அமெரிக்காவின் பாடசாலையில் நடந்த துப்பாக்கி சூட்டில் 17 பேர் பலி!!

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள பார்க்லாண்ட்டில் உள்ள பாடசாலை ஒன்றில் நடந்த துப்பாக்கி சூட்டில் குறைந்தது 17 பேர் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட சந்தேக நபரின் பெயர் 19 வயதான நிகோலாஸ் குரூஸ் என்று கூறப்படுகிறது. இப்பாடசாலையின் முன்னாள் மாணவரான இவர் பாடசாலையில் இருந்து நீக்கப்பட்டிருந்தார்.

பாடசாலையின் உள்ளே துப்பாக்கிசூடு நடத்துவதற்கு முன்பு இவர் பாடசாலை வளாகத்துக்கு வெளியே துப்பாக்கி சூடு நடத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த 2012ஆம் ஆண்டில் கனெக்டிக்கட் மாநிலத்தில் ஒரு ஆரம்ப பாடசாலையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருபதுக்கும் அதிகமான குழந்தைகள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு அந்நாட்டில் நடந்த மிக மோசமான தாக்குதல்களில் இது ஒன்றாகும்.

புரோவார்ட் கவுண்டியின் ஷெரீப்பான ஸ்காட் இஸ்ரேல் இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், தாக்குதல்தாரி பாடசாலை வளாகத்துக்கு வெளியே முதலில் துப்பாக்கி சூடு நடத்தியதாகவும், அதில் மூவர் இறந்ததாகவும் குறிப்பிட்டார்.

இதன்பின்னர் தாக்குதல்தாரி பாடசாலையில் நுழைந்து நடத்திய தாக்குதலில் 12 பேர் இறந்துள்ளனர். மேலும் இருவர் வைத்தியசாலைக்கு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளனர்.

´´இது ஒரு பேரழிவு சம்பவம். இதனை விவரிக்க வார்த்தைகளே இல்லை´´ என்று அவர் பின்னர் வெளியிட்ட டிவிட்டர் செய்தியில் தெரிவித்திருந்தார். இத்தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தனது அனுதாபங்களை ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலில் சந்தேக நபராக கருதப்படும் குரூஸ் தாக்குதல் நடந்து அவர் பாடசாலை வளாகத்தை விட்டு சென்ற ஒரு மணி நேரத்துக்கு பின்னர் பொலிஸ் காவலில் அழைத்து செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இரண்டு டிப்பர் வாகனங்களுக்கிடையில் சிக்குண்ட 22 வயது இளைஞர் பலி!!

திருகோணமலை சீனன்குடா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கிளப்பன் பேக் பகுதியில் டிப்பர் வாகனத்தை முந்திச்செல்ல முற்பட்ட இரு சக்கர மோட்டார் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. மோட்டார் சைக்கிள் ஓட்டுனரான 22 வயதுடைய ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

டிப்பர் வாகனம் ஒன்றை முந்திச்செல்ல முற்பட்ட போது எதிரே வந்த டிப்பர் வாகனத்தில் மோதுண்டதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இரு டிப்பர் வாகனங்களுக்கு இடையில் சிக்குண்ட நிலையில் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் ஸ்தலத்திலேயே பலியானார்.

மூதூர்-5, பெரியபாலம் பிரதேசத்தை பிறப்பிடமாக கொண்ட உம்முள் ஹசன் சப்ரி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சடலம் கிண்ணியா தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

வவுனியா பண்டாரிகுளத்தில் வீடொன்று தீக்கிரை : பொலிசார் விசாரணை!!

 
வவுனியா பண்டாரிகுளம் பகுதியில் இன்று (14.02.2018) மாலை வீடொன்று தீப்பற்றி எரிந்துள்ளது. அதனையடுத்து அயலவர்களின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இத் தீ விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியா பண்டாரிகுளத்தில் சின்னையா சுப்பையா என்பவரின் வீட்டில் தாயும் மகளும் வசித்து வந்துள்ளனர். அவர்கள் தேவை நிமித்தம் வெளியே சென்றுள்ளனர். இன்று மாலை வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் வீடு திடிரென தீப்பற்றியுள்ளது. அதனையடுத்து அயலவர்களின் உதவியுடன் தீ விபத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

வீட்டின் சுவாமி அறையில் இருந்த பொருட்களை குவித்து தீயிடப்பட்டுள்ளதாகவும் குறித்த வீட்டில் வசிக்கும் குடும்பத்தில் அண்மை காலமாக குடும்பத் தகராறு இடம்பெற்று வருவதாகவும் அயலவர்கள் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பண்டாரிகுளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் இளைஞர் குழு தாக்குதல் : ஒருவர் வைத்தியசாலையில்!!

வவுனியா இலுப்பையடியில் இளைஞர் குழு ஒன்று தாக்குதல் நடத்தியதில் ஒருவர் வெட்டுக்காயங்களுக்குள்ளாகி இன்று (14.02) வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வவுனியா பூந்தோட்டம் பகுதியை சேர்ந்த குழுவினருக்கும் இலுப்பையடியில் சிகையலங்காரம் நடத்துபவர்களுக்கிடையில் இடம்பெற்ற கைகலப்பிலேயே சிகையலக்கார நிலையத்தின் உரிமையாளரின் மகன் காயத்திற்குள்ளாகி வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ் விடயம் தொடர்பாக வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

இதேவேளை வவுனியா இலுப்பையடியில் உள்ள வர்த்தகர்களிடம் குறித்த குழுவொன்று அச்சுறுத்தி நிதிபெறுதல் மற்றும் சிக்கரட் உட்பட பொருட்களை கோருவதாகவும் வர்த்தகர்கள் அதனை வழங்காத பட்சத்தில் மதுபோதையில் வரும் குறித்த குழுவினர் வர்த்தகர்களை தாக்குவதாகவும் அப்பகுதி வர்கத்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

சிறுமியை கூட்டுபாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயற்சி : தப்பி ஓடிய சந்தேகநபர்கள்!!

இராகாலை – அள்கரநோயா தோட்டப் பகுதியில் சிறுமி ஒருவரை கூட்டு பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயன்ற சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் தெரியவருவதாவது,

நேற்று இரவு 18 வயது சிறுமி ஒருவரை கூட்டு பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்த சிலர் முயன்றுள்ளனர். இதன்போது சிறுமி சத்தமிட்டதை தொடர்ந்து குறித்த சந்தேகநபர்கள் தப்பி ஒடியுள்ளனர்.

இதையடுத்து சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் நால்வரை இன்று கைது செய்துள்ளதாக இராகலை பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி சட்ட வைத்திய அதிகாரியின் மருத்துவ பரிசோதனைக்காக நுவரெலியா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு சந்தேகநபர்களை நுவரெலியா நீதவான் முன்னிலையில் அஜர்படுத்தபட உள்ளதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

தமிழரின் ஒற்றுமைதான் உரிமையைப் பெற்றுத்தரும் : வவுனியாவில் சி.வி.விக்னேஸ்வரன்!!

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் அனுசரணையின் கீழ் இயங்கும் எல்லப்பர் மருதங்குளத்தில் அமைந்துள்ள சிவன் முதியோர் இல்லத்திற்கு நேற்று முன்தினம் (12.02.2018) திங்கட்கிழமை வடமாகாண முதலமைச்சர் கெளரவ நீதியரசர். க.வி.விக்னேஸ்வரன் விஜயம் மேற்கொண்டிருந்தார்.

இவருடன் வடமாகாண சபை உறுப்பினரான திரு.G.T.லிங்கநாதனும் வருகைதந்து இல்லத்தின் தேவைப்பாடுகள் குறித்து ஆலய அறங்காவலர்களிடம் கேட்டறிந்து கொண்டார்.

இங்கு செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழரின் ஒற்றுமைதான் எமக்குரிய உரிமையைப் பெற்றுத்தரும் எனவும் தமிழ் கட்சிகள் ஒன்றிணைய வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

அவர் அங்கு தெரிவித்த கருத்துக்களை கீழுள்ள காணொளியில் காணுங்கள்..

வவுனியாவில் தேசிய போக்குவரத்து நேரக்கணிப்பாளர் மீது தாக்குதல்!!

வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் இ.போ.ச ஊழியர்கள் 10 பேரடங்கிய குழுவொன்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் நேரக்கணிப்பாளரை தாக்கிய சம்பவத்தில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று இரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகவும், மதுபோதையில் வந்தவர்களே தாக்குதல் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் நேரக்கணிப்பாளரை நெருங்கிய இ.போ.ச ஊழியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதில் உதான சம்பத் எனும் 38 வயதான நபர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொண்டுள்ளதுடன், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் நேரக்கணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை நேற்று இரவு கைகலப்பில் ஈடுபட்ட எவரையும் இது வரையில் கைது செய்யவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

-தமிழ்வின்-

கிளிநொச்சியில் இளம் தாய் மர்மமான முறையில் கொலை!!

 
கிளிநொச்சி – வட்டக்கச்சி பகுதியில் இரண்டு பிள்ளைகளின் இளம் தாய் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இன்று மதியம் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் வடக்கச்சி பத்துவிட்டுத்திட்டத்தைச் சேர்ந்த பாஸ்கரன் நிரோசா (வயது 24) என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலைக்கான காரணம் தெரியவரவில்லை. கிராமத்தில் நடைபெறவுள்ள பூப்புனித நீராட்டு விழாவுக்கு அயலவர்கள் சென்றிருந்த போதே இக் கொலை இடம்பெற்றிருக்கிறது.

குறித்த பெண் வீட்டிற்கு பின்புறமாக இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.

இறந்த பெண்ணுக்கு ஏழு வயது மகன் மற்றும் ஒன்றரை வயது மகள் உள்ளனர். கணவர் தொழிலுக்குள் சென்றிருந்தார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலதிக விசாரணைகள் இராமநாதபுரம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சத்துரங்க தலைமையிலான குழுவினரும் கிளிநொச்சி குற்றத் தடவியல் பொலிசாரும் இணைந்து மேற்கொண்டு வருகின்றார்.

இலங்கையின் தேர்தல் வரலாற்றில் முதற் தடவையாக ஆதிவாசிப் பெண் வெற்றி!!

இலங்கையின் வரலாற்றில் முதற் தடவையாக ஆதிவாசிப் பெண் ஒருவர் அரசியலுக்குள் உள்நுழைந்துள்ளார்.

கடந்த 10ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பில் போட்டியிட்ட பெண்ணொருவரே வெற்றி பெற்றுள்ளார்.

அம்பாறை மாவட்ட தெஹியத்தக் கண்டிய ​ஹேனாநிகல தெற்கு மற்றும் வடக்கில் போட்டியிட்ட 37 வயதான W.M.ஷிரோமாலா என்ற பெண்ணே வெற்றிப்பெற்று உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கல்வி பொதுதராதர சாதாரண தரம் வரை கல்வி பயின்றுள்ள இவர், 1369 வாக்குகளைப் பெற்று வெற்றிப் பெற்றுள்ளார். இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,

தன்னுடைய மக்களுக்காகவும், அழிந்து செல்லும் தனது கலாச்சாரம் மற்றும் மதம் போன்ற விடயங்களில் அதிக கவனம் செலுத்தும் அதேவேளை நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கும் தேவையான ஒத்துழைப்பை வழங்கவுள்ளதுடன், தான் எதிர்வருகின்ற மாகாண ச​பைத் தேர்தல் மற்றம் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

வவுனியாவில் திருக்கேதீஸ்வரத்திலிருந்து வந்த வாகனம் விபத்து : 7 பேர் படுகாயம்!!

 
திருக்கேதீஸ்வரத்திலிருந்து இன்று நண்பகல் 12 மணியளவில் வவுனியா நோக்கிச் சென்ற வான் ஒன்று வவுனியாவிலிருந்து கற்பகபுரம் பகுதிக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து நிறுத்திவைக்கப்பட்டிருந்தபோது வேப்பங்குளம் பகுதியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் பேருந்திலிருந்த மூவரும் வானில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்குபேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

நேற்று திருக்கேதீஸ்வர ஆலயத்திற்குச் சென்றுவிட்டு வவுனியா நோக்கி திரும்பி வந்துகொண்டிருந்த கொழும்பைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறுபேர் பயணித்த வான் வேப்பங்குளம் சமுர்த்தி வங்கிக்கு அருகில் வவுனியாவிலிருந்து கற்பகபுரம் பகுதிக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து நிறுத்திவைக்கப்பட்டிருந்தபோது பேருந்துடன் திடீரென்று மோதியுள்ளது.

இதில் வானில் பயணம் மேற்கொண்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறுபேரில் கணவனான கேதீஸ்வரன் (40 வயது), மனைவி யாழினி (வயது 36), மகள் (7 வயது), கணவனின் தயார் விஜயலட்சுமி (60 வயது) காயமடைந்துள்ளதுடன் பேருந்தில் பயணித்த மூவர் சிறுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வானில் பயணித்தவர்கள் கொழும்பைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் மூவர் கடுமையான காயங்களுக்குள்ளாகியுள்ளதாகவும் இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நெளுக்குள பொலிசாரும் வவுனியா பொலிசாரும் மேற்கொண்டு வருகின்றனர்.

கண்ணிலிருந்து வெளிவந்த புழுக்கள் : இளம்பெண் அதிர்ச்சி!!

அமெரிக்காவில் கால்நடைகளுக்கு மட்டுமே வரும் நோய், இளம்பெண் ஒருவருக்கு வந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் oregon பகுதியைச் சேர்ந்தவர் Abby Beckley(28), இவருக்கு சமீபகாலமாக தொடர்ந்து கண்களில் எரிச்சல் ஏற்பட்டுள்ளது.

இதனால் கண் மருத்துவரிடம் சென்ற அவர் பரிசோதித்து பார்த்த போது கண்ணிலிருந்து அரை அங்குல புழுவை மருத்துவர்கள் வெளியே எடுத்துள்ளனர்.

இது போன்று கடந்த 20-நாட்களில் மட்டும் 14 புழுக்கள் எடுக்கப்பட்டுள்ளது. கால்நடைகளில் மட்டுமே காணப்படும் இந்நோய் மனிதர்களுக்கு கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இது கடந்த 2016-ஆம் ஆண்டு நடந்ததாகவும், தற்போது தான் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Abby Beckley கடந்த 2016-ஆம் ஆண்டு ஆரிகானில் உள்ள கோல்டு கடற்கரை பகுதியில் இருக்கும் பெக்லி குதிரையேற்றம் மற்றும் மீன் பிடித்தல் போன்ற பொழுதுபோக்குகளில் ஈடுபட்டிருக்கிறார். கால்நடை மீது மிகவும் ஆர்வம் கொண்ட இவர் அங்கு சுமார் இரண்டு வாரங்கள் தங்கியுள்ளார்.

அதன் பின் அங்கிருந்து ஊர் திரும்பிய அவருக்கு கண்களில் எரிச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் கண்களை அவர் பார்த்த போது, கண்களின் உள்ளே புழு ஒன்று நெளிவதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

புழுவை அவர் வெளியே எடுத்த போது சுமார் ஒரு இன்ச் நீளத்துக்கு அந்தப் புழு இருந்துள்ளது. அதைத் தொடர்ந்து அவரது கண்களில் இருந்து புழுக்கள் வெளியேறிய படியே இருந்துள்ளன.

கடும் அவதிக்குள்ளான அவர் அங்கிருக்கும் உள்ளூர் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை மேற்கொண்டுள்ளார். எந்த பலனும் அளிக்காத காரணத்தினால், அவரது உறவினர்கள் இதற்கு உரிய சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை மேற்கொண்டுள்ளனர்.

அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் கண்ணில் இருந்து மொத்தமாக 14 புழுக்களை அகற்றியுள்ளனர். அதன் பின்னர் தொடர்ந்து மருத்துவமனைக்கு சோதனைக்கு வந்து சென்ற அவருக்கு தற்போது கண்களில் எந்த புழுவும் வரவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வகை புழுக்கள் கண்ணில் உள்ள ஈரத்தன்மையைப் பயன்படுத்தி வளரக்கூடியது எனவும் புழுக்கள் மாட்டு தொழுவங்களில் உள்ள ஒருவகை ஈக்கள் மூலம் பரவும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

Abby Beckley கடந்த 2016ம் ஆண்டு சுற்றுலா சென்ற கடற்கரைக்கு அருகாமையில் ஒரு தொழுவம் இருந்துள்ளது. அங்கிருந்தே அந்த அரியவகை நோய் அவருக்கு பரவியிருக்க கூடும் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

காதலர் தினம் எமக்கு கண்டிப்பாக தேவைதானா?

நாகரீகம் என்ற அடைமழையில் நடுவே முளைத்துவிட்ட ஒரு நச்சுக் காளான் தான் இந்த காதலர் தினம். விளம்பரம் செய்யத் தெரிந்தவர்கள் அனைவரும் அழகாக விளம்பரம் செய்து பொருட்களை விற்பதற்காக மேலைத்தேசத்தில் இருந்து வந்த கரிநாள்தான் இந்தக் காதலர் தினம்.

மேலைத்தேய நாகரிகத்தில் தோன்றிய இன் நாள் மெதுவாக எம்மையும் தன் ஆக்கிரமிப்பிற்குள் கொண்டுவந்துள்ளது தான் உண்மை. எம்மில் பலர் எதற்காக காதலர் தினம் கொண்டாடுகின்றோம் என்று தெரியாமலே கொண்டாடுவது தான் வேதனை.

ஆடையின்றி இருந்த காலத்திலும் காதலை கண்ணியமாகச் சொன்ன மரபு தான் எம் தமிழ் மரபு. எம் மரபால் ஈர்க்கப்பட்ட மேலைத்தேயர்கள் இன்று எம் கலை கலாச்சாராங்களை ஆய்வு செய்து வரும் நிலையில் நாமோ எம் மரபுகளை ஆடைகள் போல் ஒவ்வொன்றாக அவிழ்த்துப் போடுவது சற்று வேதனைக்குரிய விடயமே.

தமிழரின் திருநாள் போல் ஆகிவிட்ட இக் காதலர் தினத்தை கொண்டாட முன்னணியில் வருபவர்கள் தமிழின் பெயரால் வியாபாரம் நடாத்தும் வானொலி தொலைக்காட்சிகள் தான். தமிழரின் கலை கலாச்சார பண்டிகைகளுக்கு கொடுக்காத முக்கியத்துவத்தை இக் காதலர் தினத்திற்கு இவர்கள் கொடுபதற்க்கு காரணம் வணிக நோக்கம் தவிர வேறில்லை.

நம் குழந்தைகள் கூட காதலர் தினத்தை குதூகலித்துக் கொண்டாடுகின்ற அவமான நிலைமை யாரிடம் போய் சொல்வது. தமிழர் யாரும் காதலிக்க வேண்டாம் என்று சொல்லவில்லலை. ஆனால் நாம் யார், நம் கலாச்சாரம் என்ன என்பதை அறிந்து அதற்கேற்ப எம் வாழ்வியலை அமைத்துக் கொள்கின்றோமா என்பது தான் இங்கு கேள்வி.

இக் காதலர் தினத்தை அதிகமா கொண்டாடுபவர்கள் காதல் என்பதை உண்மையாக அறியாதவர்களாகவும், பாலினக் கவர்ச்சியினால் ஈர்க்கப்பட்ட இளவயதுக்காரர்களாகவே உள்ளனர். இதனால் உண்மையாக காதல் செய்பவர்களும் சற்று தர்மசங்கடத்திற்கு ஆளாவது என்னவோ உண்மை தான்.

கடந்த ஆண்டு காதலர்தினம் கொண்டாடிய அதே நபருடன் இந்தாண்டு கொண்டாடுபவர்கள் எதனை பேர்? சினிமாவில் வரும் கன்றாவிக் காதலுக்கு இந்த இளைய சமூகம் முக்கியத்துவம் கொடுப்பதன் காரணம் தான் இந்த காதலர் தினத்திற்கு கிடைத்திருக்கும் முக்கியத்துவம்.

இதைச் சொல்லும் நான் ஒன்றும் காதலுக்கு எதிரானவன் அல்ல. இதைச் சொல்லக் காரணம் ஒரு சின்ன சமுதாய சிந்தனை தான். காதலர் தினம் கொண்டாடும் அன்பு நண்பர்களே ஒரு சின்ன வேண்டுகோள் நீங்கள் நேசிப்பவர்களை சந்தோசப் படுத்துவதற்காக உங்கள் அப்பாவின் பணத்தில் வாங்கிய அன்பளிப்புப் பொருட்கள் இருவரும் மறைத்து வைப்பது தான் காலம் காலமாக நீங்கள் செய்து வருவது..

நண்பர்களே சற்று சிந்தியுங்கள் எம் தாயகத்தில் யுத்தத்தின் வடுக்கள் இன்னும் ஆறவில்லை. அன்பிற்காகவும் ஆதரவிற்காகவும் ஏங்கி நிற்போர் ஆயிரம் ஆயிரம். இத் தினத்தில் இவர்களில் ஒருவருக்கேனும் ஒருவேளை உணவளியுங்கள், படிக்க வசதியற்ற ஒரு குழந்தைக்கு ஒரு பென்சிலாவது வாங்கிக் கொண்டுங்கள்.இவர்களின் வாழ்த்து கண்டிப்பாக உங்களை மட்டுமல்ல உங்கள் காதலையும் வாழ வைக்கும்.

இப்படிச் செய்வதன் மூலம் குறிக்கோள் இன்றி கொண்டாடப்படும் காதலர் தினத்திற்கு இளைய சமுதாயத்தினராகிய நாம் ஒரு சிறிய இலட்சியத்தையாவது வரும் தலைமுறைக்கு உருவாக்கிக் கொடுக்க முடியும்.

மகனோ கோமாவில் : அடகுக் கடைக்காரரின் தொந்தரவால் கண்ணீர் விடும் தந்தை!!

தமிழகத்தில் அடகுகடைக்காரர் தொடர்ந்து பணம் கேட்டு தொந்தரவு செய்வதால், செய்வதறியாமல் நிற்பதாக தந்தை கண்ணீர் வடித்துள்ளார்.

மேட்டூர் மாதையன்குட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராஜப்பா, மேசன் வேலை செய்து வரும் இவருக்கு மாதம்மாள் என்ற மனைவியும் கவிதா, அனிதா என இரண்டு மகள்களும் ஜெகதீசன் என ஒரு மகனும் இருக்கிறார்கள்.

பத்தாம் வகுப்பு படித்துள்ள ஜெகதீசன் மேசன் வேலை செய்து வந்ததுடன், வீட்டுக்கு தெரியாமல் திருட்டு வேலையிலும் ஈடுபட்டுள்ளான்.

இந்நிலையில் அந்த ஊரில் இரண்டு கோஷ்டிகளுக்கிடையே நடந்த சண்டையில் ஜெகதீசனுக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. அதனால் சுயநினைவு இழந்த ஜெகதீசன் கடந்த 3 வருடமாக கோமா நிலையில் உள்ளார்.

அவருக்கு ஒப்ரேஷன் செய்வதற்காக ராஜப்பா ஆறுமுகம் என்பவரிடம் ரூபாய் 16,000 இற்கு மோதிரத்தை அடகு வைத்துள்ளார். அதற்காக ரூபாய் 22,000-க்கும் மேல் வட்டி கட்டியும் இன்னும் பணம் கேட்டு தொந்தரவு செய்வதாக ராஜப்பா கூறியுள்ளார்.

இது குறித்து ராஜப்பா கூறுகையில், மகனின் ஒப்ரேசனுக்காக அறுமுகத்திடம் பணம் வாங்கினேன். ஆனால் தற்போது அதற்கு அதிகமாக பணம் கொடுத்தும், பணம் கேட்டு தொடர்ந்து தொந்தரவு செய்கிறார்.

மேசன் தொழில் செய்யும் நான் அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். குழம்பு சாதம் சாப்பிட்டு கூட 20 நாள்களுக்கும்மேல் ஆகிவிட்டது. தொடர்ந்து பணம் கேட்டு தொந்தரவு செய்வதாக கண்ணீர் வடித்துள்ளார்.

எனக்கு மனித நேயம் இருக்கிறது, பணம் கொஞ்சம் குறைத்துக் கொண்டு கொடுத்தால் கூட வாங்கிக் கொள்வேன், ஆனால் அவர்கள் தற்போது என்ன அசிங்கப்படுத்துவதால் முழுத்தொகையும் கேட்பதாக வட்டிக்கு கொடுத்த ஆறுமுகம் கூறியுள்ளார்.

என்னை கருணைக் கொலை செய்திடுங்கள் : திருநங்கையின் கண்ணீர் கடிதம்!!

தூத்துக்குடியைச் சேர்ந்த திருநங்கை ஒருவர் தன்னை கருணைக் கொலை செய்து விடும்படி இந்திய அரசாங்கத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரைச் சேர்ந்தவர் திருநங்கை ஷானவி பொன்னுசாமி. 26 வயதான இவர், கடந்த 2010ஆம் ஆண்டு தனது பொறியியல் படிப்பை, தனது பெண் தன்மையை மறைத்தே படித்து முடித்திருக்கிறார்.

அதன் பின்னர், ஏர் இந்தியாவில் வாடிக்கையாளர்களுக்கு உதவும் அதிகாரியாக பணியற்றியுள்ளார் ஷானவி. ஒரு வருட காலம் இந்த பணியை செய்த பின்னர், முறையான அறுவை சிகிச்சை செய்து கொண்டு பெண்ணாக மாறியிருக்கிறார்.

அதனுடன், தனது பெயரையும் மாற்றிக்கொண்ட ஷானவி, அதனை தமிழ்நாடு அரசிதழிலும் பதிவு செய்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, ஷானவி தனது பெற்றோரை அணுகியபோது, அவர்கள் இவரை ஏற்க மருத்துவிட்டனர்.

அதனைத் தொடர்ந்து, ஏர் இந்தியா தேர்வுக்காக நான்கு முறை ஷானவி அழைக்கப்பட்டுள்ளார். ஆனால், ஒருமுறை கூட அவர் தெரிவு செய்யப்படவில்லை. இதனால் மனமுடைந்த ஷானவி, ஏர் இந்தியா மற்றும் விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் இதுகுறித்து முறையிட்டுள்ளார்.

ஆனால், அவர்களோ ஆண், பெண் அன்றி பிற பாலினத்தவரை வேலைக்கு சேர்ப்பதில்லை என்று தெரிவித்துள்ளனர். தனது பாலினத்தை காரணம் காட்டி தனக்கு வேலை மறுக்கப்படுகிறது என்றும், அதனால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டிருக்கிறார் ஷானவி.

உச்சநீதிமன்றமும் இதுதொடர்பாக 4 வாரத்துக்குள் பதிலளிக்கக் கோரி, விமான போக்குவரத்துத்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால், இதுவரை அவர்களிடம் இருந்து எந்த பதிலும் தாக்கல் செய்யப்படவில்லை.

இந்நிலையில், தன்னை கருணை கொலை செய்துவிடும்படி, குடியரசுத் தலைவருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், ‘இறைவனால் படைக்கப்பட்டது இந்த உலகம். உலகத்தில் உள்ள அத்தனை வளங்களும் இங்கு வாழும் எல்லோருக்குமே பொதுவானது. ஆனால், இந்திய அரசானது, சிறுபான்மை பாலின மக்கள் மீது பாரபட்சம் காட்டி ஆணுக்கும், பெண்ணுக்கும் கிடைக்கின்ற அடிப்படை உரிமைகளைக் கூட எங்களுக்கு தர மறுக்கிறது.

அதனால் இந்திய அரசாங்கத்தின் கைகளால் மடிவதை நான் பெருமையுடன் கருதுகிறேன். எனவே, என்னை கருணைக்கொலை செய்துவிடுங்கள்’ என தெரிவித்துள்ளார்.

சூட்கேசில் அடைக்கப்பட்ட நிலையில் 7 வயது சிறுவனின் சடலம் : உறவினர் கைது!!

இந்திய தலைநகர் டெல்லியில் 7 வயது சிறுவனை கடத்தி கொலை செய்து உடலை சூட்கேசில் அடைந்து வீசிய உறவினர் கைது செய்யப்பட்டுள்ளார்.

டெல்லி சுவரப் நகர் பகுதியில் இருந்து ஒரு சூட்கேஸ் கண்டெடுக்கபட்டது. அதில் 7 வயது மதிக்க தக்க சிறுவனின் சடலம் இருந்தது.

இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட பொலிசார் குறித்த சிறுவன் ஒரு மாதத்திற்கு முன் கடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக உறவினர் அவிதேஷ் என்பவரை பொலிசார் கைது செய்து உள்ளனர். அவிதேஷ் சிறுவனை கடத்தி கொலை செய்து உடலை சூட்கேசில் வைத்து உள்ளார்.

அவிதேஷ் ஒரு யுபிஎஸ்சி தேர்ச்சி பெற்றவர் சிவில் சர்வீஸ் தேர்விற்கு தயாராகி வருவதாக கூறி உள்ளார். குழந்தையை கடத்தி வைத்து கொண்டு அந்த குடும்பத்துடன் இருந்தே நாடகமாடி உள்ளார். புகார் கொடுப்பதிலும் குழந்தையை தேடுவது போல் நடித்தும் உள்ளார்.

காதலர் தினத்தில் இலங்கையில் மலர்ந்துள்ள ஆபத்தான மலர்கள்!!

 
உலகளாவிய ரீதியில் இன்று காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. பெப்ரவரி மாதத்தில் வெலன்டைன் எனப்படும் மலர்கள் மலரும் காலமாகும். இந்த மலர் கண்ணுக்கு குளிர்ச்சியான காட்சியாக காணப்பட்டாலும் புற்றுநோயயை ஏற்படுத்தும் ஆபத்தான மலர் என உலக சுகாதார அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையில் இந்த மரங்களை வீட்டுத் தோட்டத்தில் வளர்த்தால் அது தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படுகின்றது.

எனினும் இதன் ஆபத்தான நிலைமையை அறியாமல் சிலர் இன்னமும் இந்த மரத்தை பாதுகாப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது.

இந்நிலையில் புத்தளம் ஆனமடுவ பிரதேசத்தில் இந்த வெலன்டைன் மரத்தின் மலர்கள் பெருமளவு மலர்த்துள்ளன. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.