தமிழகத்தை சேர்ந்த பளுதூக்கும் வீரர் சதீஷ் சிவலிங்கத்தை விமான நிலையத்தில் சந்தித்த குமார் சங்ககாரா அவரை சந்தித்தது குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
2014 மற்றும் 2018-ஆம் ஆண்டு கொமன்வெல்த் விளையாட்டில் பளுதூக்கும் போட்டியில் பங்கேற்ற சதீஷ் சிவலிங்கம் தங்க பதக்கங்களை வென்று சாதனை படைத்தார். இந்நிலையில் இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்ககாரவை விமான நிலையத்தில் சந்தித்த சதீஷ் அவருடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், உங்களை சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது, சமூக வலைதளங்கள் மூலம் என்னை உங்களுக்கு தெரியும் என நீங்கள் கூறியது எனக்கு மிகவும் பிடித்திருந்தது என பதிவிட்டுள்ளார்.
சதீஷின் பதிவுக்கு மறுபதிவிட்ட சங்ககார, உங்கள் வியக்கத்தக்க சாதனைகளுக்கு பாராட்டுக்கள், உங்களின் மிக சிறந்த சாதனைகள் இனி தான் வெளிப்படும் என நினைக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவரான மஹேல ஜெயவர்த்தனவின் சொத்து மதிப்பு 4 மில்லியன் டொலர் ஆகும். இவர் 1997ம் ஆண்டு ஆகஸ்டு 26ம் திகதி அன்று இலங்கை- இந்தியா இடையே கொழும்பில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் முதன்முறையாக களமிறங்கினார்.
1998ம் ஆண்டு ஜனவரி 24ம் திகதி அன்று ஜிம்பாப்வே – இலங்கை இடையே கொழும்புவில் நடைபெற்ற போட்டியிலும், 20 ஓவர் போட்டியிலும், பின்னர் 2004ம் ஆண்டு ஆகஸ்டு 14ம் திகதி அன்று பர்கெர் ரெக்ரியேஷன் கிளப்- சிங்களஸ் போர்ட்ஸ் கிளப் இடையே கொழும்புவில் நடைபெற்ற போட்டியிலும் விளையாடினார்.
தனது சிறப்பான ஆட்டத்தில் காரணமாக அதிக விருதுகளை இவர் பெற்றுள்ளார். குறிப்பாக 2006 ஆம் ஆண்டில் சிறந்த அணித்தலைவர் விருது ஐசிசியால் வழங்கப்பட்டது. 2007 ஆம் ஆண்டில் Wisden Cricketer, 2013 ஆம் ஆண்டில் ஐசிசி spirit விருது வழங்கப்பட்டது.
2014 ஆம் ஆண்டு கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். 2012 ஆம் ஆண்டு இவருக்கு இலங்கை கிரிக்கெட் சபையால் 120,750 டொலர் ஊதியமாக வழங்கப்பட்டது.
2012 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி அணி சார்பில் 1.4 மில்லியன் டொலருக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். மீண்டும் 2015 ஆம் ஆண்டு 1.5 மில்லியன் டொலர் தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.
2016 ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் இவர் எடுக்கப்படவில்லை. இவரது வருமானம் மற்றும் தனிப்பட்ட தொழில்கள் மூலம் இவரது சொத்து மதிப்பு கணக்கிடப்பட்டுள்ளது. இவர் கொழும்பில் Seafood உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார்.
அதுமட்டுமின்றி, இவர் அதிக நிறுவனங்களின் விளம்பரதூதுவராக இருந்துள்ளார். DSI Holdings Ltd, Reebok, Mobitel குறிப்பிடத்தக்கன. இவற்றின் மூலம் இவர் ஈட்டிய சொத்து மதிப்பு 4 மில்லியன் டொலர் ஆகும்.
டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 34 ஓட்டங்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. ஐ.பி.எல்-லில் நேற்று நடந்த போட்டியில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி களமிறங்கியது. முதலில் துடுப்பாட்டம் செய்த டெல்லி அணியில் ரிஷாப் பண்ட் 38 ஓட்டங்களும், விஜய் ஷங்கர் மற்றும் ஹர்சல் படேல் தலா 36 ஓட்டங்களும் குவிக்க, 162 ஓட்டங்கள் எடுத்தது.
பின்னர் ஆடிய சென்னை அணி 6 விக்கெட் இழப்புக்கு 128 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து படுதோல்வியடைந்தது. சென்னை அணி தரப்பில் அம்பத்தி ராயுடு 50 ஓட்டங்கள் எடுத்தார்.
முன்னதாக, சென்னை அணி விக்கெட் வீழ்த்தியபோது, டோனியின் மனைவி சாக்ஷியும், சுரேஷ் ரெய்னாவின் மனைவி பிரியங்காவும் கைதட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர்.
அதேபோல், சென்னை அணி துடுப்பாட்டம் செய்த போது, ராயுடு பந்தை சிக்சருக்கு அடித்தபோது சாக்ஷியும், பிரியங்காவும் மகிழ்ச்சியுடன் ஆரவாரம் செய்துக்கொண்டிருந்தனர்.
ஆனால், ராயுடுவுக்குப் பின்னர், பில்லிங்ஸ், ரெய்னா, டோனி என ஒவ்வொருவரும் விக்கெட்டை இழக்க, இருவரும் சோகமானார்கள். அதனைத் தொடர்ந்து, கிரிக்கெட்டில் இது சகஜம் தான் என்பது போல் அவர்கள் சென்றனர்.
செல்போனில் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்ததால், வேறு பெண்களுடன் கணவர் தொடர்பு வைத்துள்ளாரோ என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கணவரை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த முயற்சித்த மனைவியை பொலிசார் கைது செய்துள்ளனர்.
கன்னியாகுமரியை சேர்ந்த சர்ஜின் – பிபிதா ஆகிய இருவரும் 2011 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில் சமீபகாலமாக சர்ஜின், அடிக்கடி செல்போனில் பேசியபடி இருந்ததாக தெரிகிறது. இதனால் வேறு பெண்ணுடன் கணவர் சர்ஜினுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் பிபிதாவுக்கு எழுந்தது. இதை அவர் சர்ஜினிடம் கேட்டதால், அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.
இதனால் நேற்று முன்தினம் இரவு சர்ஜின், பிபிதா மட்டும் வீட்டில் இருந்தனர். அப்போது, நள்ளிரவில் சர்ஜினின் வீட்டில் இருந்து அலறல் சத்தம் கேட்டது.
சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து பார்த்தனர். அங்கு வீட்டிற்குள் சர்ஜின் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்தபடியும், அவரது அருகில் ஒரு இரும்பு கம்பியுடன் பிபிதா நிற்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அப்பகுதி மக்கள் சர்ஜினை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதற்கிடையே கொலை முயற்சி சம்பவம் குறித்து அப்பகுதியினர் பொலிசிற்கு தகவல் தெரிவித்தனர்,
பொலிசாரிடம் பிபிதா கூறுகையில், காதல் கணவர் சர்ஜினுக்கு அடிக்கடி செல்போன் அழைப்புகள் வந்தன. அவரும் போனில் நீண்ட நேரம் பேசிக்கொண்டே இருந்தார்.
இதனால் அவருக்கு வேறு பெண்களுடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டது. அதுபற்றி அவரிடம் கேட்ட போது மழுப்பலாகவே பதிலளித்தார். மேலும் என்னிடம் ஒழுங்காக பேசாமல் அலட்சியப்படுத்தினார். இது எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியது.
மேலும் இதுதொடர்பாக அடிக்கடி எங்களுக்கும் தகராறு ஏற்பட்டதால், கணவர் சர்ஜினை கொன்று விட்டு நானும் தற்கொலை செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தேன்.
அதன்படி, இரும்புகம்பியால் அவரை அடித்தேன், அப்போது சத்தம் கேட்டு அருகில் இருப்பவர்கள் வந்துவிட்டார்கள் என கூறியுள்ளார். தற்போது இவரை கைது செய்துள்ள பொலிசார் சிறையில் அடைத்துள்ளனர்.
கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு தாமதத்திற்காக அறவிடப்படும் தண்டப்பணம் நீக்கப்பட்டுள்ளது.
கொழும்பு நகரில் வாகனங்களை நிறுத்தி வைக்கும்போது ஏற்படும் தாமதத்திற்காக அறவிடப்படும் தாமத தண்டப் பணம் முற்றாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர மேயர் ரோஸி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு நகரில் வாகனங்களை நிறுத்தி வைக்கும்போது ஏற்படும் தாமதத்திற்காக அநீதியான முறையில் தண்டப்பணம் அறவிடப்படுவதாக பொதுமக்களால் முறைப்பாடு செய்யப்பட்டது.
தாமதத்திற்கான தண்டப்பணம் அறிவிடும் நடைமுறை கடந்த ஜூன் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.
பொதுமக்களின் முறைப்பாட்டுக்கு அமைய அனைத்து விதமான தண்டப்பண அறவீடுகளை நிறுத்துவதாக கொழும்பு மாநகர சபை தீர்மானித்துள்ளது. இது தொடர்பான பணிப்புரையை கொழும்பு மாநகர ஆணையாளருக்கு மேயர் விடுத்துள்ளார்.
வாகன தரிப்பிட இயந்திரத்தில் பணம் செலுத்தாமைக்காக அறிவிப்படும் தண்டப் பணத்தில் 52 சதவீதமான தொகையை சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனமே ஈட்டிக்கொண்டதாக கொழும்பு நகர பிரதி ஆணையாளர் நிஹால் விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்.
அண்மையில் வெள்ளவத்தையில் தரிப்பிட இயந்திரத்திற்கு அருகில் நிறுத்தப்பட்ட வாகனத்திற்கு 30 ரூபாய் செலுத்த மறந்தமையினால் வாகனத்தின் உரிமையாளருக்கு 10120 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
வவுனியா வைரவப்புளிங்குளம் பகுதியில் அண்மையில் பெய்து வரும் மழை காரணமாக அதிகளவில் டெங்கு நுளம்புகள் பெருக்கெடுத்துள்ளதாக பூச்சியியலாளர்களினால் இனங்காணப்பட்டுள்ளதாக வவுனியா பொது சுகாதார மேற்பார்வை பரிசோதகர் க.தியாகலிங்கம் தெரிவித்தார்.
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், வவுனியாவில் அண்மைய காலங்களில் மாலை வேளைகளில் அதிகரித்துக் காணப்படும் மழையுடனான காலநிலை காரணமாக குருமன்காடு, சூசைப்பிள்ளையார்குளம், வைரவப்புளியங்குளம் ஆகிய பகுதிகளில் டெங்கு நுளம்பின் தாக்கம் அதிகரித்துக்காணப்படுவதாகவும் இதனை பூச்சியியலாளர்களினால் இனங்கண்டுள்ளதாகவும்,
இப் பகுதிகளிலுள்ளவர்கள் தமது இருப்பிடங்கள், வீடுகள், வியாபார நிலையங்கள், கல்வி நிலையங்கள் அனைத்தையும் துப்பரவு பணிகள் மேற்கொண்டு டெங்கு நுளம்பு குடம்பிகள் பெருக்கெடுக்கா வண்ணம் இருப்பிடங்களை வைத்திருக்குமாறும் அவ்வாறு துப்பரவுப்பணிகள் மேற்கொள்ளாதவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழங்குத்தாக்கல் செய்யப்பட்டவுள்ளதாகவும்,
இவ்வாறு அண்மையில் நெளுக்குளம், கந்தபுரம் பகுதிகளில் பொது சுகாதாரப்பரிசோதகர்களினால் டெங்கு நுளம்புக் குடம்பிகள் காணப்பட்ட நால்வருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொண்டு வழக்குத்தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றத்தினால் தலா மூவாயிரம் ரூபா தண்டம் அறவிடப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்தார்.
வவுனியா வாரிக்குட்டியூர் பகுதியில் இன்று (19.05.2018) அதிகாலை 12.10 மணியளவில் புதையல் தோண்ட முற்பட்ட ஜவரை பூவரசங்குளம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வவுனியா வாரிக்குட்டியூர் சங்கராபுரம் பகுதியில் புதையல் தோண்டுவதாக பூவரசங்குளம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் அங்கு புதையல் தோண்டுவதற்கு தயார் நிலையில் நின்ற வவுனியா தேக்கவத்தை, சாந்தசோலை, மதவாச்சி போன்ற பகுதிகளை சேர்ந்த 27, 29, 30, 42, 44 வயதுடைய ஐவரை பொலிஸார் கைது செய்ததுடன் அவர்களிமிருந்து புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட அலவாங்கு உட்பட பல பொருட்களை கைப்பற்றியுள்ளனர்.
அவர்களிடம் தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் விசாரணைகளின் பின்னர் மாவட்ட நீதவான் முன்னிலையில் ஆயர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
பரந்தன் பூநகரிக்கு இடைப்பட்ட பகுதியில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் உயிரிழந்துள்ளார். வடக்கு மாகாண திணைக்களத்தில் பணியாற்றும் 35 வயதான கோபாலபிள்ளை குகன் என்ற இளைஞன் உயிரிழந்துள்ளார்.
வேலணையைச் சொந்த இடமாகவும் யாழ்ப்பாணம், ஆத்திசூடி பகுதியை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். வடக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் பிக்கப் வாகனத்தின் சில்லு ஒன்று காற்றுப் போனதால் கட்டுப்பாட்டையிழந்தமையால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
வடக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவால் இன்று நடத்தப்படவுள்ள முகாமைத்துவ உதவியாளர் போட்டிப் பரீட்சைக்கான கடமைக்கு உத்தியோகத்தர்கள் பயணித்த போதே விபத்து இடம்பெற்றது.
விபத்தில் காயமடைந்த மேலும் நான்கு பேர் கிளிநொச்சி வைத்தியசாலை சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருச்சி மாவட்டத்தில் தனக்கு தெரியாமல் மகள் திருமணம் செய்துகொண்டதோடு மட்டுமல்லாமல் கர்ப்பமானதால் கோபம் கொண்ட தந்தை பெட்ரோல் ஊற்றி மகள் மற்றும் மனைவியை எரித்துள்ளார்.
பேக்கரி நடத்திவரும் சேகர்- மல்லிகா தம்பதியினருக்கு சுவாதி என்ற மகள் உள்ளார். திருச்சியில் சிறப்பு காவல் படை பொலிசில் பணியாற்றும் தங்கவேல் என்பவர் பேக்கரிக்கு அடிக்கடி வந்துபோனதன் மூலம் சுவாதிக்கும், தங்கவேலுக்கும் காதல் மலர்ந்துள்ளது,
செப்டம்பர் மாதம் 22 ம் திகதி வீட்டிற்கு தெரியாமல் முறைப்படி பதிவு திருமணம் செய்திருக்கிறார்கள்.
திருமணம் ஆனாலும் தன் தாயின் வீட்டிலே இருந்தாலும் அடிக்கடி காதல் திருமணம் செய்த கணவரை பார்க்க அடிக்கடி வெளியே சென்றுள்ளார் சுவாதி. இதன் விளைவு 8 மாத நிறைமாத கர்ப்பிணியானார்.
நடந்தவை அனைத்தையும் தனது தாயிடம் சொல்லி, எப்படியாவது தந்தையிடம் சம்மதம் வாங்கி தருமாறு சுவாதி கேட்டுள்ளார்
ஆனால், தனது கணவனிடம் சொல்வதற்கு மல்லியாக அஞ்சியுள்ளார். இதற்கிடையில் இந்த விவகாரம் தந்தைக்கு தெரிந்ததால், வீட்டில் பெரிய பிரச்சனையே வெடித்தது. இதனையடுத்து கொஞ்சநாள் பொறுமையாக இருங்கள் என கூறியுள்ளார் தந்தை.
இதற்கிடையில், வீட்டில் பிரச்சனையை பேசி விட்டேன். விரைவில் என்னுடைய பெண்ணை உங்க வீட்டிற்கு அனுப்பிவிடுகிறேன் என்று சொல்லி சுவாதியின் தாய், தன் மருமகன் வீட்டிற்கு சென்று சொல்லிவிட்டு வீடு திரும்பியிருக்கிறார்.
இவ்வளவு பிரச்சனைகள் நடந்திருக்க, தனக்கு தெரியாமல் மருமகனை பார்க்க சென்ற மனைவி மீது அதிக கோபம் கொண்ட சேகர், இருவரையும் தீ வைத்து கொளுத்திவிட தீர்மானித்துள்ளார்.
ஏற்கனவே பெட்ரோல் வாங்கி பேக்கரி முழுவதும் ஊற்றி லைட்டரை ரெடியாக கையில் வைத்துக்கொண்டார். வழக்கம் போல் தாய், மகள் இருவரும் கடைக்கு வந்திருக்கிறார்கள்.
அப்போது, லைட்டரை பற்ற வைத்ததில் இவர்கள் இருவர் மீதும் தீப்பிடித்து எரிந்துள்ளது, இவர்களை காப்பாற்றுவது போல சேகர் நாடகமாடியுள்ளார்.
அக்கம்பக்கத்தினர் மூவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் படுகாயமடைந்த சுவாதி, மல்லிகா இருவரும் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.
தீயணைப்புத்துறையினர் கடையில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். சேகருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. சிகிச்சை பலனின்றி மல்லிகா இறந்துபோனார், 8 மாத கர்ப்பிணியான மகள் சுவாதி உயிருக்கு போராடி வருகிறார்.
கைதான சேகர், நேற்று மாலை திருச்சி 5-வது ஜூடிசியல் நீதிபதி வீட்டில் நீதிபதி நாகப்பன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், தனது மருமகன் கருப்பு நிறத்தில் இருந்ததால் அவனை எனக்கு பிடிக்கவில்லை, இதனால் மகளையும், மனைவியையும் தீவைத்து எரித்தேன் என சேகர் பொலிசாரிடம் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் மனைவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவர் நிரபராதி என தீர்ப்பளிக்கப்பட்ட சில மணிநேரத்துக்கு முன்னர் கணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
புனேவை சேர்ந்தவர் ரவுட், இவர் மனைவி ராஜஸ்ரீ, தம்பதிக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் ஆன நிலையில் இருவருக்குள்ளும் அடிக்கடி சிறியளவில் சண்டை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த 2016-ஆம் ஆண்டு யூலை 11-ஆம் திகதி ராஜஸ்ரீ உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து ராஜஸ்ரீ குடும்பத்தார் ரவுட் தினமும் அடித்து கொடுமைப்படுத்தியதால் தான் அவர் தற்கொலை செய்தார் என பொலிசில் புகார் அளித்தார்கள். இதுதொடர்பாக பொலிசார் ரவுட் மீது வழக்குப்பதிவு செய்த நிலையில் நீதிமன்ற விசாரணை நடந்து வந்தது.
இவ்வழக்கின் தீர்ப்பு நேற்று வந்த நிலையில் தீர்ப்பு வருவதற்கு சில மணிநேரத்துக்கு முன்னால் வீட்டிலிருந்து வெளியில் சென்ற ரவுட் அருகிலிருந்த மலையிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதனிடையில் நீதிமன்ற தீர்ப்பில் ராஜஸ்ரீ தற்கொலை வழக்கில் ரவுட் மீது தவறில்லை என கூறப்பட்டு நீதிமன்றம் அவரை விடுவித்திருந்தது.
இதுகுறித்து பேசிய ரவுட்டின் குடும்பத்தார், ராஜஸ்ரீ தற்கொலைக்கு ரவுட் காரணமில்லை, ஆனால் பொலிசாரும் ராஜஸ்ரீயின் குடும்பத்தாரும் வேண்டுமென்றே ரவுட்டுக்கு தொல்லை கொடுத்து வந்தார்கள்.
இதன் காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறியுள்ளனர்.
ஸ்பெயின் நாட்டை சேர்ந்த 19 வயது மாணவி தனது மேற்படிப்பு செலவிற்காக கன்னித்தன்மையை ஏலத்தில் விட்டுள்ளார். Alice Hayson ஸ்பெயின் நாட்டை சேர்ந்தவர், தற்போது லத்தீன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். இவர் வானியல் தொடர்பாக படித்து வருகிறார்.
தற்போது, இவரது மேல்படிப்பை தொடர்வதற்காக பணம் தேவைப்படுகிறது. இதனால் கன்னித்தன்மையை விற்பதற்கு முடிவு செய்து ஏலத்தில் விட்டுள்ளார்.
இவர் நிர்ணயித்த தொகை 1 மில்லியன் ஆகும். நடுத்தர குடும்பத்தை சேர்ந்த எனக்கு படிப்பதற்கு பணம் இல்லை, மேலும் எனது குடும்பத்தாருக்கு உதவ வேண்டும் என நினைக்கிறேன்.
இதனால் படித்துக்கொண்டே, மொடலிங் தொழில் செய்துவருகிறேன். அப்போதுதான், என்னைப்போன்று நிறைய பெண்கள் மில்லியன் கணக்கில் தங்களது கன்னித்தன்மையை ஏலத்தில் விடுவதை பார்த்தேன்.
அதுபோன்று நாமும் செய்ய வேண்டும் என்பதற்காக, அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது பற்றி முழுமையாக அறிந்துகொண்டு, ஏலத்தில் விட முன்வந்துள்ளேன். இதுவரை 3 பேர் முன்வந்துள்ளனர். அதில் ஒருவர் இத்தாலியை சேர்ந்த தொழிதிபர் ஆவார். அவர் நிர்ணயித்துள்ள தொகை 250K பவுண்ட்ஸ். இருப்பினும், நான் எதிர்பார்த்த தொகை வரும் வரை முயற்சி செய்வேன் என கூறியுள்ளார்.
வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலை மேலும் நான்கு நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. அந்த நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், மேல், சப்ரகமுவ, ஊவா, தென் மற்றும் மத்திய மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்தின் சில பகுதிகளிலும் எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் 100 – 150 மில்லிமீற்றர் வரையிலான மழை வீழ்ச்சி பதிவாகும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, காங்கேசன்துறை முதல் மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்களில் இடியுடன்கூடிய கடும் மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
இதன்போது காற்று மணிக்கு 70 முதல் 80 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடும் என்றும், அந்தச் சந்தர்ப்பங்களில் கடல் சற்று கொந்தளிப்பாக இருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, கடற்றொழிலில் ஈடுபடுகின்றவர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றும் காலநிலை அவதான நிலையம் அறிவுறுத்தியுள்ளது.
இதேவேளை, அதிக மழை காரணமாக உடவளவை நீர்த்தேகத்தின் வான் கதவொன்று திறக்கப்பட்டுள்ளது.
இதனால், நீர்த்தேகத்தின் தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவுறுத்தியுள்ளது.
முள்ளிவாய்க்காலில் உயிர் நீர்த்தவர்களுக்கு நேற்று உலகம் முழுவதும் அஞ்சலி செலுத்தப்பட்டு வரும் வரும் நிலையில் இலங்கை அணியின் முன்னாள் வீரர் குமார் சங்கக்கார டுவிட்டரில் தெரிவித்த கருத்தானது தமிழர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
“மே 18 புனிதமான பிரதிபலிப்புக்கு ஒரு நாள், யுத்தத்தில் வாழ்க்கையை இழந்த இலங்கையர்களை நினைவுபடுத்தி பார்ப்பதற்கு. எங்கள் உள்ளத்தின் தீர்ப்புகளை சற்று விலக்கி வைத்துவிட்டு மற்றவர்களின் வலியை இதயம் திறந்து உணர்ந்து கொள்வதற்கான நாள்.
ஒருவருக் கொருவர் திறந்த மனப்பாங்குடன் இருக்க வேண்டும் அப்போதுதான் வரலாற்றில் இது திரும்பவும் நடக்காது” என முன்னாள் கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்கார டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இன்று முள்ளிவாய்க்கால் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில், தென் இலங்கையில் பல்வேறு இடங்களில் விடுதலை புலிகளுக்கு நினைவது தினம் நடப்பதாக எதிர்ப்புகளும் சர்ச்சைகளும் உருவாகியிருந்தது.
இந்நிலையில் குமார் சங்கக்காரவின் குறித்த கருத்தானது இனவாதம் பேசும் அனைத்து தரப்பினருக்கும் ஒரு படமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொலை செய்தமை தொடர்பில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட 3 பேருக்கு கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி விக்கும் களுஆராச்சி நேற்று மரண தண்டனை விதித்துள்ளார்.
2001 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5 ஆம் திகதி கொழும்பு – கிராண்ட்பாஸ் பகுதியில் ஒருவரை ஆயுதமொன்றினால் தாக்கி கொலை செய்த சம்பவம் தொடர்பான வழக்கில் அவர்கள் நீதிமன்றினால் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டனர்.
கிராண்ட்பாஸ் பிரதேசத்தைச் சேர்ந்த மூவருக்கே இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மேல்நீதிமன்ற நீதிபதி விக்கும் களுஆராச்சி நேற்று மரண தண்டனை விதித்துள்ளார்
ஜனநாயக மக்கள் முன்னணியின் அமைப்புச் செயலாளராக வி.ஜனகன் நியமிக்கப்பட்டுள்ளதாக, ஒருமித்த முற்போக்கு முன்னணியின் தலைவரும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும், தேசிய நல்லிணக்க சகவாழ்வு அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் ஊடங்களுக்கு தெரிவித்துள்ளார்.
நேற்று காலை ஜனகனுக்கான நியமனக் கடிதத்தை அமைச்சர் மனோ கணேசன் வழங்கி வைத்தார். வரவிருக்கும் முக்கிய தேர்தல்களை குறிவைத்து கட்சியின் விரிவு படுத்தல் நடவடிக்கைளை நாம் ஆரம்பித்துள்ளோம்.
அதன் முதற் கட்டமாக தேசிய ரீதியிலும்இ சர்வதேச ரீதியிலும் கட்சியினை விரிவுபடுத்தும் பொறுப்பு ஜனகனுக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் அரசியலில் ஈடுபடவேண்டும் என்ற அடிப்படையிலேயே இவருக்கான வாய்ப்பினை நான் வழங்கியுள்ளேன்.
ஜனகன் கடந்த காலங்களிலும் பல சமூக வேலைத்திட்டங்களை தமிழ் மக்களுக்கு மட்டுமன்றி இலங்கை பூராகவுமுள்ள மக்களுக்கு செய்து வந்துள்ளார்.
அவரை எனது கடசிக்குள் உள்வாங்கி, கட்சியின் உறுப்பினர்களுடன் இணைந்து கட்சியினை விரிவாக்கல் செய்து, எமது மக்கள் சேவை நடவடிக்கைளை விரிவுபடுத்தவுள்ளோம் என அமைச்சர் மனோ கணேசன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
வினையாகமூர்த்தி ஜனகன் IDM நேசன்ஸ் கம்பஸ் நிறுவனத்தின் தலைவராவார். இவர் கொழும்பு பலக்லைக்கழத்தில் முகாமைத்துவ சிறப்பு பட்டம் பெற்றவர். தனது மேற்படிப்பினை இங்கிலாந்தில் முகாமைத்துவம் மற்றும் சட்ட துறையில் பூர்த்தி செய்துள்ளார்.
வவுனியா பொது வைத்தியசாலையில் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள புதிய எக்ஸ்ரே கருவி ஒன்று பொருத்தப்பட்டு நேற்று (18.0 5) முதல் இச்சேவைகள் இடம்பெற்று வருவதாக வைத்தியசாலைப்பணிப்பாளர் வைத்தியர் கு.அகிலேந்திரன் தெரிவித்தார்
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கும்போது, கடந்த சில தினங்களாக வவுனியா பொது வைத்தியசாலையில் பாவனையிலிருந்த எக்ஸ்ரே கருவி பழுதடைந்து காணப்பட்டுள்ளது. இதனால் வவுனியா வைத்தியசாலையிலுள்ள நோயாளர்களை காவு வண்டியின் உதவியுடன் செட்டிகுளம் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று எக்ஸ்ரே எடுக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்துள்ளது.
எனினும் தற்போது எமது வைத்தியசாலைக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட புதிய எக்ஸ்ரே கருவி நேற்று பொருத்தும் பணிகள் இடம்பெற்றிருப்பதுடன் இன்று (18.05.2018) முதல் வவுனியா வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்கள் அனைவருக்கும் புதிய எக்ஸ்ரே கருவியின் உதவியுடன் சேவைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாக மேலும் தெரிவித்தார்