யாழில் இருந்து வந்த ரயிலின் முன் 8 மாத குழந்தையுடன் பாய்ந்த தந்தை!!

குருணாகல் – பல்லேகொட்டுவ பகுதியில் தந்தை ஒருவர் தனது 8 மாதக் குழந்தையுடன் ரயிலின் முன்பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பல்லேகொட்டுவ – வெல்ல பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடைய நபரொருவரே இவ்வாறு தனது குழந்தையுடன் தற்கொலை செய்துகொண்டுள்ளார். குறித்த நபர் 2ஆவது மனைவியுடன் வாழ்ந்து வருவதாகவும், குடும்பத்தகராறு காரணமாகவே இவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறையில் இருந்து மாத்தறை நோக்கி சென்றுகொண்டிருந்த ரயிலின் முன் பாய்ந்தே குறித்த தந்தை தற்கொலை செய்துகொண்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பிரபல பாடசாலை மாணவனின் மோசமான செயல்!!

ஓட்டமாவடியிலுள்ள பிரபல பாடசாலையொன்றில் கல்வி கற்று வரும் மாணவனிடமிருந்து 800 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. பாடசாலை மாணவர்களுக்கு குறித்த மாத்திரைகளை விற்பனை செய்வதற்காக அவர் எடுத்துச் சென்ற போதே மாணவன் பொலிஸாரிடம் வசமாக சிக்கிக் கொண்டுள்ளார்.

செங்கலடிப் பிரதேசத்தில் வீதி பாதுகாப்புக் கடமையிலிருந்த ஏறாவூர் பொலிஸார், வாழைச்சேனை நோக்கிச் சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டியை சோதனையிட்டபோதே நேற்றிரவு இந்த மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட மாணவன் க.பொ.த உயர்தர வகுப்பில் கல்வி பயில்வதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

புத்த பகவானின் உருவம் பொறித்த சேலையை அணிந்த பெண்ணுக்கு ஏற்பட்ட நிலைமை!!

 

தலவாக்கலை – லிந்துலை சமூர்த்தி வலயத்தினால், ஒழுங்கு செய்யப்பட்ட தமிழ், சிங்கள புத்தாண்டு வைபவத்திற்கு புத்த பகவானின் உருவப்படம் பொறித்த சேலையை அணிந்து வந்திருந்த பெண்ணை வைபவத்தில் கலந்துகொண்டவர்கள் கடுமையாக சாடியுள்ளனர்.

அக்கராபத்தனை பொலிஸ் பிரிவின் ஹோல்புறுக் பொல்மோர் தோட்டத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் இந்த புத்தாண்டு வைபவம் நேற்று நடைபெற்றது.

புத்தாண்டு வைபவத்தை ஏற்பாடு செய்திருந்த சமூர்த்தி அபிவிருத்தி அதிகாரியின் மருமகள் இந்த சேலையை அணிந்து வந்திருந்ததாக வைபவத்தில் கலந்து கொண்ட பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

சிகப்பு நிறமான இந்த சேலையில் மஞ்சள் நிறத்தில் புத்த பகவானின் உருவப்படங்கள் பொறிக்கப்பட்டிருந்தன. புத்தாண்டு வைபவத்தில் கலந்துகொண்டவர்கள், பெண் அணிந்திருந்த சேலை குறித்து அங்கு கடமையில் இருந்து பொலிஸ் அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதனையடுத்து சமயத்திற்கு அவமதிப்பை ஏற்படுத்தும் வகையிலான ஆடைகளை அணிய வேண்டாம் என பொலிஸார் பெண்ணுக்கு அறிவுரை வழங்கியுள்ளனர்.

இந்த சேலை தனக்கு இந்தியாவில் இருந்து கொண்டு வந்து கொடுக்கப்பட்டது என பெண் கூறியதாக அக்கரபத்தனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆனந்தசிறி தெரிவித்துள்ளார்.

கடல் கொந்தளிப்பால் ஏற்பட்ட அனர்த்தம் : இலங்கையில் கடலில் மூழ்கும் ஒரு தீவு!!

இலங்கைக்கு அருகே தாழமுக்கம் ஒன்று உருவாகியுள்ள காரணத்தினாலேயே கடல் கொந்தளிப்பு மற்றும் உயரமான அலைகள் தோன்றுகின்றன. இது நாளை வரை நீடிக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த தாழமுக்கம் ஏற்பட்டுள்ள காரணத்தினால் பல பகுதிகளில் கடல் நீர் ஊருக்குள் வந்ததுடன், மக்கள் அச்சத்தில் இருக்கின்றனர். எனினும் இது குறித்து மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என வளிமண்டவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இவ்வாறு கடல் நீர் நிலப்பகுதிக்கு வருவதால் இலங்கையில் காணப்படும் ஒரு தீவுப்பகுதிக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சிலாபம் – ஆராச்சிக்கட்டுவ, கற்பிட்டியில் அமைந்துள்ள “முத்துபந்திய” என்ற தீவே அழியும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது. முத்துபந்திய தீவு இலங்கையில் இருந்து சுமார் 500 மீற்றர் தொலைவில் அமைந்துள்ளது.

மீன்பிடியை வாழ்வாதாரமாகக் கொண்ட சுமார் 150 குடும்பங்கள் இந்த தீவில் வசிக்கின்றனர். முத்துபந்திய தீவைச் சுற்றி ஏற்படும் கடலரிப்பு காரணமாக இந்த தீவு அழிந்து போகும் அபாயம் தோன்றியுள்ளதாக முன்னதாக செய்திகள் வெளியாகி இருந்தன.

அந்த வகையில் தற்போது ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக கடல் கொந்தளிப்பு மற்றும் உயரமான அலைகள் தோன்றுவதால் இந்த தீவு மேலும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது.

இலங்கையின் பிரதான பகுதியில் இருந்து முத்துபந்திய தீவின் ஒரு பகுதி துண்டிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன

வவுனியா நகரை இலங்கையின் முன்னுதாரணமாக மாற்றுவதே என் நோக்கம் வவுனியா நகரபிதா!!

வவுனியா நகரத்தை இலங்கையில் முன்னுதாரணமான நகரமாக மாற்றுவதே எனது நோக்கமென வவுனியா நகரபிதா இ.கௌதமன் வவுனியாவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்,

வவுனியா நகரசபையினால் பல வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்படவேண்டியுள்ளது. கலை, கலாசார நிகழ்வுகள் மற்றும் நகர அபிவிருத்தி என்பன முக்கியவிடயமாகும்.

கடந்த காலங்களில் பௌர்ணமி விழாக்கள் கொண்டாடப்பட்டு பின்னர் அவை கைவிடப்பட்டிருந்தது. எமது காலத்தில் அதனை மீள்நடத்தி வவுனியா கலைஞர்களுக்கு ஊக்கத்தினை வழங்க திட்டமிட்டுள்ளோம்.

நகர அபிவிருத்திக்கான முடிவுகள் தவிசாளர் என்ற வகையில் தன்னிச்சையாக என்னால் மாத்திரம் எடுக்கப்படாது. அனைத்து உறுப்பினர்களது ஒத்துழைப்பு ஆலோசனைகள் பெறப்பட்டு மேற்கொள்ளப்படும்.

அதற்கும் அப்பால் புலம்பெயர் மக்களதும் துறைசார் நிபுணர்களதும் கருத்துக்களும் ஒத்துழைப்புகளும் எமக்கு தேவைப்படும் சந்தர்ப்பத்தில் பெறப்பட்டு நகரம் அபிவிருத்தி நோக்கி கொண்டு செல்ல திடசங்கற்பம் எடுத்துள்ளோம்.

அதற்கு அனைவரும் கட்சி, மதம், இனம் என்ற வேறுபாடு இன்றி எமது நகரம் என்ற நோக்கோடு கைகோர்க்க வேண்டும். அதனூடாகவே மக்கள் சேவையில் மகிழ்ச்சி காண முடியும் என தெரிவித்தார்.

யாழ். நகருக்கு சென்ற யுவதியை காணவில்லை : பொலிஸார் தீவிர விசாரணை!!

தொழில் நிமிர்த்தம் யாழ். நகருக்கு சென்ற யுவதி ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. யாழ். வடமராட்சிப் பகுதியைச் சேர்ந்த யுவதி ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது குறித்து நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 18ம் திகதி காலை 6.30 மணியளவில் வீட்டிலிருந்து சென்ற குறித்த யுவதி இதுவரையிலும் வீடு திரும்பவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இந்த யுவதி யாழ். நகரிலுள்ள வைத்தியசாலையில் பணியாற்றி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், முறைப்பாட்டிற்கு அமைய சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

ஐ.எஸ் தீவிரவாதிகளின் அட்டகாசம் : பலர் பலி, நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கவலைக்கிடம்!!

 

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் ஐ.எஸ். ஐ.எஸ் தீவிரவாதிகள் மேற்கொண்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் 63 பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வாக்களிப்பு நிலையம் ஒன்றில் இந்த தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக முறையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஐ.எஸ். ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு உரிமை கோரியுள்ளது.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல்களுக்கான வாக்காளர் பதிவு இந்த மாதம் ஆரம்பமாகியிருந்த நிலையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இலங்கை கடவுச்சீட்டு எத்தனையாவது இடத்தில் இருக்கின்றது தெரியுமா?

 

உலகின் பலம் வாய்ந்த கடவுச்சீட்டு பட்டியலில் சிங்கப்பூர் 164 புள்ளிகளுடன் முதலிடம் பெற்றுள்ளது.
பாஸ்போர்ட் பவர் ரேங் இண்டெக்ஸ் -2018 ( passport power rank 2018) பட்டியலில் இது தொடர்பான தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் குறித்த பட்டியலில் 163 புள்ளிகளுடன் கொரியா இரண்டாம் இடத்திலும் 162 புள்ளிகளுடன் ஜப்பான் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகள் மூன்றாம் இடத்திலும் உள்ளன.

இலங்கை 39 புள்ளிகளுடன் 94ம் இடத்தைப் பிடித்துள்ளது. இதேவேளை ஆப்கானிஸ்தான் கடைசி இடத்தைப் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. விசா கெடுபிடிகளைக் கருத்தில் கொண்டே இந்தப் புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மக்களின் நன்மை கருதி இலங்கையில் புதிய வகை வாகனம் அறிமுகம்!!

இலங்கையில் 6 பேர் பயணிக்க கூடிய முச்சக்கரவண்டி விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பயன்பாட்டில் உள்ள முச்சக்கர வண்டியில் சாரதி உட்பட 4 பேர்கள் மாத்திரமே பயணிக்க முடியும்.

இந்நிலையில் 6 பேர் பயணிக்கக் கூடிய புதிய முச்சக்கர வண்டி ஒன்று சந்தையில் அறிமுகப்படுத்தி வைக்கப்படவுள்ளது. இந்த முச்சக்கர வண்டியில் சாரதி மற்றும் 5 பேர் பயணிக்க முடியும். அதற்கமைய மேலும் 3 பேர் பயணிக்க கூடிய வகையில் இந்த புதிய முச்சக்கர வண்டி தயாரிக்கப்பட்டுள்ளது.

இலங்கை சட்டத்திற்கமைய 3 பயணிகள் மாத்திரமே ஒரு முச்சக்கர வண்டியில் பயணிக்க முடியும். எனினும் இந்த புதிய தயாரிப்பு மூலம் அதிக வசதிகள் மற்றும் இலகுவாக பயணம் மேற்கொள்ள முடியும் என குறிப்பிடப்படுகின்றது.

இவ்வாறான முச்சக்கரவண்டிகள் ஆசிய நாடுகளில் மாத்திரம் பயன்பாட்டில் உள்ளன. விரைவில் இலங்கையிலும் அறிமுகம் செய்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஏசி வெடித்ததால் ஆசிரியை பரிதாபமாக பலி!!

கிருஷ்ணகிரி அருகே ஏசி வெடித்ததால் பள்ளி தலைமை ஆசிரியர் இறந்து போன சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி சாந்தி நகரில் வசித்து வருபவர் ஆல்பர்ட், அஞ்சலா மேரி தம்பதியினர். இதில் ஆல்பர்ட் மின்சார வாரியத்திலும் அஞ்சலா மேரி அரசு பள்ளியில் தலைமையாசிரியராகவும் வேலை பார்த்து வந்தனர்.

நேற்றிரவு வீட்டில் தூங்கும்போது ஏ சி போட்டுள்ளனர். அதிகாலை நடைபயிற்சிக்காக ஆல்பர்ட் வெளியே சென்ற நிலையில் அஞ்சலா மேரி உறங்கி கொண்டிருந்தார்.

திடீரென ஏ சி இயந்திரம் வெடித்து அதில் இருந்து கரும்புகை வந்துள்ளது. அதனால் மூச்சுத் திணறிய நிலையில் அஞ்சலா மேரி பரிதாபமாக இறந்தார். நடைப் பயிற்சி முடிந்து வீட்டுக்கு வந்த ஆல்பர்ட், மனைவி இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக பொலீசுக்குத் தகவல் தெரிவித்தார். அஞ்சலா மேரியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

என்னையே ஏன் எப்போது பார்த்தாலும் திட்டுகின்றீர்கள் : தலைமை ஆசிரியை சுட்டுக்கொன்ற மாணவன்!!

 

ஹரியனா மாநிலத்தில் பள்ளி தலைமை ஆசிரியை திட்டியதால் ஆத்திரத்தில் கொலை செய்த மாணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஹரியானா மாநிலத்தில் உள்ள விவேகானந்தா பள்ளியில் ரித்து சாஹப்ரா என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார். அதே பள்ளியில் நரேன் என்ற மாணவனும் படித்து வந்துள்ளார்.

நரேன் சரிவர படிக்காததால் ஆசிரியர்கள் கண்டித்துள்ளனர் ஆனாலும் தொடர்ந்து படிப்பில் கவணம் செலுத்தாமல் நரேன் மெத்தனமாகவே இருந்துள்ளார். இதனால் ஆசிரியர்கள் நரேன் பற்றி தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்துள்ளனர்.

தலைமை ஆசிரியரான ரித்து நரேனை அழைத்து ஏன் சரிவர படிப்பில் கவனம் செலுத்தவில்லை இதே போல் தொடர்ந்து இருந்தால் உன் பெற்றோரிடம் கூறிவிடுவேன் என மிரட்டியுள்ளார்.

இதன் பின்னரும் நரேன் போக்கில் எந்த மாற்றம் இல்லாதல் ரித்து நரேனின் பெற்றோரை பள்ளிக்கு அழைத்துவர கட்டாயப்படுத்தியுள்ளார். தொடர்ந்து தலைமை ஆசிரியை கண்டித்து வந்ததால் அவர் மீது மாணவர் ஆத்திரம் அடைந்துள்ளார்.

எனவே ரித்துவை கொலை செய்து விடலாம் என்ற முடிவுக்கு வந்த நரேன் தனது தந்தை உரிமம் பெற்று வைத்திருந்த துப்பாக்கியை வீட்டில் இருந்து ரகசியமாக பள்ளியில் இருந்து எடுத்து சென்றுள்ளார்.

நேராக தலைமை ஆசிரியை அறைக்கு சென்ற நரேன், என்னை மட்டும் ஏன் எப்போதும் திட்டுகிறீர்கள் ? நான் மட்டும் தான் இந்த பள்ளியில் சரியாக படிக்கவில்லையா ? மற்றவர்களை விட்டுவிட்டு என்னை மட்டும் ஏன் மிரட்டுகிறீர்கள் என்று கத்தியவாறே தலைமை ஆசிரியை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

அதன் பின் அங்கிருந்து அந்த மாணவர் தப்பி ஓடிவிட்டார். துப்பாக்கி சத்தம் கேட்டதால், அங்கிருந்த சக ஆசிரியர்கள் உடனடியாக ஓடி வந்து பார்த்த போது தலைமை ஆசிரியை ரத்த வெள்ளத்தில் சரிந்திருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மருத்துவமனைக்கு கொண்டுசென்ற போது சிகிச்சை பலன் இல்லாமல் தலைமை ஆசிரியை உயிரிழந்துள்ளார். அவரது உடலில் 4 குண்டுகள் பாய்ந்து இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பின்னர் தலைமறைவாக இருந்த மாணவரை பொலிஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

பிறப்புறுப்பை நீக்கிவிட்டு வேற்றுக்கிரகவாசிகளை போல் வாழும் விசித்திர இளைஞன்!!

 

அமெரிக்காவை சேர்ந்த இளைஞர் ஒருவர் பல அபாய நடைமுறைகளை பின்பற்றி வேற்றுக்கிரகவாசிகளை போல் தன்னை மாற்றிகொண்டு வாழ்ந்து வருகிறார்.
அமெரிக்காவை சேர்ந்த வின்னி ஒ(22) 110 பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைகளை செய்து தன்னை வேற்றுக்கிரகவாசியை போல் மாற்றிக்கொள்ள முயன்றுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் முழுமையான வேற்றுக்கிரகவாசியாக மாற அசைப்பட்டு அவரது பிறப்புறுப்பையும் நீக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

தன்னுடைய 17 வயதில் இருந்தே இந்த முயற்சியை துவங்கிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் மொடலாக இருந்த இவர் பின்னர் அதிக செலவில் அறுவை சிகிச்சைகளை செய்து வேற்றுக்கிரகவாசி போல் அவரை மாற்றிக்கொண்டுள்ளார். சுமார் 13,000 டொலர் செலவு செய்து இவரது பிறப்புறுப்பு மற்றும் தொப்புள் போன்றவற்றை நீக்கியுள்ளார்.

இது குறித்து பேசிய வின்னி ஒ வேற்றுக்கிரகவாசியாக மாருவது அவரது வாழ்நாள் கனவு என்றார். அதுமட்டுமின்றி பூமியில் வேற்றுக்கிரகவாசியாக வாழ்வது சாத்தியம் எனவும் அதற்க்கு அதிஷ்டம் செய்திருக்கவேண்டும் எனவும் அவர் கூறினார்.

கணவரை பிரிந்தார் ஐஸ்வர்யா ராய்? கைப்பேசியை ரகசியமாக சோதனை செய்ததால் பிரச்சனை!!

பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் தனது கணவரை பிரிந்து தனியாக வாழ்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது, ஜெயாபச்சனின் 70-வது பிறந்த நாளை குடும்பத்தினர் விருந்து வைத்து விமரிசையாக கொண்டாடினார்கள். அதில் ஐஸ்வர்யாராய் கலந்து கொள்ளாமல் புறக்கணித்ததாக கூறப்பட்டது.

இந்த நிலையில் கணவர் அபிஷேக் பச்சன் மீது சந்தேகித்து அவரது செல்போனை எடுத்து போன் நம்பர்கள் மற்றும் வட்ஸ்அப் தகவல்களை ஐஸ்வர்யாராய் ஆய்வு செய்ததாகவும் இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு தனித்தனியாக வசிப்பதாக கூறப்படுகிறது. இது இந்தி பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

என் கணவரை நான் சந்தேகப்படுவது இல்லை அவரது செல்போனை எடுத்து பார்ப்பதும் இல்லை என்று ஐஸ்வர்யாராய் ஏற்கனவே விளக்கம் அளித்து இருந்தார்.
இந்த நிலையில்தான் இருவரும் தனித்தனியாக வசிப்பதாக வீடியோ தகவல் வெளிவந்துள்ளது.

நீங்கள் இந்த நட்சத்திரக்காரர்களா? அதிஸ்ட்ரக் காற்று இனி உங்க பக்கம்தான்!!

ஒருவர் தனது வாழ்வில் வெற்றியைத் தேடி செல்ல வேண்டுமாயின் அவர்களின் பிறந்த நட்சத்திரத்தை வைத்து தெரிந்துக் கொள்ளலாம்.

அஸ்வினி : அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பரணி, ரோகிணி, திருவாதிரை, பூசம், பூரம், அஸ்தம், சுவாதி, பூராடம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திர நாள்களில் தொடங்கும் காரியங்கள் வெற்றி அடையும்.

பரணி : பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கிருத்திகை, மிருகசீரிசம், புனர்பூசம், ஆயில்யம், உத்திரம், சித்திரை, விசாகம், உத்திராடம், அவிட்டம், பூரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திர நாள்களில் நல்ல காரியங்களைத் தொடங்கலாம்.

கிருத்திகை : கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ரோகிணி, திருவாதிரை, பூசம், மகம், அஸ்தம், சுவாதி, அனுஷம், திருவோணம், சதயம், உத்தரட்டாதி, அஸ்வினி ஆகிய நட்சத்திர நாள்கள் அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.

ரோகிணி : ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மிருகசீரிஷம், புனர்பூசம், ஆயில்யம், பூரம், சித்திரை, விசாகம், அவிட்டம், கேட்டை, பூரட்டாதி, ரேவதி, பரணி ஆகிய நட்சத்திர நாள்களில் நல்ல காரியங்களைத் தொடங்கலாம்.

மிருகசீரிஷம் : மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருவாதிரை, பூசம், அஸ்வினி, கிருத்திகை ஆகிய நட்சத்திர நாள்கள் நல்ல காரியம் செய்வதற்கு உகந்தது.

திருவாதிரை : திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புனர்பூசம், ஆயில்யம், பூரம், அஸ்தம், விசாகம், கேட்டை, பூராடம், பூரட்டாதி, ரேவதி, பரணி, ரோகிணி ஆகிய நட்சத்திர நாள்கள் அதிர்ஷ்டமாகும்.

புனர்பூசம் : புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பூசம், மகம், உத்திரம், சித்திரை, அனுஷம், மூலம், உத்திராடம், உத்திரட்டாதி, அஸ்வினி, கிருத்திகை, மிருகசீரிஷம் ஆகிய நட்சத்திர நாள்களில் நல்ல விடயங்களைச் செய்யலாம்.

பூசம் : பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆயில்யம், பூரம் அஸ்தம், சுவாதி, கேட்டை, பூராடம், திருவோணம், ரேவதி, பரணி, ரோகிணி, திருவாதிரை ஆகிய நட்சத்திர நாள்கள் சிறந்தவை.

ஆயில்யம் : ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மகம், உத்திரம், சித்தரை, விசாகம், மூலம், உத்திராடம், அவிட்டம், அஸ்வினி, கிருத்திகை, மிருகசீரிஷம், புனர்பூசம் ஆகிய நட்சத்திர நாள்களில் செய்யும் காரியங்கள் வெற்றியைக் கொடுக்கும்.

மகம் : மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பூரம், அஸ்தம், ஸ்வாதி, அனுஷம், பூராடம், திருவோணம், சதயம், பரணி ரோகிணி, திருவாதிரை, பூசம் ஆகிய நட்சத்திர நாள்களில் தொடரும் செயல்பாடுகள் அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.

பூரம் : பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உத்திரம், சித்திரை, விசாகம், கேட்டை உத்திராடம், அவிட்டம், பூரட்டாதி, கிருத்திகை, மிருகசீரிஷம், புனர்பூசம், ஆயில்யம் ஆகிய நட்சத்திர நாள்கள் அற்புதமானவை.

உத்திரம் : உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அஸ்தம், சுவாதி, அனுஷம், மூலம் திருவோணம், சதயம், உத்திரட்டாதி, ரோகிணி, திருவாதிரை, பூசம், மகம் ஆகிய நட்சத்திர நாள்களில் நல்ல காரியங்களை செய்யலாம்.

அஸ்தம் : அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சித்திரை, விசாகம், கேட்டை, பூராடம், அவிட்டம், பூரட்டாதி, ரேவதி, மிருகசீரிஷம், புனர்பூசம், ஆயில்யம், பூரம் ஆகிய நட்சத்திர நாள்கள் சிறப்பானவை.

சித்திரை : சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சுவாதி, அனுஷம், மூலம், உத்திராடம், சதயம், உத்திரட்டாதி, அஸ்வினி, திருவாதிரை, பூசம், மகம், உத்திரம் ஆகிய நட்சத்திர நாள்களில் நல்ல காரியங்களைத் தொடங்கலாம்.

சுவாதி : சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் விசாகம், கேட்டை, பூராடம், திருவோணம், பூரட்டாதி, ரேவதி, பரணி, புனர்பூசம், ஆயில்யம், பூரம் அஸ்தம் ஆகிய நட்சத்திர நாள்கள் ஏற்றது.

விசாகம் : விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அனுஷம் மூலம், உத்திராடம், அவிட்டம், உத்திரட்டாதி, அஸ்வினி, கிருத்திகை பூசம் மகம், உத்திரம், சித்திரை ஆகிய நட்சத்திர நாள்கள் வெற்றியைக் கொடுக்கும்.

அனுஷம் : அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கேட்டை, பூராடம், திருவோணம், சதயம், ரேவதி, பரணி, ரோகிணி, ஆயில்யம், பூரம், அஸ்தம், சுவாதி ஆகிய நட்சத்திர நாள்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

கேட்டை : கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மூலம், உத்திராடம், அவிட்டம், பூரட்டாதி, அஸ்வினி, கிருத்திகை, மிருகசீரிஷம், பூசம், மகம், உத்திரம், சித்திரை, விசாகம் ஆகிய நட்சத்திர நாள்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

மூலம் : மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பூராடம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி, பரணி, ரோகிணி, திருவாதிரை, பூரம், அஸ்தம், சுவாதி, அனுஷம் ஆகிய நட்சத்திர நாள்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

பூராடம் : பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உத்திராடம், அவிட்டம், பூரட்டாதி, ரேவதி, கிருத்திகை, மிருகசீரிஷம், புனர்பூசம், உத்திரம், சித்திரை, விசாகம், கேட்டை ஆகிய நட்சத்திர நாள்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

உத்திராடம் : உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திருவோணம், சதயம், உத்திரட்டாதி, அஸ்வினி, மிருகசீரிஷம், திருவாதிரை, பூசம், அஸ்தம், சுவாதி, அனுஷம், மூலம் ஆகிய நட்சத்திர நாள்களில் செய்யும் காரியங்கள் வெற்றியை கொடுக்கும்.

திருவோணம் : திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அவிட்டம், பூரட்டாதி, ரேவதி, பரணி, திருவாதிரை, புனர்பூசம், ஆயில்யம், சித்திரை, விசாகம், கேட்டை, பூராடம் ஆகிய நட்சத்திர நாள்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

அவிட்டம் : அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சதயம், உத்திரட்டாதி, அஸ்வினி, கிருத்திகை, புனர்பூசம், பூசம், மகம், சுவாதி, அனுஷம், மூலம், உத்திராடம் ஆகிய நட்சத்திர நாள்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

சதயம் : சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பூரட்டாதி, ரேவதி, பரணி, ரோகிணி, பூசம், ஆயில்யம், பூரம், விசாகம், கேட்டை, பூராடம், திருவோணம் ஆகிய நட்சத்திர நாள்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

பூரட்டாதி : பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உத்திரட்டாதி, அஸ்வினி, கிருத்திகை, மிருகசீரிஷம், ஆயில்யம், மகம், உத்திரம், அனுஷம், மூலம், உத்திராடம், அவிட்டம் ஆகிய நட்சத்திர நாள்களில் செய்யும் காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

உத்திரட்டாதி : உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ரேவதி, பரணி, ரோகிணி, திருவாதிரை, மகம், பூரம், அஸ்தம், கேட்டை, பூராடம், திருவோணம், சதயம் ஆகிய நட்சத்திர நாள்கள் அதிர்ஷ்டமாகும்.

ரேவதி : ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அஸ்வினி, கிருத்திகை, மிருகசீரிஷம், புனர்பூசம், பூரம், உத்திரம், சித்திரை, மூலம், உத்திராடம், அவிட்டம், பூரட்டாதி ஆகிய நட்சத்திர நாள்கள் நல்ல பலனைக் கொடுக்கும்.

வயதில் மூத்தவர் என்பதால் தயங்கிய ஐஸ்வர்யா ராய் : அழகான காதல் கதை!!

 

பாலிவுட்டின் நட்சத்திர தம்பதியரான அபிஷேக் பச்சனும், ஐஸ்வர்யா ராயும் இன்று தங்களது 11 வது திருமண நாளை கொண்டாடுகின்றனர். தன்னை விட 2 வயதில் சிறியவரான அபிஷேக்கை, 2007 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார் ஐஸ்வர்யா ராய்.

Dhai Akshar Prem Ke, Kuch Naa Kaho, Umrao Jaan மற்றும் Dhoom 2. ஆகிய படங்களில் இணைந்து நடித்தன் மூலம் இவர்கள் இருவருக்குள்ளும் காதல் ஏற்பட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டிலிருந்து டேட்டிங்கில் இருந்த இவர்கள், 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் 20 ஆம் திகதி பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர்.

காதல் கதை

உலக அழகி பட்டம் வென்ற ஐஸ்வர்யா ராய், நடிகர் சல்மான் கானை காதலித்து அவருடன் பிரச்சனையில் சிக்கி காவல் நிலையம் வரை சென்றது உலகம் அறிந்த கதை.

சல்மானின் காதல் முறிவுக்கு பின்னர் தான் ஐஸ்வர்யாவுக்கு, அபிஷேக்கின் நட்பு கிடைத்துள்ளது. சல்மானை பிரிந்த பின்னர் கூட, அவர் கொடுக்கும் நெருக்கடியால் ஐஸ்வர்யா சிக்கி தவித்த நேரத்தில் உறுதுணையாக இருந்தது அபிஷேக் தான்.

இருவருக்குமிடையேயான நட்பு பின்னர் காதலாக மாறியது. தன்னை விட வயதில் சிறியவரான அபிஷேக்கை திருமணம் செய்துகொள்வதில், ஐஸ்வர்யா கொஞ்சம் தயங்கியுள்ளார். ஆனால், தனது தந்தை கொடுத்த அறிவுரையின் படி அபிஷேக்கை மணந்தார்.

அபிஷேன் ஒரு பேட்டியின்போது, ஐஸ்வர்யா ஒரு உலக அழகி என்பதால் அவரை நான் திருமணம் செய்துகொள்ளவில்லை, மாறாக அவர் மீது எனக்கு இருந்த உண்மையான காதலால் தான் திருமணம் செய்துகாண்டேன் என கூறினார்.

அதே போன்று ஐஸ்வர்யாவும், அபிதாப் பச்சன் என்ற பெரிய ஸ்டாரின் மகன் அபிஷேக் என்பதால் அவரை நான் திருமணம் செய்துகொள்ளவில்லை.

மாறாக, நாங்கள் இருவரும் உயிருக்கு உயிராக காதலித்தோம், எங்கள் வாழ்க்கையில் அந்தஸ்தை விட அன்புதான் மேலோங்கியது, அதனால்தான் திருமண பந்தத்தில் இணைந்தோம் என கூறினார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தம்பதியினருக்கு ஏற்பட்ட நிலை!!

சட்டவிரோதமான முறையில் தங்கம் கடத்திச் செல்ல முற்பட்ட தம்பதியினரை கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து சுங்கப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் இருந்து 2.35 கிலோ கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாக சுங்கப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவுக்கு தங்கம் கடத்தி செல்ல முற்பட்ட நிலையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட தங்கத்தின் பெறுமதி 9.1 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் சுங்கப்பிரிவு அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இதேவேளை, அண்மை காலமாக சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்கு தங்கம் கடத்திச் செல்லும் சம்பவங்கள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது