கணவனின் நண்பருடன் சேர்ந்து மனைவி செய்த கொடூர செயல்!!

தவறான தொடர்பு காரணமாக தனது ஆண் நண்பருடன் சேர்ந்து கணவனைக் கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவியை பொலிசார் கைது செய்தனர்.

அண்ணாநகர் கிழக்கு விஓசி காலனியை சேர்ந்த கோபி – சுமித்ரா தம்பதியினருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சம்பவம் நடைபெற்ற அன்று, வீட்டில் இறந்துகிடந்த கோபியின் உடலை கைப்பற்றிய பொலிசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

கோபி கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து பொலிசார் கோபியின் மனைவி சுமித்ராவை துருவித் துருவி விசாரித்தனர். விசாரணையின் முடிவில் சுமித்ரா கோபியை தனது நண்பருடன் சேர்ந்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

அவர் பொலிசில் அளித்துள்ள வாக்குமூலத்தில், கோபிக்கு மதுப்பழக்கம் அதிக அளவில் இருந்தது. அவரது நண்பர் கலைச்செல்வனுடன் சேர்ந்து குடித்துவிட்டு வீட்டுக்கு வருவது வழக்கம்.

இதில் கோபிக்கும், எனக்கும் உறவில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கலைச்செல்வனோடு எனக்கு தவறான உறவு ஏற்பட்டது. கோபி இல்லாத சமயங்களில் இருவரும் சந்தித்தோம். இந்த விவகாரம் கோபிக்கு தெரிந்த எங்களை கண்டித்தார்.

என்னுடன் உறவைத் தொடர வேண்டும் என்பதற்காகவே கலைச்செல்வன், கோபிக்கு அதிக அளவில் மது வாங்கில் கொடுத்து அவரை போதைக்கு அடிமையாக்கினார்.

கணவன் கோபியைக் கொன்றுவிட்டால் தடையின்றி இருவரும் வாழலாம் என்று சுமித்ரா கூற அதை செயல்படுத்தியுள்ளார் கலையரசன்.

நேற்று வழக்கம் போல் வேலை முடிந்து வந்த கோபியை மதுக்கடைக்கு அழைத்துச் சென்ற கலைச்செல்வன் அளவுக்கதிமாக மது வாங்கிக் கொடுத்துள்ளார். போதையில் வீட்டுக்கு அழைத்து வந்து படுக்கவைத்த பின் துண்டை வைத்து கோபியின் கழுத்தை இறுக்கி கலைச்செல்வன் கொலை செய்துள்ளார்.

கோபியை கொலை செய்த கலைச்செல்வன், சுமித்ரா இருவரையும் பொலிசார் கைது செய்தனர்.

ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து : 23 பேர் மாயம்!!

இந்தியாவின் ஆந்திரா மாநிலம் கோதாவரி ஆற்றில் சுற்றுலா பயணிகள் 40 பேருடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஆந்திரப்பிரதேச மாநிலம் தேவிபட்டணத்திலிருந்து கொண்டமொதலு நோக்கி நேற்று மாலை ஒரு படகு சென்று கொண்டிருந்தது.

அந்த படகில் ஒரு திருமண வீட்டார் உட்பட 40 பேர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. கோதாவரி ஆற்றில் படகு சென்று கொண்டிருந்த போது கடும் மழையுடன் காற்று வீசியுள்ளது. இதனால் படகு ஆற்றில் கவிழ்ந்தது.

படகில் பயணித்த சிலர் நீந்தி கரை திரும்பிய நிலையில், எஞ்சியவர்களை மீட்கும் பணி துரிதமாக நடந்து வருகின்றன. இதுவரை 17 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகளுடன் பேசிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு காணாமல் போனவர்களை தேடும் பணிகளை துரிதப்படுத்த வலியுறுத்தினார். விஜயவாடாவிலிருந்து இரண்டு தேசிய பேரிடர் மீட்பு படை சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளது.

இந்நிலையில், எஞ்சிய 23 பேரின் நிலைமை என்னவென்று தெரியவில்லை எனவும், அவர்களை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள குழந்தையின் மரணம் : சிக்கலில் பெற்றோர்!!

கொழும்பில் உயிரிழந்த குழந்தையின் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மர்மமான முறையில் மரணமடைந்த ஆண் குழந்தையொன்றை பிரேத பரிசோதனை மேற்கொள்ளாமல் அடக்கம் செய்ய பெற்றோர் முயன்றுள்ளனர். இதன் காரணமாக மரணத்தில் சந்தேகம் கொண்ட பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மாளிகாவத்தை – ஹிஜ்ரா மாவத்தையில் அமைந்துள்ள வீடொன்றில் இரண்டு வயது குழந்தையின் இறுதி சடங்கு நேற்று நடத்தப்படவிருந்தது.

இரத்தத்தில் சீனியின் அளவு அதிகரித்தமையினால் குறித்த குழந்தை உயிரிழந்ததாக அவரது பெற்றோர் தெரிவித்திருந்தனர்.

எனினும் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மரணமடைந்த குழந்தையின் காலில் தீக்காயம் ஏற்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

அதன்படி , நீதிமன்றத்திற்கு விடயங்களை அறிவித்ததன் பின்னர், குழந்தையின் பிரேத பரிசோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முன்முறையாக இரு கால்களையும் இழந்த நிலையில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி உலக சாதனை!!

உலகின் அதி உயரமான எவரெஸ்ட் சிகரத்தில், இரு கால்களையும் இழந்த சீனாவைச் சேர்ந்த சியா போயு என்ற 70 வயது முதியவர் ஏறி சாதனை படைத்துள்ளார்.

சீனாவைச் சேர்ந்த சியா போயு மலையேறும் வீரராவார். இவர் கடந்த 40 வருடங்களுக்கு முன்னர் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் முயற்சியில் தனது 2 கால்களையும் இழந்துள்ளார்.

70 வயதான இவர் தற்போது எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்துள்ளார். இதன் மூலம் 2 கால்கள் இல்லாமல் உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தவர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.

இந்நிலையில் , உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சியா போயுவுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

யாழில் மதுபோதையில் மோட்டார் சைக்கிள் செலுத்திய பெண்களுக்கு எற்பட்டுள்ள நிலை!!

யாழில்.மதுபோதையில் மோட்டார் சைக்கிள் செலுத்தி விபத்துக்குள்ளான இரு பெண்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த இருவரும் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ். இருபாலை பகுதியில் இருந்து யாழ் நகர் நோக்கி பயணித்த போதே இவர்கள் விபத்துக்குள்ளாகியுள்ளனர். குறித்த இரு பெண்களும் மது போதையில் இருந்துள்ளதாகவும், அவர்கள் பயணித்த மோட்டார் சைக்களில் கட்டைப்பிராய் சந்திக்கு அருகில் விபத்துக்குள்ளாகியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, விபத்துக்குள்ளானவர்களை வீதியில் சென்றவர்கள் மீட்ட போதிலும் அவர்கள் மது போதையில் நிலை தடுமாறிய நிலையில் இருந்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் இரு பெண்களையும் மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

காலநிலை தொடர்பில் பொதுமக்களுக்கு விசேட எச்சரிக்கை!!

நாட்டை சுற்றியுள்ள கடல் பிரதேசங்களில் எதிர்வரும் 20ஆம் திகதி வரை மழையுடன் கூடிய காலநிலை அதிகரிக்க கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

விசேடமாக மத்திய, சப்ரகமுவ, தெற்கு ஊடாக மற்றும் மேல் மாகாணத்தின் ஏனைய இடங்களில் 100 மில்லி மீற்றருக்கு அதிகமான மழை பெய்ய கூடும் என திணைக்களம் இன்று மாலை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டிலுள்ள ஆழ் கடல் மற்றும் ஆழமற்ற கடல் பிரதேசங்களிலும் தற்போது நிலவ கூடிய மழை நிலைமை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

விசேடமாக புத்தளத்தில் இருந்து கொழும்பு காலி மற்றும் பொத்துவில் ஊடாக மட்டக்களப்பு வரையிலான கடல் பிரதேசங்களில் மழை பெய்யக் கூடும்.

அத்துடன் இடியுடன் கூடிய மின்னல்கள் மற்றும் மணிக்கு 70 மற்றும 80 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மலைகள் மற்றும் ஏரிகளுக்கு அருகில் வாழும் மக்கள், ஆபத்து தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

நாட்டை சுற்றியுள்ள கடல் பிரதேசங்களில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் மக்கள் மழை மற்றும் மின்னல் தொடர்பிலும், காற்றினால் ஏற்படுகின்ற கடல் கொந்தளிப்பு தொடர்பில் அவதானமாக இருக்குமாறு கூறப்பட்டுள்ளது.

அத்துடன் இடி மற்றும் மின்னலின் போது பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளை பின்பற்றுமாறு பொது மக்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதற்கயை இடி மின்னலின் போது வெளியிறங்கு பகுதிகளில் அல்லது மரங்களுக்கு கீழ் நிற்க வேண்டாம் எனவும், பாதுகாப்பான கட்டடம் மற்றும் வாகனங்களுக்கு இருக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

வயல், தேயிலை தோட்டம், மைதானம் மற்றும் நீர்த்தேக்கம் போன்ற இடங்களில் அநாவசியமாக நிற்பதை தவிர்க்குமாறு பொது மக்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இடி, மின்னல் தாக்கங்களின் போது தொலைபேசி பயன்பாடுகளை தவிர்க்குமாறு மக்களை திணைக்களம் கேட்டுள்ளது.

பௌத்த பிக்குகள் 30 பேர் வைத்தியசாலையில் அனுமதி : பொலிஸார் தீவிர விசாரணை!!

உணவு விஷமாகியதன் காரணமாக பௌத்த பிக்குகள் 30 பேர் உள்ளிட்ட 46 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் கெகிராவை – பெரியகுளம் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியில் அமைந்துள்ள பிக்குகள் கல்வி கற்கும் இடத்தில் உணவு உட்கொண்ட சிலரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் மரதன்கடவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

சம்பவம் குறித்து கெகிராவை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

5 வயதில் குழந்தை பெற்றெடுத்த சிறுமி : மருத்துவ உலகின் மர்மம்!!

1938ல் பெருவில் ஆண் குழந்தையை பெற்றெடுத்த லீனா மெடினா என்பவரே உலகின் மிகக் குறைந்த வயதில் குழந்தை பெற்றெடுத்த சிறுமி ஆவார்.

தென் அமெரிக்க நாடான பெருவின் டிக்ராப்போவில் 1933 செப்டம்பர் 27ம் தேதி பிறந்தவர் லீனா. சில்வர் ஸ்மித், விக்டோரியா லோசியா தம்பதியரின் 9 குழந்தைகளில் ஒருவர்.

5 வயது சிறுமியான லீனாவின் வயிறு அசாதாரண வகையில் பெரிதாகிக் கொண்டே வந்ததை அடுத்து அவரது பெற்றோர் அவரை பிஸ்கோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

வயிற்றில் பெரிய கட்டி வளர்ந்து வருவதாக கருதிய பெற்றோருக்கு அதிர்ச்சியே காத்திருந்தது. லீனாவை சோதித்த மருத்துவர்கள் அவர் 7 மாதம் கர்ப்பமாக உள்ளதை உறுதி செய்தனர்

சிசேரியன் பிரிவில் அனுமதிக்கப்பட்ட லீனா, 1939 மே மாதம் 14ம் நாள் 6 பவுண்ட் எடையுள்ள ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். அப்போது அவர் 5 வயது 7 மாதங்கள் 21 நாட்களேயான சிறுமி.5 வயதேயான சிறுமி குழந்தை பெற்றெடுத்தது தொடர்பான செய்தி சர்வதேச மருத்துவத்துறையையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

சிறுமி கர்ப்பமான விவகாரம் தொடர்பாக அவரது தந்தை சில்வர்ஸ்மித் கைது செய்யப்பட்டு அவர் மீது விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் போதிய ஆதாரம் இல்லாததால் அவர் விடுதலை செய்யப்பட்டார்.

பின்னர் தொடர்ந்து மருத்துவ வல்லுநர்கள் குழு உள்ளிட்டவை நடத்திய விசாரணையில் லீனாவிற்கு 3 வயது முதலே மாதவிலக்கு ஏற்பட்டது தெரியவந்தது.

கருவுற்றது தெரிய வருவதற்கு ஏழரை மாதங்கள் முன்பாக லீனாவிற்கு மாதவிலக்கு ஏற்படுவது நின்றது விசாரணையில் தெரிந்தது. இவ்விவகாரத்தில் மருத்துவ வல்லுநர்கள் குறிப்பிடக்கூடிய மற்றொரு முக்கியமான விடயம் லீனாவிற்கு 5 வயதிலேயே முழு வளர்ச்சி அடைந்திருந்த மார்பகங்கள் இருந்தன என்பது.

ரால் ஜூராடோ என்பவரை இரண்டாவதாக மணந்த லீனா, 1972ல் தனது இரண்டாவது குழந்தையை பெற்றெடுத்தார். 5 வயதில் தனக்கு பிறந்த முதல் குழந்தைக்கு ஜெரார்டோ என்று லீனா பெயர் வைத்திருந்தார். ஜெரார்டோ 1979ல் தனது 40வது வயதில் காலமானார்

பல்வேறு மருத்துவக்குழுக்கள் விசாரணை செய்து, 5 வயது சிறுமி குழந்தை பெற்றது உண்மை தான் என்று உறுதிபடுத்திய போதிலும், லீனா கருவுறுவதற்கு காரணமானவர் யார் என்பது இதுவரை யாருக்கும் தெரியாத மர்மமாகவே நீடிக்கிறது.

அப்பா வயது நபரை காதலித்து திருமணம் செய்த அழகிய இளம்பெண் : சந்தித்த பிரச்சனைகள்!!

ஜோர்ஜியாவில் அப்பா வயது நபரை இளம் பெண் திருமணம் செய்த நிலையில் தம்பதியை பார்க்கும் பலரும் அவர்களை தந்தை – மகள் என்று நினைத்து விடுகிறார்கள்.

கோர்ட்னி தோர்ண்டன் (25) என்ற பெண்ணுக்கு வான் (57) என்ற நபருடன் பேஸ்புக் மூலம் நட்பு ஏற்பட்டுள்ளது.பின்னர் போன் மூலம் இருவரும் பேசிய நிலையில் நெருங்கிய நட்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கோர்ட்னி, வானை காதலிப்பதாக கூறியுள்ளார்.ஆனால் தனக்கு 57 வயதாகிறது எனவும், ஏற்கனவே திருமணமாகி நான்கு பிள்ளைகள் இருப்பதாகவும் வான் கூறியுள்ளார்.

ஆனாலும் இந்த விடயங்களால் வான் மீதான தனது உண்மை காதலை கோர்ட்னி மாற்றி கொள்ளவில்லை.இதையடுத்து கடந்த 2016-ல் தனது தந்தை வயதுடைய வானை கோர்ட்னி திருமணம் செய்து கொண்டார்.

தற்போது தம்பதிகள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள். இது குறித்து கோர்ட்னி கூறுகையில், வானின் நான்கு பிள்ளைகளில் மூவர் என்னை விட வயதில் அதிகமானவர்கள்.

ஆனாலும் நான் அவர்களுக்கு சித்தி முறை தான் என்பதை உணர்ந்திருக்கிறேன், எங்களை பொதுவெளியில் பார்க்கும் பலர் அப்பா – மகள் என நினைத்து விடுகிறார்கள், ஆனால் இதை பற்றி நான் கவலைப்படுவதில்லை. என்னை வான் நன்றாக பார்த்து கொள்கிறார், அதுவே மகிழ்ச்சியான விடயம் என கூறியுள்ளார்.

காலையில் எழுந்ததும் இதை எல்லாம் கடைபிடியுங்கள் : கண்டிப்பாக மாற்றம் வரும்!!

ஒபிசிட்டி அல்லது உடல் பருமன் மற்றும் உடல் எடை அதிகரிப்பு ஒரு பொதுவான பிரச்சனையாக மாறிவிட்டது. மேலும் இது ஒரு பெரும் உடல்நல கவலையாக மாற்றியுள்ளது.ஒபிசிட்டியை தடுப்பதனால் நாம் பல ஆபத்தான நோய்களிலிருந்து விடுபட்டு ஒரு நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை வாழமுடிகிறது.

தினமும் காலை எழுந்தவுடன் உடல் எடை குறைக்க சில நல்ல பழக்கங்களை பின்பற்ற வேண்டும்.அதிக நேரம் தூங்குவதால் நம் உடல் எடை கூடும். தினமும் ஏழு முதல் ஒன்பது மணிநேரம் தூக்கம் என்பதே ஆரோக்கியமானதாகும்.

வீட்டை விட்டு வெளியே செல்லும் முன் எப்போதும் உங்கள் காலை உணவை சாப்பிட வேண்டும்.நீங்கள் காலை உணவை தவிர்த்தால், உங்கள் எடை இழப்பு இலக்கை அடைவதில் நீங்கள் வெற்றிகரமாக செயல்படுத்த முடியாது.

ஆரோக்கியமற்ற உணவு உங்களுக்கு ஒரு மந்தமான உணர்வை ஏற்படுத்துவதோடு உடல் எடை மற்றும் கிரோனிக் டிசீஸ் ஆபத்தை அதிகரிக்கிறது.

ஆரோக்கியமான காலை உணவுகளில் சில நட்ஸ், பழங்கள், கிரீன் டீ, கீன்வா, ஸ்மூத்திஸ், தூய தயிர் ஆகியவை அடங்கும்.பேன்கேக்ஸ், டோனட்ஸ், பாஸ்டரிஸ், பேக்கேஜட் ஜூஸ், இனிப்பு சார்ந்த உணவு ஆகியவற்றிலிருந்து விலகி இருக்கவும்.

காலை எழுந்ந்தவுடன் வீட்டிற்கு உள்ளேயே இல்லாமல் வெளியில் சென்று காலை வெயிலை ரசிக்க வேண்டும். காலை வெயில் உடல் எடை குறைப்பிற்கு உதவும்.

நீங்கள் காலை எழுந்தவுடன் கோப்பி அல்லது டீ குடிக்கும் முன்பு ஒரு கிளாஸ் தண்ணீர் அல்லது லெமன் வாட்டர் குடிக்க வேண்டும்.தண்ணீர் உட்கொள்ளல் உங்கள் உடலில் சரியான வெப்பநிலை மற்றும் ஊட்டச்சத்தை சமநிலைப்படுத்த உதவுகிறது.

இது செரிமானத்திற்கும் உதவுகிறது. மேலும், தண்ணீர் விரைவாக வயிற்றை நிரப்புவதால், காலை உணவு அதிகமாக சாப்பிடுவதை தடுக்கிறது.காலையில் உடற்பயிற்சி செய்வது உடல் எடையை குறைக்க ஓர் நல்ல வழி.

உங்கள் உடற்பயிற்சியை தொடங்குவதற்கு முன்பு, உங்கள் எடையைக் கண்காணிக்க வேண்டும். தினமும் காலை தங்கள் எடையை கண்காணிப்பது மூலம் நம்மால் எளிதில் எடையை குறைக்க முடியும்.

பிரபல தொலைக்காட்சியில் டிடி அடித்த கூத்து : சர்ச்சையை கிளப்பும் புகைப்படங்கள்!!

 

விஜய் டிவி யின் செல்லப்பிள்ளை திவ்யதர்ஷினி தொகுத்து வழங்கும் ரியாலிட்டி ஷோ தற்போது மிகவும் பிரபலமாகிவருகிறது.அந்தளவு தனது திறமையால் நிகழ்ச்சியையே கலகலப்பூட்டுபவர்.

திருமணம் செய்து பின்னர் கசந்து போனதால் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றுக்கொண்டு மீண்டும் சின்னத்திரையில் கலக்கத்தொடங்கி விட்டார் என்று தான் சொல்லவேண்டும்.

தனது உடலழகை மேலும் மெருகேற்றி, புதுப்பொலிவுடன் விஜய் டிவியில் ஷோ ஹோஸ்ட் பண்ணி வருகிறார். சமீபத்தில் இடம்பெற்ற ஒரு நிகழ்ச்சியில் திவ்யதர்ஷினியை விஜய் டிவி தொகுப்பாளர் ரியோ தூக்கி இடுப்பில் வைத்து பாடலுக்கு ஆடும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.

69 வருடங்களாக இலவசமாக மக்களுக்கு தண்ணீர் வழங்கும் 85 வயது மூதாட்டியின் சாதனை!!

பெரிய பேனர், திரும்பும் திசையெங்கும் கட்-அவுட் எனத் தாங்கள் செய்யும் சமுதாய சேவை மூலமாக விளம்பரம் தேடுபவர்களுக்கு மத்தியில், எந்தச் சத்தமுமின்றி ஒரு நதிபோல போகிறபோக்கில் சேவை செய்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படி, சென்னையில் ஒரு பாட்டி, 69 ஆண்டுகளாகத் தன்னைத் தேடிவருபவர்களுக்கு இலவசமாகத் தண்ணீர் தருகிறார்.

நெரிசலுக்கும் பஞ்சம் இல்லாத சென்னை சிந்தாதரிப்பேட்டையின் ஒரு தெருவில், கண்களுக்கும் மனதுக்கும் குளிர்ச்சியான அந்தக் காட்சியைப் பார்க்கமுடிந்தது. 85 வயதின் சுருக்கங்களை உடலில் தாங்கிய அந்தப் பாட்டி, வரிசையில் நின்றிருந்தவர்களுக்கு மண்பானையிலிருந்து தண்ணீரை எடுத்துக் கொடுத்துக்கொண்டிருந்தார்.

யாரும் பானையில் கை விடாதீங்க. நானே எடுத்து தர்றேன். எல்லாரும் குடிக்கிற தண்ணீ, அப்புறம் அழுக்காயிரும்’ என்று தழுதழுத்த குரலில் சொல்லிக்கொண்டிருந்தவரிடம், பாட்டி, நாங்கள் பத்திரிகையிலிருந்து வந்திருக்கோம்” என்றோம்.

எங்கிருந்து வந்தாலும் தண்ணீ தருவேன். அதனால, இடத்தையெல்லாம் சொல்ல வேணாம்” என்றபடி, ஒரு டம்ளர் தண்ணீரை நம்மிடம் நீட்டுகிறார். முதுமையால் நடுங்கும் அந்தக் கைகளில் கருணை தளும்புகிறது. பத்திரிகை, பேட்டி என்கிற விஷயத்தைப் புரியவைத்ததும், மெல்லிய புன்னகையுடன் பேசுகிறார் அஞ்சலை பாட்டி.

தண்ணியைக் காசுக்கு விக்கிறது பாவம். எத்தனை டம்ளரானாலும் இலவசமாத்தான் கொடுப்பேன். 69 வருஷமா இதை செஞ்சுட்டிருக்கேன். ஏப்ரல் வந்திருச்சுன்னா தண்ணீர்ப் பந்தல் போட்டுருவேன். எனக்கு உலகமே இந்தச் சிந்தாதிரிப்பேட்டைதான். இந்த இடத்தைவிட்டு வெளியே போனதில்லை. இங்கே இருக்கிறவங்க என்னை, `அம்மா’, `பாட்டினு ஏதோ ஓர் உறவு முறையைச் சொல்லி கூப்பிடுவாங்க.

இதைவிட பெரிய சந்தோசம் என்ன வேணும்? என்னால் காசு பணம் கொடுத்து மத்தவங்களுக்கு உதவ முடியாது. அதனால, என்ன முடியுதோ அதைப் பண்றேன். காலையில் நாலு மணிக்கெல்லாம் எழுந்து தண்ணீர் பிடிக்கும் பானை, டிரம், தம்ளர்கள் எல்லாத்தையும் சாம்பல் போட்டு சுத்தமா விளக்கிருவேன்.

எங்க வீட்டிலிருந்து அரை கிலோமீட்டர் தூரம் இருக்கிற ஒரு வீட்டுக்குப் போய் அடி பம்பில் தண்ணீர் அடிச்சு, 6 மணிக்கெல்லாம் இந்தத் தண்ணீர்ப் பந்தலில் வந்து உட்கார்ந்துருவேன். சாயந்திரம் 4 மணிவரை தண்ணீர் கொடுத்துட்டிருப்பேன். எத்தனை பேர் வந்தாலும் இல்லைன்னு சொன்னதில்லை. தண்ணீர் தீர்ந்துப்போச்சுன்னா, யாரையாவது இங்கே உட்காரவெச்சுட்டு மதியம் 20 குடம் தண்ணீர் எடுத்துவிட்டு வந்துருவேன்.

இந்த வயசான காலத்துல வெயிலில் ஏன் இப்படி கஷ்டப்படறே?’னு என் பொண்ணு நிறைய தடவை சண்டை போட்டிருக்கு. அதையெல்லாம் நான் காதுலயே வாங்கிக்க மாட்டேன். தண்ணீரைத் தூக்கிச் சுமக்கும்போது கை கால் வலியெடுக்கும். ஆனால், தாகத்தோடு வந்து என்கிட்ட தண்ணீயை வாங்கிக் குடிக்கிறவங்க முகத்தில் ஒரு திருப்தியைப் பார்த்ததும், வலியெல்லாம் காணாமல் போயிடும்” என்கிற அஞ்சலை பாட்டியின் குரலில் தாய்மையைத் தரிசிக்க முடிகிறது.

ஒவ்வொரு வருஷமும் தண்ணீரை கொடுக்க தேவையான பொருள்களை நான் தண்ணீர் பிடிக்கிற வீட்டின் கெளதம் தம்பி வாங்கிக்கொடுப்பார். இந்த 4 மாசத்துக்கு எனக்குத் தேவையான அன்றாட செலவையும் அவரே பார்த்துப்பார். வயித்துக்குச் சாப்பாடு கிடைச்சுடுது.

அப்புறம் என்ன வேண்டிக்கிடைக்கு. நான் உயிரோடு இருக்கிற வரை ஒவ்வொரு வருஷமும் ஏப்ரல் மாசத்திலிருந்து ஜூன் வரைக்கும் இலவசமா தண்ணீர் கொடுத்துட்டுதான் இருப்பேன். இதுதான் எனக்குச் சந்தோசமும்” என்கிறார் அஞ்சலை பாட்டி.

-விகடன்-

மெரினாவில் குளித்த 2 மாணவர்கள் கடல் அலையில் சிக்கி பலி : சடலங்களை தேடும் பணி தீவிரம்!!

சென்னையில் கடலில் குளித்த இரு மாணவர்கள் உயிர் இழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆவடி அடுத்த பட்டாபிராம் கக்கன்ஜி நகர் பகுதியை சேர்ந்தவர் முரளி. கேபிள் டிவி ஆபரேட்டர். இவரது மகன் நிவாஸ் தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளான்.

இந்நிலையில் நிவாஷ், தனது நண்பன் இம்ரான் உட்பட 7 பேருடன் இன்று மெரினா கடற்கரைக்கு சென்றுள்ளனர். அங்கு 7 பேரும் கடலில் குளித்து கொண்டு இருந்தபோது திடீரென எழும்பிய கடலலை நிவாஷ் மற்றும் இம்ரானை இழுத்து சென்றது.

இதையடுத்து உடன் இருந்த நண்பர்கள் உடனடியாக காவல்துறை மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த அவர்கள், உயிரிழந்த இரு மாணவர்களின் சடலங்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நாளை பிளஸ் 2 தேர்வு வெளியாக உள்ளநிலையில் மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அன்று பணக்கார ஆசிரியர் : இன்று தெருவில் பிச்சைக்காரர் : பரிதாப சம்பவம்!!

மத்திய பிரதேசத்தில் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றியவர் தெருவில் பிச்சைக்காரராக கிடந்துள்ளது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசத்தில் போபாலில் பிளாட்பாரத்தில் முதியவர் ஒருவர் மயங்கிக் கிடந்தார். முதியவர் மீது இரக்கப்பட்ட ஒருவர், தன்னுடைய செல்போனில் வீடியோ எடுத்து, அதை வாட்ஸ்அப் பில் பதிவிட்டுள்ளார்.

அந்த வட்ஸ் அப் வீடியோ பல குரூப்களுக்கு ஷேர் செய்யப்பட்டது. இந்தச் சமயத்தில் முதியவரின் வீடியோவைப் பார்த்த ஒருவர் அதிர்ச்சியடைந்தார். வீடியோவில் இருக்கும் முதியவர், தனக்கு இயற்பியல் பாடம் கற்றுக்கொடுத்த ஆசிரியர் விஜய் சோபி என்று அடையாளம் கண்டார்.

உடனடியாக தன்னுடைய பள்ளி நண்பர்களுக்கு அந்த வீடியோவை ஷேர் செய்தார். அதோடு ஆசிரியரை மீட்கும் நடவடிக்கையில் நண்பர்களுடன் ஈடுபட்டார்.

பிளாட்பாரத்திலிருந்த ஆசிரியர் விஜய் சோபியை மீட்டு காப்பகத்தில் சேர்த்தனர். இதுகுறித்து விஜய் சோபியிடம் கல்வி கற்ற மாணவர்கள் கூறுகையில், “ஆசிரியர் விஜய் சோபி, 1990 ல் நாலந்தா பள்ளியில் பணியாற்றினார். வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். போபால் நகரில் உள்ள கதார் சாலை பிளாட்பாரத்தில் பிச்சைக்காரர் போல மயங்கிக் கிடந்துள்ளார்.

அந்த வீடியோவைப் பார்த்து அவரை மீட்டுள்ளோம். விரைவில் அவரின் குடும்பத்தினருடன் சேர்த்துவிடுவோம் என கூறியுள்ளார்.

அவமானம் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்ட ஜோடி : விசாரணையில் வெளியான தகவல்!!

தமிழகத்தில் கள்ளக்காதல் விவகாரம் வெளியே தெரிந்தால், அவமானமாகிவிடும் என்று தென்னந்தோப்பில் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளம் அடுத்த வடுகபட்டியில் ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது. வழக்கம் போல் தென்னந்தோப்புக்கு சென்ற அவர், தோட்டத்தின் மோட்டார் அறையில் ஆண் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையிலும், பெண் ஒருவர் தரையிலும் சடலமாக கிடந்திருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

அதன் பின் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் விசாரணை மேற்கொண்டதில், தற்கொலை செய்து கொண்ட ஜோடியின் பெயர் சங்கனமுத்து-தேவி என்பது தெரியவந்துள்ளது.

பெரியகுளம் அருகே வடுகப்பட்டி சேடப்பட்டியை சேர்ந்தவர் சங்கனமுத்து. இவருக்கு திருமணம் ஆகி 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், குடும்பத்துடன் திருப்பூரில் தங்கி அப்பகுதியில் உள்ள கார் ஷோரூம்பில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்துள்ளார்.

அதே கம்பெனியில் திண்டுக்கல் சின்னாள்பட்டியைச் சேர்ந்த தேவி(32) என்பவரும் வேலை பார்த்து வந்துள்ளனர். முதலில் நண்பர்களாக இருந்த இவர்களின் நட்பு நாளைடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.

இதனால் இருவரும் பல்வேறு இடங்களுக்கு காதல் ஜோடியினர் தனிமையில் சென்றுள்னனர். இந்த விவகாரம் கம்பெனி உரிமையாளர் மற்றும் ஊழியர்களுக்கு தெரிய வந்ததால், இருவரையும் உரிமையாளர் வேலையை விட்டு நிறுத்தியுள்ளார்.

இதனால் மனமுடைந்த இந்த ஜோடி பெரியகுளம் அருகே வடுகபட்டி- தாமரைக்குளம் சாலையில் உள்ள தென்னந் தோப்பிற்கு சென்றுள்ளனர்.

அதன் பின் கள்ளக்காதல் விவகாரம் வெளியே தெரிந்ததால் அவமானம் அடைந்த இரண்டுபேரும் தோப்பில் இருந்த மோட்டார் ரூம்பில் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

அம்பானி மகனுடன் இருக்கும் பெண் யார்? அடுத்தடுத்து களைகட்டும் கொண்டாட்டங்கள்!!

இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானி ஆண்டலியா பங்காளாவில் அடுத்தடுத்த திருமண கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளது.

முகேஷ் – நீதா தம்பதியினருக்கு ஆகாஷ், இஷா, ஆனந்த் என 3 பிள்ளைகள் உள்ளனர். இதில், இரட்டையர்களான ஆகாஷ் தனது பள்ளி தோழியான ஸ்லோகா என்பவரை திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார். ஸ்லோகா வைரவியாபாரியின் மகள் ஆவார். இஷா அம்பானிக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் தான், தொழிலதிபர் ஆனந்த் ப்ரமோலுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

ஆகாஷ் மற்றும் இஷாவின் திருமணம் டிசம்பர் மாதம் நடைபெறவிருக்கிறது. இந்நிலையில், 3வது மகனான ஆனந்த் அம்பானி ஒரு பெண்ணுடன் இருக்கும் புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Radhika Merchant என்ற பெண்ணுடன் ஆனந்த் அம்பானி இருக்கும் புகைப்படம Hello magazine- இல் வெளியாகியுள்ளது. இவர், ஆனந்த் அம்பானியின் தோழி என கூறப்படுகிறது. ஆனால் இவர் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகாத நிலையில், இப்பெண் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

தற்போது இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெறவிருப்பதாகவும், டிசம்பர் மாதம் அம்பானி வீட்டில் 3 பிள்ளைகளுக்கும் திருமணம் நடைபெறவிருப்பதாக கூறப்படுகிறது.