உருகுவே நாட்டைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கூகுளில் உள்ள குறைபாடுகளை சுட்டிக் காட்டியதால், அவருக்கு கூகுள் நிறுவனம் 24 லட்சம் ரூபாய் பரிசாக கொடுத்துள்ளது.
கூகுள் தனது குறைபாடுகளை சரி செய்து கொள்வதற்காக அவ்வப்போது சர்வதேச அளவிலான போட்டிகளை நடத்தி வருகிறது.
அதன் படி உருகுவே நாட்டைச் சேர்ந்த Ezequiel Pereira என்ற 17 வயது சிறுவன், கூகுள் சர்வர்களில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகளை சுட்டிக் காட்டி இதன் மூலம் ஹெக்கர்கள் நுழைவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்பதை கண்டறிந்துள்ளார்.
இதையடுத்து அந்த குறைபாட்டை சரி செய்த கூகுள் நிறுவனம், பாதுகாப்பு குறைபாடுகளை கண்டறிந்த சிறுவனுக்கு 24 லட்ச ரூபாய் பரிசாக கொடுத்துள்ளது.
இந்திய கிரிக்கெட் வீரர் டோனியின் ஒட்டுமொத்த சொத்துமதிப்பு 637 கோடி ஆகும், இந்தியளவில் அதிக வருவாய் ஈட்டும் விளையாட்டு வீரர்களின் பட்டியலில் டோனி, 3வது இடத்தில் இருக்கிறார்.
அதுவும் 2014ம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு டோனியின் மதிப்பு இந்தளவிற்கு உயர்ந்துள்ளது.
2018 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டியில் 15 கோடி கொடுத்து அணியில் தக்க வைத்துக்கொண்டது சென்னை சூப்பர் கிங்ஸ்.
கிரிக்கெட் விளையாட்டையும் தாண்டி அதிக விளம்பரங்களில் டோனி கவனம் செலுத்துகிறார்.
Pepsi, Orient PSPO, Spartan Sports, Reebok, Boost, Amity University, Gulf Oil, Amrapali Group, Ashok Leyland, McDowell’s Soda, Big Bazaar, Exide Batteries, TVS Motors ஆகிய நிறுவனங்களின் விளம்பர தூதுவராக இருக்கிறார்.
சென்னை கால்பந்து அணி, ராஞ்சியில் உள்ள ஹாக்கி கிளப் ஆகிய அணிகளின் இணை உரிமையாளராகவும் இருக்கிறார்.
2015 ஆம் ஆண்டில் உலகில் அதிகம் சம்பாதிக்கும் 100 விளையாட்டு வீரர்களின் பட்டியலில் டோனி 23 வது இடம் பிடித்தார். 31மில்லியன் டொலர் வருவாய் இவர் ஈட்டியதை அடிப்படையாக வைத்து 23வது இடத்தில் இருந்தார்.
கவாஸாகி நின்ஜா H2, ஹெல்கேட் X132, நின்ஜா ZX-14R, ஹார்லி டேவிட்சன் ஃபேட் பாய், யமஹா தண்டர்கேட், டுகாட்டி 1098 என்று மொத்தம் 22 சூப்பர் பைக்குகள் டோனியிடம் உள்ள. இதில் நின்ஜா H2 பைக்கின் ஆன்ரோடு விலை 35 லட்சம்
பிரித்தானியாவில் இலங்கை பூர்வீகத்தை கொண்ட பெண் ஒருவர் மேயராக பதவி பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
லண்டனில் ஹாரோ பகுதியின் மேயராக கரீமா மரிக்கார் (Kareema Marikar) என்ற பெண் முதன்முறையாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கரீமா மரிக்கார் லண்டனிலுள்ள பல தொண்டு நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார். அவர் சமூக சேவைகளுக்காக தன்னை அர்ப்பணித்த ஒருவராகும்.
இலங்கையர்களிடம் மாத்திரமின்றி மேற்கு ஹாரே மக்கள் மத்தியிலும் பிரபல்யமடைந்த ஒருவராக கரீமா மரிக்கார் காணப்படுகின்றார்.
அவரது பதவி பிரமாண நிகழ்வில் லண்டனில் வாழும் பெருமளவு இலங்கையர்கள் பங்கேற்றுள்ளனர்.
ஹாரோ நகர மக்கள் தன் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கும் மூன்று பிள்ளைகளை வளர்க்கும் தனது தாய் என்ற ரீதியிலும் தனக்கு கிடைத்த அனுபவம் குறித்து பெருமை அடைவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கண்டியில் பிறந்து வளர்ந்த கரீமா, கண்டி மகளிர் பாடசாலையின் பழைய மாணவியாகும். பின்னர் 28 வருடங்களாக லண்டன் ஹாரோ பிரதேசத்தில் வாழ்ந்து வருகின்றார்.
கடந்த காலங்களில் ஹாரோ நகர சபையின் லேபர் கட்சி உறுப்பினராக கரீமா பாரிய சேவையை ஆற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாரிய விபத்துக்குள்ளாக இருந்த விமானத்தின் பயணிகளை காப்பற்ற இரு விமானிகளின் புத்திசாலித்தனமே காரணம் என ஸ்ரீலங்கன் விமான சேவையின் ஊடக பேச்சாளர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
அதிக மழை மற்றும் காற்றுக்கு மத்தியில் நேற்று முன்தினம் இந்தியாவின் கொச்சின் விமான நிலையத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த விமானம் பாரிய விபத்துக்குள்ளாக இருந்து. எனினும் விபத்தை தவிர்த்து பாதுகாப்பாக தரையிறக்குவதற்கு அதன் விமானிகள் துரிதமாக செயற்பட்டதாக ஊடக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யு.எல்.167 என்ற விமானம் புறப்பட தயாரான போது, விமான நிலைய பகுதிகளில் கடுமையான காற்று மற்றும் மழையுடனான காலநிலை நிலவியது.
இதன்போது அந்த விமானத்தில் 228 பயணிகள் மற்றும் 12 ஊழியர்கள் பயணித்துள்ளனர். இந்த விமான பிரான்ஸில் தயாரிக்கப்பட்ட A-330 ரக விமானமாகும்.
இவ்வாறான சீரற்ற காலநிலையின் கீழ் திடீரென பின்பக்கம் பாரமாகி வழுக்கிய விமானத்தின் சக்கரம் ஓடுதளத்தின் எல்லையில் இருக்கும் விளக்குகளில் மோதியுள்ளது. இதனால் மின்சார விளக்குகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.
எனினும் ஆபத்தான நேரத்திலும், விமானத்தை கட்டுப்படுத்தி பயணிகளுக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படாத வகையில் விமானத்தை தரையிறக்குவதற்கு விமானிகள் நடவடிக்கை மேற்கொண்டனர் என ஸ்ரீலங்கன் நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கன் விமான சேவையின் பொறியியலார்கள் சிலர் கொச்சின் விமான நிலையத்திற்கு சென்றனர். விமானத்தின் நிலைமைகள் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளதாக ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
வவுனியாவிலிருந்து பரந்தன் – முல்லைத்தீவு ஏ-35 வீதியூடாக வற்றாப்பளைக்கு சென்ற பக்தர்களை வழிமறித்து தாக்கி நகைகளை பறித்த சம்பவம் ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது.
வவுனியாவில் இருந்து நேற்று மாலை பரந்தன் வழியாக வற்றாப்பளை அம்பாள் ஆலயத்திற்கு வாகனம் ஒன்றில் பயணித்த பக்தர்களை மோட்டார் சைக்கிள்களில் வந்த குழுவினர் வழிமறிதது, வாகனத்தில் பயணித்தவர்களை தாக்கி அவர்கள் அணிந்திருந்த தங்க நகைகள் மற்றும் கைத்தொலைபேசி, வாகன சாவியையும் பறித்துச் சென்றுள்ளனர்.
இச் சமபவம் தொடர்பில் தருமபுரம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் இணைந்து குறித்த குழுவினரை துரத்திச் சென்று சம்பவத்துடன் தொடர்புபட்ட இரண்டு பேரையும் மோட்டார் இரண்டு சைக்கிள்களையும் கைப்பற்றி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தர்மபுரம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை கடல் எல்லை ஆழ்கடல் பகுதியில் மர்மமான முறையில் கப்பல் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு, மணற்குடியிருப்பு பகுதியில் இருந்து இன்று அதிகாலை மீன்பிடித் தொழிலுக்கு சென்ற மீனவர்கள் இந்த கப்பலை அவதானித்து வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
குறித்த கப்பல் பல மணி நேரம் அவ்விடத்திலயே தரித்து நிற்பதினால் அது ஆழ்கடலில் நங்கூரம் இடப்பட்டிருக்கின்றது என மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த கப்பல் சட்டவிரோதமான தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்காலாம் என சந்தேகம் வெளியீட்டுள்ள மீனவர்கள், என்ன காரணத்திற்க்காக இந்தக் கப்பல் நங்கூரம் இடப்பட்டிருக்கின்றது என்ற தகவல் அவர்களுக்கு கிடைக்கவில்லை என மேலும் தெரிவித்துள்ளனர்.
தென்னிலங்கையில் தற்போது அதிகரித்துக்காணப்படும் இன்புளுவன்சா வைரஸ் காய்ச்சல் தோற்று ஏற்பட்டு பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக இத் தொற்கு சிறுவர்களுக்கும் கற்பிணித்தாய்மார்களுக்கும் ஏற்பட்டு வருகின்றது பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.
எனவே வவுனியாவிலுள்ள சிறுவர்கள், கற்பிணித்தாய்மார்கள் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு வவுனியா பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் கு.அகிலேந்திரன் தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்டத்தில் இன்புளுவன்சா வைரஸின் தாக்கம் தொடர்பாக கேட்டபோதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கும்போது..
வவுனியாவில் இத்தாக்கம் இன்று வரையில் இனங்காணப்படவில்லை. தென்னிலங்கையில் அதிகரித்துக் காணப்படும் இன்புளுவன்சா வைரசினால் பெருமளவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக சிறுவர்களும் கற்பிணித்தாய்மார்களுக்கும் இத் தொற்று ஏற்பட்டு வருகின்றது. எனவே வவுனியா மாவட்டத்திலுள்ள சிறுவர்கள், கற்பிணித்தாய்மார்கள் மிகவும் அவதானத்துடன், இருப்பதுடன் காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக வைத்தியசாலையை அணுகுமாறும் இதை எதிர்கொள்ள வைத்தியசாலை தயார் நிலையிலுள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.
நிர்வாக செயற்பாடுகளுக்கான நாடாளுமன்ற ஆணையாளர் (ஒம்புட்ஸ்மன்) அலுவலகத்திற்கு 37 வருடங்களுக்குப் பின் உத்தியோகபூர்வ இலச்சினை உருவாக்கிய பெறுமையை மாணவி ஒருவர் பெற்றுக்கொண்டுள்ளார்.
1981 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இலங்கை ஒம்புட்ஸ்மன் அலுவலகம் கடந்த 37 வருடங்களாக சேவையாற்றி வருகின்ற போதும், அந்த அலுவலகத்திற்கு உத்தியோகபூர்வ இலச்சினையும் இணையத்தளமும் இதுவரை இருக்கவில்லை.
இந்த குறையை நிவர்த்தி செய்வதற்கு, நாடளாவிய ரீதியில் பாடசாலை ஓவியப் போட்டியொன்றினை நடத்தி அதன்மூலம் இலட்சினையை தேர்ந்தெடுக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதன்படி 2016 ஆம் ஆண்டில் நாடளாவிய ரீதியில் பாடசாலை ஓவியப் போட்டியொன்று நடத்தப்பட்டது, இதில் நாடெங்கிலும் உள்ள பாடசாலைகளை சார்ந்த 10, 11ஆம் தரங்களை சேர்ந்த மாணவர்களால் 116 ஓவியங்கள் தபால் மூலமாக அனுப்பப்பட்டது.
இதில் கல்வி அமைச்சின் சித்திரப் பிரிவின் பிரபல நடுவர் சபையினால் ஆராய்ந்து, 2016ஆம் ஆண்டில் 10ஆம் தரத்தில் கல்வி கற்ற காயத்ரி பபோத பெரேரா என்ற மாணவியினால் சமர்ப்பிக்கப்பட்ட ஓவியம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து, 37 வருடங்களுக்குப் பின் ஒம்புட்ஸ்மன் அலுவலகத்திற்கு புதிய உத்தியோகபூர்வ இலச்சினையும் இணையத்தள அங்குரார்ப்பணமும் ஜனாதிபதியால் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஓவியப் போட்டியில் வெற்றியீட்டிய மாணவ மாணவியர்களுக்கான சான்றிதழ்களும் ஜனாதிபதியினால் வழங்கி வைக்கப்பட்டன.
வெயங்கொட பகுதிகளில் மகளின் திருமணம் தாமதமாகியதனால் தந்தை ஒருவர் தற்கொலை செய்து கொண்ட துயர சம்பவம் ஏற்பட்டுள்ளது. ஷேக்ஸ்பியர் என்ற நபர் ஒருவரே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
வீட்டில் காணப்பட்ட பிரச்சினையினால் மகளின் திருமணம் தாமதமாகியது. இதனால் கடுமையான மனவேதனையில் இருந்தவர் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை செய்து கொள்வதற்கு அவருக்கு வேறு காரணங்கள் இருக்கவில்லை என மரண விசாரணையின் போது மனைவி தெரிவித்துள்ளார்.
மகளின் காதலன் ஏதோ சில காரணங்களுக்காக அண்மையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார். நானும் மகளும் பொலிஸ் நிலையத்திற்கு சென்ற சந்தர்ப்பத்தில் கணவர் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டார். இந்த மரணம் தொடர்பில் வேறு சந்தேகங்கள் இல்லை என மனைவி குறிப்பிட்டார்.
தந்தை எழுதிய கடிதம் ஒன்றும் அவருக்கு அருகில் கிடந்ததாக கூறி மகள் பொலிஸாரிடம் கடிதத்தை வழங்கியுள்ளார்.
தென்னிலங்கையை புரட்டிப்போட்டுள்ள இன்புளுவன்சா மற்றும் எடினோ வைரஸ் தாக்கமானது ஏனைய பகுதிகளுக்கும் பரவக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த பதில் சுகாதாரப் பணிப்பாளர் நாயகம் சரத் அமுனுகம இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
இந்த வைரஸின் தாக்கமானது ஜுன், ஜுலை மற்றும் டிசம்பர் மாதங்களில் அதிகமாக பரவுவதும், பின்னர் குறைவடைவதும் வழமை என சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளர்களை, வைத்தியசாலையிலுள்ள ஏனைய நோயாளர்களிடம் இருந்து தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்குமாறு அனைத்து வைத்தியசாலைகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
வவுனியா குருமன்காடு காளி அம்மன் தேர்திருவிழா நேற்று காலை இடம்பெற்றுள்ளது. இதன்போது பலரின் தங்க நகைகள் திருட்டுப்போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
வவுனியா குருமன்காட்டுச் சந்தியிலுள்ள காளி அம்மன் ஆலயத்தின் தேர்திருவிழா நேற்று இடம்பெற்றுள்ளது. இதே நேரத்தில் அங்கு வந்த திருடர்கள் தமது கைவரிசையைக்காட்டி தேர்த்திருவிழாவிற்கு வந்திருந்த 5 பேரிடமிருந்து தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளனர்.
தங்க நகைகளைப் பறிகொடுத்தவர்கள் ஆலய பரிபாலன சபையினரிடமும் தெரியப்படுத்தியுள்ளதுடன் நான்கு பவுண் தங்க நகையை பறிகொடுத்த பெண்ணொருவர் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளார்.
திருடர்கள் குறித்த 5 பேரிடமும் சுமார் 12 பவுண் நகைகளை திருடிச்சென்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இத்திருட்டுத் தொடர்பான மேலதிக விசாரணகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கேரளாவில் காதலித்து திருமணம் செய்ததற்காக இளம்பெண்ணின் உறவினர்களால் இளைஞர் ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவின் தலித் கிறிஸ்துவ குடும்பத்தை சேர்ந்தவர் கெவின் பி ஜோசப், கல்லூரியில் படிக்கும் போது கெவினுக்கும், நீனு என்ற பெண்ணுக்கும் காதல் மலர்ந்துள்ளது.
இரண்டாம் ஆண்டு இளங்கலை பட்டம் படித்து வரும் நீனு, கடந்த 25ம் திகதி முறைப்படி கெவினை பதிவு திருமணம் செய்து கொண்டார்.
இது நீனுவின் பெற்றோருக்கு தெரியவந்ததால், ஆத்திரமடைந்த உறவினர்கள் கெவினுடன் அவரது உறவினர் அனிஸ் என்பவரையும் கடத்தி சென்றுள்ளனர்.
சுமார் 10 கொண்ட கும்பலால் இவர்கள் காரில் கடத்தி செல்லப்பட்ட நிலையில், அனிஸை காரிலிருந்து தள்ளி விட்டுள்ளனர். இவர்களது வீட்டிலிருந்து சுமார் 20 கிமீ தொலைவில் கெவினை அடித்துக் கொன்றுள்ளனர், இதில் முக்கியமான குற்றவாளி நீனுவின் சகோதரர் ஆவார்.
தகவலறிந்ததும் அதிர்ச்சியில் உறைந்த போன நீனு, கெவினின் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பொலிஸ் நிலையம் சென்ற போது புகாரை ஏற்க மறுத்துள்ளனர். சுமார் 30 மணிநேரம் கழித்து புகாரை ஏற்ற நிலையில், கெவின் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து கெவினின் உறவினர்கள் போராட்டத்தால் விவகாரம் வெளியே தெரியவரவே, டிஜிபி தலைமையில் சிறப்பு படையை அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார் கேரள முதல்வர் பினராயி விஜயன்.
கோட்டயம் மற்றும் கொல்லத்தில் இரண்டு குழுக்குள் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருவதாகவும், குற்றவாளிகளுக்கு நிச்சயம் தண்டனை வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இதுபோன்று இனியும் நடக்க கூடாது எனவும், எந்தவொரு குற்றச்சாட்டாக இருந்தாலும் உடனடியாக பதிவு செய்யாத பொலிஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கையில், பரவி வரும் இன்புளுவென்ஸா நோய் தொடர்பாக மக்களுக்கு முறையாக விளக்கமளித்து கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
அவ்வாறு இல்லாவிடின் நாடு முழுவதும் இந்த நோய் பரவி உயிர்ச் சேதங்கள் ஏற்படும் அபாயம் இருப்பதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்க கராப்பிட்டிய வைத்தியசாலைக் கிளையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் இந்நோய் பரவினால், தீவிர சிகிச்சைக்காக பயிற்சி பெற்ற வைத்தியர்களின் பற்றாக்குறை, உபகரணங்கள் போதாமை, சிறுவர்களுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் இடவசதியின்மை உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படும்.
இந்நிலையில், நிபுணத்துவ வைத்தியர்கள் இன்மை போன்ற காரணங்களால் நிலைமை மேலும் மோசமடையலாமென அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் ஜனித் லியனகே தெரிவித்தார்.
காலி கராப்பிட்டி வைத்தியசாலையில் மட்டும் அதி தீவிர சிகிச்சை பிரிவில் ஏழு கட்டில்களே உள்ளன. மேல் மாடியில் மேலும் கட்டில்களைப் கொண்டு விரிவுபடுத்தலாம். இந்த விடயமாக அரசு கவனம் செலுத்த வேண்டும்.
இந்த அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் இன்புளுவென்ஸாவினால் பீடிக்கப்பட்ட குழந்தைகள் நிரம்பி உள்ளனர். இதனால் புற்றுநோய், சிறுநீரக, இருதய நோயாளர்களை இப்பிரிவில் சேர்க்க முடியாதுள்ளது.
நான்கு சிறுவர் தீவிர சிகிச்சை பிரிவுகள் மட்டுமே இலங்கையில் உள்ளன. கராபிட்டியில் இப்பிரிவில் கடமையாற்ற இரு வைத்திய நிபுணரே உள்ளார். நாடு முழுவதும் பத்துப் பேரே உள்ளனர் என அவர் தெரிவித்தார்.
இதேவேளை, இந்த வைரஸ் காய்ச்சல் காரணமாக பலர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த உலகு கடவுள் மனிதனுக்கு கொடுத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் என்றாலும், மனிதர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத அமானுஷ்யங்களும் பிரம்மிக்க வைக்கும் ஆச்சர்யங்களும் நிறைந்ததாகத்தான் காணப்படுகின்றது.
உயிர்கொல்லும் அமானுஷ்ய தீவு, காற்றில் கரைந்து விடும் மனிதர்கள், அழைத்துச்செல்லும் வேற்றுக்கிரகவாசிகள் இப்படியெல்லாம் நீங்கள் அறிந்ததுண்டா?
இந்நிலையில் யாருமே வசிக்க முடியாத மர்மமான தீவு ஒன்று இப்புவியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, இந்த தீவுக்குச் சென்ற எவரும் இதுவரையில் உயிருடன் திரும்பியதே இல்லை என்பதுதான் வியப்பிற்குரியது.
கென்யா நாட்டின் வடமேற்குப் பகுதியில் கடலுக்கு நடுவே இருக்கும் குட்டித்தீவில் பிரமாண்டமாய் தேங்கியிருக்கும் துர்கனா ஏரியைச் சுற்றி ஏராளமான குட்டித்தீவுகள் உள்ளன.
அவ்வாறு காணப்படும் குட்டித்தீவுகளில் ஒன்றுதான் என்வைன்டினெட் என்று அழைக்கப்படும் ஓர் சிறிய நிலப்பகுதியும், உயிர்கொல்லும் தேசமுமாகும்.
என்வைன்டினெட் என்றால் திரும்பி வராது என்று அர்த்தமாம், இந்த தீவுக்கு இப்படிப் பெயர் வந்தமைக்கான பின்னணியில் இருக்கும் கதைதான் சுவாரஷ்யமும் மர்மமும் நிறைந்தது.
1900ஆம் ஆண்டுகளில் என்வைன்டினெட் தீவில் பெருமளவிலான மனிதர்கள் வாழ்ந்துள்ளார்கள், மீன் பிடிப்பதை பிரதான தொழிலாக கொண்ட அவர்கள், பெரும்பாலும் தீவை விட்டு வெளியே வர மாட்டார்கள்.
எனினும், வியாபாரத்திற்காக அவ்வப்போது பக்கத்துத் தீவுகளுக்குச் சென்றுவருவார்களாம். என்வைன்டினெட் தீவில் மக்கள் வசிக்கின்றார்கள் என்பதற்கு ஒரே ஆதாரம், அவர்கள் பக்கத்துத் தீவுகளுக்கு சென்று வருவதுதான்.
இந்த நிலையில், திடீரென சில நாட்கள் அந்தத் தீவில் இருந்து, வியாபாரத்துக்காகப் பக்கத்துத் தீவுகளுக்கு வரும் மக்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியிருக்கிறது. அடுத்தடுத்த சில நாட்களில் மனிதர்களின் வருகை முற்றிலும் நிற்கவே, பக்கத்து தீவைச் சேர்ந்த சிலர் அந்தத் தீவுக்குச் சென்றிருக்கிறார்கள்.
தீவுக்குச் சென்றவர்கள் திரும்பவில்லை. பிறகு, பாதுகாப்புடன் பயணித்த இன்னொரு பழங்குடியினர் குழுவும் திரும்பி வரவில்லை என குறிப்பிடப்படுகின்றது.
அன்றிலிருந்து, தீவுக்குச் செல்பவர்கள் காற்றில் கரைந்து விடுகிறார்கள், வேற்றுக்கிரகவாசிகள் அவர்களை அழைத்துச் செல்கிறார்கள், திடீரென வரும் ஒளி வளையம் மக்களைக் கொன்று விடுகிறது என ஏகப்பட்ட கதைகள் தீவை ஆக்கிரமித்தன. அன்று முதல் மர்மத் தீவாகவே மாறிவிட்ட என்வைன்டினெட்டுக்குள் யாரும் நுழைவதில்லை.
1934ஆம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த புவியியல் ஆராய்ச்சியாளர் விவியன் ஃபுச் என்பவர், தன்னுடைய குழுவினரோடு துர்கனா ஏரியை ஆராய்ந்துகொண்டிருந்தபோது அவருடைய காதில் என்வைன்டினெட் தீவின் கதைகள் கிசுகிசுக்கப்படுகிறன.
ஆர்வமான விவியன் இந்தத் தீவுக்கு என்னதான் ஆனது? என்பதை ஆராய உடன் வந்திருந்த மார்டின், டைசன் என்ற இரு இளம் ஆராய்ச்சியாளர்களை அந்தத் தீவுக்கு அனுப்பிவைத்தார்.
மர்மத்தைக் கண்டுபிடித்தே தீருவது என்று என்வைன்டினெட் தீவுக்குக் கிளம்பிய இந்த இரு ஆராய்ச்சியாளர்களும் திரும்பி வரவில்லை என்றதும் அதிர்ச்சியானார்கள் விவியனுடன் வந்திருந்த ஆராய்ச்சியாளர்கள்.
பிறகு, ஹெலிகொப்டர் உதவியோடு தீவுகளை வட்டமடித்த அவர்களுக்கு என்வைன்டினெட் தீவில் தெரிந்தது பல அதிர்ச்சிகரமான விடயங்கள், அங்கு மனிதர்கள் இருந்த தடயமே இல்லையாம்.
பழங்குடியினரின் குடிசைகள் அப்படியே இருந்தன. மீன், முதலை போன்ற சில உயிரினங்கள் அழுகிய நிலையில் கிடந்தன. மொத்தத்தில், அங்கே மனிதர்களும் இல்லை, மனிதர்கள் இருந்த தடயமும் இல்லை என்ற தகவல்களே இதன்மூலம் வெளிவந்தன.
எனினும், என்வைன்டினெட் தீவுக்கும் வேற்றுக்கிரகவாசிகளுக்கும் தொடர்பு இருக்கிறதா, இங்குள்ள மக்கள் அழிந்து போனதற்கு வேறு ஏதேனும் இயற்கைச் சூழல்கள் காரணமாக இருக்குமா, தீவுக்குச் செல்லும் மனிதர்கள் ஏன் திரும்புவதில்லை எனப் பல கேள்விகளோடு, இன்றுவரை தூர நின்றே ரசித்துக்கொண்டிருக்கிறார்கள் சுற்றுலாவாசிகள்!
வரும் காலங்களில் மனித இனம் வாழவேண்டும் என்றால் சந்திரனுக்கு 2020இலும், செவ்வாய்க்கு 2025இற்குள்ளும் விண்வெளி ஆய்வாளர்களை அனுப்ப வேண்டும்.
ஏனென்றால் நாம் பூமியை விட்டு வெளியேற வேண்டிய காலம் மிக விரைவில் வரப்போகிறது என மறைந்த உலகப் புகழ்பெற்ற அறிவியலாளரும் பிரபல விஞ்ஞானியுமான ஸ்டீபன் ஹாக்கிங் தெரிவித்துள்ளார்.
உலகத்தை தனது கண் அசைவினில் ஆட்டிப்படைத்த ஸ்டீபன் ஹாக்கிங், தான் இறப்பதற்கு முன்னைய காலப்பகுதிகளில் பல ஆய்வுகளை நடத்தி இவ்வுலகிற்கு தீர்க்கத்தரிசன கருத்துக்கள் பலவற்றை முன்வைத்துச் சென்றுள்ளார்.
எதிர்காலத்தில் மனித இனம் முற்றிலும் அழிந்து போகாமல், தொடர்ந்து வாழ வேண்டுமானால், பூமியை கைவிட்டு வேறு கிரகங்களில் மனிதன் வாழ வேண்டும் என்று அவர் வலியுறுத்திச் சென்றுள்ளார்.
பூமியைவிட்டு மனிதன் வேற்றுக்கிரகத்திற்கு செல்ல வேண்டியதன் அவசியத்தையும் மனித இனத்தின் எதிர்காலம் குறித்தும் அவர் குறிப்பிட்டுள்ள தீர்க்கத்தரிசனங்கள் என நோக்கும்போது,
இந்த விவகாரம் எதிரெதிர் நாடுகளை ஒன்றிணைத்து, எதிர்வரும் பெரும் பிரச்சனையை ஒன்றிணைந்து கையாள வழிவகை செய்யும் என்று நம்புவதாகக் கூறினார்.
மனித இனம் பூமியில் அதிக காலம் வாழ முடியாது. ஏனென்றால், பூமி, ஆஸ்ட்ராய்டு என்று அழைக்கப்படும் பெரிய விண் பாறைகளால் மோதப்படவும், நம் சூரியனாலேயே விழுங்கப்படவும் வாய்ப்புகள் உள்ளதாக கூறுகிறார்.
அவ்வாறு நடக்கும் பட்சத்தில் பூமி முழுவதும் அழிந்துவிடும். எனவே தொலைதூர கிரகங்களுக்கு செல்வதே மனித இனத்தின் அழிவைத் தடுக்க ஒரே வழி என்று வலியுறுத்தியுள்ளார்.
விண்வெளி சம்பந்தப்பட்ட படிப்புகளான ஆஸ்ட்ரோபிசிக்ஸ் மற்றும் காஸ்மோலஜி உள்ளிட்ட படிப்புகளை இளம்தலைமுறையினர் ஆர்வமுடன் கற்க வேண்டும்.
மனித இனத்தின் இந்த தொலைதூரப் பயணமானது தவிர்க்க முடியாதது. ஏனெனில் பூமியில் பருவநிலை மாற்றம் மற்றும் இயற்கை வளங்கள் குறைந்து வருவது பூமியை அச்சுறுத்துவதாக உள்ளது.
நாம் பூமியை விட்டு கட்டாயம் செல்லவேண்டும். வேறொரு சூரியனைக் கொண்ட கிரகத்தைக் கண்டறிந்து, அங்கு சென்று வாழவேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம். மனித இனம் தொடர்ந்து வாழ வேண்டுமானால், யாருமே போகாத கிரகத்தில் நாம் சென்று வாழ வேண்டும்.
அதற்கான ஆயத்தப் பணிகளை தற்போதே தொடங்க வேண்டும். இன்னும் 30 வருடங்களில் பூமியிலிருந்து வெளியேற ஏதுவாக, லூனார் பேஸ் என்று கூறப்படும் விண்வெளி கொலனிகளை விஞ்ஞானிகள் அமைக்க வேண்டும் என சுட்டிக்காட்டிச் சென்றுள்ளார்.
கனடாவில் தமிழ் இளைஞன் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார் என அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். தமிழர்கள் செறிந்து வாழும் ஸ்காபுரோ பகுதியில் இந்த சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
யோர்க் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் 21 வயதான வினோஜன் சுதேசன் என்ற இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். Lester B. Pearson கல்லூரிக்கு அருகாமையில் நேற்றிரவு 11:55 மணியளவில் இவரது உடல் பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த மாணவனிடமிருந்து கொள்ளையடித்த பின்னர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளமை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
அருகிலுள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்ய ரொரண்டோ பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.