உங்களுக்கு சிறுநீர் நுரை போன்று வெளியேறுன்கிறதா? அவசியம் இதைப் படியுங்கள்!!

 

சிறுநீர் நுரை போன்று

ஒரு நாளைக்கு ஒருவர் அதிகளவு சிறுநீர் கழிப்பது நல்லது தான். ஆனால் 20 நிமிடத்திற்கு ஒருமுறை சிறுநீர் கழித்தால் நிச்சயம் அது கவனிக்கப்பட வேண்டிய ஓர் பிரச்சனை.

ஒருவர் ஒரு நாளைக்கு 8-10 முறைக்கு மேல் சிறுநீர் கழிக்க நேரிட்டாலோ அல்லது இன்னும் மிகக்குறுகிய இடைவெளியில் சிறுநீர் கழித்தாலோ உடனே மருத்துவரை அணுகி அவரிடம் இப்பிரச்சனை குறித்து தெரிவிக்க வேண்டியது அவசியம். அதே போல சில சமயத்தில் சிறுநீர் கழிக்கும் போது நுரை போன்று வெளிப்படும், இது எதனால் என்பதை கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள்.

சிறுநீர் கழிக்கும் போது நுரை போன்று வருவதற்கு காரணம் : சில சமயம் சிறுநீர் கழிக்கும் போது நுரை போன்று தென்பட நேரிடும். இதை நாம் மிக சாதாரணமாக கருதுவது உண்டு. ஆனால், இது புரோட்டினூரியா எனப்படும் சிறுநீரில் புரதம் கலப்பதை வெளிப்படுத்தும் அறிகுறியாகும்.

சில நேரங்களில் சிறுநீர் வடிகுழாயில் விந்து தங்கியிருந்தால் கூட சிறுநீர் நுரை போன்று வெளிப்படலாம். விந்து சிறிதளவு சேர்ந்திருந்தாலும் கூட நுரை போன்று சிறுநீர் வரும்.
விந்து வெளிப்படும் செயலின் போது விந்து சிறுநீர் பையில் நுழைந்துவிட்டாலும் கூட நுரை போன்று சிறுநீர் வெளிப்படலாம். பெண்கள் மத்தியில் வெள்ளை போக்கு உண்டாகும் போது சிறுநீர் நுரை போன்று வெளிப்படலாம்.

உணர்வு ரீதியான மன அழுத்தம் சில மருந்து / போதை மருந்துகள் மற்றும் கடுமையான உடற்பயிற்சி. காய்ச்சல், கடுமையான சளி / உடல் சூடு அதிகரிப்பு இவை நுரை போன்று சிறுநீரை வர காரணமாக இருக்கும்.

நுரை போன்று சிறுநீர் வெளிப்படும் போது அச்சப்பட தேவையில்லை. இரத்தத்தில் இருக்கும் பொதுவான புரதம் ஆல்புமின் தொடர்ந்து நுரை போன்று சிறுநீர் வெளிவருவதை கண்டால் மருத்துவரிடம் பரிசோதனை செய்துக் கொள்வது நல்லது. பூச்சி, பாம்பு கடித்து விஷம் ஏறுதல்.உணவில் அதிக இரசாயன கலப்பு.கல்லீரல் நோய், சேதம், செயலிழப்பு.கர்ப்பம் போன்ற காரணங்களினாலும் ஏற்படலாம்.

இதயத்தின் ஆரோக்கிய நிலை குறைபாடு, வீக்கம், எரிச்சல், செயலிழப்பு.உயர் இரத்த அழுத்தம் போன்ற காரணங்களினாலும் ஏற்படலாம்.

சிறுநீர் பாதையில் தொற்று, சிருநீரில் புரத கலப்பு அதிகரிப்பதால் உண்டாகும் காய்ச்சல். சிறுநீரக செயலிழப்பு. முடக்கு வாதம் போன்றவை ஏற்படும்.

குறிப்பு : இது போன்று உங்களுக்கு ஏற்படமால் இருக்க வேண்டுமென்றால் நீங்கள் தினமும் குறைந்தது 2-3 லிட்டர் தண்ணீர் அதிகம் பருகி வாருங்கள்.

குடும்ப தகராறில் மகன்களை கிணற்றில் போட்டு கொன்ற தாய்!!

 

மகன்களை கிணற்றில் போட்டு கொன்ற தாய்

தமிழ்நாட்டில் குடும்ப பிரச்சனை காரணமாக 2 குழந்தைகளை கிணற்றில் தள்ளிக் கொன்றுவிட்டு தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், சிறுமலை அடுத்துள்ள பசலிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் பாலு. இவரது மனைவி செல்லம்மாள்(28). இவர்களுக்கு பொன்னர் (5), பெரியக்காள் (2) ஆகிய 2 குழந்தைகள் இருந்தனர்.

இந்நிலையில், கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. உறவினர்கள் சமரசம் செய்தும் சண்டை ஓய்ந்தபாடில்லை. இதேபோல் மறுபடியும் வெள்ளிக்கிழமை இரவு இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் செல்லம்மாள் கடும் மனஉளச்சலில் இருந்து வந்தார். செல்லம்மாள் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று முடிவு எடுத்தார். பின்னர் தான் மட்டும் இறந்தால் குழந்தைகள் வாழ்க்கை கேள்விகுறியாகிடும் என கருதி அவர்களையும் கொன்று விட தீர்மானித்தார்.

செல்லம்மாள், சனிக்கிழமை கணவர் வெளியே சென்ற பின் தனது இரு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு அருகில் உள்ள தங்களுக்கு சொந்தமான விவசாய கிணற்றுக்கு சென்றார். அங்கு 2 குழந்தைகளையும் கிணற்றில் வீசி கொன்றுவிட்டு, செல்லம்மாளும் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றார்.

இந்நிலையில், அருகில் உள்ள தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள், சத்தம் கேட்டு கிணற்றை நோக்கி ஓடிச் சென்றனர். அப்போது தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த செல்லம்மாளையும் அவரது இரு குழந்தைகளின் சடலத்தையும் மீட்டனர்.

கஜா புயல் காரணமாக சிறுமலை பகுதியில் சாலை சேதமடைந்துள்ளதால், 4 கி.மீ. தொலைவுக்கு குழந்தைகளின் சடலத்தையும், ஆபத்தான நிலையில் செல்லம்மாளையும் தோளில் சுமந்து தூக்கி வந்தனர். பின்னர், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் செல்லம்மாள் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

லண்டன் காதலி… 3 மனைவிகள் : பறிபோன தங்க கழிப்பறை : விஜய் மல்லையாவின் மிரளவைக்கும் சொகுசு வாழ்க்கை!!

 

விஜய் மல்லையா

கர்நாடகாவை பூர்வீகமாக கொண்ட தொழிலதிபர் விஜய் மல்லையா யுனைட்டட் ப்ரெவெரீஸ் க்ரூப்ஸ் மற்றும் கிங்ஃபிஷர் விமான நிறுவனத்தின் தலைவராவார்.

தொழிலதிபராக இருந்தாலும் ஆடம்பரமான வாழ்க்கைக்கு பெயர் போன விஜய் மல்லையாவின் , போர்முலா ஒன் டீம் போர்ஸ் இந்தியா, ஐபிஎல் கிரிக்கெட் குழுவான ராயல் சாலேன்ஜெர்ஸ் பெங்களூர், மற்றும் இவருடைய இயந்திர படகு, இந்தியன் எம்ப்ரேஸ் போன்றவை மக்களால் அதிகம் அறியப்பட்டது.

2005 ல் கிங் பிஷர் விமான நிறுவனம் விஜய் மல்லையா நிறுவினார். தற்போது, இவ்விமான உள்நாட்டு மற்றும் பன்னாட்டு விமான சேவை மூலம் 32 நகரங்களை இணைக்கிறது. ஒரு தொழிலதிபராக இவர் இருந்தபோதிலும், தனது விமான பணிப்பெண்களோடு இணைந்து புகைப்படங்களுக்கு போஸ் கொடுப்பது, குடிபோதை, பகட்டான வாழ்க்கை ஆகிய காரணங்களினால் அதிகம் அறியப்பட்டார்.

இதன் காரணத்தினாலேயே விஜய் மல்லையா இந்திய வங்கிகளில் ரூ.9,000 கோடி கடன் வாங்கி அதனை திருப்பிச் செலுத்தாமல் லண்டனிற்கு தப்பி சென்றார். கடனை அடைக்காத காரணத்தால், தற்போது இவரது சொத்துக்கள் ஒவ்வொன்றும் ஏலத்திற்கு வருகிறது.

என்னதான் தனக்கு இக்கட்டான சூழ்நிலை இருந்தாலும் பெண்களுடனான சொகுசு வாழ்க்கையை இவர் கைவிட்டது கிடையாது. ஏற்கனவே தனது வாழ்க்கையில் இரண்டு பெண்கள் இருந்போதிலும், லண்டனில் தற்போது மூன்றவாது பெண்ணுடன் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.

Sameera Tyabjee : விஜய் மல்லையா 1986 ஆம் ஆண்டு ஏர் இந்தியா விமானத்தின் மூலம் அமெரிக்காவுக்கு பயணம் செய்த போது, அந்த விமானத்தில் பணிப்பெண்ணாக இருந்த Sameera Tyabjee என்ற பெண் மீது காதல் கொண்டுள்ளார். இந்த காதல் திருமணத்தில் முடிந்ததையடுத்து, இவர்களுக்கு சித்தார்த் மல்லையா என்ற மகன் உள்ளார். மகன் பிறந்த சில ஆண்டுகளில் இருவரும் விவாகரத்து செய்துகொண்டனர்.

Rekha Mallya : 1993 ஆம் ஆண்டு தனது பள்ளித்தோழியான ரேகாவை சந்தித்துள்ளார். ரேகாவுக்கு ஏற்கனவே இரண்டு திருமணங்கள் ஆகியுள்ள நிலையில், விஜய் மல்லையா அவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு Leanna மற்றும் Tanya என்ற இருபிள்ளைகள் உள்ளனர். அதன்பிறகு ரேகாவை பிரிந்தார் விஜய் மல்லையா.

Pinky Lalwani : இவர் மூன்றவாது மனைவி ஆவார். Kingfisher Airlines – இல் இவர் பணியாற்றியபோது இவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். லண்டனில் கடந்த ஆண்டு இவர்கள் இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டு சொகுசு பங்களாவில் வசித்து வருவதாக கூறப்படுகிறது.

சமீபத்தில், ஐதராபாத்தில் நடந்த தேசிய பழங்குடி இன தொழில் அதிபர்கள் மாநாட்டில் பங்கேற்ற மத்திய மந்திரி ஜூவல் ஓரம் வங்கி மோசடியில் ஈடுபட்ட விஜய் மல்லையாவை போன்று மிடுக்காக இருங்கள் என புழ்ந்து பேசினார். ஆக மொத்தத்தில், என்னதான் கடன் பிரச்சனைகள் இருந்தாலும் தனது சொகுசு வாழக்கையை ஒருபோதும் புறக்கணிக்காமல் வாழ்ந்து வருகிறார் விஜய் மல்லையா.

சுவிட்சர்லாந்தை சேர்ந்த யுபிஎஸ் வங்கி மல்லையாவின் அடமானக் கடனின் பேரில் லண்டன் கார்ன்வால் டெரஸில் உள்ள மல்லையாவின் ரீஜென்ட்ஸ் பார்க் மேன்ஷன் பறிமுதல் செய்யப்பட உள்ளது. அந்த மேன்ஷனில் மல்லையா வைத்துள்ள தங்கத்தால் செய்யப்பட்ட கழிப்பறையும் பறிமுதல் செய்யப்படவுள்ளது.

யுபிஎஸ் வங்கிக்குச் செலுத்த வேண்டிய அடமானக் கடன் தொகை 20.4 மில்லியன் பவுண்ட் செலுத்தப்படாததால் இந்தச் சொத்துகளை வங்கிப் பறிமுதல் செய்கிறது.

கோடிக்கணக்கான மதிப்பு கொண்ட இந்த தங்க கழிப்பறையை விஜய் மல்லையா வைத்திருப்பது சமீபத்தில் தான் வெளி உலகிற்கு தெரியவந்தது. தற்போது, அந்த கழிப்பறையும் பறிபோயுள்ளது. மேலும் லண்டன் நீதிமன்றம் யுபிஎஸ் வங்கிக்கு மல்லையா தரப்பு 88,000 பவுண்ட் இடைக்கால சட்ட கட்டணங்களாக வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்துள்ளது.

திருமண மேடையில் மணமகன் செய்த காரியம் : அதிர்ச்சியடைந்த உறவினர்கள் : வைரலாகும் புகைப்படம்!!

 

வைரலாகும் புகைப்படம்

மலேசியாவில் Doraemon கேலிச்சித்திரத்திலான திருமண ஆடையில் வந்து நின்ற மணமகனை பார்த்து உறவினர்கள் அனைவரும் ஆச்சர்யமடைந்துள்ள சம்பவம் நடந்துள்ளது.

மலேசியாவின் கோலாலம்பூரை சேர்ந்த முகமது ஃபிர்ஹாரஸ் முஹ்ட் அலி என்பவருக்கு சிறுவயதில் இருந்தே, கேலிச்சித்திரக் கதாபாத்திரங்களில் ஒன்றான Doraemon மீது அலாதி பிரியம் கொண்டிருந்துள்ளார். வீட்டில் உள்ள தன்னுடைய அறை முழுவதும், Doraemon உருவம் பொரித்த பொருட்களையே அதிகம் வைத்திருந்துள்ளார்.

இந்த நிலையில் முகமதுக்கு திருமணம் வந்துள்ளது. திருமணத்தன்று தனக்கு பிடித்தமான Doraemon, உருவம் பொரித்த ஆடை அணிய வேண்டும் என ஆசைப்பட்டுள்ளார்.

ஆனால் இதனை பார்த்து மற்றவர்கள் எதுவும் கூறுவார்களோ என்ற தயக்கமும் இருந்துள்ளது. திருமணத்திற்கு 5 நாட்களுக்கு முன்னதாக தன்னுடைய மனைவிக்கு போன் செய்து அனுமதி கேட்டுள்ளார்.

ஆரம்பத்தில் தயக்கம் தெரிவித்த அவருடைய மனைவியிடம், “நீ என்னை காதலித்தால் என்னுடைய ஆடை உனக்கு பெரிதாக தெரியாது” என கூறி மனவியின் மனதை மாற்றி சம்மதம் வாங்கியுள்ளார்.

இதனையடுத்து மிகவும் சந்தோசமாக Doraemon உருவம் பொரித்த ஆடையினையே முகமது, திருமணத்திற்கு அணிந்து வந்துள்ளார். தன்னுடைய மனைவிக்கும் அந்த உருவத்தில் ஒரு ஆடையினை வாங்கி கொடுத்துள்ளார். இதனை பார்த்து உறவினர்கள் ஒரு பக்கம் அதிர்ச்சியடைந்தாலும், மற்றவர்கள் விசித்திரமாக பார்த்து புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளனர்

எட்டு மாத குழந்தையின் தாயார் மரணத்தில் மர்மம் : வட்ஸ் அப் தகவலை காட்டி கதறும் பெற்றோர்!!

 

கதறும் பெற்றோர்

கேரள மாநிலம் கொச்சியில் ஆற்றில் இருந்து இளம் தாயாரின் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில் பொலிசார் உரிய முறையில் விசாரணை மேற்கொள்ளவில்லை என அவரது பெற்றோர்கள் முறையிட்டுள்ளனர்.

கடந்த ஆகஸ்டு மாதம் 28 ஆம் திகதி பெரியாற்றில் இருந்து மரணமடைந்த நிலையில் மீட்க்கப்பட்ட ஆன்லியா என்ற 25 வயது இளம் தாயாரின் பெற்றோர்களே தற்போது முறையிட்டுள்ளனர். தங்களது மகள் மாயமாவதற்கு சில மணி நேரம் முன்பு பகிர்ந்து கொண்ட வாட்ஸ் அப் தகவல்கள், உண்மையான காரணம் என்ன என்பதை புரிந்துகொள்ள உதவும் சாட்சியம் என ஆன்லியாவின் பெற்றோர்களான ஹைஜினஸ் மற்றும் லீலாம்மா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

திருமணம் முடிந்து 8 மாத ஆண் குழந்தையின் தாயாருமான ஆன்லியா மரணமடையும்போது அவர் எம்.எஸ்.ஸி செவிலியர் மாணவி என கூறப்படுகிறது. சம்பவத்தன்று பெங்களூருவில் நடைபெறவிருக்கும் தேர்வில் பங்கேற்க ஆன்லியா சென்றதாகவும், அவரை ஆகஸ்டு 25 ஆம் திகதி ரயில் நிலையத்தில் கொண்டு விட்டுள்ளார். ஆனால் அன்றைய தினமே தமது மனைவி மாயமானதாக ஜஸ்டின் பொலிசாரிடம் புகார் அளித்துள்ளார்.

இதனிடையே 28 ஆம் திகதி இரவு 10.40 மணியளவில் பெரியாற்றில் இருந்து ஆன்லியாவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கல்வியிலும் கலையிலும் சிறந்துவிளங்கிய ஆன்லியாவின் தினசரி குறிப்புகள், அவரது சகோதரருக்கு அனுப்பிய வாட்ஸ் அப் தகவல்கள் என அனைத்தும் பரிசோதனை மேற்கொண்டால் அவரது மரணத்தில் இருக்கும் மர்மம் தெரியவரும் என கூறும் பெற்றோர்கள், ஆன்லியாவுக்கு தமது எதிர்காலம் தொடர்பில் தெளிவான இலக்கு இருந்ததாகவும், அவர் ஒருபோதும் தற்கொலை செய்து கொள்ளும் பெண் அல்ல எனவும் தெரிவித்துள்ளனர்.

வைரமுத்து மீதான பாலியல் குற்றச்சாட்டு : சின்மயியை ஆதரித்த நடனக் கலைஞருக்கு நேர்ந்த கதி!!

 

சுவர்ணமால்யா

கவிஞர் வைரமுத்து தொடங்கி கர்நாடக இசைக்கலைஞர்கள் சிலர் மீது பாலியல் புகார் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், அந்த விவகாரத்தை வெளியிட்டவர்களை ஆதரித்த நடனக்கலைஞர் சுவர்ணமால்யா எதிர்ப்பை சந்தித்துள்ளார். கோவையில் உள்ள சாகித்ய அகாடமி நடத்தும் நடன நிகழ்ச்சியில் இருந்து சுவர்ணமால்யாவை நீக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எதிர்வரும் டிசம்பர் மாதம் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் கோவையில் சாகித்ய அகாடமி நடத்தவிருந்த நடன நிகழ்ச்சியில் இருந்தே சுவர்ணமால்யா நீக்கப்பட்டுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சக கலைஞர் ஒருவர் சாகித்ய அகாடமி நடத்தும் நிகழ்ச்சியில் இருந்து தாமாகவே விலகியுள்ளார்.

இதுவரை தம்மை நிகழ்ச்சியில் இருந்து நீக்கியது தொடர்பில் எந்த விளக்கமும் சாகித்ய அகாடமி தரப்பில் தெரிவிக்கப்படவில்லை எனவும், மீடூ விவகாரத்தில் தாம் ஆதரவு தெரிவித்ததே காரணமாக இருக்கலாம் எனவும் சுவர்ணமால்யா தெரிவித்துள்ளார்.

முன்னதாக தமிழ் திரைப்பட டப்பிங் யூனியனில் இருந்து பாடகி சின்மயி தடாலடியாக நீக்கப்பட்டார். இதற்கு பின்னால் நடிகர் ராதாரவி இருப்பதாகவும் தகவல் பரவியது. ராதாரவி தம்மை மிரட்டியதாகவும், பாடகி சின்மயி ஆதாரங்களுடன் வெளியிட்டார். அந்த வரிசையில் தற்போது நடனக் கலைஞர் சுவர்ணமால்யா.

குடிபோதையில் கார் ஓட்டி பொலிசிடம் சிக்கிய நடிகை காயத்ரி ரகுராம்!!

 

காயத்ரி ரகுராம்

மதுபோதையில் கார் ஓட்டிக்கொண்டு வந்த நடிகை காயத்ரி ரகுராம் பொலிசாரிடம் சிக்கி அபராதம் செலுத்தியுள்ளார்.

பாஜக கட்சியை சேர்ந்தவரும், பிக்பாஸ் புகழுமான நடிகை காயத்ரி ரகுராம், சென்னை அடையார் பகுதியில் காரை ஓட்டி வந்தபோது, அவர் மது போதையில் இருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து குடித்துவிட்டு வண்டி ஓட்டி வந்தததற்காக அவரிடம் அபராதம் செலுத்தும்படி பொலிசார் தெரிவித்தனர். பிறகு 3,500 ரூபாய் தொகையை காயத்ரி ரகுராம் அபராதம் செலுத்தினார்.

பிரசவத்தில் நான் உணர்ந்த வலி : மனம் திறந்த சானியா மிர்சா!!

 

சானியா மிர்சா

பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தற்போது குழந்தை பெற்றெடுத்துள்ளதால் ஓய்வில் இருக்கிறார். இந்நிலையில் தனது பிரசவ அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

கர்ப்ப காலத்திலும் நான் உடல் தகுதியை பராமரித்தேன். அப்போதும் டென்னிஸ் விளையாடினேன். வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்கள் யோகா பயிற்சி மேற்கொண்டேன். தினமும் மூன்று முதல் நான்கு கிலோமீட்டர் தூரம் நடைப்பயிற்சி மேற்கொண்டேன்.

உற்சாகமாக இருக்க வேண்டும் என்பதற்காக அத்தகைய பயிற்சிகளை செய்தேன். நான் பெண்கள் அனைவருக்கும் ஒரு விஷயத்தை சொல்ல விரும்புகிறேன்.

கர்ப்ப காலத்தில் பெண்கள் மிக சுறுசுறுப்பாக இயங்கவேண்டும். அது சற்று சிரமமான காரியமாக இருந்தாலும், பெண்கள் உடல் தகுதிக்காக அதை செய்துதான் ஆகவேண்டும். சிறிது தூரம் நடைப்பயிற்சி, சிறிது நேர யோகா பயிற்சி போன்றவற்றை மேற்கொண்டால் உடலை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்வதோடு, உள்ளத்தையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம். கர்ப்பிணி பெண் களுக்கு உடல் நலமும், மனநலமும் மிகவும் முக்கியம்.

எனது பிரசவ அனுபவம் மிக சிறப்பாக இருந்தது. பெண்கள் தங்கள் வலிமையை குறைத்து மதிப்பீடு செய்து வைத்துள்ளனர். பெண்மையின் வலிமை என்ன என்று பிரசவத்தின் போது நான் உணர்ந்து கொண்டேன். எனது பிரசவம் எளிதாகவும், சுமூகமாகவும் இருந்தது.

பிரசவத்திற்கு பின் நமது சகஜ வாழ்க்கைக்கு திரும்புவதற்கு சிறிது காலம் தேவைப்படதான் செய்யும். எனவே 2020 ஒலிம்பிக்கை எனது இலக்காக நிர்ணயித்துள்ளேன்.

சர்வதேசத்தின் முன் கண்ணீர் விட்டழுத மைத்திரி!!

 

கண்ணீர் விட்டழுத மைத்திரி

சர்வதேச ஊடகவியலாளர்கள் முன்னிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கண்ணீர் விட்டழுததாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற பாரிய மோசடிகள் தொடர்பில் சர்வதேச ஊடகவியலாளர்களுக்கு தெளிவுபடுத்தும் கலந்துரையாடல் இன்று நடைபெற்றது. இதன்போது ஜனாதிபதி அழுதுள்ளார்.

ரணில் விக்ரமசிங்க தலைமையிலான குழுவினர் பாரிய மோசடியில் ஈடுபட்டமையினால் அவரை பதவியில் இருந்து நீக்கியதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவரை மீண்டும் பிரதமராக நியமிக்கப் போவதில்லை என உறுதியாக அவர் தெரிவித்துள்ளார்.

ரணில் ஊழல் மிகுந்தவர், அவரது பொருளாதார கொள்கைகள் உள்ளுர் தொழில்துறைக்கு பொருத்தமானவையில்லை. எங்கள் கலாச்சாரத்திற்கு பொருத்தமில்லாத தீவிர தாரளமயவாத கொள்கையை ரணில் விக்கிரமசிங்க நடைமுறைப்படுத்த முயன்றார் என ஜனாதிபதி குறிப்பிட்டார். உள்ளுராட்சி தேர்தலில் தோல்வியடைந்தவேளை ரணில் விக்கிரமசிங்கவை பதவிவிலகுமாறு எவ்வாறு மன்றாடினேன் என விபரிக்கும் போது ஜனாதிபதி கண்ணீர் சிந்தியுள்ளார்.

ரணிலின் பொருளாதார கொள்கைகள் காரணமாகவே நாங்கள் தேர்தலில் தோற்றோம் என அவரிற்கு தெரிவித்தேன், இந்த அறையில் வைத்து அவரை பதவி விலகுமாறு கேட்டுக்கொண்டேன் அவர் அதனை ஏற்க மறுத்தார் என சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் 100 தடவைக்களிற்கு மேல் வெளிப்படையாக மோதியிருப்போம் எங்கள் மத்தியிலான அதிகாரப்போட்டி குறித்து அமைச்சரவை வெளிப்படையாக அறிந்திருந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார். பிரதமராக நியமிக்கப்பட்டவர் ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படவேண்டும் என்ற பாரம்பரியமுள்ளது. என்னால் ரணிலுடன் இணைந்து பணியாற்ற முடியாது என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

2015ற்கு பின்னர் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் காலத்தில் இடம்பெற்ற ஊழல்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஆணைகுழுவொன்றை அமைக்கப் போவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

-தமிழ்வின்-

மாத்தறை மாணவன் கொலை தொடர்பில் பொலிஸார் வெளியிட்ட தகவல்!!

 

மாணவன் கொலை

மாத்தறை எலவேல்ல வீதியில் பிரத்தியேக வகுப்பிற்கு சென்ற 19 வயது மாணவனை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

முன்னர் இருந்த மோதல்களின் விளைவாக இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொலை செய்யப்பட்ட மாணவனின் இளைய சகோதரருக்கிடையில் இருந்த மோதல் இந்த கொலைக்கான காரணம் என கொழும்பு ஊடகமொன்றுக்கு பொலிஸ் உயரதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

சந்தேக நபரான மாணவர் உட்பட மூவர் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். அவர்களை கைது செய்ய மூன்று பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று மாலை உயிரிழந்த மாணவன் உட்பட ஏனைய மாணவர்கள் பிரத்தியேக வகுப்பிற்கு சென்று திரும்பிய வேளை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. திககொட நாயிம்பல மாஹேன பிரதேசத்தைச் சேர்ந்த ரசிது ஹிம்கான என்ற மாணவனே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

வவுனியாவில் போக்குவரத்துக்கு இடையூறாக காணப்படும் வாகன திருத்துமிடங்கள்!!

வாகன திருத்துமிடங்கள்

வவுனியா நகர்ப்பகுதியில் வீதியோரங்களில் நிறுத்தி வைத்து வாகனங்கள் திருத்தம் செய்யப்பட்டு வருவதனால் போக்குவரத்துக்கு இடையூறாகவுள்ளதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வவுனியா நகரசபை தலைவருக்கு பல தடவைகள் தெரியப்படுத்திய போதிலும் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததுடன் இது வரை இதற்கான தீர்வை பெற்றுத்தரவில்லை என பயணிகள் இதன் போது குற்றம்சாட்டியுள்ளார்கள்.

வவுனியா நகர்ப்பகுதியில் பாதசாரி கடவைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலும் வீதியின் இருமருங்கிலும் வாகனங்கள் நிறுத்தி திருத்தப் பணிகள் செய்யப்படுவதனால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளதென குற்றம் சாட்டும் பயணிகள் இது தொடர்பில் நகரசபை கவனம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்கள்.

புகையிரத நிலைய வீதி, வைரவ கோவில் வீதி, யாழ் வீதி, இறம்பைக்குளம் மயான வீதி, உட்பட பல வீதிகளில் காணப்படும் குறித்த இடக்கள் வாகனங்கள் நிறுத்தவதற்கு ஏற்ற வசதிகள் இன்றி வீதியோரங்களில் நிறுத்தி திருத்தம் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்கள்.

போக்குவரத்தின்போது துஸ்பிரயோகத்திற்குள்ளாகும் பெண்கள்!!

துஸ்பிரயோகத்திற்குள்ளாகும் பெண்கள்

இலங்கையில் 90 வீதமான பெண்கள் போக்குவரத்துக்களின்போது துஸ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் நான்கு வீதமான பெண்கள் மாத்திரமே காவல்துறையில் முறைப்பாடுகளை செய்வதாக தரவுகள் வெளியாகியுள்ளன.

வருடந்தோறும் நவம்பர் 25ஆம் திகதி, ஐக்கிய நாடுகளின் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை நீக்கும் தினமாகும். இந்தநிலையில் பெண்களை பொறுத்தவரையில் அவர்கள், உடல் ரீதியாக, வாய்மூல ரீதியாக மற்றும் பாலியல் ரீதியாக துஸ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.

இந்த வன்முறைகள், வீடுகளில், வீதிகளில் மற்றும் போக்குவரத்து சாதனங்களில் வைத்து மேற்கொள்ளப்படுகின்றன என்று ஐக்கிய நாடுகள் சபை குறிப்பிட்டுள்ளது.

வவுனியாவில் இன்றுமுதல் விஷேட குப்பை அகற்றும் நடவடிக்கை ஆரம்பம்!!

 

விஷேட குப்பை அகற்றும் நடவடிக்கை

வவுனியா நகரசபையினால் பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் விஷேட குப்பை அகற்றும் நடவடிக்கை ஒன்று இடம்பெறவுள்ளதாக நகர உப பிதா சு.குமாரசுவாமி தெரிவித்துள்ளார். வவுனியா நகரசபை வேலைப்பகுதி, சுகாதாரப்பகுதி ஊழியர்களின் மாதாந்தக்கூட்டம் நகர உப பிதா தலைமையில் இடம்பெற்றபோது அதில் முடிவெடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கும்போது,

வவுனியா நகரசபையினால் பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் வீடுகள், தெருக்களிலுள்ள ஏனைய குப்பைகள் அகற்றும் நடவடிக்கை ஒன்று விஷேடமாக ஆரம்பிக்கப்படவுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

ஏனைய கிழமை நாட்களில் வழமையான அன்றாட குப்பை அகற்றும் நடவடிக்கையில் நகரசபை ஊழியர்களினால் இடம்பெற்று வரும் நிலையில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் இவ்வாறு விஷேடமாக ஒவ்வொரு பகுதிகளைத் தெரிவு செய்து அங்கிருக்கும் ஏனைய குப்பைகளை அகற்றுவதற்குரிய நடவடிக்கை இடம்பெறவுள்ளது.

இதற்கென நீளமான உழவு இயந்திரப் பெட்டிகள் வழங்கப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி இன்றைய தினம் வைரவப்புளியங்குளம் பகுதியில் இவ்விஷேட குப்பை அகற்றும் நடவடிக்கை மேற்கொள்ளபடவுள்ளது.

இந்நடவடிக்கை தொடர்ச்சியாக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் இடம்பெறவுள்ளது. எனவே பொதுமக்கள் தமது அன்றாட குப்பைகளை விட்டு ஏனைய குப்பைகளை குப்பை அகற்ற வரும் ஊழியர்களிடம் வழங்கி நகரசபை ஊழியர்களுக்கு ஒத்துழைப்புக்களை வழங்குமாறு மேலும் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் பாதுகாப்பற்ற கருத்தரிப்பை இல்லாதொழிப்போம் : பெண்கள் போராட்டம்!!

 

பெண்கள் போராட்டம்

பெண்களுக்கெதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினத்தினை முன்னிட்டு பெண்களுக்கும் பெண் பிள்ளைகளுக்கும் எதிரான வன்முறைகளை ஒழிப்போம் எனும் தொனிப்பொருளில் டாபிந்து கெலக்டிவ் அமைப்பினரின் ஏற்பாட்டில் வவுனியா இரண்டாம் குருக்குத்தெருவில் இன்று (25.11.2018) காலை 11 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றதுடன் அதன் பின்னர் நெல்லிஸ்டார் விருந்தினர் விடுதியில் பெண்களுக்கான விழிப்புணர்வு கருந்தரங்கும் நடைபெற்றது.

இந் நிகழ்வில் டாபிந்து கெலக்டிவ் அமைப்பின் பிரதிநிதிகள், டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் அமைப்பின் பிரதிநிதி, குடும்ப நல உத்தியோகத்தர்கள், வவுனியா மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களிலுள்ள ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்கள், பெண்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

ஆடைத் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்கள் எதிர்கொள்ளும் பால்நிலை வன்முறைகள், பெண்களுக்கு எதிரான வன்முறைகள், அவற்றில் இருந்து எவ்வாறு தம்மை பாதுகாத்து கொள்ளலாம், தேவையற்ற கர்ப்பங்களை எவ்வாறு தவிர்த்தல், குடும்பத்திட்டமிடல் முறைகள் சட்டவிரோதமான கருக்கலைப்பினால் ஏற்படும் பாதகமான விளைவுகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

என்னால் எதையும் செய்ய முடியாது : பிடிவாதமாக இருக்கும் மைத்திரி!!

 

ஜனாதிபதி மைத்திரிபால

ரணில் விக்ரமசிங்கவை ஒரு போதும் மீண்டும் பிரதமராக்க மாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். வார இறுதி பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மீண்டும் இந்த கேள்வியை கேட்க வேண்டாம் எனவும், ரணிலை ஒரு போதும் பிரதமராக்க மாட்டேன் என மைத்திரி குறிப்பிட்டுள்ளார்.

ரணிலுடன் மூன்றரை வருடங்கள் செயற்பட்ட போது ஏற்பட்ட விடயங்கள் காரணமாகவே தான் இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

சிசிரிவி காணொளியால் வசமாக சிக்கிய நபர்!!

 

வசமாக சிக்கிய நபர்

மட்டக்களப்பு – ஏறாவூரில் மிக சாதுரியமாக திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த சந்தேகநபர் சிசிரிவி காணொளியின் உதவியுடன் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். பொதுமக்களிடம் இருந்து கிடைக்க பெற்ற தகவலின் அடிப்படையில் சம்பவம் இடம்பெற்ற இடங்களை அண்டியுள்ள சிசிரிவி காணொளி பரிசோதிக்கப்பட்ட போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் அவ்வப்போது மோட்டார் சைக்கிளிலும் பயணம் செய்து பணப்பறிப்பில் ஈடுபட்டு தலைமறைவாகி வந்திருப்பது விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபரை ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

சந்தேக நபர் திருட்டில் ஈடுபட முன்னர் தன்னை பொது சுகாதார பரிசோதகர் என்றும், பிரதேச அரசியல்வாதிகளின் இணைப்பாளர் என்றும் அறிமுகப்படுத்திக் கொண்டு கைவரிசையைக் காட்டியுள்ளதாக தெரியவருகிறது. சந்தேக நபரால் ஏமாற்றப்பட்டு கொள்ளையடிக்கப்பட்ட பலர் பொலிஸ் நிலையம் சென்று குறித்த நபரின் அடையாளங்களை உறுதிப்படுத்தியுள்ளனர்.