வைத்தியர்களின் கவனக்குறைவால் கர்ப்பிணிப் பெண் பலி : கொழும்பில் விபரீதம்!!

 

வயிற்று வலியால் கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பணி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வைத்தியர்கள் மற்றும் தாதியின் கவனக்குறைவால் தனது 24 வயதான மனைவி மற்றும் வயிற்றில் இருந்த குழந்தை உயிரிழந்துள்ளதாக, குறித்த பெண்ணின் கணவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

கொழும்பு 15 புளுமென்டல் வீதியில் வசிக்கும் மிலானி பெரேரா என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வயிற்று வலி காரணமாக சிசிச்சை பெறுவதற்காக கடந்த 19ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையின் 39வது அறையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனினும் வைத்தியர் மற்றும் தாதியின் கவனக்குறைவால் அவர் உயிரிழந்துள்ளார் என குடும்பத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

“எனது மனைவியின் நோய் தொடர்பில் வைத்தியர்கள் மற்றும் தாதி அந்த அளவிற்கு அக்கறை செலுத்தவில்லை. இதனால் எனது மனைவி மற்றும் குழந்தையை இழந்துவிட்டேன். இதற்கு நியாயமான விசாரணை அவசியம் என உயிரிழந்த பெண்ணின் கணவர் தெரிவித்துள்ளார்.

தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆதாரங்களுக்கு அமைய வைத்தியர்கள் மற்றும் தாதிகளின் பக்கத்தில் தவறுகள் இருப்பது தெரிய வந்துள்ளதாக, கொழும்பு நகர மேலதிக மரண விசாரணை அதிகாரி இரேஷா தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் வைத்தியர்கள் பலருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளன. இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதற்கு அனுமதிக்க முடியாது. கவனயீனத்தினால் தாய் மற்றும் குழந்தை உயிரிழந்துள்ளதாக விசாரணை அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வவுனியாவில் 8 மாதக் குழந்தை கடத்தல் : லண்டனில் இருக்கும் கணவரே காரணம் : மனைவி முறைப்பாடு!!

வவுனியாவில் நேற்றைய தினம் அதிகாலையில் குழந்தை ஒன்று கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்த கடத்தல் சம்பவம் லண்டனில் இருக்கும் தனது கணவராலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மனைவி இன்று பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். மேலும், இந்த கடத்தல் சம்பவம் தொடர்பில் பல விடயங்கள் வெளிவந்துள்ளன.

வவுனியா – குட்செட் வீதி, முதலாம் ஒழுங்கையில் வசித்து வரும் 22 வயதுடைய யுவதி ஒருவர் லண்­டனைச் சேர்ந்த இளைஞர் ஒரு­வரை இந்­தியாவுக்கு சென்று திரு­மணம் செய்­துள்ளார்.

கணவன் லண்டன் சென்­றதும் குறித்த யுவதி வவுனியாவில் தனது தாயா­ருடன் வசித்து வந்­துள்ளார். இதன் பின்னர் இவர்­க­ளுக்கு ஒரு ஆண் குழந்­தை ஒன்று பிறந்­துள்­ளது.

இந்த நி­லையில் கணவன் ஏற்­க­னவே திரு­மணம் செய்தவர் என்­பது குறித்த யுவதிக்கு தெரி­ய­வந்­த நிலையில் இரு­வ­ருக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்­பட்டுள்ளன. இதன் விளைவாக கடந்த 5 மாதங்­க­ளாக குறித்த யுவதி கண­வ­னு­ட­னான தொடர்பை துண்­டித்­துள்ளார்.

இதன்­போது கணவன் தனது குழந்­தையை தரு­மாறு கேட்டுள்ளதுடன், குழந்­தையை கடத்­துவேன் எனவும் தொலை­பே­சியில் மிரட்­டி­யுள்­ள­தாக யுவதி தனது முறைப்­பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

வவுனியா குட்செட் வீதி ஒழுங்கையில் உள்ள வீட்டில் தாயின் அரவணைப்பிலிருந்த 8 மாத ஆண் குழந்தையான வானிஷன் ஆறு பேர் கொண்ட குழுவினரால் நேற்று அதிகாலை கடத்தப்பட்டிருந்தார்.

இது தொடர்பில் வவு­னியா பொலிஸார் தடவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்களின் உதவியுடன் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

-தமிழ்வின்-

கொழும்பு நோக்கி பயணித்த ரயில்களை தடுத்து நிறுத்திய மர்ம சடலம்!!

கொழும்பு வந்த பல ரயில்கள் இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ளதால், சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அம்பேபுஸ்ஸ ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள ரயில் பாதையில் மர்மமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் இருந்தமையினால் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் இன்று காலை அந்த வீதியில் கொழும்பு கோட்டை வரை பயணித்த அனைத்து ரயில்களும் தாதமடைந்துள்ளது. குறித்த பகுதிக்கு சென்ற பொலிஸார் சந்தேகத்திற்குரிய சடலத்தை அங்கிருந்து அகற்றியுள்னர்.

எனினும் காலையில் பயணித்த பல ரயில்கள் இடையில் சிக்கியுள்ளதாக ரயில் கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளார்.

குடிபோதையில் பெற்ற மகளை அடித்து கொன்ற கொடூர தந்தை!!

குடிபோதையில் ஏற்பட்ட ஆத்திரம் தீர பெற்ற மகளை சாகும் வரை தந்தையே அடித்துக்கொன்ற சம்பவம் இந்தியளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவின் அனந்த்பூர் மாவட்டத்தில் உள்ள வஜ்ரா கரூர் என்ற கிராமத்தில் வசித்து வருபவர் யெர்ரிசாமி. கூலித் தொழிலாளியான இவருக்கு உமாதேவி என்ற மனைவியும் இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகனும் உள்ளனர்.

யெர்ரிசாமியின் மூத்த மகளான சுமித்ரா (7) பிறவியிலேயே உடல் சாவலுடன் பிறந்தார். மேலும் அவரது இரண்டாவது மகன் யஷ்வந்தும் மாற்றுத்திறனாளி குழந்தையாக உள்ளார்.

இதனால் மிகவும் மனவேதனை அடைந்த யெர்ரிசாமி, தினமும் இரவு குடிவிட்டு வீட்டிற்கு வந்து மனைவி உமாதேவி மற்றும் குழந்தைகளை சராமாரியாக அடித்து உதைப்பார். சம்பவம் நடந்த நேற்றிரவும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார் யெர்ரிசாமி.

வீட்டிக்குள் நுழைந்த உடன் மூத்த மகள் சுமித்ராவை அடிக்க அவர் தொடங்கியுள்ளார். இதை மனைவி உமாதேவி தடுத்தார். தொடர்ந்து யெர்ரிசாமி மகள் சுமித்ரா மற்றும் மகன் யஷ்வந்தை தூக்கி வந்து, தரையில் கால் ஊன்றி நடக்க வைத்துள்ளார்.

ஆனால் அந்த குழந்தைகளால் நடக்க முடியவில்லை. யெர்ரிசாமி தரையில் நிற்க வைத்த உடன், குழந்தைகள் தடாலன விழுந்தன. இதை அவர் தொடர்ந்து செய்து கொண்டிருக்க, இரண்டு குழந்தைகளாலும் நடக்க முடியவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த யெர்ரிசாமி, குழந்தைகள் இருவரையும் சராமாரியாக அடிக்க துவங்கிவிட்டார். வீட்டின் அழுக்குரல்கள் ஓங்கி ஒலித்தன. ஆனால் அவர் குழந்தைகளையும், மனைவியையும் தாக்குவதை நிறுத்தவில்லை.

மகள் சுமித்ராவை மீண்டும் எழுப்பி நடக்கவைக்க முயல்கையில், அவள் விழுந்தாள். இதனால் ஆத்திரமடைந்த யெர்ரிசாமி குழந்தை சுமித்ராவின் தலையை பிடித்து சுவற்றில் ஓங்கி முட்டியுள்ளார். மீண்டும் குச்சியால் மகளை அடிக்கத் தொடங்கினார்.

அடித்தாங்காமல் அழுத சுமித்ரா, சிறிதுநேரத்திற்கு பிறகு நினைவிழந்து தரையில் மயங்கி விழுந்தாள். ஆனால் அதை கண்டுக்கொள்ளாமல், ஆத்திரத்துடன் வீட்டின் கதவை சாத்திவிட்டார் யெர்ரிசாமி. குழந்தை சுமித்ராவிற்கு ஆபத்தான காயங்கள் ஏற்பட்ட நிலையில், அவள் உயிரழந்தாள்.

காயமடைந்த குழந்தை உயிரழந்த சம்பவம் அப்பகுதி முழுவதும் சீற்றத்தை தூண்டியது. இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் உமாதேவியை அழைத்துக்கொண்டு உள்ளூர் காவல்நிலையத்திற்கு சென்றனர். இந்த சம்பவத்தை குறித்து வழக்கு பதிந்த காவல்துறை, உடனடியாக யெர்ரிசாமியை கைது செய்தனர். மேலும் காயமடைந்த மற்ற குழந்தைகள் மற்றும் தாய் உமாதேவிக்கு உரிய சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

கதி கலங்கவைத்த மற்றொரு காதல் ஜோடியின் படுபயங்கர முடிவு!!

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் 270 அடி உயர பாறை உச்சியில் இருந்து காதல் ஜோடி குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கேரள மாநிலம் கண்ணூர் அருகே உள்ள பாப்பினஞ்சேரியை சேர்ந்தவர் கமல் குமார் என்ற இளைஞர் அதே பகுதியை சேர்ந்த அஸ்வதி என்ற பெண்ணை கடந்த சில மாதங்களாக காதலித்து வந்துள்ளார்.

இந்த விவகாரம் இரு வீட்டு பெற்றோருக்கும் தெரிய வந்தது. அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.இதனால் வெறுப்படைந்த காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறியது. அவர்கள் பாப்பினஞ்சேரி அருகே உள்ள சுற்றுலா தலமான செசிபாறைக்கு சென்றுள்ளனர்.

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் மன வேதனையில் இருந்த கமல் குமாரும், அஸ்வதியும் அங்கிருந்த 270 அடி உயரபாறையில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இதில் இருவரும் பரிதாபமாக இறந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, கடந்த சனிக்கிழமை நள்ளிரவு 1.30மணியளவில் கெவின், மர்ம கும்பலால் கடத்தப்பட்ட ஒரு கண் தோண்டப்பட்ட நிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார்.
காதல் திருமணம் செய்த 48 மணிநேரத்தில் அரங்கேறிய இந்த கொலைச் சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடதக்கது

மனைவியை வைத்து சூதாடிய கணவன் : தோற்றதால் மனைவிக்கு நடந்த கொடுமை!!

ஒடிசா மாநிலத்தில் மனைவியை வைத்து சூதாடிய நபர் அதில் தோற்றுவிட்டதால், மனைவியை பலாத்காரம் செய்வதற்கு அனுமதி வழங்கிவிட்டு அதனை வேடிக்கை பார்த்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பன்ஷீர் – தலாய் ஆகிய இருவரும் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தலாயிடம் கையிலிருக்கும் பணத்தை இழந்த பன்ஷீர் இறுதியாக தனது மனைவியை வைத்து சூதாடியுள்ளான்.

ஆனால், அதிலிலும் தோற்றுப்போகவே சிறிதும் இரக்கமின்றி தனது மனைவியை குளத்திற்கு அழைத்து வந்து தலாயிடம் ஒப்படைத்துள்ளார்.என்ன நடக்கிறது என புரியாமல் இருந்த அந்த பெண்ணை தலாய் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதனை, அந்த பெண்ணின் கணவர் அருகிலிருந்து வேடிக்கை பார்த்துள்ளார். மேலும், இதனை வெளியே கூறக்கூடாது என கொலை மிரட்டலும் அப்பெண்ணுக்கு விடப்பட்டுள்ளது.

கொலை மிரட்டலையும் தாண்டி அப்பெண் பொலிசில் சென்று புகார் அளித்துள்ளார்.தற்போது, இருவரும் தலைமறைவாக இருக்கவே பொலிசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

ஹிந்தி நடிகையுடன் இந்திய கிரிக்கெட் வீரர் கேஎல் ராகுலுக்கு காதலா?

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் கே.எல்.ராகுல், ஹிந்தி நடிகை ஒருவரை காதலிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல், ஐ.பி.எல் போட்டியில் பஞ்சாப் அணிக்காக அதிரடியாக விளையாடி ஓட்டங்களை குவித்தவர். இவரது அதிரடி துடுப்பாட்டம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இந்நிலையில், இவர் ஹிந்தி நடிகை நிதி அகர்வாலை காதலிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐதராபாத்தை பூர்வீகமாகக் கொண்ட நிதி அகர்வால், ராகுலுடன் நட்பாக பழகி வந்தார்.

அதன் பின்னர், அவர்கள் இருவரும் காதலில் விழுந்ததாக கூறப்படுகிறது. சமீபத்தில் இருவரும் மும்பை விமான நிலையத்தில் ஒன்றாக சுற்றியபோது ஊடகங்களில் இவர்கள் தென்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் ராகுலின் ரசிகர்கள் பக்கத்தில், இவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் இடம்பெற்றன.

நிதி அகர்வால் தற்போது தெலுங்கு படம் ஒன்றில் நடித்து வருகிறார். ஆனால், இந்த காதல் விவகாரம் குறித்து இருவரும் எந்த விளக்கத்தையும் தெரிவிக்கவில்லை.

பாடசாலை மாணவர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு!!

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதால் பாடசாலை போக்குவரத்து கட்டணம் இன்று முதல் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை பாடசாலை போக்குவரத்து சேவை சங்கம் நேற்றைய தினம் தெரிவித்துள்ளது.

அத்துடன், போக்குவரத்து கட்டணங்களை தூரத்தின் அடிப்படையில் அதிகரிக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

மேலும், இன்று முதல் போக்குவரத்து கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக மாவட்டங்களுக்கு இடையிலான அகில இலங்கை போக்குவரத்து சேவை சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

கோடிகணக்கில் சம்பளம் : ஆனாலும் பழைய சோறு சாப்பிடும் நடிகர் : புகைப்படம் உள்ளே!!

ஹீரோக்கள் என்றால் எப்போதும் கோடிக்கணக்கில் சம்பளம் இருக்கும், ஒரு சில படங்கள் நடித்ததும் செட்டில் ஆகிவிடுவார்கள். ரசிகர்களுக்கு அதிகம் பரிட்சயம் யார் என்றே நடிகர் கூட சில லட்சங்கள் சம்பளமாக பெறுகின்றனர்.

அப்படி இருக்கும் நிலையில் தற்போது நடிகர் விமல் பழைய சோறு சாப்பிடும் புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

ரசிகர்கள் பலரும் அவரது எளிமையை பாராட்டி வருகின்றனர். விமல் தற்போது களவாணி 2 படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக நடித்துவருகிறார். அந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் தான் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. அவருக்கு ஜோடியாக இந்த படத்தில் ஓவியா நடிக்கிறார்.

பிரித்தானியாவில் நாடு கடத்தலை எதிர்நோக்கியுள்ள இலங்கை தமிழ் இளைஞர்!!

பிரித்தானியாவில் நாடு கடத்தலை எதிர்நோக்கியுள்ள இலங்கை தமிழ் இளைஞர் ஒருவரை அந்நாட்டு குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் தடுத்து வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

லோகராஜ் அருளானந்தம் என்ற நபரே இவ்வாறு நாடுகடத்தப்படும் ஆபத்தை எதிர்நோக்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மற்றும் ஏனைய புலம்பெயர் அமைப்புக்களுடன் இணைந்து லோகராஜ் அருளானந்தம் செயற்பட்டு வந்துள்ளார்.

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் தமிழ் இனப்படுகொலை, தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கெதிராகவும், தொடர்ந்தும் அரசினால் மேற்கொள்ளப்பட்டு வரும் வன்முறைகள், கொலைகள், கடத்தல்கள், நில அபகரிப்பு போன்ற நடவடிக்கைகளை சர்வதேசத்திற்கு எடுத்து கூறும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை இவர் முன்னெடுத்திருந்தார்.

மேலும், இலங்கை அரசினால் திட்டமிட்ட முறையில் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைக்கு நீதிகோரி பன்னாட்டு நீதி விசாரணைப் பொறிமுறையை கோரி பல்வேறுபட்ட புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுடன் இணைந்து தமிழின சுயநிர்ணய உரிமைக்காக இவர் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில், இவர் பிரித்தானியாவில் தஞ்சம் கோரியிருந்த நிலையில் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு கடந்த ஜனவரி 17ம் திகதி முதல் பிரித்தானியாவின் மேற்கு சசெக்ஸ் பகுதியில் அமைந்துள்ள டின்ஸ்லி ஹவுஸ் குடிவரவு நீக்கம் மையம் குடிவரவுத் திணைக்களத்தினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூக்கில் தொங்கிய நபருக்கு நேர்ந்த கொடூரம்!!

அரநாயக்க பிரதேசத்தில் நபர் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த போது கயிறு அறுந்து பாரிய பள்ளத்தில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
42 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

60 அடி உயரமான மரமொன்றில் கயிறு கட்டி இந்த நபர் தூக்கில் தொங்கியுள்ளார். இதன் போது கயிறு அறுந்து மேலும் 40 அடி பள்ளமொன்றில் வீழ்ந்து படுகாயமடைந்து உயிரிழந்துள்ளார்.

மனைவி பிள்ளைகளுடன் அடிக்கடி சண்டையிட்டு எந்நேரமும் குடி போதையில் இருந்த நபரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பள்ளத்தில் வீழ்ந்து உயிரிழந்தவரின் சடலம் அண்மையில் மீட்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

வெள்ளவத்தையில் ஏற்பட்ட விபரீதம் : மக்களை கவனமாக இருக்குமாறு எச்சரிக்கை!!

வெள்ளவத்தையில் வீட்டு பணிப்பெண்ணாக செயற்பட்ட பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்றைய தினம் பிற்பகல் 12.15 மணியளில் குறித்த பெண் கைது செய்யப்பட்டதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண் வெள்ளவத்தை, ஹமாஸ் அவனியுவில் உள்ள வீடொன்றில் இருந்த வங்கி கடன் அட்டையை திருடி 661496 ரூபா பெறுமதியான பொருட்களை கொள்வனவு செய்துள்ளார்.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய, பணிப்பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கமைய அவரது மோசடி தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது.

கைது செய்யப்பட்ட பெண் 53 வயதானவர் எனவும், பொரலஸ்கமுவ பிரதேசத்தை சேர்ந்தவரும் எனவும் இன்றைய தினம் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளர்.

இதேவேளை வெள்ளவத்தையின் பல்வேறு பகுதிகளில் இவ்வாறான மோசடிகள் இடம்பெறுவதாகவும், வேலைக்கு பணியாட்களை அமர்த்தும் போது மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு பொலிஸார் மக்களை கேட்டுள்ளனர்.

130 பேருடன் கட்டுநாயக்க வந்த விமானம் திடீரென திருப்பி அனுப்பப்பட்டது : காரணம் என்ன?

ஓமான் – மஸ்கட் நகரில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானம் இன்று திடீரென திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.

இன்று காலை பெய்த அடை மழை காரணமாக குறித்த விமானத்தை மத்தல விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பியுள்ளதாக தெரிவிக்கக்பபடுகின்றது.

இன்று அதிகாலை 4.45 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த விமானம் 5.20 மணிக்கு மத்தல விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.

அதன் பின்னர் காலை 6.30 மணிக்கு மத்தல விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு மீண்டும் 6.47 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விமானத்தில் 130 பேர் பயணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழில் பரபரப்பை ஏற்படுத்திய மாணவியின் சீருடை தொடர்பில் வெளியான தகவல்!!

 

யாழ்ப்பாணம், வீரசிங்கம் மண்டபத்திற்கு அருகில் பாடசாலை மாணவி ஒருவரின் பாடசாலை சீருடை ஒன்று பொலிஸாரால் மீட்கப்பட்டதையடுத்து அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டிருந்தது.

இடைக்காடு மகாவித்தியாலயத்தை சேர்ந்த மாணவி ஒருவரது சீருடை, கழுத்து பட்டி, செருப்பு, உள்ளிட்டவைகள் மீட்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் குறித்த பாடசாலையில் அதிபரிடம் பொலிஸார் நேற்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதன் போது, பாடசாலை மாணவிகள் எவருக்கும் எந்தவொரு பிரச்சினைகளும் இல்லை என்பதை ஆராய்ந்து உறுதிபட அதிபர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும், யாழ். வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலையில் அண்மையில் இடம்பெற்ற விளையாட்டு போட்டி ஒன்றில் தமது பாடசாலை மாணவிகளும் பங்கேற்றதாகவும், அதற்காக மாணவிகள் அங்கு தங்கியிருந்ததாக அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையிலேயே, தவறவிடப்பட்டதாக இந்த சீருடை அடங்கிய பொதி இருக்கலாம் என அதிபர் விசாரணையின் போது தெரிவித்துள்ளதாக என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் மீண்டும் குழப்பம்!!

 

வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் இன்று யூன் 1ம் திகதி முதல் இணைந்த பேருந்து சேவையை மேற்கொள்வதற்கு வடமாகாணசபையினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதனை மேற்கொள்வதற்கு தனியார் சென்ற போது இ.போ.ச சாரதிகள் மற்றும் தனியார் பேருந்து சாரதிகளிடையே முரன்பாடு ஏற்பட்டுள்ளதுடன் இணைந்த சேவை மேற்கொள்வதில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.

அத்துடன் இணைந்த சேவை மேற்கொள்ளுமாறு இ.போ.ச.சாலை சாரதிகளுக்கு அறிவித்தல் தலைமை அலுவலகத்திலிருந்து வழங்கப்படவில்லை என இ.போ.ச ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

இந் நிலையில் தனியார், இ.போ.ச பேரூந்துகள் பேரூந்து நிலையத்தில் பேரூந்துகளை தரித்து நிறுத்தாமல் பேரூந்து நிலையத்திற்கு முன்பாக (வெளிச் செல்லும் பாதையில்) பேரூந்துகளை தரித்து பயணிகளை ஏற்றி வருகின்றனர்.

இதன் போது தனியார் பேரூந்து ஒன்று பேரூந்து நிலையத்தில் வெளிச்செல்லும் பாதையூடாக உட்செல்ல முயன்ற சமயத்தில் மீண்டுமொரு குழப்பநிலை ஏற்பட்டது

தமது பயணங்களை மேற்கொள்ளச் சென்ற பயணிகள் பெரும் இக்கட்டான நிலையிலுள்ளதுடன் இணைந்சேவை மேற்கொள்வதில் இழுபறி நிலை காணப்படுகின்றது.

சுமார் இரண்டு மணித்தியாலங்களுக்கு மேலதிகமாக இடம்பெற்ற இம் முரண்பாடு தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதுடன் பாதுகாப்பு பணியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

வவுனியாவில் புகையிலை எதிர்ப்பு தினத்தினை முன்னிட்டு வீதி நாடகம்!!

வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் தொற்றா நோய் பிரிவின் அனுசரணையில் ஒழுங்கமைப்பு செய்யப்பட்ட புகையிலையினால் ஏற்படும் விளைவுகளை சித்தரிக்கும் வீதி நாடகம் வவுனியா தொற்றா நோய் வைத்திய அதிகாரி சுதர்சினி தலைமையில் இன்று (31.05.2018) வவுனியா பிராந்திய சுகாதார திணைக்களம் முன்பாக , புதிய பேரூந்து நிலையம் முன்பாக, இலுப்பையடி சந்தி , மக்கள் வங்கி பிரதான கிளை முன்பாக இடம்பெற்றிருந்தது

இவ் வீதி நாடகத்தினை வவுனியா கல்மடு மகா வித்தியாலய மாணவர்களும் ஆசிரியர்களும் இணைந்து வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

புகைப்பிடிப்பதின் விளைவுகள்

முயன்றால் தடுக்கக்கூடிய இறப்புக்குக் காரணமாக இருக்கக்கூடிய காரணங்களில் ஒன்று புகையிலை. ஒவ்வொரு வருடமும் 5 மில்லியன் மக்களுக்கு மேல் புகையிலையினால் மக்கள் இறக்கின்றார்கள்.

ஒரு ஆண்டில் எச்.ஐ.வி/எய்ட்ஸ், மலேரியா, காசநோய் போன்ற அனைத்து நோய்களிலும் இறக்க கூடியவர்களைவிட புகையிலையால் இறப்பவர்களே அதிகம்.

புகையிலை மட்டுமே சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்டு, தயாரிப்பாளரின் எண்ணப்படியே உபயோகிப்பவர்களைக் கொல்லும் நுகர்பொருளாகும். புகைபிடிப்பவர்களில் பாதிபேர் புகையிலை தொடர்பான வியாதிகளினாலேயே இறக்கிறார்கள்.

இரண்டாம் நிலை புகைப் பிடிப்பவர்களுக்கும், (அதாவது புகைபிடிப்பவர்கள் வெளியிடும் புகையினை சுவாசிப்பவர்கள்) புகையிலையினால் ஏற்படும் எல்லா நோய்களும் ஏற்படுகிறது.

புகையிலை நிறுவனங்கள் மாதந்தோறும் 10 மில்லியன் டொலர் அளவு பணத்தைச் செலவு செய்து புதிய வாடிக்கையாளர்களை புகைப்பழக்கத்திற்கு அடிமையாக்குகின்றனர்.

மேலும் புகைப்பிடிப்பவர்கள் அப் பழக்கத்தை, விட்டுவிடாமலும் பார்த்துக் கொள்கிறார்கள். விளம்பரங்களின் மூலமாகவும், கவனமாக, அழகாகவும், தயாரிக்கப்பட்ட புகையிலைப் பக்கெட்டுகள் மூலமாகவும், புகையிலை நிறுவனங்கள் மக்களின் கவனத்தை திசைதிருப்பி, புகையிலை மற்றும் அதனால் செய்யப்படும் பொருள்களினால் ஏற்படும் உயிர்கொல்லித் தீமைகளை மக்கள் மறந்துபோகும்படி செய்கின்றன.

புகையிலைக்கு எதிராக உலக சுகாதார நிறுவனம் (WHO) உருவாக்கிய நெறிமுறைகளின்படி, புகையிலையினால் ஏற்படும் விளைவுகளை ஒழிக்க எச்சரிக்கை படங்கள் மற்றும் வாசகங்கள் மூலம் அனைத்து நாடுகளும் போராடி வருகின்றன.

சர்வதேச ஒப்பந்தப்படி இந்நோக்கினை எட்ட, எம்பவர் (MPOWER) தொழில்நுட்ப உதவியைப் பயன்படுத்துகிறார்கள்.

உடல்நலம் குறித்த எச்சரிக்கைகள், குறிப்பாக படங்களுடன் கூடிய எச்சரிக்கை வாசகங்கள், புகையிலை உபயோகிப்பவர்களை அப்பழக்கத்தை விட்டு விடவும், புகைப்பிடித்தலுக்கு அடிமையாகாமல் இருக்க வைக்கவும் உதவுகின்றன.

ஆனாலும், புகைபிடிப்பவர்களில் பத்தில் ஒன்பது பேர் புகையிலைப் பெட்டியின் மீது எவ்விதமான எச்சரிக்கையும் தேவையில்லாத நாடுகளில்தான் வாழ்கிறார்கள்.

நிகோடின் என்பது மிகமோசமாக அடிமைப்படுத்தக் கூடிய போதைப் பொருளாகும். மக்களுக்கு அதனுடைய தீமைகளை எடுத்துச் சொல்லி விழிப்புணர்வு உண்டாக்கும் பயணத்தில் நாம் நீண்டதூரம் செல்லவேண்டும்.

அதனால் புகையிலைப் பெட்டிகளின் மீது எச்சரிக்கை வாசகங்களையும் படங்களையும் அச்சிடுதல் புகைப்பிடிக்கும் பழக்கத்தைக் குறைத்து மக்களின் வாழ்க்கையைக் காக்க எளிய, சிக்கனமான, பயனுறு வழியாகும்.