உலகின் மிகவும் ஆபத்தான பொருள் இலங்கையில் சிக்கியது!!

உலகின் மிக ஆபத்தான போதைப்பொருள் ஒன்று இலங்கையில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிலெக் மென்டி எனப்படும் இந்த போதை பொருளுடன் வெளிநாட்டவர் உள்ளிட்ட மூன்று பேர், சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தலங்கம பிரதேசத்தில் இடம்பெற்ற சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர்கள் போதை பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். பிலெக் மென்டி போதைப்பொருள் இலங்கையில் கண்டுபிடித்த முதல் சந்தர்ப்பம் இதுவாக கருதப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர் அவுதிரேலியாவை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. அவரிடம் இருந்து 82 கிராம் பிலெக் மென்டி போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. அதன் பெறுமதி 12 இலட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய நாட்டவர் இந்த போதைப்பொருளை தனது உள்ளாடையில் மறைத்து கொண்டு வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட இலங்கையரிடம் இருந்து 240 கிராம் ஹஷிஸ் போதைப்பொருள் கண்டுபிடித்துள்ளதாக சுங்க திணைக்களம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் நேர்முகத் தேர்வுக்கு மணப்பெண் கோலத்துடன் சென்ற பெண்!!

பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு நேர்முகத் தேர்வுக்கு மணப்பெண் ஒருவர் சமூகமளித்துள்ளார். இந்தச் சம்பவம் மாத்தறையில் நடந்துள்ளது.

மாத்தறை மாவட்டம் கெட்டவலகமவில் வசிக்கும் பட்டதாரியான கே.ஆர். அமாலி ப்ரியதர்ஷன ஜயரத்ன என்பவர் மணப் பெண் கோலத்துடன், மணமுடித்த கணவருடன் நேர்முகத் தேர்வுக்குச் சமூகமளித்துள்ளார்.

மணமகனின் வீட்டிற்கு புதுத் தம்பதிகளை வரவேற்கும் வைபவத்திற்கு கலந்து கொள்ளும் நாளில் குறித்த பெண்ணுக்கு நேர்முகத் தேர்வு இடம்பெற்றுள்ளது. இந்த நிலையிலேயே மணப்பெண் கோலத்துடன், நேர்முகத் தேர்வுக்குச் சென்றார் என்று கூறப்படுகிறது.

தடம்புரண்ட புகையிரதம் : புகையிரத சேவைகள் பாதிப்பு!!

 

பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இரவுநேர தபால் புகையிரதம் ஒன்று தடம் புரண்டதன் காரணமாக மலையக புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

நாவலப்பிட்டி மற்றும் உலப்பனை ஆகிய புகையிரத நிலையங்களுக்கு இடையில் பல்லேகம எனும் பகுதியில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் குறித்த புகையிரதம் தடம் புரண்டுள்ளதாக நாவலப்பிட்டி புகையிரத அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து குறித்த புகையிரதத்தில் பயணித்த பயணிகளையும், கொண்டு செல்லப்பட்ட கடிதங்களையும் வேறொரு புகையிரதத்தில் மாற்றி அனுப்பியுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், புகையிரத பாதைகளை சீரமைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து மலையக புகையிரத சேவைகள் பாதிப்பில்லாமல் தொடரும் எனவும் புகையிரத கட்டுப்பாட்டு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இலங்கையில் முதன்முறையாக நடந்த வித்தியாசமான சத்திர சிகிச்சை!!

 

இலங்கையில் முதல் முறையாக 3D கமரா பயன்படுத்தப்பட்டு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தைரொய்ட் கட்டி ஒன்றை நீக்கும் சத்திரசிகிச்சை ஒன்று கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நேற்று மேற்கொள்ளப்பட்டது.

தொண்டை, காது, மூக்கு தொடர்பான விசேட வைத்தியர் ரிஸ்னி சகாப் உட்பட வைத்திய குழுவினால் இந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பண்டாரவளை பிரதேசத்தை சேர்ந்த 42 வயதான பெண் ஒருவருக்கே இந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வாயில் கமரா ஒன்றை நுழைத்து, ஒரு வெட்டும் போடாமல் இந்த சத்திரசிகிச்சை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 3D கமரா தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறான தொழில்நுட்பத்தின் கீழ் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட முதலாவது சத்திரசிகிச்சை இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச இளம் விஞ்ஞானிகளுக்கான போட்டி : இலங்கைக்கு மூன்று தங்கப்பதக்கம்!!

சர்வதேச இளம் விஞ்ஞானிகளுக்கான போட்டியில் இலங்கை மூன்று தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளது. 25வது தடவையாக இந்தப் போட்டி சமீபத்தில் சேர்பியாவின் தலைநகர் பெல்கிரேட் நகரில் நடைபெற்றது.

இலங்கையின் சார்பில் கொழும்பு ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க வித்தியாலயத்தைச் சேர்ந்த சமாஷி விஹங்க முனவீர, கண்டி பெண்கள் உயர்தரப் பாடசாலையைச் சேர்ந்த சவந்தி சேனாநாயக்க, கொழும்பு நாலந்தா கல்லூரியைச் சேர்ந்த ரகிந்து விக்ரமரத்ன ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

இவர்கள் மூவரும் ஆராய்ச்சிக் கட்டுரைகள், சுவரொட்டிகள் ஆகிய பிரிவுகளில் போட்டியில் கலந்து கொண்டார்கள். சுவரொட்டிப் பிரிவில் மூவருக்கும் தங்கப்பதக்கம் கிடைத்தது.

இளம் விஞ்ஞானிகளுக்கான போட்டியில் ரஷ்யா, ஜேர்மன், நெதர்லாந்து, இந்தியா, பிரான்ஸ், பிரேசில், இந்தோனேஷியா முதலான நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் கலந்து கொண்டார்கள். இதில் 215 ஆராய்ச்சிக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்தும் வீழ்ச்சிப் போக்கில் ரூபாவின் பெறுமதி!!

இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்று வியாழக்கிழமையும் வீழ்ச்சிப்போக்கையே காட்டியது. இது தொடர்ச்சியாக கடந்த இரண்டு வாரக்காலமாக ஏற்பட்டு வரும் வீழ்ச்சியாக மாறியுள்ளது.

இதன்படி நேற்று ரூபாவின் பெறுமதி 157 ரூபா 75 சதமாக இருந்தது. இது நேற்று முன்தினத்தைக்காட்டிலும் 15 சத வீழ்ச்சியாக பதிவானது.

இதன்படி ரூபாவின் பெறுமதி இந்த வாரத்தில் 0.9 வீத வீழ்ச்சியாகவும், இந்த மாதத்தில் 1.4 வீத வீழ்ச்சியாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜெயலலிதா வழக்கில் திடீர் திருப்பம்!!

ஜெயலலிதாவின் இரத்த மாதிரிகள் உள்ளதா? என்பது குறித்து உயர் நீதிமன்றம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்த நிலையில், அப்போலோ மருத்துவமனை அளித்த அறிக்கையால் ஜெயலலிதாவின் மகள் என உரிமை கோரும் வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மகள் நான் தான் என உரிமை கோரி பெங்களூரைச் சேர்ந்த அம்ருதா என்ற இளம் பெண் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், ‘ஜெயலலிதாவின் உடலை எங்களது குல வழக்கப்படி இறுதிச் சடங்குகளை செய்து அடக்கம் செய்ய வேண்டும். எனவே அவரது உடலைத் தோண்டியெடுத்து சம்பிரதாயப்படி அடக்கம் செய்ய அனுமதியளிக்க வேண்டும். மேலும் நான் தான் ஜெயலலிதாவின் மகள் என்பதை நிரூபிக்க மரபணு சோதனை நடத்த உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கை ஏற்றுக் கொள்ளக்கூடாது என ஜெயலலிதாவின் உறவினர்களான தீபா மற்றும் தீபக் ஆகியோரும் இந்த வழக்கில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். அரசுத் தரப்பும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு நேற்று நீதிபதி வைத்தியநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கில் இனி இணைப்பு மனுக்களை ஏற்றுக்கொள்ள மாட்டேன். நாளைக்குள் அப்போலோ நிர்வாகத்திடம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இரத்த மாதிரிகள் உள்ளதா? என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில் இந்த வழக்கில் அப்போலோ மருத்துவமனை உயர் நீதிமன்ற உத்தரவை ஏற்று அறிக்கை தாக்கல் செய்தது. அப்போலோ மருத்துவமனை சார்பில் அதன் சட்டப்பிரிவு மேலாளர் மோகன் அறிக்கையை தாக்கல் செய்தார்.

அவரது அறிக்கையில், கடந்த 2016-ம் ஆண்டு செப்.22 முதல் டிசெ.5 வரை 75 நாள்கள் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிறப்பு மருத்துவக் குழு தீவிர சிகிச்சைப் பிரிவு மருத்துவர்கள் இதய நோய் சுவாச சிகிச்சை, கிருமி தொற்று நிபுணர்கள், சர்க்கரை நோய் சிகிச்சை நிபுணர்கள் சிகிச்சை வழங்கினர்.

சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் இருந்து உணவு துறை பிசியோதரபி நிபுணர்கள் ஆலோசனை வழங்கினார்.

அவர் இறந்த பிறகு டிசெம்பர் 7-ம் தேதி மருத்துவ சிகிச்சை ஆவணங்கள் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டன.அவரிடமிருந்து எடுக்கப்பட்ட உயிரி மாதிரிகள் அனைத்தும் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட போதே பயன்படுத்தப்பட்டு விட்டன.

மேலும் இரத்தம் மற்றும் சிறுநீரக மாதிரிகளை ஒராண்டுக்கு மேல் பாதுகாத்து வைக்க முடியாது. தற்போது அப்போலோவிடம் ஜெயலலிதாவின் உயிரி மாதிரி எதுவும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஜெயலலிதாவின் வாரிசு என அறிவிக்கக் கோரும் அம்ருதாவின் வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.[review]

பாடசாலை செல்ல மறுத்த சிறுமி : தந்தை செய்த கொடூரம்!!

சீனாவில் பாடசாலை செல்ல மறுத்த சிறுமியை அவரது தந்தை தனது இருசக்கர வாகனத்தின் பின்னால் கட்டி வைத்து அழைத்து சென்ற காட்சிகள் வைரலாகியுள்ளது. தந்தையின் இருசக்கர வாகனத்தின் பின்னால் பிணைக்கப்பட்ட சிறுமியின் கால்கள் ஆபத்தான முறையில் தொங்கியபடியே சென்றது.

சமூக வலைதளங்களில் வைரலான இந்த வீடியோவை அடுத்து குறித்த நபரை கைது செய்த பொலிசார் எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட பொலிசாரிடம் அந்த நபர், தமது மகளை பாடசாலைக்கு அனுப்புவதே மிகவும் கடினமான பணியாக உள்ளது. தினமும் அவளுடன் மல்லுக்கட்டியே பாடசாலைக்கு அழைத்துச் செல்ல வேண்டியுள்ளது.

சில நாட்களில் அவளை கட்டாயப்படுத்தி இழுத்துச் சென்றால் தான் உரிய நேரத்தில் பாடசாலை செல்ல முடியும். அதுபோன்றே சம்பவத்தன்று அடம் பிடித்த அவளை இருசக்கரவாகனத்தில் கட்டிவைத்து பாடசாலைக்கு அழைத்துச் செல்ல நேர்ந்தது என தெரிவித்துள்ளார்.

தந்தைக்கு விஷம் கொடுத்து கொன்ற மகள் : வசமாக சிக்கியது எப்படி?

தமிழகத்தில் தகாத உறவை கண்டித்த தந்தையை மகளே விஷம் வைத்து கொன்ற சம்பவம் நடந்துள்ளது. ராமநாதபுரம் சிக்கல் பகுதியை சேர்ந்தவர் கருப்பையா(வயது 52), ஆரோக்கியமாக இருந்த கருப்பையா இரு நாட்களுக்கு முன் திடீரென காலமானார்.

இதனால் இவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக கருதிய குடும்பத்தினர் பொலிசுக்கு தகவல் அளித்தனர். எனவே கருப்பையாவின் உடலை பிரேத பரிசோதனை செய்ய பொலிசார் முடிவெடுத்தனர்.

இதில் கருப்பையாவின் உடலில் விஷம் இருந்தது தெரியவந்தது, இதனையடுத்து வீட்டில் உள்ளவர்களிடம் பொலிசார் விசாரணையை துரிதப்படுத்தினர். அப்போது, தகாத உறவை கண்டித்ததால் கருப்பையாவின் மகளான முருகேஸ்வரி விஷம் வைத்து கொன்றது தெரியவந்தது.
இதனையடுத்து முருகேஸ்வரியை கைது செய்த பொலிசார் சிறையில் அடைத்தனர்.

ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை உள்ள நிலையில், வேறொரு நபருடன் பழக்கம் ஏற்பட்டதாகவும், இதை தெரிந்து கொண்ட கருப்பையா பலமுறை கண்டித்ததாகவும், இதனால் கோபத்தில் அவரை கொன்று விட்டதாகவும் பொலிசிடம் தெரிவித்துள்ளார். முருகேஸ்வரியின் கணவர் வெளியூரில் வேலை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இறப்புக்கு கூட யாரும் வரவில்லை கண்ணீருடன் எம்எஸ் ராஜேஸ்வரியின் மகன்!!

புகழ்பெற்ற பாடகி எம்எஸ் ராஜேஸ்வரிக்கு திரைத்துறையினர் அஞ்சலி செலுத்தாதது வருத்தமளிப்பதாக அவரது மகன் ராஜ் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.

குழந்தைகளில் குரலில் பாடும் அசாத்திய திறமை கொண்ட பாடகி எம்எஸ் ராஜேஸ்வரி உடல்நலக்குறைவால் நேற்று முன்தினம் காலமானார். இவருக்கு வயது 85, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் உட்பட தென்னிந்திய மொழிகளில் 500க்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய பெருமைக்கு உரியவர்.

1960 தொடங்கி 1990 வரை கொஞ்சும் மழலைக்குரலில் பாடல்களை பாடி அனைவரையும் கவர்ந்தவர். இவருக்கு கற்பகவள்ளி, ஆர்த்தி என்ற இரண்டு மகள்களும், ராஜ் வெங்கடேஷ் என்ற மகனும் உள்ளனர், இதில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே ஆர்த்தி மரணமடைந்து விட்டார்.

இந்நிலையில் சென்னை குரோம்பேட்டையில் உள்ள மகள் வீட்டில் வசித்து வந்த ராஜேஸ்வரி, நேற்று முன்தினம் பிற்பகல் 1.30 மணியளவில் காலமானார்.

நேற்று மாலை இறுதிச்சடங்குகள் நடைபெற்ற நிலையில், திரைத்துறையில் இருந்து தங்களை யாரும் தொடர்பு கொள்ளவில்லை என அவரது மகன் ராஜ் வெங்கடேஷ் வருத்தத்துடன் கூறியுள்ளார்.

மேலும் அவர், எங்கள் குடும்பத்தை விட திரைத்துறை மீது அம்மா அளவு கடந்த பாசம் வைத்திருந்தார், தென்னிந்திய நடிகர் சங்கம் மற்றும் டப்பிங் சங்கத்திலும் உறுப்பினராக இருக்கிறார்.

அம்மாவின் இறப்பு, இறுதிச்சடங்கு குறித்து அறிவித்த போதும் யாரும் எங்களை தொடர்பு கொள்ளாதது வருத்தமளிக்கிறது, யாராவது அஞ்சலி செலுத்த வருவார்கள் என காத்துக் கொண்டிருக்கிறேன், அப்போது அவரது ஆன்மா சாந்தி அடையும் என தெரிவித்துள்ளார்.

சர்ச்சைகளுக்கு மத்தியிலும் முன்பு இல்லாத அளவிற்கு உயரும் பேஸ்புக்கின் வருமானம்!!

சமூக வலைதளமான பேஸ்புக் தற்போது சர்ச்சைகளில் சிக்கியுள்ள நிலையில், முன்பு இல்லாத அளவிற்கு அதன் வருமானம் உயர்ந்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைதளங்களில் மிகப்பிரலமான பேஸ்புக், உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனாளர்களை கொண்டுள்ளது. இதன் காரணமாக கிடைக்கும் விளம்பரங்கள் மூலமாக, பில்லியன் டொலர் கணக்கில் வருவாயை ஈட்டி வருகிறது.

ஆனால், சமீபத்தில் பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்ட விடயம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனை பேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கர்பெர்க்கும் ஒப்புக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, பேஸ்புக் நிறுவனத்தின் மீதான நம்பகத்தன்மையில் கேள்வி எழுந்தது. இந்நிலையில், பேஸ்புக்கின் வருவாய் எந்த விதத்திலும் பாதிக்கவில்லை என்று தெரிய வந்துள்ளது.

தற்போது பேஸ்புக் நிறுவனத்தின் காலாண்டு வருமானம் 49 சதவிதம் அதிகரித்து, 12 பில்லியன் அமெரிக்க டொலராக உள்ளது. இதன் மூலம் அந்நிறுவனம் பெற்றுள்ள நிகர லாபம் 65 சதவிதம் அளவுக்கு அதிகரித்துள்ளது.

இது முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ள வருமானம் ஆகும். இதுகுறித்து பேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கர்பெர்க் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பல்வேறு முக்கிய சவால்களை கடந்து, நமது நிறுவனம் 2018ஆம் ஆண்டு வலுவான துவக்கத்தை பெற்றுள்ளது’ என தெரிவித்துள்ளது.

மூளைச்சாவு அடைந்த சிறுவனின் தற்போதைய நிலை : நெகிழ வைக்கும் உண்மைச் சம்பவம்!!

 

இரண்டு ஆண்டுகளுக்குமுன் பைக் விபத்தொன்றில் தூக்கி வீசப்பட்டு மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்களால் கைவிடப்பட்ட Taylor Reid என்னும் சிறுவன் மீண்டும் புன்னகைக்க தொடங்கியிருக்கும் அற்புதம் பிரித்தானியாவில் நடந்தேறியுள்ளது.

அவன் பிழைக்க மாட்டான் என்று கூறி மூன்று முறை அவனது செயற்கை சுவாசக் கருவிகளை அகற்றிவிடுமாறு மருத்துவர்கள் ஆலோசனை கூறினர்.  ஆனால் மனம் தளராத Taylor Reidஇன் பெற்றோர் அவனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர், ஏராளமான பொருட்செலவில் அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

Dr Goshi என்னும் மருத்துவர் அவனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்தார், ஆச்சரிய விதமாக Taylorஇன் உடல் நலத்தில் முன்னேற்றம் காணப்படுகிறது.

அவன் இப்போது புன்னகைக்கிறான், அழுகிறான், கண்களைத் திறக்கிறான், இவை மூன்றையும் அவனால் செய்ய முடியாது என்று மருத்துவர்கள் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஐந்து வயது முதலே சிறுவர்களுக்கான பைக் ரேஸில் கலந்து கொள்வது Taylorஇன் வழக்கம். அவ்வாறு பைக் ரேஸ் ஒன்றில் போட்டியிடும்போது அவன் பைக்கிலிருந்து தூக்கி வீசப்பட்டான், அவனது மண்டையோட்டில் பல இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

மருத்துவர்கள் கைவிட்டும் மனம் தளராமல் Taylorஇன் பெற்றோரும் Dr Goshiயும் எடுத்துக்கொண்ட முயற்சிகளின் விளைவாக அவன் இப்போது முன்னேறி வருகிறான். அவனை stem cell therapyக்காக இந்தியாவுக்கு கொண்டு செல்ல இருப்பதாக அவனது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

35 வயதிற்கு மேலான ஆண்கள் : கட்டாயம் படிக்கவும்!!

பெண்களை விட ஆண்கள் தான் விரைவில் பல ஆரோக்கிய பிரச்சனைகளால் அவஸ்தைப்படுவார்கள். அதற்கு ஆண்கள் இளமைக் காலத்தில் கண்ட உணவுகளை உட்கொள்வது, அதிகப்படியான வேலைப்பளு போன்றவற்றை காரணமாக கூறலாம்.

அதனால் ஆண்கள் அதிக மன அழுத்தத்திற்கு உட்பட்டு, விரைவில் உயிருக்கே ஆபத்தை உண்டாக்கும் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளால் கஷ்டப்பட நேரிடுகிறது.

எனவே ஆண்களுக்கு வயது அதிகரிக்க ஆரம்பிக்கும் போது ஆரோக்கியமான வாழ்க்கை முறையையும், உணவுப் பழக்கத்தையும் பின்பற்ற வேண்டியது மிகவும் அவசியம்.

35 வயதிற்கு மேலான ஆண்கள் பின்பற்ற வேண்டியவை?

ஆண்கள் எப்போதும் தங்களது உயரத்திற்கு ஏற்ற உடல் எடையைப் பராமரிக்க கொழுப்பு மிக்க இறைச்சிகளை தவிர்த்து, காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை அதிகமாக உணவில் சேர்க்க வேண்டும்.

35 வயதிற்கு மேல் உள்ள ஆண்களுக்கு தான் உடலில் கொழுப்புக்கள் அதிகமாக தேங்க ஆரம்பிக்கும். எனவே அந்த வயதில் உடற்பயிற்சிகளை கட்டாயம் செய்ய வேண்டும்.

புகைப் பிடிக்கும் பழக்கத்தை முற்றிலும் தவிர்த்து விட வேண்டும். இல்லையெனில் அதில் உள்ள நிக்கோட்டின் நுரையீரலுக்கு மட்டுமின்றி, இதயத்திற்கும் பெரும் தீங்கை உண்டாக்கி, மாரடைப்பு மற்றும் புற்றுநோயை ஏற்படுத்திவிடும்.

மதுப் பழக்கத்தையும் 35 வயதிற்கு மேல் உள்ள ஆண்கள் தவிர்க்க வேண்டும். இல்லையெனில் இதய நோயின் அபாயம் அதிகரித்து, பாலியல் பிரச்சனைகளான விறைப்புத்தன்மை பிரச்சனை போன்றவற்றை சந்திக்கக் கூடும்.

ஆண்கள் 35 வயதிற்கு மேல் உண்ணும் உணவில் உப்பைக் குறைத்துக் கொள்ள வேண்டும். உப்பு நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொண்டால், ரத்த அழுத்த பிரச்சனையை சந்தித்து, இதய நோயால் பாதிக்கப்பட வேண்டியிருக்கும்.

எலும்புகளை வலிமையாக்க கல்சியம் நிறைந்த உணவுப் பொருட்களை அன்றாடம் தவறாமல் உட்கொள்ள வேண்டும். அதோடு புரோபயோடிக்ஸ் நிறைந்த தயிர் மற்றும் நொதிக்க வைக்கப்பட்ட உணவுகளை சாப்பிட வேண்டும்.

ஆண்கள் வயதான காலத்தில் சோடா பானங்களை அடிக்கடி குடித்தால், அது புரோஸ்டேட் புற்றுநோயின் அபாயத்தை அதிகரித்து, உடல் பருமன் மற்றும் சர்க்கரை நோயை உண்டாக்கும்.

ஆண்கள் 35 வயதிற்கு மேல் புரோட்டீன் நிறைந்த உணவுகளையும், நல்ல கொழுப்புக்கள் நிறைந்த உணவுகளையும் உட்கொள்ள வேண்டும்.

பாலியல் வாழ்க்கையை சிறப்பாக்க மாதுளை, முருங்கைக்காய், தர்பூசணி, நட்ஸ் போன்றவற்றை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும்.

பாம்பு கடித்து உயிருக்கு போராடிய மனைவி : கணவனின் மூட நம்பிக்கையால் பறிபோன உயிர்!!

 

இந்தியாவில் பாம்பு கடித்து உயிருக்கு போராடிய மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் கணவன் பாம்பாட்டியின் பேச்சை கேட்டதால் பரிதாபமாக உயிர் போயுள்ளது.

உத்திரப்பிரதேசத்தின் Bulandshahr பகுதியைச் சேர்ந்தவர் Devendri. 35 வயது பெண்ணான இவர் வீட்டு வேலைக்காக வீட்டின் அருகில் இருந்த மரக்கட்டைகளை வெட்டியுள்ளார்.

அப்போது திடீரென்று இவரை பாம்பு கடித்துவிட்டதால், உடனடியாக அவர் தனது கணவரிடம் கூறியுள்ளார். கணவரோ அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல், பாம்பாட்டியை அழைத்து வந்துள்ளார்.

அங்கு வந்த பாம்பாட்டி, அவரிடம் மாட்டின் சாணத்தை வைத்து உடல் முழுவதும் மூடினால் பாம்பின் விஷம் அனைத்தும் வெளியில் வந்துவிடும் என்று கூறியுள்ளார்.

மனைவியை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக மாட்டுச் சாணத்தை வைத்து உடல் முழுவதையும் மூடியுள்ளார். அருகில் பாம்பாட்டி ஏதோ மந்திரம் ஒன்று கூறி வந்துள்ளார்.

ஆனால் சிறிது நேரம் கழித்து பார்த்த போது Devendri பரிதாபமாக இறந்துள்ளார். பாம்பு கடித்தவுடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருந்தால் உயிர் பிழைத்திருப்பார், ஆனால் கணவனின் மூட நம்பிக்கையால் அவரின் உயிர் தான் பரிதாபமாக போயுள்ளது.

நீச்சல் குளத்தில் 9 நிமிடங்கள் உயிருக்கு போராடிய சிறுவன் என்ன ஆனான் தெரியுமா?

அமெரிக்காவில் நீச்சல் குளத்தில் உயிருக்கு போராடிய சிறுவன் 9 நிமிடங்களுக்கு பிறகு உயிரோடு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அமெரிக்காவின் தெற்கு கரோலினா மிர்டில் கடற்கரை பகுதி அருகே அவிஸ்டா என்ற சொகுசு விடுதி உள்ளது. இங்கு உள்ள நீச்சல் குளத்தில் 12-வயது சிறுவன் தனது சக நண்பர்களுடன் குளத்தில் மகிழ்ச்சியாக குளித்துக் கொண்டிருந்தான்.

அப்போது எதிர்பாரதவிதமாக தண்ணீரை வெளியேற்றும் ஓட்டையில் இருந்த சல்லடையில் சிறுவனின் கால் சிக்கிக் கொண்டது. இதனால் சிறுவன் தண்ணீர் உள்ளே மூழ்கும் நிலை ஏற்பட்டது. இதைக் கண்ட சக நண்பர்கள் உடனடியாக அங்கிருந்த பெரியவர்களை அழைத்துள்ளனர்.

அவர்கள் வந்து சிறுவனை காப்பாற்ற முடியவில்லை. உடனடியாக பாதுகாப்பு குழுவுக்கு தெரிவிக்கப்பட்டதால், தண்ணீரில் மூழ்கி இருந்த சிறுவனை அந்த பாதுகாப்பு குழுவில் ஒருவர் சாமர்த்தியமாக செயல்பட்டு தனது வாய் வழியாக காற்றை அந்த சிறுவனுக்கு கொடுத்தபடி இருந்தார்.

இப்படி சிறுவன் 9-நிமிடங்களுக்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டான். மீட்கப்பட்ட சிறுவன் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 9 நிமிடங்கள் தண்ணீருக்குள் போராடிய சிறுவன் தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கண்டியில் நடந்த சுவாரஸ்ய நிகழ்வு : மானத்தை வாங்கிய நாய்!!

கண்டியில் புத்தாண்டை முன்னிட்டு நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் சுவாரஸ்ய நிகழ்வு ஒன்று நடைபெற்றுள்ளது. கண்டியிலுள்ள கிராமம் ஒன்றில் நடைபெற்ற புத்தாண்டு விளையாட்டுப் போட்டியில், இளைஞர், யுவதிகள் மற்றும் வயோதிபர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

விளையாட்டின் ஒரு பகுதியாக மரதன் ஓட்டப் போட்டி ஆரம்பமானது. போட்டி ஆரம்பித்தமை குறித்து ஒலிபெருக்கியில் அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக அந்த கிராமத்தின் அனைவரது கவனமும் மரதன் ஓட்டப்போட்டியின் மீது காணப்பட்டுள்ளது.

இதேவேளை போட்டியாளர்களை தைரியப்படுத்தும் நோக்கில் கிராமத்தில் உள்ளவர்களால் நீர்ப்பிரயோகம் மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டிருந்தது.

இவ்வாறான நிலையில் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொள்வதற்காக திடீரென நபர் ஒருவர் தயாராகி உள்ளார்.. இதனை அறியாத அவரது வளர்ப்பு நாய் தன்னுடைய உரிமையாளருக்கு ஏதோ விபத்து ஏற்பட்டுள்ளதென எண்ணியுள்ளது.

அவரை துரத்தி சென்ற நாய் அவரை காப்பாற்ற முயற்சி செய்துள்ளது. இதன் காரணமாக அவரது ஆடைகள் கழன்று வீ்ழ்ந்தமையினால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.

இதனால் வெட்கமடைந்த அந்த நபர், அந்தப் பகுதியிலுள்ள காட்டுக்குள் சென்று மறைந்து கொண்டுள்தாக தெரிவிக்கப்படுகின்றது.

எஜமான் மீதான நாயின் பாசத்தை புகழ்ந்து பேசிய கிராம மக்கள், அவரின் மானம் போனமை குறித்து நக்கலாக கருத்து வெளியிட்டுள்ளனர்.