முல்லைத்தீவு இளைஞர் மாயம் : தாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!!

 
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பைச் சேர்ந்த இளைஞரொருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் காணாமல் போனதாக கூறப்படும் இளைஞரின் தாயாரால் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாட்டில், புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட உடையார் கட்டுப்பகுதியில் உறவினர்களுடன் வசித்து வந்த ஜேசுதாசன் நியூசன் என்ற இளைஞரே நேற்று முன்தினம் (09.04.2018) காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலிக்கொடியுடன் சேப்பாக்கம் மைதானத்தை அதிரவைத்த தமிழர்கள்!!

 
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்ட தமிழர்கள் சிலரின் செயல் அரங்கையே அதிர வைத்துள்ளது.

காவிரி விவகாரம் குறித்து தமிழகத்தில் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில், நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தை அண்மித்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருந்தது.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் போட்டியை காண்பதற்காக மைதானத்திற்குள் சென்ற சிலர் புலிக்கொடியுடன், ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிக்கு எதிராக கோசம் எழுப்பியுள்ளனர். இந்த சம்பவமானது தற்பொழுது காணொளியாக வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பிரித்தானிய அரச மாளிகைக்குள் இலங்கை பெண்ணுக்கு கிடைத்த அங்கீகாரம்!!

பிரித்தானிய இளவரசர் ஹரியின் திருமணத்தை ஒளிபரப்பும் வாய்ப்பை கனேடிய தொலைக்காட்சி செய்தி சேவையின் ஊடகவியலாளர் பெற்றுள்ளார்.

இலங்கையை பூர்வீமாக கொண்ட ஆன் மேரி அபேசிங்க மெடிவக்கே (Anne- Marie Mediwake) என்பவரே இந்த வாய்ப்பை பெற்றுள்ளார். இவர் 1975ஆம் ஆண்டு கண்டியில் பிறந்த ஒருவராகும்.

அவர் மெர்வின் மெடிவகேவின் மகளாகும். அவர் தனது குடும்பத்துடன் கனடாவுக்கு குடிபெயர்ந்து வாழ்ந்து வருகின்றார். அவர் கனேடிய தொலைகாட்சி ஒளிபரப்பாளருக்கு கிடைக்கக்கூடிய மிக உயர்ந்த விருதுகளை வென்றுள்ளார்.

கனேடிய ஒளிபரப்பு தொலைக்காட்சி மற்றும் தொலைக்காட்சி வலையமைப்பின் முதன்மையான தொலைக்காட்சி செய்திகளை ஒளிபரப்பியுள்ளார்.

ஆன் மேரி தனது தொலைக்காட்சி வாழ்க்கையை 1993 ஆம் ஆண்டில் Lethbridgeஇல் இளவயதினராக தொடங்கியுள்ளார். அங்கு Alberta பகுதியில் உள்ள உள்ளூர் தொலைக்காட்சிக்காக குழந்தைகள் மற்றும் இளைஞர்களுடன் தொடர்புடைய நிகழ்ச்சிகளை எழுதவும் தயாரிக்கவும் ஆரம்பித்தார்.

1990 ஆண்டுகளில் ஆன் மேரி தனது வீட்டு மாகாணமான Albertaவில் உள்ள பல்வேறு நிலையங்களில் பணி புரிந்துள்ளார். அங்கே அவர் தொலைக்காட்சி தொடர்பான எல்லாவற்றையும் முயற்சி செய்ய ஆர்வமாக இருந்தார்.

Albertaவில் 6 ஆண்டுகள் செலவழித்த பிறகு, அவர் CTV க்கு நிருபராக பணியாற்றிய டொரொண்டோவிற்கு சென்றார். 2011 ஆம் ஆண்டில், அவர் ஆண்டின் டொரண்டோ பெண் என்ற சிறப்பு பெயரை பெற்றுள்ளார்.

2007ஆம் ஆண்டு அவர் திருமணம் செய்து குழந்தை ஒன்று தாயானார். இந்நிலையில் அவர் லண்டன் ரோயல் திருமணத்தை ஒளிபரப்பும் சந்தர்ப்பத்தை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரித்தானிய ராணி எலிசபெத்தின் பேரனும் இளவரசர் வில்லியமின் தம்பியுமான இளவரசர் ஹரிக்கும், அமெரிக்க நடிகையான மேகன் மார்க்லிக்கும் திருமணம் நடைபெறவுள்ளது.

எதிர்வரும் மே மாதம் 19 ஆம் திகதி திருமணம் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது திருமண நிகழ்வின் சில முக்கிய விடயங்களை கென்சிங்டன் அரண்மனை (Kensington Palace) தனது அதிகாரபூர்வ கீச்சகத்தில் வெளியிட்டுள்ளது.

இந்த பொருட்கள் உடல் எடையை குறைக்குமாம் : முயற்சிசெய்து பாருங்கள்!!

உடல் எடையை குறைக்க பலரும் கஷ்டப்பட்டு வரும் நிலையில் வீட்டில் உள்ள பொருட்களை கொண்டே எளிதாக எடையை குறைக்கலாம்.

முறையான உடற்பயிற்சியும், ஆரோக்கியமான உணவுமே எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

தினமும் 2- 3 கப் இஞ்சியை டீயாக அருந்தலாம், உணவுக்கு இடையே இஞ்சியை வாயில் போட்டு மெல்லலாம், இஞ்சியை சிறு துண்டுகளாக்கி தண்ணீர் பாட்டிலில் இட்டு அந்த நீரை அருந்தலாம்.

ஒரு பாத்திரத்தில் 1 கப் நீரை ஊற்றி, அதில் 1-2 டீஸ்பூன் க்ரீன் டீ தூள் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, வடிகட்ட வேண்டும், இதனை தினமும் குடித்து வந்தால் உடல் எடை குறையும்.

ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் 1 டீஸ்பூன் மஞ்சள் தூள், 1 எலுமிச்சையின் சாறு, 1 சிட்டிகை மிளகாய் தூள் மற்றும் தேன் சேர்த்து கலந்து, தினமும் குடிக்கலாம்.

ஒரு பாத்திரத்தில் 2 கப் நீரை ஊற்றி, அதில் உலர்ந்த செம்பருத்தி இதழ்களை 2 டேபிள் ஸ்பூன் போட்டு, 5-10 நிமிடம் கொதிக்க வைத்து வடிகட்டி, தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, தினமும் 2-3 கப் குடியுங்கள்.

ஒரு கப் நீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அதில் 2 டீஸ்பூன் டான்டேலியன் வேரைப் போட்டு 1 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, 10 நிமிடம் கழித்து வடிகட்டி குடிக்கலாம்.
3 டீஸ்பூன் கற்பூரவள்ளி இலைகளை ஒரு கப் சுடுநீரில் போட்டு 5-10 நிமிடம் ஊற வைத்து, பின் வடிகட்டி குடிக்கலாம்.

ஒரு பாத்திரத்தில் 1 டேபிள் ஸ்பூன் புதினா இலைகளைப் போட்டு, 1 கப் நீரை ஊற்றி, 10 நிமிடம் ஊற வைத்து வடிகட்டி குடிக்கலாம்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயார் : கோத்தாபய ராஜபக்ச அறிவிப்பு!!

 

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு தயார் என தெரிவித்துள்ள பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச, அதற்காக அமெரிக்க குடியுரிமையை கைவிட தயார் எனவும் கூறியுள்ளார்.

கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

“அடுத்த ஜனாதிபதி தேர்தலில் என்னை வேட்பாளராக தெரிவு செய்வது குறித்து கொழும்பு அரசியலில் பேசப்படுகின்றது. இந்த விடயம் குறித்து யாரும் இதுவரையில் என்னை அணுகவில்லை.

அதுபற்றி முடிவு செய்வதற்கு இன்னமும் ஒன்றரை ஆண்டுகள் இருக்கின்றன. இது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவைப் பொறுத்த விடயம். மிகச் சிறந்த வேட்பாளர் என்று அவரேமுடிவு செய்வார்.

வெற்றி பெறக் கூடிய, பொருத்தமான வேட்பாளர் யார் என்பது அவருக்குத் தெரியும். மகிந்த ராஜபக்சவை விட, வேட்பாளராவதற்கு பொருத்தமானவர் வேறு எவரும் இல்லை.

மக்கள் ஆதரவையும், பிரபலத்தையும், தற்போதைய சூழ்நிலையில் தேவைப்படும் தலைமைத்துவத்தை வழங்கக் கூடிய ஆற்றலையும் அவர் கொண்டுள்ளார். அவர் அனுபவம் மிக்கவர்.

19வது அரசியலமைப்பு திருத்தச்சட்டத்தினால், துரதிஷ்டவசமாக அவர் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட முடியாது. அவரது ஆதரவைப் பெற்ற எவரேனும் ஒருவரால் தான் வெற்றி பெற முடியும்.

எனினும், அடுத்த ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்ச தன்னை வேட்பாளராகத் தெரிவு செய்தால் நான் போட்டியிடுவேன்.

அதற்காக முன்வருவேன். போட்டியிடுவதற்கான ஆற்றல் எனக்கு இருப்பதாக நான் நினைக்கிறேன்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பற்றி எரியும் தீ, கதறித் தவித்த சிறுமிகள் : அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சிகள்!!

நியூஜெர்சியிலுள்ள நடன ஸ்டுடியோ ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்திலிருந்து உயிர் தப்ப ஜன்னல் வழியாக சிறுமிகள் குதிக்கும் அதிர்ச்சி வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Old River சாலையிலுள்ள Edgewater பகுதியில் அமைந்துள்ள நடன ஸ்டுடியோ ஒன்றின் முதல் தளத்தில் திடீரென்று தீப்பற்றியது. பின்னர் தீ இரண்டாவது தளத்திற்கும் மளமளவென பரவியது. உள்ளே சிக்கியிருந்த சிறுமிகள் பயத்தில் அலறினர்.

இதைக் கண்ட Edgewater Police Sgt. James Dalton மற்றும் அங்கு நின்று கொண்டிருந்த Tony Nehmi இருவரும் ஏணி ஒன்றில் ஏறி அந்த கட்டிடத்தினுள் சிக்கிக் கொண்டிருந்த சிறுமிகளை மீட்பதற்காக ஜன்னல் கண்ணாடியை உடைத்தனர்.

வெளியே வந்த சிறுமிகள் ஜன்னலை ஒட்டியிருந்த திண்டில் தொங்கிக் கொண்டிருப்பதும் அவர்களை கீழே நிற்பவர்கள் குதிக்கச் சொல்வதும் வீடியோவில் பதிவாகியுள்ளது.

ஒரு சிறுமியை ஒருவர் ஏணியில் ஏறி மீட்க முயலும்போது மற்ற சிறுமிகள் கீழே குதித்து விட்டனர். சிறுமிகள் பயத்தில் அலறும் சத்தமும் பார்த்துக் கொண்டிருப்பவர்களின் சத்தமும் காண்போரை அதிர்ச்சியடையச் செய்கிறது.

கீழே குதித்ததில் சிறுமிகளுக்கு அடி பட்டது என்றாலும் அவர்கள் தீயில் சிக்கியிருந்தால் அவர்களது நிலைமை மோசமாகியிருக்கும். கீழே குதித்த சிறுமிகளை உடனடியாக அங்கிருப்பவர்கள் தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடுகின்றனர்.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுமிகளுக்கு பெரிய அளவில் காயங்கள் எதுவும் இல்லை என்றும் அவர்களது நிலைமை சீராக உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

https://www.youtube.com/watch?v=Uy82AUEV-Yk

இப்படி செய்திட்டியே பாவி : மனைவியை கொன்ற குருக்களிடம் பாய்ந்த சகோதரர்கள்!!

மனைவியைக் கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவரை பொலிசார் கைது செய்த நிலையில், இறந்த பெண்ணின் சகோதரர்கள் மற்றும் உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

சென்னை வடபழனியை சேர்ந்தவர் பிரபு என்கிற பாலகணேஷ். இவர் மனைவி ஞானப்பிரியா.

கடந்த 5-ஆம் திகதி தனது வீட்டில் ஞானப்பிரியா ரத்தவெள்ளத்தில் சடலமாக கிடந்த நிலையில் பாலகணேஷ் கை,கால்கள் கட்டப்பட்டு கிடந்தார்.

முதலில் இது கொள்ளையர்களின் செயல் என கூறப்பட்ட நிலையில் பாலகணேஷ் தனது மனைவியை கொன்று நாடகமாடியது தெரியவந்தது.

இதற்கு அவரின் நண்பர் மனோஜும் உதவியுள்ளார். கடந்த சில மாதங்களாக, ஞானப்பிரியாவின் நடவடிக்கைகள், அவமானப்படுத்தும் பேச்சு ஆகியவற்றால் பாலகணேஷ் விரக்தியடைந்த நிலையிலேயே அவரை கொலை செய்துள்ளார்.

இதையடுத்து பாலகணேஷ் மற்றும் மனோஜை பொலிசார் கைது செய்து வடபழனி காவல் நிலையத்தில் அடைத்துள்ளனர்.

இந்நிலையில், ஞானப்பிரியைவை பாலகணேஷ் கொலை செய்த தகவல் கிடைத்ததும், அவரது சகோதரர்கள். உறவினர்கள் காவல் நிலையத்துக்கு வந்தனர். ஆத்திரத்தில் அவர்கள், ‘உன்னை நம்பித் தான் கட்டிக்கொடுத்தேன். இப்படிச் செய்துவிட்டாயே பாவி என்று கதறினார்கள்.

தொடர்ந்து, உறவினர்களில் சிலர் அவரை அடிக்கவும் பாய்ந்ததாகவும், பொலிசார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார்கள் என்றும் கூறப்படுகிறது.

தமிழ்த்தாய் வாழ்த்தின் போது நடிகர் விஜய் எழுந்து நிற்கவில்லையா?

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடிகர் சங்கம் சார்பில் மௌனப்போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடியபோது நடிகர் விஜய் எழுந்துநிற்கவில்லை என்று கூறி வீடியோ ஒன்று வெளியானது. ஆனால், அது முற்றிலும் போலியான வீடியோ என தயாரிப்பாளர் தனஞ்செயன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

போராட்டத்தின் போது, நாசர் சார் அவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினார். அப்போது, எனது அருகில் அமர்ந்திருந்த விஜய் சாரும் என்னுடன் சேர்ந்து எழுந்து நின்று, தமிழ்தாய் வாழ்த்தை பாடினார் என டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.

இதனையடுத்து, போராட்டத்தில் விஜய் முதல் ஆளாக கலந்துகொண்ட வீடியோவை அவரது ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

வீட்டு வாடகைக்காக 8 வயது சிறுவன் படுகொலை : நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்!!

வேலூர் மாவட்டத்தில் வீட்டு வாடகைக்காக 8 வயது சிறுவன் கொலை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கூலித்தொழிலாளி சங்கர்- வினோதினி. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. முதல் குழந்தையான கிஷோர்குமார் (8) உமர்ரோட்டில் உள்ள நகராட்சி துவக்கப்பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வந்தான்.

கடந்த 5 ஆம் திகதி இச்சிறுவன் மர்மமான முறையில் காணாமல் போயுள்ளான், எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் கிஷோரின் தந்தை சங்கர், நகர காவல் நிலையத்தில் தனது மகனை காணவில்லை என்று புகார் கொடுத்தார்.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வேலூரில் உள்ள பெங்களூர்- சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள பாழடைந்த கிணற்றில் இருந்து தூர்நாற்றம் வீசியிருக்கிறது.

இதனை அப்பகுதி மக்கள் எட்டிப்பார்த்தபோது, கிணற்றில் சிறுவன் ஒருவனின் சடலம் மிதந்து தெரியவந்தது.

தகவலின் பேரில் அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் சடலத்தை மீட்டனர். அந்த சடலம், காணாமல் போன சிறுவன் கிஷோர்குமார் என்பது விசாரணையில் தெரியவந்தது.

அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞருக்கு கடந்த ஆண்டுதான் திருமணம் நடைபெற்றது

வாடகை வீட்டில் வசித்து வந்த விக்னேஷ், மாத வாடகையை குறிப்பிட்ட நாளில் கட்ட பணம் இல்லாமல் என்ன செய்வது என்று தவித்திருக்கிறார்.

அந்த நேரத்தில் சிறுவன் கிஷோர் கையில் செல்போனுடன் விளையாடிக் கொண்டிருந்ததை பார்த்து, அவன் கையில் வைத்திருந்த செல்போனை பிடுங்கியிருக்கிறார். இது வெளியில் தெரியாமல் இருக்க சிறுவனை அருகில் இருந்த கிணற்றில் தள்ளிவிட்டு அங்கிருந்து சென்றிருக்கிறார்.

பின்னர், அந்த செல்போனை நண்பனின் உதவியுடன் விற்பனை செய்து, கிடைத்த பணத்தை வைத்து வாடகையை கட்டியுள்ளார்.

சிறுவன் கையில் வைத்திருந்த செல்போன் போன் மூலமே அவர் கொலை செய்யப்பட்டதற்கான தடயம் பொலிசாருக்கு தெரியவந்துள்ளது. சிறுவனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்ட 24 மணிநேரத்தில் விக்னேஷ் கைது செய்யப்பட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வாடகை பணத்திற்காக இப்படி சிறுவனை கொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆணாக மாறிய காதலி : பெண்ணாக மாறிய காதலன் : இந்தியாவின் முதல் விசித்திர திருமணம்!!

இந்தியாவிலேயே முதன்முறையாக காதலன் பெண்ணாகவும், காதலி ஆணாகவும் மாறி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவை சேர்ந்தவர் சூர்யா (25). நடன கலைஞரான இவர் சினிமாவில் துணை நடிகராகவும் உள்ளார். இவரது தோழி இசான்கேசான் (19). 2013-ம் ஆண்டு சூர்யாவும், இசான்கேசானும் சந்தித்து அவர்களுக்குள் நட்பு ஏற்பட்ட நிலையில் பின்னர் காதலாக மாறியது.

இருவரும் 6 மாதம் காதலித்தனர். அப்போது இருவரும் வித்தியாசமான முறையில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.

காதலன் பெண்ணாகவும், காதலி ஆணாகவும் மாறி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி கடந்த 2014-ம் ஆண்டு சூர்யா ஆபரேசன் மூலம் பெண்ணாக மாறினார். அவரது காதலி 2015ம் ஆண்டு சத்திரசிகிச்சை மூலம் ஆணாக மாறினார்.

இதையடுத்து தங்கள் திருமணத்துக்கு பெற்றோரிடம் சம்மதம் கேட்க அவர்களும் சம்மதித்தனர்.

அதன்படி அடுத்த மாதம் கேரள அரசின் திருமண சிறப்பு திருத்த சட்டப்படி காதலர்களுக்கு திருமணம் நடைபெற உள்ளது.

போர்க்களமானது சென்னை அண்ணாசாலை : சீமான், பாரதிராஜா உட்பட பலர் கைது..!

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மற்றும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும் தமிழகம் முழுவதும் தொடர் போராட்டம் நடந்து வருகிறது.

இதனால், இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவிருக்கும் ஐபிஎல் போட்டியை நடத்துவதற்கு அனுமதி வழங்ககூடாது என அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்புகள் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.

அண்ணாசாலை முழுவதும் தமிழ் கொடிகளை கையில் ஏந்தி கொண்டு, எங்கள் நாடு தமிழ்நாடு…விடமாட்டோம் விடமாட்டோம் என தமிழன்டா…என கோஷங்களை எழுப்பியவாறு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

போராட்டங்களில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது பொலிசார் தடியடி நடத்தி வருகின்றனர், இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட சீமான், பாரதிராஜா போன்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிரிக்கெட் வீரர்கள் ஐபிஎல் மைதானத்திற்குள் நுழைந்துவிட்ட நிலையில், ரசிகர்களும் பலத்த சோதனைக்கு பின்னரே, உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.

இதற்கிடையில், போராட்டத்தில் ஈடுபட்ட சீமானின் நாம் தமிழர் கட்சியினர், டோனி ரசிகன் சரவணன் என்பரை தாக்கியதாக அவர் புகார் அளித்துள்ளார்.

இந்த போராட்டத்தினை பயன்படுத்தி பிளாக்கிள் டிக்கெட்டுகள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்த நிலையில், நபர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

காதலிக்கு காதலன் செய்த கொடூரம் : இலங்கைப் பெண்களே அவதானம்!!

காதலியின் நிர்வாணப் படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடப் போவதாக அச்சுறுத்திய காதலன் ஒருவன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யுவதியை தொடர்ந்து அச்சுறுத்தி வந்த காதலனான இளைஞன் அந்த பெண்ணிடமிருந்து 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பணத்தையும் அபகரித்துள்ளதாக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிலாபம் வென்னப்புவ பகுதியில் நடந்த குறித்த சம்பவம் தொடர்பில் நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 21வயதுடைய இளைஞனும் அவரது தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

குடும்பத்தில் ஒரே பிள்ளையான குறித்த யுவதி நீர்கொழும்பில் உள்ள தனியார் கல்வி நிலையமொன்றில் கற்று வந்தார். இதன்போது குறித்த 21 வயது இளைஞனுடன் அவர் காதல் வயப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் குறித்த இளைஞன் அந்த யுவதியுடன் பல தடவைகள் பாலியல் உறவை மேற்கொண்டு வந்துள்ளார். இவ்வாறான சந்தர்ப்பங்களில் அந்த உடலுறவு காட்சிகளை பல தடவைகள் தனது கைப்பேசியில் வீடியோ படம் பிடித்து பதிவு செய்து வைத்துள்ளமை விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு கைப்பேசியில் பதிவு செய்து வைத்திருந்து நிர்வாணப்படங்களை குறித்த யுவதிக்கு காட்டி சமூக வலைத்தளங்களிவ் வெளியிட்ப் போவதாக அச்சுறுத்தி, அப்பெண்ணிடம் பல தடவைகள் பணம் வாங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த யுவதி தமது பெற்றோரின் வங்கி அட்டை மூலமாகவே பணத்தை எடுத்து தனது காதலனான அந்த இளைஞனுக்கு கொடுத்துள்ளார்.

பின்னர் ஒருநாள் யுவதியின் தாயார் வங்கியில் சென்று தனது கணக்கைப் பரிசீலித்த போது தான் அந்தக் கணக்கில் பணம் இல்லாததை அவதானித்துள்ளார். இது குறித்து மகளிடம் கேட்ட போது அவர் சகல விடயங்களையும் தாயாரிடம் கூறியுள்ளார்.

இதனையடுத்து யுவதியின் தாயார் செய்த வென்னப்புவ பொலிஸல் செய்த முறைப்பாட்டையடுத்து குறித்த சந்தேக நபரான இளைஞனும் அவரது தந்தையும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர் தன்னை வல்லுறவுக்கு உட்படுத்தியதாகவும், அதனை மறைப்பதற்காக வற்புறுத்தலின் பேரில் தான் வங்கியில் பணம் பெற்று வழங்கியதாகவும் குறித்த யுவதி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சந்தேக நபரான இளைஞனையும் இதற்கு உடந்தையாக இருந்துள்ளார் என அவரது தந்தையையும் பொலிஸார் கைது செய்து விசாரணைக்குட்படுத்தியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக வென்னப்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் நடக்கின்ற சம்பவங்களினால் யுவதிகள் காதல் விடயத்தில் மிகவும் விழிப்பாக நடந்து கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பலரும் தெரிவிக்கின்றனர்.

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம்!!

வவுனியா நூலக வீதியில் இன்று (10.04.2018) காலை 10.45 மணியளவில் இடம்பெற்ற வான் – மோட்டார் சைக்கில் விபத்தில் இளைஞன் ஒருவர் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ் விபத்துச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியா மின்சாரசபை வீதியிலிருந்து வைரவப்புளியங்குளம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கில் பூங்கா வீதியின் மறுபக்க (வைரவப்புளியங்குளம் வீதி) வீதிக்கு திரும்ப முற்பட்ட சமயத்தில் எதிர் திசையிலிருந்து மன்னார் வீதி நோக்கி பயணித்த வான் மோதி விபத்துக்குள்ளானதாக ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருவதாகவும்.

இவ் விபத்தில் மோட்டார் சைக்கிலின் சாரதி காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கையில் மனைவியுடன் மகிழ்ச்சியாக பொழுதை கழிக்கும் பிக்பாஸ் பிரபலம்!!

பிக்பாஸ் எனும் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான கணேஸ் வெங்கட்ராமன் மற்றும் அவரது மனைவி நிஷா ஆகியோர் அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தனர்.

திருமண நிகழ்வு ஒன்றுக்காக இலங்கைக்கு வந்த இவர்கள் யாழ். நல்லூர் முருகன் ஆலயத்திற்கு முன் நின்று எடுத்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் பரவி வந்தது.

அந்த வகையில் பெந்தொட்ட என்ற இடத்தில் வைத்து இவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது வெளிவந்துள்ளது.

பெந்தொட்ட சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியுள்ள இவர்கள், தமது அறை அமைந்துள்ள பகுதியை புகைப்படம் எடுத்து, அதை டுவிட்டரில் பதிவிட்டு, “உண்மையில் கடற்கரை ஒரு சொர்க்கம்” என தமது மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளனர்.

அத்துடன், பெந்தொட்டையில் அவர்கள் தங்கியுள்ள சுற்றுலா விடுதியில் உள்ள மீன் தொட்டில் அவர்கள் இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.

வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!!

இலங்கையர்களுக்கு சவுதி அரேபியாவினால் விதிக்கப்பட்ட சட்டம் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவில் தொழில் விசா பெற்றுக் கொள்ளும் போது சிறந்த சுய சான்றிதழ் ஒன்று சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்ற சட்டம் விதிக்கப்பட்டது.

எனினும் இந்த சட்டம் தற்போது தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக டுபாய் மற்றும் வடக்கு எமிரேட்ஸ் ஆகியவற்றிற்கான இலங்கை துணைத் தூதரகம் நேற்று அறிவித்துள்ளது.

எமிரேட்ஸ் வெளிவிவகார நடவடிக்கை மற்றும் சர்வதேச ஆதரவு தொடர்பான அமைச்சினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனை டுபாய் மற்றும் வடக்கு எமிரேட்ஸ் ஆகியவற்றிற்கான இலங்கை துணைத் தூதரகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய விசா பெற்றுக் கொள்ளும் போது சிறந்த சுய சான்றிதழ் சமர்ப்பிப்பதற்காக அவசியம் மீளவும் அறிவிக்கும் வரை நீக்கப்பட்டுள்ளது.

இலங்கையர்கள் உட்பட அனைத்து வெளிநாட்டு பணியாளர்களும் அந்த நாட்டில் தொழில் விசா பெற்று கொள்ளும் போது சுய சான்றிழ் சமர்ப்பிக்க வேண்டும் என அண்மையில் அந்த நாட்டு அமைச்சரவை தீர்மானித்திருந்தது.

எனினும் இந்த புதிய சட்டத்தினால் பல தூதுவர்கள் சிரமங்களுக்கு உள்ளாகுவதாக மத்திய கிழக்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இன்னொரு ஆணுடன் காதலி : கோரமாக கொலை செய்த இலங்கை இளைஞன்!!

மத்திய கிழக்கு நாடான ஷார்ஜா குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கையர் ஒருவர் குற்றவாளியாக பெயரிடப்பட்டுள்ளார். காதலியை கொலை செய்த குற்றச்சாட்டில் 30 வயதான இலங்கையர் மீதே இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குறித்த இலங்கையர், அந்த நாட்டில் பெண் ஒருவருடன் பாலியல் தொடர்பில் இருந்துள்ளார். எனினும் இருவருக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் கத்தியால் குத்தி பெண் கொலை செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாரினால் குற்றவாளியாக நீதிமன்றில் அறிவித்துள்ள போதிலும், குறித்த இலங்கையர் குற்றச்சாட்டை நிராகரித்து வருகிறார். இந்த வழக்கு நீதிபதி மொஹமட் அபு பக்கருக்கு முன்னால் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டுள்ளது.

விற்பனை முகவராக பணியாற்றும் குறித்த இலங்கையர் உயிரிழந்த பெண்ணுடன் அறையை பகிர்ந்து கொண்டுள்ளார். அத்துடன் அந்த பெண்ணுடன் கடந்த வருடங்களாக தொடர்பில் இருந்த நிலையில் அவரை திருமணம் செய்ய தீர்மானித்துள்ளார்.

பகுதி நேரம் வேலை செய்யும் பெண் Ajman பகுதிக்கு சென்றுள்ளார். இதன்போது இந்த பெண் தவறான தொழில் செய்வதாக இலங்கையருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதற்கமைய Ajman பகுதிக்கு சென்ற இலங்கையர் வீடு ஒன்றின் கதவை தட்டிய போது ஆண் ஒருவர் கதவை திறந்துள்ளார். அதன் பின்னர் தன்னுடன் தொடர்பில் இருந்த பெண்ணும் அங்கிருந்துள்ளார்.

இதனால் இருவருக்கும் இடையில் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரத்தில் இலங்கையர் கத்தியால் குத்திவிட்டு தப்பி சென்றுள்ள நிலையில் பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர். குறித்த வழக்கு விசாரணை தொடர்ந்தும் இடம்பெறும் என நீதிபதி வழக்கை ஒத்திவைத்துள்ளார்.