நாம் செல்லுமிடமெல்லாம் நிலா எம்மைத் தொடர்ந்து வருவது ஏன்?

வாகனத்தில் பயணிக்கும் போதும் அல்லது நடக்கும் போதும் வானத்தில் தெரியும் நிலா நம் கூடவே வருவது போன்ற உணர்வு நம் அனைவருக்குமே தோன்றும்.

நிலா நம் கூடவே வருவது உண்மையா? அதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்பது நம்மில் யாரும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

நிலா நம்மோடு வருவது உண்மையா?

வானத்தில் தெரியும் நிலாவை நாம் எந்த ஊருக்கு சென்றாலும் பார்கலாம். எப்படியெனில் அதற்கு தூரமும் கோணமும் முக்கியப் பங்காற்றுகின்றது. அதாவது நிலா வெகு தொலைவில் இருக்கிறது. எனவே அது நகர்ந்தாலும் கூட அதன் கோணம் மாறாமல் அப்படியே தெரிவதால் நிலா அனைவரது கண்களுக்கும் தெரிகிறது.

அதேபோன்று வாகனத்தில் பயணம் செய்யும் போது நம் அருகில் இருக்கும் கட்டிடங்கள், மரங்கள், செடிகள் மற்றும் கம்பங்கள் போன்றவை நம்மை வேகமாகக் கடந்து செல்வது போன்று கூட தோன்றும். இவை அனைத்தும் நம் மூளை நம்முடன் வருவது போல் காட்சிப்படுத்திக் கொள்கிறது. ஆனால் வானத்தில் இருக்கும் நிலா உண்மையில் நம்மோடு வருவதில்லை என்பதே உண்மையாகும்.

உள்ளூர் போட்டியில் சாதித்தும் மீண்டும் புறக்கணிக்கப்பட்ட லசித் மலிங்க!!

இலங்கையில் நடைபெறவுள்ள முத்தரப்பு நிதாஸ் கிண்ண டி20 தொடருக்கான இலங்கை அணியில் மலிங்க சேர்க்கப்படவில்லை.

இலங்கை, இந்தியா, வங்கதேச அணிகள் பங்குபெறும் முத்தொடர் வரும் 6ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. >இதற்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அணியில் இடம் பெறுவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட மலிங்க மீண்டும் புறக்கணிக்கப்பட்டுள்ளார்.

சரியாக விளையாடாமை மற்றும் உடற்தகுதி பிரச்சனையால் தவித்து வந்த மலிங்க கடந்த 24-ஆம் திகதி தொடங்கிய உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரில் என்.சி.சி அணிக்காக சிறப்பாக விளையாடி வருகின்றார்.

மூன்று போட்டிகளில் பத்து விக்கெட்களை வீழ்த்தி அவர் அசத்தியிருந்த நிலையில் சர்வதேச அணியில் சேர்க்கப்படுவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை.

சமீபத்தில் பேட்டியளித்த இலங்கை அணி தெரிவுக் குழுத் தலைவர் கிரஹாம் லாப்ரோரி, மலிங்கவுக்கான கதவு இன்னும் மூடப்படவில்லை, தொடர்ந்து அவர் உள்ளூர் போட்டியில் சாதித்தால் 2019 உலக கிண்ண அணியில் அவரை சேர்ப்பது குறித்து பரிசீலிப்போம் என தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

மனைவி-குழந்தை முன் புலியிடம் சிக்கி இறந்த கணவன் : காப்பாற்ற போராடிய ஊழியர்கள்!!

சீனாவில் மனைவி மற்றும் குழந்தை முன்னே கணவர் ஒருவர் புலியிடம் சிக்கி இறந்திருக்கும் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் Zhejiang மாகாணத்தில் உள்ள Ningbo பகுதியில் Youngor Zoo என்ற பூங்கா உள்ளது. இங்கு Zhang என்ற நபர் தன்னுடைய நண்பர்கள், மனைவி மற்றும் குழந்தையுடன் வந்துள்ளார்.

அப்போது அவர் பூங்காவை சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்த போது, எதிர்பாரதவிமாக அங்கிருக்கும் சிபிரியன் வகை புலியிடம் சிக்கியுள்ளார்.

இதனால் நிலைதடுமாறிய அவர், அந்த புலியிடமிருந்து தப்பிப்பதற்கு போராடினார். இதைக் கண்ட அங்கிருந்த ஊழியர்கள் பட்டாசு வெடித்து புலியை விரட்ட முயற்சித்தனர்.

ஆனால் முதலிலே அவரின் கழுத்தை கடித்துவிட்டதால், உயிருக்க போராடிய அந்த நபர் புலியிடமிருந்து காப்பாற்றப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது தொடர்பான வீடியோவை அங்கிருக்கும் நபர்கள் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்தனர். பார்ப்பதற்கு மிகவும் கொடூரமாக இருந்ததால், அந்த வீடியோ உடனடியாக நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தக் குழந்தையின் கடைசி மூச்சு சத்தம் இன்னும் கேட்கிறது : நெஞ்சை உருக்கும் நிகழ்வு!!

சிரியாவில் நடக்கும் போர் குறித்து புகைப்படக்காரர் முகமது பத்ரா அதிர்ச்சியளிக்கும் நிலவரங்களை தெரிவித்துள்ளார்.

சிரியாவில் நடந்து வரும் ராணுவ தாக்குதலினால், கடந்த 10 நாட்களில் மட்டும் இதுவரை 800 பேர் உயிரிழந்துள்ளனர். சிரியாவில் நடைபெற்று வரும் இந்த போரின் புகைப்படங்களில் பெரும்பாலானவற்றை, முகமது பத்ரா எனும் புகைப்படக்காரர் எடுத்துள்ளார்.

முகமது பத்ரா பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளிக்கையில், இங்கு ரசாயன குண்டுகள் அதிகமாக வீசப்படுகின்றது, உடலில் எந்த காயமும் இல்லாமல் வருவார்கள், ஆனால், 10 நிமிடத்தில் இறந்து விடுவார்கள்.

அங்கு மோசமான வாசனை ஒன்று வீசும், குளியல் அறையை குளோரின் போட்டு கழுவியபின் வரக்கூடிய வாசனை. அவர்கள் குளோரின் குண்டுகளை பயன்படுத்துகிறார்கள், பிறரிடம் இருந்து வரும் அந்த வாசனையே என்னை வேலை செய்ய விடவில்லை.

அப்படி இருக்கும்போது, அதனால் பாதிக்கப்பட்டவர்கள் எப்படி கஷ்டப்பட்டு இருப்பார்கள். எல்லா நாடுகளும் பெரிய குற்றம் செய்கிறார்கள். இதில் எல்லோருக்கும் பெரிய பங்கு இருக்கிறது, அமைதியாக இருக்கும் மக்களுக்கும் பெரிய பங்கு இருக்கிறது.

இங்கு, குழந்தைகள் தான் அதிகமாக செத்து மடிகிறார்கள். நான் உள்ளே நுழைந்த போது அங்கு, மூன்று குழந்தைகள் மூச்சு வாங்க முடியாமல் கஷ்டப்பட்டுக் கொண்டு இருந்தார்கள்.

எனக்கு அருகில்தான் அவர்கள் உட்கார்ந்து இருந்தார்கள், என் கண் முன்னே அதில் ஒரு குழந்தை மரணம் அடைந்தது, அந்த கடைசி மூச்சுக்காற்றை என்னால் எப்போதும் மறக்க முடியாது’ என தெரிவித்துள்ளார்.

ஐரோப்பாவை திணறடிக்கும் பனிப்பொழிவு : இதுவரை 24 பேர் பலியான சோகம்!!

 
ஐரோப்பாவில் வரலாறு காணாத பனிப்பொழிவு மற்றும் குளிர் காரணமாக இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளனர்.

போலந்தில் 9 பேரும், பிரான்சில் 4 பேரும், லிதுவேனியாவில் 5 பேரும், செக் குடியரசில் 3 பேரும், ருமேனியாவில் இரண்டு பேரும், இத்தாலியில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

இறந்தவர்களில் பெரும்பான்மையோர் சாலையோரம் வசிப்பவர்கள் என்பதால் அவர்களுக்கு தற்காலிக தங்குமிடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுவருகின்றன.

ஸ்பெய்னிலிலுள்ள Bilbao, Barcelona, Santander மற்றும் San Sebastian ஆகிய நகரங்களில் நேற்று கடுமையான பனிப்பொழிவு நிலவியதால் வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Catalonia மற்றும் Canary Islands பகுதிகளில் பள்ளிகளுக்கான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. ஐரோப்பா முழுவதும் அவசர உதவிக் குழுக்களை ஏற்பாடு செய்துள்ள செஞ்சிலுவைச் சங்கம் அக்கம்பக்கத்தவர்கள் மற்றும் உறவினர்களை கவனித்துக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.

சுமார் 60 விமான சேவைகளை British Airways ரத்து செய்துள்ளது. இத்தாலியில் பல பள்ளிகளும் குழந்தைகள் காப்பகங்களும் மூடப்பட்டுள்ளன.

நேபிள்ஸ் இல் விமான நிலையம் மூடப்பட்டது. பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டன. ஹீட்டர்களின் பயன்பாடு அதிகமானதால், ஐரோப்பாவிற்கு பெருமளவில் எரிவாயு வழங்கும் Gazprom என்னும் ரஷ்யாவின் பிரதான எரிவாயு நிறுவனம் கடந்த ஆறு நாட்களில் வரலாறு காணாத அளவில் 667 மில்லியன் கன மீற்றர்கள் எரிவாயுவை ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

பிரான்சில் உச்சத்தை எட்டியுள்ள இனவெறுப்பு : கறுப்பின பாராளுமனற உறுப்பினருக்கு கொலை மிரட்டல்!!

பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினரான Laetitia Avia என்பவருக்கு அனுப்பப்பட்ட கொலை மிரட்டல் கடிதம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Laetitia Avia, பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரோனின் En Marche movement அமைப்பின் உறுப்பினர் ஆவார். இவருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், “ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஒரு தடித்த கருப்பு பன்றியை பிரான்சு மக்களிடையே வாழ அனுமதிக்க மாட்டோம்” என்றும், ”உன் முகம் பார்ப்பதற்கு அருவருப்பாக உள்ளது, பிரான்சின் பணத்தை வீணாக்குவதற்காகவே இங்கு வாழும் உன் போன்றவர்கள் பேசாமல் ஆப்பிரிக்க மக்களுக்கு சேவை செய்யப் போகலாம்” என்றும் எழுதப்பட்டிருந்தது.

இக்கடிதம் குறித்து Laetitia Avia முறைப்படி புகாரளித்துள்ளார். அவருக்கு வந்த இந்த கடிதத்திற்கு பலரும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

உள்துறை அமைச்சரான Gérard Collomb “இது ஒரு மோசமான இன வெறுப்புத் தாக்குதல்” என்று தெரிவித்துள்ளார். பிரான்சின் பாலின சமத்துவத்துறை அமைச்சரான Marlène Schiappa, இது ஏற்றுக்கொள்ள முடியாத இன வெறுப்பு மற்றும் பாலியல் ரீதியான தாக்குதல் என்று தெரிவித்துள்ளார்.

Laetitia Avia தனக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தவர்களுக்கு ட்விட்டரில் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார்.

கடந்த ஆண்டும் இதேபோல் Sacha Houlié என்னும் நாடாளுமன்ற உறுப்பினருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொப்பை, இடுப்பில் உள்ள தேவையற்ற சதையைக் குறைக்க ஒரே வழி : முயற்சி செய்து பாருங்கள்!!

இடுப்பு மற்றும் வயிற்றில் ஊளைச்சதைகள் அதிகமாக சிலருக்கு காணப்படும். அவற்றை எளிமையாக குறைக்க சில யோகா பயிற்சிகள் உள்ளது.

ஆனால் இந்த யோகா பயிற்சிகள் மற்ற பயிற்சிகளைப் போல் இல்லாமல் தினமும் தொடர்ச்சியாக செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

பாதஹஸ்தாசனம்

இந்த யோகா பயிற்சியை நின்று கொண்டு செய்ய வேண்டும். நேராக நிமிர்ந்து நின்று, கைகளை தலைக்கு மேலாக உயர்த்தி, மூச்சை வெளியிட்டபடி முன்னோக்கி வளைய வேண்டும். இந்தப் பயிற்சியை தொடர்ந்து தவறமால் செய்து வந்தால் அடிவயிற்றில் சேர்ந்திருக்கும் கொழுப்புகள் குறையும்.

ஜானுசிரசாசனம்

இந்த யோகா பயிற்சியை அமர்ந்த நிலையில் செய்ய வேண்டும். ஒரு காலை மடக்கி வைத்துக் கொண்டு, ஒரு காலை நீட்டி, இரண்டு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்தி முன்னோக்கி வளைய வேண்டும்.

வளைந்து ஒரு கையால் இன்னொரு கையைப் பற்றிக் கொண்டு 30 விநாடிகள் அதே நிலையில் இருக்க வேண்டும். இதேபோல் இரண்டு பக்கமும் மூன்று முறை தொடர்ந்து செய்து வந்தால் தொப்பை குறையும்.

வனமுக்தாசனம்

இந்த யோகா பயிற்சியை படுத்த நிலையில் செய்ய வேண்டும். இரண்டு கால்களையும் கோர்த்துப் பிடித்து இயல்பான சுவாசத்தில் 30 விநாடிகள் என்று மூன்று முறைகள் செய்ய வேண்டும்.

தனுராசனம்

இந்த யோகா பயிற்சியை குப்புறப்படுத்துக் கொண்டு செய்ய வேண்டும். இரண்டு கால்களையும் மடித்து கைகளால் கோர்த்துப் பிடித்துக் கொண்டு இயல்பான சுவாசத்தில் 30 விநாடிகள் அப்படியே இருக்க வேண்டும். அதேபோல் மூன்று முறை தொடர்ந்து செய்து வந்தால் வயிற்றில் உள்ள தசைகள் வலிமையாகி கெட்ட கொழுப்புகள் குறையும்.

குறிப்பு

யோகா பயிற்சிகளை ஏற்கெனவே தெரிந்து வைத்திருப்பவர்கள், அவற்றை வீட்டிலேயே செய்யலாம். ஆனால், புதிதாக கற்றுக் கொள்பவர்கள் மட்டும் மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று முறையாக யோகா செய்வதே நல்லது.

உலகெங்கும் யுத்தங்களுக்கு மத்தியில் வாழும் 35 கோடி குழந்தைகள் : அதிர்ச்சித் தகவல்!!

உலகளவில் போர் நடைபெறும் பகுதிகளில் ஆறுக்கு ஒரு குழந்தை வாழ்ந்து வருவதாக தன்னார்வ அமைப்பு ஒன்று வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் தெரிய வந்துள்ளது.

போர் சூழலில் வாழுகின்ற குழந்தைகள், இதற்கு முன்னர் 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக ஆபத்தில் வாழ்ந்து வருவதாகவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

சேவ் த சில்ரன் என்ற குழந்தைகள் நல அமைப்பு நடத்தியுள்ள புதிய ஆய்வில் 35 கோடியே 70 லட்சம் குழந்தைகள் போர் மண்டலத்தில் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளது.

கடந்த 1995ஆம் ஆண்டு 20 கோடி குழந்தைகளே போர் பகுதிகளில் வாழ்ந்து வந்ததாக குறித்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ள நிலையில், தற்போது 75 சதவீத வளர்ச்சி ஏற்பட்டிருப்பதை இந்த தரவுகள் காட்டுகின்றன. இதில் சிரியா, ஆப்கானிஸ்தான் மற்றும் சோமாலியா நாடுகள் குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தான நாடுகளாக பதிவாகியுள்ளன.

பொதுவாக, மத்திய கிழக்கு நாடுகளிலுள்ள குழந்தைகள் பெரும்பாலும் போர் நடைபெறும் இடங்களில் வாழ்ந்து வருகின்றனர். அங்கு வாழும் குழந்தைகளில் 5ல் இரண்டு பேர் போர் நடைபெறும் இடத்திலிருந்து 50 கிலோமீற்றர் தொலைவில் அல்லது மரண தாக்குதல் நடைபெறும் பிற இடங்களில் வாழ்கின்றனர்.

5ல் ஒருவர் போர் நடைபெறும் இடங்களில் வாழ்வதால் ஆபத்தான பகுதிகளில் ஆப்பிரிக்கா 2வது இடம் பெற்றுள்ளது.

உலகெங்கிலும் வாழும் பாதி குழந்தைகளில் அதாவது 16 கோடியே 50 ஆயிரம் பேர் போர் உருவாக அதிக ஆபத்துள்ள மண்டலங்களில் வாழ்வதாகவும் தெரிய வந்துள்ளது.

அழுது கொண்டே வந்த பிரபலங்களுக்கு மத்தியில் ஸ்ரீதேவியை பார்க்க சிரித்த படி வந்த பிரபல நடிகை!!

 
துபாயில் மரணமடைந்த திரைப்பட நடிகை ஸ்ரீதேவியின் உடல் நேற்று அதிகாலையில் மும்பைக்கு கொண்டுவரப்பட்டது. தொடர்ந்து திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் ஸ்ரீதேவியின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

அதுமட்டுமின்றை மராட்டிய பாஜக அரசால், நடிகை ஸ்ரீதேவியின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டுள்ளது. அவரது உடலில் முவர்ணக் கொடி போர்த்தப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ஸ்ரீதேவியின் உடலை பார்ப்பதற்கு திரைப்பிரபலங்கள் பலரும் வந்திருந்தனர். அப்போது நடிகை வித்யாபாலன் அவரின் இறப்பை தாங்க முடியாமல் கண்ணீர் விட்டு அழுதார்.

இப்படி திரைப்பிரபலங்கள் பலரும் அவருக்காக கண்ணீர் விட்டுக் கொண்டிருந்த போது, ஸ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்த வந்த நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் காரில் இருந்து இறங்கியதும் சிரித்தபடி அங்கிருந்தவர்களுக்கு வணக்கம் கூறினார்.

அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் அந்த புகைப்படத்தைக் கண்டு ஜாக்குலின் பெர்னாண்டசை வறுத்தெடுத்து வருகின்றனர்.

நடிகை ஸ்ரீதேவியின் மறுபிறவி : புகைப்படத்தை வெளியிட்ட செய்தி நிறுவனம்!!

 

நடிகை ஸ்ரீதேவியின் மறுபிறவி குறித்து செய்தி வெளியிட்ட நிறுவனம் மீது நெட்டிசன்கள் கடும் ஆத்திரத்தில் உள்ளனர்.

துபாயில் மரணமடைந்த நடிகை ஸ்ரீதேவியின் உடல் மும்பை கொண்டுவரப்பட்டு, நேற்று அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்திய திரையுலகின் மிக முக்கிய நட்சத்திரமாக பார்க்கப்படும் ஸ்ரீதேவியின் இழப்பு திரையுலகிற்கு மிகப் பெரிய இழப்பு தான், அவருடைய மரணம் குறித்து பல்வேறு தகவல்கள் வந்ததால் சில ஊடகங்கள் ஸ்ரீதேவி இப்படித் தான் இறந்திருப்பார் என்று யுகங்கள் அடிப்படையில் எல்லாம் செய்திகள் வெளியிட்டன.

இதைக் கண்ட சிலர் ஸ்ரீதேவி என்ற ஒற்றை வார்த்தையால் சில கொடூரமான கொலைகள் ஊடகங்களின் கண்களுக்கு தெரியவில்லை என்று கூட கூறினர்.

இந்நிலையில் பிரபல ஹிந்தி செய்தி நிறுவனம் ஒன்று இதை எல்லாம் மிஞ்சும் வகையில் நடிகை ஸ்ரீதேவியின் மறுபிறவி என்று கூறி, ஒரு குழந்தை தொடர்பான புகைப்படத்தை குறிப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது. இதைக் கண்ட நெட்டிசன்கள் அந்த செய்தி சனலை திட்டி தீர்த்து வருகின்றனர்.

மனைவியை உயிருடன் எரித்துக் கொன்ற கணவன்!!

தூத்துக்குடியில் குடும்பத்தகராறின் காரணமாக மனைவியை கணவன் உயிருடன் எரித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி டி.சவேரியார் புரத்தை சேர்ந்தவர் அய்யாமுத்து, இவரது மனைவி சாந்தி. இவர்களுடைய மகளுக்கு திருமணமாகி விட்டது, எனினும் கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார்.

மகள் வீட்டுக்கு சாந்தி அடிக்கடி சென்று வந்துள்ளார், மகள் வீட்டுக்கு செல்ல வேண்டாம், அவளை கணவருடன் சேர்த்து வைக்க வேண்டும் என அய்யாமுத்து கூறியுள்ளார்.

இதனால் சில நாட்களுக்கு முன் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது, வாக்குவாதம் முற்றவே கோபத்தில் அய்யாமுத்து, சாந்தியை கடுமையாக தாக்கியுள்ளார். அவரது உடலில் மண்ணெண்ணைய் ஊற்றி தீ வைத்து தப்பியோடிவிட்டார்.

சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் சாந்தியை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், 26ம் திகதி நள்ளிரவில் சிகிச்சை பலனின்றி பலியானார்.

இதுகுறித்து வழக்குபதிவு செய்துள்ள தாளமுத்துநகர் பொலிசார் அய்யாமுத்துவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் தற்கொலை : உருக்கமான கடிதம் சிக்கியது!!

இந்தியாவில் 4 வயது மகனுடன் மாடியில் இருந்து குதித்து தம்பதியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் குஜராத் மாநிலம் சூரத்தில் வசித்து வந்த விஜய் வகஸ்யா- ரேகா தம்பதியருக்கு 4 வயதில் வீர் என்ற மகன் உள்ளார்.

ஜவுளி வியாபாரம் செய்து வந்த விஜய், இரண்டு மாதத்திற்கு முன் தான் 12 அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள புதிய வீடு ஒன்றை சொந்தமாக வாங்கியுள்ளார்.

இந்நிலையில், இன்று காலை வழக்கமாக தன் நண்பருடன் வாக்கிங் சென்ற விஜய் வீடு திரும்பிய சிறிது நேரத்தில் தன் மகன் மற்றும் மனைவியுடன் 12வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், விஜய் தன் சட்டை பையில் வைத்திருந்த கடிதம் ஒன்று பொலிஸ் விசாரணையில் சிக்கியுள்ளது.

அதில் தன் தற்கொலை யாரும் காரணமில்லை என்றும் தான் நடத்தி வந்த தொழிலை தன் சகோதரர் கவனித்துக் கொள்வார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தான் சந்தித்து வந்த நிதி நெருக்கடியும் கடன் தொல்லையும் தான் இந்த முடிவுக்கு காரணம் என்றும் விஜய் குறிப்பிட்டுள்ள நிலையில் சம்பவம் குறித்து பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து பேசிய சூரத் பொலிஸ் ஆணையர் சதிஷ் சர்மா, இந்த சம்பவம் மிகவும் வருத்தம் அளிக்கிறது, இதுபோன்ற முடிவுகளை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும், எந்த தொல்லை இருந்தாலும் பொலிஸ் நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள்” என தெரிவித்துள்ளார்.

கொள்ளுப்பேரனுடன் கிரிக்கெட் விளையாடிய கருணாநிதி!!(வீடியோ)

திமுக தலைவர் கருணாநிதி தனது கொள்ளூப் பேரனுடன் கிரிக்கெட் விளையாடும் வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.

உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த திமுக தலைவர் கருணாநிதி கடந்த 1 வருடமாக தனது கோபாலபுரம் வீட்டில் இருந்தபடி சிகிச்சை பெற்று வந்தார்.

அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதை உறுதி செய்த மருத்துவர்கள், தொண்டையில் பொருத்தப்பட்டிருந்த உணவுக் குழாயை சமீபத்தில் அகற்றியிருந்தனர்.

இந்நிலையில் நடிகரும் தனது பேரனுமான அருள்நிதி மகன் மகிழனுடன் அவர் கிரிக்கெட் விளையாடும் காட்சிகள் வெளியாகியுள்ளது.

அப்போது கருணாநிதி மகன் தமிழரசு மற்றும் மகள் செல்வி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

காதலியின் மகனைக் கொன்றது ஏன் : குற்றவாளி வாக்குமூலம்!!

தமிழ்நாட்டில் கள்ளக்காதல் பிரச்சனையால் 4ஆம் வகுப்பு மாணவன் கடத்தி கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

சென்னை நெசப்பாக்கத்தில் வசிப்பவர் கார்த்திகேயன்(38). இவர் தனது மனைவி மஞ்சுளா(34), மகன் ரித்தீஷ் சாயுடன்(10) வசித்து வந்துள்ளார். கார்த்திகேயனும், மஞ்சுளாவும் காதல் திருமணம் செய்தவர்கள்.

மஞ்சுளாவிற்கும், சேலையூரை சேர்ந்த நாகராஜ் என்பவருக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த மஞ்சுளாவின் கணவர், பலமுறை அவரை எச்சரித்துள்ளார்.

இந்நிலையில் நேற்றிரவு கார்த்திகேயனின் மகன் ரித்தீஷ் டியூசனில் இருந்து வீடு திரும்பவில்லை. உடனடியாக கார்த்திகேயன் டியூசனுக்கு சென்று விசாரித்தபோது, நாகராஜ் என்பவர் சிறுவனை அழைத்துச் சென்றுவிட்டது தெரியவந்தது.

தொடர்ந்து நாகராஜின் கைப்பேசியை கார்த்திகேயன் தொடர்பு கொண்ட போது, அணைத்து வைக்கப்பட்டிருந்ததால், உடனடியாக பொலிசில் புகார் அளித்துள்ளார்.

நாகராஜை கைது செய்த பொலிசார் அவரிடம் விசாரணை நடத்தியதில், மஞ்சுளாவிற்கும் தனக்கும் இருந்த தொடர்புக்கு, ரித்தீஷ் இடையூறாக இருந்ததால் கொலை செய்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

கொலைக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் மஞ்சுளாவும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வேறு யாருக்காவது தொடர்பு உண்டா என்ற கோணத்தில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 2 மாதங்களில் பேஸ்புக் மோசடிகள் தொடர்பாக 300 முறைப்பாடுகள்!!

2018ம் ஆண்டின் கடந்த இரண்டு மாத காலகட்டத்துக்குள் பேஸ்புக் மோசடிகள் தொடர்பாக சுமார் 300 முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவற்றில் பெரும்பாலான முறைப்பாடுகளை பெண்களே மேற்கொண்டுள்ளதாகவும், 60 வீதமான முறைப்பாடுகள் பெண்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான தகவல்களை இலங்கையின் சைபர் கிரைம் பாதுகாப்பு அமைப்பின் பொறியியலாளர் ரொசான் சந்திரகுப்த ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

போலி பேஸ்புக் கணக்குகள், அடுத்தவரின் புகைப்படங்களை தவறாகப் பயன்படுத்துதல், மற்றவரின் பேஸ்புக் கணக்குகளில் ஊடுருவுதல், போன்ற செயற்பாடுகள் தொடர்பாகவே மேற்கண்ட முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பில் 0112691692 இலக்கத்தை தொடர்பு கொள்வதன் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் முறைப்பாடுகளை மேற்கொள்ள முடியும்.

கடந்த 2017ம் ஆண்டு பேஸ்புக் மோசடிகளில் பாதிக்கப்பட்ட 3800 பேர் இவ்வாறான முறைப்பாடுகளை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

24 வருடங்களின் பின்னர் இலங்கை தாய்க்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த வெளிநாட்டு யுவதி!!

 
வெளிநாட்டில் வாழும் யுவதி ஒருவர் 24 வருடங்களின் பின்னர் தனது சொந்த தாயை சந்தித்துள்ளார்.

கடந்த 24 வருடங்களுக்கு முன்னர் நெதர்லாந்து தாய் ஒருவர் இலங்கையில் இருந்து குழந்தை ஒன்றை அழைத்து சென்றுள்ளார்.

24 வருடங்களின் பின்னர் வளர்ந்த இலங்கை யுவதியை அழைத்துக் கொண்டு நெதர்லாந்து தாய் நாட்டுக்கு வந்துள்ளார்.

கடந்த 26ஆம் திகதி இலங்கை வந்த இருவரும், காலி, தவலம, கம்பியஸ பகுதிக்கு சென்றுள்ளனர். இதன்போது குறித்த யுவதியின் உண்மையான தாயை சந்தித்துள்ளார்.

நெதர்லாந்தில் சிறு மருத்துவ ஆய்வகம் நடத்தும் நெதர்லாந்து நாட்டின் பெகர் பிம்கேவுக்கு பிள்ளைகள் இல்லாமையினால் கடந்த 24 வருடங்களுக்கு முன்னர் இலங்கைக்கு வருகைத்தந்து குழந்தை ஒன்றை தத்து எடுத்துள்ளனர்.

ஏழு மாத குழந்தையாக இருக்கும் பெண் குழந்தையை நெதர்லாந்திற்கு கொண்டு சென்றுள்ளனர். அன்று ரத்நாயக்க முதியனசலாகே நதீகா என அழைக்கப்பட்டவர் தற்போது நெஸ்டடமான் நதீகா என அழைக்கப்படுகின்றார்.

தற்போது 24 வயதுடைய யுவதியாக அவர் இலங்கைக்கு வருகைத்தந்துள்ளார். பாடசாலை கல்விக்கு பின்னர் ஹோட்டல் முகாமைத்துவ துறையில் தொழில் செய்தவருக்கு சொந்தமாக ஹோட்டல் ஒன்றை நடத்தும் ஆசை உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.