புத்தளம் – நாத்தாண்டியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்தவர்கள் அனைவரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு பஸ் ஒன்று நாத்தாண்டியா – வலஹப்பிட்டிய பகுதியில் நேற்று விபத்திற்குள்ளாகி இருந்தது.
இதில் நால்வர் உயிரிழந்ததுடன், 23 பேர் காயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களில் மூன்று பேர் பெண்கள் எனவும், அவர்கள் மூவரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் குறிப்பிடப்படுகின்றது.
குறித்த சொகுசு பஸ் பாதையை விட்டு விலகி, வலஹப்பிட்டிய பகுதியில் நீரோடையில் விழுந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள் மேலதிக சிகிச்சைகளுக்காக மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கிளிநொச்சி – பரந்தன், ஏ 35 வீதியின் கண்டாவளை பகுதியில் கப் ரக வாகனம், மாடொன்றுடன் மோதி தடம்புரண்டுள்ளது. குறித்த விபத்து சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவில் இருந்து மரக்கறிகளை ஏற்றிக்கொண்டு பரந்தன் நோக்கி பயணித்த கப் ரக வாகனமே வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்கு உள்ளாகியுள்ளது.
வாகனத்துடன் மோதிய மாடு உயிரிழந்துள்ள போதும், சாரதி எவ்வித பாதிப்பும் இன்றி உயிர் தப்பியுள்ளார். இந்த நிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
அனைத்து சந்தர்ப்பங்களிலும் சட்டரீயாகவும் நாடாளுமன்ற சம்பிரதாயங்களுக்கு அமையவும் செயற்பட்டதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
கடந்த ஒக்டோபர் மாதம் 27ஆம் திகதி முதல் தற்போது வரை நாட்டின் சட்டத்திற்கும், நாடாளுமன்ற சம்பிரதாயத்திற்கும், சர்வதேச நாடாளுமன்ற சங்கம் மற்றும் பொதுநலவாய நாடாளுமன்ற சங்கத்தின் வரைமுறைகளுக்கு உட்பட்டே செயற்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று காலை நாடாளுமன்றம் கூடிய சந்தர்ப்பத்தில் சம்பிக்க ரணவக்க உரையாற்றியிருந்தார்.
அவரது உரையில், சபாநாயகரின் பெயர் அடிப்பட்டதாகவும், அதற்கு பதிலளிக்கும் வகையில் சபாநாயகர் கரு ஜயசூரிய இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானிக்கு மதிப்பளிக்கும் வகையில் தான் செயற்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் ஜனாதிபதியை நேரிசல் சந்தித்து அவரின் செயற்பாட்டிற்கு எதிர்ப்பு வெளியிட்டதாகவும், நாடாளுமன்றத்தை கூட்டி பெரும்பான்மை கருத்திற்கு இடமளிக்குமாறும் ஜனாதிபதியிடம் கேட்டுக் கொண்டிருப்பதாக சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.
பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவம் படித்து வந்த மாணவி குடும்ப வறுமையின் காரணமாக படிப்பினை பாதியில் நிறுத்திவிட்டு தெருவில் இட்லி விற்பது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பழவந்தாங்கல், பக்தவச்சலம் நகர், பிரதான சாலையில் வசிப்பவர் பழனிசாமி (48). இவர் சைக்கிளில் தெரு தெருவாக சென்று டீ வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு வனிதா (43) என்ற மனைவியும். கிருபா (21), கவுசல்யா (19), கவுரி (17) என்ற மூன்று மகள்களும் உள்ளனர்.
இவரது மூத்த மகள் கிருபா 2015ம் ஆண்டு பிளஸ் 2 தேர்வில் 980 மதிப்பெண்கள் பெற்றார். மருத்துவருக்கு படிக்க ஆசைப்பட்ட தனது மகளின் ஆசையை நிறைவேற்ற விரும்பிய பழனிச்சாமி சொத்தை விற்று வைத்திருந்த பணத்தில் பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரியில் படிக்க 5 லட்சம் பணத்தை கட்டி கிருபாவை சேர்த்தனர்.
முதலாம் ஆண்டு படிப்பை புனேவில் முடித்த கிருபா 2ம் ஆண்டு படிப்பினை பிலிப்பைன்ஸ்சில் தொடர்ந்தார். ஆண்டுக்கு 3 லட்சம் மருத்துவ கல்வி கட்டணமும், மாதம் 15 ஆயிரம் ஹாஸ்டல் கட்டணமும் செலுத்த வேண்டும். இவற்றை 2 ஆண்டுகள் மட்டும் கிருபாவின் தந்தையால் கட்ட முடிந்தது.
3 ஆம் ஆண்டு படிப்பினை தொடர்வதற்கு பணம் இல்லை. இதனால், மனமுடைந்த கிருபா தனது தந்தைக்கு தொல்லை கொடுக்க விரும்பாமல் மருத்துவ படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு சென்னை திரும்பினார்.
இந்நிலையில், தற்போது கிருபா தனது தாயார் வனிதாவுக்கு துணையாக பழவந்தாங்கலில் ஒரு பள்ளக்கூடம் எதிரில் உள்ள பிளாட்பாரத்தில் தள்ளுவண்டி கடையில் இட்லி தோசை விற்கும் தொழிலில் முழுமையாக தன்னை ஈடுபடுத்தியுள்ளார்.
இதுகுறித்து மருத்துவ மாணவி கிருபா கூறியதாவது, முதலில் மருத்துவருக்கு படிக்க ஆசைப்பட்டது எனது மிகப்பெரிய தவறு. சேலத்தில் ஒழுங்காக மளிகை கடை நடத்தி சந்தோசமாக குடும்பம் நடத்தி வந்த எங்கள் பெற்றோர் எனது விருப்பத்திற்காக தொழிலை விட்டு, சொத்தை விற்று சென்னைக்கு வந்தோம்.
இப்போது தனது தந்தை தெருதெருவாக சைக்கிளில் டீ விற்று வருகிறார். தாயார் தள்ளு வண்டியில் டிபன் விற்கிறார். என்னால் தான் இந்த நிலைக்கு அவர்கள் வந்ததால் தற்போது அவர்களுக்கு உதவியாக தள்ளுவண்டிக்கடையில் வேலைசெய்து வருகிறேன்.
மருத்துவர் படிப்பை தொடர வேண்டுமே என்ற ஆசை உள்மனதில் இருந்தாலும் எங்கள் குடும்ப நிலையை நினைத்து அவர்களுக்கு உதவியாக இருப்பதை பெருமையாக நினைக்கிறேன். எனது தந்தை தாயாரும் நானும் என்னதான் உழைத்தாலும் வரும் வருமானம் வாடகைக்கும் சாப்பாடு மற்றும் கரன்ட் பில்லுக்குமே சரியாக உள்ளது என கண்கலங்கியபடி கூறியுள்ளார்.
பொலன்னறுவை, அரலகங்வில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியிலுள்ள கால்வாயொன்றினுள் கெப் ரக வாகனமொன்று விழுந்து விபத்திற்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு ஏற்றபட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் அம்பாறை பகுதியை சேர்ந்த சமன் திஸாநாயக்க என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
மேலும் குறித்த விபத்தில் வேறு எவரேனும் உயிரிழந்துள்ளனரா எனும் அடிப்படையில் குறித்த கால்வாயில் தீவிர தேடுதலில் பொலிஸார் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் வீதி சோதனைச் சாவடியில் கடமையில் இருந்த பொலிஸார் மீது இனந் தெரியாதோரால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதுடன், இதன்போது கடமையில் ஈடுபட்டிருந்த இரு பொலிஸார் உயிரிழந்துள்ளனர்.
வவுணதீவு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் தினேஸ் . பிரசன்னா ஆகிய பொலிஸ் அதிகாரிகளே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
புதிய பிரதமர் நியமிப்பது தொடர்பில் இலங்கை அரசியலில் தற்போது புதிய குழப்பங்கள் ஏற்பட்டுள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. அதற்கமைய ஐக்கிய தேசிய கட்சி சார்பில் 3 பெயர்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான திலக் மாரப்பன, ரஞ்சித் மத்தும பண்டார, ராஜித சேனாரத்ன ஆகிய 3 பேர்களின் பெயர்கள் இவற்றில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
ரணில் விக்ரமசிங்கவுக்கு மீண்டும் பிரதமர் பதவி வழங்கப்படாதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பல முறை சுட்டிக்காட்டியுள்ளார்.
எப்படியிருப்பினும் ரணில் விக்ரமசிங்கவை தவிர ஐக்கிய தேசிய கட்சியில் வேறு எந்த ஒரு உறுப்பினருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் பிரதமர் பதவி வழங்கப்பட கூடாதென்ற முடிவிற்கு ஐக்கிய தேசிய கட்சி ஒருமனதாக தீர்மானித்துள்ளது.
எப்படியிருப்பினும் எதிர்பார்க்காத நபர் ஒருவர் பிரதமர் பதவிக்காக பெயரிட கூடும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன நேற்று அறிவித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சரும் அப்போதைய போக்குவரத்து அமைச்சுருமான சி.வி.விக்னேஸ்வரன் அவர்களின் உத்தரவுக்கு அமைய வவனியா நகரில் அமைந்துள்ள பழைய பேருந்து நிலையம் கடந்த வருடம் இழுத்து மூடப்பட்டது. இதனால் அங்கு அமைந்துள்ள 137 வியாபார நிலையங்கள் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கடந்த மாதம் 31ம் திகதி வடக்கு மாகாண ஆளுனர் ரெஜினோல் குரேயை சந்தித்த வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் மீண்டும் பழைய பேருந்து நிலையத்தை மீளத்திறக்க நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை முன்வைத்திருந்தார்.
இந்த நிலையில் 26.11.20108 அன்று மீண்டும் ஆளுனருக்கு கோரிக்கை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் இளைஞர் ஒருவர் சாலை விபத்தில் திடீரென உயிரிழந்த நிலையில், அவரின் நினைவுகளை உயிருடன் வைத்து கொள்ளும் வகையில் நெகிழ்ச்சியான விடயத்தை வருங்கால மனைவி செய்துள்ளார்.
அரிசோனா மாகாணத்தை சேர்ந்தவர் ரேண்டி ஜிம்மர்மேன். இவருக்கும் டெப்பி கெர்லாச் என்ற பெண்ணுக்கும் கடந்த 11-ஆம் திகதி திருமணம் நடக்கவிருந்தது. ஆனால் சில மாதங்களுக்கு முன்னர் ஏற்பட்ட சாலை விபத்தில் ரேண்டி உயிரிழந்தார். வருங்கால கணவர் இறந்ததால் துடித்து போன டெப்பி நெகிழ்ச்சியான ஒரு விடயத்தை செய்ய முடிவெடுத்தார்.
அதன்படி ரேண்டி மீண்டும் தன்னுடன் சேர்ந்து இருப்பது போன்ற போட்டோ ஷூட்டை கிறிஸ்டி என்ற புகைப்பட கலைஞரை வைத்து நடத்தினார். இதையடுத்து புது ஆடை அணிந்த டெப்பி விதவிதமாக போட்டோ எடுத்து கொண்டார். பின்னர் அந்த புகைப்படங்களில் ரேண்டியும் அருகில் இருப்பது போல கிறிஸ்டி உருவாக்கினார்.
இதோடு, ரேண்டியின் சடலத்தை எரிக்கும் சாம்பலையும் கையில் ஏந்தியபடி டெப்பி போட்டோவுக்கு போஸ் கொடுத்தார். இது குறித்து புகைப்பட கலைஞர் கிறிஸ்டி கூறுகையில், டெப்பியின் வாழ்க்கையில் நடந்த சோகம் மிகபெரியது. அவருக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக இந்த விடயத்தை செய்தேன் என கூறியுள்ளார். டெப்பி – ரேண்டி இருவரும் சேர்ந்து இருக்கும் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் 200,000-க்கும் அதிக முறை பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
பணியாற்றிய நிறுவனம் தீக்கிரையாவது கண்டு நொறுங்கி நின்ற யுவதியின் புகைப்படத்துடன் அதிகம் விவாதிக்கப்பட்ட கனேடியன் ஹொட்டல் தீ விபத்தில் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். குறித்த ஹொட்டலில் பணியாற்றிய 28 வயதான ஸ்டீவன் ஹான்ஸ் என்பவரையே பொலிசார் கைது செய்துள்ளனர்.
அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி கனடவில் உள்ள முக்கிய ஹொட்டல்களில் ஒன்றான வெண்டீஸ் முழுமையாக சேதமடைந்துள்ளது. அதிகாலையில் வேலைக்கு சென்ற ஊழியர்களே குறித்த ஹொட்டலில் தீவிபத்து ஏற்பட்டுள்ளதை அறிந்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில் குறித்த தீ விபத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
மிகுந்த ஆர்வத்துடன் பணியாற்றும் ஒரு நிறுவனம் கண்ணுக்கு முன்பே தீக்கிரையாவதை யாருக்கு கண்டு நிர்க்க முடியும். அதே நிலைதான் அந்த ஹொட்டலில் பணியாற்றும் ஊழியரும், இந்தியருமான அயனாவுக்கு ஏற்பட்டுள்ளது. 12-கும் மேற்பட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு வாகனங்கள் தொடர்ந்து பணியாற்றிய பின்னரே நெருப்பை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
கடும் புகை காரணமாக அப்பகுதி மக்களில் பலர் மருத்துவமனையை நாடியதை தவிர ஆளபாயம் ஏதும் ஏற்படவில்லை. கனடாவில் கல்வி பயின்று வரும் கேரள மாணவி அயனா, பகுதி நேர பணியாக அந்த ஹொட்டலில் வேலை பார்த்து வந்துள்ளார். ஹொட்டல் தீக்கிரையாவதை கண்ணீருடன் கண்டு நின்ற அயனாவின் புகைப்படத்துடன் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன.
குறித்த ஹொட்டல் உரிமையாளருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாகவே கைதான ஸ்டீவன் ஹான்ஸ் ஹொட்டலுக்கு நெருப்பு வைத்துள்ளதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சீனாவில் கொடிய விஷப்பாம்பை காட்டி அச்சுறுத்தி இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் ஒருவர் அதே பாம்பால் கொல்லப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தென் சீனாவில் உள்ள Jiangxi மாகாணத்தில் குறித்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஜியாங்க்ஸி மாகாணத்தில் அமைந்துள்ள Fuzhou நகரில் உள்ள ஹொட்டல் ஒன்றில் குறித்த இளம்பெண்ணை ஏமாற்றி அழைத்து வந்த அந்த இளைஞர், பின்னர் கொடிய விஷப்பாம்புகளை காட்டி மிரட்டி பாலியல் உறவு வைத்துக் கொண்டுள்ளார்.
கொடிய விஷம் கொண்ட 3 பாம்புகளை குறித்த இளைஞர் அந்த ஹொட்டல் அறையில் மறைத்து வைத்திருந்துள்ளார். உறவுக்கு பின்னர் குளியலறைக்கு சென்ற அந்த இளைஞரை குளியல் தொட்டியில் வைத்து பாம்பு கடித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
ஆனால் அதை கண்டுகொள்ளாத அந்த இளைஞர் திரும்ப வந்து படுத்து தூங்கியுள்ளார். இந்த நிலையில் தூக்கத்திலேயே குறித்த இளைஞர் மரணமடைந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவம் நடந்த அடுத்த நாள் பாதிக்கப்பட்ட இளம்பெண் பெற்றோருடன் பொலிசாரிடம் புகார் தெரிவித்திருந்தார்.
ஹொட்டலின் முதல் மாடியில் கொடிய விஷம் கொண்ட பாம்பை பார்க்க நேர்ந்த அதிகாரிகள், உடனடியாக பரிசோதனையில் ஈடுபட்ட நிலையிலேயே இளைஞர் மரணமடைந்த சம்பவம் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து 3 பாம்புகளையும் ஹொட்டல் அதிகாரிகள் அப்புறப்படுத்தியுள்ளனர். பாலியல் பலாத்காரத்திற்கு இரையான பெண்ணின் புகார் தொடர்பில் பொலிசார் விசாரணைமேற்கொண்டு வருகின்றனர். உடற்கூறு ஆய்வில் குறித்த இளைஞர் பாம்பு விஷம் தலைக்கேறியதால் மரணமடைந்ததாக தெரியவந்துள்ளது.
வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் வெற்றிலை வியாபாரம் மேற்கொண்டு வரும் வியாபாரி ஒருவர் தனது வியாபாரத்தில் தேசியத்தலைவரின் புகைப்படம் ஒன்றினை காட்சிப்படுத்தியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
தங்கத்தலைவர் எங்களின் பிரபாகரன் என்று பிரபாகரனை போற்றி புகழ்ந்து வருவதுடன் தன்னிடம் வெற்றிலை வாங்க வரும் சிங்கள, தமிழ் மக்கள் அனைவரிடமும் புகைப்படத்தை காண்பித்து பிரபாகரனின் வரலாற்றுப் பதிவை தெரிவித்தும் வருகின்றார்.
இவ்வாறு வவுனியாவில் மூவின மக்களும் சங்கமிக்கும் மத்திய நகரில் இவரின் இந்நடவடிக்கை பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் சொகுசு பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
புத்தளம் நாத்தாண்டியா பகுதியில் சற்றுமுன்னர் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் 23 பேர் படுகாயமடைந்துள்ளதுள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதோடு குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவனியா தெற்கு தமிழ் பிரதேசசபையின் வாசிப்புமாத பரிசளிப்பு நிகழ்வு இன்று காலை 9.30 மணியளவில் பிரதேசசபையில் நடைபெற்றது.
சபையின் தலைவர் து.நடராஜசிங்கம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பாண்ட் வாத்திய அணிவகுப்புடன் விருந்தினர்கள் அழைத்துவரப்பட்டதுடன் மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியது. முதல் நிகழ்வாக போரில் உயிரிழந்த மாவீரர்களிற்கு இருநிமிட அகவணக்கம் செலுத்தபட்டது.
பிரதேசசபையால் நடாத்தபட்ட வாசிப்புமாத போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களிற்கும், ஐந்தாம் தர புலமைப் பரீட்சையில் பாடசாலை மட்டத்தில் அதிகூடிய புள்ளிகளை பெற்ற மாணவர்கள், முன்பள்ளி மாணவர்களுக்கும் பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டது.
அத்துடன் வவுனியாவின் மூத்த கலைஞரான தமிழ்மணி அகளங்கனின் இலக்கியப் பணியை பாராட்டி கௌரவிக்கபட்டிருந்ததுடன், கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான ப.சத்தியலிங்கம், ரி.லிங்கநாதன், சிறிரெலோ கட்சியின் செயலாளர் கா.உதயராசா, மாவட்டமேலதிக அரசஅதிபர் தி.திரேஸ்குமார், பிரதேச செயலாளர் கா.உதயராஜா, ஏனைய பிரதேச சபைகளின் தலைவர்களான ச.தணிகாசலம், ஆ.அந்தோணி, பிரதேசசபையின் ஊழியர்கள், பொதுமக்கள், மாணவர்கள் எனபலரும் கலந்துகொண்டனர்.
வவுனியா கூமாங்குளம் சித்தி விநாயகர் வித்தியாலயத்தில் இன்று (29.11.2018) காலை 9.30 மணியளவில் புலமை செல்வங்களை பாராட்டும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் ந.பாலச்சந்திரன் தலமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவர் கருணாதாச, கௌரவ விருந்தினராக வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மகிந்த வில்லோரா ஆராச்சி , பிரதேச வனவள அதிகாரி நாணயக்கார , முயற்சி அறக்கட்டளை தலைவர் சந்திரகுமார், மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் ஸ்ரீநிவாசன், சிறப்பு விருந்தினர்களாக கிராம சேவையாளர் ஸ்ரீதரன் , சமூக சேவகர் குருசாமி மற்றும் பெற்றோர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
நிகழ்வில் கலந்து கொண்டிருந்த பிரதம, கௌரவ , சிறப்பு விருந்தினர்கள் புலமைப்பரிசில் சித்தியடைந்த மாணவர்களுக்கு நினைவுச்சின்னம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிப்பு செய்தனர்.
மேலும் மாணவர்கள் சித்தியடைய ஊன்றுகோளாகவிருந்த ஆசிரியர்களுக்கும் நினைவுச்சின்னம் வழங்கப்பட்டதுடன் சித்தியடைந்த மாணவர்களின் பெற்றோரினாலும் ஆசிரியர்களுக்கு பரிசுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
அத்துடன் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நோக்கில் பாடசாலையின் பழைய மாணவர் இருவர் இணைந்து வெட்டுப்புள்ளிக்கு மேல் பெறுபேற்றினை பெற்று சித்தியடைந்த மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.
இக் கௌரவிப்பு நிகழ்விற்கு முயற்சி அறக்கட்டளை பூரண அனுசரணை வழங்கியதுடன், நிகழ்வின் இறுதியில் பாடசாலை வளாகத்தில் மரக்கன்றுகள் நாட்டும் நிகழ்வும் நடைபெற்றது. இதன் போது பாடசாலை மாணவர்கள் , பெற்றோர்களுக்கும் மரங்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா பிரதேசமட்ட மனித உரிமை வலய செயலணியின் அங்குரார்ப்பண நிகழ்வும் கருத்தமர்வும் இன்று (29.11) காலை 10 மணியளவில் வன்னி இன் விருந்தின விடுதியில் வவுனியா மாவட்ட மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் எம்.ஆர்.பிரியதர்சன மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சட்டத்தரணி ஆர். எல்.வசந்தராஜ் தலைமையில் இடம்பெற்றது.
இன்றைய கருத்தமர்வில் மனித உரிமைகள் மீறல்களை வெளிக்கொண்டுவருதல் மற்றும் சட்டரீதியிலான தெளிவூட்டல்களை வழங்குதல் என்பன மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சட்டத்தரணி ஆர்.எல்.வசந்தராஜ் கலந்துகொண்டு கருத்தமர்வுகளை வழங்கினார்.
காலை முதல் மாலை வரை இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், ஆண்கள் பெண்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.