கேரளாவில் மரண வீட்டுக்கு சென்ற பெண்ணொருவரின் துப்பட்டா வேன் கதவில் சிக்கிய நிலையில் துடிதுடித்து உயிரிழந்துள்ளார்.
நெய்யாற்றின் கரையை அடுத்த உதயன்குளங்கரையை சேர்ந்தவர் ரவி (45) இவர் மனைவி மஞ்சு (40). இவர்களுக்கு கடந்த 15 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்த நிலையில் தற்போது ஒரு ஆண் குழந்தை உள்ளது.
சம்பவத்தன்று காலையில் மஞ்சு திற்பரப்பு பகுதியை சேர்ந்த உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்றிருந்தார். பின்னர், தனது தாயார் வீட்டிற்கு செல்வதற்காக மஞ்சு வேனில் ஏறினார்.
வேனானது அவர் தாய் வீட்டுக்கு வந்து நின்ற நிலையில் அதிலிருந்து மஞ்சு கீழே இறங்கினார். அப்போது, அவர் அணிந்திருந்த துப்பட்டா வேன் கதவில் சிக்கிக்கொண்ட நிலையில் அதை அவர் எடுக்க முயன்றார்.
ஆனால் அதற்குள் வேன் திடீரென கிளம்பிய நிலையில் நிலைதடுமாறி கீழே விழுந்த மஞ்சுவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
வலியால் துடித்த அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் வழியிலேயே இறந்துவிட்டதை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
சம்பவம் குறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
இந்தியாவில் திருமணமான சில மாதங்களிலேயே மனைவியை காதலுடன் சேர்த்து வைத்த சுவாரசிய சம்பவம் நடந்துள்ளது.
கான்பூர் அருகே சானிக்வன் கிராமத்தை சேர்ந்தவர் சுஜித் என்ற கோலு, இவருக்கும் ஷ்யாம்நகர் பகுதியை சேர்ந்த சாந்தி என்பவருக்கும் கடந்த பிப்ரவரியில் திருமணம் நடந்தது.
அடுத்த சில நாட்களில், தாய் வீட்டுக்கு சென்று வருவதாக கூறிச்சென்ற சாந்தி வரவேயில்லை.
இதனால் கோபமடைந்த சுஜித், சாந்தியின் தாய் வீட்டுக்கு சென்று கேட்க ப்ளாஷ்பேக்கை கூறியிருக்கிறார்.
அதாவது, லக்னோவை சேர்ந்த இளைஞர் ரவி என்பவரை காதலித்ததாகவும், பெற்றோர் கட்டாயப்படுத்தி உங்களுக்கு கல்யாணம் செய்து வைத்துவிட்டனர் என கூறியுள்ளார்.
இதை கேட்டதும் நான் பார்த்துக் கொள்கிறேன் என கூறிய சுஜித், ரவியிடம் பேசி சம்மதம் வாங்கியுள்ளார்.
அடுத்ததாக சாந்தியின் வீட்டில் சம்மதம் தெரிவிக்காத நிலையில், ஊர் பெரியவர்களிடம் பேசியுள்ளார்.
இதனை தொடர்ந்து பொலிசின் அனுமதியுடன் சானிக்வன் பகுதியில் உள்ள ஹனுமன் கோவிலில் வைத்து திருமணமும் செய்து வைத்துள்ளார்.
நண்பர்கள், உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடந்த நிலையில், முதலில் தான் கோபப்பட்டதாகவும், நிதானமாக யோசித்த பின்னர் தான் தெளிவான முடிவு எடுத்ததாகவும் சுஜித் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய நாடான இத்தாலியில் உயிரிழந்த இலங்கை இளைஞனால் அந்நாட்டு உறவினர்கள், நண்பர்கள் கவலை அடைந்துள்ளனர். கம்பஹா பிரதேசத்தை சேர்ந்த சின்தன தனஞ்ய என்ற 24 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இத்தாலியில் இரு நாட்களுக்கு முன்னர் விபத்துக்குள்ளாகி உயிரிழந்த இலங்கை இளைஞனின் இறுதி நிகழ்வுகள் நேற்று நடைபெற்றன. இத்தாலி, கத்தானியா நகரத்தில் இந்த அஞ்சலி நடவடிக்கைகள் இடம்பெற்றது.
தொழிலுக்காக இத்தாலி சென்ற இந்த இளைஞர், இத்தாலியில் தனது பெற்றோருடனே வாழ்ந்து வந்துள்ளார்.
இறுதியாக கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் இலங்கைக்கு வந்த குறித்த இளைஞர், உறவினர் ஒருவரின் திருமண நிகழ்வில் பங்கேற்றுள்ளார்.
இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை அதிகாலை நண்பரின் தந்தைக்கு உடல் நல குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் இரவு நேர பணியை நிறைவு செய்துவிட்டு, வைத்தியசாலை சென்று நண்பரின் தந்தையை பார்த்துள்ளார். அங்கிருந்து வீடு செல்லும் போதே இந்த விபத்திற்கு அவர் முகம் கொடுத்துள்ளார்.
இத்தாலியில் வாழும் இலங்கையர்கள் மற்றும் அந்த நாட்டை சேர்ந்தவர்கள் பலர் இளைஞனின் மரணம் குறித்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்றைய தினம் அனைவரதும் கண்ணீருக்கு மத்தியில் சின்தன தனஞ்யவின் சடலம் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
வரலாற்றுச் சிறப்பு மிக்க வற்றாப்பளை அம்மன் ஆலய பொங்கல் உற்சவம் கடந்த 28ஆம் திகதி ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது.
28 மற்றும் 29ஆம் திகதிகளில் நடைபெற்ற இந்த விழாவுக்கு நாடு முழுவதிலுமிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
எனினும் இந்த 2 நாட்களில் மட்டும் 20க்கும் மேற்பட்ட விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதுடன், 20க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆலயத்திற்கு செல்லும் போதும், ஆலயத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பும் போதும் இவர்கள் விபத்தில் சிக்கியுள்ளனர்.
ஆலயத்திற்கு செல்லும் வீதிகளில்வாகன நெரிசல் மற்றும் அதிவேகமாக பயணித்தல், வீதி போக்குவரத்து வீதிகளை கடைப்பிடிக்காமை போன்ற காரணத்தினால் இவ்வாறான விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்? என்று ரஜினிகாந்தை வேதனைப்படுத்துவதற்காக தான் கேள்வி கேட்கவில்லை என சிகிச்சை பெறும் வாலிபர் விளக்கம் அளித்துள்ளார்.
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் காயமடைந்த சந்தோஷ் ராஜ் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருடன் மேலும் 46 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
அவர்களுக்கு ஆறுதல் சொல்ல ரஜினிகாந்த் சென்ற போது தான் அவரைப் பார்த்து “நீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்?” என்று சந்தோஷ் ராஜ் கேள்வி எழுப்பினார். இதனால் அதிர்ச்சி அடைந்த ரஜினியின் முகம் மாறியது.
என்றாலும் மெல்ல சிரித்தபடி சமாளித்தபடி, “நான் ரஜினிகாந்த். சென்னையில் இருந்து வருகிறேன்” என்றார். உடனே வாலிபர் சந்தோஷ் ராஜ், “சென்னையில் இருந்து இங்கு வர 100 நாட்கள் ஆகுமா?” என்றார்.
சந்தோஷ் ராஜ் சூடாக கேள்விகள் எழுப்பியதைத் தொடர்ந்து, அவருக்கு வணக்கம் தெரிவித்தபடி ரஜினி அங்கிருந்து நகர்ந்து விட்டார். இந்த சம்பவம் நேற்று சமூக வலைத்தளங்களில் வைரலாக மாறியது.
சந்தோஷ் ராஜுக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் நிறைய பேர் சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக கருத்துக்களை வெளியிட்டனர். இதைத் தொடர்ந்து சந்தோஷ் ராஜ் நடந்த சம்பவம் பற்றி விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறி இருப்பதாவது:-
எனக்கு ரஜினி படங்கள் மிகவும் பிடிக்கும். நானும் ரஜினி ரசிகன் தான். கபாலி படத்தை தியேட்டருக்குள் சீட் கிடைக்காமல் நின்றபடியே பார்த்தவன் நான். அவரைத் தான் நான் என் ஹீரோவாக நினைத்துள்ளேன். அவருக்குத்தான் தமிழகத்தில் மக்கள் ஆதரவு அதிகம் உள்ளது.
ஸ்டைல் மன்னனான அவரை கமல்ஹாசனுடன் ஒப்பிட முடியாது. அப்படிப்பட்டவர் ஸ்டெர்லைட் போராட்டத்துக்கு ஆரம்பத்தில் இருந்தே எங்களுக்கு ஆதரவு கொடுத்திருக்க வேண்டும் என்பதே எங்களின் ஓட்டு மொத்த ஆதங்கமாகும்.
100 நாட்களுக்கும் மேலாக நாங்கள் ஸ்டெர்லைட்டை மூடக்கோரி போராடினோம். அந்த சமயத்தில் ரஜினி எங்களுக்கு ஆதரவு தெரிவித்திருந்தால் எங்கள் போராட்டம் மேலும் பலமும், வலிமையும் பெற்றிருக்கும். நாங்களும் அவரை புதிய கோணத்தில் பார்த்து இருப்போம்.
ஆனால் நடந்ததெல்லாம் எங்கள் எதிர்பார்ப்புக்கு மாறாக உள்ளது. எங்கள் போராட்டத்தை பற்றி அவர் இந்த அளவுக்கு விமர்சித்து பேசுவார் என்று நினைக்கவில்லை. எனவே தான் நான் இதுபற்றி ரஜினியிடம் கேள்வி கேட்க நினைத்தேன்.
எனது கோபம் எல்லாம், எங்களுக்கு தேவைப்படும் போது ரஜினி வரவில்லையே என்பதுதான். அதைத்தான் சற்று மாறுபட்ட விதமாக ரஜினியிடம் நான் கேள்வியாக எழுப்பினேன். ஆனால் எனது கேள்வி மக்கள் மத்தியில் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.
ரஜினியை வேதனைப்படுத்த வேண்டும் என்பதற்காக நான் அந்த கேள்வியைக் கேட்கவில்லை. புகழ்பெற்ற ஒருவரை புண்படுத்த வேண்டும் என்பது எனது நோக்கம் அல்ல. ஸ்டெர்லைட் போராட்டத்துக்கு அவர் ஆதரவு தெரிவிக்கவில்லையே என்ற வருத்தம்தான் என்னை அப்படி கேள்விக் கேட்க வைத்தது.
நான் ரஜினியிடம் மட்டும் கேள்வி எழுப்பவில்லை. அமைச்சர் கடம்பூர் ராஜு வந்த போது கூட நான் ஒரு கேள்வி எழுப்பினேன். “தூத்துக்குடி மக்கள் அனைவரும் பணம் திரட்டி தருகிறோம். ஸ்டெர்லைட் ஆலையை மூட முடியுமா?” என்று கேட்டேன்.
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வந்த போதும் நான் கேள்வி எழுப்பினேன். “ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசுக்கு அதிகாரம் இருக்கிறதா?” என்று கேட்டேன்.அதற்கு அவர் சிறிது நேரம் யோசித்து விட்டு, “ஆம் இருக்கிறது” என்றார்.
உடனே நான், “அப்படியானால் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட்டால் நீங்கள் பொறுப்பு ஏற்றுக் கொள்வீர்களா?” என்று கேட்டேன்.எனது இந்த கேள்விக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எந்த பதிலும் சொல்லாமல் சென்று விட்டார்.
அடுத்தடுத்த படுக்கையில் இருந்தவர்களை சந்தித்த அவர் சிறிது நேரம் கழித்து மீண்டும் என்னிடம் திரும்பி வந்தார்.“தம்பி… நீங்கள் கேட்ட கேள்வியை நான் குறித்து வைத்துள்ளேன். நிச்சயமாக எங்களால் முடிந்த நல்லதை செய்வோம்” என்றார்.
என்னிடம் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இவ்வாறு வாக்குறுதி அளித்த அடுத்த சில மணி நேரங்களுக்கு பிறகு, ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல் வைக்கும் நடவடிக்கையை தமிழக அரசு எடுத்தது. இவ்வாறு சந்தோஷ்ராஜ் கூறினார்.
திருகோணமலை – கந்தளாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 15 வயதுடைய சிறுமி ஒருவரின் கையை பிடித்திழுத்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரை நேற்று மாலையில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கந்தளாய், வாத்தியாகம பகுதியைச் 27 வயதுடைய இளைஞர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் வீட்டில் தனிமையில் இருந்த சிறுமியின் கையை பிடித்து இழுத்ததாக சிறுமியின் பெற்றோர் கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இந்த முறைப்பாட்டுக்கு அமைய சந்தேகநபரை கைது செய்துள்ளதுடன், கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹோமாகம பிரதேசத்தில் உயிரிழந்ததாகக் கருதப்பட்ட பெண் ஒருவரின் சடலம் பிணவறைக்கு எடுத்துச் செல்லப்பட்ட போது, விழித்துக் கொண்ட அபூர்வ சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
கடந்த வாரத்தில் மத்தேகொட கிரிகம்பமுனுவ பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதான இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் வயிற்று வலி காரணமாக, ஹோமகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இதன் போது மருத்துவர்கள் குறித்த பெண்ணை பரிசோதனை செய்ததுடன் தாதியொருவர் ஊசி ஒன்றை ஏற்றியுள்ளார்.
அதன் பின்னர் குறித்த பெண் மூர்ச்சையாகியுள்ளார் இதனைத் தொடர்ந்து உடனடியாக மருத்துவர்கள் பெண் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து வைத்தியசாலையில் இருந்த பெண்ணின் உறவினர்கள், ஏனைய உறவினர்களுக்கும் மரணம் பற்றி அறிவித்துள்ளனர்.
பொதுவாக உயிரிழந்த பின்னர் ஒரு மணித்தியாலம் வரையில் நோயாளியின் சடலம் வைத்தியசாலையின் நோயாளர் வார்ட் அறையில் வைக்கப்படுவது வழமையானதாகும்.
இவ்வாறு குறித்த பெண்ணின் சடலத்தையும் ஒரு மணித்தியாலத்தின் பின்னர் பிரேத அறைக்கு எடுத்துச் சென்ற போது, செல்லும் வழியில் குறித்த சடலத்தின் கால் ஒன்று அசைவதனை பெண்ணின் உறவினர் ஒருவர் கண்டுள்ளார்.
பிரேத அறைக்கு எடுத்துச் செல்ல வேண்டாம் என கோரியுள்ளனர். அதன் பின்னர் குறித்த பெண்ணை உறவினர்கள் பொறுப்பேற்றுக் கொண்டு தனியார் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
எனினும், பெண்ணின் உடல் நிலை மோசமாகவே காணப்படுகின்றது என தெரிவிக்கப்படுகிறது. வைத்தியர்கள் மற்றும் தாதியரின் பொறுப்பற்ற செயல் குறித்து உறவினர்கள் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
மே 31ஆம் திகதியான இன்று உலக புகையிலை ஒழிப்பு தினம் முன்னெடுக்கப்படுகின்றது. உலகளாவிய ரீதியில் நாளாந்தம் ஆயிரக்கணக்கான உயிர்களை பலி எடுக்கும் ஒரு கொடிய உயிர்கொல்லியாக புகையிலை காணப்படுகின்றது.
இந்த புகையிலையில், நான்காயிரத்திற்கும் மேற்பட்ட இரசாயனங்கள் உள்ளன. புற்றுநோய்க்கு முதல் காரணமே இந்த புகையிலைதான்.
புகையிலையில் காணப்படும் இரசாயனங்களில் முக்கியமானவை “கார்பன் மோனாக்சைடு, ஹைட்ரஜன் சயனைடு, ஈயம் (நச்சுவாயுக்கள்), ஆர்சனிக் (எலி மருந்தில் உள்ளது), நாப்தலின் (அந்து உருண்டைகளில் இருப்பது), கந்தகம் (தீக்குச்சிக்கு பயன்படுத்துவது).” ஆகும்.
இவை உடலில் ஒன்று சேர்ந்து பாதிப்புகளை ஏற்படுத்தும். மேலும், புகையிலையில் உள்ள நிகோடின், மூளைக்குச் சென்று புகையிலைக்காக ஏங்க வைக்கும்.
புகையிலை பயன்படுத்துவோரில் 90 சதவீதமானோருக்கு வாய்ப் புற்றுநோய் வர வாய்ப்பு உள்ளது.
புகையிலையால் கன்னம், நாக்கு, உணவுக்குழாய், சுவாசக்குழாய் என பல இடங்களில் வெள்ளைத்திட்டுக்கள் உருவாகி, அதுவே நாளடைவில் புற்றுநோயாக மாறும்.
அந்த வகையில் இலங்கையில் வருடாந்தம் 25,000 பேர் புகையிலை பாவனையால் உயிரிழக்கின்றார்கள். அதிலும் நாளாந்தம் 68 பேர் மரணிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த உயிர்கொல்லியான புகையிலை பழக்கத்தை நிறுத்திய 20ஆவது நிமிடத்தில் இருந்து நமது உடல் சுத்தமாகிறது.
ஆகவே எதிர்கால சந்ததியினரை மனதில் வைத்து இந்த புகையிலை பாவனையிலிருந்து நம்மை நாம் பாதுகாப்போம்.
வவுனியா நகரசபை ஊழியர்கள் இன்று(31.05) காலை 8 மணி தொடக்கம் 10 மணி வரை அடையாள பணிப்பறக்கணிப்பு ஒன்றினை மேற்கொண்டனர்.
கடந்த வாரம் வவுனியா நகரசபை தலைவருக்கு வவுனியா சிறைச்சாலையின் பாதுகாவலரினால் இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக கண்டனமும் அடையாள வேலை நிறுத்தமும் இன்று நகரசபை ஊழியர்களினால் மேற்கொள்ளப்பட்டது.
இதற்கு ஆதரவாக செட்டிகுளம் பிரதேச சபை, நெடுங்கேணி பிரதேச சபை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை, சிங்கள பிரதேச சபை ஆகியன தமது ஆதரவினையும் வழங்கியிருந்தனர்.
10 மணியளவில் அடையாள போராட்டத்தினை மேற்கொண்ட பின்னர் தமது கடமைகளுக்கு ஊழியர்கள் சென்றதை அவதானிக்க முடிந்தாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
வவுனியா வைரவப்புளியங்குளம் வீதியில் மைதானத்திற்கு அருகில் அமைந்துள்ள தனியார் கல்வி நிலையத்தில் இன்று (31.05.2018) அதிகாலை திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இன்று காலை வழமை போன்று குறித்த கல்வி நிறுவனத்திற்கு ஊழியர்கள் சென்ற சமயத்தில் தளபாடங்கள் அங்காங்கே காணப்பட்டதுடன் கதவுகளும் திறந்த நிலையில் காணப்பட்டுள்ளது.
இதனையடுத்து வவுனியா பொலிஸ் நிலையத்தில் நிறுவனத்தின் உரிமையாளரினால் முறைப்பாடொன்றும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திருடப்பட்ட பொருட்கள் மற்றும் பணத்தின் பெருமதி இதுவரை தெரியவரவில்லை. மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியா செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலையில் வைத்தியர் பற்றாக்குறை காரணமாக நோயாளிகள் அவதியுற்று வருகின்றனர்.
குறித்த வைத்தியசாலையில் நேற்று (30.05) வைத்தியர் பற்றாக்குறை காரணமாக 500 க்கும் அதிகமான நோயாளிகள் காத்திருந்த அவல நிலைமை காணப்பட்டது.
செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலையில் 13 வைத்தியர்களுக்கான நியமனம் (காடர்) இருக்கின்ற போதும் 9 வைத்தியர்கள் மாத்திரமே கடமையாற்றி வருகின்றனர்.
அந்தவகையில் நேற்று மூன்று வைத்தியர்கள் மேலதிக பயிற்சிக்காக கொழும்பு சென்றுவிட்ட நிலையில் ஆறு வைத்தியர்கள் நோயாளிகளை பார்வையிட முடியாமல் திண்டாடியதை காணக்கூடியதாக இருந்தது.
200க்கும் அதிகமான நோயாளிகள் செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையிலும் குறித்த வைத்தியசாலையை நம்பி செட்டிக்குளம் பிரதேச மக்கள், மன்னார் மாவட்டத்திற்குட்பட்ட மடு பிரதேசத்தை சேர்ந்த மக்கள் மற்றும் மதவாச்சி பிரதேசத்திற்குட்பட்ட சில எல்லை கிராமங்களை சேர்ந்த மக்கள் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் வைத்தியர் பற்றாக்குறை காரணமாக மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
செட்டிக்குளம் வைத்தியசாலையில் பிணவறை கட்டி முடிக்கப்பட்டுள்ள போதிலும் இறந்த உடல்களை பாதுகாப்பதற்கான குளிரூட்டி வசதிகள் செய்யப்படவில்லை என மக்கள் விசனம் வெளியிட்டனர்.
பிரபல தனியார் தொலைக்காட்சியில் கடந்த 8 வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி ‘சொல்வதெல்லாம் உண்மை’. இந்த நிகழ்ச்சியின் மூலம் குடும்பங்களில் நடக்கும் பிரச்சனைகளை தொலைக்காட்சிக்கு கொண்டு வந்து தீர்த்து வைப்பதாக கூறி, அவர்கள் குடும்ப பிரச்னையை உலக மக்கள் அனைவரையும் பார்க்க வைத்து இதன் மூலம் டி.ஆர்.பியை எடுப்பது தான் இந்த நிகழ்ச்சியின் நோக்கம்.
இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில், தொகுப்பாளராக இருந்தவர் பிரபல செய்தி வாசிப்பாளர் நிர்மலா பெரியசாமி. இவரை தொடர்ந்து இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வந்தவர் தான் நடிகையும் இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன்
புதுமைகளை புகுத்தி இந்த நிகழ்ச்சியை துவங்குவதாக நிகழ்ச்சி நிர்வாகம் தெரிவித்தது. பின் இந்த குடும்ப பிரச்சனை நிகழ்ச்சிக்கு மீண்டும் தொகுப்பாளராக லட்சுமி ராமகிருஷ்ணன் ரீஎன்ட்ரி ஆனார்.
இது வரை பலரது குடும்பத்தில் கும்மி அடித்துள்ள இந்த நிகழ்ச்சியின் மீது பல புகார்கள் உள்ளது. இருப்பினும் சட்ட ரீதியாக அனைத்து புகார்களையும் தொலைக்காட்சி நிர்வாகம் சந்தித்து தொடர்ந்து இந்த நிகழ்ச்சியை நடத்தி வந்தது.
இந்நிலையில் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை ஒளிபரப்ப உயர்நீதி மன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இந்த நிகழ்ச்சி தனிமனித சுதந்திரத்தை பறிப்பதாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதி மன்ற மதுரை கிளை, இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பும் தொலைக்காட்சி நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பியதோடு, இடைக்கால தடை விதிக்கவும் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் தங்கள் ஒரே மகனின் கால் அகற்றப்பட்டதால் அவரின் பெற்றோர் கண்ணீர் மல்க கதறி அழுதனர்.
கடந்த 22ஆம் திகதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான பேரணியில் கலவரம் வெடித்து 13 பேர் சுட்டுக்கொள்ளப்பட்டனர். பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த துப்பாக்கி சூட்டில் பிரின்ஸ்டன் என்ற இளைஞரின் வலது காலில் குண்டு பாய்ந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதில் பிரின்ஸ்டனின் வலது கால் மூட்டுக்கு கீழே சிதைந்துவிட்டது.
இதனால் அவரது காலை அகற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்தினர். இதையடுத்து பிரின்ஸ்டனின் வலது கால் முட்டுக்கு கீழ் பகுதி சத்திரசிகிச்சை மூலமாக முழுமையாக அகற்றப்பட்டது.
இதுகுறித்து கூறிய பிரின்ஸ்டனின் பெற்றோர், பிரின்ஸ்டன் எங்களுக்கு ஒரே மகன் என்பதால் அவனை செல்லமாக வளர்த்தோம். பாலிடெக்னிக் முடித்த பிரின்ஸ்டனுக்கு சென்னையில் வேலை கிடைத்த போதும் அவனை சென்னைக்கு அனுப்ப மனமில்லை. அதனால் பிரின்ஸ்டன் தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தான்.
போராட்டம் நடந்த அன்றும் பிரின்ஸ்டன் இருசக்கரத்தில் வேலைக்கு தான் சென்று கொண்டிருந்தான். அப்போது நடந்த அசம்பாவிதத்தில் எனது மகன் காலை இழந்துவிட்டான். இதுகுறித்து துணை முதல்வரிடம் கூறிய போது அவர், அரசு வேலை தருவதாக கூறினார். எங்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என கண்ணீர் மல்க கூறினார்கள் பிரின்ஸ்டனின் பெற்றோர்கள்.
வவுனியா குட்செட் வீதியில் 1ஒழுங்கையில் உள்ள வீடொன்றினுள் புகுந்த மர்ம கும்பல் தாயின் அரவணைப்பிலிருந்த 8 மாத ஆண் குழந்தையான வானிஷன் எனும் குழந்தையை இன்று (31.05.2018) அதிகாலை 2 மணியளவில் கடத்திச் சென்றுள்ளனர்.
வெள்ளை வேன் ஒன்றில் வந்த ஆறு பேர் கொண்ட கும்பலாலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அயலவர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை குறித்த குழந்தையின் தந்தை வெளிநாடு ஒன்றில் வசித்து வருவதாகவும் தாயிற்கும் தந்தைக்கும் இடையில் கருத்து முரன்பாடுகள் இருப்பதாகவும் இருவரும் பிரிந்து வாழ்வதுடன் தந்தை குழந்தையை கடத்துவதாக எச்சரிக்கை விடுத்திருந்தார் என குழந்தையின் தாயார் தெரிவித்திருந்தார்
வவனியா பொலிஸார் மோப்ப நாயின் உதவியுடன் தேடுதலையும் விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
மனிதர்கள் சிறுநீர் கழிப்பது என்பது உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கை வகிக்கிறது. சிறுநீரகங்களால் உற்பத்தி செய்யப்படும் சிறுநீரின் வழியே உடலில் இருந்து டாக்ஸின்களும், கழிவுகளும் வெளியேற்றப்படுகின்றன.
ஒரு நாளைக்கு எத்தனை முறை சிறுநீர் கழித்தால், உடல் ஆரோக்கியமாக உள்ளது என்று அர்த்தம் என நீங்கள் கேட்கலாம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான உடலமைப்பு இருக்கும். அதில் ஒரு நாளைக்கு சிலர் 6-7 முறை கழிக்கலாம். இல்லாவிட்டால் 4 முதல் 10 முறை வேண்டுமானாலும் கழிக்கலாம்.
குறைவான சிறுநீர் உற்பத்திக்கான காரணங்கள்: உடல் வறட்சி, தொற்றுகள், சிறுநீரக பாதை சுருக்கம், குறிப்பிட்ட மருந்துகளின் பக்க விளைவுகள்
சிறுநீரக பிரச்சனைகள்.
உடலில் போதுமான நீர்ச்சத்து இல்லாவிட்டால், உடல் வறட்சி அடைந்து, சிறுநீர் கழிக்கும் எண்ணிக்கை குறையும்.
எலுமிச்சை ஜூஸ் சிறுநீரக பாதை தொற்றுகள் மற்றும் அதிகப்படியான யூரிக் அமில பிரச்சனைகளை எதிர்க்க உதவும்.
ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் பாதி எலுமிச்சையைப் பிழிந்து சிறிது தேன் கலந்து, காலையில் வெறும் வயிற்றில் குடியுங்கள்.
இளநீரை ஒருவர் தினமும் குடித்து வந்தால், அது உடலில் இருந்து டாக்ஸின்களை சிறுநீரின் வழியே வெளியேற்றும். மேலும் இளநீர் சிறுநீரக பாதையில் உள்ள தொற்றுக்களைத் தடுக்க உதவும்.
ஒரு டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் கலந்து, சிறிது தேன் சேர்த்து தினமும் 2 முறை குடித்து வந்தால் இது அடிக்கடி சிறுநீர் கழிக்கச் செய்யும்.