யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலை நோக்கி கேரள கஞ்சாவினை கடத்திச் சென்ற இளைஞர்களை வவுனியா பொலிஸார் இன்று (29.11) காலை 6 மணியளவில் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் யாழ் – கதிர்காமம் பேருந்தை தாண்டிக்குளம் பகுதியில் வழிமறித்து சோதனை மேற்கொண்ட போது அப் பேருந்தில் பயணித்த அனுராதபுரத்தை சேர்ந்த 21, 28 வயதுடைய இரு இளைஞர்களை 2கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளின் பின்னர் இன்று வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
வவுனியா நகரத்தின் மத்திய கேந்திர பேருந்து நிலையத்தை சரியான முறையில் கையாண்டு முடிவுகளை எடுத்து செயற்படுத்த தவறியதையடுத்து வவுனியா நகருக்கு வரவேண்டிய ஒரு கோடி ரூபாவை நகரசபை இழந்துள்ளதுடன் பலநூறு பேருக்கு வேலைவாய்ப்புக்களும் இழக்கப்பட்டுள்ளதுடன் பல வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளது. இவற்றுக்கு காரணமான முன்னாள் வடமாகாண முதலமைச்சரை எவ்வாறு அழைத்து எழு நீ நிகழ்வை நடாத்துவது?
இவ்வாறு நேற்று இடம்பெற்ற நகரசபையின் 8ஆவது சபை அமர்வில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நகரசபை உறுப்பினர் செந்தில் ரூபன் இவ்வாறு கேள்வியை எழுப்பியதுடன் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் இந்நிகழ்வை புறக்கணிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
முன்னாள் வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தற்போது ஒரு அரசியல் கட்சியின் செயலாளராகவும் செயற்பட்டு வருகின்றார். சபை உறுப்பினர்களைவிட தலைவரின் தன்னிச்சையான முடிவால் 13பேர் வெளியில் இருந்து குழுவிற்கு தெரிவுசெய்யபட்டுள்ளனர்.
அவர்களது விபரங்கள் சபைக்கு முன்வைக்கப்பட்டு சபையின் அனுமதி பெறப்பட்டிருக்க வேண்டும் அது நடைபெறவில்லை. இது தொடர்பான கலந்துரையாடல், கூட்டங்களிற்கு சரியானமுறையில் அழைப்பு விடுக்கபடவில்லை.
நகரசபையின் பெயரைபயன்படுத்தி நிகழ்விற்கான நிதி சேகரிக்கபட்டுள்ளது. மூத்த முக்கியமான கலைஞர்கள் புறக்கணிக்கபட்டுள்ளனர். ஈபிஆர்எல் எவ், ஈரோஸ் போன்ற கட்சிகளிற்கு ஆலோசனைக்குழுவில் முக்கிய இடம் வழங்கப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் விக்கினேஸ்வரனை முதன்மை விருந்தினராக கொண்டு வந்திருப்பது, அரசியல் நோக்கத்துடனேயே என்பதை உறுதியாக தெரிவிக்கிறோம். எனவே அரசியல் நோக்கமுள்ள சட்டரீதியற்ற நிகழ்வை நாங்கள் புறக்கணிக்கின்றோம்.
இந்நிலையில் அவரை அழைப்பது அரசியல் சார்ந்ததாகவே காணப்படுகின்றது. வவுனியாவிலுள்ள பல அரசியல் கட்சி சாராதவர்களின் பெயர்களை பரிந்துரைத்திருந்தோம். ஆனால் அவர்களில் எவரையும் பிரதம விருந்தினராக பெயர் குறிப்பிடவில்லை. முன்னாள் முதலமைச்சரை பிரதம விருந்தினராக அழைப்பது தொடர்பாக சபையின் விவாதிக்கப்படவில்லை.
இந்நிலையில் எவ்விதமான முன்மொழிவுகளையும் சபையில் பெறப்படாமல் அழைப்பதையே நாம் எதிர்க்கின்றோம். எனவே அரசியல் சாராத ஒருவரை அழைத்து நிகழ்வை செயற்படுத்துவதையே நாங்கள் எதிர்பார்க்கின்றோம். இவ்வாறு மேலும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நகரசபைத்தலைவர் கருத்துத் தெரிவிக்கும்போது, எழு நீ நிகழ்விற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுவிட்டது இது தொடர்பாக அனைத்து விளக்கங்களும் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆரம்பத்திலேயே இவ்வாறான ஒரு நிகழ்வு தேவையற்றது என்று தெரிவித்திருக்க வேண்டும். சில தினங்களில் நிகழ்வு இடம்பெறவுள்ளது. தற்போது பிரதம விருந்தினரை மாற்றுவது என்பது சாத்தியமற்ற விடயமாகவே காணப்படுகின்றது. ஒருவரை அழைத்துவிட்டு தற்போது நீங்கள் வரவேண்டாம் என்று தெரிவிக்க முடியாது என்று மேலும் தெரிவித்தார்.
வவுனியா மாவட்டத்தில் அதிகரித்து வரும் மதுசாரம் , புகைத்தல் மற்றும் போதைப்பொருள் பாவனையை குறைத்தல் மற்றும் தடுத்தல் நடவடிக்கைகள் ஊடாக வன்முறையற்ற சிறந்த மாணவ சமுதாயத்தினை உருவாக்கும் நோக்குடன் நேற்றையதினம் வவுனியா விபுலானந்தாக்கல்லூரி தரம் 12, 10, 9, 8 மாணவர்களுக்கு RAHAMA (wfkh) நிறுவனத்தின் அனுசணையுடன் FIRM ( கிராம முகாமைத்துவத்திற்கான நிறுவனங்களின் சம்மேளனம்) நிறுவனத்தினாலும் சமூக சேவைத் திணைக்களத்தினாலும் ஒழுங்குப்படுத்தப்பட்ட விழிப்புணர்வு கருத்தரங்கு மூலம் 300 மாணவர்களுக்கு விழிப்பூட்டப்பட்டுள்ளது
அதன் போது மாணவர்களாலும் ஆசிரியர்களாலும் முன்வைக்கப்பட்ட விடயம் :
பாடசாலையில் மதுசாரத்திற்கு எதிரான செயற்குழு ஒன்றினை அமைத்து தமது செயற்பாடுகள் தொடர்பான விடயங்களையும் தாங்கள் எதிர்நோக்கிய சாவால்களையும் மாதாந்தம் கலந்துரையாடி பொருத்தமான செயல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதுடன் மீளாய்வு செய்தல்
பாடசாலை மட்டத்தில் மதுசாரம் புகைத்ததல் மற்றும் போதைப்பொருள் பாவனையை குறைப்பதற்கான வலைப்பின்னல் செயற்பாட்டினை உருவாக்கி நடைமுறைப்படுத்தல் மற்றும் தொடர் நடவடிக்கையும் மேற்கொள்ளல்.
இதன் போது உரையாற்றிய RAHAMA நிறுவனத்தின் நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் தமது சகல செயல் நடவடிக்கைகளிலும் பயனாளிகளையும், அவர்கள் சார்ந்தவர்களையும் சமூகத்தையும் மதுசாரம், புகைத்தல் மற்றும் போதைப்பொருள் பாவனையிலால் ஏற்படும் விளைவுகளில் இருந்து பாதுகாப்பதை முக்கியமான விடயமாக கொண்டு செயற்படுகின்றது.
முக்கியமாக நல்லதொரு ஒழுக்கமுள்ள மாணவ சமூகத்தை கட்டியெழுப்பும் நடவடிக்கையில் மாணவர்களின் செயற்பாடுகள் இருக்க வேண்டும் மென குறிப்பிட்டார்.
தேசியவாசிப்பு மாத பரிசளிப்பு விழா வவுனியா நகரசபை தலைவர் இ.கௌதமன் தலைமையில் நேற்று (28 நடைபெற்றது.
வவுனியா நகரசபை கலாசாரமண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்ற நிகழ்வில் தேசிய வாசிப்பு மாத சிறப்பிதழ் ஒன்றும் தமிழ்மணி அகளங்கனால் வெளியீடு செய்து வைக்கப்பட்டதுடன் முதல் பிரதியை வவுனியா தேசிய கல்வியற் கல்லூரி பீடாதிபதி சு.சுவர்ணராஜா பெற்றுக்கொண்டிருந்தார்.
நிகழ்வில் மாலை அணிவிக்கபட்டு விருந்தினர்கள் பவனியாக அழைத்துவரபட்டதுடன் தேசியக் கொடி ஏற்றப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன், சர்வமத குருக்களின் ஆசியுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியிருந்தன.
இன நல்லிணக்கத்தை பிரதிபலிக்கும் முகமாக வரவேற்பு நடனம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், நகரசபை உறுப்பினர்களுக்கு தேசிய வாசிப்பு மாத சிறப்பிதழ் வழங்கி வைக்கப்பட்டது.
அத்துடன் பொதுநூலகத்தால் நடாத்தபட்டவாசிப்புமாத போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு அதிதிகளால், பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கபட்டதுடன் கலைநிகழ்வுகளும் நடைபெற்றன.
விருந்தினர்களாக யாழ்பல்கலைக்கழக வவுனியா வளாக முதல்வர் ரி.மங்களேஸ்வரன், வலயக்கல்வி பணிப்பாளர் மு.இராதாகிருஸ்ணன், வவுனியா தேசியகல்வியற்கல்லூரி பீடாதிபதி சு.சுவர்ணராஜா, உபநகரபிதா சு.குமாரசாமி, நகரசபை செயலாளர் இ.தயாபரன், நகரசபை உறுப்பினர்கள், மற்றும் பாடசாலை அதிபர்கள், மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
வவுனியா திருநாவற்குளம் உமாமகேஸ்வரன் முன்பள்ளியின் வருடாந்த கண்காட்சி நிகழ்வு நேற்றையதினம் (28.11) காலை 8.30 மணிக்கு அதிபர் மீரா குணசீலன் தலைமையில் நடைபெற்றது.
இன்றைய கண்காட்சி நிகழ்வில் வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து 75 000 பெறுமதியான பான்ட் வாத்திய உபகரணங்களும், சீருடையும் அன்பளிப்பு செய்திருந்தார்.
இந் நிகழ்வில் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன், வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதாவும் தற்போதைய உறுப்பினருமான சந்திரகுலசிங்கம் மோகன், வவுனியா நகரசபையின் உறுப்பினர் சுந்தரலிங்கம் காண்டீபன், கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் சந்திரேஸ்வரன், உறுப்பினர் ரவிச்சந்திரன், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் செயலாளர் கெர்சோன் கரிஸ், ஆற்றல் அரசி பனம்பொருள் உற்பத்தி நிலைய செயலாளர் நிலா, முன்பள்ளி ஆசிரியர், பெற்றோர்கள் என பெருந்திரளானோர் கலந்து சிறப்பித்தார்கள்.
வவுனியா பொலிஸ் நிலையத்தில் வழக்குத் தொடுநர் பிரிவில் பணியாற்றும் பொலிஸ் பரிசோதகர் புஸ்பலாலின் மகளின் பிறந்த தினத்தை முன்னிட்டு வவுனியா தம்பனைச்சோலை கேதீஸ்வரா வித்தியாலயத்தில் கல்வி கற்றுவரும் 65 வசதியற்ற மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் சீருடை, பாதணிகள் என்பன நேற்று வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
பாடசாலை அதிபர் தலைமையில் பாடசாலையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் ரி.எம். எஸ். எம். தென்னக்கோன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு இப்பாடசாலையில் கல்வி கற்றுவரும் வசதியற்ற 65 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் சீருடைகள், பாதணிகள் என்பனவும் வழங்கிவைத்தார்.
வவுனியா தலைமை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, பாடசாலையின் பிரதி அதிபர், ஆசிரியர்கள் எனப்பலரும் கலந்துகொண்ட நிகழ்வில் இறுதியில் பாடசாலையில் கற்றல் நடவடிக்கை மேற்கொண்டுவரும் 11 ஆசிரியர்களுக்கு சிறப்பு நினைவுப்பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டது.
பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரினால் 1இலட்சத்து ஐம்பதினாயிரம் ரூபா பெறுமதியில் இப்பொருட்கள் வழங்கிவைத்தமை குறிப்பிடத்தக்கது.
சென்னையில் பச்சிளம் குழந்தையை தரையில் அடித்து கொலை செய்து விட்டு, பாலூட்டியபோது மூச்சுத்திணறி குழந்தை இறந்துவிட்டதாக நாடகமாடிய பெண்ணை பொலிசார் கைது செய்தனர்.
காசிமேட்டை சேர்ந்தவர் சத்யராஜ். இவர் மனைவி செலஸ்டின் (23). தம்பதிக்கு நிஷாந்தி என்ற பெண் குழந்தை உள்ள நிலையில் செலஸ்டின் மீண்டும் கருவுற்றார். இதையடுத்து கடந்த மாதம் மீண்டும் பெண் குழந்தை பிறந்தது. கடந்த 12–ந் திகதி அந்த குழந்தை திடீரென இறந்தது.
பாலூட்டியபோது குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்து விட்டதாக செலஸ்டின் கூறினார். இதுகுறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையின் பிணத்தை பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில், குழந்தையின் பின்னந்தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, இறந்தது தெரிந்தது. இதையடுத்து பொலிசார் செலஸ்டினிடம் விசாரணை நடத்தினர். அப்போது தனது குழந்தையை தரையில் அடித்து கொன்றதை ஒப்புக்கொண்டார். அவர் அளித்து உள்ள வாக்குமூலத்தில்,
எனது கணவர் சத்யராஜூடன் வேளச்சேரியில் கட்டிட வேலைக்கு சென்றிருந்தபோது அவருக்கு ஏற்கனவே ஜெயந்தி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்று, அவளுக்கு 3 வயதில் ஒரு குழந்தை இருப்பது தெரியவந்தது.
ஏற்கனவே ஒரு பெண்ணை திருமணம் செய்து விட்டு அதனை மறைத்து என்னை 2–வதாக திருமணம் செய்து கொண்டது எனக்கு வாழ்க்கையில் வெறுப்பை ஏற்படுத்தியது.
1½ வயதில் பெண் குழந்தையை வைத்துக்கொண்டு வாழ்க்கை நடத்த முடியாமல் கஷ்டப்பட்டு வந்த நான், இந்த குழந்தையையும் வளர்க்க முடியாமல் கஷ்டப்படுவதைவிட அந்த குழந்தையை கொன்று விடலாம் என்று முடிவு செய்தேன்.
இதனால் மனதை கல்லாக்கிக்கொண்டு குழந்தையின் காலை பிடித்து, மண்டையை தரையில் ஓங்கி அடித்தேன். இதில் குழந்தை அலறி துடித்து சிறிது நேரத்தில் இறந்துவிட்டது. உடனே குழந்தையை தூக்கி தொட்டிலில் போட்டுவிட்டு குழந்தை பால் குடிக்கும்போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்துவிட்டதாக நாடகமாடினேன் என கூறியுள்ளார். இதையடுத்து பொலிசார் செலஸ்டினை கைது செய்துள்ளனர்.
அமெரிக்காவில் கட்டியணைத்தவாறே இளம்காதல் ஜோடி படுக்கையில் இறந்து கிடந்துள்ள சோக சம்பவம் நடந்துள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நியூபோர்ட் பீச் பகுதியில் உள்ள வீட்டில் இளம்காதல் ஜோடியினர் இறந்து கிடப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் இருவரும் அதிகமான அளவு ஊக்க மருந்து உட்கொண்டிருந்தது தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து இறந்து கிடந்த மிச்செல்லா ஆவிலாவின் (23) பெற்றோர் பாலோ மற்றும் அட்ரியானா கூறுகையில், எங்களுடைய மகளும், அவளுடைய காதலனும் அதிகமாக மது அருந்த மாட்டார்கள். ஊக்க மருந்து சாப்பிட்டதால் தான் இறந்திருக்கின்றனர்.
மிச்செல்லா பள்ளி பருவத்தில் செய்த சாதனைகளுக்காக அவளுக்கு ஜார்ச் புஸ் ஒருமுறை கடிதம் அனுப்பினார். நல்ல கெட்டிக்கார பெண். அவளுடைய அக்காவை போல ஒரு பத்திரிகையாளராக வேண்டும் என ஆசைப்பட்டாள். நிறைய புத்தகங்கள் படிப்பததோடு, நிறைய எழுதும் பழக்கமும் அவளுக்கு உண்டு.
கடந்த சில ஆண்டுகளாக மிச்செல்லா, அவளுடைய காதலன் கிறிஸ்டியன் கென்ட் (20) உடன் சேர்ந்து பாலி, இந்தோனேசியா, கோஸ்டா ரிக்கா, ஜப்பான் மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் பயணம் செய்து சுற்றிப்பார்த்தார்.
சம்பவம் நடைபெற்றதற்கு முன்தினம் இருவரும் ஒரு பார்ட்டிக்கு சென்றுவிட்டு நள்ளிரவு 12.30 மணிக்கு வீடு திரும்பினார். மறுநாள் காலையில் அலுவலக வேலைக்கு செல்ல வேண்டும் என நான் எழுப்ப சென்றேன். அப்போது ரோமியோ – ஜூலியட் போல இருவரும் கட்டியணைத்தபடி இறந்துகிடந்தனர் என தெரிவித்துள்ளார்.
ஆகஸ்டு மாதம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிறிஸ்டியனை பிரிந்து கல்லூரி செல்லவிருக்கும் தருணம் பற்றி பதிவிட்டுள்ள மிச்செல்லா, நான் என்னுடைய வாழ்க்கை துணை மற்றும் நண்பனுக்கு குட் பை சொல்கிறேன்.
நான் அந்த தருணத்தை நினைத்து பார்க்க விரும்புகிறேன். நான் வேலை செய்த இடத்திற்கு வந்து நீ இதே கண்களால் என்னை பார்த்து சிரித்தாய். பின்னர் அருகில் வந்து என்னுடைய போன் நம்பரை கேட்டை. சரியான நேரத்தில் என்னை கண்டுபிடித்திருக்கிறாய். நரகத்தில் இருந்த என்னுடைய வாழ்க்கையை மாற்றி சவாரி செய்ய வைத்தாய் என பதிவிட்டிருந்தார்.
அழகிற்காக மார்பக அறுவை சிகிச்சை செய்த பிரித்தானிய தாய், அடுத்த 17 நாட்களில் பரிதாபமாக பலியாகியுள்ளார். இங்கிலாந்தை சேர்ந்த லூயிஸ் ஹார்வி என்ற 36 வயது தாய், கவர்ச்சியாக இருக்க ஆசைப்பட்டு மார்பக அறுவை சிகிச்சைக்கு சென்றுள்ளார்.
நார்விச் பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஹார்விக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். அடுத்த சில நாட்களில் அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு தரையில் மயங்கி விழுந்துள்ளார்.
உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், அவருடைய நுரையீரலில் இருந்து தமனிக்கு செல்லும் ரத்தக்குழாய்களில் ரத்தம் கட்டியிருப்பதாக தெரிவித்தனர்.
மேலும் அறுவை சிகிசிச்சை செய்வது மிகவும் ஆபத்தானது எனவும் எச்சரித்துள்ளனர். இதனையடுத்து வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்ட ஹார்வி அறுவை சிகிச்சை முடிந்த 17 நாட்களில் வீட்டில் பரிதாபமாக இறந்து கிடந்தார்.
இந்த சம்பவத்தால் தாயை இழந்து ஆதரவற்றவர்களான கெய்லே-அன்னே (18), ஓவன் (11) மற்றும் ஜாக்சன் (6) ஆகிய மூன்று குழந்தைகளையும் அவருடைய நண்பர் மார்க் ஹட்சன் கவனித்து வருகிறார். பண உதவிக்காக தற்போது நண்பர்களின் உதவியை நாடியுள்ளார்.
ஆசிய தீவுகளில் ஒன்றான போர்னியாவில் போனி எனும் ஓரங்குட்டான் குரங்கை வைத்து மேடம் என்ற பெண் பாலியல் தொழில் செய்து வந்துள்ளார். Kareng Pangi என்ற கிராமத்தில் நடைபெறும் இந்த பாலியல் தொழிலில், போனியுடன் நேரத்தை செலவிட ஆண்கள் அதிக பணத்தினை கொடுத்துள்ளனர். ஒன்றும் அறியாத போனி, ஆண்கள் வந்தால் திரும்பி நின்றுக் கொண்டு, தன்னை தானே அவர்களுக்காக ஒத்துழைத்து கொள்கிறது.
போனி மிகவும் ஈர்ப்பாக தெரிய வேண்டும் என்பதற்காக, அந்த மேடம், போனியின் உடல் சரும முடிகளை ஷேவிங் செய்வதை தனது அன்றாட வேலையாக செய்து வந்துள்ளார். இதனால் மேடத்திற்கு அதிக பணம் கிடைத்தது. ஆனால் போனிக்கு அதிக கொசு கடியின் தொல்லையால், சரும பிரச்சனைகள் மூலம் அவதிப்பட்டது. போனி மற்ற மனித குரங்குகளை போல் மரத்தில் ஏறாது, கீழே தரையில் மட்டுமே படுத்துக் கொள்ளும்.
உராங்குட்டானுடன் ஒரு இரவு தங்குவதற்கு 3 டாலர் வசூலிக்கப்பட்டது. அந்தப் பெண், குட்டியை அடித்துத் துன்புறுத்தி வாடிக்கையாளர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை கற்றுக்கொடுத்தார்.
பல முறை காப்பாற்றப்பட்ட போனியை, காட்டுக்குள் அனுப்பும் முயற்சிகள் பத்து ஆண்டுகள் தோல்வியில் முடிந்தது. கடைசியில் 2013-ல் போனி காப்பற்றப்பட்ட நிகழ்வு ஆவணப்படமாக எடுக்கப்பட்டது. அதை பார்த்த மேடம், என் குழந்தையை எடுத்து செல்கிறார்கள், இது நியாயம் அல்ல என கதறி அழும் காட்சிகள் பதிவாகியது.
அதன் அடிப்படையில், 2005-ல் யுனிசெப் வெளியிட்ட அறிக்கையில், ஒவ்வொரு வருடமும் 10,000 குழந்தைகள் மற்றும் பெண்கள் இந்தோனேசியாவில் பாலியல் அடிமைகளாக சிக்குகின்றனர். இவர்களில் மூன்றில் ஒருவர் 18 வயதுக்கும் குறைவானவர்கள் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஓரங்குட்டானை தேடி ஆண்கள் வந்ததற்கு என்ன காரணம்? உள்ளூர் பனை எண்ணெய் விவசாயிகள் மலிவான விலைக்கு பாலியல் உறவு கிடைத்தால் போதும் என்று ஆசைப்பட்டுள்ளனர். இதனால், விவசாயிகள் சிலர் ஓரங்குட்டான் குட்டியுடன் பாலியல் உறவு கொள்வதை வாடிக்கையாக வைத்துக்கொண்டனர்.
ஓரங்குட்டானைவிட உருவத்தில் இரண்டு மடங்கு எடை கொண்ட குண்டான முதியவர் ஒருவர் தினமும் குட்டியைத் தேடி பெண் வீட்டுக்கு வரத் தொடங்கினார். சிலர் புதிய அனுபவத்தைப் பெறவும் ஓரங்குட்டானைத் தேடி வந்தனர். இந்தச் சம்பவம் நடந்து பல ஆண்டுகள் கடந்துவிட்டன. இப்போது அந்த ஓரங்குட்டான் குட்டி எப்படியிருக்கிறது என்பது குறித்து சர்வைவல் பவுண்டேசன் அமைப்பின் இயக்குநர் மைக்கேல் ஊடகத்திடம் விவரித்துள்ளார்.
ஓர் இருட்டு அறையில் உடலில் ரனங்களுடன் அமர்ந்திருந்தாள். அவள் கால்களில் சங்கிலி கட்டப்பட்டிருந்தது. மிகவும் குட்டியாக இருந்தாள். இப்போது வளர்ந்துவிட்டாள். சில ஆண்டுகள் ஆண்களைப் பார்த்தாலே அலறி அழுவாள். பயத்துடன் பதுங்கிக் கொள்வாள். போனி, ஒவ்வொரு முறையும் அந்தப் பெண்ணைப் பார்க்கும்போதும் அலறி அழுது, மலம் கழித்துவிடுவாள். போனியை அவர்கள் அனைவரும் அவ்வளவு கொடுமைப்படுத்தியிருக்கிறார்கள். கொஞ்சம் கொஞ்சமாக போனியின் பயத்தைப் போக்கினோம்.
15 ஆண்டுகள் கடந்துவிட்டன. இப்போது போனி ஆண்களைப் பார்த்தால் பயப்படுவது கிடையாது. சுதந்திரமாக காப்பகத்தின் மரங்களில் தாவி விளையாடுகிறாள். சிறுவயதில் போனி சந்தித்த அந்த வலிமிகு அனுபவம்தான் இந்தளவுக்கு வெளி உலகின்மீது பயத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று பேசியுள்ளார்.
புவி வெப்பமயமாதலையும், பருவகாலத்தையும் புரிந்துகொள்ள முடியாத அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் மூக்கை அறுத்த இந்திய இளம்பெண்ணுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
அமெரிக்காவின் பல மாகாணங்களில் அதிபயங்கரமான பனிப்பொழிவு நீடித்து வருகிறது. குளிர்காலம் என்பதால் பனியின் தாக்கம் அதிகமாக உள்ளது. சில பகுதிகளில் பனிப்புயலும் வீசியுள்ளது. பனிப்புயல் காரணமாக அமெரிக்காவின் பல்வேறு விமான நிலையங்களில் இருந்து இயக்கப்படும் 1600க்கும் மேற்பட்ட விமானங்கள் நேற்று ரத்து செய்யப்பட்டன.
தலைநகர் வாஷிங்டனில் அதிகமான பனிப்பொழிவு ஏற்பட்டு, கடந்த 21 ஆம் திகதி நிலவரப்படி அங்கு மைனஸ் 2 டிகிரி என்ற அளவில் கடுமையான குளிர் வாட்டி வதைத்தது. இந்த குளிர் தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த ஜனாதிபதி டிரம்ப், ‘புவி வெப்பமயமாதலில் என்னதான் நடந்தது? முந்தைய வரலாறுகளை எல்லாம் முறியடிக்கும் வகையில் கொடூரமான பனிப்பொழிவு நீடித்து வருகிறது’ என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்தியாவின் அசாம் மாநிலம், ஜோர்ஹாத் நகரை சேர்ந்த Astha Sarmah என்னும் 18 வயது இளம்பெண் அமெரிக்க ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியான இந்தப் பதிவை கிண்டல் செய்து அதகளம் செய்துள்ளார்.
‘உங்களைவிட நான் 54 வயது இளையவள். சுமாரான மதிப்பெண்களுடன் தற்போதுதான் நான் உயர்நிலை கல்வியை முடித்திருக்கிறேன். இருந்தாலும், பருவகாலநிலையும் சீதோஷ்ணநிலையும் ஒன்றல்ல என்பதை நான் உங்களுக்கு தெரிவித்து கொள்கிறேன்.
உங்களுக்கு இது புரிவதற்கு வசதியாக நான் பயன்படுத்திய encyclopedia நூலை உங்களுக்கு இரவலாக அனுப்பி வைக்கவும் தயாராக இருக்கிறேன். அந்த நூலில் இதுதொடர்பான படங்கள் உள்பட அனைத்து விபரங்களும் அடங்கியுள்ளது’ என அஸ்தா சர்மாஹ் தனது பதில் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அவரது இந்த கருத்துக்கு அமெரிக்கா மற்றும் உலக நாடுகளில் உள்ள டுவிட்டர் கணக்குகளில் இருந்து சுமார் 24 ஆயிரம் ’லைக்’ கிடைத்துள்ளன. மேலும், இந்த பதிவு ஐயாயிரத்துக்கும் அதிகமானவர்கள் பகிரவும் செய்துள்ளனர். அராபிய கடல் பகுதியில் நிலவும் பருவநிலை மாற்றம் தொடர்பாக ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்ள அஸ்தா சர்மாஹ் விரும்பினால் அவருக்கு தேவையான உதவிகள் செய்ய தயாராக இருப்பதாக ஆதரவு கரத்தையும் பலர் நீட்டியுள்ளனர்.
மேலும் தங்கள் நாட்டு ஜனாதிபதியின் கத்துக்குட்டித்தனமான பேச்சை இந்த இளம்பெண் சுட்டிக்காட்டியதுடன், சாதுரியமான பதிலால் டிரம்ப்பின் மூக்கை அறுத்ததற்கு அமெரிக்கர்களில் பலர் தங்களது பதில்கள் மூலம் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
நம் உள்ளங்கைகளில் காணப்படும் ரேகையைக் கொண்டு நம் வாழ்வில் நடக்கும் விஷயங்களை கை ரேகை ஜோதிடம் மூலம் அறிந்து கொள்ளலாம். அந்தவகையில் உங்கள் உள்ளங்கைகளில் ரேகையை தவிர நிறைய கோடுகள் காணப்பட்டால் அதற்கு என்ன அர்த்தம் என்று தெரிந்து கொள்ளுவோம்.
அதிக கோடுகள் : உள்ளங்கைகளில் அதிகமான கோடுகள் தென்பட்டால் என்ன நடக்கும் என்பது நம்மில் நிறைய பேருக்குத் தெரியாது. முக்கியமான விதி ரேகைகளும் சந்திர, சூரிய, சுக்கிர மேடுகளும் அதனுடைய பலன்கள் பற்றி மட்டுமே தெரிந்து வைத்திருக்கிறோம்.
உங்கள் உள்ளங்கைகளில் அதிகமான கோடுகள் காணப்படுவது நீங்கள் நிறைய ஆடம்பரமான விஷயங்கள் குறித்து கனவு காண்பீர்கள் என்பதை குறிக்கிறது. இநத சிந்தனை உங்களுக்கு நிறைய குழப்பங்களை ஏற்படுத்தி உங்களை ஒரு குழப்பவாதியாக வைத்திருக்கும்.
அதிக கிடைமட்ட கோடுகள் : உங்கள் உள்ளங்கைகளில் அதிக கிடைமட்ட கோடுகள் தென்பட்டால் நீங்கள் நிறைய நேரங்களில் விரக்தியை உணர்வீர்கள். உங்களுடைய உணர்வுகளை மற்றவர்கள் மற்றவர்கள் புரிந்து கொள்ளாதிருப்பதை நினைத்து விரக்தியில் இருப்பீர்கள். இதனால் உங்கள் மனது கூலாக இல்லாமல் அலை பாய்ந்து கொண்டே இருக்கும்.
அதிக தடை கோடுகள் : உங்களுடைய உள்ளங்கை பார்ப்பதற்கு கடினமாகவும் மற்ற ரேகை களுக்கு குறிக்கீடாக நிறைய தடை கோடுகள் கொண்டும் தென்பட்டால் பணம் தேடுவதில் அவசரமாக இருப்பீர்கள்.
அதிக தடை கோடுகள் மற்றும் மென்மையான உள்ளங்கை : உங்கள் உள்ளங்கை மிகவும் மென்மையாக அதே நேரத்தில் மற்ற ரேகை களுக்கு குறிக்கீடாக நிறைய தடை கோடுகள் கொண்டும் தென்பட்டால் நீங்கள் எளிதில் உணர்ச்சி வசக்கூடிய நபராகவும், ஒரு பொறுப்பற்ற அசாதாரண மனிதராகவும் மற்றவர்களுக்கு தென்படுவீர்கள்.
பொதுக் கருத்து : பெண்களை பொருத்த வரை இந்த நிறைய கோடுகள் சீரற்ற சிந்தனையையும், குழப்பங்களையும் வழங்குகிறது. ஆண்களை பொருத்த வரை குடும்ப மற்றும் சுற்றுவட்டார அழுத்தத்தை கொடுக்கிறது.
கேரளாவை சேர்ந்த 3 குழந்தைகளின் தாய் தவறாக சித்தரிக்கப்பட்ட நிர்வாண வீடியோ வெளியான காரணத்தால் தனது கணவன் மற்றும் குழந்தைகளை பிரிந்து, தனி ஆளாக போராடி தற்போது தான் குற்றமற்றவள் என நிரூபித்துள்ளார்.
தொடுபுழாவை சேர்ந்த சோபா என்ற பெண்மணிக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு, பெண்மணி ஒருவர் ஆடைகளை மாற்றும் நிர்வாண வீடியோ வெளியானது.
அந்த வீடியோவில், மார்பிங் தொழில்நுட்பத்தில் சோபாவின் முகம் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. வாட்ஸ் ஆப் வாயிலா இந்த வீடியோ வேகமாக பரவி, சோபாவின் கணவருக்கும் வந்துள்ளது.
இதனால், இவர்களது குடும்பத்துக்கு பெரிய பிரச்சனை ஏற்பட்டுள்ளது. கணவர் மற்றும் அவரது குடும்பத்தார் சோபாவை நம்புவதற்கு தயாராகவில்லை. இந்த வீடியோ தொடர்பாக சோபா, பொலிசில் புகார் அளித்தார்.
இதனால் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தப்பட்டதில், இதனை அவமானமாக கருதிய கணவன், சோபாதான் அந்த வீடியோவை வெளியிட்டார் என கூறியதால், சோபாவுக்கு எதிராக விசாரணை திரும்பியது.
மேலும், சோபாவால் எனது குழந்தைகளும் மோசமாகிவிடுவார்கள் என கூறி, நீதிமன்றத்தில் விவாகரத்து கோரினார் கணவர். நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையிலும், தான் குற்றமற்றவள் என நிரூபிப்பதற்காக சோபா போராடி வந்தார்.
விவாகரத்து வழக்கு நடந்து வந்த காரணத்தால், குழந்தைகளை தன்னுடன் கணவர் வைத்துக்கொண்டார். தனது குழந்தைகளை பார்ப்பதற்கு சோபா சிரமப்பட்டுள்ளார்.
மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே தனது குழந்தைகளை பார்ப்பதற்கு அனுமதிக்கப்பட்டார். இதற்கிடையில் இந்த உலகம் தன்னை நம்பவேண்டும். எதிர்காலத்தில் எனது குழந்தைகள் தலைநிமிர்ந்து நடக்க வேண்டும். அவர்கள் தன்னை புரிந்துகொள்ள வேண்டும் என சோபா போராடியுள்ளார்.
கேரளாவின் C-DAC ( a cyber forensics research and investigation ) தொடர்பு கொண்டு அந்த வீடியோ குறித்த உண்மையை ஆராய புகார் கொடுத்துள்ளார். இந்த சோதனையில், அந்த வீடியோவில் உள்ளது சோபா இல்லை என்பது உறுதியானது.
மேலும், இந்த வீடியோவை பரப்பியது Litto என்ற வாலிபர் என சைபர் கிரைம் கண்டுபிடித்தது. தற்போது Litto கைது செய்யப்பட்டு அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அனைத்து பிரச்சனைகளும் முடிந்து விட்டநிலையில், என்னுடைய குழந்தைகளை மீட்டெடுப்பதன் மூலம் என எதிர்காலம் எனக்கு அமையும் என்று கூறியுள்ளார். இந்த சம்பவத்தில் எனது கணவர் எனக்கு உறுதுணையாக இருந்திருந்தால், நான் இவ்வளவு பிரச்சனைகளை எதிர்கொண்டிருக்கமாட்டேன் என கூறியுள்ளார்.
இந்தோனேசியாவில் கடந்த அக்டோபர் மாதம் விபத்துக்குள்ளான லயன் ஏர்லைன்ஸ் விமானம் எப்படி கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது என்பது குறித்த விமானத்தின் கருப்பு பெட்டி தகவல் வெளியாகியுள்ளது.
தலைநகர் ஜகார்டாவில் இருந்து பங்கல் பினாங் நகருக்கு லயன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஜேடி610 என்ற விமானம் கடந்த அக்டோபர் 29-ம் திகதி காலை புறப்பட்டது. இந்த விமானம் போயிங் 737 மேக்ஸ் 8 வகையைச் சேர்ந்தது.
விமானத்தில் மொத்தம் 188 பேர் பயணித்த நிலையில், விமானம் புறப்பட்ட 13 நிமிடங்களில் தகவல் தொடர்பை இழந்து கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்தவர்கள் அனைவரும் இறந்துவிட்டதாக இந்தோனேசிய அரசு அறிவித்தது.
நீண்ட தேடுதலுக்குப்பின் விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டது. அதை ஆய்வு செய்த அதிகாரிகள் விமானம் எப்படி விபத்துக்குள்ளானது என்பது குறித்த தகவலை வெளியிட்டு, அதன் முதல்கட்ட அறிக்கையை இந்தோனேசிய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.
போயிங் விமானத்தின் முன்னாள் பொறியாளரும், செயற்கைக்கோள் மற்றும் விமானப் போக்குவரத்துத் துறையில் நீண்ட அனுபவம் கொண்ட பீட்டர் லேமே தலைமையிலான குழு பிளாக் பாக்ஸை ஆய்வு செய்து அறிக்கை அளித்துள்ளது. அந்த அறிக்கையில், விமானத்தில் இருந்த தானியங்கி பாதுகாப்பு முறை செயலிழந்து விமானத்தின் மூக்குப்பகுதியை கீழ்நோக்கி இழுத்துள்ளது.
விமானத்தின் கேப்டன் விமானத்தைப் பல முறை மேல்நோக்கி தூக்கிப் பறக்க முயற்சித்தும் விமானத்தின் மூக்குப்பகுதி கீழ்நோக்கியே சரிந்துள்ளது. இதனால், கேப்டனின் கட்டுப்பாட்டை இழந்து விமானம் விபத்துக்குள்ளாகி இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையின் சுருக்கம், இந்தோனேசிய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், இது முதல்கட்ட அறிக்கைதான், இன்னும் தீவிரமாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். சென்சாரில் இருந்து தவறான சமிக்ஞைகள் ஏதும் வந்ததா, விமானத்தின் மூக்கு கீழ்நோக்கி சரிந்ததா என்பது குறித்தும் ஆய்வு செய்து வருகிறார்கள்.
கருப்பு பெட்டியை ஆய்வு செய்த பொறியாளர் பீட்டர் லேமே கூறுகையில், விமானத்தில் இருந்த தானியங்கி பாதுகாப்பு சாதனம் செயலிழந்திருக்கக் கூடும் அல்லது தானியங்கி பாதுகாப்பு சாதனத்துக்கு சென்சாரில் இருந்து தவறான தவறான தகவல் தரப்பட்டு இருக்கும்.
அதனால்தான் விமானத்தின் மூக்குப் பகுதி கீழ்நோக்கி தரையை நோக்கிச் சரிந்துள்ளது. ஆனால் விமானி பலமுறை விமானத்தை மேல்நோக்கி மிக உயரமாகப் பறக்கவைக்க முயன்றுள்ளார். ஆனால், முடியவில்லை என்பது தெரியவந்துள்ளது.
ஏறக்குறைய விமானம் புறப்பட்ட 11 நிமிடங்களில் 26 முறை இதேபோன்று விமானத்தை மேல்நோக்கி விமானத்தைப் பறக்க வைக்க முயன்றிருக்கிறார். ஆனால், விமானம் டைவ் அடித்துள்ளது. ஆனால், கேப்டனால் எதையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. நூற்றுக்கணக்கான உயிர்களுடன் விளையாடிய ஆபத்தான விளையாட்டாகிவிட்டது.
அதேசமயம், சென்சாரில் இருந்து தவறான தகவல் ஏதும் தரப்பட்டதா என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டி இருக்கிறது. ஏனென்றால், இதற்கு முன் இதுபோன்ற பிரச்சினை பல்வேறு விமானங்களில் நடந்துள்ளது. இந்தப் பிரச்சினையை போயிங் நிறுவனத்தினர் சரி செய்தார்களா எனத் தெரியவில்லை. சரி செய்திருந்தால், விபத்து நிகழ்ந்திருக்காது என கூறியுள்ளார்.
இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் தமிழக காதல் ஜோடி, ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையைச் சேர்ந்த மோனிஷா(21) எனும் கல்லூரி மாணவியும், அதே பகுதியைச் சேர்ந்த ஹேமந்த்குமார் (23) என்பவரும் மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், இவர்களின் காதல் விவகாரம் இருவரின் பெற்றோருக்கும் தெரிந்ததால், பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மாணவி மோனிஷாவை அவரது பெற்றோர் கல்லூரிக்கு அனுப்பாமல் வீட்டிலேயே வைத்துள்ளனர்.
இந்நிலையில் வீட்டை விட்டு வெளியேறிய மோனிஷா, காதலர் ஹேமந்த்குமாருடன் சேர்ந்து ஆந்திர மாநிலத்திற்கு சென்றுள்ளார். அங்கு குப்பம் ரயில் நிலையத்திற்கு சென்ற அவர்கள், அவ்வழியாக வந்த ரயிலின் முன்பு பாய்ந்தனர்.
இதில் இருவரும் உடல் சிதறி பலியாகினர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொலிசார், சம்பவ இடத்திற்கு விரைந்து உடல்களை மீட்டனர். அப்போது காதல் ஜோடியின் பைகள் கிடைத்தன.
அதில் இருந்த கடிதம் ஒன்றில், ’இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தோம். ஆனால் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், வாழ பிடிக்காமல் தற்கொலை செய்து கொள்கிறோம். எங்களது தற்கொலைக்கு யாரும் காரணமில்லை’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து, இருவரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பொலிசார், இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
‘குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த ரியாமிகா சென்னையில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குனர் ஹரியின் உதவியாளர் சுந்தர் இயக்கத்தில் தமிழ், இந்தி ஆகிய படங்களில் வெளியாக வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘எக்ஸ் வீடியோ’. முதல் படத்திலே மிகவும் துணிச்சலாக கவர்ச்சியான பாத்திரத்தில் நடித்து அனைவருடைய கவனத்தையும் தன்னுடைய பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் வளர்ந்து வரும் நடிகை ரியாமிகா (26).
அதனை தொடர்ந்து ‘அகோரியின் ஆட்டம் ஆரம்பம்’, ‘குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்’ படங்களில் நடித்து ஓரளவு தமிழ் மக்களுக்கு தெரிந்த முகமாக மாறியிருந்தார்.
இந்த நிலையில் அவர் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வளர்ந்து வரும் இளம்நடிகை திடீரென தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவரது உடலை கைப்பற்றியுள்ள பொலிஸார் சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரியாமிகாவுக்கு வரும் வருமானத்தை கொண்டுதான் அவரது குடும்பம் நடந்து கொண்டிருந்தது.
அவருக்கு சரியாக பட வாய்ப்புகள் இல்லை. வருமானமும் இல்லை. காதலனுடன் தகராறு என மன உளைச்சலில் இருந்து வந்ததால் அவர் தற்கொலை செய்து கொண்டு இருப்பது முதல் கட்டவிசாரணையில் தெரியவந்து உள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.