வவுனியாவில் புனர்வாழ்வு பெற்ற மூவர் சமூகத்துடன் இணைப்பு!!

புனர்வாழ்வு பெற்ற பயிலுனர்களை சமூகமயமாக்கும் நிகழ்வு இன்று (31.05) வவுனியா பூந்தோட்டத்தில் அமைந்துள்ள புனர்வாழ்வு நிலையத்தில் நடைபெற்றது.

வவுனியா புனர்வாழ்வு இணைப்பு செயலகத்தின் பொறுப்பதிகாரி கேணல் சமிந்த பஸ்குவேல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் புனர்வாழ்வு நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் கேணல் அசாட் ஸ்செடில் மற்றும் கல்வியல் கல்லூரி பீடாதிபதி கே.சுவர்ணராஜா ஆகியோர் கலந்துகொண்டு பயிலுனர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி வைத்தனர்.

புத்தளம், மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மூன்று பயிலுனர்கள் ஒரு வருடகாலம் சிறந்த முறையில் புனர்வாழ்வு அளிக்கப்பட்டதன் பின்னர் இன்றையதினம் சம்பிரதாய பூர்வமாக அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

சர்வமத குருமார்களின் ஆசியுடன் ஆரம்பமான இந் நிகழ்வில் அண்ணா நகர் தமிழ் வித்தியாலய மாணவிகளின் நடன நிகழ்வுகள் நடைபெற்றிருந்தது.

புனர்வாழ்வு பெற்ற மன்னார் மாவட்டத்தை சேர்ந்த பயிலுனர் எ.நகுலேஸ்வரன் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டிருந்தார்.

நிகழ்வில் கேணல் சமிந்த கொஸ்வேல்ட், கேணல் கேமன் பெனாண்டோ, பூந்தோட்ட கல்வியல் கல்லூரியின் வளவாளர் எஸ்.பார்த்தீபன், புனர்வாழ்வு பெற்றவர்களின் உறவினர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

வவுனியாவில் காணாமல்போன மாணவன் கண்டுபிடிக்கப்பட்டார் : விபரம் உள்ளே!!

வவுனியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காணாமல்போயிருந்த வெளிக்குளத்தை சேர்ந்த மாணவன் மன்னாரில் வைத்து உறவினர்களால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை தனியார் வகுப்புக்கு சென்று வருவதாக கூறி சென்ற ச.சாருபன் என்ற மாணவன் அடுத்தநாளும் வீடு வராததால் பெற்றோரால் வவுனியா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந் நிலையில் பெற்றோர் கடும் பிரயத்தனம் மேற்கொண்டு பல இடங்களிலும் தேடுதல் நடத்தியிருந்தனர்.

இந்தநிலையில் இன்று மன்னார் பகுதியில் தேடுதல் நடத்தியபோது மன்னாரில் குறித்த மாணவனை கண்டதாக பலரும் தெரிவித்ததை அடுத்து, தேடுதலை தீவிரப்படுத்திய உறவினர்கள் மன்னாரில் நகர்ப்பகுதியில் துவிச்சக்கரவண்டியில் சுற்றித்திரிந்த நிலையில் அவரை கண்டு பிடித்துள்ளனர்.

மனரீதியிலான குழப்பம் காரணமாகவே குறித்த மாணவன் வீட்டில் இருந்து துவிச்சக்கரவண்டியில் மன்னார் சென்றுள்ளதாகவும் அங்கு தீருக்கேதீச்சரம் கோவில் உட்பட பல இடங்களுக்கும் கடந்த நாட்கு நாட்களாக சென்றுள்ளதாகவும் உறவினரொருவர் தெரிவித்தார்

தொடர்புபட்ட செய்தி : வவுனியாவில் உயர்தரத்தில் கல்விகற்கும் மாணவனை காணவில்லை!!

பொய் சொன்ன 6 வயது மகனை கத்தியால் கூறுபோட்ட கொடூர தாய்!!

அமெரிக்காவில் தாய் ஒருவர் பொய் சொன்ன தனது 6 வயது மகனை கத்தியால் 6 முறை குத்தியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓரிகான் மகாணத்தில் தனது 6 வயது மகனுடன் Nemoria Villagomez என்ற பெண்மணி வசித்து வந்துள்ளார்.

சம்பவம் நடைபெற்ற அன்று தனது 6 வயது மகனை கத்தியால் உடலின் பல்வேறு இடங்களில் வெட்டியுள்ளார். இதில் கழுத்திலும் வெட்டியுள்ளார். வலி பொறுக்க முடியாத சிறுவன் அலறியடித்து ரத்த காயங்களுடன் பக்கத்து வீட்டுக்கு ஓடியுள்ளான்.

சிறுவனை பார்த்து அதிர்ச்சியடைந்த பக்கத்துவீட்டார், உடனடியாக பொலிசிற்கு புகார் தெரிவித்துள்ளனர். விரைந்து வந்த பொலிசார் சிறுவனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

மேலும் இந்த சம்பத்தில் ஈடுபட்ட தாயிடம் விசாரணை நடத்தியதில், எனது மகன் பொய் கூறினான், இதற்காக நான் இவ்வாறு செய்தேன். இந்த தண்டனைக்கு அவன் தகுதியானவன் தான் என விளக்கம் அளித்துள்ளார்.

இக்குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ள தாய் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

5 ஆண்டுகள் துவைக்காத தலையணையை பயன்படுத்திய பெண்ணுக்கு நேர்ந்த கதி!!

சீனாவைச் சேர்ந்த பெண் ஐந்து ஆண்டுகளாக, தனது தலையணை உறையை துவைக்காமல் பயன்படுத்தி வந்த நிலையில் அவருக்கு மிகபெரிய ஆபத்து ஏற்பட இருந்தது தெரியவந்துள்ளது.

குறித்த பெண்ணுக்கு கண் எரிச்சல், கண்ணில் நீர்வடிவது, போன்ற பிரச்சினைகள் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

மருத்துவர்கள் அவர் கண்களை பரிசோதனை செய்த போது கண்களில் நூற்றுக்கணக்கான ஒட்டுண்ணிகள் இருப்பது தெரியவந்தது.

இது போன்ற ஒட்டுண்ணிகள் சாதாரணமானது தான் என்றாலும் இவரின் கண்களில் இருக்கும் ஒட்டுண்ணிகளின் எண்ணிக்கை மிக அதிகம்.

இந்த பிரச்சனை அந்த பெண் உபயோகப்படுத்திய தலையணையால் ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.

அதாவது, அவர் தனது தலையணையை ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக துவைக்காமல் பயன்படுத்தியுள்ளார்.

பொதுவாக ஒரு தலையணையை 2 முதல் மூன்று ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம். அதுவும் அவ்வப்போது வெயிலில் இட்டு உலர்த்தி, சுத்தமாக துவைத்த தலையணை உறைகள் இட்டு பயன்படுத்த வேண்டும்.

இதையடுத்து பெண்ணுக்கு சுத்தத்தை பற்றி பாடம் எடுத்த மருத்துவர்கள் கண்ணுக்கு மருந்தும் கொடுத்து அனுப்பினார்கள்.

தலையணைகள் சுத்தமாக வைக்கவில்லை எனில் சுவாசம் மற்றும் தோல் தொடர்பான பிரச்சனையும் வர வாய்ப்புள்ளது.

விபத்தில் மரணமடைந்த பிரபல நடிகர் : மகன் கொலை- மனைவி எடுத்த விபரீத முடிவு!!

மறைந்த பிரபல நடிகர் சந்தனின் மனைவி தனது மகனை கொன்றுவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னட திரைப்படங்கள் சிலவற்றில் நடித்ததோடு, பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய சந்தன் (34) கடந்த வாரம் தனது நண்பர்களோடு காரில் சென்று கொண்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி மரணமடைந்தார்.

சந்தனின் மரணம் அவர் மனைவி மீனாவை பெரும் துயரத்தில் ஆழ்த்திய நிலையில் அவர் மன அழுத்தத்தில் இருந்தார்.

இதன் காரணமாக இன்று தனது மகன் துஷரை மீனா கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு தானும் ஆசிட் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதையடுத்து தற்போது மீனா ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரியவந்துள்ளது.

கணவரை கொடூரமாக கொலை செய்த மனைவி!!

மயிலாடுதுறையில் கள்ளக்காதலனோடு சேர்ந்து தனது கணவரை கொலை செய்த மனைவியை பொலிசார் கைது செய்துள்ளனர்.

அறிவழகன் ரேகா தம்பதியினர் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு இண்டு குழந்தைகள் உள்ளனர். மின்சார ஊழியரான அறிவழகன் வெளியூரில் தங்கி வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில், விடுமுறைக்காக வீடு திரும்பிய இவர் நேற்று மர்மமான முறையில் இறந்தார். மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துவிட்டதாக மனைவி ரேகா உறவினர்களிடம் சொல்லி சமாளித்துள்ளார், ஆனால் அவரது உடலில் காயங்கள் இருந்ததையடுத்து உறவினர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டதையடுத்து பொலிசில் புகார் அளித்துள்ளனர்.

இதுதொடர்பாக சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரித்துள்ளனர். அறிவழகனின் பிரதே பரிசோதனையில் அவருக்கு மூச்சுத்தினறல் ஏற்பட்டதும், கழுத்து நெறிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. பின்னர் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

காவல்துறையினரின் விசாரணையில் தப்பிக்க முடியாத ரேகா, கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அத்துடன் பல திடுக்கிடும் தகவல்களும் வெளியாகின.

னது கணவர் வேலைக்காக வெளியூர் சென்றபோது, தன் வீட்டிற்கு அருகாமையில் வேலை செய்த பெயிண்டர் ராஜசேகருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

அந்தப் பழக்கம் பின்னர் தகாத உறவாக மாறியுள்ளது. இந்த விஷயம் வெளியூரில் இருந்து வீடு திரும்பிய அறிவழகனுக்கு தெரியவர, இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தான் ராஜசேகருடன் சேர்ந்து தனது கணவரை கொலை செய்ய ரேகா திட்டமிட்டுள்ளார். அதன்படியே, இரவில் தூங்கிக்கொண்டிருந்த தன் கணவரை, ராஜசேகருடன் சேர்ந்து கழுத்தை நெறித்தும், முகத்தில் தலையணையை வைத்து அழுத்தியும் கொலை செய்துள்ளார்.

இந்தக் கொடூர கொலையை செய்துவிட்டுதான் ரேகா நாடகமாடியுள்ளார். விசாரணையின் உண்மை தெரியவர, ராஜசேகர் மற்றும் ரேகாவை கைது செய்த காவல்துறையினர் அவர்களை சிறையில் அடைத்துள்ளனர்.

63 வயதில் குழந்தை பெற்றெடுத்த பெண், 73 வயதில் தந்தையான முதியவர்!!

ஈரோடு மாவட்டத்தில் 63 வயதில் மூதாட்டி ஒருவர் பெண் குழந்தை பெற்றெடுத்துள்ளார். 73 வயதில் இவரது கணவர் தந்தையாகியுள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த செந்தமிழ்ச்செல்வி, கிருஷ்ணன் தம்பதிக்கு திருமணமாகி 42 ஆண்டுகள் ஆகியும் குழந்தைப்பேறு இல்லை. இது அவர்களுக்கு மனவேதனையை அளித்துள்ளது.

பழனி, மதுரை, சென்னை ஆகிய இடங்களில் செயல்பட்டுவரும் தனியார் கருத்தரிப்பு மையத்தை அணுகிய செந்தமிழ்ச்செல்விக்கு செயற்கை முறை கருத்தரித்தலுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டது.

சிகிச்சை மூலம் கருவுற்ற 63 வயதான செந்தமிழ்ச்செல்விக்கு மூன்றரை கிலோ எடையுள்ள பெண் குழந்தை பிறந்துள்ளது.

கனடாவில் திட்டமிட்டு கொல்லப்பட்ட தமிழ் இளைஞன் : பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!!

கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழ் இளைஞனின் மரணம் தொடர்பில் டொரண்டோ பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஸ்காபுரோ பகுதியில் வைத்து 21 வயதான வினோஜன் சுதேசன் சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் தீவிரமாக இலக்கு வைத்து கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சுதேசனுக்காக காத்திருந்த சந்தேகநபரை பார்த்து அவர் அதிர்ச்சியடைந்ததாக கொலை தொடர்பாக புலனாய்வு செய்யும் Andy Singh தெரிவித்துள்ளார்.

சந்தேகநபர் சுதேசன் மீது பல முறை துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார் எனவும் அந்த இடத்திலேயே சுதேசன் கீழே விழுந்துள்ளார்.

ஸ்காபுரோ Lester B. Pearson கல்லூரிக்கு அருகில் ஞாயிற்றுக்கிழமை துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் சுதேசன் மீட்கப்பட்டார். பின்னர் அவர் அவ்விடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

ரொரண்டோ மாவட்ட கல்லூரியில் வழங்கப்பட்ட கண்காணிப்பு வீடியோ மூலம், பொலிஸார் சந்தேகநபர் தொடர்பான விபரங்களை பெற்றுள்ளனர். துப்பாக்கி தாங்கிய நபர் ஒருவர் பாடசாலையின் தென் பகுதிக்கு ஓடியுள்ளார் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் கறுப்பினத்தவர் எனவும், சுமார் 5 அடி 10 அங்குலமுடையவர் எனவும், அவர் காக்கி நிற காற்சட்டை அணிந்து வெள்ளை நிற சட்டை அணிந்திருந்தார் எனவும் புலனாய்வாளர் Andy Singh குறிப்பிட்டுள்ளார்.

கொலை இடம்பெறுவதற்கு 40 நிமிடங்களுக்கு முன்னர் கறுப்பு நிற கார் ஒன்று கல்லூரியின் வாகன தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த பகுதியிலேயே நீண்ட நேரமாக கார் வட்டமிட்டுள்ளது. எனினும் சம்பவம் இடம்பெறும் போது அந்த காரினை குறித்த பகுதியில் காணவில்லை என அவர் கூறியுள்ளார்.

சுதேசன் இலக்கு வைக்கப்பட்டார் என பொலிஸார் நம்புகின்ற போதிலும், அது சந்தேகநபரின் தவறான அடையாளமாக இருக்கவும் வாய்ப்புகள் உள்ளதாக அவர் விளக்கமளித்துள்ளார்.

“சுதேசன் யாருடனும் பிரச்சினைக்கு செல்லாத ஒரு நல்ல மாணவர். ஏன் இப்படி நடந்ததென தெரியவில்லை. நான் நினைக்கின்றேன் அவரது கையடக்க தொலைபேசியை திருடுவதற்காகவும் இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கலாம். எனினும் விசாரணைகள் முடியும் வரை உண்மையான காரணம் தெரியவில்லை.. என சுதேசனின் உறவினர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நோர்வே பெண்ணுக்கு நேர்ந்த கதி!!

கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி ரயிலில் பயணித்த நோர்வே நாட்டு பெண்ணின் பணப்பை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

குறித்த ரயிலில் பயணித்த நபர் ஒருவரினால், பணம் மற்றும் பொருட்கள் உள்ளடங்கிய தனது பணப்பை கொள்ளையடிக்கப்பட்டதாக நோர்வே நாட்டு பெண், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

ஜெக்லீன் கீனத் என்ற நோர்வே நாட்டு பெண்ணுக்கு சொந்தமான பையில் பணம், வெளிநாட்டு கடவுச்சீட்டு, கையடக்க தொலைபேசி உட்பட பொருட்கள் உள்ளதாக அம்பலாங்கொட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த ரயில் அம்பலாங்கொட ரயில் நிலையத்தில் நிறுத்தி விட்டு மீண்டும் பயணத்தை ஆரம்பித்த சில நொடிகளில், குறித்த நபர் பெண்ணின் பையை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

வவுனியாவை பூர்வீகமாகக் கொண்ட இளம் பெண் பெல்ஜியத்தில் மர்மமாக மரணம்!!

வவுனியா – பூவரசங்குளத்தை பூர்வீகமாக கொண்ட பெண் ஒருவர் பெல்ஜியம் நாட்டில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

பெல்ஜியம் நாட்டில் பெற்றோருடன் வசித்து உயர்கல்வி கற்று வந்த 23 வயதுடைய ஆறுமுகம் லக்‌ஷிகா எனும் யுவதியே இவ்வாறு பெல்ஜியத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த யுவதி கல்வியிலும், விளையாட்டிலும் சிறந்து விளங்கியவர் என்பதுடன் இவரது மரணத்தில் பலத்த சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை யுவதியின் மரணம் தொடர்பில் பல்வேறு கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கடலில் கடுமையாக போராடும் மீனவர்கள் : கமராவில் சிக்கிய காட்சிகள்!!

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அண்மை நாட்களில் கடல் கொந்தளிப்பாக காணப்பட்டமையினால், மீனவர்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.

இந்நிலையில் கடும் கடல் கொந்தளிப்புக்கு மத்தியிலும் கடலுக்கு சென்ற மீனவர்கள் படும் கஷ்டங்கள் கமரா ஒன்றில் பதிவாகி உள்ளது.

புத்தளம் உடப்பு பகுதியில் கடலுக்கு சென்ற மீனவர்கள் கடலுக்குள் படகினை செலுத்த போராடும் காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன.

சுமார் 45 நிமிடங்கள் மீனவர்கள் போராடி கடலுக்கு சென்றுள்ளனர். இவ்வாறு போராடுவது அன்றைய நாளில் தனது குடும்பத்தின் பசியை போக்குவதற்கான முயற்சியாகும்.

புத்தளத்தில் இருந்து மன்னார் வரையான கடல் பகுதிகளில் நிலவும் கடும் காற்றினால் மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிளிநொச்சியில் தொடர்ச்சியாக சிறுமிக்கு நடந்து வந்த கொடுமை : வசமாக சிக்கிய முதியவர்!!

முறிகண்டி பிள்ளையார் கோவில் வளாகத்தில் 8 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியமை தொடர்பில் முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முறிகண்டி பிள்ளையார் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் குறித்த சிறுமி ஒருவரை தொடர்ச்சியாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய 65 வயது முதியவரே இன்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்தமையை அவதானித்த வர்த்தகர்கள் நேற்றய தினம் வீடியோ ஆதாரத்துடன் வழங்கப்பட்ட தகவலை அடுத்தே குறித்த முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பிரதேச வர்த்தகர்களால் கிராம சேவையாளர் ஊடாக பிரதேச செயலருக்கு வழங்கப்பட்ட தகவலை அடுத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய சிறுமி வறிய குடும்பத்தைச் சேர்ந்தவர் எனவும், வறுமையை சாதகமாக பயன்படுத்தி குறித்த சம்பவம் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்துள்ளது எனவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை முறிகண்டியில் உள்ள பல வர்த்தக நிலையங்களில் சிறுவர்கள் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும், குறித்த செயற்பாட்டை தடுத்து நிறுத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பில் பலமுறை சிறுவர் பாதுகாப்பு தரப்பினருக்கு எடுத்து கூறியுள்ள போதிலும், பெற்றோருக்கு துணையாக வர்த்தக நடவடிக்கையில் சிறுவர்கள் ஈடுபட்டு வருகின்றமையை தடுத்து நிறுத்த முடியாத நிலை தொடர்ந்தும் காணப்படுவதாகவும் மக்கள் குறிப்பிடுகின்றனர்.

நாளைய சிறந்த தலைமுறையை உருவாக்குவதற்கு இன்றைய சிறார்களை பாதுகாக்கும் வகையில் சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யாழில் பரபரப்பு : பாடசாலை மாணவியின் சீருடை, உள்ளாடைகள் மீட்பு : விசாரணைகள் தீவிரம்!!

யாழ்ப்பாணம், வீரசிங்கம் மண்டபத்திற்கு அருகில் பாடசாலை மாணவி ஒருவரின் பாடசாலை சீருடை ஒன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளமையால் அப் பகுதியில் பரபரப்பு நிலவியுள்ளது.

இடைக்காடு மகாவித்தியாலயத்தை சேர்ந்த மாணவி ஒருவரது சீருடை, கழுத்து பட்டி, செருப்பு, உள்ளாடை போன்றனவே மீட்கப்பட்டுள்ளன.

இந் நிலையில் இச் சம்பவம் தொடர்பாக யாழ்.பொலிஸ் நிலைய சோக்கோ பிரிவு பொலிஸார் சம்பவ இடத்தில் தடயவியல் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் குறித்த மாணவி கடத்தப்பட்டுள்ளாரா? அல்லது வேறெதும் சம்பவங்கள் இடம்பெற்றதா? என்பது தொடர்பில் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பூட்டிய காரில் குழந்தையை விட்டு சென்ற தந்தை : பரிதாபமாக உயிரிழந்த குழந்தை!!

 

கனடாவில் மூன்று வயது குழந்தை காரில் உயிரிழந்து கிடந்த நிலையில் அவர் தந்தையை பொலிசார் கைது செய்துள்ளனர்.

ஒன்றாறியோவின் புர்லிங்டன் நகரை சேர்ந்தவர் ஷான் பெனில் (37) கடந்த 23-ஆம் திகதி காரில் தனது 3 வயது ஆண் குழந்தையை தனியாக விட்டு விட்டு வெளியில் சென்றுள்ளார்.

குழந்தை கார் உள்ளே மூச்சு பேச்சின்றி இருப்பதை பார்த்த அருகிலிருந்த நபர் இது குறித்து அவசர உதவி குழுவுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்து குழந்தையை மீட்ட குழுவினர் அவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதை உறுதி செய்தனர்.

கார் உள்ளே இருந்த அதிக சூடு காரணமாக குழந்தை உயிரிழந்தது தெரியவந்தது.

இது சம்மந்தமாக குழந்தையின் தந்தை ஷான் மீது வழக்குப்பதிவு செய்த பொலிசார் அவரை கைது செய்தார்கள்.

தற்போது சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கும் ஷான் மீதான நீதிமன்ற விசாரணை அடுத்த மாதம் 27ம் திகதி நடைபெறவுள்ளது.

இறந்தும் தம்பியின் உயிரை காப்பாற்றிய சிறுமி : நெகிழ வைக்கும் சம்பவம்!!

பிரித்தானியாவில் 2 வயது சிறுமி இதய நோயால் உயிரிழந்த நிலையில், இதய நோயால் பாதிக்கப்பட்ட அவளின் தம்பிக்கு சரியான சிகிச்சையளிக்கப்பட்டு வருவதால் அவன் தற்போது நலமாக உள்ளான்.

Northampton நகரை சேர்ந்தவர் ஜேம்ஸ் (30). இவர் மனைவி சோபி வூட்டன் (25). சோபிக்கு சிறு வயதிலிருந்தே இதய நோய் உள்ள நிலையில் அவருடைய 15-வது வயதில் இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 2012-ல் சோபி பெண் குழந்தையை பெற்றெடுத்த நிலையில் அதற்கு இஸ்லா டைலர் என பெயர்வைக்கப்பட்டது.

இஸ்லாவின் உடல் நிலை குறித்து சோபி பெரிதாக கவலைப்படாத நிலையில் சாதாரணமாக இருந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 2014-ஆம் ஆண்டு இஸ்லாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

அப்போது தான் பிறப்பிலிருந்தே இஸ்லாவுக்கு இதயநோய் உள்ளது தெரிந்தது, மேலும் தொடக்கத்திலேயே இதை கவனிக்க தவறியதால் நோய் முற்றியது தெரியவந்தது.

இதையடுத்து தீவிர சிகிச்சையளிக்கப்பட்டும் இஸ்ரா 2014 மே 8-ஆம் திகதி உயிரிழந்தார்.

இதையடுத்து 2016-ல் மீண்டும் கர்ப்பமான சோபி ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். அதற்கு மேக்ஸ்வெல் என பெயர்வைக்கப்பட்டது.

இஸ்லாவுக்கு செய்த தவறை மேக்ஸ்வெல்லுக்கும் செய்யக்கூடாது என நினைத்த சோபியா அவனுக்கு சரியான உடல் பரிசோதனை செய்த நிலையில் அவனுக்கும் இதய நோய் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவனுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வரும் நிலையில் விரைவில் இதயமாற்று சிகிச்சை நடைபெறவுள்ளது.

மேக்ஸ்வெல் உயிருக்கு எந்த ஆபத்துமில்லை எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளார்.

இது குறித்து பேசிய சோபியா, இஸ்ராவின் மரணம் எங்களை உலுக்கிவிட்டது, அவள் கல்லறையில் இருந்தாலும் மேக்ஸ்வெல்லை சரியாக பார்த்து கொள் என என்னிடம் கூறுவதாக உணர்கிறேன்.

அவள் உடல்நிலையை கணிக்க தவறினோம், ஆனால் மேக்ஸ்வெல் உடல்நலத்தை சரியாக கணித்தோம்.

ஒரு விதத்தில் அவள் தான் தனது தம்பியான மேக்ஸ்வெல்லை காப்பாற்றியுள்ளார் என உருக்கமாக கூறியுள்ளார்.

இளம் மனைவியை கழுத்தை நெரித்து கொன்றது ஏன்? கணவர் பரபரப்பு வாக்குமூலம்!!

இந்தியாவில் மனைவிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாக எண்ணி அவரை ஆத்திரத்தில் கொலை செய்ததாக கணவர் பொலிசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தின் கிரேட்டர் நொய்டாவை சேர்ந்தவர் ஆகுயில் (26). இவர் மனைவி இக்ரா.

கடந்த செவ்வாய்க்கிழமை கணவன் மனைவி இடையே திடீரென சண்டை ஏற்பட்ட நிலையில் ஆத்திரத்தில் ஆகுயில், இக்ராவின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு வீட்டிலிருந்து தப்பியோடியுள்ளார்.

பின்னர் சம்பவம் குறித்து அக்கம்பக்கத்தினர் பொலிசாருக்கு தகவல் கொடுத்த நிலையில் சடலத்தை கைப்பற்றிய பொலிசார் தலைமறைவாக இருந்த ஆகுயிலை நேற்று கைது செய்தனர்.

அவர் பொலிசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில், எங்களுக்கு திருமணமாகி மூன்றாண்டுகள் ஆகிறது.

கடந்த சில மாதங்களாக இக்ராவுக்கு வேறு நபருடன் தொடர்பு இருப்பதாக எனக்கு சந்தேகம் ஏற்பட்ட நிலையில் இது தொடர்பாக அடிக்கடி எங்களுக்குள் சண்டை ஏற்பட்டது.

செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட சண்டையில் ஆத்திரமடைந்த நான் அவரை கொலை செய்துவிட்டேன் என கூறியுள்ளார்.

இதனிடையில் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி இக்ராவை ஆகுயில் கொன்றுவிட்டதாக இக்ரா குடும்பத்தார் குற்றஞ்சாட்டியுள்ளனர். பொலிசார் இது குறித்தும் விசாரித்து வருகிறார்கள்.