வேறு மதத்தில் திருமணம்…. மகளை கடத்திச் சென்ற தாயார் : மன நல காப்பகத்தில் ஒப்படைத்த கொடூரம்!!

கொடூரம்

இந்திய மாநிலம் கேரளாவில் வேறு மதத்தை சார்ந்தவரை திருமணம் செய்து கொண்டதால் சொந்த மகளை கடத்தி சென்ற தாயார் மன நல காப்பகத்தில் ஒப்படைத்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த விவேக் என்பவரின் மனைவி நஸ்லா என்ற இளம்பெண்ணையே அவரது தாயார் கடத்தி சென்று தமிழகத்தில் உள்ள மன நலகாப்பகம் ஒன்றில் சிறை வைத்துள்ளார்.

தற்போது கணவர் விவேக் அளித்த புகாரின் அடிப்படையில் நீதிமன்றம் கணவருடன் சேர்ந்து வாழ ஒப்புதல் அளித்துள்ளது. மட்டுமின்றி சொந்த மகளை கொடுமைப்படுத்திய குற்றத்திற்காக அந்த தாயார் மற்றும் உறவினர்களுக்கு தண்டனையும் அறிவித்துள்ளது. மூன்றாண்டுகளுக்கு முன்னர் விவேக் மற்றும் இஸ்லாமியரான நஸ்லா ஆகிய இருவரும் நண்பர்கள் மூலம் அறிமுகமாகியுள்ளனர்.
இருவரது நட்பும் நாளடைவில் காதலாக மாறியது. இவர்களது திருமணத்திற்கு இரு வீட்டாரிடம் இருந்தும் சம்மதம் கிடைக்கவில்லை.

நீண்ட நாள் போராட்டத்திற்கு பின்னர் விவேக் தமது பெற்றோரிடம் இருந்து அனுமதி வாங்கியுள்ளார். இந்த நிலையில் கடந்த ஜூலை 12 ஆம் திகதி கோழிக்கோடு பகுதியில் உள்ள கோவிலில் வைத்து இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். தொடர்ந்து 6 மாதங்கள் கடும் நெருக்கடிக்கு இடையே குடும்பம் நடத்தி வந்த நிலையில், கடந்த 14 ஆம் திகதி நஸ்லா பேருந்து நிலையத்தில் இருந்து அவரது தாயாரால் கடத்தப்பட்டார். காரில் கடத்தப்பட்ட நஸ்லாவை அவர்கள் தமிழகத்தில் உள்ள ஏர்வாடி மன நல காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.

இரண்டு நாட்கள் அந்த காப்பகத்தில் தவித்த அவரை மன நலம் குன்றியதால் தான் சிகிச்சைக்கு கொண்டுவந்ததாக அங்குள்ள மருத்துவரிடம் தாயார் தெரிவித்ததுநஸ்லாவுக்கு பேரிடியாக மாறியுள்ளது. இந்த நிலையில் விவேக் அளித்த ஆள்க்கொணர்வு மனுவை அடுத்து நஸ்லாவை அவரது உறவினர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

வாழ்வதென்றால் அது தமது கணவருடன் மட்டுமே என நஸ்லா நீதிமன்றத்தில் உறுதியாக தெரிவித்ததை அடுத்து, திருமண ஆவணங்களையும் பரிசோதித்த நீதிமன்றம் நஸ்லாவை கணவர் விவேக்குடன் அனுப்பி வைத்தது. மனைவியை கடத்தி சென்றதாக விவேக் அளித்த புகாரின் அடிப்படையிலேயே நஸ்லாவின் தாயாரையும் உறவினரையும் பொலிசார் கைது செய்து, பின்னர் பிணையில் விடுவித்துள்ளனர்.

இருப்பினும் விவேக்குடன் நஸ்லாவை இனி ஒருபோதும் வாழ அனுமதிப்பதில்லை என நஸ்லாவின் தாயார் புஸ்ரா பீபி நீதிமன்ற வளாகத்தில் வைத்து சபதம் எடுத்துள்ளது அங்கு கூடியிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

திருமணம் முடிந்த கையோடு மணக்கோலத்தில் பரீட்சை எழுதிய இளம்பெண் : சுவாரஸ்ய சம்பவம்!!

சுவாரஸ்ய சம்பவம்

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் மணப்பெண் ஒருவர், திருமணம் முடிந்த கையோடு தேர்வு எழுதிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் கண்டசி கிராமத்தைச் சேர்ந்தவர் நவீன்(25). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சுவேதா(20) என்ற இளம்பெண்ணுக்கும், கடந்த மே மாதம் 6ஆம் திகதி திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நவம்பர் 3ஆம் திகதி திருமணம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு, அன்றைய தினம் இடைத்தேர்தல் என்பதால் நவம்பர் 18ஆம் திகதியன்று திருமணம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், சுவேதாவுக்கு அன்றைய தினமே கல்லூரி இறுதியாண்டு தேர்வு இருந்தது.

பி.காம் படித்து வந்த சுவேதா, திருமண நாளன்றே தேர்வு இருப்பதை அறிந்து வருத்தமடைந்தார். அதன் பின்னர் இதுகுறித்து தனது வருங்கால கணவர் நவீன் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் சுவேதா தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து சுவேதாவுக்கு ஆறுதல் கூறிய மணமகன் குடும்பத்தார் நன்றாக படிக்கும்படியும், தேர்வை கண்டிப்பாக தாங்கள் எழுத வைப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், நேற்றைய தினம் திட்டமிட்டபடி காலை 7.45 மணியில் இருந்து 8.45 மணிக்குள் நவீன்-சுவேதாவுக்கு திருமணம் நடைபெற்றது. விரைவாக திருமண சடங்குகளும் முடிக்கப்பட்டு, சுவேதா மணக்கோலத்திலேயே கல்லூரிக்கு சென்றார். அங்கு அவர் தேர்வு எழுதிவிட்டு வெளியில் வரும் வரை மணமகன் நவீன் மற்றும் குடும்பத்தினர் அங்கேயே காத்திருந்தனர்.

இச்சம்பவத்தைப் பார்த்தவர்கள் நெகிழ்ச்சியுடன் மணமகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். அதன் பின்னர், சுவேதா உறவினர்களை சந்தித்து வாழ்த்துக்களைப் பெற்றுக் கொண்டார். இந்நிலையில் மணப்பெண் சுவேதா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், ‘இது எனக்கு ஒரு புது அனுபவமாகவும், ஆச்சர்யமாகவும் அமைந்தது. என் வாழ்க்கையில் நடந்த ஓர் அதிசயம் இது. இந்த தேர்வை நான் எழுதவில்லை என்றால் மனதளவில் மிகவும் வருத்தம் அடைந்திருப்பேன்.

ஆனால், எனக்கு எனது கணவரும், அவருடைய குடும்பத்தினரும் மிகவும் ஒத்துழைப்பு தந்தனர். அவர்களால்தான் இந்த தேர்வை நான் மன நிம்மதியோடு எழுத முடிந்தது. கண்டிப்பாக நான் தேர்வில் தேர்ச்சி பெற்றுவிடுவேன். நான் தேர்வு எழுத உறுதுணையாக இருந்த என் கணவர் மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’என தெரிவித்துள்ளார்.

சிறையில் வைத்தே துஸ்பிரயோகம் செய்யப்பட்ட பெண் குற்றவாளிகள் : நேர்ந்த கொடுமை!!

பெண் குற்றவாளிகள்

ஸ்காட்லாந்து சிறையில் அடைக்கப்பட்டிருந்த திருநங்கை சக பெண் குற்றவாளிகளிடன் உறவு வைத்துக்கொண்டிருந்ததை அடுத்து அவருக்கு பாலின மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

ஸ்காட்லாந்தை சேர்ந்த பாரிஸ் கிரீன் (27) என்ற திருநங்கை கடந்த 2011ம் ஆண்டு 45 வயதான Shankland என்பவரை பாலியல் துன்புறுத்தல் செய்து கொடூரமாக கொலை செய்தது தொடர்பாக கைது செய்யப்பட்டார். அவருக்கு 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து பெண்கள் சிறையில் 2013ம் ஆண்டு அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் அவர் சிறையில் இருக்கும் பெண்களுடன் உறவு வைத்துக்கொண்டிருக்கும் போது பிடிபட்டுள்ளார். இதனையடுத்து சிறையில் இருந்து 1000 கிமீ தொலைவில் பிரைட்டன் பகுதியில் அமைந்துள்ள மருத்துவனையில் அவருக்கு பாலின மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

தற்போது பெண்கள் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள பாரிஸிற்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதுகுறித்து சிறை நிர்வாக அதிகாரி கூறுகையில், 2011ம் ஆண்டு பாரிஸ் ஒரு பெண் என அடையாளம் காணப்பட்டதால் தான் அவர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

தற்போது அவருக்கு முழுமையான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுவிட்டது. சிறையில் அடைக்கப்பட்டிருந்த குற்றவாளிகளில், முதன்முறையாக ஒருவருக்கு பாலின மறுசீரமைப்பு அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்படுவது இதுவே முதன்முறையாகும் என தெரிவித்துள்ளார்.

உடலில் சேர்ந்துள்ள கழிவுகளை வெளியேற்ற உதவும் ஆரோக்கியமான உணவுகள் எவை தெரியுமா?

ஆரோக்கியமான உணவுகள்

தினமும் நாம் சாப்பிடும் உணவுகளின் மூலம் உடலில் நச்சுக்கள் சேர்ந்து கொண்டே இருக்கும். அப்படி சேரும் நச்சுக்களை உடலில் இருந்து அவ்வப்போது வெளியேற்ற வேண்டியது மிகவும் அவசியமான ஒன்று. மேலும் உடலில் சேரும் கழிவுகளை வெளியேற்ற உதவும் உணவுப் பொருட்கள் என்ன என படித்து தெரிந்து கொண்டு அந்த உணவுப் பொருட்களை தினமும் உட்கொண்டு வாருங்கள்.

எலுமிச்சை : காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் எலுமிச்சை ஜூஸ் குடித்து வந்தால், உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி உடல் சுத்தமாகும்.

க்ரீன் டீ : உடலை சுத்தப்படுத்த உதவும் உணவுப் பொருட்களில் க்ரீன் டீ தான் முதன்மையானது. ஏனெனில் க்ரீன் டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது.

காய்கறிகள் மற்றும் பழங்கள் : நார்ச்சத்து அதிகமுள்ள உணவு வகைகளான பீட்ரூட், முள்ளங்கி, முட்டைக்கோஸ், ப்ராக்கோலி, ஸ்பைருலினா, குளோரெல்லா போன்றவை அற்புதமான நச்சு நீக்கும் உணவுகளாகும்.

இஞ்சி : இஞ்சியின் மருத்துவ குணத்தைப் பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும். அத்தகைய மருத்துவ குணமிக்க இஞ்சியைக் குடிக்கும் டீயில் சிறிது தட்டிப் போட்டு குடித்து வந்தால், அதில் உள்ள பொருள், உடலை சுத்தமாக்கும்.

பூண்டு : பூண்டு கூட உடலை சுத்தப்படுத்த உதவும் உணவுப் பொருட்களில் ஒன்று. எனவே ஒரு பச்சை பூண்டை தினமும் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கொழுப்புக்களும் கரையும்.

நார்ச்சத்துள்ள உணவுகள் : நட்ஸ் பமற்றும் பருப்பு வகைகள் போன்ற உணவுப் பொருட்களை தினமும் சாப்பிட்டு வந்தால் உடலில் கழிவுகள் சேராமல் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் செயல்படும்.

இளநீர் : இளநீரில் கலோரிகள் மற்றும் சோடியம் குறைவாகவும், கொலஸ்ட்ரால் சுத்தமாக இல்லாமல் இருப்பதால், இதனை குடித்தால், உடல் சுத்தமாவதோடு, சருமமும் பொலிவு பெறும்.

பேஸ்புக் பாவனை தொடர்பில் அமுலுக்கு வரும் புதிய நடைமுறை!!

ஒரு தசாப்த காலத்தில் மேலாக உலகளவில் நண்பர்களையும், உறவினர்களையும் இணைக்கும் உன்னதமான சேவையை பேஸ்புக் வழங்கிவருகின்றது. ஆனாலும் கடந்த சில வருடங்களாக இத் தளமானது பல பிரச்சினைகளுக்கு காரணமாக மாறியுள்ளது.

குறிப்பாக கலவரத்தை தூண்டுதல் மற்றும் தீவிரவாத கொள்கைகளை பரப்புதல் போன்றன முக்கியமானவையாக பார்க்கப்படுகின்றது. இவ்வாறான பிரச்சினைகளை தடுப்பதற்கு பேஸ்புக் நிறுவனம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

இந்நிலையில் தமது நிறுவனம் எதிர்காலத்தில் பதிவிடப்படும் உள்ளடக்கங்களை உன்னிப்பாக அவதானித்து பாதிப்பு ஏற்படுத்தும் பதிவுகளை நீக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக நிறுவுனர் மார்க் ஷுக்கர் பேர்க் தெரிவித்துள்ளார்.

இதற்காக மேம்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை தற்போது 99 சதவீதமான பயங்கரவாத கொள்கை கொண்ட பதிவுகள் நீக்கப்படுவதாகவும், இதற்காக 200 நபர்களைக் கொண்ட ஒரு குழு செயற்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அவனிடம் தினம் தினம் நான் அனுபவித்த சித்ரவதைகள்.. பிரிவதற்கு இதுதான் காரணம் : மனம் திறந்த நடிகை!!

பிரபல இந்தி நடிகை

பிரபல இந்தி நடிகை Chahatt Khanna தனது கணவரிடம் இருந்து விவாகரத்து கோரியுள்ள நிலையில், தான் அனுபவித்த நரக வேதனைகள் குறித்து மனம் திறந்துள்ளார்.

நடிகை Chahatt Khanna 2013 ஆம் ஆண்டு Farhan Mirza என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். தனது கணவரை விட்டு கடந்த ஒரு மாதமாக பிரிந்து வாழும் நடிகை, அவரிடம் இருந்து தற்போது விவாகரத்து கோரியுள்ளார்.  இதற்கான காரணம் குறித்து தனது நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், திருமண வாழ்க்கையில் நான் அனுபவித்த கொடுமைகள் ஏராளம்.

எனது கணவரிடம் இருந்து முன்கூட்டியே விவாகரத்து பெற்றுவிட முடிவுசெய்தேன், ஆனால் அதற்கு அவர் மறுத்துவிட்டார். என்னை உடல் ரீதியாக துன்புறுத்தி வந்தார். என்னுடன் நடிக்கும் நடிகர்களுடன் என்னை இணைத்து அவர் தவறாக பேசுவார்.

நடிகருடன் நான் கைகோர்த்து நடிக்கும் காட்சியை பார்த்துவிட்டு என்னை தவறாக விமர்சிப்பார். நான் யாரேனும் நண்பர்களது விருந்து நிகழ்ச்சிக்கு சென்றால், என்னுடன் வந்து அங்கு நடப்பவற்றை பார்த்துவிட்டு, வீட்டில் வந்து என்னை தவறாக விமர்சிப்பார்.

ஒருமுறை நான் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தேன், அப்போது என்னை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்படி அவரிடம் கெஞ்சினேன், ஆனால் அவர் என்னை கண்டுகொள்ளவில்லை.

குறிப்பாக என்னை, மனரீதியாக தொல்லை செய்தார். மேலும், பாலியல் உறவுக்கு மட்டும் நான் பயன்படுகிறேன் என்று அவர் கருதியதால் அவரிடம் இருந்து பிரிந்து செல்ல முடிவு செய்துவிட்டேன் என கூறியுள்ளார்.

நீங்கள் அமர்வதை வைத்து உங்களின் குணநலன்களை அறிந்து கொள்ளுங்கள்!!

அமரும் நிலை

ஒருவர் அமரும் நிலையானது அவர்களின் மனநிலை எப்படி இருக்கிறது என்பதை காட்டிக்கொடுத்துவிடுமாம். மேலும் அவர்கள் அமரும் நிலையை வைத்தே அவர்களின் குணநலன்களை அறிந்து கொள்ளலாம்.

முதல் நிலை : முதல் நிலையில் அமருபவர்களின் சிந்தனையானது, பூனை தன் கண்களை மூடிக்கொண்டால் உலகமே இருண்டு விடும் என்று நினைப்பது போல இருக்கும். அதை நினைத்து இவர்கள் மகிழ்ச்சியடைவார்கள், சில சமயம் இப்படியாகிவிட்டதே என்று வருத்தமடைவார்கள். இவர்களிடம் எளிமையாக பழகிவிடலாம்.

இரண்டாம் நிலை : இவ்வாறு அமர்பவர்கள் நிறைய கனவுகளை கொண்டிருப்பார்கள். கற்பனை திறனில் சிறந்து விளங்குவார்கள். நண்பர் கூட்டத்தில் இவர்கள் ஒரு முக்கிய நபராக இருப்பார்கள், புதுப்புது விஷயமாக யோசித்து செய்து கொண்டே இருப்பார்கள்.

மூன்றாம் நிலை : இவர்கள் சௌகரியமாக இருக்க வேண்டும் என விரும்புவார்கள், வார இறுதி நாட்களை மால்கள் அல்லது தங்களை அழகாக மாற்றிக்கொள்ள பயன்படுத்தமாட்டார்கள், ஆனால் ஒரு வாசனை திரவியம் அல்லது க்ரீம்களை தேர்ந்தெடுக்க ஒருநாளையே செலவிடுவார்கள்.

நான்காம் நிலை : இவர்கள் இயற்கையிலேயே சுத்தமானவர்களாக இருப்பார்கள். இவர்கள் திறமைசாலிகள், அறிவானவர்கள் மற்றும் இளகிய மனம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

ஐந்தாம் நிலை : இவர்கள் திருமணத்திற்கு அவசரப்படமாட்டார்கள், முதலில் கல்வி, அடுத்த நல்ல வேலை என அனைத்திற்கும் உரிய நேரம் ஒதுக்குவார்கள். தங்களது இலட்சியங்களை அடைவதில் உறுதியாக இருப்பார்கள்.

இலங்கையில் 24 மணித்தியாலங்களில் ஏற்படவுள்ள மாற்றம்!!

எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் வங்காள விரிகுடா கடற் பிராந்தியத்தின் தென்திசையின் மத்தியில் தாழமுக்க பிரதேசம் வலுவடையும் என்று வளிமண்டளவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனால் நாடு முழுவதிலும் மழையுடனான வானிலை காணப்படுமென வளிமண்டளவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதன்படி, 20 மற்றும் 21ஆம் திகதிகளில் முல்லைதீவு, காங்கேசன்துறை ஊடாக மன்னார் வரையிலான கடற்பிராந்தியங்களில் கடலுக்கு செல்வதை கடற்றொழிலாளர்கள் தவிர்க்குமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்தியாவில் கஜா புயலின் தாக்கம் காரணமாக பல்வேறு பகுதிகளில் நீரில் மூழ்கியுள்ளதுடன், யாழ். குடா நாட்டிலும் இதன் தாக்கம் அதிகமாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்ற அவசரமாக ஒத்தி வைக்கப்பட்டது ஏன்? ஏற்படவிருந்த பேராபத்து : சபாநாயகரின் அதிரடி!!

நாடாளுமன்றில் இன்று இடம்பெறவிருந்த அசம்பாவிதம் குறித்து புலனாய்வுதுறையினர் அதிர்ச்சிகர அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இன்றைய தினம் நாடாளுமன்ற அமர்வை தடுப்பதற்காக சில திட்டங்கள் தீட்டப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது. இந்த திட்டம் தொடர்பான புலனாய்வு பிரிவு அறிக்கை ஒன்று சபாநாயகருக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.

எனவே இந்த ஆபத்தான செயற்பாட்டிலிருந்து நாடாளுமன்றின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது. சபாநாயகர் அலுவலகத்தினால் விடுக்கப்பட்ட அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறான முயற்சிகள் தொடர்பில் நாடாளுமன்ற அதிகாரிகள், பொலிஸ் பிரிவு பொறுப்பான இயக்குனர், பொலிஸ் மா அதிபர் மற்றும் பாதுகாப்பு செயலாளருக்கு அறிவிக்கப்பட்டிருந்ததாக சபாநாயகர் இன்று இடம்பெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது சபாநாயகர் கரு ஜயசூரிய கலந்து கொள்ளவில்லை. எனினும் பிரதி சபாநாயகர் நாடாளுமன்றதை எதிர்வரும் 23ம் திகதி வரை ஒத்திவைத்தார்.
மிகவும் குறைந்த நேரத்தில் இன்றைய நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

பெண்ணின் இதயத்தை திருட உதவும் 300 வயது சூனியக்காரி : டிரம்புக்கே சூனியம் வைத்தவராம்!!

 

300 வயது சூனியக்காரி

டிரம்ப் மற்றவர்களின் மனதைக் காயப்படுத்துவதை நிறுத்துவதற்காக சூனியம் வைத்த 300 வயதான சூனியக்காரி ஒருவர், மனதுக்கு பிடித்த பெண்ணின் இதயத்தை திருடவும் உதவி செய்வாராம்.

ளோஸ் ஏஞ்சல்சை சேர்ந்த Amanda Yates Garcia, கடந்த ஆண்டு டிரம்பின் வாயை அடைப்பதற்காக சூனியம் வைப்பதாக கூறியதன் மூலம் வைரலானார். தற்போது ஒரு மணி நேரத்திற்கு 100 டொலர்கள் கட்டணம் வசூலிக்கும் Amanda, பிடித்த நபரை நம் மீது காதலில் விழ வைப்பதற்கும் மந்திர தந்திரங்கள் செய்கிறாராம்.

தனக்கு 300 வயதாகிறது எனக் கூரும் Amanda, ஒருவரை காதலில் விழ வைக்க புலிப்பால் கொண்டு வர வேண்டும் என்றெல்லாம் கேட்க மாட்டார். எளிதில் கிடைக்கும் பொருட்களை வைத்தே இதயத்தை திருட உதவும் Amanda, அதை எவ்வாறு செய்வது என்பதையும் மறைக்காமல் கூறுகிறார்.

அமாவாசை அன்று வெள்ளைப் பூக்களும், பளிங்குக் கற்களும் நிரம்பிய தண்ணீர் தொட்டியில் ஒரு குளியல் போட்டுவிட்டு, ஒரு காகிதத்தில் உங்கள் விருப்பத்தை எழுதி, தினமும் பௌர்ணமி வரை தொடர்ந்து இதேபோல் செய்ய வேண்டும்.

பௌர்ணமி அன்று அந்த காகிதத்தை தீயிட்டுக் கொளுத்தி அந்த சாம்பலை மெழுகுடன் சேர்த்து உங்கள் வீட்டின் முன் இருக்கும் ஒரு செடியில் அதை போட்டு விட வேண்டும். அவ்வளவுதான் உங்கள் மனதுக்கு பிடித்தவர் உங்களுக்கு கிடைத்து விடுவார்.

வவுனியா நகரசபையின் விழாவை புறக்கணிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு : நா.சேனாதிராஜாவின் அறிக்கைக்கு நகரபிதா பதில்!!

வவுனியா நகரசபை நடாத்தவுள்ள கலாசார விழாவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புறக்கணிக்கவுள்ளதாக நகரசபை உறுப்பினர் நா.சேனாதிராஜா பத்திரிகைச் செய்தி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இவ்வறிக்கையில் அவர் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் உண்மைக்கு புறம்பானவை என்பதோடு, நகரசபை நடாத்தவுள்ள விழா தொடர்பாக எந்தவிதமான விளக்கமுமின்றி செய்தி வெளியிட்டுள்ளார் என வவுனியா நகரசபையின் நகரபிதா தேசபந்து.இ.கௌதமன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்..

வவுனியா நகரசபை வவுனியா மாவட்டம் தழுவிய ரீதியில் பல்துறை சேவையாளர்களுக்கு விருது வழங்கும் விழா ஒன்றினை 02.12.2018 இல் நடாத்தவுள்ளது. இது ஒரு கலாசார விழாவல்ல. இது மூவின மக்களும் இணைந்து கொண்டாடும் பல்துறை சேவையாளர் விழாவாகும்.

வவுனியா நகரசபையில் ஏழு உறுப்பினர்கள் கொண்ட ஒரு கலாசார குழு உருவாக்கப்பட்டது. இதற்கு தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தலைவராக த.பரதலிங்கம் தெரிவுசெய்ப்பட்டார். இன்னும் இரண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுமாக மூன்றுபேர் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

மொழி, கலை, கலாசாரம், பண்பாடு ஆகியவற்றின் விழுமியங்களை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதில் அதிக ஆர்வம் காட்டினேன். அதனால் நகரசபையில் உள்ள பதிவுசெய்யப்பட்ட கலை, இலக்கிய மன்றங்கள், விளையாட்டுக் கழகங்கள் ஆகியவற்றை தனித்தனியே சந்தித்து கலந்துரையாடினேன்.

இக் கலந்துரையாடல்களில் அவர்களின் செயற்பாடுகள், அவர்களின் தேவைகள் ஆகியவற்றை தெரிந்துகொண்டதோடு, மொழி, கலை, கலாசாரம், பண்பாடு ஆகியவற்றின் விழுமியங்களை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவது தொடர்பான ஆலோசனைகளையும் பெற்றுக் கொண்டேன். பின்னர் இம்மன்றங்கள் அனைத்தையும் ஒன்றாகக் கூட்டினேன். இக்கூட்டத்தில் ஒவ்வொரு மன்றித்திலுமிருந்து ஒரு உறுப்பினர் தெரிவுசெய்யப்பட்டு ஒரு கலாசாரசபை உருவாக்கப்பட்டது.

இக்கலாசாரசபையில் நகரசபையின் கலாசார குழுவும் இணைக்கப்பட்டது. இக்கலாசார சபைக்கு ‘எழுநீ பண்பாட்டு முற்றம்’ என்று பெயர் சூட்டப்பட்டது. இக் கலாசார சபைக்கு நகரபிதாவாகிய என்னால் ஒரு செயற்குழு தெரிவுசெய்யப்பட்டது.

இக் கலாசார சபையின் செயற்தலைவராக மூத்த கலைஞரும் உலகறிந்த பேச்சாளரும் வவுனியா தமிழ்ச் சங்கத்தின் ஸ்தாபகருமாகிய தமிழருவி சிவகுமாரன் தெரிவு செய்யப்பட்டார்.

மூத்த கலைஞரும், எழுத்தாளரும், சமூக செயற்பாட்டளரும், ஆறு நூல்களை எழுதி வெளியிட்டவருமான கலாபூசணம் தமிழ்மணி மேழிக்குமரன் செயலாளராக தெரிவு செய்யப்பட்டார். பல்துறை சார்ந்த செயற்பாட்டாளர்கள் பதினொருபேர் இச் செயற்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

இக்குழுவில் திரு.அகளங்கன், திரு.அருணா செல்லத்துரை ஆகிய இருவரும் உள்ளவாங்கப்படவில்லை என சேனாதிராசா தெரிவித்துள்ளார். அகளங்கனுக்கு கடிதம் அனுப்பியும் அவர் கூட்டத்திற்கு வரவில்லை. அருணா செல்லத்துரை எந்த பதிவு செய்யப்பட்ட கலை இலக்கிய மன்றத்தில் உள்ளார் என்பதனை சேனாதிராசா அவர்கள் தெரிவிப்பது நல்லது.

உள்ளுராட்சி சபைகளின் உப விதிகளுக்கு அமைய நகரசபைக்குட்பட்ட பிரஜைகளை கொண்டு இக் கலாசாரசபை உருவாக்கப்பட்டது. இது தொடர்பான விளக்கத்தினை நகரசபை உறுப்பினர் என்ற வகையில் சேனாதிராஜா அவர்கள் உபவிதிகளை படித்துத் தெரிந்து கொள்வது நல்லது.

எழுநீ பண்பாட்டு முற்றம் வவுனியா மாவட்டம் தழுவிய ரீதியில் பல்துறை சேவையாளர்களை கௌரவிப்பது என செயற்குழு தீர்மானித்தது. சேவையாளர்களை யாராவது விருதுக்கு பரிந்துரை செய்யவேண்டும் என பத்திரிகைகள், இணையத்தளங்கள், முகநூல்கள் வாயிலாக அறிவிக்கப்பட்டது.

250க்கும் மேற்பட்ட பரிந்துரைகள் கிடைக்கப்பெற்றன. இதிலிருந்து சேவையாளர்களை தெரிவு செய்ய ஏழுபேர் கொண்ட தெரிவுக்குழு ஒன்று தெரிவுசெய்யப்பட்டது. இத் தெரிவுக்குழுவில் நகரசபை கலாசார குழுவின் தலைவரும் கூட்டமைப்பின் உறுப்பினருமான பரதலிங்கமும் தெரிவு செய்யப்பட்டார்.

இக்குழு 125க்கு மேற்பட்ட சேவையாளர்களை தெரிவுசெய்தது. இவர்களில் 70வீதமானவர்கள் மூத்தகலைஞர்கள், சேவையாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பரிந்துரை செய்யப்பட்ட சேவையாளர்களில் பலர் சேவையாளர்களுக்கு விருதுகொடுத்து மதிப்பளிக்கும் கௌரவம் உள்ளவர்கள் என்ற பட்டியலை தெரிவுக்குழு பரிந்துரைத்தது. அவர்களில் திரு.அகளங்கன், திரு.அருணா செல்லத்துரை ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர்.

அவர்களை சேவையாளர்களுக்கு மதிப்பளிக்க வருமாறு எமது கலாசார செயற்குழுவினர் சென்று வினயமாக கேட்டபோது அவர்கள் மறுத்து விட்டனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற அரசியல் கட்சியில் அங்கம் வகிக்கும் சேனாதிராசா அவர்கள் ஈ.பி.ஆர்.எல்.எவ்.இன் மாவட்டச் செயலாளர் கலந்து கொண்டார் எனக்குறிப்பிட்டு அரசியல் கலந்துவிட்டது எனக் கூறுவது பொருத்தமற்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினருக்கு இருக்கும் அதே அரசியல் உரிமை ஈ.பி.ஆர்.எல்.எவ். மாவட்டச் செயலாளருக்கும் உண்டு என்பதனை விளங்கிக் கொள்ள வேண்டும்.

உள்ளுராட்சி சபைகளில் ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என்று எதுவும் கிடையாது என்ற அடிப்படை அறிவுகூட இல்லாமல் கருத்து தெரிவித்திருப்பது ஆச்சரியமளிக்கிறது.

தம்பி அகளங்கனை புறக்கணிக்கிறார்கள். அவருக்கு விருது கொடுக்கும் தகுதி நகரசபைக்கு இல்லை என சேனாதிராசா சொல்கிறார். அண்ணன் சேனாதிராசா ஒரு நல்ல எதிர்க்கட்சி தலைவர் இல்லை என அகளங்கன் கூறுகின்றார். இக் குடும்பத் தகராறை தீர்ப்பது நகரசபையின் வேலை அல்ல.

முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களை விழாவுக்கு பிரதம விருந்தினராக அழைப்பது என என்னால் முன்வைக்கப்பட்ட ஆலோசனை செயற்குழுவில் முன்வைக்கப்பட்டது.

உள்ளுராட்சி சபைகளின் நிர்வாக முதல்வராக உள்ளுராட்சி அமைச்சரான முதலமைச்சரே இருந்தார். அவருடன் கடந்த ஏழுமாதங்களாக நான் கடமையாற்றியுள்ளேன். அந்தவகையில் அவருக்கு மதிப்பளிக்கும் வகையிலேயே அவரை பிரதமவிருந்தினராக அழைக்கும் ஆலோசனையை முன்வைத்தேன். செயற்குழுவில் இருந்த த.பரதலிங்கம் உட்பட்ட மூன்று கூட்டமைப்பு உறுப்பினர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அவர்கள் தாம் எதிர்க்கட்சி என்று கூறுவதால் எதைச் சொன்னாலும் எதிர்க்கவேண்டும் என்று நினைக்கிறார்கள் என்றே எண்ணத் தோற்றுகிறது.

விக்கினேஸ்வரன் அவர்களை அழைப்பது தொடர்பான ஆரோக்கியமான காரணங்களை செயற்குழு உறுப்பினர்கள் பலர் எடுத்துக் கூறியும் கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்தனர். அதனால் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.

பதினெட்டு செயற்குழு உறுப்பினர்களில் இவர்கள் மூன்றுபேரை தவிர ஏனைய பதினைந்து பேரும் விக்கினேஸ்வரனை பிரதமவிருந்தினராக அழைக்க வேண்டும் என வாக்களித்தனர். அதன்பிரகாரம் விக்கினேஸ்வரன் அவர்கள் பிரதமவிருந்தினராக எமது விழாவில் கலந்து கொள்கிறார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினரான சேனாதிராசா போன்றவர்கள் சமூகமேம்பாட்டுக்கு எதிரானவர்கள் என்பதனை மக்கள் இனங்கண்டு கொள்ள வேண்டும் என நகரபிதா தெரிவித்துள்ளார்.

மலம் கழிக்க சென்ற மாணவியை சீரழித்த இளைஞர்கள் : கதறும் தாய்!!

மாணவியை சீரழித்த இளைஞர்கள்

தமிழகத்தில் இயற்கை உபாதை கழிக்கச் சென்ற மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பெரும் துன்பங்களை சந்தித்து பரிதாபமாக இறந்த நிலையில், அவரின் மருத்துவ அறிக்கையில் மன அழுத்தம் காரணமாக மூளையில் நீர்கோத்து, மூளையில் இருக்கும் நரம்பு வீக்கம் அடைந்ததால் இறந்துள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தர்மபுரி சிட்லிங் கிராமத்தை சேர்ந்த அண்ணாமலை, மலர் தம்பதியரின் மகள் செளமியா(17). இவரது வீட்டில் கழிப்பறை இல்லை. இந்நிலையில் மாணவி செளமியா கடந்த நவம்பர் 5-ஆம் திகதி இயற்கை உபாதையை கழிக்க சென்றபோது அதே கிராமத்தைச் சேர்ந்த சதீஷ், ரமேஷ் என்பவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.

இதனைத்தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக கோட்டப்பட்டி காவல் துறையினர் சதீஷ், ரமேஷ் ஆகிய இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது, ஆனாலும், பாலியல் பலாத்காரத்துக்கான முயற்சி என்றுதான் எப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இறந்த மாணவி செளமியா பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவப் பரிசோதனைக்காக அரூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார், ஆனால் சாதாரணமாக செக்அப் செய்துவிட்டு, தர்மபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவரை அனுப்பிவைத்துள்ளனர்.

அங்கு சௌமியாவை வெளிநோயாளிகளுக்கான வார்டில் செக்கப் செய்துவிட்டு, மறுநாள் வருமாறு கூறியுள்ளனர். இப்படி அங்கும் இங்குமா அலையவிட்டதால், உடல் அளவில் கடுமையாக பாதிக்கப்பட்ட செளமியா இறுதியாக அங்கிருக்கும் மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கும் அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை, இப்படி கடைசி வரை சாதரண சிகிச்சை அளிக்கப்பட்டதால், செளமியா பரிதாபமாக உயிரிழந்தார்.

அதன் பின் வந்த அவருடைய மருத்துவ அறிக்கையில், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட அவருக்கு ஏற்பட்ட மன அழுத்தத்தால், மூளையில் நீர்கோத்து, மூளையில் இருக்கும் நரம்பு வீக்கம் அடைந்ததால் மரணம் ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தமிழகத்தையே உலுக்கிய நிலையில் செளமியாவின் மரணத்திற்கு நீதி கேட்டு அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர். சௌமியாவின் இறப்பு குறித்து ஆர்.டி.ஓ விசாரணை நடத்தப்படும் என்று மாவட்ட ஆட்சியர் கூறிய பின்னரே அவர்கள் சென்றனர்.

செளமியாவை பாலியல் வன்கொடுமை செய்த இரண்டு பேரில் ரமேஷ் என்பவர் சாராய வியாபாரியின் மகன் என்று கூறப்படுகிறது. இதனால் அவனை காப்பாற்றவே சௌமியாவின் புகாரை பதிவுசெய்யாமல் இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் அலட்சியப்படுத்தியதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி தற்போது பாலியல் பலாத்காரத்துக்கான முயற்சி என்று மட்டுமே எப்.ஐ.ஆரில் பதிவு செய்யப்பட்டுள்ளதால், அதை பாலியல் வன்கொடுமை என்று மாற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு பெண்கள் கூட்டமைப்பு மற்றும் உண்மை அறியும் குழு ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் தமயந்தி கூறியுள்ளார்.

அதன் பின் இது குறித்து செளமியாவின் தாய் மலர், என் பொண்ணு நல்லா படிப்பாள், அவளுக்கு நல்ல படியாக படித்து பொலிஸ் அதிகாரியாக வேண்டும் என்பது தான் ஆசை, ஆனால் இப்படி அவள அநியாயமா கொன்னுட்டாங்களே, என் மகள் சாவுக்கு பொலிசும் காரணம் என்று கதறி அழுதுள்ளார்.

வவுனியா தெற்கு பிரதேசசபையில் கால்நடைகளால் அலுவலகப்பணிகள் பாதிப்பு!!

வவுனியா தெற்கு பிரதேசசபை

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையினால கடந்த சில தினங்களாக வீதியிலுள்ள கால்நடைகள் பிடிக்கப்பட்டுவருகின்றன. இந்நிலையில் அவற்றை பிரதேச சபையில் அடைத்து, கட்டி வைக்கப்படாமல் வளவில் கைவிடப்பட்டுள்ளது.

இதனால் அலுவலகத்திற்குள் மாடுகள் செல்கின்றன. இதன் காரணமாக அங்கு செல்லும் மக்களுக்கும் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இடையூறுகள் ஏற்படுகின்றன என்று தெரிவிக்கப்படுகின்றது.

அண்மைய காலங்களில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைத் தவிசாளரினால் வீதிகளில் கைவிடப்பட்ட கால்நடைகள் பிடிக்கும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில் அவற்றை பாதுகாப்பாக கட்டி வைக்காமல் பிரதேச செயலகத்திலுள்ள வளவில் கைவிடப்பட்டுள்ளது.

அலுவலகத்திற்குள் உள்ள கால்நடையினால் மக்களுக்கு இடையூறுகள் ஏற்படுவதுடன் அலுவலகத்திற்குள் சென்று அலுவலகப் பணியாளர்களுக்கும் இடையூறுகள் ஏற்படுத்தி வருவதாக உத்தியோகத்தர்களும் தெரிவித்துள்ளனர்.

வெளியே வீதியில் பொதுமக்களினால் கைவிடப்பட்ட கால்நடைகளினால் வீதி விபத்துக்கள் ஏற்படுகின்றன எனத் தெரிவித்து தமிழ் தெற்கு பிரதேச சபையினால் கையகப்படுத்தப்பட்டுள்ள கால்நடைகள் பிரதேச சபையின் அலுவலகத்திற்குள் கட்டிவைக்கப்படவில்லை. அங்கேயும் கைவிடப்பட்டுள்ளதால் அங்கு சேவைகள் பெறச் செல்லும் மக்களுக்கும் அலுவலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர்களுக்கும் இடையூறுகள் ஏற்படுவதாகத் தெரிவிக்கின்றனர்.

யாழில் இரக்கமின்றி நாயை அடித்துக் கொன்ற நபர்!!

யாழ்ப்பாணம், திருநெல்வேலி பகுதிக்குள் வசிக்கும் நபர் நாய் ஒன்றை அடித்துக் கொலை செய்து, வீதியில் உள்ள குப்பைகளுடன் போட்ட இழிச்செயல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநகர சபை எல்லைப் பகுதிக்குள் உள்ள திருநெல்வேலியில் கடந்ந வாரம் ஒருவர் தனது வீட்டு வளவிற்குள் பிரவேசித்த தெரு நாயை அடித்துக் கொலை செய்துள்ளார்.

அவ்வாறு கொல்லப்பட்ட நாயை ஓர் பையில் பொதி செய்து மாநகர சபையினால் கழிவு சேகரிக்கும் இடத்தில் வீசிச் சென்றுள்ளார்.

குறித்த சம்பவம் இடம்பெற்று இரு தினங்களின் பின்னர் கழிவு அகற்ற சென்ற மாநகர சபை ஊழியர்கள் அதனை அவதானித்து அயலில் ஆராய்ந்த வேளையில் குறித்த செயலினை மேற்கொண்டவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதனையடுத்து சுகாதார மேற்பார்வையாளர் ஒருவர் குறித்த வீட்டின் உரிமையாளரை அனுகி அதனை உரிய முறையில் அகற்றுமாறு கோரிய போது அச் செயலை தான் மேற்கொள்ளவில்லை என மறுத்துள்ளார்.

இந்த நிலையில், மேலும் ஆராய்ந்த நிலையில் உயிரிழந்த நாய் குறித்த வீட்டிற்குள் செல்வது முதல் அடித்துக்கொள்வது மற்றும் பொதி செய்து எடுத்துச் செல்வது வரையான சம்பவங்கள் அயலில் உள்ள ஓர் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சீ.சீ.ரி.வி கமராவில் பதிவாகியிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனால் குறித்த வீடியோவினை காண்பித்து உறுதி செய்த நிலையில் வீதியில் எறிந்த நாயினை மீண்டும் வீட்டிற்கு எடுத்துச் சென்று புதைக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவில் பாடசாலை மதிய உணவில் உயிரிழந்த பல்லி : 36 மாணவர்கள் வைத்தியசாலையில்!!

முல்லைத்தீவு – வன்னிவிளாங்குளம் பாடசாலையில் இன்று வழங்கப்பட்ட மதிய உணவை உட்கொண்ட 36 மாணவர்கள் மாங்குளம் மற்றும் மல்லாவி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முல்லைத்தீவு – துணுக்காய், வன்னிவிளாங்குளம் பாடசாலையில் இன்று மதியம் வழங்கப்பட்ட மதிய உணவினை பெற்றுக்கொண்ட மாணவி ஒருவரின் சாப்பாட்டுக் கோப்பைக்குள் உயிரிழந்த நிலையில் முழுமையான பல்லி ஒன்று காணப்பட்டுள்ளது.

இதையடுத்து மதிய உணவினை உட்கொண்ட 36 மாணவர்களும் உடனடியாக மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் இடவசதி பற்றாக்குறை காரணமாக 16 மாணவர்கள் மல்லாவி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் மாங்குளம் வைத்தியசாலை அதிகாரியை தொடர்பு கொண்டு வினவிய போது, “குறித்த பாடசாலையில் வழங்கப்பட்ட மதிய உணவில் உயிரிழந்த பல்லி காணப்பட்ட நிலையில், உணவில் நச்சுத்தன்மை ஏற்பட்டு மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

இதில் 16 மாணவர்களை மல்லாவி ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் மாணவர்களில் எவ்வித வித்தியாசங்களும் காணப்படவில்லை” என வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை இந்த விடயம் தொடர்பில் துணுக்காய் வலயக்கல்வி பணிப்பாளரை தொடர்புகொண்டு வினவிய போது,

இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களை உதவிக்கல்விப் பணிப்பாளர் மற்றும் கல்வி உத்தியோகத்தர்களுடன் சென்று பார்வையிட்டதாக தெரிவித்துள்ளார்.

மேலும், உணவு பரிமாறும் இடத்தில் தான் இந்த சம்பவம் இடம்பெற்றிருக்க கூடும்” என்றும் தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொதுச்சுகாதாரப் பரிசோதகர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மஹிந்தவிற்காக குண்டு துளைக்காத கார்கள்?

பிரதமர் மஹிந்த ராஜபக்சவிற்காக குண்டு துளைக்காத கார்களை கொள்வனவு செய்யும் திட்டம் எதுவும் இல்லை என தெரிவிக்கப்படுகிறது. பிரதமர் ஊடகப் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிற்காக இரண்டு குண்டு துளைக்காத கார்கள் கொள்வனவு செய்யப்பட உள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

இதுவரையில் பிரதமருக்காக புதிய வாகனங்கள் எதுவும் கொள்வனவு செய்யப்படவில்லை என பிரதமர் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.