தமிழகத்தில் பேருந்திற்காக காத்திருந்த மூதாட்டி ஒருவர் திடீரென மயங்கி விழுந்து இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று முந்தினம் மதியம் புதுக்கோட்டையின் பொன்னமராவதி பேருந்து நிலையத்தில் 80 வயது மூதாட்டி ஒருவர் பேருந்திற்காக காத்திருந்துள்ளார். அப்போது திடீரென மயங்கி விழுந்த அவரை சக மனிதர்கள் தண்ணீர் தெளித்து எழுப்ப முயற்சி செய்துள்ளனர்.
சில நிமிடங்கள் கழித்தும் அவரிடம் அந்த அசைவும் இல்லாததால் சந்தேகமடைந்த மக்கள் பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் வந்து மூதாட்டி இறந்து போனதை உறுதிபடுத்திய பிறகு, கையில் வைத்திருந்த பையில் உள்ள செல்போன் மூலம் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பொலிஸ் அதிகாரி முத்துக்கருப்பன் கூறுகையில், பொன் புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அழகம்மை ஆச்சி(வயது80) என்பவர் வயது முதிர்வின் காரணமாக இயற்கை மரணம் அடைந்துள்ளார். அவருடன் செல்போன் இருந்ததால் உறவினர்களை தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்க உதவியாக இருந்தது.
வயதானவர்களை வெளியே தனியாக அனுப்ப வேண்டாம், எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்பது தெரியாது என கூறியுள்ளார்.
தமிழகத்தின் சிவகங்கை மாவட்டத்தில் இளம் காதல் ஜோடி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் செல்வம்(வயது 23), பேக்கரியில் வேலை பார்த்து வருகிறார். கடந்த ஓராண்டுக்கு முன் செல்வமும், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி(வயது 20) என்னும் பெண்ணும் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
இருவரும் வெவ்வேறு ஜாதியை சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர்கள் இவர்களது காதலுக்கு மறுப்பு தெரிவித்து வந்த நிலையில் இருவரும் தனியாக வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் செல்வம் பணிக்கு வராததால், அவர் பணிபுரிந்து வந்த பேக்கரியின் உரிமையாளர் அவரது வீட்டிற்குச் சென்று பார்த்துள்ளார். அப்போது வீட்டின் அறையில் தூக்கில் தொங்கியபடி செல்வம் இறந்து கிடந்த நிலையில், அவரின் அருகில் அவரது காதல் மனைவியும் பிணமாக கிடந்துள்ளார்.
இது குறித்து பொலிசார் நடத்தியுள்ள விசாரணையில், குடும்ப பிரச்சனை காரணமாக செல்வத்தின் மனைவி, சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
வெளியே சென்று வீடு திரும்பிய செல்வம் மனைவி இறந்த சோகம் தாங்க முடியாமல் அதே சேலையில் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
இந்தியாவில் தாய் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார் என பொலிசார் நினைத்திருந்த நிலையில் அவர் மகனே மாடியிலிருந்து தள்ளிவிட்டு கொலை செய்திருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட்டில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது. ஜெர்ஸ்ரீபென் நன்வனி (64) என்ற பெண் தனது மகன் சந்தீப் என்பவருடன் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார்.
இந்நிலையில் வீட்டில் மொட்டை மாடியிலிருந்து கீழே குதித்து கடந்த செப்டம்பர் மாதம் நன்வனி தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில் இது சம்மந்தமான வழக்கை பொலிசார் மீண்டும் விசாரித்த நிலையில் பெற்ற தாயை சந்தீப் கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது.
அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள சிசிடிவி கமெரா மூலம் சந்தீப் சிக்கியுள்ளார். அதன் விபரம் வருமாறு,
நன்வனி சில காலமாக நோய் காரணமாக படுத்த படுக்கையாக இருந்துள்ளார். சந்தீப் தனது தாய்க்கு தொடர்ந்து மருத்துவ சிகிச்சையளித்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் நன்வனியை கவனித்து கொள்வதில் சந்தீப்புக்கு சலிப்பு ஏற்பட்டு அது வெறுப்பாக மாறியுள்ளது.
இதையடுத்து தாயை கொலை செய்ய முடிவெடுத்த சந்தீப் அவரை மாடிக்கு அழைத்து சென்று அங்கிருந்து கீழே தள்ளி கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடியுள்ளார்.
இது சம்மந்தமான சிசிடிவி காட்சிகளை வைத்து தற்போது பொலிசார் சந்தீப்பை கைது செய்துள்ளனர்.
நுவரெலியாவில் தற்போது நிலவும் கடும் குளிருடன் கூடிய காலநிலை காரணமாக சில பிரதேசங்களில் பூப்பனி பொழிவு நிலவி வருகின்றது.
அதிகாலை முதல் முற்பகல் 11 மணி வரை கடும் குளிருடன் கூடிய காலநிலை நிலவுவதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
நுவரெலியா மாநகர எல்லைக்குள் சில இடங்களில் இன்று பூப்பனி பொழிந்துள்ளதை காணமுடிந்துள்ளதாக பிரதே மக்கள் தெரிவித்துள்ளனர்.
பனிப்பொழிவு ஆரம்பித்துள்ளதால், நுவரெலியாவில் காய்கறி செய்கை மாத்திரமல்லாது தேயிலை பயிருக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் குறிப்பிட்டுள்ளனர்.
நுவரெலியாவில் பனிப்பொழியும் காலத்தில் வருடந்தோறும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பெருமளவில் வருகை தருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் பட்டதாரி பெண்ணொருவரின் செயற்பாடு தொடர்பில் சமூக ஊடகங்களில் அதிகம் பேசப்பட்டு வருகின்றன.
பட்டதாரி பெண்ணுக்கு தொழில் கிடைக்காமையினால் கூலித்தொழில் செய்து வாழ்ந்து வருகின்றார். கொத்மலை காஹேன பிரதேசத்தில் 44 வயதான கங்கா நிஷ்ஷங்கா என்ற பெண்ணே இந்த நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
சுகயீனமடைந்துள்ள தனது சகோதரியை கவனித்து கொள்ளும் நோக்கில் அவர் இவ்வாறு கூலி வேலை செய்து வருகின்றார். இது குறித்து கங்கா நிஷ்ஷங்கா கருத்து வெளியிடுகையில்,
“நான் 2013ஆம் ஆண்டு கலை பிரிவில் பட்டம் பெற்றேன். எனினும் இன்று வரை தொழில் ஒன்று பெற்று கொள்ள முடியவில்லை. பல நேர்முக பரீட்சைகளுக்கு சென்றேன். அரசியல் அதிகார சபைகளுக்கும் சென்றேன். எனினும் எந்தத் தொழில் கிடைக்கவில்லை. நாளுக்கு நாள் வயதாகியது. எனது அம்மாவும் அப்பாவும் உயிரோடு இல்லை. என்னும் எனது அக்கா சுகயீனமடைந்த நிலையில் பல வருடங்களாக காணப்படுகின்றார். அவரின் மருத்துவ செலவுக்கு பெருந்தொகை பணம் தேவைப்படுகின்றது. இதன் காரணமாக தோட்டங்களை சுத்தம் செய்து கிடைக்கும் வருமானத்திலேயே நாங்கள் வாழ்ந்து வருகின்றோம் எனத் தெரிவித்துள்ளார்.
150 ஆண்டுகளுக்கு பின்னர் நிகழப்போகும் blue moon eclipse என அழைக்கப்படும் முழு சந்திர கிரகணம் எதிர் வரும் 31ஆம் திகதி தோன்றவுள்ளது. 2018 ஆம் ஆண்டு தோன்றும் முதல் கிரகணம் இதுவாகும்.
இந்த சந்திர கிரகணம் மொத்தமாக 77 நிமிடங்கள் நீடிக்கும் என கூறப்படுகிறது. 150 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றும் இந்த கிரகணத்தால் பசிபிக் பெருங்கலில் கொந்தளிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் கிரகணத்தின் போது சந்திரனின் கீழ் விளிம்பு பிரகாசமாகவும், மேல் விளிம்பு இருளாகவும் காணப்படுமாம். மத்திய மற்றும் கிழக்கு ஆசியா, இந்தோனேசியா, நியூசிலாந்து, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இந்த கிரகணம் முழு நிறைவாக மாலை நேரத்தில் தெரியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே போல் அலஸ்கா, ஹவாய், வடமேற்கு கனடா ஆகிய பகுதிகளில் கிரகணம் ஆரம்பம் முதல் முடிவு வரை தெரியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் இது போன்ற முழு கிரகணம் 1866ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் திகதி தோன்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அநுராதபுரம் – எலயாபத்துவ பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவரை அவரது உறவினரான மொடலிங் வடிவமைப்பாளர் கடந்த 27ஆம் திகதி கடத்திச் சென்றுள்ளார்.
கடத்திச் செல்லப்பட்ட மாணவியும் குறித்த நபரும் கடந்த மூன்று வருடங்களாக காதல் தொடர்பை வளர்த்து வந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
தனது மகளை எங்கு தேடியும் காணாத குறித்த மாணவியின் தந்தை அநுராதபுர பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய தீவிர விசாரணை நடத்திய பொலிஸார் குறித்த நபர் மாணவியை அவரது சகோதரியின் வீட்டிற்கு கடத்திச் சென்றமை தெரிய வந்தள்ளது.
சகோதரியின் வீட்டிற்கு அழைப்பை ஏற்படுத்திய பொலிஸார் சகோதரனையும் சிறுமியையும் உடனடியாக பொலிஸில் ஆஜர்படுத்துமாறு கூற அதற்கு சகோதரி “புது வருடத்தின் பிறகு இருவரையும் அனுப்பி வைப்பதாக” கூறி அழைப்பை துண்டித்துள்ளனர்.
அதன் பிறகு பொலிஸார் குறித்த சகோதரியின் வீட்டிற்கு சென்று பொலிஸாரின் கட்டளையை மதிக்காத சகோதரியையும் மாணவியை கடத்திய சகோதரனையும் கைது செய்துள்ளனர்.
இருவரையும் கைது செய்த பொலிஸார், மாணவியை தங்களது கட்டுப்பாட்டிற்குள் எடுத்து குறித்த மாணவி பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்டுள்ளாரா? என்பதை பரிசோதிக்க அநுராதபுர போதனா வைத்தியசாலையின் நீதிமன்ற வைத்தியரிடம் அனுப்பி வைத்துள்ளனர்.
18 வயதிற்குட்பட்ட சிறுமியின் உறவினராக இருந்த போதும் சட்டரீதியாக பாதுகாவலர் உரிமம் இல்லாது அழைத்துச் சென்ற குற்றத்திற்காக குறித்த மொடலிங் வடிவமைப்பாளரையும், அதற்கு துணைபோன சகோதரியையும் பொலிஸார் நீதி மன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனாவில் உள்ள பீஜிங் நகருக்கு 2014-ம் ஆண்டு மார்ச் 8-ந் திகதி பயணிகள் விமானம் புறப்பட்டது. இதில் ஊழியர்கள் உள்பட 239 பயணிகள் இருந்தனர். விமானம் புறப்பட்டு சென்ற சிறிது நேரத்தில் மாயமானது.
அந்த விமானம் என்ன ஆனது என்று தெரியவில்லை. அது கடலில் விழுந்து மூழ்கி இருக்கலாம் என்று கருதப்பட்டது. விழுந்த விமானத்தை தேடும் பணி தொடர்ந்து நடந்து வந்தது.
இந்த நிலையில் தென்ஆப்பிரிக்கா அருகே விமானத்தின் உதிரிபாகம் மிதந்து வந்தது. அது மலேசிய விமானத்தின் பாகம் தான் என்பது உறுதிசெய்யப்பட்டது. ஆனாலும் விமானம் எங்கு விழுந்தது என்று இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
விமானத்தை தேடும் பணியில் அவுஸ்திரேலிய நிறுவனம் ஈடுபட்டது. விமானத்தை கண்டுபிடிக்க முடியாத நிலையில் அதுவும் தனது பணியை முடித்துக்கொண்டது.
தற்போது அமெரிக்காவை சேர்ந்த ஓசியன் இன்பினிட்டி என்ற நிறுவனத்தின் மூலம் தேடுதல் பணிகளை செய்ய மலேசியா ஏற்பாடு செய்துள்ளது. கடலில் தேடும் பணிகளை செய்வதற்காக விசேஷ கப்பலை இந்த நிறுவனம் வைத்துள்ளது. அதிநவீன தொழில்நுட்பங்கள் இந்த கப்பலில் உள்ளன. அதில் ஒரு கப்பல் தேடும் பணியை மேற்கொள்ள உள்ளது.
தற்போது தென்ஆப்பிரிக்காவில் நிறுத்தப்பட்டுள்ள இந்த கப்பல் தேடும் பணிக்காக புறப்பட்டு வருகிறது. அதில் உள்ள கருவிகள் மூலம் விமானத்தை கண்டுபிடித்து விடலாம் என்று நம்புகிறார்கள்
பிபிலை, வேகம கஹட்டகஹலவட்டன பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து பெண் ஒருவரின் சடலம் ஒன்று பிரதேசவாசிகளால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 52 வயதுடைய திருமணமாகாத பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
பிபிலை, வேகம கஹட்டகஹலவட்டன பிரதேசத்தில் உள்ள குறித்த வீட்டில் 76 வயதுடைய தாயும் இரண்டு மகள்மாரும் வசித்து வந்ததாக பிரதேசவாசிகள் கூறுகின்றனர்.
கடந்த சில காலமாக அவர்கள் மூவரும் ஒருவிதமான நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும் அந்த வீட்டில் இருந்த 52 வயதுடைய மூத்தமகள் உயிரிழந்திருந்த நிலையில் தாயும் சகோதரியும் அதனை அறிந்திருக்கவில்லை.
குறித்த வீட்டிற்கு அருகாமையால் பயணிக்கும் போது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதை அவதானித்த பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் வீட்டை சோதனையிட்ட போது அந்தப் பெண் உயிரிழந்திருந்தமை தெரிய வந்துள்ளது.
பின்னர் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து பிபிலை வைத்தியசாலையின் ஊழியர்கள் வருகை தந்து சடலத்தையும் ஏனைய இரண்டு பெண்களையும் வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.
வவுனியா மாவட்டம் வடக்கின் நுழைவாயில் என அழைக்கப்படுகிறது. தெற்கையும் வடக்கையும் இணைக்கின்ற கேந்திர ஸ்தானமாக உள்ளது.
போராட்ட காலத்தில் விடுதலைப் புலிகளும் இராணுவத்தினரும் இதன் முக்கியத்துவம் கருதி எழுதப்படாத ஒப்பந்தம் மூலம் பொதுமக்கள் வந்து செல்லக்கூடிய இடமாக பிரகடனம் செய்யாத சமாதான வலயமாக நீண்ட காலம் கையாண்டு வந்தனர். இந்த விடயம் இலங்கையின் அனைத்து மக்களுக்கும் வவுனியா நகரம் முக்கியத்துவம் மிக்கது என்பதை காட்டிநிற்கின்றது.
தற்போது இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ள நிலையில் வடக்கினதும் தெற்கினதும் இணைப்புப் பாலமாக வவுனியா நகரம் மீண்டும் எழுச்சி கண்டுள்ளது. வவுனியாவை தம்புள்ள, குருநாகல், பிபிலை, போன்ற சந்தி நகரங்கள் அட்டவணையில் இணைக்கமுடியும் .
சாதாரண சூழ்நிலை நிலவிவரும் இக்காலத்தில் வவுனியாவிற்கு இலங்கையின் பல்வேறு பிரதேசங்களில் இருந்தும் பேரூந்துகள் மூலம் தினமும் ஆயிரக்கணக்காணோர் வந்து செல்கின்றார்கள் அல்லது வவுனியாவைக் கடந்து செல்கிறார்கள் .
இந்நிலையில் வவனியாவின் பேரூந்து போக்குவரத்து சேவைகளில் ஏற்படும் தேக்கநிலை இலங்கையின் அனைத்து பிரதேச பயணிகள் இடையேயும் குறிப்பாக வடக்கு நோக்கிய பயணிகளின் அதிர்வுகளை ஏற்படுத்தும் .
இதனால் தரமான சீரான போக்குவரத்து சேவையை வழங்க வேண்டிய அவசியம் வவுனியா போக்குவரத்துத் துறையினருக்கு இருக்கின்றது.
காலி, கொழும்பு, கதிர்காமம் , புத்தளம், இரத்தினபுரி , குருநாகல், அனுராதபுரம், பதுளை என நாட்டின் தென்பகுதி மலையகப்பகுதி மக்கள் வடக்கின் நுழைவாயிலாக வவுனியாவையே அடையாளம் காண்கின்றனர்.
அதுமட்டுமல்லாது கிழக்கு மாகாணம், மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாண பயணிகளின் பொற்கதவாக (கோல்டன் கேற்) வவுனியா நகரம் விளங்குகிறது.
பல நகரங்களின் பயணிகளின் சங்மமம் இங்கு இருப்பதால் பயணிகள் இடம்மாறிச்செல்லும் (ராண்சிற்) பஸ் போக்குவரத்து மையமாகவும் இது சிறப்புப்பெறுகிறது. இதனால்தான் போக்குவரத்து நகரம் என்ற பதம் பயன்படுத்தப்படுகின்றது.
அண்மைக்காலமாக நிலவிவந்த போக்குவரத்து சீரின்மை தற்போது முடிவுக்கு வந்திருப்பது பலருக்கு பெரிய நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது. சில வர்த்தகர்கள் பாதிக்கப்பட்டிருப்பினும் அது தற்காலிகமானதே. காலப்போக்கில் சமநிலை எல்லாவற்றிலும் ஏற்படும்.
ஒரு உறையினுள் இரண்டு வாள் நிலையில் தமது சேவைகளை செய்வதில் பலத்த போராட்டங்களை சந்தித்த இரு தரப்பினரும் முதலமைச்சரின் அதிரடி முடிவால் இன்று தமது அனைத்து எதிர்ப்புகளையும் கைவிட்டு ஒரு குடையின் கீழ் சேவையில் ஈடுபடத்தொடங்கியுள்ளமை பாராட்டப்படக்கூடியது.
இது வடமாகாணத்தில் உள்ள தனியார் மற்றும் இலங்கைப் போக்குவரத்து சபையினரின் ஒன்றிணைந்த போக்குவரத்து சேவையின் ஒரு நல்ல முன் உதாரணமாக மாறி இருக்கின்றது.
காலப்போக்கில் ஏனைய மாவட்டங்களிலும் முதலமைச்சர் இவ்வாறான ஒருங்கிணைந்த சேவையை அமுல் செய்ய ஆலோசனை வழங்கலாம் .
வவுனியா புதிய பேரூந்து நிலையத்திற்கு நேற்றையதினம் விஜயம் மேற்கொண்ட வட மாகாண போக்குவரத்து அதிகாரசபையின் பொது முகாமையாளர் வல்லிபுரநாதன் பத்மநாதன், வடமாகாண சபை அமைச்சின் பிரதம கணக்காளர் ஜெயராஐா, முதலமைச்சின் நிர்வாக உத்தியோகத்தர் ஜெயலோரன்ஸ் மற்றும் இலங்கை போக்குவரத்து தலைமையக உத்தியோகத்தர்கள், வவுனியா மாவட்ட தனியார் போக்குவரத்து சங்கத்தினர், வவுனியா இ.போ.ச ஊழியர்களுக்கிடையே இடம்பெற்ற சந்திப்பின் போது புதிய பேரூந்து நிலையத்திலிருந்து இரு தரப்பினரும் சேவையாற்ற சம்மதம் தெரிவித்தனர்.
இந்நிலையில் நேற்று மாலை 4 மணியளவில் வெளிமாவட்டத்தினைச் சேர்ந்த இ.போ.ச பேரூந்து புதிய பேரூந்து நிலையத்திற்கு சென்ற சமயத்தில் இ.போ.ச ஊழியர்களுக்கும் தனியார் பேரூந்து ஊழியர்களுக்குமிடையே முறுகல்நிலை ஏற்பட்டது .
அதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்ட சமயத்தில் இ.போ.ச பேருந்து சாரதி ஒருவர் மீது பொலிசார் தாக்குதல் நடத்தியதாகத் தெரிவித்து குறித்த இ.போ.ச சாரதியான ஏ.எம்.இர்ஸாட் (வயது 30) என்பவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து தமது ஊழியர்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை எனத் தெரிவித்து புதிய பேருந்து நிலையத்தில் சேவை மேற்கொண்ட அனைத்து இலங்கை போக்குவத்துச் சபை பேருந்துகளும் வவுனியா சாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டு இலங்கை போக்குவரத்து சபை வவுனியா சாலை ஊழியர்கள் தமக்கு பாதுகாப்பு இல்லாத காரணத்தால் மீண்டும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
நேற்று இ.போ.ச ஊழியர்களுக்கிடையே இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இன்று (05.01.2018) காலை 9 மணி தொடக்கம் புதிய பேரூந்து நிலையத்திலிருந்து இ.போ.சபையினரும் தனியார் போக்குவரத்து பிரிவினரும் சேவையில் ஈடுபட்டுள்ளனர்.
புதிய பேரூந்து நிலையத்தில் உள்ளுர் சேவைகள், வெளியூர் சேவைகள் என இரு கட்டிடங்கள் உள்ளன. அவற்றில் வெளியூர் சேவைகள் கட்டிடத்திலிருந்து இ.போ.ச பேரூந்துகளும் உள்ளுர் சேவைகள் கட்டிடத்திலிருந்து தனியார் சேவைகளும் என பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
வவுனியா நெளுக்குளம் பகுதியில் நேற்று (04.01) மாலை 10 கிலோ பண்டி இறைச்சியுடன் நபர் ஒருவரைக் கைது செய்துள்ளதாக நெளுக்குளம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்த மேலும் தெரியவருகையில்,
நேற்று மாலை நெளுக்குளம் பகுதியில் பண்டி இறைச்சி 10 கிலோவுடன் பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த 33 வயது நபர் ஒருவரைக் கைது செய்துள்ளதாகவும் விசாரணைகளின் பின்னர் இன்று வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், எகிப்து உள்ளிட்ட சில நாடுகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கடும்போக்காளர்கள் நாட்டுக்குள் பிரவேசிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இந்த கடும்போக்காளர்கள் நாட்டுக்குள் பிரவேசிக்க முயற்சித்துள்ளனர்.
எனினும் வெளிநாட்டு புலனாய்வுப் பிரிவுகளின் தகவல்களின் அடிப்படையில் இவர்கள் நாட்டுக்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்படவில்லை.
இவர்களுக்கு மேலதிகமாக சிரியாவைச் சேர்ந்த ஆறு பேரும், இந்திய மற்றும் சீன நாடுகளைச் சேர்ந்த 400 பேரும் நாட்டுக்குள் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானிலிருந்து இலங்கைக்குள் பிரவேசிக்க முயற்சித்தவர்கள் தலிபான் அமைப்புடன் தொடர்புடையவர்கள் என புலனாய்வுப்பிரிவுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வீசா மறுக்கப்பட்ட பாகிஸ்தானியர்கள் தங்களது வீசா விண்ணப்பத்தில் மன்னார், மட்டக்களப்பு வாழ் இலங்கையர்களின் முகவரிகளை குறிப்பிட்டிருந்தனர் என கட்டுநாயக்க விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சில நபர்கள் இவர்களை நாட்டுக்குள் அழைத்து வர முயற்சிப்பதாக கொழும்பு சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
உடுப்பியை சேர்ந்தவர் பிரகாஷ் அம்முன்னாய என்ற ஜோதிடர். சமீபத்தில் நடைபெற்ற குஜராத் சட்டசபை தேர்தல் முடிவுகளை துல்லியமாக அவர் கணித்திருந்தார்.
குஜராத்தில் காலை 10 மணிவரை காங்கிரஸ் முன்னிலை பெறுவதை போன்ற தோற்றம் ஏற்படும். ஆனால் 10 மணிக்கு மேல் அது மாறி பாஜக தனிப்பெரும்பான்மையோடு ஆட்சியமைக்கும் என்பதே கிரக நிலை என்று கணித்திருந்தார்.
தேர்தல் முடிவுகள் வெளியாகும் ஒருநாளைக்கு முன்பாக தனது பேஸ்புக் பக்கத்தில் அந்த தகவலை வெளியிட்டார். ஜோதிடர் கூறியதை போலவே, குஜராத் தேர்தல் முடிவுகளும் அமைந்தன. இதையடுத்து கர்நாடக ஊடகங்கள் அவர் வீட்டை நோக்கி படையெடுத்து வருகின்றன.
இந்த நிலையில், அவர் ரஜினிகாந்த் அரசியல் நிலை என்னவாகும் என்பது பற்றி அவர் வழங்கிய சிறப்புப் பேட்டியில்.. உங்கள் பார்வைக்கு: ரஜினிகாந்த் மகர ராசிக்காரர். சிம்ம லக்கினம். ரஜினிகாந்த்துக்கு ‘துர்தரா’ யோகம் உள்ளது. இந்த யோகம் உள்ளவர்களை எதிர்த்து நின்று யாராலும் ஜெயிக்க முடியாது. பின்னால் இருந்துதான் வெற்றி கொள்ள முடியும்.
ராமாயணத்தில், வாலிக்கும் இதுபோன்ற யோகம் இருந்தது. எனவேதான், எதிர்த்தவர்கள் பலம் எல்லாம் வாலிக்கு சென்றுவிடும். இதனால்தான் ராமர் மறைந்திருந்து, வாலியை அம்பெய்தி கொன்றார். எனவே ரஜினிகாந்த், தன்னுடனே உள்ளவர்களிடம்தான் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மிகவும் எச்சரிக்கையோடுதான் தன்னை சுற்றிலும் அவர் ஆட்களை அனுமதித்து வருகிறார் என்பது நல்ல விஷயம்தான்.
ரஜினிகாந்த் ராசி நிலவரப்படி அவர் கட்சி லோக்சபா தேர்தலில் போட்டியிட்டால் 3 முதல் 5 தொகுதிகளை வெல்ல முடியும். ரஜினி ஜாதகத்தில் கால சர்ப்ப தோஷம் உள்ளது. எவ்வளவு உயரத்திற்கு போனாலும், இந்த தோஷம் இருந்தால் அவர்களை கீழே கொண்டு சென்றுவிடும். இதற்கு ஒரு உபாயம் உள்ளது. ரஜினிகாந்த், தன்னை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்த கூடாது. கட்சி தலைவராக இருக்கலாம்.
கிங் மேக்கராக இருக்க வேண்டுமே தவிர, கிங் நாற்காலிக்கு ஆசைப்படக்கூடாது. கட்சி தலைவராக இருந்து கொண்டு கை காட்டுபவரை முதல்வராக்க வேண்டும். அப்படி செய்தால், ரஜினிகாந்த் கட்சி தமிழகத்தில் மிகப்பெரிய சக்தியாக உருவெடுக்கும்
ரஜினிகாந்த் ஜாதகப்படி அவர் மிகுந்த போராட்டங்களை எதிர்கொண்டே உயரத்தை அடைவார். அரசியலிலும் அவருக்கு மிகப்பெரிய எதிர்ப்புகள் வரும். கிங் மேக்கராக அவர் செயல்பட்டால் அத்தனை எதிர்ப்புகளையும் அவர் தூள் தூளாக்கி முன்னேறி வெற்றிக்கொடி நாட்டுவார். இவ்வாறு பிரகாஷ் அம்முன்னாய தெரிவித்துள்ளார்.
கொழும்பு பொரலஸ்கமுவ ஏரியை அபிவிருத்தி செய்து சுற்றுலா பயணிகளுக்கு ஈர்ப்பை ஏற்படுத்தும் இடமாக மாற்றுவதற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
10 வருடங்களாக எவ்வித அபிவிருத்திகளும் மேற்கொள்ளப்படாமல் உள்ள இந்த ஏரியை நவீனமயப்படுத்த நகர அபிவிருத்தி அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக 175 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளது.
இலங்கை நீர்ப்பாசன திணைக்கள நிர்வாகத்தின் கீழ் காணப்படுகின்ற பொரலஸ்கமுவ ஏரியின் மதில்கள் தொழில்நுட்ப முறையின் கீழ் அபிவிருத்தி செய்தவற்கு இலங்கை நீர்ப்பாசன திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
நேற்று ஆரம்பிக்கப்பட்ட இந்த நடவடிக்கை எதிர்வரும் 30 நாட்களுக்குள் முழுமைப்படுத்தப்படவுள்ளது.
இந்நிலையில் அபிவிருத்தி திட்டத்தின் முதற்கட்ட நடவடிக்கையாக நீர்ப்பாசன திணைக்களத்தின் முழுமையான கண்காணிப்பின் கீழ் 2.5 கிலோ மீற்றர் தூரத்திற்கு நடைப்பயிற்சி மேற்கொள்ளப்படும் இடம் ஒன்று நிர்மாணிக்கப்படவுள்ளது.
இந்த ஏரியின் வேலைகள் நிறைவடைந்த பின்னர் அதன் மத்தியில் சுற்றுலா பயணிகளை கவர்ந்த தீவு போன்ற இடமாக மாற்றமடையும்.
அங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு ஓய்வு பெறுவதற்கு தேவையான இயற்கை வளமிக்க இடமாக காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.