இலங்கையில் எதிர்வரும் சில நாட்களுக்கு பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக மேல், வடமேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சியும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை, சூரியனின் வடக்கு நோக்கிய இயக்கம் காரணமாக இவ்வருடம் ஏப்ரல் 05 முதல் 15 வரை சூரியன் இலங்கையின் அகலாங்குகளுக்கு மேலாக உச்சம் கொடுக்க உள்ளது.
அந்த வகையில் இன்று நண்பகல் 12.11 அளவில் கல்குடா, வெலிக்கந்தை, பொலன்னறுவை, அம்பன்பொல மற்றும் மதுரங்குளி ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சத்தில் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இலங்கையின் மலைப்பான சில பகுதிகளில் மண்சரிவு மற்றும் நிலம் தாழிறக்கம் என்பவற்றிட்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கையை தேசிய கட்டட ஆரய்ச்சி நிறுவனம் விடுத்துள்ளதுடன், இரத்தினபுரி பிரதேச செயலக பிரிவிலுள்ள சகல மலைப்பாங்கான பகுதிகள்
இலங்கையில் உயிரிழந்த இளைஞனின் உடற்பாகங்களை கொண்டு, ஆறு பேரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.
கடந்த 2ம் திகதி புத்தளம், ஆனமடுவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்தார்.
குறித்த இளைஞன் இன்னுமொரு இளைஞருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்து கொண்டிருக்கும் போது விபத்து ஏற்பட்டது.
வீதியின் ஊடாக பயணித்து கொண்டிருந்த மாடு ஒன்றின் மீது மோதியமையினால் தூக்கி வீசப்படட்ட நிலையில் குறித்த இளைஞன் காயமடைந்துள்ளார்.. எம்.பி.சுமித் கிரிஷாந்த என்பவரே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்தவராகும்.
குறித்த இளைஞன் ஆனமடுவ மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இருந்த போதிலும், தான் ஆபத்தான நிலையில் தான் இல்லை என கூறி சிகிச்சை பெற்றுக் கொண்டு இளைஞன் வீட்டிற்கு சென்றுள்ளார். அடுத்த நாள் அவர் ஆபத்தான நிலையில் மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கிட்டத்தட்ட 3 நாட்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுள்ளார். எனினும் கடந்த 6ஆம் திகதி சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
இந்த இளைஞன் உயிரிழப்பதற்கு முன்னர் உடற்பாகங்களை தானம் வழங்குமாறு இளைஞனின் பெற்றோரிடம் வைத்தியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதற்கமைய கண்கள், கல்லீரல், சிறுநீரகம், முழங்கால், பாத தசைகள், தசைகள் மற்றும் பல பாகங்களை பெற்றோரின் விருப்பத்திற்கமைய வைத்தியசாலைக்கு வழங்கியுள்ளனர்.
இதுவரையில் இளைஞனிடம் பெற்றுக் கொள்ளப்பட்ட உடற்பாகங்களில் 6 பேர் உயிர் வாழ்வதாக உறவினர்கள் தெரிவித்துள்ளார்.
தச்சு தொழில் செய்து வந்த அவர் திருமணமாகாதவராகும். சகோதரர் சகோதரிகள் 4 பேர் கொண்ட குடும்பத்தின் ஒரு சக்தியாக அவரே காணப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
வவுனியா புதிய பேருந்து நிலைத்தில் வைத்து கஞ்சா பொதியுடன் இளைஞன் ஒருவரை நேற்று இரவு கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
நேற்று (09.04) இரவு 11.55 மணியளவில் கிளிநொச்சியில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த பேருந்து ஒன்றை வவுனியா புதிய பேருந்து நிலைய பகுதியில் வைத்து சோதனை மேற்கொண்ட பொலிசார் நபர் ஒருவரிடம் இருந்து 4 கிலோ 25 கிராம் கஞ்சா பொதி ஒன்றினை மீட்டுள்ளனர்.
செல்வபுரம் மல்லாவியை சேர்ந்த 33 வயதான செல்வரட்ணம் சிவதர்சன் என்பவரையே பொலிசார் கைது செய்துள்ளனர்.
இவருக்கு எவ்வாறு கஞ்சா கிடைக்கப்பெற்றது போன்ற ஏனைய விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணைகளின் பின்னர் இன்று நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.
ஆலயம் என்பது ஆன்மாக்கள் லயிக்கும் இடம். எனவேதான் அங்கு அமைதியாக இருக்கவேண்டுமென பெரியோர்கள் அறிவுறுத்தி உத்தியுள்ளார்கள்.
அதோடு ஆலங்களிற்குள் நாம் செய்யக்கூடாத சில பழக்கங்கள் அவற்றினையும் கூறி உள்ளார்கள். அவையாவன,
கர்ப்ப கிரகத்தினுள் கடவுளுக்கு அலங்காரம் நடக்கும் போது திரையிட்டு இருப்பார்கள். அச்சமயம் இறைவனை நாம் வழிபடுதல் கூடாது. அந்தவேளையில் கையில் விளக்கு ஏந்தி ஆராதனை காட்டக்கூடாது.
சுவாமிக்கும், பலிபீடத்திற்கும் குறுக்கே செல்லக்கூடாது. அதோடு பலிபீடம், விக்ரஹம் ஆகியவற்றின் நிழலை மிதித்தல் கூடாது.
ஆலயத்தில் நண்பர்களையோ, பெரிய மனிதர்களையோ கண்டால் வணங்கக்கூடாது. ஏனெனில் இறைவனே மிகப் பெரியவன். இறைவனை தவிர அங்கு பெரியவர்கள் யாரும் இல்லை . அதனால் மற்றவரின் காலில் விழுந்து வணங்கக்கூடாது.
விபூதி, குங்குமம், பிரசாதம் வாங்கி நெற்றியில் இட்டுக் கொண்டபின் மீதமானவற்றைக் கீழே கொட்டுதல் சுற்றுத் தூண்களில் தடவுதல் கூடாது. மீதமானவற்றை ஒரு தாளில் மடித்துச் சென்று வீட்டின் பூஜையறையில் வைத்துக் கொண்டு தினசரி இட்டுக் கொள்ளலாம்.
பிரசாதங்களை ஒருவருக்கொருவர் இட்டுக் கொள்ளுதலும் கூடாது.
விபூதி, சந்தன அபிஷேகம், பால் அபிஷேகம் தவிர சுவாமிக்கு இதர திருமஞ்சனம் ஆகும்போது பார்க்க கூடாது. அபிஷேகம் நடக்கும் பொழுது கோவிலைச் சுற்றி வரக்கூடாது.
கோவிலில் உள்ள திருவிளக்குகளை கையால் தூண்டவோ, தூண்டிய கையை சுவரில் துடைக்கவோ கூடாது. மீதியிருக்கும் எண்ணெய்யை தலையில் தடவிக் கொள்ளக்கூடாது.
சுவாமிகளை தொடுவது, சுவாமிகளின் திருவடிக்கடியில் கற்பூரம் ஏற்றுதல் கூடாது.
ஆப்கானிஸ்தானில் கைக்குழந்தையுடன் பெண்ணொருவர் தேர்வு எழுதிய புகைப்படம் வைரலானது, நம்மில் பலரும் இதை படித்திருப்போம்.
ஆப்கானிஸ்தானை சேர்ந்த ஜஹன்தாப் அஹம்தி(வயது 25), மூன்று குழந்தைகளுக்கு தாயான இவர் கைக்குழந்தையை மடியில் வைத்துக்கொண்டு தேர்வு எழுதினார்.
இதை பல்கலைகழக பேராசிரியர் நாசிர் குஸ்ரா வெளியிட வைரலானது, உலகின் பல்வேறு இடங்களில் இருந்தும் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் அவருக்கு உதவி செய்ய முன்வந்தது.
இதனை தொடர்ந்து, புகழ்பெற்ற காபூல் பல்கலைகழகம் பொருளாதாரம் படிக்க இடம்வழங்கியுள்ளது. பெண் அரசியல்வாதி ஒருவர் ஜஹன்தாப் அஹம்தியின் கல்விச்செலவை ஏற்றிருக்கிறார்.
ஆப்கானிஸ்தானின் இரண்டாவது துணை ஜனாதிபதி, ஒரு வருடம் இலவசமாக தங்கிக்கொள்ள வீடு ஒன்றை வழங்கியுள்ளார்.
காபூலில் உள்ள பெண்கள் வெளியே சென்று வர அனுமதி உள்ளது, ஆனால் எனது கிராமம் கல்வியறிவில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதால், படிப்பை முடித்த பின்னர் கிராம பெண்களுக்கு உதவி செய்யப் போகிறேன் என்கிறார் அஹம்தி.
பண்டிகைக் காலத்தில் மீன் விலை அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தைப் பணித்துள்ளார்.
இதேவேளை, சந்தையில் மோசடி வியாபாரிகளால் நுகர்வோர் சுரண்டப்படுவதைத் தவிர்ப்பது இதன் நோக்கமாகும்.
வவுனியா மகாறம்பைக்குளம் திருஞானசம்பந்தர் வித்தியாலயத்தில் 10, 11ஆம் தர மாணவர்களுக்கான தளபாட வசதிகள் இல்லாமையால் கற்றல் செயற்பாடுகளை மேற்கொள்வதில் பெரும் சவால்களை எதிர்கொள்வதாக பாடசாலை சமூகத்தினர் மற்றும் பெற்றோர்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் பாடசாலைச் சமூகத்தினர் தெரிவிக்கையில்,
வவுனியா தெற்கு கல்வி வலயத்துக்கு உட்பட்ட திருஞானசம்பந்தர் வித்தியாலயத்தில் தரம் 10 மற்றும் 11இல் 50 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயில்கின்றனர்.
இவர்கள் முதலாம் தர (ஆரம்ப வகுப்பு) மாணவர்களுக்குரிய சிறிய இருக்கைகளில் அமர்ந்திருந்தே தமது கற்றல் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனால் நீண்ட நேரம் அமர்ந்திருந்து கல்வி கற்பதில் பல சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். இது மாணவர்களின் உள ரீதியான பல பிரச்சினைகளுக்கும் வழிவகுத்துவிடும். .
இது தொடர்பாக வடக்கு மாகாண கல்வித் திணைக்களத்திற்கு நாம் பல தடவைகள் தெரியப்படுத்தியுள்ளோம். ஆனால் இன்று வரை எமக்கான தளபாட வசதிகளை உரியவர்கள் செய்து தரவில்லை.
எனவே சம்பந்தப்பட்டவர்கள் இந்தப் பிரச்சினையை உடனடியாக தீர்த்து மாணவர்களதும் பாடசாலையினதும் வளர்ச்சிக்குக் கைகொடுக்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.
பல ஆண்டுகளுக்குமுன் கப்பலில் அனுப்பப்பட்ட கண்டெய்னர் ஒன்றில் பிரித்தானியாவுக்கு வந்த இலங்கைப்பெண் ஒருவர், 15 வயது பிரித்தானிய மாணவன் ஒருவனின் வாழ்வில் அற்புதமான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார்.
இலங்கையைச் சேர்ந்தவர் பிரியங்கா. பல ஆண்டுகளுக்குமுன் பிரித்தானியாவுக்கு வந்தார். அப்போது அவர் மாணவர்களின் பழக்க வழக்கங்கள் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
Jack என்னும் பிரித்தானிய மாணவனைச் சந்தித்த பிரியங்கா, தனது மகனின் வயதையொத்த அவனது வாழ்க்கை முறையைக் கண்டு கவலையடைந்தார்.
பெற்றோர்கள் நீண்ட நேரம் வேலைக்குச் சென்றுவிட, நடு இரவு வரை பார்ட்டிகளும், குடியும் சிகரெட்டுமாக அவன் வாழ்ந்த வாழ்க்கை அவரை மிகவும் பாதித்தது.
தனக்கு கிடைத்த வாய்ப்புகளை வீணடிப்பதாக அவனை எச்சரித்த பிரியங்கா, தனக்கு பிரித்தானியா செய்த நன்மைகளை அந்நாட்டுக்கு திருப்பி அளிக்கும் வகையில் படிப்பில் மோசமாக இருந்த Jack என்னும் அந்த மாணவனை தனது மகனுடன் சேர்ந்து தனது வீட்டில் வாழச் செய்ய முடிவு செய்தார்.
வீட்டில் அவனுக்கு அவர் பல கட்டுப்பாடுகளை விதித்தார். பையன்கள் இருவரும் சீக்கிரம் தூங்கச் செல்ல வேண்டும். அதற்குமுன் தினமும் இரண்டு மணி நேரம் கண்டிப்பாக படிக்க வேண்டும்.
இரவில் அனைவரும் சேர்ந்து டின்னர் சாப்பிடும்போது மொபைலை நோண்டிக் கொண்டிருக்கக்கூடாது. கண்டிப்பாக ஹோம் வொர்க் செய்ய வேண்டும். காலையில் பிரேக் ஃபாஸ்டை தவிர்க்கக்கூடாது என்பது போன்ற “கடுமையான” விதிகள் பின்பற்றச் செய்யப்பட்டன.
படிப்பில் மோசமாக இருந்த Jack, படிப்பில் நன்கு முன்னேறியதைக் கண்ணாரக் காண முடிந்தது. கட்டுப்பாடுகள் படிப்பிலும், சுய ஒழுக்கத்திலும் முன்னேற்றங்களை ஏற்படுத்தின.
பிரியங்காவின் மகனான Tharushஐப் போலவே கட்டுப்பாடுகளை ஒழுங்காக பின்பற்றிய Jack வகுப்பில் முதலிடத்திற்கு வர முடிந்தது. இரவில் இரண்டு மணி நேர படிப்பிற்குப் பின் சரியான நேரத்திற்கு படுக்கைச் சென்றதால் இவ்வளவு நாள் பள்ளிக்கு லேட்டாகச் சென்ற Jack இப்போது சரியான நேரத்திற்கு செல்கிறான்.
பிரித்தானியாவுக்கு பிழைப்பிற்காக வந்த பிரியங்கா செய்துவரும் வாழ்வை மாற்றும் இந்த அற்புதச் செயல் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஆவணப்படமாகவும் வெளியிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழில் காற்று வெளியிடை படம் மூலம் அறிமுகமான ஸ்ரத்தா ஸ்ரீ, விக்ரம் வேதா மற்றும் ரிச்சி போன்ற வெற்றிப்படங்களில் நடித்தார். தற்போது மிலன் டாக்கீஸ் எனும் ஹிந்திப் படத்தில் நடிக்கிறார்.
இதில் அவருக்கு கல்லூரி பெண் வேடம் எனும் ஸ்ரத்தா தமிழில் நடிப்பதற்கும் இந்தியில் நடிப்பதற்கும் நிறைய வித்யாசங்கள் இருப்பதாகத் தெரிவித்தார்.
பொலிவுட்டில் இருப்பவர்கள் திறமையாகவும் ஒழுக்கமாகவும் இருப்பதாகக் கூறியிருக்கும் ஸ்ரத்தா ஸ்ரீயின் பேச்சு, அப்போ தமிழ் பிரபலங்களிடையே ஒழுக்கமில்லையா என்று அனைவரும் கேள்வி கேட்கும் வண்ணம் இருக்கிறதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என நேற்று நடிகர் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட மௌனப்போராட்டத்தில் கலந்துகொண்டு பேசிய சத்யராஜ், ரஜினிகாந்தை மறைமுகமாக விமர்சித்துள்ளதாக கூறப்படுகிறது.
தமிழர்களின் உணர்வுகளை மதியுங்கள். எந்த அரசாக இருந்தாலும் அஞ்சமாட்டோம், இராணுவமே வந்தாலும் அஞ்சமாட்டோம், எந்த கெடுபிடிக்கும் அஞ்சமாட்டோம். குரல் கொடுப்பவர்கள் தைரியமிருந்தால் தமிழர்களின் பின்னால் நில்லுங்கள். இல்லை ஓடி ஒளிந்துகொள்ளுங்கள் என்று ஆவேசமாக பேசியுள்ளார்.
இது ஒன்றும் முதல்முறை அல்ல, பலமுறை நடிகர் சத்யராஜ், ரஜினியை மறைமுகமாக தாக்கி பேசியுள்ளார்.
2008ஆம் ஆண்டு ஒகேனக்கல் பிரச்சனையில் தண்ணீருக்காகவும் கர்நாடகாவில் வாழும் தமிழர்கள் தாக்கப்பட்டதற்கு எதிராக திரையுலகம் நடத்திய கண்டன கூட்டத்தில், “ஒரு நடிகன் பேரைச் சொன்னா கைதட்டல் வரும். ஆனா, அப்படி நடிகன் பேரைச் சொல்லி கைதட்டல் வாங்குறதுக்கு பதிலா நான் நாக்கைப் புடுங்கிட்டு சாவேன் என்று மறைமுகமாக ரஜினியை சாடினார்.
ரஜினிகாந்த் நடித்த ‘சிவாஜி’ திரைப்படம் தொடங்கப்பட்ட பொழுது, சுமன் நடித்த ‘ஆதிசேஷன்’ வில்லன் பாத்திரத்துக்கு முதலில் அணுகப்பட்டவர் சத்யராஜ்தான்.
அப்பொழுது, இந்தப் படத்துக்குப் பிறகு ரஜினி என் படத்தில் வில்லனாக நடிக்கத் தயாரென்றால் நான் இந்தப் படத்தில் அவருக்கு வில்லனாக நடிக்கிறேன்” என்று கூறி வாய்ப்பை மறுத்தார். பிறகு, அவர் ஷங்கர் இயக்கத்தில் ‘நண்பன்’ படத்தில் குணச்சித்திர பாத்திரத்தில் நடித்தார்.
தொழில்ரீதியாகவும் இவர்களுக்குள் இப்படி ஒரு மனக்கசப்பு இருக்கிறது என கூறப்படுகிறது.
தாய்லாந்தில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் நடிகர் மாதவனின் மகன் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
தாய்லாந்தில் குரூப் 1 (12 மற்றும் 13 வயது), குரூப் 2 (14 மற்றும் 15 வயது), குரூப் 3 (16-18 வயது), என மூன்று பிரிவுகளாக நீச்சல் போட்டிக்கான சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 7-ஆம் திகதி முதல் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் ஆண்களுக்கான 1500 மீற்றர் பிரிஸ்டைல் போட்டியில் நடிகர் மாதவனின் மகன் Vedaant Madhavan கலந்து கொண்டார்.
இதில் அவர் வெண்கலப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். இது குறித்து மாதவன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், Vedaant தாய்லாந்தில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் இந்தியாவிற்கு முதல் பதக்கம் பெற்றுத் தந்தார்.
இதை நான் பெருமையாக கருதுகிறேன். வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி எனவும், இதே போன்று Vedaant பல வெற்றிகள் பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்து தர வேண்டும் என்று கூறியுள்ளார்.
தமிழகத்தில் மனைவியை கொலை செய்து நாடகமாடிய கோவில் குருக்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.
சென்னை வடபழனி முருகன் கோவிலில் குருக்களாக இருப்பவர் பாலகிருஷ்ணன். இவருக்கு ஞானபிரியா(24) என்ற மனைவி உள்ளார். இவர்கள் சென்னை வடபழனி தெற்கு சிவன் கோவில் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன் வீட்டிற்கு வெளியே உள்ள கழிவறையில் மோசமான காயங்களுடன் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பாலகணேஷ் மயங்கிய நிலையில் கிடந்தார்.
இதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரின் கட்டை அவிழ்த்துவிட்டு, வீட்டின் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது பிரியா வீட்டுக்குள் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் தலை மற்றும் உடலில் காயங்களுடன் இறந்து கிடந்தார்.
அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார், பாலகணேஷை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஞானபிரியாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பொலிசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் ஞான பிரியாவின் கழுத்தில் நகைகள் காணாமல் போயிருந்ததால், நகைக்காக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்பட்டது.
இருப்பினும் பொலிசாருக்கு சந்தேகம் ஏற்பட்டதால், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாலகணேஷ் நினைவு திரும்பியவுடன் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
விசாரணையில் பாலகணேஷ், நள்ளிரவில், கழிப்பறைக்கு செல்ல வெளியே வந்த போது, என்னை தாக்கிவிட்டு உள்ளே சென்ற இரண்டு நபர்கள், என் மனைவியை தாக்கி கொலை செய்துவிட்டு சென்றதாக கூறியுள்ளார்.
ஆனால் பொலிசாருக்கு பாலகணேஷ் மீது சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் பொலிசார் பாலகிருஷ்ணனிடம் கிடுக்குப் பிடி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திருமணமாகி முன்றாண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாத காரணத்தினால், பிரியா மிகுந்த மனக்கஷ்டத்தில் இருந்ததாக தெரிகிறது.
சம்பவ தினத்தன்று குழந்தை இல்லாதது குறித்து இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது, அப்போது ‘நீ ஆண்மையற்றவன்’ என்று பாலகணேஷை ஞானப்பிரியா திட்டியதாகச் சொல்லப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பாலகணேஷ், நண்பர் மனோஜ் உதவியுடன் ஞானப்பிரியாவைக் சுத்தியலால் தலையில் அடித்துக் கொலை செய்துள்ளார்.
தொடர்ந்து வீட்டின் வெளிப்புறம் தாழிட்டுவிட்டு, அதன் பின் தனது கை மற்றும் கால்களை குளியலறை அருகே வந்து கட்டி கொண்டு நாடகமாடியுள்ளார்.
நகைக்காக கொலை நடந்தது போன்று சித்தரிக்க மனோஜ், தங்க செயினை எடுத்துக் கொண்டு சென்றுள்ளார், இருவரையும் கைது செய்துள்ள பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நேற்று நடிகர் சங்கம் சார்பில் மௌனப்போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் ரஜினி, கமல், விஜய் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். இதில் நடிகர் சிம்பு கலந்துகொள்ளவில்லை.
இந்த மௌனப்போராட்டத்தில் எனக்கு உடன்பாடு இல்லை, ஏனெனில் பேசாததால் தான் தற்போது பிரச்சனையே, எல்லோரும் சரியான தருணத்தில் பேசியிருந்தால் கண்டிப்பாக நல்ல தீர்ப்பு கிடைத்திருக்கும்.
தொடர்ந்து தமிழகத்தில் பிரச்சனைக்கு மேல் பிரச்சனை வந்துக்கொண்டே இருக்கின்றது, இது எப்போது இருந்து என்பதை மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.
ஜெயலலிதா இறந்த பிறகு தான் இந்த பிரச்சனைகள் தொடர்ந்து வந்துக்கொண்டே இருக்கிறது, தமிழகத்திற்கு யாரோ சூனியம் வைத்தது போல் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் கோவை மாவட்டத்தில் சொந்த சகோதரியை கொன்று உடலை துண்டு துண்டாக வெட்டி எரித்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
கோவை மாவட்டம் உக்கடம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி சங்கீதா கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தயார் மற்றும் தம்பி சரவணனுடன் வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் சங்கீதாவுக்கும் சரவணனுக்கும் தகராறு ஏற்பட்டதில், சரவணன் தாக்கி சங்கீதா இறந்துள்ளார்.
இதனையடுத்து சடலத்தை துண்டு துண்டாக வெட்டி பேக்கில் அடைத்து, கோவை விமான நிலையம் அருகே உள்ள காட்டில் வைத்து எரித்துள்ளார்.
சங்கீதாவை கொலை செய்ததை அவரது மகள் நேரில் பார்த்து தமது பாட்டியிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து பொலிசாருக்கு அளித்த புகாரின் பேரில் சரவணனை கைது செய்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட பொலிசாரிடம், தம்மை மன நலம் பாதித்தவர் என தமது சகோதரி கூறியதாலையே ஆத்திரத்தில் கொலை செய்துள்ளதாக வாக்குமூலம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் இளைஞர் ஒருவர், மந்திரவாதி கூறியதற்காக சாவி, பட்டரி, வயர், கண்ணாடித் துண்டுகளை சாப்பிட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் ஹர்டோய் அருகில் உள்ள பில்கிராம் பகுதியை சேர்ந்தவர் அஜய் திரிவேதி(42). இவருக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
இதனால் இவரின் திருமணம் தள்ளிப் போனதால், தனக்கு யாராவது சூனியம் வைத்திருப்பார்களோ என்ற சந்தேகம் ஏற்படவே மந்திரவாதி ஒருவரை சந்தித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து தன்னால் இதனை சரி செய்ய முடியும் என்றும், அதற்கு தான் கூறுவதை கேட்க வேண்டும் என அந்த இளைஞரிடம் தெரிவித்துள்ளார்.
அதற்கு சரி என்று கூறிய அஜய்க்கு தினமும் ஒரு அதிர்ச்சியான வைத்தியத்தை அந்த மந்திரவாதி அளித்துள்ளார். மந்திரவாதி கூறியபடி கைப்பேசி, அதன் பேட்டரி, சாவிகள், வயர், கண்ணாடித்துண்டு, ஆணி, ஊசி என ஒவ்வொன்றாக தினமும் அஜய் சாப்பிட்டுள்ளார்.
இதனால், அஜய்க்கு பயங்கரமான வயிற்று வலி ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் Scan செய்தபோது அதிர்ச்சியடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து, அறுவை சிகிச்சை மூலமாக அஜய்யின் வயிற்றில் இருந்த பொருட்களை, மருத்துவர்கள் வெளியே எடுத்தனர். மேலும், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஹரியாணா மாநிலத்தில் தன்னிடம் வரம்புமீறிய பொலிசை இளம் பெண் ஒருவர் அடித்து துவைத்து, அவர் மீது புகாரும் அளித்துள்ளார்.
நேகா ஜங்ரா ஒரு கராத்தே வீராங்கனை ஆவார். இவர் தினமும் காலை 5 மணி முதல் 7 மணி வரை கராத்தே பயிற்சி வகுப்பிற்கு செல்வது வழக்கம். வழக்கம்போல பயிற்சி வகுப்பிற்கு ஆட்டோவில் சென்றுகொண்டிருந்தபோது, யாசின் என்ற நபர் இடையில் ஏறியுள்ளார்.
யாசின் சீருடை அணியாமல் இருந்ததால், அவர் பொலிஸ் என்பது நேகாவிற்கு தெரியவில்லை. இதற்கிடையில் நேகாவின் போன் நம்பரை தருமாறு யாசின் கேட்டுள்ளார். ஏன் என்று கேட்டதற்கு, நண்பர்களாக பழகுவோம் என தெரிவித்துள்ளார்.
நேகா மறுத்தவுடன் தனது பாலியல் சீண்டல்களை ஆரம்பித்துள்ளார், இதனால் கோபம் கொண்ட நேகா, யாசினை அடித்து துவைத்துள்ளார். பின்னர், யாசினை நேராக மகளிர் காவல் நிலையம் இழுத்து சென்று, அவர் மீது புகார் அளித்துள்ளார்.
யாசின் பொலிஸ் என்பதால், அவரை விட்டுவிடுமாறு மகளிர் பொலிசார் தெரிவித்துள்ளனர். இருப்பினும் தனது தந்தையின் உதவியோடு, யாசினின் அடையாள அட்டையை புகைப்படம் எடுத்துக்கொண்ட நேகா, யாசின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மகளிர் பொலிசிடம் வற்புறுத்தியுள்ளார் இதனைத்தொடர்ந்து யாசின் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஹரியாணா மாநில அளவில் நடந்த கராத்தே போட்டிகளில் தங்கம் வென்றுள்ள நேகா, 2017 பிப்ரவரியில் கோவாவில் நடந்த ஒரு தேசிய அளவிலான போட்டியிலும் தங்கம் வென்றுள்ளார்.