வவுனியா சமளங்குளம் கல்லுமலை விநாயகர் ஆலய விவகாரம் : தொல்பொருள் திணைக்களம் மீது மக்கள் அதிருப்தி!!

 

வவுனியா சமளங்குளம் கல்லுமலை விநாயகர் ஆலயம்

வவுனியா சமளங்குளம் கல்லுமலை விநாயகர் ஆலயத்தில் உள்ள தொல்பொருள் எச்சங்களை புனரமைப்பதற்காக தொல்பொருள் திணைக்களம் பலமுறை முயற்சித்தநிலையில் மக்களின் எதிர்ப்பினால் அதில் தடை ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 17 ம் திகதி புனரமைப்பு பணிகளுக்காக சென்ற திணைக்களத்தினருடன் மக்கள் முரண்பட்டிருந்தன்னர்.

எனினும் இருக்கின்ற பகுதிகளில் ஒரு செங்கற்கள் கூட புதிதாக வைக்கபடாமல் தற்போது இருப்பதனை போலவே புனரமைக்கபடும் என்று எமக்கு எழுத்து மூலம் உறுதிமொழி தந்தால் புனரமைக்க அனுமதிக்கின்றோம் என்று பொதுமக்கள் மற்றும் ஆலய நிர்வாகத்தால் கூறப்பட்டது.

அதன்பின்னர் அதற்கான எழுத்துமூலமான கடிதத்தை வழங்குவதாக தெரிவித்துவிட்டு தொல்பொருள் திணைக்களத்தினர் அங்கிருந்து சென்றனர். அதனடிப்படையில் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டிந்தது.

அதற்கமைவாக தொல்பொருள் நிலையபாதுகாப்பு சம்பந்தமாக மக்களைதெளிவுபடுத்தலும் அதற்கான காரணங்களை வெளிப்படுத்தலும் என்ற தலைப்பில் தொல்பொருள் திணைக்களத்தின் வன்னி மாவட்டங்களிற்கான ஊதவிப் பணிப்பாளர் பியதிலக பண்டா என்பவரால் குறித்த கடிதம் ஆலய நிர்வாகத்தினருக்கு கடந்த 18ம் திகதி வழங்கப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது..

குறித்த தொல்பொருள் எச்சங்களைக் கொண்ட பகுதி பாதுகாப்பு செய்வதற்காக 2018 திட்ட நடவடிக்கை மூலம் தொல்பொருள் திணைக்களத்தால் நிதி ஒதுக்கபட்டுள்ளது. 1970ம் ஆண்டு முதல் குறித்த பகுதியில் தொல்பொருட்பாதுகாப்பு நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

எனினும் சில வாரங்களிற்கு முன்னர் குறித்த பகுதியை புனரமைக்க முற்பட்டபோது அப்பகுதியில் காணப்படும் ஆலயத்தின் நிர்வாகம், பிரதேச மக்கள் எதிர்பினை தெரிவித்துவந்தனர். கடந்த 17ம் திகதி இவ்விடத்தை புனரமைப்பது தொடர்பாக தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள், அரசியல்வாதிகள், பொதுமக்கள் மத்தியில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.

அதற்கமைவாக குறித்த இடத்தின் பாதுகாப்பு தொடர்பாக தமக்கு அறியதரப்படவில்லை என்று அவர்களால் தெரிவிக்கபட்டதுடன், அது தொடர்பான தகவல்களை வழங்கிய பின்னர் அதனை புனரமைக்குமாறு கூறியிருந்தனர்.

பாதுகாப்பு (புனரமைப்பு) என்பது மாசடைதல் மற்றும் அழிவடைந்துபோகக்கூடிய கலாசார நிர்மானத்தின் ஆயள் காலத்தை முடியுமான அளவு அதிகரிப்பதற்கான நடவடிக்கையாகும்.

அதன்படி சமளங்குளத்தில் அமைந்துள்ள தூபி மற்றும் மூலஸ்தான கட்டடம் இதுவரை சேதமடைந்து காணப்படுவதனால் அழிவடைந்துள்ளது. எனவே அவற்றின் ஆயள்காலத்தை அதிகரித்து பாதுகாக்கவே இச்செயற்பாடு மேற்கொள்ளபடுகின்றது.

இதன்போது மேற்கொள்ளபடும் நடவடிக்கைகளாக தூபி மற்றும் மூலஸ்தானத்தில் அழிவடைந்துள்ள
செங்கற்களை மீண்டும் புணரமைத்தல், சேதமடைந்த சீமந்து அடைப்புகளை அகற்றி மீண்டும் புதிய சீமந்தை பூசி அதன் சக்தியை அதிகரித்தல். தூபியின் அமைப்பபை முழுமைப்படுத்தல், மூன்று வரிகள் அல்லது 9 அங்குலம் உயர்துதல், சந்துகளிற்கு பழைய முறைப்படி நிறப்பூச்சிடுதல் போன்ற பணிகள் இடம்பெறவுள்ளதாக குறித்த கடித்த்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வழங்கபட்ட அறிக்கை சிங்கள தமிழ் மொழிகளில் காணப்பட்டாலும் சொற்பிரயோகங்களில் ஏதேனும் வேறுபாடுகள் ஏற்படின் சிங்கள மொழியிலான சொற்பிரயோகத்திற்கே முன்னுரிமை அளிக்கபடும் என்று அவர்களால் வழங்கப்பட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிருப்தி உள்ளதாக நிர்வாகம் தெரிவிப்பு… குறித்த கடிதம் தொடர்பாக தமக்கு அதிருப்தி உள்ளதாக ஆலயத்தின் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

தூபியை முழுமைப்படுத்தல்,10 அங்குலம் வரை உயர்த்துதல் என்பன முறையற்ற செயற்பாடு. அதனை நாம் ஏற்கமாட்டோம். அத்துடன் சொற்பிரயோகங்களில் வேறுபாடுகள் ஏற்படின் சிங்கள மொழிக்கே முன்னுரிமை என்று கூறப்பட்டுள்ளது.

அத்துடன் இரு மொழிகளிலும் குறித்த கடிதம் எமக்கு தரப்பட்டுள்ளது. எனவே சிங்கள மொழியில் எவ்வாறு எழுதப்பட்டுள்ளது என்பது தொடர்பாக நாம் ஆராயவேண்டியுள்ளது.அதனை ஆராய்ந்த பின்னர் குறித்த கடிதத்தில் உள்ள அதிருப்திகள் தொடர்பாக தொல்பொருட் திணைக்களத்திற்கு தெரியப்படுத்த உள்ளதாக தெரிவித்தனர்.

வவுனியா நகரசபையின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்!!

வவுனியா நகரசபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் உறுப்பினர்களால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

வவுனியா நகரசபையில் இன்று(21.12.2018) இடம்பெற்ற அமர்வின் போது வரவு செலவுத் திட்டம் மீதான விவாதம் இடம்பெற்றது.

இதன்போது கூட்டமைப்பு உறுப்பினர் க.சந்திரகுலசிங்கம் வட்டார ரீதியாக ஒதுக்கப்பட்ட நிதியில் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளதாகவும், தவிசாளருக்கு ஆதரவளித்த உறுப்பினர்களின் வட்டாரங்களுக்கு அதிக நிதி ஓதுக்கப்பட்டுள்ளதாகவும், உண்மையில் உறுப்பினர்களுக்கு நிதி ஓதுக்காது ஒவ்வொரு வட்டாரத்தின் தேவைக்கேற்ப சரியாக நிதியை பாதீடு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இதன்போது கூட்டமைப்பின் நகரசபை உறுப்பினர்களான சு.காண்டீபன், ரி.கே.இராஜலிங்கம், க.சுமந்திரன், ந.சேனாதிராஜா, எஸ்.ரூபன் ஆகியோரும் இக் கருத்தை வரவேற்று தமது வட்டாரங்களுக்கும் பாகுபாடு காட்டப்பட்டுள்ளதாகவும், வருமானம் கூடிய வட்டாரங்களுக்கு குறைவான நிதியும், வருமானம் குறைந்த வட்டாரங்களுக்கு கூடிய நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினர்.

இந்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களான பாரி மற்றம் லரீப் தமது வட்டாரங்களில் இரு சமூகங்களைச் சேர்ந்த மக்கள் வசிப்பதாகவும் அங்குள்ள தேவைப்பாடுகள் தொடர்பிலும் தெரிவித்தனர்.

தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர் செபநேசராணி தமது வட்டாரத்தில் அதிக உறுப்பினர்கள் உள்ளதால் நிதி ஒதுக்கீடு சரி எனத் தெரிவித்தார். இதனையடுத்து சபையில் குழப்ப நிலை ஏற்பட்டது.

இறுதியில் நகரசபை பாதீடு கூட்டமைப்பு உறுப்பினர்களின் கோரிக்கைக்கு அமைவாக தவிசாளரால் பொது வேலைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதிகளிலிருந்து மீளப்பெற்று வட்டார அபிவிருத்திக்கான ஒதுக்கீடுகள் அதிகரிக்கப்பட்டது.

இதனையடுத்து வவுனியா நகரசபையின் 2019 ஆம் ஆண்டுக்கான பாதீடு ஏகமனதாக அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.

வவுனியாவில் கிராம சக்தியின் இரண்டாவது வேலைத்திட்டம் ஆரம்பித்து வைப்பு!!

நாடாளாவிய ரீதியில் தற்போது வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்லப்படும் கிராம சக்தி மக்கள் இயக்கம் தொடர்பான செயற்திட்டத்தின் பிரதான நிகழ்வு அநுராதபுர மாவட்டத்தில் ஜனாதிபதியின் தலைமையில் நடைபெறும் அதேவேளை, வவுனியா மாவட்டத்திற்கான கிராம மக்கள் செயற்திட்டத்தின் கீழ் பிரதான அங்குரார்ப்பண நிகழ்வு வவுனியா பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள நொச்சிமோட்டை கிராம சேவையாளர் பிரிவின் காரியாலயத்தில் நேற்று (20.12.2018) காலை 10.30 மணியளவில் மாவட்ட செயலாளர் H.M ஹனீபா தலைமையில் நடைபெற்றது.

இக் கிராம சேவையாளர் பிரிவில் சுயதொழில் ஊக்குவிப்பினை மேற்கொள்ளும் பொருட்டு பன்னீர், நெய் தயாரிப்பிற்கான ஆரம்ப விளக்கவுரையினை இக் கிராமத்தின் 35 பயனாளிகளுக்கு மிருக வைத்தியர் S.சுதாயினி முன்வைத்தார்.

இந் நிகழ்வில் மாவட்ட செயலாளர் H.M ஹனீபா, வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராஜா, வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ந.சிவசக்தி ஆனந்தன், மாவட்ட செயலகத்தின் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் திரு.சபாலிங்கம், சமுர்த்தி உத்தியோகத்தர்களும், வவுனியா நகரசபை உறுப்பினருமாகிய லறீப், வவுனியா பிரதேச செயலகத்தின் கிராம சக்தி செயற்திட்டத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் இ.சிவராம்,

கிராம வேவையாளர் ந.குபேந்திரன் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி ந.அருள்மொழி, அப் பிரிவின் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர், மாதர் சங்கத்தின் தலைவர், கமக்கார அமைப்பின் தலைவர் மற்றும் பயனாளிகளும் கலந்து கொண்டனர்.

மேலும் மாவட்டத்தின் நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இக் கிராம சக்திச் செயற்திட்டத்தின் நிகழ்வுகள் சிறப்புற நடைபெற்றன.

2025ம் ஆண்டளவில் இலங்கையை வறுமையிலிருந்து மீட்டெடுத்தலுக்காக ஜனாதிபதியினால் இச் செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா நகரத்தினை அழகுபடுத்த தவிசாளர் எடுத்த அதிரடி நடவடிக்கை!!

வவுனியா நீதிமன்றத்திற்கு முன்பாக நீதிமன்ற வழக்கில் உள்ள வாகனங்களை அவ்விடத்திலிருந்து அப்புறப்படுத்தி வவுனியா நகரத்தினை அழகுபடுத்தும் முயற்சியினை மேற்கொண்டுள்ளதாக வவுனியா நகரசபையின் தவிசாளர் இ.கௌதமன் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

வவுனியா நகரத்தினை அழகுபடுத்தும் முயற்சிகள் மேற்கொண்டு வரும் நிலையில் அதற்கு வலுசேர்க்கும் முகமாக நகரசபை தவிசாளரினால் வவுனியா மாவட்ட நீதிமன்ற நீதவானுக்கு விடுத்த விடுத்த கோரிக்கையினையடுத்து வவுனியா நீதிமன்றத்திற்கு முன்பாக காணப்படும் வாகனங்களை (வழக்கு நிலுவையில் உள்ள வாகனங்கள்) அவ்விடத்திலிருந்து அகற்றி நகரசபை வளாகத்தினுள் தரிப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது எனவும் வாகனங்களை தரிப்பதற்கு நிரந்தர இடம் ஒன்று கிடைக்கும் வரையே நகரசபை வளாகத்தினுள் வாகனங்கள் தரித்து நிற்பதற்கு அனுமதியளித்துள்ளதாக மேலும் தெரிவித்தார்.

கத்தியுடன் நடமாடிய சிறைச்சாலை உத்தியோகத்தருக்கு நேர்ந்த நிலை!!

கதிர்காமம், கிரிவெஹெர பகுதியில் கூர்மையான கத்தியுடன் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய நபரை பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கிரிவெஹெர விகரையின் விகாராதிபதி தம்மிக்க பௌத்த தேரர் இன்று அதிகாலை கிரிவெஹெரக்கு சென்று கொண்டிருந்த போது குறித்த நபரைக் கண்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டபோது குறித்த நபர் சிறைச்சாலை உத்தியோகத்தர் என தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பழங்கள் வெட்டுவதற்காக கத்தியை கொண்டு சென்றதாக குறித்த நபர் தெரிவித்துள்ளார். நிஷான் விக்ரமஹெட்டி ஆராச்சி என்ற 34 வயதான குறித்த நரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கிரிவெஹெர விகாராதிபதி தம்மிக்க பௌத்த தேரை இலக்கு வைத்து இதற்கு முன்னர் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருந்தது. குறித்த சம்பவத்தில் பல சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டமை குறப்பிடத்தக்கது.

தென்னிலங்கையை அதிரச்செய்த விஜயகலா மீண்டும் அமைச்சரானார்!!

சர்ச்சைக்குரிய கருத்தினை வெளியிட்டு தென்னிலங்கையை அதிர செய்த விஜயகலா மகேஸ்வரன் மீண்டும் அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துள்ளார்.

சமகால அரசாங்கத்தின் அமைச்சரவை நேற்று பதவிப்பிரமாணம் செய்து கொண்டது.

இந்நிலையில் பிரதியமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் சற்று முன்னர் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.

இதன்போது கல்வி ராஜாங்க அமைச்சராக விஜயகலா மகேஸ்வரன் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் விடுதலைப் புலிகளின் மீள் வருகையின் அவசியம் குறித்து விஜயகலா கருத்து வெளியிட்டிருந்தார்.

அவரின் கருத்து தென்னிலங்கையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், தனது இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து விலகிக் கொண்டார்.

கடந்த அரசாங்கத்தின் போது மகளிர், சிறுவர் விவகார ராஜாங்க அமைச்சராக விஜயகலா மகேஸ்வரன் செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மற்றுமொரு தொகுதி அமைச்சர்கள் சற்று முன்னர் நியமனம்!!

பிரதியமைச்சர்கள் மற்றும் ராஜாங்க அமைச்சர்கள் சற்று முன்னர் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்கள்.

சமகால அரசாங்கத்தின் பிரதான அமைச்சரவை அமைச்சர்கள் நேற்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்கள்.

இந்நிலையில் பிரதியமைச்சர்கள் மற்றும் இராஜங்க அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் சற்று முன்னர் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.

பொருளாதார சீர்திருத்தம் மற்றும் பொது விநியோக அமைச்சரவை அந்தஸ்து அல்லாத அமைச்சராக ஹர்ஷ டீ சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைச்சரவை அந்தஸ்து அல்லாத அமைச்சராக சுஜீவ சேனசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

உள்ளூராட்சி, மாகாணசபை மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சரவை அந்தஸ்து அல்லாத அமைச்சராக ஜே.சி. அலவத்துவே நியமிக்கப்பட்டுள்ளார்.

டிஜிட்டல் உள்கட்டமைப்பு மற்றும் தகவல் தொழில்நுட்பஅமைச்சரவை அந்தஸ்து அல்லாத அமைச்சராக அஜித் பி. பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.

கல்வி இராஜாங்க அமைச்சராக விஜயகலா மகேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

நெடுஞ்சாலைகள் மற்றும் சாலை மேம்பாடு இராஜாங்க அமைச்சராக ரஞ்சன் ராமநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

நிதி இராஜாங்க அமைச்சராக எரான் விக்கிரமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சராக அலி சாஹிர் மவுலானா நியமிக்கப்பட்டுள்ளார்.

தேசிய கொள்கை மற்றும் பொருளாதார இராஜாங்க அமைச்சராக நிரோஷன் பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.

தொழில் மற்றும் வர்த்தக பிரதி அமைச்சராக புத்திக்க பதிரன நியமிக்கப்பட்டுள்ளார்.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக ருவன் விஜேவர்த்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

சுகாதார இராஜாங்க அமைச்சராக பைசல் காசிம் நியமிக்கப்பட்டுள்ளார்.

விவசாயம், கிராமப்புற பொருளாதார அலுவல்கள், கால்நடைகள் மேம்பாடு, நீர்ப்பாசனம் மற்றும் மீன்பிடி மற்றும் நீரியல் வள அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக அமீர் அலி நியமிக்கப்பட்டுள்ளார்.

சர்வதேச வர்த்தக பிரதி அமைச்சராக நளின் பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.

வவுனியா மனிதஉரிமை அலுவலகத்தில் முன்னாள் பிரதேச சபை செயலாளர் முறைப்பாடு!!

வவுனியா வெங்கல செட்டிகுளம் பிரதேச சபையில் செயலாளராக கடமையாற்றிய அரச ஊழியர் ஒருவர் ஓய்வு பெற்று ஒருவருடம் கடந்த நிலையிலும் தமது ஓய்வூதியத்தினை வழங்க வடமாகாண பிரதிப் பிரதம செயலகம் பின்னடித்து வருவதாகவும் இதனால் அரச ஊழியராக நான் மிகவும் மன முடைந்து உளப்பாதிப்படைந்துள்ளதாகவும் இதற்கான ஒரு தீர்வினைப் பெற்றுத்தருமாறு வவுனியா மனித உரிமை அலுவலகத்தில முறைப்பாட்டினை மேற்கொண்டுள்ளார். இவ்விடம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வவுனியா வெங்கல செட்டிகுளத்தில் 2012, 2013 கடந்த இரண்டு வருடங்களாக பிரதேச சபை செயலாளராக கடமையாற்றிய அரச ஊழியர் ஒருவருக்கு 2013ஆம் ஆண்டு உள்ளுராட்சி திணைக்களம் யாழ்ப்பாணத்திற்கு இடமாற்றம் வழங்கியுள்ளது. இரண்டு வருடங்கள் பணியாற்றிய பின்னர் கடந்த 2015ஆம் ஆண்டு வவுனியா சுகாதாரத் திணைக்களத்திற்கு திரும்பவும் இடமாற்றம் செய்யப்பட்டு இரண்டு வருடங்கள் பணியாற்றிய நிலையில் கடந்த 20.02.2018 தினத்திலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

குறித்த அரச ஊழியருக்கு எதிராக வெங்கல செட்டிகுளத்தில் பிரதேச சபை தவிசாளர் மக்களால் தெரிவு செய்யப்பட்டவருக்கு மதிப்பளிக்காமல் நடந்துகொண்டுள்ளதாகவும் அவரது உத்தரவுகளை பின்பற்றவில்லை என்றும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதுடன் ஒருவருடத்தின் பின்னர் ஆதாரமற்ற நிதி மோசடிக்குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டிருந்தன.

எனினும் முன்னாள் தவிசாளரின் தவறான விடயங்களை நான் எவ்வாறு நடைமுறைப்படுத்துவது அதற்கு நான் எவ்வாறு துணைபோவது என்று ஓய்வு பெற்ற முன்னாள் பிரதேச சபை செயலாளர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து பல்வேறு விசாரணைகளின் பின்னர் நீண்ட காலமாக அரச சேவையிலுள்ளவர்களுக்கு இவ்வாறான சம்பவம் மிகவும் பாதிப்படையச் செய்துள்ளது.

எனவே எனது ஓய்வூதியத்தினைப் பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் பிரதிப் பிரதம செயலகத்தின் நடவடிக்கையினால் மிகவும் உளப்பாதிப்படைந்து மன உழைச்சல் ஏற்பட்டுள்ளதாக வவுனியா மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாட்டினை மேற்கொண்டுள்ளார்.

மாகாணப் பொதுச்சபை ஆணைக்குழுவின் தீர்மானத்தை மதிக்காத நிலை ஏற்பட்டுள்ளது. பொதுச்சபை ஆணைக்குழுவினரால் வழங்கப்பட்டுள்ள தீர்மானத்தை நடைமுறைப்படுத்தவில்லை குறித்த அரச ஊழியரான முன்னாள் பிரதேச சபைச் செயலாளருக்கு எதிராக எவ்வித குற்றச்சாட்டுக்களையும் முன்வைக்கவில்லை ஏற்கனவே இடம்பெற்ற விசாரணைகள் அனைத்தும் தவறு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்துக் குற்றச்சாட்டுக்களிலிருந்தும் அரச ஊழியரை விடுவிக்குமாறு பணிக்கப்பட்டுள்ளது. நிதி மோசடி இடம்பெற்றிருப்பின் குறித்த அரச ஊழியருக்கு எதிராக பொலிசாரால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவேண்டும்.

ஆனால் எவ்வித முறைப்பாடுகளும் மேற்கொள்ளப்படவில்லை. எமது நடவடிக்கைகள் தொடாந்து இடம் பெற்றுக்கொண்டிருக்கின்றன. என்று மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா பிராந்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

திருமணமான இளம் ஜோடி : ஒரு மாதத்தில் ரத்தவெள்ளத்தில் வீழ்ந்த கணவனை கட்டிப்பிடித்து கதறிய மனைவி!!

 

இளம் ஜோடி

மும்பையை சேர்ந்த சுமிம் வாக்மாரே – பாக்யஸ்ரீ ஆகிய இருவரும் பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்துகொண்டனர். இருவரும் பொறியியல் கல்லூரியில் படிக்கும்போது, காதலித்துள்ளனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து இருவரும் திருமணம் செய்துகொண்ட பின்னரும் தங்களது கல்லூரி படிப்பை தொடங்கியுள்ளனர்.

ஆயிரம், ஆயிரம் கனவுகளுடன் காதல் தம்பதியினர் தங்களது இல்லற வாழ்க்கையை தொடங்கினர். அங்குள்ள வாடகை வீட்டில் குடியேறி வசித்தனர்.

திருமணம் முடிந்து ஒரு மாதத்தில் இருவரும் தேர்வு எழுதிவிட்டு திரும்பி வந்துள்ளனர். கல்லூரிக்கு வெளியே காரில் இருந்த 2 பேர் சுமித் வாக்மாரேவை ஏதோ கேட்பது போல் அழைத்தனர்.

இதனை நம்பி அவர் அவர்களை நோக்கி சென்றார். அப்போது, அந்த ஆசாமிகள் இருவரும் தாங்கள் காரில் மறைத்து வைத்திருந்த பெரிய வாளை எடுத்து அவரை சரமாரியாக வெட்டி சாய்த்து விட்டு காரில் ஏறி தப்பிச்சென்றனர்.

இதில், சுமித் வாக்மாரே ரத்த வெள்ளத்தில் சரிந்தார். தன் கண்முன்னேயே காதல் கணவர் வெட்டி சாய்க்கப்பட்டதை பார்த்து அவரது மனைவி, ரத்த வெள்ளத்தில் சரிந்த சுமித் வாக்மாரேயை கட்டிப்பிடித்து கதறி அழுதார்.

அவரை காப்பாற்றும்படி உதவிகேட்டு அலறினார். அங்கு திரண்ட கல்லூரி மாணவர்கள் உடனடியாக சுமித் வாக்மாரேயை மீட்டு பீட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்துவிட்டு அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

கொலையாளிகளில் ஒருவர் மாணவி பாக்யஸ்ரீ யின் அண்ணன் பாலாஜி லாண்டே என்று தெரியவந்தது. அவர்களை பிடிக்க தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது மட்டும் உண்மை என்றால்… நடிகர் விஷால் ஜெயிலுக்கு போவது உறுதி!!

 

நடிகர் விஷால்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் நிரந்தர வைப்புத் தொகையான 7 கோடி ரூபாயில் விஷால் முறைகேடு செய்து விட்டதாக தயாரிப்பாளர்கள் சிலர் போர்க்கொடி தூக்கி வரும் நிலையில், இது நிரூபிக்கப்பட்டால் அவர் ஜெயிலுக்கு செல்வது உறுதி என்ற தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல திரைப்பட நடிகரான விஷால் நேற்று கைது செய்யப்பட்ட சம்பந்தத்த்தை பார்த்தால், அது சினிமாக்காரர்கள் பிரச்சனை போன்று தெரியவில்லை, இதற்குள்ளும் அரசியல் இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஏனெனில் கமலுக்கு முன்னரே அரசியலில் குதித்தவர் தான் நடிகர் விஷால், சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் கூட நின்றார். அதன் பின பல காரணங்களால் அவரால் நிற்க முடியவில்லை. அவருக்கு சமூகத்துக்கு ஆதரவான ஓட்டுகள் நிறைய இருப்பதாக கூறப்பட்டதால், இதை அதிமுகவினர் தான் செய்ததாக கூறப்பட்டது.

அதன் பின் விஷால் தமிழ அரசின் ஒவ்வொரு செயல்களையும் விமர்சித்து வந்தார். இதனால் விஷாலும்க்கும், அதிமுகவினருக்கும் இடையே பனிப்போர் நிலவியது என்று கூறலாம்.

இதைத் தொடர்ந்து அதிமுகவிற்கு ஆதரவாக ஜெ என்ற செய்தி சேனல் உருவாக்கப்பட்டது. அப்போது விஷால் ஒரு செய்தி சேனல் ஆரம்பிக்க நிறைய செலவாகும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.ஆனால் மாதச்சம்பளம் வாங்கும் எம்எல்ஏக்கள், எம்பிக்கள், எப்படி இதுபோன்ற ஒரு வியாபார அமைப்பை தொடங்க முடிகிறது? 2019-ம் ஆண்டுக்காகக் காத்திருக்கிறேன் என்று காத்திருந்தார்.

இது அதிமுகவினருக்கு கடும் கொந்தளிப்பை கொடுத்தது. அதுமட்டுமின்றி தனியார் சேனல் ஒன்றில் விஷால் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார், அதுவும் குறிப்பிட்ட சில பேருக்கு பிடிக்கவில்லையாம். இப்படி விஷாலுக்கும், ஆளும் தரப்பினருக்கும் இடையே இருந்த வந்த இந்த மோதல் தான் தற்போது கைது வரை வந்துவிட்டது என்று கூறப்படுகிறது.

என்ன தான் இது சினிமாக்காரர்கள் பிரச்சனையாக இருந்தாலும் உள்ளே அரசியல் இருக்கிறது என்று சிலர் கூறுகின்றனர். தமிழ் தேசிய கட்சிகள் எல்லாம் விஷாலுக்கு எதிராக உள்ள நிலையில் இந்த கைது நடவடிக்கை சாதாரண ஒன்றாக இருக்காது என்றே கூறப்படுகிறது.

அந்த 7 கோடி ரூபாய் கையாடல் மட்டும் என்பது உண்மையிலேயே நிரூபணமாகிவிட்டால், விஷாலுக்கு ஜெயில் கட்டாயம் என்று கூறப்படுகிறது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் நிரந்தர வைப்புத் தொகையான 7 கோடி ரூபாயில் விஷால் முறைகேடு செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தலைமுடி அறுக்கப்பட்டு கிணற்றில் இறந்து கிடந்த கல்லூரி மாணவி : கொடூர சம்பவம்!!

 

இறந்து கிடந்த கல்லூரி மாணவி

புதுக்கோட்டை மாவட்டத்தில் கல்லூரி மாணவி ஒருவர் தலைமுடி அறுக்கப்பட்டு கிணற்றில் மிதந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்த்தி என்ற கல்லூரி மாணவி பேருந்து மூலம் தினமும் கல்லூரி சென்று படித்து வந்துள்ளார். வழக்கம் போல் நேற்று வியாழக்கிழமை காலை 5.30 மணிக்கு ஆர்த்தி கல்லூரிக்கு செல்ல வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளார்.

இந்நிலையில், வீட்டில் இருந்து சற்று தூரத்தில் கிணற்றுக்கு அருகில் ஆர்த்தியின் செருப்பு, தலைமுடி, பேக் போன்றவை கிடப்பதாக பெண்மணி ஒருவர் ஆர்த்தியின் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஆர்த்தியின் தந்தை செல்லத்துரை வீட்டில் இருந்து சற்று தூரத்தில் உள்ள கிணற்றடியில் சென்று பார்த்தபோது அங்கு ஆர்த்தியின் ஒரு செருப்பு, அறுக்கப்பட்ட தலைமுடி, பேக் ஆகியவை சிதறிய நிலையில் கிடந்தது.

கிணற்றுக்குள் பாதாளகரண்டி விட்டு அலசியும், இறங்கியும் தேடிப்பார்த்தனர். அப்போது பாதாளகரண்டியில் ஆர்த்தியின் உடல் சிக்கியது. சுடிதார் சால்வையால் கழுத்தை நெரித்து கொலை செய்துகிணற்றில் வீசி இருக்கிறார்கள்.

தகவல் அறிந்து வந்த கந்தர்வகோட்டை போலீசார் ஆர்தியின் சடலத்தை கைப்பற்றி புதுக்கோட்டை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து கொலையாளி யார் என்பது பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.

கல்லூரி மாணவி படுகொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்ட சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த கொலையை செய்தவன் சைக்கோ கொலையாளியா எனவும் பொலிசார் விசாரித்து வருகின்றனர்.

வவுனியாவில் சாரதியின் கவனயீனத்தினால் வயோதிபர் ஒருவருக்கு ஏற்பட்ட அவலம்!!

வவுனியாவில் அரச பேருந்தில் ஏறுவதற்கு முன் சாரதி பேருந்தினை செலுத்தியமையினால் வயோதிபர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

குறித்த பகுதியில் கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர் இது குறித்து அசமந்தமாக செயற்பட்டமை தொடர்பில் பலரும் விசனம் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,

வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு முன்பாக பொலிஸாரினால் அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிழற்குடையிலிருந்து அரச பேருந்தில் ஏறுவதற்கு முற்பட்ட நிலையில் சாரதி பேருந்தினை செலுத்தியுள்ளார். இதன் காரணமாக குறித்த வயோதிபர் நிலை தடுமாறி வீதியில் வீழ்ந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த வீதியால் சென்று கொண்டிருந்தவர்கள் பேருந்தை தடுத்து நிறுத்தி அப்பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

குறித்த சாரதியும், நடத்துனரும் வயோதிபரிடம் தாம் பிழையாக நடக்கவில்லை என அநாகரிகமான வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளனர்.

குறித்த சம்பவ இடத்திற்கு வருகை தந்த போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர் சம்பவத்தை கேட்டறிந்த நிலையில், வயோதிபரை குறித்த பேருந்தில் ஏற்றிச் செல்லுமாறு தெரிவித்ததுடன் சம்பவம் தொடர்பில் எந்தவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளாது அங்கிருந்து செல்ல அனுமதித்துள்ளமையும் தெரியவந்துள்ளது.

குறித்த பொலிஸ் உத்தியோகத்தரின் செயற்பாட்டை அங்கிருந்தவர்கள் விமர்சித்ததுடன் ,இது குறித்து ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மஹிந்தவுக்கு எதிராக களமிறங்கிய சுமந்திரன் : நாடாளுமன்றத்தில் சலசலப்பு!!

எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ஷவை நியமிக்க வேண்டாம் என இன்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு மனு ஒன்றை கையளித்துள்ளது.

தமது எதிர்ப்பை வெளியிடும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனினால் மனு சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தலைவர் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகவும், அமைச்சரவையின் தலைவராகவும் செயற்படுகிறார். இந்நிலையில் சுதந்திர கூட்டமைப்பினை எதிர்க்கட்சியாக ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

சமகால அரசாங்கத்தில் ஐந்து அமைச்சுக்களை ஜனாதிபதி வகித்து வருகின்றமையினால், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் அரசாங்கத்தில் இணைந்துள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்ஷவை எதிர்க்கட்சி தலைவராகவும், மஹிந்த அமரவீரவை பிரதான எதிர்க்கட்சியின் பிரதம கொஹடாவாகவும் அங்கீகரிப்பதாக சபாநாயகர் கடந்த செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றில் அறிவித்திருந்தார்.

அண்மைக்காலமாக இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலைகளின் போது சட்ட ரீதியான அணுகுமுறைகளை சுமந்திரன் மேற்கொண்டு வருகிறார். சுமந்திரனின் செயற்பாடு குறித்து தென்னிலங்கை அரசியல்வாதிகள் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-தமிழ்வின்-

வவுனியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுப்பதற்கான அலுவலகம்!!

வவுனியாவை மையமாகக்கொண்டு வடமாகாணத்திலுள்ள பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு குரல் கொடுப்பதற்கான வடமாகாண மகளிர் முன்னேற்றக் கழகம் அமைப்பு ஒன்றின் உருவாக்கமும் அலுவலகத் திறப்பும் இன்று(21.12) காலை 9.30 மணியளவில் தாண்டிக்குளம் பிரதான கண்டி வீதியில் விவசாயக் கல்லூரிக்கு முன்பாக அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கவும் அதற்கு எதிராக குரல் கொடுக்கவும் வடமாகாண மகளிர் முன்னேற்றக் கழகத்தில் வடக்கிலிருந்தும் 36 கிராமங்களிலுள்ள பெண்களை இணைத்தும், வசதியற்ற மாணவர்களுக்கு உதவிகள், போதைப்பாவணை, பெண்கள் சிறுவர் துஸ்பிரயோகம், பாலியல் இறுவட்டு, போன்றவற்றிற்கு எதிராகவும் ஒவ்வொரு கிராமங்களிலிருந்தும் இரண்டு பெண்களை உள்ளடக்கிய செயற்பாடுகளுடன் ஆரம்பிக்கப்பட்டு அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் வடமாகாண மகளிர் முன்னேற்றக்கழகத்தின் தலைவி காமராஜ் இராஜகுமாரி, ஈச்சங்குளம் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி, வவுனியா தமிழ் தெற்கு பிரதேச சபை உறுப்பினர் பத்மநாதன் சத்தியநாதன், வவுனியா பிரதேச செயலகப் பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி சிவதர்சன் சுபாஜினி மற்றும் பெண்கள் அமைப்புக்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

கொழும்பு துறைமுகத்தில் ரஸ்யாவின் மூன்று கடற்படை கப்பல்கள்!!

ரஸ்யாவின் மூன்று கடற்படை கப்பல்கள் இலங்கைக்கு வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த கப்பல்கள் நேற்று மாலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக தெரியவருகிறது.

வாய்யோக், அட்மிரல் பன்டேலீவ் மற்றும் பொரிஸ் புட்டோமா ஆகிய கப்பல்களே இலங்கைக்கு வந்துள்ளன. இந்த கப்பல்களில் சுமார் 800 கடற்படை வீரர்கள் பணியாற்றுகின்றனர்.

நல்லெண்ண விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்த கப்பல்களில் உள்ள வீரர்கள் இலங்கையின் கடற்படை வீரர்களுடன் இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுக்களை நடத்தவுள்ளனர்.

இந்தநிலையில் ரஸ்யாவின் 3 கப்பல்களும் எதிர்வரும் 24ஆம் திகதியன்று கொழும்பில் இருந்து திரும்பி செல்லவுள்ளன.

நாடாளுமன்றத்தில் விமர்சனத்திற்குள்ளான ஹிருணிக்காவின் செயற்பாடு : வெளியான ஆதாரம்!!

நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திரவின் செயற்பாடு குறித்து விமர்சிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நாடாளுமன்றம் இன்று காலை கூடியது. இதன்போது நிதியமைச்சர் மங்கள சமரவீர, இடைக்கால கணக்கறிக்கை சமர்ப்பித்து உரையாற்றினார்.

அவர் உரையாற்றி கொண்டிருந்த நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திர தனது ஆசனத்தில் இருந்து எழுந்து சென்று நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் செல்பி புகைப்படம் எடுத்து கொண்டுள்ளார்.

அதன் பின் மீண்டும் அவர் தனது ஆசனத்திற்கு சென்று அமர்ந்து கொண்டார். இந்த காட்சி நாடாளுமன்றத்தில் உள்ள கமராவில் தெளிவாக காட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பான காட்சிகள் தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. முக்கியமான அமர்வின் போது ஹிருணிக்காவின் செயற்பாடு குறித்து விமர்சிக்கப்பட்டு வருகிறது.