பல வீடுகளில் பாத்திரம் கழுவி மகனின் கனவை நனவாக்கிய தாய்!!

திருநெல்வேலி மாவட்டத்தில் பல வீடுகளில் பாத்திரம் கழுவி தனது மகனின் மருத்துவ கனவை நிறைவேற்றியுள்ளார் தாய் சிவசக்தி.

பாஸ்கர் – சிவசக்தி தம்பதியினரின் இளைய மகன் சுதாகர், கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுத விரும்புவதாக பெற்றோரிடம் தெரிவித்துள்ளர். தாய் சிவசக்தி அந்த பகுதியில் உள்ள பல வீடுகளில் பாத்திரம் கழுவி வீட்டு வேலைகள் செய்து வந்துள்ளார்.

நீட் தேர்வு பயிற்சிக்கு ஒன்றரை லட்ச ரூபாய் வரை செலவாகும் நிலையில், சிவசக்தி தனது நகைகளை விற்றதோடு மட்டுமல்லாமல் தான் வேலை பார்த்த பணத்தினை சேர்த்து வைத்து உதவி செய்துள்ளார்.

ஆனால் கடந்த ஆண்டு அவரால் நீட் தேர்வில் 161 மதிப்பெண்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இருப்பினும் பெற்றோர் கொடுத்த ஊக்கத்தால் இரண்டாம் முறை நீட் தேர்வுக்கு எழுதி 303 மதிப்பெண்கள் பெற்ற அவருக்கு, நெல்லை மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது.

தனது தந்தை இதய நோயால் பாதிக்கப்பட்டதால், இதய சிறப்பு மருத்துவராக வேண்டும் என சுதாகர் தெரிவித்துள்ளார்.

கிழிந்த உடையுடன் இருந்த ஏழை சிறுவனுக்கு கிடைத்த 50,000 ரூபாய் : என்ன செய்தான் தெரியுமா?

தமிழ்நாட்டில் சாலையில் கேட்பாரற்று கிடந்த 50 ஆயிரம் ரூபாய் பணத்தை பொலிசிடம் ஒப்படைத்த ஏழை மாணவனுக்கு பாராட்டு விழா நடத்த காவல்துறை முடிவு செய்துள்ளது.

ஈரோட்டை சேர்ந்த பாட்சா – அப்ரோஜ் பேகம் தம்பதியின் மகன் யாசின் அரசு பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வருகிறான்.

சில நாட்களுக்கு முன்னர் யாசின் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த போது சலையில் பை ஓன்று இருப்பதை பார்த்து அதை திறந்துள்ளான்.

அதில் 50,000 ரூபாய் இருந்த நிலையில் பையை எடுத்து கொண்டு ஆசிரியரிடம் சென்றுள்ளான். அந்த பையை பெற்றுக்கொண்ட ஆசிரியர் அதனை பொலிசாரிடம் யாசினை வைத்து கொண்டு ஒப்படைத்தார்.

பணத்தை பெற்றுக்கொண்ட காவல்துறை கண்காணிப்பாளர் சக்தி கணேசன் சிறுவனின் நேர்மையை பாராட்டி அவருக்கு வாழத்துகளை கூறினார். சிறுவனுக்கு பாராட்டு விழா நடத்தவும் பொலிசார் முடிவு செய்தனர்.

பள்ளி சீருடை கிழிந்த நிலையில் குடும்பம் ஏழ்மையான நிலையில் இருந்தபோதும் பணத்தை ஒப்படைத்த யாசினின் நேர்மையை பலரும் பாராட்டியுள்ளனர்.

காவல் நிலையத்திற்கு முன்பாக கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட பெண்!!

ராணிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்து விட்டு வெளியே வந்த பெண்ணை வெட்டி கொலை செய்த நபரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

வேலூர் அருகில் உள்ள ராணிப்பேட்டை செங்காடு பகுதியை சேர்ந்த சுகுணா (45) என்பவர் ராணிப்பேட்டை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்து விட்டு வெளியே வரும்போது வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.

இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் காவல் நிலையத்தில் இருந்து வெளியேறி சென்று கொண்டிருந்த சுகுனவை கத்தியால் வெட்டி விட்டு தப்பி ஓடியதாக தெரிய வருகிறது.

அந்த இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் விழுந்து சுகுணா உயிர் இழந்தார். இவர் கணவனை இழந்தவர். இந்த சம்பவத்தால் அங்குள்ள மக்கள் பதட்டத்தில் இருக்கின்றனர்.

முதல் கட்ட விசாரணையில் சுகுணாவிற்கும் சுரேந்திரன் என்பவருக்கும் தொடர்பு இருந்ததாகவும் நேற்று மாலை குடித்து விட்டு சுகுணா வீட்டிற்கு சென்ற சுரேந்திரன் சுகுணாவோடு வாக்குவாதம் செய்ததாகவும் அதன்பின்னர் சுகுணாவை செங்கல்லால் தாக்கி விட்டு அங்கிருந்து 1000 ரூபாயை எடுத்து கொண்டு போனதாகவும் தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாகத்தான் சுகுணா புகார் அளிக்க காவல் நிலையம் வந்திருக்கிறார். இதனை அறிந்த சுரேந்திரன் ஆத்திரம் தாங்காமல் அவரது செய்கையை பின்தொடர்ந்து வந்த சுரேந்திரன் இந்த கொலை செயலை செய்து விட்டு தப்பி இருப்பதாக பொலிஸார் தரப்பில் கூறப்படுகிறது.

சுகுணாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார் தலைமறைவான சுரேந்திரனை தேடி வருகின்றனர்.

பெற்ற மகளுக்காக இயக்குனரின் பாலியல் தொல்லையை பொறுத்து கொண்ட பிரபல நடிகை!!

மலையாள தொலைக்காட்சி இயக்குனரின் பாலியல் தொல்லை பற்றி நடிகை ஒருவர் புகார் அளித்திருக்கிறார்.

மலையாளத்தில் பிரபலமான தொலைக்காட்சி தொடர் உப்பும் மொளகும். இந்த தொடரில் ஐந்து குழந்தைகளுக்கு தாயாக நடித்தவர் நிஷா சாரங். இவர் 650 தொடருக்கும் மேலாக இந்த சீரியலில் நடித்து வருகிறார்

இந்த தொடரின் இயக்குனர் உன்னி கிருஷ்ணன் மீது பாலியல் புகார் அளித்திருக்கிறார் நிஷா. இயக்குனர் உன்னி கிருஷ்ணன் நெடுங்காலமாகவே தனக்கு தொல்லைகள் தந்து வந்ததாக கூறும் நிஷா தனக்கு பிடிக்கவில்லை என்று தெரிந்தும் அவரை தொல்லை செய்ததை நிறுத்தவில்லை என்கிறார்.

மேலும் தான் நினைத்ததை அடைய முடியவில்லை என்பதால் ஆத்திரத்தில் பலமுறை உன்னி கிருஷ்ணன் நிஷாவை செட்டில் அவமானப்படுத்தியிருக்கிறார். மேலும் தொலைபேசியிலும் ஆபாசமாக திட்டி குறுஞ்செய்தி அனுப்புவாராம்.

தினமும் குடித்து விட்டு செட்டுக்கு வரும் உன்னி கிருஷ்ணன் இவரிடம் மோசமாகவே நடந்ததாக நடிகை புகார் அளித்துள்ளார்.

மேலும் மகளின் திருமணத்திற்காக அத்தனை அவமானத்தையும் பொறுத்து கொண்டதாகவும் இனிமேலும் பொறுத்து கொள்ள முடியாமல் புகார் அளித்ததாக கூறியிருக்கிறார்.

பாம்பு கடித்து இறந்த தாய் : சடலத்துடன் பைக்கில் சென்ற இளைஞர்!!

இந்தியாவில் இளைஞர் ஒருவர் பாம்பு கடித்து மரணமடைந்த தனது தாயின் உடலை, பிரேத பரிசோதனைக்காக இருசக்கர வாகனத்தில் 38 கிலோ மீற்றர் தூரம் கொண்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரேச மாநிலம் திகாம்கர் மாவட்டத்தில் உள்ள மஸ்தாபூர் ஊரைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவரது தாய் குன்வார் பாய் பாம்பு கடியால் இறந்துவிட்டார்.

இதுதொடர்பாக, ராஜேஷ் பொலிசாருக்கு தகவல் கொடுத்தபோது, அவர்கள் பிரேத பரிசோதனைக்காக குன்வாரின் உடலை மருத்துவமனைக்கு கொண்டு வரும்படி கூறியுள்ளனர்.

ஆனால், அதற்கு வாகன வசதி செய்து தர அவர்கள் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. அதன் பின்னர், வாகனத்தில் கொண்டு செல்ல பணமில்லாததால் ராஜேஷ் தனது இருசக்கர வாகனத்திலேயே தனது தாயின் உடலை கொண்டு செல்ல முடிவு செய்தார்.

அதன்படி, தனது தாயின் உடலை இருசக்கர வாகனத்தின் பின்பக்கம் கட்டி வைத்து, தனது ஊருலிருந்து சுமார் 35 கிலோ மீற்றர் தூரம் உள்ள மருத்துவமனைக்கு பயணம் செய்தார். இந்த காட்சியை பார்த்தவர்கள் வீடியோவாக பதிவு செய்து இணையதளத்தில் வெளியிட்டனர்.

இந்நிலையில், இச்சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர் அபிஜித் அகர்வால் கூறுகையில், ‘ஆம்புலன்சுக்கு அவர் தகவல் கொடுத்திருந்தால், நாங்கள் அனுப்பி வைத்திருப்போம். அது போன்ற எந்த முயற்சியிலும் அவர் ஈடுபடவில்லை.

ஆனாலும், பிரேத பரிசோதனை முடிந்த பின்னர் ஆம்புலன்ஸில் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தோம்’ என தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் பல மாநிலங்களில் இது போன்று வாகன வசதியில்லாமல், இருசக்கரம் உள்ளிட்ட வசதியில்லாத வாகனத்தில் இறந்தவர்களின் உடலை கொண்டு செல்லும் அவலம் தொடர்ந்து நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

அண்ணனின் இறப்பு செய்தியை கேட்டு அதிர்ச்சியில் உயிரிழந்த தங்கை!!

அண்ணனின் இறப்புச் செய்தி கேட்ட அதிர்ச்சியில் அவரது தங்கை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடியை சேர்ந்த திருப்பதி என்பவர் கிராம நிர்வாக அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறார். மதுவுக்கு அடிமையான இவர் சரியாக பணிக்கு செல்லாத காரணத்தால் 5 ஆண்டுகளுக்கு முன்னர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

இதனால் விரக்தியில் இருந்த திருப்பதி, அளவுக்கதிகமாக மது குடிக்க ஆரம்பித்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.

திருமணம் செய்துகொள்ளாத இவர் தனது இரண்டு தங்ககைள் மீது அளவுகடந்த பாசம் வைத்திருந்துள்ளார். இந்நிலையில், இவரது இறப்பு செய்தி தொலைபேசி வாயிலாக இவரது தங்கை கற்பகவல்லிக்கு தெரிவிக்கப்பட்டது.

இந்த செய்தியை கேட்டுக்கொண்டிருந்தபோது தங்கை அதிர்ச்சியில் மயங்கி விழுந்துள்ளார். இவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது இவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது, இருவரது உடலும் ஒன்றாக அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

செல்பி மோகம்… ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியவர்கள் முன் இளைஞர்கள் செய்த கேவலமான செயல்!!

ராஜஸ்தானில் சாலை விபத்தில் சிக்கி உயிருக்கு போராடி கொண்டிருந்தவர்களை காப்பாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளாமல், இளைஞர்கள் சிலர் செல்பி எடுத்துள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம், பார்மர் மாவட்டம் அருகே ஜெய்சால்மர் பகுதியில், இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த 3 பேரின் மீது, பள்ளி வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார். மற்ற இவர்கள் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்துள்ளனர்.

அப்பொழுது அங்கு ஓடிவந்த பொதுமக்களில் சிலர் காப்பாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளாமல், செல்பி வீடியோ மற்றும் போட்டோ எடுத்துள்ளனர்.

இதற்கிடையில் சம்பவம் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், உயிருக்கு போராடி கொண்டிருந்த மற்ற இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலே இருவரும் உயிரிழந்தனர்.

பின்னர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொள்ளும்பொழுது, விபத்தில் சிக்கியவர்கள், Parmanand (27), Gemaram (30) மற்றும் Chandaram (30) என்பது தெரிய வந்தது. குஜராத்தில் உள்ள சிமெண்ட் தொழிற்சாலையில் வேலை செய்து வரும் மூன்று பேரும், ராஜஸ்தானில் வேலைக்கு வந்துவிட்டு வீடு திரும்பும்பொழுதே விபத்து ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இதில், Gemraram தனது மனைவி மற்றும் 2 வயது மகனுடனும், Chandaram தனது பெற்றோரிடம் இருந்து பிரிந்து மனைவி மற்றும் 5 மாத மகளுடன் வசித்து வருவதும் தெரியவந்துள்ளது. அதேசமயம் Parmanand திருமணமாகாதவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

என்னையும் கடத்தினார்கள் : பிரபல நடிகை வெளியிட்ட பரபரப்பு தகவல்!!

மலையாள நடிகரரான திலீப் கடந்த ஆண்டு நடிகை ஒருவரை கடத்திய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலையாகி வந்துள்ளார்.

இந்நிலையில் நடிகை கடத்தல் விவகாரம் தொடர்பான வழக்கு முடிவுக்கு வராத நிலையில் நடிகை பார்வதி “நானும் கடத்தப்பட்டுள்ளேன்” என்று கூறி அதிர்ச்சி தகவலை வெளியிட்டு இருந்தார். இதுபற்றி மேலும் அவர் கூறுவதாவது;

“எனது தோழி நடிகை கடத்தப்பட்ட தகவல் அறிந்து நான் அதிர்ச்சியானேன். ஆனால் யாரும் அவருக்கு உதவ முன்வரவில்லை. இது எனக்கு மேலும் அதிர்ச்சியை தந்தது.

ஏனென்றால் எனக்கும் அதுபோல் ஒரு சம்பவம் நடந்தது. என்னை கடத்தியது யார் என்பதை இப்போதுகூட தெரிவித்து தண்டனை வாங்கித் தர முடியும்.

ஆனால் அதை நான் விரும்பவில்லை. அவர்கள் எதையும் செய்யத் துணிந்தவர்கள். எனக்கு நடந்த சம்பவத்துக்காக நான் அழுதுகொண்டு மூலையில் உட்கார்ந்து விடவில்லை. அதிலிருந்து வெளியே வந்துவிட்டேன்.

இதுபோன்ற சம்பவங்கள் குறித்து பெண்கள் விழிப்புடனும் முன்னெச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்பதற்காகவே இதை சொல்கிறேன்’ என்றார் பார்வதி.

சொர்க்கத்திலிருந்து பார்ப்பான் : இருவர் உயிரை காப்பாற்றிவிட்டு உயிரிழந்த சிறுவன் குறித்து வேதனை!!

கேரளாவை சேர்ந்த சிறுவன் தண்ணீரில் மூழ்கிய இருவரின் உயிரை காப்பாற்றிவிட்டு தன்னுடைய உயிரைவிட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரோஸ் (14). இவர் ஐந்து நாட்களுக்கு முன்னர் அங்குள்ள கடற்கரை ஓரத்தில் தனது சகோதரர் பஹத் (13) மற்றும் அவர் நண்பருடன் சேர்ந்து கால்பந்து விளையாடி கொண்டிருந்தார்.

அப்போது பந்து கடல் உள்ளே சென்ற நிலையில் பஹத் அதை எடுக்க சென்றுள்ளார். இதையடுத்து நீரில் மூழ்க தொடங்கிய பஹத்தை காப்பாற்ற அவர் நண்பர் சென்ற போது அவரும் நீரில் மூழ்கினார்.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பிரோஸ் வேகமாக தண்ணீரில் இறங்கி பஹத்தையும், அவர் நண்பரையும் காப்பாற்றினார், ஆனால் துரதிஷ்டவசமாக அவர் தண்ணீரில் மூழ்கினார்.

இதையடுத்து சிறிது நேரம் கழித்து அங்கு வந்த சிலர் பிரோஸை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து பேசிய பிரோஸின் தம்பி பஹத், என்னை காப்பாற்ற முயன்று அவன் உயிரிழந்துவிட்டான். மீண்டும் அவன் என்னிடம் வரவேண்டும் அல்லா என சோகத்துடன் கூறியுள்ளார்.

இதனிடையில் மிகபெரிய கால்பந்து ரசிகரான பிரோஸ் அவனுக்கு பிடித்த பிரான்ஸ் அணி விளையாடிய அரையிறுதி போட்டியை சொர்க்கத்திலிருந்து பார்த்திருப்பான் என நபர் ஒருவர் பேஸ்புக்கில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

நடுவானில் நேருக்கு நேர் மோதவிருந்த இரு விமானங்கள் : நூலிழையில் உயிர் தப்பிய 330 பயணிகள்!!

கர்நாடக மாநிலம் பெங்களூர் வான்வெளி எல்லைக்குட்பட்ட பகுதியில், இரு விமானிகள் நேருக்குநேர் மோதவிருந்த விபத்து 200அடி இடைவெளியில் தவிர்க்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 10-ம் தேதியன்று கோவையிலிருந்து ஹைதராபாத்திற்கு 162 பயணிகளுடன் இண்டிகோ விமானமும், பெங்களூரில் இருந்து கொச்சிக்கு 166 பயணிகளுடன் புறப்பட்ட விமானமும் பெங்களூர் எல்லைக்குட்பட்ட பகுதியில் நேருக்கு நேர் மோதவிருந்துள்ளது.

இதற்கிடையில் 200 அடி இடைவெளியின் போது விமான மோதல் தடுப்பு சிஸ்டம் அலாரம் (TCAS) ஒலிக்க துவங்கியுள்ளது.

இதனையடுத்து சுதாரித்துக் கொண்ட விமான ஓட்டிகள் உடனடியாக மோதலை தவிர்ப்பதற்கான பணிகளில் ஈடுபட்டு, பெரும் அசம்பாவிதம் ஏற்படாத வண்ணம் செயல்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக தற்போது விமான விபத்து புலனாய்வு வாரியம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.

வவுனியாவின் கின்னஸ் உலக சாதனையாளன் கணேஸ்வரனுக்கு பாடசாலை சமூகத்தால் மதிப்பளிப்பு!(படங்கள்)

அண்மையில்  உலகில் அதிக நீளமான ‘மின் இணைப்பு பொருத்தி’ (Power Strip)  தயாரித்து கின்னஸ் உலக சாதனை  புத்தகத்தில் இடம்பெற்ற வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் பழைய மாணவனும் இயந்திரவியல் பொறியியளாளருமான கனகேஸ்வரன் கணேஸ்வரன்  மற்றும் தெற்காசிய மெய்வல்லுனர் போட்டியில் 5000m ஓட்டப்போட்டியில்  கலந்து கொண்டு  வெண்கலம்  வென்று  இலங்கை வடமாகாணம் வவுனியா மாவட்டம் மற்றும்  வவுனியா தமிழ் மத்திய  மகாவித்தியாலயம் என்பவற்றுக்கு பெருமை  சேர்த்த மாணவன்  சிவானந்தன் கிந்துசன், பயிற்றுவிப்பாளர்  நவநீதன்   ஆகியோரை  கௌரவிக்கும்  நிகழ்வு  நேற்று  11.07.2018  புதன்கிழமை  வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் அதிபர் திரு.தா.அமிர்தலிங்கம் தலைமையில்  இடம்பெற்றது.

மேற்படி நிகழ்வில் சாதனையாளர்கள்  பாடசாலை சமூகத்தினரால்   மலர்மாலை அணிவித்து பாண்ட் வாத்தியம் சகிதம் அழைத்து வரப்பட்டு  காலைப் பிரார்த்தனை வேளையில்  பொன்னாடை போர்த்தியும்  வாழ்த்துப்பா  வழங்கியும்  கௌரவிக்கும்  நிகழ்வும்  இடம்பெற்றது.

இந்த கின்னஸ் உலக சாதனையானது இலங்கையின் தனி ஒருவரால் நிகழ்த்தப்பட்ட தொழில்நுட்பரீதியான முதலாவது கின்னஸ் சாதனையாகவும் வட மாகாணத்தில் நிகழ்த்தப்பட்ட தொழில்நுட்பரீதியான முதலாவது கின்னஸ் சாதனையாகவும்  வவுனியா மாவட்டத்தில் நிகழ்த்தப்பட்ட முதலாவது கின்னஸ் சாதனையாகவும் மற்றும்
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் நிகழ்த்தப்பட்ட முதல் கின்னஸ் சாதனையாகவும் விளங்குவதுடன்  மேற்படி சாதனை நாயகனான  கனகேஸ்வரன் கணேஸ்வரன் அவர்கள்  தன்னுடைய இந்த சாதனைக்கு  காரணமான  கல்லூரி  தாய்க்கு தனது  உலக சாதனை  சான்றிதழை  சமர்ப்பணம்  செய்துள்ளார் . தன்னுடைய   சாதனை சான்றிதழை  கல்லூரியின் அதிபரிடம் கையளித்து பாடசாலைக்கு  பெருமை சேர்த்துள்ளார்.

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தால் தெற்காசிய சாதனையாளன் கிந்துஷன் கௌரவிப்பு!(படங்கள்,வீடியோ)

கடந்த  06.05.2018 இல்  கொழும்பு சுகதாச உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்ற  தெற்காசிய மெய்வல்லுனர் போட்டியில் 5000m ஓட்டப்போட்டியில்  கலந்து கொண்டு  வெண்கலம்  வென்று  இலங்கை வடமாகாணம் வவுனியா மாவட்டம் மற்றும்  வவுனியா தமிழ் மத்திய  மகா வித்தியாலயம் என்பவற்றுக்கு பெருமை  சேர்த்த மாணவன்  சிவானந்தன்   கிந்துசன், பயிற்றுவிப்பாளர்  நவநீதன்    மற்றும்  வவுனியா  தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின்  பழைய மாணவரான  கின்னஸ் சாதனையாளர்  கனகேஸ்வரன் கணேஸ்வரன்  ஆகியோரை கௌரவிக்கும்  நிகழ்வு  நேற்று  11.07.2018  புதன்கிழமை  வவுனியா தமிழ் மத்திய மகா  வித்தியாலயத்தில்  அதிபர்  திரு.தா.அமிர்தலிங்கம் தலைமையில்  இடம்பெற்றது.



மேற்படி நிகழ்வில் சாதனையாளர்கள்  பாடசாலை சமூகத்தினரால்   மலர்மாலை அணிவித்து பாண்ட் வாத்தியம் சகிதம் அழைத்து வரப்பட்டு  காலைப் பிரார்த்தனை வேளையில்  பொன்னாடை போர்த்தியும்  வாழ்த்துப்பா  வழங்கியும்  கௌரவிக்கும்  நிகழ்வும்  இடம்பெற்றது.

மேற்படி நிகழ்வில் ஆசிய மெய்வல்லுனர்   தெற்காசிய மெய்வல்லுனர் போட்டியில் 5000m ஓட்டப்போட்டியில் வெண்கல பதக்கம் பெற்ற  மாணவன் கிந்துசன்  அவர்களுக்கு  சிறப்பு  மாணவ முதல்வர் சின்னம்  சூட்டும்  நிகழ்வும்  இடம்பெற்றமை  குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில்  பாடசாலையின் அதிபர், பிரதிஅதிபர்கள் ,ஆசிரியர்கள், மாணவர்கள் பெற்றோர் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது .

இந்த நூற்றாண்டின் மிக நீண்ட அதிசயம் : ஜூலை 27இல் மீண்டும் பிளட் மூன்!!

இந்த நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம் (Blood Moon) எதிர்வரும் 27ஆம் திகதி ஏற்படவுள்ளதாக நாசா ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வழமையாக பிளட் மூன் தோன்றும் நாளில் சூரியனின் ஒளி நேரடியாக நிலவின் மீது படாமல் பூமியின் வளிமண்டலத்தின் மேல் பட்டு அந்த கதிர்கள் நிலவின் மீது விழும், அதனால்தான் அது சிவப்பு நிறத்தில் பிரதிபலிக்கின்றது.

இதன் காரணமாகத்தான் மற்ற சந்திர கிரகணங்களைப்போல இல்லாமல், இது பூமியின் நிழலை கடந்து நேரடியாக கடந்து செல்லுகின்ற வரையிலும் நம்முடைய பார்வைக்குத் தென்படுகின்றது.

இந்நிலையில், 82 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மிக நீண்ட சந்திர கிரகணம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன் இந்த நூற்றாண்டினது மிக நீண்ட சந்திர கிரகணமாகவும், அதிசயமாகவும் இது இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்த வருடம் ஜனவரி மாதம் 31ஆம் திகதி சந்திர கிரகணம் நிகழ்ந்த நிலையில் மீண்டும் இம்மாதம் 27ஆம் திகதி சந்திர கிரகணம் இடம்பெறவுள்ளது.

இந்த கிரகணத்தின்போது சந்திரன் சிவப்பு நிறத்தில் சுமார் ஒன்றரை மணி நேரம் வரை நீடிக்கும் என்றும் இந்த கிரகணத்தை 27ஆம் திகதி பின்னிரவு முதல் 28ஆம் திகதி அதிகாலை வரை அனைவரும் காணலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திர முழுக்கிரகணத்தின்போது, சந்திரனுக்கும் பூமிக்கும் இடையிலான தூரம் சுமார் 4 இலட்சத்து 6 ஆயிரத்து 223 கிலோ மீற்றர்களாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பூமியின் கிழக்கு அரைக்கோளத்தில் இருக்கின்ற தென் அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள், மத்திய கிழக்கு ஆசியா மற்றுமட் ஆப்பிரிக்க கண்டத்தின் பெரும்பகுதியில் வாழும் மக்கள் பார்க்க முடியும் என்பதோடு ஆர்ட்டிக் மற்றும் பசுபிக் கடலோரப் பகுதிகளில் உள்ளவர்கள் இதனை பார்க்க முடியாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பெண்ணொருவரின் மோசமான செயற்பாடு : ஆயுள் தண்டனை வழங்கிய நீதிமன்றம்!!

வெலிக்கடை சிறைச்சாலைக்குள் டெனிஸ் பந்தினை தூக்கி எறிந்து ஹெரோயின் போதை பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குற்றவாளியாக பெயரிடப்பட்ட பெண்ணுக்கு நேற்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

டெனிஸ் பந்திற்குள் நுட்பமான முறையில் 3.15 கிராம் ஹெரோயின் வைத்து குறித்தபெண் இந்த செயற்பாட்டினை மேற்கொண்டுள்ளார்.

2011ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலைக்கு அருகில் ஹிருனி எல்விஸ் என்ற பெண் இந்த குற்றத்தை செய்துள்ளதாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

குற்றச்சாட்டு சந்தேகமின்றி நிரூபிக்கப்பட்டமையினால் நேற்று இந்த பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தங்கையின் கையை பிடித்த இளைஞன் : கோபத்தில் சகோதரன் செய்த செயல்!!

திருகோணமலை பகுதியில் தனது தங்கையின் கையை பிடித்த நபரை அடித்து காயப்படுத்திய சகோதரன் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதில் திருக்கடலூர், திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த நபரின் பதினைந்து வயதுடைய தங்கை தனியார் வகுப்புக்குச் சென்று வரும் போது இளைஞர் ஒருவர் கையை பிடித்ததாக சிறுமி வீட்டுக்குச் சென்று தனது சகோதரன் மற்றும் பெற்றோரிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து கையைப்பிடித்த இளைஞரை சிறுமியின் சகோதரன் தாக்கி காயப்படுத்தி உள்ளதாக பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.

இதன் அடிப்படையில் சிறுமியின் சகோதரனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபரை தடுத்து வைத்துள்ளதோடு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இரவில் நடந்த அதிர்ச்சி சம்பவம் : தண்டவாளத்தில் தலையை வைத்து இரு யுவதிகள் தற்கொலை!!

கம்பஹா – தரலுவ பகுதியில் யுவதிகள் இருவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு புகையிரத தண்டவாளத்தில் தலையை வைத்து தற்கொலை செய்துகொண்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

புறக்கோட்டையிலிருந்து பதுளை நோக்கி சென்ற புகையிரதத்திலேயே யுவதிகள் இருவரும் தற்கொலை செய்துக்கொண்டுள்ளனர்.

மினுவங்கொடை பகுதியில் வசிக்கும் 21 வயதுடைய யுவதி ஒருவரும், நீர் கொழும்பு பகுதியை சேர்ந்த 22 வயதுடைய யுவதி ஒருவருமே தற்கொலை செய்துக்கொண்டுள்ளனர்.

தற்கொலை செய்து கொண்டவர்களில் யுவதி ஒருவரின் கையிலிருந்து கடிதம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

குறித்த யுவதிகள் இருவரும் ஒரே ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிபவர்கள் என தெரியவந்துள்ளது.

யுவதிகளின் சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.