்களே கைப்பற்றப்பட்டன.

போதை கலக்கப்பட்ட பல்வேறு வகையிலான சுமார் 7 ஆயிரம் இனிப்புப் பண்டங்களே இவ்வாறு மீட்கப்பட்டதாக தெரிவித்த ஓமந்தை பொலிஸார் கைதுசெய்யப்பட்ட வரக்காபொலவை சேர்ந்த நபரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவுள்ளதுடன் இனிப்புப் பண்டங்களை இரசாயன பகுப்பாய்வுக்கும் உட்படுத்தவுள்ளதாக தெரிவித்தனர்.

2019 ஆம் ஆண்டு இந்த 7 ராசிக்காரர்களுக்கு சிறப்பு : உங்கள் ராசியும் உள்ளதா?

 

7 ராசிக்காரர்களுக்கு சிறப்பு

2019 ஆம் ஆண்டில் கீழே கூறப்பட்டுள்ள ராசிக்காரர்களுக்கு திருமண பொருத்தம் கைகூடி வீட்டில் சுபகாரியங்கள் நடைபெறும்.

மேஷம் : செவ்வாயை ராசி நாதனாகக் கொண்ட மேஷ ராசிக்காரர்களுக்கு வீரத்தோடு விவேகமும் அதிகம் இருக்கும். குருபகவான் இந்த ஆண்டு சாதகமான நிலையில் சஞ்சரிக்கவில்லை. எட்டாம் இடத்தில் உள்ள குருபகவான் உங்களின் குடும்ப ஸ்தானத்தையும், சுக ஸ்தானத்தையும் பார்க்கிறார்.

விரைய ஸ்தானமான 12வது வீட்டின் மீதும் குருவின் பார்வைபடுகிறது. வரும் ஆண்டு பிப்ரவரி மாதம் நிகழ உள்ள ராகு கேது பெயர்ச்சி பலவித நன்மைகளையும், பணவரவையும் தர உள்ளது. எட்டாம் இடத்தில் இப்போது உள்ள குருபகவான் 2019ஆம் ஆண்டு இறுதியில் அக்டோபர் 28ஆம் தேதி தனுசு ராசியில் இடப்பெயர்ச்சி அடைகிறார். இது ஒன்பதாம் இடம் என்பதால் குருவின் பார்வை 5ஆம் பார்வையாக மேஷ ராசியின் மீது விழுகிறது.

எனவே 2019 அக்டோபர் மாதத்திற்குப் பின்னர் குருபலன் வருவதால் திருமண யோகமும், குழந்தை பாக்கிய யோகமும் கிடைக்கிறது. தேய்பிறை அஷ்டமி திதியில் ஸ்ரீ காலபைரவருக்கு சிவப்பு நிற துணியில் மிளகு மூட்டை கட்டி தீபம் ஏற்றலாம். சனிக்கிழமை ஆஞ்சநேயரை தரிசனம் செய்யலாம் நன்மைகள் நடைபெறும்.

ரிஷபம் : காதல் நாயகன் சுக்கிரனை ராசி நாதனாகக் கொண்ட ரிஷப ராசிக்காரர்களே. 2018ஆம் ஆண்டில் அஷ்டமத்து சனி, ஆறாம் இடத்து குருவினால் பாதிக்கப்பட்டிருந்தீர்கள். 2019ஆம் ஆண்டு உங்களுக்கு நன்மைகள் நிறைந்த ஆண்டாக இருக்கப் போகிறது. குருவின் பார்வை உங்கள் ராசியின் மீது சம சப்தமாக விழுகிறது.

குருவின் ஏழாவது பார்வை திருமண யோகத்தை கொடுக்கிறது. காதல் மலரும் காலம் இது. மனதுக்குள் பட்டாம்பூச்சிகள் பறக்கும். உற்சாக நினைவுகளுடன் வலம் வருவீர்கள். நீண்ட காலம் தடைபட்டு வந்த திருமணம் நடைபெறும். குழந்தை பாக்கியம் கிடைக்காமல் ஏங்கித்தவித்தவர்களுக்கு இந்த ஆண்டு வீட்டில் தொட்டில் ஆடும். சிலர் தங்களின் பெற்றோர்களுக்கு 60ஆம் கல்யாணம், பீமசாந்தி நடத்தி வைப்பீர்கள்.

இப்போது சனி எட்டில் இருப்பதால் சிலருக்கு அஷ்டம சனியின் பாதிப்பும் இருக்கிறது. 2019 அக்டோபர் மாதம் குரு பெயர்ச்சி அஷ்டம ஸ்தானத்திற்கு வருவதால் சிலருக்கு பாதிப்பு ஏற்படும். கடன் பிரச்சினைகளும், நஷ்டமும் ஏற்படம் என்பதால் திருமணத்தை வரும் அக்டோபர் மாதத்திற்குள் நடத்தி முடித்து விடுங்கள். குருவாயூரப்பன் கோவிலுக்கு சென்று குழந்தை கிருஷ்ணரை வணங்கி வாருங்கள் நன்மையே நடைபெறும்.

கடகம் : கடகம் சந்திரனை ராசி நாதனாகக் கொண்ட கடக ராசிக்காரர்களே… 2018ஆம் ஆண்டு உங்களுக்கு அற்புதமான ஆண்டாக அமைந்துள்ளது. சனிப்பெயர்ச்சி அமோகமாக இருந்தது. அடுத்து வந்த குருப்பெயர்ச்சி அற்புதமாக இருந்தது. 2019ஆம் ஆண்டு நிகழ இருக்கும் ராகு கேது பெயர்ச்சி அற்புத பலன்களை அளிக்கப் போகிறது. பணவரவு அமோகமாக இருக்கும். காதல் கனிந்து திருமணத்தில் முடியும் காலம் இதுவாகும்.

திருமணம் முடிந்தவர்களுக்கு இந்த ஆண்டு குழந்தை பிறக்க வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில் அக்டோபர் மாதம் நிகழப்போகும் குருப்பெயர்ச்சி ஆறாம் இடத்திற்கு வர உள்ளதால் உங்களின் பிள்ளைகளுக்கு திருமணம் உள்ளிட்ட சுப காரியங்கள் நடத்தி வைப்பீர்கள். பௌர்ணமி மற்றும் அமாவாசை திதிகளில் சிவ ஆலயம் சென்று அர்ச்சனை செய்வது நல்லது. செவ்வாய்கிழமை முருகன் ஆலயத்திற்கு சென்று பாலபிஷேகம் செய்யலாம்.

கன்னி : கன்னி புத்திசாலித்தனத்திற்கு அதிபதியான புதனை ராசிநாதனாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களே. 2018ஆம் ஆண்டு அர்த்தாஷ்டம சனி ஒரு பக்கம் ஆட்டி படைக்க குருவின் சஞ்சாரமும் சாதகமாக இல்லை. கணவன் மனைவி இடையே சண்டை சச்சரவுகள் அதிகமாக இருக்கும். நிகழ இருக்கும் ராகு கேது பெயர்ச்சி சில சாதகமான பலன்களை ஏற்படுத்துவார். உங்கள் ராசிக்கு ஏழாம் வீடான மீனத்தை குருபார்வையிடுவதால் உங்களுக்கு காதல் கைகூடி வரும்.

திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் கைகூடி வரும். சிலர் வீட்டில் தொட்டில் ஆடும் குவா குவா சத்தம் கேட்கும். அக்டோபர் மாதம் நிகழ உள்ள குருப்பெயர்ச்சி உங்களுக்கு சுமாரான பலன்களையே தரப்போகிறார் என்பதால் கடவுளை நம்புவதைத் தவிர வேறு வழியில்லை.

நல்ல தசாபுத்தி நடந்தால் உங்களுக்கு அதிகம் நன்மைகள் நடைபெறும். ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாற்றவும். புதன்கிழமை பெருமாள் கோவிலுக்கு செல்லவும்.

விருச்சிகம் : விருச்சிகம் செவ்வாயை ராசிநாதனாகக் கொண்ட வீர பராக்கிரமம் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களே… கடந்த சில ஆண்டுகளாகவே ஏழரை சனியின் பிடியில் சிக்கித்தவித்து வருகிறீர்கள். இப்போது பாத சனி வேறு பாடாய் படுத்தி எடுத்து வருகிறது.

ஜென்ம குரு உங்கள் ராசியில் இருப்பதால் குடும்பத்தில் சின்னச் சின்ன பிரச்சினைகள் வந்து செல்லும் என்றாலும் ஏழாம் இடத்தையும், ஐந்தாம் இடம், ஒன்பதால் இடத்தையும் குரு பார்வையிடுவதால் திருமணம் உள்ளிட்ட சுப காரியங்களை செய்ய முயற்சி செய்யலாம் வெற்றிகள் கிடைக்கும். திருமணம் நடைபெற்றவர்களுக்கு குழந்தை பேறு கிடைக்கும். 2019 ஆம் ஆண்டு ராகு கேது பெயர்ச்சி உங்களுக்கு நன்மைகளை தரப்போகிறார்.

2 ஆம் இடத்தில் கேது அமர்வது சாதகமான அம்சம். பணவரவு அதிகமாகும் சனிபகவான் குடும்பஸ்தானத்தில் இருந்த போதிலும் அடுத்த ஆண்டு கூடவே கேது அமரப்போகிறார் அக்டோபர் குரு பெயர்ச்சி நிகழ்ந்து சனியோடு குடும்ப ஸ்தானத்தில் குரு அமர்வது அதிக சாதகமான அம்சமாகும்.

மேலும் நன்மைகள் நடைபெற ராகு காலத்தில் சரபேஸ்வரரை வணங்குங்கள். பிரதோஷ காலத்தில் நந்தி பகவானுக்கு அர்ச்சனை செய்யுங்கள் சிவபுராணம் படியுங்கள் அதிக நன்மை நடைபெறும்.

மகரம் : மகரம் சனிபகவானை ஆட்சி நாதனாகக் கொண்ட மகரம் ராசிக்காரர்களே… ஏழரை சனியின் பிடியில் சிக்கியுள்ளீர்கள். விரைய சனி என்றாலும் குருபகவான் உங்களை பாதுகாத்து வருகிறார். பணவரவு அமோகமாக இருக்கும். கடன்கள் வசூலாகும். அடகு வைத்த நகைகளை மீட்பீர்கள்.

குருவின் பார்வை ராசிக்கு ஏழாம் வீட்டின் மீது விழுவதால் தடைபட்டிருந்த திருமணம் கைகூடி வரும். இதுநாள் வரை சிங்கிள் என்று ஸ்டேட்டஸ் போட்டவர்கள் இனி தைரியமாக உங்கள் ஜோடியுடன் ஹனிமூன் கிளம்பலாம். 2019ஆம் ஆண்டு நிகழ உள்ள ராகு கேது பெயர்ச்சி சில நன்மைகளை ஏற்படுத்தும்.

குருபகவான் உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்திற்கு அக்டோபர் மாதம் வர உள்ளது சாதகமற்ற அம்சம் என்றாலும் உங்களின் விரைய செலவுகளை சுப செலவுகளாக மாற்றுங்கள். பாதிப்புகள் குறைய ஆஞ்சநேயருக்கு துளசி மாலை அணிவித்து அர்ச்சனை செய்யவும்.

மீனம் : மீனம் குருபகவானை ஆட்சி நாதனாகக் கொண்ட மீனம் ராசிக்காரர்களே… 2018ஆம் ஆண்டு உங்களுக்கு பல நன்மைகளை ஏற்படுத்தியுள்ளது. ஒன்பதாம் இடத்து குரு, பத்தாம் இடத்து சனி என இருந்தாலும் பல நல்ல விசயங்களை பார்த்து இருப்பீர்கள். இதற்குக் காரணம் உங்களின் தசாபுத்தியும், கடவுள் பக்தியும்தான். குருபகவான் உங்கள் ராசியை பார்வையிடுவதால் திருமணம் உள்ளிட்ட சுப காரியங்கள் கைகூடி வரும்.

குழந்தை பாக்கியம் கிடைக்கும். வரவிருக்கும் புத்தாண்டிலும் உங்களுக்கு நன்மைகளே அதிகம் நடைபெறப்போகிறது. பிப்ரவரியில் நிகழ உள்ள ராகு கேது பெயர்ச்சி உங்களுக்கு பல சாதகமான அம்சங்களை தரப்போகிறது. அதே நேரத்தில் அக்டோபரில் நிகழ உள்ள குருப்பெயர்ச்சி உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் அமர்வது சில பாதகமான அம்சங்களை ஏற்படுத்தும். மேலும் நன்மைகள் நடைபெற வியாழக்கிழமைகளில் ராகவேந்திரரை வணங்கவும்.

என்னை நம்பு கீர்த்தனா… நான் எதுவும் செய்யவில்லை : தற்கொலை செய்துகொண்ட கணவனின் உருக்கமான கடிதம்!!

 

தற்கொலை செய்துகொண்ட கணவன்

டெல்லியில் பணிபுரியும் இடத்தில் இருபெண்கள் பாலியல் புகார் கொடுத்ததால், மனமுடைந்து இளைஞர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த 35 வயதான ஸ்வரூப் ராஜ் அமெரிக்க நிறுவனமான ஜென்பேக்ட் நிறுவனத்தின் இந்திய கிளையில் கடந்த 2007ம் ஆண்டிலிருந்து பணிபுரிந்து வருகிறார்.

இவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக அதே நிறுவனத்தில் பணிபுரியும் கீர்த்தனா என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு இருவரும் நொய்டாவில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி பணிபுரிந்து வந்தனர். சமீபத்தில் தான் ஸ்வரூப் ராஜிற்கு பணிஉயர்வு அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் நிறுவனத்தில் பணிபுரியும் இருபெண்கள், ஸ்வரூப் ராஜ் தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக நிறுவனத்தில் புகார் அளித்தனர். இதனால் மனமுடைந்திருந்த கணவனை கீர்த்தனா மரியாதைக்குறைவாக நடத்தியதாக தெரிகிறது.

அந்த சமயம் நிறுவனத்தில் இருந்து ஒரு கடிதம் வந்தது. அதில், “உங்கள் மீது இரண்டு பெண் பணியாளர்களால் பாலியல் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. எனவே இந்த குற்றச்சாட்டு மீதான விசாரணை முடியும் வரை நீங்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுகிறீர்கள்.

இந்த காலகட்டத்தில் உங்கள் பணி குறித்து எதுவும் தெரிவிக்க வேண்டியதில்லை. நீங்கள் வீட்டிலிருந்து வேலை பார்க்க தேவையில்லை. உங்களால் வேறு எந்த நிறுவனத்திலும் பணிக்கு சேர்ந்து பணிபுரிய முடியாது என்ற விதிகள் கண்டிப்பாக உங்களுக்கு பொருந்தும்.” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

பாலியல் புகாரால் ஏற்கனவே மனமுடைந்து காணப்பட்ட ஸ்வரூப் ராஜ், பணியிடை நீக்கத்தால் விரக்தியில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். பணியிலிருந்து வீடு திரும்பிய அவருடைய மனைவி, கணவன் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்து பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், ஸ்வரூப் ராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வீட்டில் சோதனை மேற்கொண்ட போது மனைவிக்கு எழுதி வைத்த உருக்கமான கடிதம் சிக்கியது.

அந்த கடிதத்தில், ஹாய் கீர்த்தனா, உன்னை நான் எவ்வளவு காதலிக்கிறேன் என்பதை தெரிவிக்க விரும்புகிறேன். என் மீது இரண்டு பெண்களால் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது; என்னை நம்பு சத்தியமாக நான் ஏதும் செய்யவில்லை. எனக்குத் தெரியும் இந்த உலகம் இதை புரிந்து கொள்ளும் என்று. நீயும், நம் குடும்பமும் என்னை நம்புங்கள்.

என் மீதான குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை. ஜென்பேக்ட் நிறுவனம் முழுவதற்கும் இது தெரியும், எனினும் யாரையும் எதிர்கொள்ளும் தைரியம் எனக்கு இல்லை. நீ தைரியமாக இருக்கவேண்டும்; மேலும் உன் கணவர் ஏதும் செய்யவில்லை என்ற மரியாதையோடு உன் வாழ்க்கையை வாழ வேண்டும்.

திருமணம் நிச்சயிக்கப்பட்ட அக்காவை துஸ்பிரயோகம் செய்து கொன்ற தம்பி : கண்ணீரில் மூழ்கிய குடும்பம்!!

 

துஸ்பிரயோகம்

புதுச்சேரியில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணை, தம்பி போன்று பழகிய பக்கத்துக்கு வீட்டு இளைஞர் நண்பருடன் சேர்த்து துஸ்பிரயோகம் செய்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி மாநிலம் குயவர் பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் பூபதி – அகிலாண்டேஸ்வரி தம்பியினர். இவர்களுக்கு அம்சப்பிரியா (25) ஒரே மகள் என்பதால், அதிக செல்லம் கொடுத்து வளர்த்துள்ளனர். சமீபத்தில் அவருடைய காதலுக்கு கூட சம்மதம் தெரிவித்து, ஜனவரி மாதம் 27ந் தேதி திருமணத்திற்கு நிச்சயம் செய்தனர்.

இந்த நிலையில் வெளியில் சென்றுவிட்ட வீடு திரும்பிய தம்பதியினர், நீண்ட நேரம் கதவு திறக்கப்படாமல் இருந்ததால் உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்துள்ளனர். அங்கு கழுத்தறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் மகள் உயிரிழந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து கதறி துடித்துள்ளனர்.

இந்த சம்பவம் அறிந்து விரைந்து வந்த பொலிஸார், வீடு உள்பக்கம் தாழ்பாளிடப்பட்டிருந்ததால் தற்கொலையாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையை ஆரம்பித்தனர். ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கையில், ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளதாக தெரியவந்தது.

இதனை கேட்டு அதிர்ந்து நின்ற பொலிஸார், சம்பவத்தன்று அம்சப்பிரியாவின் வீட்டிற்கு சென்ற ஒரே நபரான பக்கத்து வீட்டை சேர்ந்த தீபக்கிடம் விசாரணை மேற்கொண்டனர். ஆனால் பெண்ணின் உறவினர்கள், தீபக்கிற்கு 21 வயது தான் ஆகிறது. அவன் அம்சப்பிரியாவை அக்கா என்று தான் அழைப்பான். இருவரும் அக்கா-தம்பி போல தான் பழகி வந்தார்கள் என கூறியுள்ளனர்.

இதனை ஏற்றுக்கொள்ளாத பொலிஸார் தீபக்கை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று சரியான முறையில் கவனித்தனர். அப்போது வலி தங்க முடியாமல், செய்த தவற்றை தீபக் ஒப்புக்கொண்டான்.

சம்பவம் நடைபெற்ற அன்று, தீபக் தன்னுடைய நண்பனுடன் சேர்ந்து கஞ்சா பிடித்து போதையில் இருந்துள்ளான். அப்போது வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த அம்சப்பிரியாவிடம் பேச்சு கொடுத்தவாறே வீட்டிற்குள் சென்றுள்ளான். வாடா தம்பி என கூறியபடியே அம்சப்பிரியாவும் பேசிக்கொண்டிருந்துள்ளார். சிறிது நேரத்தில் தீபக்கின் நண்பனும் வீட்டிற்குள் வந்துள்ளான்.

இரண்டு பேருமே போதையில் இருப்பதை அறிந்துகொண்ட அம்சப்பிரியா, வெளியில் போகுமாறு இருவரிடமும் கூறியுள்ளார். அந்த சமயம் பார்த்து அம்சப்பிரியாவின் தலைப்பகுதியில் தாக்கி இருவரும் மாறி மாறி துஸ்பிரயோகம் செய்துள்ளனர். இந்த சம்பவம் வெளியில் தெரிந்துவிட கூடாது என்பதற்காக இறுதியில் அவருடைய கழுத்தை கத்தியால் அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

போதையில் தெரியாமல் செய்துவிட்டோம் என விசாரணையில் தீபக் கதறி அழுதுள்ளான். தற்போது இருவரின் மீதும் வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் தப்பி சென்ற அவனுடைய நண்பனையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட இருபெண்கள் : ஐஎஸ் பயங்கரவாதிகள் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ!!

 

அதிர்ச்சி வீடியோ

மொரோக்கோவில் இருபெண்கள் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், ஐஎஸ் பயங்கரவாதிகள் ஒரு வீடியோவினை வெளியிட்டுள்ளனர்.

நார்வே நாட்டை சேர்ந்த 28 வயதான மார்ன் யூலண்ட் மற்றும் அவருடைய பல்கலைக்கழக தோழியும் டென்மார்க்கை சேர்ந்தவருமான லூயிஸா ஜெஸ்பர்சன் (24) கடந்த சில தினங்களுக்கு முன்னர் மயமாகினர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்து தேடுதல் வேட்டை நடத்திய பொலிஸார், வடக்கு ஆப்பிரிக்காவின் டூவல்கலின் மிக உயர்ந்த சிகரத்திற்கு செல்லும் வழியில் ஒரு தனிமையான கிராம பகுதியில், இருவரையும் சடலமாக கண்டெடுத்தனர்.

அவர்கள் இருவரும் கொடூரமாக கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டிருந்தனர். உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாக 3 ஆண்கள் கைது செய்து பொலிஸார் விசாரணையை தீவிரப்படுத்தினர். மேலும், இவர்கள் மூவருக்கும் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருக்கலாம் என டேனிஷ் உளவுத்துறை வியாழனன்று செய்தி வெளியிட்டது.

இந்த நிலையில் தற்போது ஐஎஸ் தீவிரவாதிகள் நான்கு பேர் பேசும் வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், அது அல்லாஹ்வின் விருப்பம். அவர்கள் கடவுளின் விரோதிகள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்களுக்கு மன்னிப்பு கிடையாது என கூறுகின்றனர்.

இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ள நான்கு நபர்களில் கைது செய்யப்பட்ட மூன்று பேர் உள்ளனரா என்பது சரியாக அடையாளம் காணப்படவில்லை. ஆனால் கொலை செய்வதற்கு முன் பயங்கரவாதிகள் எடுத்துக்கொண்ட உறுதிமொழி தான் அந்த வீடியோவாக இருக்கும் எனவும், கொலை செய்யப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக எடுக்கப்பட்டுள்ளது எனவும் டேனிஷ் உளவுத்துறை அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

உலகின் முதல் தலை மாற்று அறுவை சிகிச்சைக்கு ஒப்புக் கொண்ட மனிதரின் முடிவை மாற்றிய காதல்!!

 

முடிவை மாற்றிய காதல்!

ரஷ்யாவைச் சேர்ந்த ஒருவர், உலகின் முதல் தலை மாற்று அறுவை சிகிச்சைக்காக தனது தலையை அர்ப்பணிக்க திட்டமிட்டிருந்த நிலையில், அவர் மனதை கொள்ளை கொண்ட ஒரு பெண்ணின் காதல் அவரது மனதை மாற்றியிருக்கிறது.

மிகவும் மோசமான உடல் குறைபாடு கொண்டவராகிய Valery Spiridonov (33), டாக்டர் பிராங்கன்ஸ்டைன் என்று அழைக்கப்படும் பேராசிரியர் Sergio Canavero மேற்கொள்ளவிருக்கும் ஒரு அறுவை சிகிச்சை மூலம், தனது தலையை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி, வேறொரு ஆரோக்கியமான உடலில் பொருத்துவதற்கு சம்மதித்திருந்தார்.

இது உலகில் முதல் முயற்சியாகும், அது மட்டுமின்றி மிகவும் ஆபத்தான ஒன்றாகும். ஆனால், தற்போது அந்த பேராசிரியர் தனது திட்டத்தை நிறைவேற்றுவதற்காக சீனாவில் பணம் சேகரித்துக் கொண்டிருக்கிறார். ஏன் இப்படி ஆயிற்று? Spiridonov என்ன ஆனார்? என்று விசாரித்தால், அவர் ஒரு அழகான மனைவியுடனும் அருமையான மகனுடனும் போஸ் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

தான் வாழ்ந்து சாதிப்பதற்கு ஒன்றுமில்லை என்று எண்ணிக் கொண்டிருந்த Spiridonov, Anastasia Panfilovaவைச் சந்தித்ததும், அவருக்கு வாழ வேண்டும் என்ற ஆசை வந்து விட்டது.

ஒரு வேளை அறுவை சிகிச்சையின்போது ஏதாவது தவறு நேர்ந்துவிட்டால் அழகிய மனைவியையும் அருமை மகனையும் இழக்க வேண்டுமே என அச்சம் நேரிட, தனது தலை மாற்று சிகிச்சையிலிருந்து பின்வாங்கிவிட்டார் Spiridonov.

அதற்குப்பின் பேராசிரியர் Sergio Canaveroவிடமிருந்து எந்த தகவலும் வரவில்லை என்று கூறும் Spiridonov, ஒரு நாள் அவர் தனது ஆய்வு குறித்த தகவல்களை வெளியிடுவார் என நம்புவதாக தெரிவித்துள்ளார்.

7 வயது சிறுவனுக்கு வந்த 77 வயது நபரின் கடிதம் : 17 வயதில் காத்திருந்த இன்ப அதிர்ச்சி!!

 

17 வயதில் காத்திருந்த இன்ப அதிர்ச்சி

அமெரிக்கா முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் எச்.டபிள்யூ புஷ் தான் யார் என்றே சொல்லிக் கொள்ளாமல் 7 வயது சிறுவனை படிக்க உதவிய சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது. பிலிப்பைன்ஸைச் சேர்ந்தவன் தீமோத்தி. அப்போது 7 வயது இருந்த போது, தன் குடும்பத்தினுடைய சூழ்நிலை காரணமாக படிக்க முடியாமல் தவித்து வந்துள்ளான்.

ஆனால் அந்த சிறுவனுக்கோ நன்றாக படித்து பெரிய ஆள் ஆக வேண்டும் என்பது தான் ஆசை. இது போன்ற நிலையில் தான், அந்த சிறுவனின் கிராமத்திற்கு Compassion International என்னும் கிறிஸ்துவ தொண்டு நிறுவனம் வந்து அங்கு ஏழ்மையில் இருக்கும், குழந்தைகளின் விவரங்கள் போன்றவைகளை சேகரித்து சென்றது.

அப்போது அந்த சிறுவனுக்கு ஒன்றும் புரியவில்லை, அதன் பின்னரே தீமோத்தி உட்பட பல சிறுவர்களை தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று ஸ்பான்ஸர் மூலம் படிக்க வைக்கப் போகின்ற விடயம் தெரிந்துள்ளது. இதனால் எல்லையற்ற மகிழ்ச்சியில் இருந்த தீமோத்தி, தன்னை யார் படிக்க வைப்பார்கள்? ஸ்பான்ஸர் கிடைக்குமா? கிடைக்காதா? என்ற ஏக்கத்தில் இருந்த போது, அவரை படிக்க வைக்க ஸ்பான்சர் நிறுவன் முன்வந்துள்ளது.

இதையடுத்து தீமோத்தியும் பள்ளியில் சேர்ந்து படிக்கத் துவங்கினான். இப்படி பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது, தீமோத்திக்கு ஸ்பான்சர் எழுதியிருந்த கடிதம் ஒன்று வந்துள்ளது. அந்த கடித்தத்தில், டியர் டிமோத்தி, நான் வாக்கர் எனக்கு 77 வயதாகிவிட்டது, என்னை உன் நண்பனாக ஏற்றுக் கொள்வாயா? எனக்கு குழந்தைகள் என்றால் அவ்வளவு பிடிக்கும், நான் உனக்கு அடிக்கடி கடிதம் எழுதுகிறேன், நன்றாக படி என்று கூறி முடிந்துள்ளது.

இதைக் கண்ட சிறுவன் ஆனந்த கண்ணீர்விட்டுள்ளான். அதன் பின் இருவரும் ஒருவரை ஒருவர் கடிதம் எழுதி நட்பை வளர்த்து கொண்டனர். கடந்த 2010-ஆம் ஆண்டு தன்னுடைய 17 வயதில் தீமோத்தி படிப்பை வெற்றிகரமாக முடித்து பட்டம் பெற்ற பின், தான் ஸ்பான்சர் வாக்கரை பார்க்க வேண்டும் என்று கூற, அதன் பின் தொண்டு ஊழியர்கள் சொன்ன பதிலைக் கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

ஏனெனில் வாக்கர் என்பவர் வேறு யாருமில்லை, அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் H.W புஷ் தான் என்று கூறியுள்ளனர். 2010-ஆம் ஆண்டு நடந்த இந்த சம்பவத்தை Compassion International வெளியிட்டுள்ளது. பல்வேறு பாதுகாப்பு காரணங்களுக்காக அவரின் பெயர் மற்றும் வயது போன்றவைகள் குறித்து தெரிவிக்கவில்லை.

மேலும் புஷ் மறைவுக்கு பின் அந்த தொண்டு நிறுவனம் தீமோத்தியை தொடர்பு கொள்ள முயன்றதாம், ஆனால் எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த செய்தி வைரலாகியதைத் தொடர்ந்து, ஜார்ஜ் புஷ் குடும்பமும் தீமோத்தியை தேடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் நகரசபை சுகாதாரத் தொழிலாளர்களின் ஒளிவிழா நிகழ்வு!!

வவுனியாவில் நகரசபை சுகாதாரத் தொழிலாளர்களின் ஒளிவிழா நிகழ்வு இன்று (20.12) நாற்சதுர சுவிசேச சபையின் தலைமைப் போதகர் பி.என்.சேகர் தலைமையில் நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது.

முயற்சி அறக்கட்டளையின் அனுசரணையுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் வவுனியா சுகாதாரத் தொழிலாளர்களுக்காக ‘பசுமை தொழிலாளர் நலன்புரிச் சங்கம்’ வவுனியா நகரசபையின் உப தவிசாளர் க.குமாரசாமி மற்றும் செயலாளர் ஆர்.தயாபரன் ஆகியோரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நிகழ்வில் சுகாதாரத் தொழிலாளர்களின் குடும்பங்கள் கலந்துகொண்டு கலை நிகழ்வுகளையும் நடத்தியிருந்தனர்.

நகரசபை சுகாதாரத் தொழிலாளர்களுக்கான ஒளி விழா நிகழ்வில் குழந்தைகளுக்கு கிறிஸ்மஸ் பரிசில்களும் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டது.

ஒளிவிழா நிகழ்வில் வவுனியா நகரசபையின் தவிசாளர் இ.கௌதமன், பிரதேச செயலாளர் க.உதயராசா, முயற்சி அறக்கட்டளையின் ஸ்தாபகர் க.சந்திரகுமார் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

வவுனியாவில் தற்கொலைகளை தடுத்தல் தொடர்பான விசேட செயலமர்வு!!

வவுனியா மாவட்டத்தில் தவறான முடிவெடுத்தல் காரணமாக அதிகரித்து வரும் தற்கொலைகளை தடுத்தல் தொடர்பிலான அறிக்கையிடலில் ஊடகங்களின் பங்கு என்னும் தலைப்பில் ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வொன்று இடம்பெற்றுள்ளது.

வவுனியா பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் கேட்போர் கூடத்தில் குறித்த செயலமர்வு இன்று (20.12.2018) இடம்பெற்றுள்ளது.

இதன்போது தற்கொலைக்கான காரணங்கள்,கட்டுப்படுத்தும் வழிமுறைகள் தொடர்பாக ஆராயப்பட்டதுடன் இச்செயற்பாடுகளில் ஊடகங்களின் வகிபங்கு தொடர்பிலும் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது.

குறித்த அமர்வில் பிராந்திய சுகாதார வைத்திய சேவைகள் பணிப்பாளர் பவானி பசுபதிராஜா தலைமையில் , தொற்றா நோய்ப்பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி வி. சுதர்சினி, மனநல வைத்திய நிபுணர்களான எஸ்.சிவதாஸ், என்.யுராஜ், மற்றும் மனநல வைத்தியர் எஸ்.சுதாகரன் ஆகியோர் கலந்து கொண்டு கருத்து தெரிவித்துள்ளனர்.

இதன்போது கருத்து தெரிவித்த வைத்திய நிபுணர்கள், தற்கொலையின் காரணிகள் அதனால் சமூகத்தில் ஏற்படும் தாக்கங்கள் தொடர்பில் எடுத்துரைத்ததுடன் தற்கொலைகளை தடுப்பதற்கு ஊடகங்களின் பங்கு என்ன என்பது தொடர்பிலும் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் இவ்வருடத்தின் ஒகஸ்ட் மாதம் வரையான காலப்பகுதியில் 23 பேர் தவறான முடிவெடுத்தமையினால் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும், 302 பேர் தவறான எண்ணப்பாடுகளால் தற்கொலைக்கு முயற்சித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒகஸ்ட் மாதத்திற்கு பின்னரான காலப்பகுதியில் சுமார் 30 பேர் பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பதற்கு தைரியமற்ற கோழைகளாக தற்கொலை செய்து கொண்டுள்ளமையும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மைத்திரிக்கு எதிராக ரணில் வகுத்துள்ள வியூகம் : குழப்பத்திலும் தொடரும் அமைச்சரவை சிக்கல்!!

பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவிப் பிரமாணம் செய்ததைத் தொடர்ந்து அமைச்சர்களை நியமிக்கும் பணி தொடர்ந்து கொண்டிருக்கிறது.

ஆனாலும், அமைச்சர்களை நியமிப்பதில் ஜனாதிபதிக்கு உடன்பாடில்லாத சிலருக்கு அமைச்சுப் பதவி வழங்கப்படவில்லை. இந்நிலையில், இந்தக் குழப்பத்தை தீர்க்க பிரதமர் ரணில் விக்ரமசிங்க வியூகங்களை வகுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஒரு அமைச்சரவை பட்டியலை மைத்திரியிடம் அனுப்பியிருந்தார். எனினும் ஜனாதிபதி அதில் இருந்த சிலரின் பெயரை நீக்கிவிட்டு சிலருக்கு மாத்திரமு அமைச்சரவை ஒதுக்கியிருந்தார்.

ஜனாதிபதியின் இந்தச் செயலுக்கு எதிராக அடுத்தகட்ட நடவடிக்கைளை முன்னெடுக்க ஐக்கிய தேசியக் கட்சி தயாராகிவருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மைத்திரியால் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு எப்படியாவது அமைச்சுப் பதவியை வழங்க வேண்டும் என்ற நோக்கில் பிரதமர் ரணில் புது வியூகம் அமைத்துள்ளதுடன், அவர்களுக்கு அமைச்சுப் பதவியை வழங்குவதற்கான பிரேரணையினை நாடாளுமன்றில் சமர்ப்பிக்க உத்தேசித்துள்ளதாகத் தெரியவருகிறது.

எனினும் குறித்த பிரேரணை நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி நிராகரித்தாலும், அதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

-தமிழ்வின்-

முல்லைத்தீவில் கரை ஒதுங்கிய மோட்டார் சைக்கிள் : பொலிஸார் தீவிர விசாரணை!!

முல்லைத்தீவு கடற்கரையில் மோட்டார் சைக்கிள் ஒன்று கரை ஒதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முல்லைத்தீவு மீனவர்கள் கரை ஒதுங்கிய மோட்டார் சைக்கிளை நேற்று மாலை கண்டு பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

அதன் பின்னர் பொலிஸார் மோட்டார் சைக்கிளை பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

மோட்டார் சைக்கிளின் உரிமையாளரைக் கண்டுபிடிப்பதற்கு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முல்லைத்தீவு மீனவர்கள் கரை ஒதுங்கிய மோட்டார் சைக்கிளை நேற்று மாலை கண்டு பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.  முல்லைத்தீவு கடற்கரையில் மோட்டார் சைக்கிள் ஒன்று கரை ஒதுங்கியுள்ள சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியாவில் பாம்பு தீண்டி ஒருவர் மரணம்!!

வவுனியாவில் பாம்பு தீண்டி ஓருவர் பலியாகியுள்ளார். குறித்த சம்பவம் இன்று(20.12.2018) அதிகாலை வவுனியா பூவரசங்குளம் பொலிஸ் பிரிவிற்குடபட்ட பிரமனாலங்குளம் பகுதியில் நடைபெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், குறித்த நபர் தனிமையில் வசித்துவந்துள்ளதுடன் இன்று அதிகாலை அவரிற்கு பாம்பு தீண்டியதாக கூறப்படுகின்றது.

அயலவர்களின் உதவியுடன் பூவரசங்கும் வைத்தியசாலையில் இவர் அனுமதிக்கபட்டார். அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளிற்காக வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

எனினும் அவர் வரும்வழியிலேயே மரணமடைந்துள்ளதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் பிரமனாலங்குளம் பகுதியை சேர்ந்த பசுபதி (வயது 65) என்ற முதியவரே மரணமடைந்துள்ளார். மேலதிக விசாரணைகளை பூவரசங்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

கடன் வாங்கி வெளிநாடு சென்ற இளைஞன் எடுத்த சோக முடிவு : கண்ணீர் வடிக்கும் குடும்பம்!!

 

இளைஞன் எடுத்த சோக முடிவு

கஜா புயல் பாதிப்பால் வீட்டினை இழந்த இளைஞன் சிங்கப்பூரில் தற்கொலை செய்துகொண்டார். 32 வயதான கலைவாணன், கடந்த 2 ஆண்டுகளாக சிங்கப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.

தனது குடும்ப சூழ்நிலை கருதி கடன் வாங்கி வெளிநாட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில், கஜா புயலின் தாக்கத்தால் தென்னை மரங்கள் உள்ளிட்டவை முற்றிலும் அழிந்த தகவலறிந்த கலைவாணன், கடந்த 17ம் தேதியன்று தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

ஏற்கனவே கடன் வாங்கி சிங்கப்பூருக்கு வேலைக்கு சென்றிருந்த அவர், அந்த கடனை திருப்பி கொடுக்கமுடியாமல் சிரமத்தில் இருந்துள்ளார். இதற்கிடையில் இப்படி ஒரு பாதிப்பால் தனது குடும்பத்தின் வாழ்வாதாரம் முடங்கியதால், கலைவாணன் இந்த முடிவை எடுத்துள்ளார். கலைவாணனின் உடல், சிங்கப்பூரில் இருந்து நேற்றிரவு அவரது சொந்து ஊருக்கு எடுத்து வரப்பட்டது.