வவுனியா செட்டிக்குளம் – சண்முகபுரத்தில் நேற்று (03.03.2018) மாலை காட்டு யானை தாக்கியதில் காயமடைந்த நபர் ஒருவர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ராமசாமி லோகநாதன் (வயது 58) என்பவர் நேற்றையதினம் காலை மாட்டினை மேச்சலுக்காக காட்டிற்கு கொண்டு சென்று கட்டி விட்டு மீண்டும் மாலை வீடு திரும்பியுள்ளார்.
மீண்டும் மாலை காட்டிற்கு சென்ற சமயத்தில் காட்டு யானையின் தாக்குலுக்கு உள்ளாகியுள்ளார். அவரின் சத்தம் கேட்டு காட்டிற்கு சென்ற அயலவர்கள் அவரை மீட்டெடுத்து வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
வவுனியா செட்டிக்குளம், ஓமந்தை, நெடுக்கேனி போன்ற பகுதிகளின் காட்டு யானைகள் மக்களின் குடியிருப்புகளுக்கு சென்று விவசாய நிலங்களை சேதப்படுத்துவதுடன் குடியிருப்புக்களையும் சேதமாக்குகின்றது.
வவுனியா செட்டிக்குளத்தில் கடந்த இரண்டு மாதத்தினுள் பலர் காட்டு யானைகளின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பித்தக்கது.
வவுனியா குட்சைட் வீதியில் அமைந்துள்ள மஸ்தான் றேடர்ஸ் எரிபொருள் விற்பனை நிலையத்தில் எரிபொருளை திருடிய குற்றச்சாட்டில் நேற்று ( 03.03.2018) இரவு 10 மணியளவில் ஒன்பது நபர்களை கைது செய்துள்ளதுடன் எரிபொருள் கொள்கலன் வாகனத்தினையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
மஸ்தான் றேடர்ஸ் எரிபொருள் விற்பனை நிலையத்திலிருந்து எரிபொருளை திருடி தனியாருக்கு பல நாட்களாக விற்பனை செய்து வந்துள்ளனர். இவ் விடயம் தொடர்பாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றும் மேற்கொள்ளப்பட்டது.
இதனையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட வவுனியா பொலிஸார் நேற்று (03.03.2018) இரவு 10 மணியளவில் எரிபொருள் கொள்கலன் வாகனத்தினை கைப்பற்றியதுடன் வாகனத்தின் சாரதி உட்பட ஒன்பது நபர்களையும் கைது செய்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இலங்கையில் நடக்கவிருக்கும் டி20 முத்தொடரில் லசித் மலிங்க அணியில் சேர்க்கப்படாததற்கு ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இலங்கை, இந்தியா, வங்கதேச அணிகள் மோதும் சுதந்திரக் கிண்ண டி20 தொடர் எதிர்வரும் 6ம் திகதி கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது.
தொடர்ந்து இலங்கை அணியிலிருந்து புறக்கணிக்கப்பட்டு வரும் மலிங்க இந்த தொடருக்கான அணியிலும் சேர்க்கப்படவில்லை.
தற்போது நடைபெற்று வரும் உள்ளூர் டி20 போட்டிகளில் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தி வரும் மாலிங்க அணியில் சேர்க்கப்படாமல் உள்ளது இலங்கை ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்காக டுவிட்டரில் #BringBackMalinga என்ற டேக்கில் மலிங்கவை அணியில் சேர்க்க வலியுறுத்தி ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
உக்ரைனில் மூதாட்டி ஒருவர் இறந்த தன் தாயுடன் 30 ஆண்டுகள் வாழ்ந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைனின் மைகோலைவ் பகுதியைச் சேர்ந்த மூதாட்டி குறித்து அக்கம்பக்கத்தினர் பொலிசார் புகார் அளித்துள்ளனர்.
அதன் பின் பொலிசார் அந்த மூதாட்டி இருக்கும் வீட்டை சோதனை செய்து பார்த்த போது, அவரின் தாயார் உடல் சோபாவில் கிடத்தப்பட்டிருந்தது. வெள்ளை நிற ஆடை அணிவிக்கப்பட்டு, தலை மூடப்பட்டிருந்தது. நீல நிற ஷூ, பச்சை நிற சாக்ஸ் அணிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து பொலிசார் மூதாட்டிக்கு மனநிலை பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அதுமட்டுமின்றி அருகில் இருப்பவர்களிடம் இவர் குறித்து விசாரித்த போது யாரிடமும் அவர் பேசுவதில்லை என்று கூறியுள்ளனர்.
அணு ஆயுதத்தின் மூலம் உலகமே அழிந்தாலும், அழியாத கட்டிடம் ஒன்று நோர்வே வடதுருவப் பகுதியில் அமைந்துள்ளது.
இந்த கட்டிடம் ஸ்வால்பார்டு (Svalbard) தீவில் உள்ளது.இங்கு உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 1 மில்லியனுக்கு மேற்பட்ட பயிர் வகைகளின் கிடங்காக இருக்கும்.
2008ம் ஆண்டில் திறக்கப்பட்ட அந்தப் பயிர்க் கிடங்கு, இயற்கையின் மரபணுக்களின் பன்முகத்தன்மையைப் பாதுகாப்பதற்காக இருக்கிறது.
ஏனெனில் இயற்கைப் பேரிடர், பருவநிலை மாற்றம், போர், நோய்கள் ஆகிய அசம்பவிதங்கள் மூலம் பயிர் வகைகளுக்கு அழிவு நேரிடலாம்.
அவ்வாறு ஏற்பட்டால் அந்த பயிர்களை மீண்டும் வளர்ப்பதே இந்த முயற்சியின் நோக்கமாக உள்ளது.
மேலும் விலைமதிப்பில்லாத விதைகளைப் பாதுகாக்க 12.5 மில்லியன் டொலர் செலவு செய்யப்படும் என்று நோர்வே அண்மையில் அறிவித்திருந்தது.
அதனால் உலக வெப்பமயமாதலால் இந்த கட்டிடத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
தலையலங்காரத்துக்காக பியூட்டி பார்லருக்கு சென்று அனுபவமில்லாத ஒரு பியூட்டிஷியனிடம் மாட்டிக்கொண்டதால் இன்று தலையை மொட்டையடிக்க வேண்டிய நிலைமைக்கு ஆளாகியுள்ள ஒரு பெண் தெரியாதவர்களிடம் தலையைக் கொடுக்காதீர்கள் என்று எச்சரிக்கிறார்.
Georgiaவைச் சேர்ந்த Sierra Baynes(20) தனக்கு நேரிட்ட கொடுமையை விவரித்து தெரியாதவர்களிடம் தலையைக் கொடுக்காதீர்கள் என்று எச்சரிக்கும் ஒரு வீடியோவை இதுவரை 650,000 பேர் பார்த்திருக்கிறார்கள்.
பின்னல் போடும் போது அந்த பியூட்டிஷியன் Sierraவின் தலைமுடியை மிக இறுக்கமாகக் கட்ட, சிறிது நேரத்தில் அவர் தலையிலிருந்து இரத்தம் வரத் தொடங்கியது. முடி கொத்து கொத்தாக கொட்டத் தொடங்கியது.
வேறு வழியின்றி தனது தலையை மொட்டையடித்துள்ள Sierra, தெரியாதவர்களிடம் தலையைக் கொடுக்காதீர்கள் என்று மற்றவர்களை எச்சரிக்கிறார்.
அழகான சுருள் முடியுடையவரான Sierra, இப்போது விக் வைத்துக்கொண்டிருக்கிறார். சிகையலங்காரத்திற்கு நீங்கள் செலவு செய்கிறீர்கள். நீங்கள் கொடுக்கும் பணத்திற்கான நியாயமான சேவை உங்களுக்கு கிடைப்பதை உறுதி செய்துகொள்ளுங்கள் என்கிறார் Sierra Baynes.
சமூகவலைதளங்களில் ஸ்ரீதேவி இறப்பதற்கு காரணமான குளியல் தொட்டி குறித்து கிண்டல் செய்யப்பட்டு வரும் நிலையில் அதற்கு லட்சுமி ராமகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பிரபல நடிகை ஸ்ரீதேவி கடந்த 24 ஆம் திகதி துபாயில் குளியல் தொட்டியில் விழுந்து மரணமடைந்தார்.
அவருடைய இறுதிசடங்குகள் சமீபத்தில் நடைபெற்ற நிலையில், அவர் இறப்பதற்கு காரணமான குளியல் தொட்டி குறித்து ஜோக்குகள் மற்றும் மீம்ஸ்கள் சமூகவலைதளங்களில் வலம் வருகிறது.
இதற்கு நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் டுவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதில், குளியல் தொட்டி ஜோக்குகள் அதிகமாக வலம் வருகின்றன, இரக்கம் இல்லாமல் இப்படி செய்யும் முன்னர் அம்மாவை இழந்துள்ள இரண்டு மகள்களை நினைத்து பார்ப்போம்.
இதுபோன்ற இரக்கமற்ற ஜோக்குகளை பகிர்வதை நிறுத்துங்கள் என பதிவிட்டுள்ளார்.
பிரித்தானியாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தினமும் மூன்று மணிநேரம் செல்பி புகைப்படங்களை எடுத்து அதில் சிலவற்றை மட்டும் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து வருகிறார்.
22 வயதான ஜூனைத் அஹமது எனும் பிரித்தானிய இளைஞர், மொடலாக இருக்கும் நிலையில் செல்ஃபி கிங் என்று தன்னை அழைத்துக் கொள்கிறார். இவரை, 50 ஆயிரம் பேர் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் பின் தொடர்கிறார்கள்.
தினமும் விதவிதமாக ஒப்பனை செய்து கொள்ளும் ஜூனைத், மூன்று மணிநேரம் செலவு செய்து தினமும் 200 செல்ஃபி புகைப்படங்களை எடுக்கிறார். அவற்றில் சில படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிடும் இவர், வாரம் ஒருமுறை Facial செய்து கொள்கிறார்.
மேலும், தனது புருவங்களையும் திருத்திக் கொள்ளும் ஜூனைத்,கடந்தாண்டு மட்டும் பற்கள், புருவங்கள், உதடு, கண்கள், தலை என்று அழகுக்காகப் பல்வேறு சிகிச்சைகளை மேற்கொண்டிருக்கிறார்.
இது குறித்து ஜூனைத் கூறுகையில், ‘சமூக வலைதளங்களில் தொடர்ந்து நாம் கவனிக்கப்பட வேண்டும் என்றால் ஏதாவது வித்தியாசமாகச் செய்ய வேண்டும்.
ஒரு படத்தை இன்ஸ்டாகிராமில் போட, முதல் நிமிடத்தில் 100 பேர் விருப்பக்குறி இட்டிருப்பார்கள். ஒரு படம் வெளியிட்டு, குறைந்ததது 500 விருப்பக்குறிகளாவது இருந்தால் தான் அந்தப் படத்தைத் தொடர்ந்து வைத்திருப்பேன்.
அதைவிடக் குறைவாக இருந்தால் படத்தை நீக்கிவிடுவேன். ஓராண்டுக்கு முன்புவரை நான் இவ்வாறு இல்லை. ஆனால், சமூக வலைதளங்களின் மீது ஆர்வம் வந்த பிறகு, என்னை மேம்படுத்திக் கொண்டேன்.
பெரும்பாலானவர்கள் என் முயற்சிகளைக் கைதட்டி வரவேற்கிறார்கள். ஒவ்வொரு மாற்றத்துக்கும் நிறைய உழைப்பு, நேரம், பணம், வலி எல்லாம் தேவைப்படுகிறது. இதைப் புரிந்தவர்கள் பாராட்டுகிறார்கள்.
என்னை விமர்சிப்பவர்களும் கணிசமாக இருக்கிறார்கள். நான் இயற்கையாக இருந்தபோது பள்ளியிலும், கல்லூரியிலும் என் உருவத்தைக் கிண்டல் செய்தார்கள். உங்களை விமர்சனம் செய்பவர்களிடம் நீங்கள் யார் என்று காட்டுங்கள் என தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் மனைவி கென்யாவுக்கு சென்றிருந்த நேரத்தில் ஒரு வயது மகளை கொடூரமாக கொலை செய்த தந்தையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அலபமா மாகாணத்தை சேர்ந்தவர் ஷா குயுல் (26). இவர் மனைவி அட்ரியன் ஓமண்டி (24). இவர்களுக்கு கேத்தியா (1) மற்றும் ஜிராயா என இரட்டை பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் கென்யாவில் உள்ள தனது குடும்பத்தினரை பார்க்க அட்ரியன் சென்றுள்ளார். அப்போது வீட்டிலிருந்த தனது மகள் மேத்தியாவை, ஷா கொடூரமாக கொலை செய்துள்ளார்.
சம்பவம் குறித்து அறிந்த பொலிசார் ஷா வீட்டுக்கு வந்து அவரை கைது செய்ததுடன் மேத்தியாவின் சடலத்தையும் கைப்பற்றினார்கள்.
ஷா தனது மகளை ஏன் கொலை செய்தார் என இன்னும் தெரியாத நிலையில் பொலிசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
கள்ளக்காதலியின் மகனை கொலை செய்த நபர் பொலிஸ் விசாரணையில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
சென்னை நெசப்பாக்கத்தை சேர்ந்த கார்த்திகேயன் என்பவரது மனைவி மஞ்சுளா. தம்பதிக்கு ரித்தீஷ் சாய் (9) என்ற மகன் இருந்தான்.
மஞ்சுளாவுக்கு நாகராஜ் என்பவருடன் கள்ளக்காதல் இருந்த நிலையில், இருவரும் பலமுறை தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.
இதுகுறித்து அறிந்த கார்த்திகேயன் பொலிசில் புகார் அளிக்க பொலிசார் நாகராஜை கைது செய்தனர். பின்னர் சிறையிலிருந்து வெளியில் வந்த நாகராஜ் கார்த்திகேயனை பழிவாங்க திட்டமிட்டார்.
இதையடுத்து நேற்று முன்தினம் இரவு டியூஷனில் இருந்த ரித்திஷை கடத்தி சென்றுள்ளார் நாகராஜ்.
பின்னர் சேலையூரில் உள்ள தனது வீட்டில் ரித்தீஷை கொடூரமாக கொலை செய்துள்ளார்.
இதையடுத்து பொலிசார் நாகராஜை கைது செய்தனர். அவர் பொலிசில் அளித்துள்ள வாக்குமூலத்தில், காலியாக இருந்த பீர் பாட்டிலை உடைத்து ரித்தீஷை கீழே தள்ளி, அவனது கழுத்தை அறுத்ததாக தெரிவித்துள்ளார்.
ஆனாலும் ரித்தீஷின் கழுத்து அறுபடாத நிலையில், அவன் மாமா.. மாமா என்னை விட்டுவிடுங்கள் என்று கெஞ்சியுள்ளான்.
அவனை விடாத நாகராஜ் அருகில் கிடந்த இரும்பு கம்பியால் ரித்தீஷ் தலையில் ஓங்கி அடித்து தீர்த்து கட்டியதாக வாக்குமூலம் அளித்துள்ளார். நாகராஜின் கொடூர செயல் பொலிசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது
தமிழ்நாட்டில் மாணவர் ஒருவர் கல்லூரி பிடிக்காத காரணத்தால், தனது தந்தைக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் அருகேயுள்ள புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் தாமரைச் செல்வன். இவர், திருச்சி மாவட்டம் புத்தனாம்பட்டி கிராமத்தில், நேரு நினைவு கலை அறிவியல் கல்லூரியில் வணிகவியல் படித்து வந்துள்ளார்.
இந்நிலையில், தாமரைச் செல்வன் தான் தங்கியிருந்த விடுதியில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவரின் அறையில் கிடைத்த கடிதம் ஒன்றில், வாழ்க்கை என்ற தண்டவாளத்தை கடக்கத் தெரிந்தவன் வாழ்கிறான். கடக்கத் தெரியாதவன் என்னைப்போல் சாகிறான்.
எங்க அப்பாவுக்கு கஷ்டம் கொடுக்கக் கூடாது என்றுதான், கல்லூரி எப்படி இருந்தாலும் பரவாயில்லை, கட்டணம் குறைவாக உள்ளது என்ற ஒரே காரணத்துக்காக இந்தக் கல்லூரியில் சேர்ந்தேன்.
கல்லூரியில் சேர்ந்த முதல் நாளே, என்னுடைய வணிகவியல்துறை எங்கு என்று கேட்டபோது, கல்லூரிக்கு வெளியேதான் அந்தத் துறையின் கட்டடம் கட்டப்பட்டுள்ளது என்றார்கள். அதில் இருந்தே நான் வெறுத்துவிட்டேன்.
மேலும், இங்கு இருக்கும் சுற்றுப்புறச் சூழல் சரியாக இல்லை. என்னால் படிக்க முடியவில்லை என்று என்னுடைய அப்பாவிடம் எப்படிச் சொல்வது என தெரியவில்லை. இதற்கு மேலும் நான் இங்கு இருப்பதில் எனக்கு விருப்பமில்லை.
அதனால்தான், எங்க அப்பாவுக்கு எந்தவித தொந்தரவும் கொடுக்கக்கூடாது என இந்த முடிவை எடுக்கிறேன் என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மாணவரின் தற்கொலை குறித்து அவரின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் பொலிசார், மாணவரின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும், தாமரையுடன் கல்லூரியில் படிக்கும் மாணவர்களிடமும், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கர்நாடகா மாநிலத்தில் வேறு சமூகத்தை சேர்ந்த இளைஞரை காதலிப்பதாக கூறி பெற்ற மகளுக்கு விஷம் தந்து பெற்றோரே கொலை செய்துள்ள சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள கொல்லனபீடு கிராமத்தில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. இங்கு குடியிருக்கும் குமார் கவுடா என்பவரின் மகள் சுஷ்மா, வேறு சமுதாயத்தில் இளைஞர் ஒருவருடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார்.
இது கவுடா குடும்பத்தினரை ஆத்திரத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில் பல முறை தனது மகளிடம் எடுத்துக் கூறியும், அவர் தமது காதலை விட்டுத்தர மறுத்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பஞ்சாயத்தாரை கூட்டிய குமார் கவுடா, தமது மகளுக்கு புத்திமதி சொல்ல கோரியுள்ளார். ஆனால் அதிலும் இளம்பெண் சுஷ்மா ஒப்புக் கொள்ள மறுத்துள்ளார்.
இதனால் மேலும் ஆத்திரம் அடைந்த கவுடா குடும்பத்தினர், சுஷ்மாவை மாண்டியா பகுதியில் அமைந்துள்ள அவரது உறவினர் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
தொடர்ந்து 3 முறையாக குமார் கவுடா தமது குடும்பத்தாருக்கு இணக்கமான இளைஞர் ஒருவரை மகளுக்கு திருமணம் செய்து வைக்கும் பொருட்டு முயற்சி செய்துள்ளார்.
மூன்று முறையும் சுஷ்மா மறுப்பு தெரிவித்தது கவுடா குடும்பத்தாரை கோபத்தில் தள்ளியது. இந்த நிலையில் கடந்த மாதம் 20 ஆம் திகதி திருமண பேச்சு ஏதும் எடுக்காமல் மகளை வீட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார் குமார் கவுடா. வீட்டில் வந்த சுஷ்மாவிடம் குடும்ப நிலை தொடர்பில் விவாதித்துள்ளனர்.
அப்போது சுஷ்மாவின் தாயார் பழச்சாறு ஒன்றை சுஷ்மாவுக்கு அளித்துள்ளார். அதை சுவைத்த அவர், சந்தேகத்தில் அது தமக்கு வேண்டாம் என மறுத்துள்ளார்.
ஆனால், குமார் கவுடா, அவரது மனைவி மற்றும் உறவினர் கெம்பண்ண ஆகியோர் சேர்ந்து வலுக்கட்டாயமாக விஷம் கலந்த அந்த பழச்சாறை சுஷ்மாவுக்கு அளித்துள்ளனர்.
இரவு பத்தரை மணியளவில் விஷம் தரப்பட்ட சுஷ்மா அதிகாலை 4 மணியளவில் உயிரிழந்துள்ளார்.
இந்த 6 மணி நேரத்திலும் சுஷ்மா உயிருக்கு போராடியதை குமார் கவுடாவும் அவரது மனைவியும் வேடிக்கை பார்த்தபடியே இருந்துள்ளனர்.
பின்னர் தமது மகள் இறந்ததை உறுதி செய்த குமார் கவுடா, தமது உறவினர் கெம்பண்ணாவுடன் இணைந்து அதிகாலை 5 மணியளவில் உடலை எரியூட்டியுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பில் குறித்த கிராமத்தில் பரவலாக பேசப்படவே, பொலிசார் விசாரணை செய்துள்ளனர். இதில் குமார் கவுடா தமது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
தற்போது இந்த கொலைக்கு உடந்தையாக செயல்பட்ட சுஷ்மாவின் தாயார் ஜயந்தி மற்றும் உறவினர் கெம்பண்ண ஆகியோரை பொலிசார் தேடி வருகின்றனர்.
தமிழகத்தில் சுடுகாட்டில் வேலை செய்து வரும் திருநங்கை ஒருவர் மனிதர்களை பார்த்தால் பயமாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
கோயமுத்தூர் மாவட்டம் சொக்கம் புதுார் மயானத்தில் வேலை செய்து வருபவர் அட்சயா(21). திருநங்கையான இவர் ஒன்பதாம் வகுப்பு படிக்கின்றபோது, தன்னுடன் ஏற்படும் மாற்றத்தை கண்டு, அதன் பின் திருநங்கையானதை உறுதிபடுத்திக் கொண்டார்.
இவர் திருநங்கையானதால், பள்ளியில் உள்ளவர்கள் கிண்டல் செய்ய, ஆசிரியர்களும் ஒரு ஏளமனமாய பார்த்ததால் பள்ளிப் படிப்பை அப்போதே நிறுத்திவிட்டார்.
திருநங்கை என்பதால், தங்களுக்கு குடும்ப கெளரவம் தான் பெரிது என்று கூறி, அவரை சொல்லாத வார்த்தைகளால் சொல்லி பெற்றோர் மற்றும் சகோதரர்கள் சொந்த வீட்டிலேயே தனியாக தூங்க வைத்துள்ளனர்.
அவர் காது படும் படியே இறந்து போக வேண்டிதானே என்று கூறியுள்ளனர். இதனால் முடிவெடித்த இவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆனால் அதுவும் தோல்வியில் முடிய, இறுதியாக வீட்டை விட்டு வெளியே வந்தார்.
வெளியே வந்த அவர் பசியை போக்குவதற்காக வேலை கேட்ட போது, அவர்கள் அனைவரும் முதலில் உடலில் இருக்கும் பசியை நீக்கும் படி கூறியுள்ளனர்.
இப்படி சதைக்காக ஆசைப்படும் கொடூர மனிதர்களைக் கண்டு பயந்து சுடுகாட்டில் தஞ்சமடைந்துள்ளார். அங்கேயும் சிலர் குடித்துவிட்டு இவரை விரட்டியுள்ளனர். அப்போது வைரமணி என்ற பெண் காப்பாற்றியுள்ளார்.
இதையடுத்து சுடுகாட்டிற்கு வரும் பிணங்களை எரிப்பதும்,புதைப்பதுமான வேலை செய்து வந்த வைரமணியுடன், அட்சயா உதவியாக இருந்துள்ளார்.
தொடர்ந்து அவருடன் இருந்து வந்தால் இரண்டு வரு அனுபவத்திற்கு பிறகு தற்போது அவரே தனியாக சுடுகாட்டிற்கு வரக்கூடிய பிணங்களை எரிக்கவும் புதைக்கவும் செய்கிறார்.
இது குறித்து அட்சயா கூறுகையில், எந்த நேரத்தில் பிணம் வந்தாலும் எரிப்பதற்கு தயராக இருப்பேன்.பிணத்தைக் கண்டு நான் எப்போதுமே பயந்தது இல்லை, எனது பயம் அனைத்தும் என்னை வேட்டையாட துடிக்கும் மனிதர்களைப் பார்த்துதான் என்று கூறியுள்ளார்.
திருமணம் செய்வதாக கூறி பலரை ஏமாற்றிய நடிகை ஸ்ருதி குண்டர் சட்டத்தில் கைதாகியுள்ளார்.
ஆடி போனால் ஆவணி என்ற படத்தில் புதுமுக நடிகையாக நடித்தவர் ஸ்ருதி. கோவை பாப்பநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த இவர் வெளிநாட்டில் வேலை செய்யும் இளைஞர்களை குறிவைத்து பண மோசடி செய்துள்ளதாக புகார் எழுந்தது.
இதனிடையே மென்பொறியாளர் சந்தோஷ்குமாரை திருமணம் செய்வதாக கூறி ரூ.43 லட்சம் மோசடி செய்த வழக்கில் நடிகை ஸ்ருதி கைது செய்யப்பட்டார்.
மேலும் திருமணம் செய்து கொள்வதாக கூறி 41 லட்சம் மோசடி செய்ததாக சேலத்தைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் கொடுத்த புகாரின் பெரில் நடிகை ஸ்ருதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
புகாரின் பேரில் வழக்குப்பதிந்த பொலிசார் ஸ்ருதி, அவரது தாய் சித்ரா, தம்பி சுபாஷ், வளர்ப்பு தந்தை பிரசன்ன வெங்கடேஷ் ஆகியோரை கைது செய்தனர்.
திருமணம் செய்வதாக ஆசை காட்டி ஸ்ருதி மோசடியாக பெற்ற பணத்தில் 15.50 லட்சத்திற்கு 62 பவுன் நகை, டைமண்ட் ரூபி பதித்த தங்க நகைகள் வாங்கியுள்ளார்.
மேலும் மியூச்சுவல் பண்டில் 5.50 லட்சம் முதலீடு, 1.32 லட்சம் விமான செலவு, ஓட்டல் செலவு போன்றவற்றுக்கு செலவழித்துள்ளார். ஸ்ருதி பலரிடமும் இதேபோல், மோசடி செய்துள்ளதும், பணத்தை திருப்பி கேட்கும் பலரையும் மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்வதாக மிரட்டியதும் விசாரணையில் தெரியவந்தது.
கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்த நடிகை ஸ்ருதி மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. அவரது தாய் சித்ரா, தந்தை பிரசன்ன வெங்கடேஷ் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
கனடாவில் மனைவியை கொலை செய்த இலங்கையரின் வழக்கை மீண்டும் விசாரிக்கும் நோக்கத்தை Crown நீதிமன்றம் நேற்று அறிவித்துள்ளது.
சிவலோகநாதன் தனபாலசிங்கம் என்ற இலங்கை தமிழரின் கொலை வழக்கு ஜோர்தான் ஆட்சி காலத்தில் இடம்பெற்றது. இந்நிலையில் வழக்கினை மீண்டும் விசாரிக்க வேண்டும் என கனடா உச்ச நீதிமன்றத்திடம் Crown நீதிமன்றம் கோரிக்கை விடுக்கவுள்ளது.
அவரது 21 வயதான மனைவி அனுஜா பாஸ்கரன் கொல்லப்பட்டதாக சிவலோகநாதன் மீது குற்றம் சாட்டப்பட்டது. கத்தியால் குத்தப்பட்ட நிலையில் 2012 ஆம் ஆண்டு அவரது மனைவியின் சடலம் மீட்கப்பட்டது.
கொலை வழக்கிலிருந்து கடந்த வருடம் ஏப்ரல் மாதம் தனபாலசிங்கம் விடுவிக்கப்பட்டார். அவரது வழக்கு விசாரணைக்கு நீண்ட காலம் எடுத்து கொள்ளப்பட்டமையினால் அவர் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் தற்போது நீதிமன்றத்தின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் மற்றும் ஒரு புதிய விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்ற அவசியம் Crown நீதிமன்றத்திற்கு ஏற்பட்டுள்ளது.
அதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டால், உச்சநீதிமன்றம் தீர்ப்புகளைத் தற்காலிகமாக நிறுத்துவதோடு, குறித்த இலங்கையரை விசாரணைக்கு உட்படுத்தும்படி உத்தரவிடப்படலாம்.
இந்த நிலையில் கடந்த ஜுலை மாதம் தனபாலசிங்கம் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார்.
கனடாவிற்கும் இலங்கைக்கும் இடையில் ஒப்படைப்பு ஒப்பந்தங்கள் ஒன்றும் இல்லை. இதனால் விசாரணைக்கு கட்டளையிடப்பட்டாலும் கூட, அவர் சட்டத்தை எதிர்கொள்ள அவரை கனடாவுக்கு கொண்டு செல்வது மிகவும் கடினமான விடயம் என தெரியவந்துள்ளது.