ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மருமகன் வெசாக் போயான தினத்தை முன்னிட்டு பிரம்மாண்ட தன்சல் ஒன்றை வழங்கியுள்ளார்.
ஜனாதிபதியின் சகோதரரான அரலிய வர்த்தக உரிமையாளர் டட்லி சிறிசேனவின் ஆலோசனைக்கமைய பொலன்னறுவையில் இந்த தன்சல் வழங்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மக்களுக்கு இங்கு உணவு வழங்கப்பட்டுள்ளது.
மிகவும் தரமான உணவுகளுடன் மிகவும் சுத்தமான முறையில் இந்த உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த உணவு தன்சலுக்கு அருகில் சம்பா அரிசி மூட்டைகள் பாரிய அளவில் பயன்படுத்தி வெசாக் வலையமைப்பு ஒன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
எந்தவித வசூலிப்பு பணமும் பெறாமல் சிறிசேன குடும்ப உறுப்பினர்களால் மக்களுக்கு தன்சல் வழங்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
மாதம்ப பகுதியில் மகள் ஒருவரினால் தாய் மன ரீதியாக துன்புறுத்தப்பட்ட மோசமான சம்பவம் இடம்பெற்றுள்ளது. வெசாக் தினத்தன்று தனது மகளின் வீட்டிற்கு சென்ற தாயை துரத்திவிட்டு தனது குடும்பத்துடன் வெசாக் பார்க்க மகள் சென்றுள்ளார்.
ஆனமடுவ பிரதேசத்தில் உள்ள வறுமையான கிராமத்தில் வாழும் இந்த வயோதிப தாய் தனது மகள் மற்றும் பேரக்குழந்தைகளை பார்ப்பதற்காக மாதம்பேயில் உள்ள மகளின் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்த சந்தர்ப்பத்தில் மகளினால் தாய் விட்டை விட்டு துரத்தப்பட்டுள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தில் பாதிக்கப்பட்ட இந்த தாய் சந்தித்த அனுபவத்தை கண்ணீருடன் தெரிவித்துள்ளார். “எனது கணவர் உயிரிழந்து விட்டார். எனக்கு 6 பிள்ளைகள் உள்ளனர். ஒரு மகன் கடந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
நான் மகள் மற்றும் பேரப்பிள்ளையை பார்ப்பதற்காக மாதம்ப பிரதேசத்தில் உள்ள வீட்டிற்கு சென்றேன். என்னை வீட்டிற்குள் மகள் அழைக்கவில்லை. உங்களுக்கு உணவு வழங்கி பார்த்துக் கொள்ள வேண்டும் என்றால் வீட்டையும் காணியையும் விற்று பணம் கொண்டு வருமாறு மகள் கோரியுள்ளார்.
நான் வசிக்கும் வீட்டையும் இடத்தையும் விற்பனை செய்து பணம் தருமாறு மகள் தொடர்ந்து எனக்கு தொந்தரவு செய்கின்றார். அன்றும் என்னை திட்டினார். தொண்டை வறண்ட நிலையில் இருந்தேன். எனினும் குடிப்பதற்கு ஒரு துளி நீர் தரவில்லை. பின்னர் மகளும் மருமகனும் தங்கள் பிள்ளைகளுடன் லொரி ஒன்றில் வெசாக் பார்க்க சென்று விட்டனர். அதுவரையில் நான் கடுமையான பசியில் இருந்தேன். அருகில் உள்ள வீட்டிற்கு சென்று சம்பவத்தை கூறினேன். அந்த வீட்டில் உள்ளவர் எனக்கு வயிறு நிறைய உணவு வழங்கினார்.
என்னை எந்த பிள்ளைகளும் பார்ப்பதில்லை. நான் கீரை விற்று பணம் தேடி சாப்பிடுகின்றேன். எனது மகளும் மருமகனும் சூதாட்டத்தில் ஈடுபடுகின்றனர். நான் வீட்டை வித்து கொடுத்தாலும் சூதாடுவதற்கே பயன்படுத்துவார்கள். நான் வாழும் வரை அந்த வீட்டை விற்பனை செய்து பணம் வழங்க மாட்டேன். நான் மரணித்த பின்னர் விரும்பியதை செய்யட்டும். வேலை செய்யும் அளவு எனது உடலில் சக்தி இல்லை என வயோதிப தாய் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க குழந்தையாக மாறி அன்பை வெளிப்படுத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
மே தினத்தை முன்னிட்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொழிற்சங்கங்கள் தலைவர்களை நினைவுகூறும் நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நேற்று இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வில் காலம் சென்ற பாரத லக்ஷ்மன் பிரேமசந்திரிவை நினைவு கூரும் நிகழ்வும் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பாரத லக்ஷ்மன் பிரேமசந்திரிவின் மகள் ஹிருணிக்கா தனது குழந்தையுடன் வருகைத்தந்திருந்தார்.
ஹிருணிக்காவின் குழந்தையுடன் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க குழந்தையாக மாறி விளையாடும் புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
இலங்கையில் குற்றவாளி கூண்டில் ஏறி குற்றத்தை ஒப்புக் கொண்ட இளம் பெண் சட்டத்தரணி தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது. பேலியகொட பொலிஸ் சட்டத்தரணி சுகந்திக பெர்னாண்டோ என்பவருக்கு எதிராக கொழும்பு போக்குவரத்து நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
எனினும் அவர் அந்த வழக்கு விசாரணையின் போது குற்றத்தை ஏற்றுக் கொண்டமையினால் அவரை எச்சரித்து விடுவிப்பதற்கு கொழும்பு நீதிமன்ற நீதவான் சந்தன கலங்சூரிய உத்தரவிட்டுள்ளார்.
அதிவேக நெடுஞ்சாலையில் மணிக்கு 117 கிலோ மீற்றர் வேகத்தில் வாகனம் செலுத்தியதாக பேலியகொட பொலிஸாரினால் சட்டத்தரணிக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணையின் போது சட்டத்தரணிக்கு உதவியாக ஒருவரும் இல்லாமையினால் குற்றவாளி கூண்டில் ஏறி அவர் குற்றச்சாட்டை ஏற்றுகொண்டுள்ளார்.
இவ்வாறான சிறு வழக்கு ஒன்றுக்காக சட்டத்தரணி ஒருவர் குற்றவாளி கூண்டில் ஏறுவது மிகவும் குறைவு. இந்நிலையில் குறித்த பெண் தனது குற்றத்தை ஏற்றுக்கொண்டு குற்றவாளி கூண்டில் ஏறியமை குறித்து அதிகம் பேசப்பட்டு வருகிறது.
இலங்கையை பூர்வீகமாக கொண்ட பிரபல பாடகி மாதங்கி மாயா அருள்பிரகாசத்தை லண்டனில் இருந்து கனடா செல்ல அனுமதிக்கப்படவில்லை என குறிப்பிடப்படுகின்றது.
ஆவணப்படம் ஒன்றை திரையிடுவதற்கு கனடா செல்லச் சென்ற மாயாவை விமானத்தில் ஏற அனுமதிக்கப்படவில்லை என பிரித்தானிய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் 42 வயதான மாயா தனது Instagram வலைத்தளத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு தான் கனடா செல்ல விமானத்தில் அனுமதிக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார். தனது புதிய படத்தைப் பற்றி பாராட்டி பேசுவதை நிறுத்தும் முயற்சியில் ‘மர்மமான நபர் ஒருவர் ஈடுபட்டுள்ளார் என மாயா குறிப்பிட்டுள்ளார்.
“பொறாமை ஒரு பயங்கரமான விடயம்” என குறிப்பிட்டவர் ஆவணப்படம் ஒன்றை திரையிடுவதற்காக தான் கனடா செல்ல முயற்சித்த போது லண்டன் விமான நிலையத்தில் தன்னை விமானத்தில் பயணிக்க அனுமதிக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
2017ஆம் ஆண்டு ஒரு பிரச்சினைக்குரிய விடயத்தில் எனது பெயரை மர்மமான நபர் ஒருவர் முத்திரையிட்டுள்ளார்.
அது யார் என யாருக்கும் தெரியவில்லை அல்லது எதனுடன் தொடர்புடையவர் என்றும் தெரியவில்லை. கனடா மற்றும் அமெரிக்காவிலும் எனது ஆவணப்படம் குறித்த பேச கூடாதென நினைக்கின்ற அந்த சக்திவாய்ந்த நபர் யாரென தெரியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன் பின்னர் மனிதாபிமானத்துடைய சிறந்த குடியேற்ற வழக்கறிஞர் யார்? என மாயா தனது டுவிட்டர் பக்கத்தில் வினவியுள்ளார்.
அவர் தயாரித்துள்ள இந்த ஆவணப்படத்திற்கு ஜனவரி மாதம் அவர் விருதுகளையும் வென்றுள்ளார். முழுமையாக அந்த படம் மூலம் தனது இசைப்பயணத்திற்கு ஒரு சிறப்பான பாதை உருவாகும் என எண்ணிய மாயாவுக்கு தற்போது பாரிய ஏமாற்றம் ஒன்று ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2018 மே தினத்தை கொண்டாடுவதற்காக 2018 மே மாதம் 7 ஆம் திகதி திங்கட்கிழமை அரச வங்கி விடுமுறை தினமாகும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. தேசிய வெசாக் வாரம் 2018 ஏப்ரல் மாதம் 26ஆம் திகதி முதல் 2018 மே மாதம் 2ஆம் திகதி வரை இடம்பெறும் நிலையில் உலகத்தொழிலாளர் தினம் 2018 மே மாதம் 1ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.
அன்றைய தினம் இடம்பெற்றுள்ள அரச மற்றும் வங்கி விடுமுறைதினம் இரத்து செய்யப்பட்டு அதற்கு பதிலாக 2018 மே தினத்தை கொண்டாடுவதற்காக 2018 மே மாதம் 7 ஆம் திகதி திங்கட்கிழமை அரச மற்றும் வங்கி விடுமுறையாக வேண்டும் .
1971ஆம் ஆண்டு இலக்கம் 29இன் கீழான விடுமுறை சட்டத்தின் 10 (1)(ஆ) சரத்து மற்றும் 11 (1)(ஆ) சரத்திற்கு அமைவாக தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைவாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபயவர்த்தனவினால் 2018 ஏப்ரல் 6ஆம் திகதி வர்த்தமானி மூலம் இதற்கான அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த பிரகடனத்திற்கு அமைவாக உலக தொழிலாளர் தினத்தை கொண்டாடுவதற்கு 2018 மேமாதம் 1 அதாவது நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றிருந்த அரச மற்றும் வங்கி விடுமுறை இரத்தாகின்றது.
இதற்கு பதிலாக 2018 ஆம் ஆண்டு மே தினத்தை கொண்டாடுவதற்காக எதிர்வரும் 7ஆம் திகதி திங்கட்கிழமை அரச மற்றும் வங்கி விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து தொழில்கொள்வோரும் தமக்கு உட்பட்ட ஊழியர்களுக்கு தொழிலாளர்களுக்கும் 1971 இலக்கம் 29 என்ற விடுமுறை சட்டத்தின் கீழ் உள்ள அரசாங்கத்தின் விடுமுறை நாளுக்கான சம்பளத்துடன் விடுமுறை தினம் என்ற ரீதியில் வழங்கவேண்டும்.
மே தினம் இதில் ஒரு விடுமுறைதினமாகும். அத்தோடு இதனால் மேலே குறிப்பிடப்பட்ட மாற்றம் வர்த்தக விடுமுறைக்கும் பொருத்தமானதாகும்.
அமெரிக்காவில் உடலில் அம்பு பாய்ந்த நிலையில் மான்கள் சுற்றித் திரிவதால், இந்த செயலை செய்தவர்களை பொலிசார் தேடி வருகின்றனர்.
அமெரிக்காவின் Oregon பகுதி பொலிஸ் அதிகாரிகள் சமீபத்தில் சமூகவலைத்தளமான பேஸ்புக் பக்கத்தில் மான் தொடர்பான புகைப்படங்களை பதிவேற்றம் செய்து இந்த செயல்களை செய்த நபர்கள் குறித்து தகவல் தெரிவித்தால் 2,600 டொலர் பரிசாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதாவது, southwest Oregon பகுதியில் இரண்டு மான்கள் தங்கள் உடல்களில் அம்புகள் பாய்ந்த நிலையில் தடுமாறி நடந்து சென்றுள்ளன. இதைக் கண்ட வனவிலங்கு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்து உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
பாதிப்புக்குள்ளாகியிருக்கும் மான்களை பிடித்து அதற்கு உரிய சிகிச்சை அளிப்பதற்கு அதிகாரிகள் முயன்ற போதிலும் ஒரு மானை மட்டும் பிடித்து சிகிச்சை அளித்துவிட்டதாகவும், மற்றொரு மானை பிடிக்க முடியாமல் தவித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதனால் மான்களுக்கு உயிர் போகும் அளவிற்கு பாதிப்புகள் இல்லை எனவும், இந்த இரக்கமற்ற செயலை செய்த நபர் நிச்சயமாக தண்டிக்கப்பட வேண்டும் என்று பலரும் கூறி வருகின்றனர்.
பிரான்சில் போராட்டக்காரர்கள் வன்முறையில் இறங்கியதால் இருநூறுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் அரசு முறைப் பயணமாக அவுஸ்திரேலியா சென்றுள்ளார்.
இந்நிலையில் மேக்ரான் மீதான அதிருப்தியை வெளிகாட்ட Far-left anarchist குழுவினைச் சேர்ந்த 1200-க்கும் மேற்பட்டோர் திங்கட்கிழமை முகமூடியுடன் தலைநகர் பாரீசில் போராட்டம் நடத்தினர்.
அதாவது மேக்ரான் வேலைவாய்ப்பை அதிகரிக்க தொழிலாளர் ஒழுங்குமுறை சட்டத்தில் மாற்றம் கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் இந்த போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.
இந்த போராட்டத்தின் போது போராட்டக்காரர்கள் அங்கிருந்த கடைகளின் ஜன்னல்களை உடைத்துள்ளனர். அதுமட்டுமின்றி அங்கிருந்த மெக்டோனால்ட்ஸ் உணவகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசியதால் அந்த கடை முற்றிலும் நாசமாகியுள்ளது. அருகிலிருந்த கடைகளிலும் தீ பரவியுள்ளது.
இதைத் தொடர்ந்து சாலையில் இருந்த கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் மீதும் தீ பரவியதால், பொலிசார் போராட்டக்காரர்களை கலைப்பதற்கு கண்ணீர் புகைகுண்டு வீசியுள்ளனர்.
அப்போது பொலிசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 200 பேரை பொலிசார் கைது செய்துள்ளதாகவும், அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் பொலிசார் திணறி வருவதாகவும் கூறப்படுகிறது.
உத்திரபிரதேசத்தில் தலித் நபரை கட்டி வைத்து சிறுநீரை குடிக்க வைத்து கொடுமை செய்த 4 நபர்கள் மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தலித் இனத்தை சேர்ந்த சித்தாராம் என்பவர் தனக்கு சொந்தமான சிறிய நிலத்தில் கோதுமை பயிர் செய்துவந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியில் வசித்து வந்த உயர்ந்த சாதி பிரிவினர், தங்களது நிலத்தில் உள்ள கோதுமையை முதலில் அறுவடை செய்து விற்பனை செய்ய வேண்டும்.
அதுவரை நீ பொறுத்திருக்க வேண்டும் என சித்தராமிடம் கூறியுள்ளனர். ஆனால் இதற்கு சித்தாராம் மறுத்துவிட்டார். இதனைத்தொடர்ந்து நான்கு பேர் சேர்ந்து, சித்தாராமை மரத்தில் கட்டி வைத்து, அடித்து கொடுமைபடுத்தியதோடு மட்டுமல்லாமல் சிறுநீரை குடிக்க வைத்துள்ளனர்.
மேலும், இதுகுறித்து வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவோம் என மிரட்டியுள்ளனர். ஆனால் சித்தாராமின் மனைவி இதுகுறித்து பொலிசில் புகார் அளித்துள்ளார்.
Vijay Singh, Vikram Singh, Sompal Singh மற்றும் Pinku ஆகிய 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் நான்கு பேரும் தலைமறைவாகியுள்ளதால், அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளோம் என பொலிசார் கூறியுள்ளனர்.
கேரளாவின் திருவனந்தபுரத்தில் முண்டமாக தொங்கவிடப்பட்டிருந்த வெளிநாட்டு பெண்ணின் கொலை தொடர்பில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
லட்வியா நாட்டை சேர்ந்தவர் லிகா, இவர் தனது கணவர் மற்றும் சகோதரியுடன் கடந்த பிப்ரவரி மாதம் சிகிச்சைக்காக கேரளா வந்துள்ளார். இங்கு கடந்த மார்ச் மாதம் 14ம் திகதி காணாமல் போயுள்ளார், லிகா குறித்து குடும்பத்தினர் அளித்த தகவலின்படி பொலிசார் வலைவீசி தேடி வந்தனர்.
இந்நிலையில் கிட்டத்தட்ட ஒரு மாதங்கள் கழித்து கடந்த வாரம் திருவனந்தபுரத்தில் இளம்பெண்ணின் சடலம் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்தது. இது லிகா தான் என அவரது சகோதரி உறுதி செய்த நிலையில், டிஎன்ஏ பரிசோதனை செய்ய பொலிசார் முடிவெடுத்திருந்தனர்.
இந்நிலையில் லிகா கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.
மேலும் கை, கழுத்து உட்பட உடலின் பல பகுதிகளில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பதாகவும், மூச்சுத்திணறி இருப்பதும் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து சிறப்பு விசாரணைக் குழுவினர் கூறுகையில், லிகாவின் மரணம் தொடர்பில் ஒன்பது பேரை கைது செய்து விசாரித்து வருகிறோம்.
இதில் யோகா பயிற்சியாளரும் சம்மந்தப்பட்டுள்ளார், இவருடன் உள்ளூர் போதை மருந்து கும்பலுக்கும் தொடர்பிருப்பதாக தெரிகிறது.
ஏனெனில் போதை மருந்து கும்பலில் இருவர் உட்பட யோகா பயிற்சியாளரையும் அப்பகுதியில் பார்த்ததாக உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர்.
இதனை தொடர்ந்து அவர்கள் மூவரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர். அத்துடன் மூவரும் லிகா படகில் தோப்பு பகுதிக்கு அழைத்து சென்றிருக்கலாம் என்றும், பாலியல் ரீதியாக துன்புறுத்த முயன்ற போது அவர் இறந்திருக்கலாம் எனவும் பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
ஏனெனில் அப்பகுதிக்கு அருகே நின்றிருந்த படகில் லிகாவின் தலைமுடி இருந்ததற்கான அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அக்கும்பலிடம் பொலிசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்தியாவில் இளம் பெண் ஒருவர் இந்த சாமியை நீ கும்பிடக் கூடாது என்று கூறி கோவிலிருந்து விரட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி மாநிலம் மண்ணாடிப்பட்டு கொம்யூன் கீழ் கூனிச்சம்பட்டி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் காலனிப் பகுதியைச் சேர்ந்தவர் ராதா. கோவிலில் அம்மனை தரிசிக்க சென்ற பெண்ணுக்கு நடந்த கொடுமை!!இவர் கடந்த ஞாயிற்றுக் கிழமை அங்கிருக்கும் உள்ள திரௌபதி அம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றுள்ளார். அப்போது அங்கிருந்தவர்கள் ராதா பட்டியலின் மக்கள் வசிக்கும் பகுதியைச் சேர்ந்தவர் என்று கூறி கோவிலுக்குள் வரக் கூடாது என்று மிரட்டியுள்ளனர்.
ஆனால் அவரோ, அங்கிருந்து செல்ல மறுத்ததுடன் அந்த சாமி வந்து சொல்லட்டும் என்ற கூறினார். உடனே ஊர் பெரியவர்கள் உங்கள் கோவிலுக்கு நாங்கள் வருகிறோமா, உங்கள் கோவிலுக்குப் சென்று சாமி கும்பிடு போ என்று கூறியுள்ளனர்.
அதற்கு அந்த பெண் கோவிலில் உங்கள் கோவில், எங்கள் கோவில் என்று பாகப் பிரிவினை கிடையாது. சாமியை எங்கு வேண்டுமானாலும் கும்பிடலாம் என்று அவர்களிடம் வாதாடிய போது, அவர்கள் அதை காதில் வாங்கிக் கொள்ளாமல் குறித்த பெண்ணை மிரட்டியும், அடிக்கவும் முயற்சி செய்கின்றனர். இது குறித்து வீடியோ தற்போது சமூகவலைத் தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இது குறித்து அங்கிருப்பவர்கள் கூறுகையில், சம்பவ தினத்தன்று கோவிலில் திரௌபதி அம்மனுக்கு விசேஷ பூஜை நடைபெற்று கொண்டிருந்தது. அந்த வழியே சென்று கொண்டிருந்த ராதா பூஜை நடந்துகொண்டிருக்கிறதே அம்மனை தரிசிக்கலாம் என்று கோவிலுக்குள் சென்ற போது தான் இது நடந்துள்ளது என்று கூறியுள்ளனர்.
மகளை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட பெண்ணைப் பற்றி முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. புதுவை வைத்திக்குப்பம் கெங்கையம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் சுஜித்ரா(27). கேரளாவைச் சேர்ந்தவரான இவர் சுரேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்திருந்தார்.
இவர்களுக்கு நிவேதா(10) என்ற மகள் உள்ளார். இந்நிலையில் சுரேஷிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சில ஆண்டுகளுக்கு முன்பு இவர் பிரிந்து சென்று, குயிலாபாளையத்தை சேர்ந்த கார் டிரைவர் பிரபாகரனுடன் பழக்கம் ஏற்பட்டதால், அவருடன் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த ஆண்டு தன்னுடைய 2-வது கணவரான பிரபாகரனும் கார் விபத்தில் பலியானதால் இவர் மிகவும் கவலையில் இருந்துள்ளார்.
இதன் காரணமாக பிரல ஹோட்டலில் வரவேற்பாளராக பணியாற்றி வந்த வேலையில் இருந்தும் நின்றுள்ளார். காதல் கணவர் பிரிந்து விட்ட நிலையில், இரண்டாவது கணவரும் இறந்ததால் மிகவும் விரக்தியில் இருந்த சுஜித்ரா தற்கொலை முடிவை எடுத்துள்ளார்.
தான் மட்டும் தற்கொலை செய்து கொண்டால் மகளை யாரும் பார்க்கமாட்டார்கள் என்று கருதி மகளையும் கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.
இதனால் உடல்நிலை சரியில்லை எனக்கூறி குளுக்கோஸ் வாங்கி அதில் அதிக தூக்க மாத்திரைகளை கொடுத்து மகளை கொலை செய்துள்ளார். இதைத் தொடர்ந்து அவரும் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டதோடு, தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நீண்டநேரமாக அவரது வீட்டுக் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து திறந்து பார்த்த போது மகள் மற்றும் தாய் இறந்துகிடப்பதை பார்த்து அவர்கள் அதிர்ச்சியடைந்து பொலிசாருக்கு தெரிவித்துள்ளனர்.
சென்னையில் ரோபோட் உணவகத்தில் பணியாளர்களுக்கு ஏற்பட்ட பிரச்சனையில் ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை செம்மஞ்சேரியில் அமைந்துள்ள ரோபோட் உணவகத்திலேயே நேற்று முன்தினம் இக்கொடூர சம்பவம் நடந்துள்ளது. ரோபோட் உணவகத்தில் வாடிக்கையாளர்களுக்கு உணவுகள், ரோபோ மூலம் சப்ளை செய்யப்படும்.
இந்த உணவகத்தில் வட இந்தியாவை சேர்ந்த அனில் குரு மற்றும் யுனஸ் என்பவர்கள் வேலை செய்து வந்தனர். நேற்றிரவு சர்வீஸ் செய்யும் போது உணவு மாறியதால், வாடிக்கையாளர் சண்டையிட்டு சென்றுள்ளார்.
இதனால் யுனஸ் மற்றும் அனில் குரு வாக்குவாதம் செய்ய சண்டை முற்றியுள்ளது. இதில் கோபமடைந்த அனில் குரு, அருகிலிருந்த சமையலறை கத்தியை கொண்டு யுனஸை குத்தியுள்ளார்.
படுகாயமடைந்த யுனஸ் துடிதுடிக்க இறந்துள்ளார், உடனடியாக செம்மஞ்சரி பொலிசுக்கு தகவல் அளிக்க விரைந்து வந்த அதிகாரிகள் யுனஸின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
உணவகத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆதாரமாக கொண்டு அனில் குருவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இருவருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்ததும் தெரியவந்துள்ளது.
கேரளாவில் திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாத காரணத்தால் மனைவியை பெட்ரோல் ஊற்றி கொலை செய்த கணவனை பொலிசார் கைது செய்துள்ளனர்.
விராஜ்- ஜித்துவுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது, ஆனால் குழந்தை இல்லாத காரணத்தால், இவர்கள் இருவருக்குள்ளும் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்தது, இதனால் விராஜ் விவாகரத்து கோரியுள்ளார்.
இந்நிலையில் சம்பவம் நடைபெற்ற அன்று Changallur- இல் வறுமை ஒழிப்பு மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் திட்டம் தொடர்பாக நடைபெற்ற கலந்தாய்வில் ஜித்து தனது தந்தையுடன் கலந்துகொண்டார்.
கலந்தாய்வு நடந்துகொண்டிருக்கையில், யாரும் எதிர்பாராத நிலையில் திடீரென உள்ளே நுழைந்த விராஜ், ஜித்துவின் உடலில் பெட்ரேல் ஊற்ற தீவைத்து எரித்துள்ளார்.
இதில், உடலில் தீப்பிடித்த ஜித்து கலந்தாய்வு அரங்கத்தில் அலறியடித்து ஓடியுள்ளார், இதனையடுத்து தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜித்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கலந்தாய்வில் இருந்த யாரும் எனது மகளை காப்பாற்ற முன்வரவில்லை என ஜித்துவின் தந்தை கண்ணீருடன் கூறியுள்ளார், தற்போது கணவர் விராஜை பொலிசார் கைது செய்துள்ளனர்.
தமிழகத்தில் பள்ளி மாணவியை காதலித்தால் ஆசியர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி பேரூராட்சி தாயப்பர் தெருவை சேர்ந்தவர் சதீஷ் (33). திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான இவர் அதே பள்ளியில் ஆசிரியாராக பணிபுரிந்து வந்துள்ளார்.
அப்போது அதே பள்ளியில் அவரிடம் பயின்ற மாணவி ஒருவரை இவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இது குறித்து பள்ளியில் முறையிட்டதால், பள்ளி நிர்வாகம் அவரை மூன்று மாதங்களுக்கு முன்பு பள்ளியிலிருந்து நீக்கியுள்ளது.
தற்போது அப்பெண் பள்ளி படிப்பை முடித்துவிட்டதால், அவர் சென்னையில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். கல்லூரியில் படித்து வந்த நிலையிலும், அவர் மாணவியிடம் தொடர்ந்து பேசியதால், மாணவியின் பெற்றோர் கண்டித்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த ஞாயிறு ஊர் திருவிழாவை முன்னிட்டு சதீஷ் ஏரிக்கோடி என்ற ஊருக்கு வந்துள்ளார். அங்கு நண்பர்களுடன் இசை நிகழ்ச்சியை கண்டுகளித்துள்ளார்.
பின்பு, இரவு 11 மணியளவில், ஏரிக்கரை சேவைச் சாலையில் தனியாக சென்றுகொண்டிருந்தபோது, பின் தொடர்ந்த அடையாளம் தெரியாத நபர்கள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.
பின்பு தங்களிடமிருந்த கத்தியால் சரமாரியாக சதீஷை குத்தியுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே சதீஷ் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து அவரின் உடலை கைப்பற்றிய போலீஸார் திருப்பத்தூர் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் சதீஷை கொலை செய்த அடையாளம் தெரியாத நபர்களை தேடி வருகின்றனர்.
தமிழகத்தில் உடலில் பத்து இடங்களில் பெரிய கட்டிகள் இருப்பதால், அவர் வீட்டை விட்டு வெளியேற தயங்குவதாக கூறியுள்ளார். தர்மபுரி மாவட்டம் Podarankadu கிராமத்தைச் சேர்ந்தவர் Palanisami. 42 வயதான இவர் தன் உடலில் 18 கிலே எடை கொண்ட கட்டிகளால் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்.
பிறக்கும் போது நல்ல உடல் நலத்துடன் பிறந்த இவருக்கு, 12 வயதாகும் போது சிறிய அளவிலான கட்டி முதலில் கழுத்தில் வந்துள்ளது. அதன் பின் நான்கு கட்டிகள் கைகளிலும், ஐந்து கட்டிகள் உடலின் முக்கிய பகுதிகளிலும் வளர்ந்துள்ளது.
இதனால் உடனடியாக தர்மபுரியில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவரின் இரத்த மாதிரிகளை மருத்துவர்கள் பரிசோதித்துள்ளனர்.
அதுமட்டுமின்றி எக்ஸ்ரே போன்றவைகளும் எடுத்து பார்க்கப்பட்டுள்ளது. குழப்பமடைந்த மருத்துவர்கள் இந்த கட்டிகளை எடுக்க முடியாது, இதனால் உடலிற்கு தீங்கு இல்லை என்று கூறியுள்ளனர்.
இது குறித்து அவரின் மூத்த சகோதரர் கூறுகையில், 12 வயது வரை நன்றாகத் தான் இருந்தான். அதன் பின் திடீரென்று சிறிதாக இருந்த கட்டிகள் நாளைடைவில் அவன் வாழ்க்கையே மாற்றும் அளவிற்கு இப்படி வளரும் என்று எதிர்பார்க்கவில்லை.
எங்கள் அப்பா மருத்துவமனைக்கு எல்லாம் அழைத்துச் சென்றார். அங்கு மருத்துவர்கள் கட்டிகளை நீக்க வேண்டும் என்றால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று சொன்னார்கள், அறுவை சிகிச்சையின் போது உயிர் போவதற்கு கூட வாய்ப்பு இருப்பதாக கூறினர்.
நாங்கள் இருப்பதோ மலைப் பகுதியில் எங்களின் அன்றாட வாழ்க்கையை ஓட்டுவதே சிரமமாக உள்ள நிலையில், வெகுதூரம் சென்று இவருக்காக சிகிச்சை செலவுகள் செய்ய போதிய பணம் இல்லை, அதுமட்டுமின்றி இதை நாளைடைவில் நாங்கள் கண்டு கொள்ளவும் இல்லை என கூறியுள்ளார்.
மேலும் இந்த நோயின் தாக்கம் காரணமாக அவருக்கு வீட்டை விட்டு வெளியில் வர பிடிக்கவில்லை என்றும் கடந்த 32-ஆண்டுகளாக இந்த நோயின் பாதிப்பில் அவதிப்பட்டு வரும் இவருக்கு யாரேனும் உதவினால் அறுவை சிகிச்சை மூலம் பலன் கிடைக்கலாம் என்று உறவினர்கள் கூறியுள்ளனர்.