இலங்கை ரூபாயின் பெறுமதி தற்போது பாரிய வீழ்ச்சியை சந்தித்து வரும் நிலையில், மீண்டும் வாகனங்களின் விலை அதிகரித்துள்ளதாக வாகன இறக்குமதியாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய எஞ்ஜின் திறன் குறைவான வாகனத்தின் விலை ஒரு இலட்சம் ரூபாவினால் அதிகரித்துள்ளதாக அதன் தலைவர் இந்திக்க சம்பத் மெரெஞ்சிகே தெரிவித்துள்ளார்.
எஞ்ஜின் திறன் அதிகமான வாகனங்களின் விலை ஒன்றரை அல்லது இரண்டு இலட்சம் ரூபா வரை அதிகரிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய வெகன்ஆர் வாகனம் ஒன்று ஒரு இலட்சம் ரூபாயிலும், டொயோட்டா விட்ஸ் வாகனம் இரண்டு இலட்சம் ரூபாயிலும் அதிகரிக்கப்பட்ட பெறுமதியுடன் விற்பனை செய்யப்படவுள்ளது.<
கடந்த நாட்களில் காணப்பட்ட அரசியல் குழப்பங்கள் காரணமாக ரூபாய் பாரிய வீழ்ச்சியை சந்தித்ததோடு, அதன் தாக்கம் காரணமாக வாகனங்களின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளாக தெரிவிக்கப்படுகின்றது.
பக்கவாதத்திற்குள்ளான நோயாளி ஒருவருக்கு வரலாற்றில் முதல் முறையாக மூளையை திறக்காமல் நடத்தப்பட்ட சத்திர சிகிச்சை வெற்றியளித்துள்ளது.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 15 நிமிடங்கள் மாத்திரமே இந்த சத்திர சிகிச்சை நடத்தப்பட்டுள்ளது.
மூளையில் இரத்தம் கட்டியானமையினால் பக்கவாதத்திற்குள்ளான நோயாளியை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அழைத்து வந்துள்ளார்.
இதன்போது புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி 15 நிமிடங்களுக்குள் இந்த சத்திர சிகிச்சை மேற்கொண்டு நோயாளி காப்பாற்றப்பட்டுள்ளார் என வைத்தியசாலையின் சிரேஷ்ட வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.
நோயாளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு 8 மணித்தியாலங்களுக்குள் இந்த சத்திர கிசிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பாதத்தின் ஊடாக பெருமூளை இரத்த நாளங்களில் இருந்த இரத்தக் கட்டியை கண்டுபிடித்து இந்த சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
புதிய தொழில்நுட்ப வளர்ச்சியினால் மூளையை வெட்டாமல் நோயாளிக்கு விரைவாக சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அரசாங்க வைத்தியசாலையில் இவ்வாறான சத்திர சிகிச்சை ஒன்று வெற்றிகரமாக நடத்தப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
இந்த சத்திர சிகிச்சையை தனியார் பிரிவில் மேற்கொள்வதென்றால் அதற்காக 3 மில்லியன் ரூபாய் செலவிட நேரிடும் என குறிப்பிடப்படுகின்றது.
வரலாற்றில் இடம்பிடிக்க வேண்டிய சத்திர சிகிச்சையை மேற்கொண்ட வைத்தியர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேவை செய்பவர்களாவர்.
இலங்கையில் பிறந்த பெண் ஒருவர் கனேடிய சாதனையாளர்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என அந்நாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
சுபாகினி சிவபாதம் என்ற இலங்கை பெண்ணே இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
இலங்கையில் பிறந்த சுபாகினி சிவபாதம் தென்னாப்பிரிக்காவில் வளர்ந்துள்ளார். தற்போது அவர் கனடாவில் சந்தைப்படுத்தல் மற்றும் தகவல் தொடர்பு இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தொழில் முனைவோர்களின் கண்டுபிடிப்புகள் மற்றும் வெற்றி பற்றிய கதைகள், கனேடிய சாதனைகளை உருவாக்கும் வலையமைப்புகளை உருவாக்குதல் மற்றும் நாட்டிலுள்ள முன்னணி மாற்றம் செயல்முறை தயாரிப்பாளர்களை காட்சிப்படுத்தல் மூலம் புதிய யோசனைகளை ஊக்குவிக்கும் நடவடிக்கையில் சுபாகினி ஈடுபட்டுள்ளார்.
அவர் வாழும் பகுதியில் இளைஞர்களுக்காக பணியாற்றுவதற்கு இடமில்லை என்று நம்புகையில், சுபாகினி இளைஞர்களை, குறிப்பாக இளம் பெண்களை, நமது சமுதாயத்தில் சமநிலையை வளர்ப்பதற்கு அவர் ஆர்வம் காட்டியுள்ளார்.
அத்துடன் பெண்கள் பொருளாதார சபை மற்றும் வேலைவாய்ப்பு தொழில் முனைவோர் நிகழ்ச்சித்திட்டத்திற்கான ஆலோசனை சபையிலும் சுபாகினி பணியாற்றுகிறார்.
தலைமை என்பது பேச்சுவார்த்தைக்கான இடத்தை உருவாக்குவதாகும், மற்றும் தலைமைத்துவத்தின் பன்முகத்தன்மையின் மூலம் மட்டுமே கூட்டு சிந்தனை என்ற சாத்தியமான அழகை நாம் அடைய முடியும் என்பதே சுபாகினியின் நோக்கமாக உள்ளது.
சீனாவில் மக்கள் அரசுக்கு எதிராக சில வார்த்தைகள் பயன்படுத்தக்கூடாது என கூறி ஆங்கிலம், மண்டரின் ஆகிய இரு மொழிகளிலும் ‘என் (N)’ என்ற எழுத்தை பயன்படுத்த அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
சீன அரசு ‘என் (N)’ என்ற எழுத்தை பயன்படுத்த தடை விதித்துள்ளது. ‘என் (N)’ என்ற எழுத்து வரும் எந்த வார்த்தையும் பயன்படுத்த கூடாது என அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆங்கிலம் மட்டுமல்லாது, சீன மொழியான மண்டரினிலும் ‘என் (N)’ என்ற எழுத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், சீன இணையதளங்களில் பயன்படுத்தப்படும் வார்த்தைகளில் பல வார்த்தைகள் தடை செய்யப்பட்டுள்ளன.
இந்த தடை இன்று முதல் அமுலுக்கு வந்துள்ளது.
அரசுக்கு எதிராக எந்த கருத்தும் எழக்கூடாது என்ற நோக்கத்தில் இந்த தடை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த தடை மக்களின் கருத்து சுதந்திரத்துக்கு முற்றிலும் எதிரானது என கூறப்படுகிறது. சீன அதிபர் சீ ஜின்பிங் பெயரில் ‘என் (N)’ என்ற எழுத்து இரண்டு முறை இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கனவுக் கன்னிகளாக கோலோச்சிய நடிகைகள் திடீரென்று மரணத்தை தழுவி ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்யும் நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து வருகிறன.
சிலர் தற்கொலை செய்துகொண்டனர். இன்னும் சிலரது இறப்புகள் தற்போதைய ஸ்ரீதேவியின் மரணம் போலவே மர்மங்கள் நிறைந்ததாக இருக்கிறது.
ஸ்ரீதேவி துபாய் ஹோட்டலில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார் என்று முதலில் கூறப்பட்டது. பிரேத பரிசோதனையில் குளியலறை தொட்டிக்குள் தண்ணீரில் மூழ்கி மூச்சு திணறி மரணம் அடைந்துள்ளார் என்றும் உடலில் அவர் மது அருந்தி இருந்ததற்கான தடயங்கள் உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனால் ஸ்ரீதேவியின் மரணத்தில் திருப்பங்கள் ஏற்பட்டு துபாய் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டனர்.
‘பசி’ படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி 17 வயதிலேயே தேசிய விருதை பெற்றவர் ஷோபா. பின்னர் இயக்குனர் பாலுமகேந்திராவை திருமணம் செய்துகொண்டார். சில மாதங்களிலேயே ஷோபா தற்கொலை செய்து திரையுலகை அதிர வைத்தார்.
நடிகை திவ்யபாரதியின் மரணம் மர்மம் நிறைந்தது. 1990ல் நிலாப்பெண்ணே என்ற தமிழ் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர் தெலுங்கு-இந்தி படங்களில் நடித்துக்கொண்டிருந்த அவர் தனது 19வது வயதில் மர்மமாக இறந்துபோனார். நள்ளிரவு 12 மணிக்கு தனது குடியிருப்பின் பல்கனியில் இருந்து தவறி விழுந்து அவர் இறந்துப்போனதாக கூறப்பட்டது. பிரேத பரிசோதனையில் அவர் மது அருந்தி இருந்தது தெரியவந்தது.
திவ்யபாரதி தற்கொலை செய்துகொண்டாரா? கொலை செய்யப்பட்டாரா? தவறி விழுந்து இறந்தாரா? என்றெல்லாம் சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. இறுதியில் தற்கொலை என்று வழக்கை முடித்தனர்.
கங்கை அமரனின் கோழி கூவுது படத்தில் அறிமுகமானவர் விஜி. விஜயகாந்த் உள்ளிட்ட பல நடிகர்களுடன் நடித்து இருந்தார். 2000ம் ஆண்டில் அவர் திடீரென்று தற்கொலை செய்துகொண்டார். காதல் தோல்வியில் தூக்கில் தொங்கி இறந்ததாக கூறப்பட்டது.
தமிழ், தெலுங்கு, மலையாள பட உலகை கவர்ச்சியால் கலக்கிய நடிகை சில்க் சுமிதா 1996ல் திடீரென்று தற்கொலை செய்துகொண்டார். இவரும் தூக்கில் தொங்கி உயிரை விட்டார்.
பத்ரி படத்தில் விஜய்யுடன் நடித்த மோனல் 2002ம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டார். இவர் காதல் தோல்வியால் உயிரை விட்டதாக கூறப்பட்டது. மோனல் நடிகை சிம்ரனின் தங்கை ஆவார்.
அவள் ஒரு தொடர்கதை படத்தில் ‘அடி என்னடி உலகம் அதில் எத்தனை கலகம்’ என்று பாடி ரசிகர்களை கவர்ந்தவர் படாபட் ஜெயலட்சுமி. நித்தம் நித்தம் நெல்லுச்சோறு நெய்மணக்கும் கத்தரிக்கா என்று அவர் பாடிய பாடலும் பிரபலம். முன்னணி நடிகையாக வளர்ந்த அவர் திடீரென்று தற்கொலை செய்துகொண்டார்.
தமிழ், தெலுங்கு படங்களில் நடித்துள்ள பிரதியுஷா விஷம் குடித்து இறந்தார்.
நகைச்சுவை நடிகை சோபனா மன அழுத்தத்தால் தற்கொலை செய்துகொண்டார்.
தமிழ், மலையாள படங்களில் நடித்துள்ள மயூரி வாழ்க்கையில் வெறுப்படைந்து விட்டதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கில் தொங்கி இறந்தார்.
நடிகை சபர்ணா சென்னை மதுரவாயலில் உள்ள வீட்டில் மர்மமாக இறந்து கிடந்தார். அவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டது.
ராம்கோபால் வர்மாவின் நிசப்த் படத்தில் கதாநாயகியாக நடித்து இந்தி பட உலகில் பிரபலமாக இருந்த ஜியாகான் தூக்கில் தொங்கி இறந்தார். அவரை காதலர் கொலை செய்துவிட்டதாக உறவினர்கள் புகார் கூறினார்கள்.
இந்தியாவில் தெரு நாய்கள் தாக்கி மனிதர்கள் உயிரிழந்து வரும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில், அதுபோன்ற சம்பவம் ஒன்று ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் தற்போது நிகழ்ந்துள்ளது.
ஆந்திரப்பிரதேச மாநிலம் விஜயநகரம் மாவட்டத்துக்கு உட்பட்ட பாலாஜிபேட் பகுதியில் ஜஸ்வந்த் என்ற 9 வயது சிறுவன் சாலையில் நடந்து சென்றுள்ளான். அப்போது அங்கு சுற்றித் திரிந்த தெரு நாய்கள் அச்சிறுவனை பார்த்து குறைத்துள்ளன. இதனால் பயந்துபோன சிறுவன் அந்த இடத்தை விட்டு ஓட முயற்சித்துள்ளான்.
இதனையடுத்து அந்த சிறுவனை துரத்தி சுற்றி வளைத்த தெரு நாய்கள், சரமாரியாக கடித்து குதறியுள்ளன. உடனடியாக அங்கிருந்தவர்கள் சிறுவனை நாய்களிடமிருந்து காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு ஜஸ்வந்த்தை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
9 வயது சிறுவனை தெரு நாய்கள் கடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைத்தளங்களில் தமிழால் எழுதுவோரை செம்மையாக்கும் இலக்கண, இலக்கிய ஆய்வு கலந்துரையாடல் நேற்று (28.02.2018) மாலை 4 மணியளவில் அஸ்திரம் மக்கள் நற்பணி மன்றத்தின் வவுனியா காரியாலயத்தில் கவிஞர் முல்லைதீவு வே.தீபன் நெறியாள்கையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் அஸ்திரம் இளைஞர் கழக தலைவர் நா.ஸ்ரீதரன் , யுரேனஸ் இளைஞர் கழக தலைவர் சிம்சுமன், வெளி சஞ்சிகை இதழாசிரியர் ந.அருளானந் , அஸ்திரம் மக்கள் நற்பணி மன்ற செயலாளர் ந.கிருஷ்ணமூர்த்தி , பசுமை புரட்சி அமைப்பின் ஸ்தாபகர் ந.விநோதன், வாழ்வின் எழுச்சி உத்தியோகத்தர் சி.கபிலன், நேர்மையின் புகழிடம் அமைப்பின் விநோதினி, பாரதி இளைஞர் கழக தலைவர் கமல், மற்றும் தமிழ் ஆர்வம் கொண்ட இளைஞர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது வளவாளர் முல்லைதீவு வே.தீபனால் வாசிப்பு திறனை மேம்படுத்தும் வகையில் ஒரு தொகை புத்தகங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
அவிஸ்ஸாவலை – தெய்யோவிட்ட பகுதியில் மாணவி ஒருவர் பாடசாலை மைதானத்தில் மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தெய்யோவிட்ட பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 4 இல் கல்வி பயிலும் மாணவி ஒருவரே நேற்று மைதானத்தில் மயங்கி விழுந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
சிரட்டைகளைப் பயன்படுத்தி நடக்கும் விளையாட்டுப் போட்டியில் ஈடுபட்டிருந்த போதே மாணவி மயங்கி விழுந்துள்ளார்.
தொடர்ந்து அவிஸ்ஸாவலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடும் வறட்சிக்கு மத்தியில் நாளை மறுதினம் முதல் மழையுடன் கூடிய காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்றைய தினம் நாட்டின் பல பகுதிகளில் அடை மழை பெய்யும் என அதன் இயக்குனர் அத்துல கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
கிழக்கு மற்றும் ஊவா மாகாணத்திலும், பொலன்னறுவை, மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும், இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
ஏனைய பிரதேசங்களில் மாலை 2 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய கூடும் என திணைக்களம் கூறியுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அந்த பிரதேசங்களில் தற்காலிகமாக கடும் காற்று வீசக்கூடும். மின்னலினால் ஏற்படுகின்ற விபத்துக்களை குறைத்து கொள்வதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்காள்ளுமாறு பொது மக்களிடம் திணைக்களம் வேண்டுக்கோள் விடுத்துள்ளது.
இதேவேளை அம்பாறை – அக்கறைபற்று பிரதேசத்தின் ஊடாக நேற்று இரவு வீசிய கடும் காற்று காரணமாக அந்த பிரதேசத்தின் 25 வீடுகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இலங்கைத் தீவின் வடமாகாணத்தின் பசுமை நிறைந்த மருதநில வயல்களும் வந்தவருக்கு வயிறார உணவளித்து வாழவைக்கும் வன்னித்திருநாட்டின் வவுனியா நகரின் கண்ணே இறம்பைக்குளம் என்னும் திருப்பதியிலே நறுவிலி மரநிழலின் கீழே வாயிலில் அஷ்ட நாகங்கள் புடைசூழ்ந்து காவல் செய்ய நவரத்தின பீடத்தில் தேவாதி தேவர்கள் புடைசூழ்ந்து ஐந்து தலை நாகத்தின் கீழ் ஸ்ரீசக்கரத்துடன் கூடிய ஸ்ரீசக்கர நாயகியாய் வேண்டுவோர்க்கு வேண்டும் வரங்களை மனமுவந்து அள்ளி அருளமுதாய் கொடுத்து அருளாட்சி புரிந்து கொண்டிருக்கும் அன்னை ஸ்ரீகருமாரி நாகபூசணி அம்பாளின் பத்தாம் மகோற்சவ பெருவிழாவில் நேற்றைய தினம் 28.02.2018 புதன்கிழமை காலை 10 மணியளவில் தேர்த் திருவிழா இடம்பெற்றது.
காலை 5.30 மணிக்கு கோவிலின் பிரதமகுரு சிவஸ்ரீ முத்து ஜெயந்தி நாதகுருக்கள் தலைமையில் காலைக் கிரியைகள் ஆரம்பமாகி காலை எட்டுமணிக்கு வசந்த மண்டபபூஜை இடம்பெற்று பின்னர் ஸ்ரீகருமாரி நாகபூசணி அம்பாள் உள்வீதி வலம்வந்து சரியாக காலை 9.30 மணியளவில் தேரில் ஆரோகணித்து 10.00 மணியளவில் ஆண் பக்தர்கள் ஒருபுறமும் பெண் பக்தைகள் மறுபுறமும் வடம் பிடிக்க அம்பாள் மயான வீதி ஊடாக கொரவபொத்தான வீதியை நூறுக்கணக்கான பக்தர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் இருபுறமும் சூழ்ந்திருக்க வந்தடைந்தாள். .
கற்பூரச் சட்டிகள் மற்றும் அங்கபிரதட்சனம் செய்துகொண்டும் கொண்டு அம்பாளின் அடியார்கள் தம் நேர்த்திகடன்களை நிறைவேற்றிய வண்ணம் அம்பாளின் பின்னால் வலம்வந்தனர். காலை 11.00 மணியளவில் அம்பாளின் ரதம் இருப்பிடத்தை வந்தடைந்தது. தொடர்ந்து அர்ச்சனைகள் இடம்பெற்று மதியம் ஒருமணியளவில் அவரோகணம் என்று சொல்லகூடிய பச்சைசாத்தல் உற்சவம் இடம்பெற்றது.
எகிப்தின் வடக்கு Cairo பகுதியில் இரண்டு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதில் 16 பேர் பலியானதாகவும் 20 பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பயணிகள் ரயில் ஒன்று சரக்கு ரயிலுடன் மோதியதால் இந்த விபத்து நேரிட்டது. சம்பவம் நடந்த இடத்திற்கு 30 அம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டு காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
பயணிகள் ரயிலின் இரண்டு பெட்டிகள் கழன்று தனியே போய் சரக்கு ரயிலுடன் மோதியதால் இந்த விபத்து நேரிட்டதாகக் கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதமும் எகிப்தின் Alexandria நகரில் நிகழ்ந்த இதே போன்ற ஒரு ரயில் விபத்தில் 41 பயணிகள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
ஈக்குவடோர் நாட்டில் இருந்து நியூயோ ர்க் செல்லும் விமானத்தில் புறப்பட்ட சில நொடிகளிலேயே பயணிகள் இருவர் வெளியே குதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈக்குவடோர் நாட்டின் க்வாயேகில் நகரில் அமைந்துள்ள விமான நிலையத்திலேயே குறித்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
சம்பவத்தின்போது குறித்த விமானமானது புறப்பட்ட சில நொடிகளில் மர்ம பொருள் ஒன்று பயங்கர சத்தத்துடன் ஓடுதளத்தில் விழுந்துள்ளதை அதிகாரிகள் கவனித்துள்ளனர்.
விமானத்தில் இருந்து ஏதோ முக்கிய பொருள் கழண்டு விழுந்ததாக கருதி அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் உடனடியாக குறித்த பகுதிக்கு விரைந்து சோதனையிட்டுள்ளனர்.
அப்போது விமானத்தில் இருந்து விழுந்தது 2 நபர்கள் என தெரிய வந்தது. அதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், இன்னொருவர் உயிருக்கு போராடிய நிலையில் இருந்துள்ளதும் தெரியவந்தது.
மேலும் அவர்களிடம் இருந்து ஒரு பெட்டியில் துணியும் 20 டொலர் பணமும் அதிகாரிகள் மீட்டுள்ளனர். குறித்த இருவரும் பெரு நாட்டவர்கள் எனவும், கள்ளத்தனமாக அமெரிக்க செல்ல திட்டமிட்டு விமானத்தின் லாண்டிங் கியர் பகுதியில் மறைந்திருந்ததும் தெரியவந்தது.
இருவரும் தங்கள் திட்டத்தை மாற்றிக் கொண்டிருக்க வேண்டும் அல்லது கியர் பகுதியில் அமைந்துள்ள இந்திரம் அவர்களை வெளியே தள்ளியிருக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்தால் ஈக்குவடோர் நாட்டின் இரண்டாவது பெரிய விமான நிலையமானது சுமார் 90 நிமிடங்கள் வரை மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கடந்த மூன்று நாட்களாகவே ஸ்ரீதேவி பற்றிய செய்திகளை தொடர்ச்சியாக கவனித்து வரும் தமிழக ஊடகங்களுக்கு விழுப்புரம் சம்பவம் நினைவில்லாமல் போனது ஏன் என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
8 வயதுச் சிறுவனை தாக்கிவிட்டு, தாயையும், மகளையும் தலையில் தாக்கி ரத்த காயங்களுடன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
பொலிசாரோ தீவிர விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கின்றனர், இது முதல் முறையல்ல, இதற்கு முன்பும் இரண்டு முறை இவ்வாறு சம்பவம் நடந்துள்ளதாம்.
விழுப்புரத்திலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிராமம் வெள்ளம்புத்தூர். தீவு போன்று தனியாக உள்ள கிராமத்தில் பெண்கள் அதிகம் வசிக்கின்றனர்.
கடந்தாண்டு மே மாதம் நரிக்குறவர் இனத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் தூங்கிக் கொண்டிருந்த போது தாக்கப்பட்டனர், சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது.
அதேபோன்று 2017 அக்டோபர் மாதமும் வன்னியர் சமூகத்தை சேர்ந்த இரண்டு மகள்களுடன் தூங்கிக் கொண்டிருந்த தாய் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.
மூன்று சம்பவங்களுக்குமே ஒரு ஒற்றுமை இருந்துள்ளது, தலையில் தாக்கிய பின்னர் ரத்த வெள்ளத்தில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண்களை மிக கொடுமையாக தலையில் பலத்த காயங்கள் படும்படி அடித்துள்ளனர். இதை ஒருவரோ, குறிப்பிட்ட கும்பலோ செய்திருக்க வாய்ப்பிருப்பதாக கூறும் பொலிஸ் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றார்கள்.
தனது கணவர் சித்ரவதை செய்வதாகவும், தன்னை காப்பாற்றுமாறு இரத்தக்காயங்களுடன் வீடியோவில் பேசிய பெண் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே நாட்றம்பள்ளியை சேர்ந்தவர் சத்யா. கடந்த 25ம் திகதி அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார், விஷயமறிந்து சென்ற பொலிஸ் அதிகாரிகள் சடலத்தை கைப்பற்றி தற்கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் தற்கொலைக்கு முன்பாக அவர் தன்னைக் காப்பாற்றுமாறு கதறும் வீடியோ வெளியாகியுள்ளது.
வட்ஸ்அப்பில் வைரலாகும் அந்த வீடியோவில், தனது கணவர் சித்ரவதை செய்வதாகவும், தன்னை காப்பாற்றுமாறு ரத்தக்காயங்களுடன் பேசுகிறார்.
கணவர் தன்னை வீட்டில் அடைத்து வைத்து சோறு தண்ணி இல்லாமல் சித்ரவதை செய்வதாகவும், கணவரை நம்பி வந்த தனக்கு பல கொடுமைகள் நடந்ததாகவும் விவரிக்கிறார்.
மேலும் தன்னிடம் செல்போன் இல்லாததால் அருகில் உள்ள நபரின் செல்போனை வாங்கி இதை பதிவு செய்ததாகவும், தங்கை போல் நினைத்து காப்பாற்றுமாறும் கதறுகின்றார்.
இவர் தற்கொலைசெய்துகொண்டதைத் தொடர்ந்து உடனடியாக சத்யாவின் கணவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கண்டனங்கள் குவிகின்றன.
நடிகை ஸ்ரீதேவிக்கு காஞ்சிபுரம் சிவப்பு புடவை மிகவும் பிடிக்கும் என்பதால் அவர் உடலில் அது கடைசியாக உடுத்தப்பட்டது.
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் இறுதிச்சடங்குகள் இன்று நடைபெற்றது. அழகாக மணப்பெண் போன்று அலங்கரிக்கப்பட்டு, அவரின் உடலில் சிவப்பு நிற காஞ்சிபுரம் பட்டுப்புடவை போர்த்தப்பட்டிருந்தது.
ஸ்ரீதேவிக்கு சிவப்பு நிறத்திலான காஞ்சிபுரம் புடவை மிகவும் பிடிக்கும் என்பதால் தென் இந்தியாவின் காஞ்சிபுரத்தில் நெய்யப்பட்ட புடவை அவர் மீது போர்த்தப்பட்டுள்ளதாம்.
அத்துடன் வாகனம் முழுதும் வெள்ளை நிற பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஸ்ரீதேவியின் உறவினரான அர்ஜீன் கபூர் இறுதிச்சடங்குக்கான வேலைகளை முன்னின்று நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.