ரஷ்யாவில் இளைஞன் ஒருவன் தனது 45 வயது காதலியை அடித்துக் கொன்று மூளையை சமைத்து சாப்பிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள இளைஞன் விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்த கருத்துகள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
21 வயதான டிமிட்ரி லுச்சின் தமது 45 வயது ஓல்கா என்ற காதலியை அவரது குடியிருப்பில் வைத்து காலி மது போத்தலை பயன்படுத்தி கொலை செய்துள்ளார்.
சம்பவத்தன்று இருவரும் உள்ளூர் நேரப்படி மாலை வேளையில் சந்தித்துள்ளனர். இருவரும் மது அருந்தியபடி பல சம்பவங்கள் குறித்து விவாதித்தபடி இருந்துள்ளனர்.
இந்த நிலையில் தமக்கு தூக்கம் வருவதாக கூறி படுக்கை அறைக்கு ஓல்கா சென்றுள்ளார். ஒரு மணி நேரம் கடந்த நிலையில் லுச்சின் அவரது படுக்கை அறைக்கு சென்று தலையணையால் ஓல்காவை கொலை செய்ய முயன்றுள்ளார்.
இதில் இருந்து தப்பிய அவர் லுச்சினை கடுமையாக கடிந்து கொண்டுள்ளார். ஆனால் சிறிது நேரத்திற்கு பின்னர் காலி மது போத்தலை பயன்படுத்தி கடுமையாக தாக்கி கொலை ஓல்காவை கொலை செய்துள்ளார் லுச்சின்.
இதனையடுத்து ஓல்காவின் மூளையை சமைத்து சாப்பிட்டுள்ளார். மட்டுமின்றி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த அந்த பெண்ணுடன் லுச்சின் பாலியல் உறவும் கொண்டுள்ளார்.
கடந்த மார்ச் மாதம் 8 ஆம் திகதி நடந்த இந்த சம்பவத்தை அடுத்து 6 மணி நேரத்திற்கு பின்னர் ஓல்காவின் டேபெட் கணணி மற்றும் 150 ரூபில்ஸ் பணம் உள்ளிட்டவைகளை எடுத்துக் கொண்டு மாயமாகியுள்ளார்.
இந்த நிலையில் தகவல் பொலிசாருக்கு தெரிய வரவே, சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட லுச்சின், அதுவரை நடந்தவற்றை பொலிசாரிடம் ஒப்புவித்துள்ளார்.
இந்த வழக்கு விசாரணையில் லுச்சின் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் ஆயுள் தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இரண்டாம் வகுப்பு மாணவன் கொலை வழக்கில் அதே பள்ளியை சேர்ந்த இன்னொரு மாணவனை சிபிஐ பொலிசார் கைது செய்துள்ளனர்.
ஹரியானா மாநிலத்தின் குர்கானின் உள்ள ரயான் சர்வதேச பள்ளிக்கூடத்தை சேர்ந்த இரண்டாம் வகுப்பு மாணவன் பிரதுமன் (7) கடந்த செப்டம்பர் மாதம் 8ம் திகதி பள்ளிக்கூட கழிவறையில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தான்.
இதை பார்த்த பதினோராம் வகுப்பு மாணவர் ஒருவர் இதுகுறித்து பள்ளிக்கூட தோட்டக்காரரிடம் கூறினார். பின்னர் பிரதுமனின் சடலம் கைப்பற்றப்பட்டது. சம்பவம் தொடர்பாக பேருந்து நடத்துனர் ஒருவரை பொலிசார் கைது செய்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், கழிவறையில் பிரதுமன் இருப்பதை சொன்ன பதினோராம் வகுப்பு மாணவரை பொலிசார் இவ்வழக்கில் நேற்றிரவு கைது செய்துள்ளனர்.
பள்ளியில் நடத்தப்படும் பரீட்சைகள் மற்றும் ஆசிரியர், பெற்றோர் சந்திப்பை தள்ளி வைக்கவே பிரதுமனை பதினோராம் வகுப்பு மாணவன் கொலை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
கைது செய்யப்பட்ட மாணவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். பள்ளியில் இருந்த சிசிடிவி கமெராவில் பதிவான காட்சிகள் மூலம் மாணவர் சிக்கியுள்ளார்.
இதனிடையில் தன் மகன் கொலை செய்யவில்லை எனவும், சிபிஐ அவனை கட்டாயப்படுத்தி இதை ஒப்புக்கொள்ள வைத்துள்ளதாகவும் கைதான மாணவரின் தந்தை குற்றம்சாட்டியுள்ளார்.
வடகொரியாவின் அணுஆயுத அச்சுறுத்தல்களை தவிர்க்க சீனா உடனடி நடவடிக்கையை எடுக்க வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 11 நாட்கள் ஆசிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அந்த வகையில், தற்போது ட்ரம்ப் சீனாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இந்த வியஜத்தின் போது கம்யூனிஸ்ட் கட்சியின் புகழ்மிக்க மண்டபத்தில் ஆயிரக்கணக்கான சீன மக்கள் மத்தியில் டொனால்ட் ட்ரம்ப் உரையாற்றினார்.
இதன் போது வடகொரியாவின் அணுஆயுத அச்சுறுத்தல்களை தவிர்க்க சீனா உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
நேரம் வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறது. நாம் வேகமாக செயல்பட வேண்டும். வடகொரியாவின் அச்சுறுத்தல்களை தடுக்க சீனா உடனடி நடவடிக்களை எடுக்க வேண்டும். பிற நாடுகளைக் காட்டிலும் சீனா இதில் சிறப்பாக செயல்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டின் இது வரையான காலப்பகுதியில் ஒரு இலட்சத்து 67 ஆயிரம் டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன், 395 பேர் டெங்கு நோய் காரணமாக உயிரிழந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.
இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் மூன்று மடங்கு அதிகரிப்பை காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், டெங்கு நோய் காரணமாக ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு நான்கு மடங்காக அதிகரித்துள்ளது.
2010ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இந்த ஆண்டிலேயே, அதிக டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அதிகளவான மரணங்களும் ஏற்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு நாடு முழுவதிலும் 55 ஆயிரத்து 150 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர். 97 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த வருடத்தில் இதுவரையில் ஒரு இலட்சத்து 67,198 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 395 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இன்றும் நாளையும், தேசிய ரீதியாக டெங்கு ஒழிப்பு சிறப்பு வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், கொழும்பு, கம்பஹா, களுத்துறை, குருநாகல், புத்தளம், இரத்தினபுரி, கேகாலை, யாழ்ப்பாணம், கல்முனை, கண்டி, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்கள் தொடர்ந்தும் டெங்கு அச்சுறுத்தல் நிலவும் மாவட்டங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் கூறியுள்ளது.
தமிழகத்தில் கணவன் மற்றும் மனைவிக்கு இடையே நடந்த ஈகோ பிரச்சனையால், மனைவி உயிரைவிட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம் திருமானூர் பகுதியைச் சேர்ந்தவர் கணபதி, இவருக்கும் அரியலூரைச் சேர்ந்த ஜனனி என்பவருக்கும் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டுத் திருமணம் நடந்தது.
இவர்களுக்கு அக்ஷய் கவுதம்(3), ரிதன்யா(1) என்று இரண்டு குழந்தைகள் உள்ளனரர். இந்நிலையில் கடந்த 6ம் திகதி கணபதி தனது மனைவி ஜனனி தூக்கில் தொங்கிவிட்டதாக கூறி, அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.
ஆனால் அங்கு ஜனனியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கன்வே இறந்துவிட்டதாகவும், இதனால் பிரேத பரிசோதனைக்கு திருச்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் படி கூறியுள்ளனர்.
ஆனால் கணபதியோ அதை செய்யாமல், தனது சொந்த ஊரான திருமானூர் பகுதிக்கு கொண்டு சென்று உடலை எரிப்பதற்கு ஏற்பாடுகள் செய்துள்ளார்.
இது குறித்து தகவல் பொலிசாருக்கு தெரியவந்தால், ஜனனியின் உடலை எரிப்பதற்குள் குறித்த இடத்திற்கு சென்றுள்ளனர். பொலிசார் வருவதை அறிந்த கணபதி அங்கிருந்து தப்பியுள்ளார்.
இதைத் தொடர்ந்து ஜனனியின் தந்தை தனது மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி பொலிசில் புகார் அளித்துள்ளார்.
அப்போது அவர், ஜனனிக்கு 60 பவுன் நகையும் ரூபாய் 5 லட்சம் மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருள்களும் கொடுத்தேன். கூடுதல் வரதட்சணைக் கேட்டு கணபதி மற்றும் அவருடைய குடும்பத்தினர்தான் என் மகளைக் கொலை செய்திருக்கலாம் என்று தெரிவித்தார்.
அதன் பின் பொலிசார் நடத்திய விசாரணையில், கணபதி 8ம் வகுப்புவரை படித்துள்ளார். ஜனனி எம்.டெக் முடித்துள்ளார்.
ஜனனியின் பெற்றோரோ மாப்பிள்ளை ரியல் எஸ்டேட் தொழிலில் செய்து வருகிறார் செல்வாக்கு மிகுந்தவராகவும் இருக்கிறார் என்று கூறி பெண் கொடுத்துள்ளனர்.
திருமணம் முடிந்த பின்னர் இருவருக்கும் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது. பிரச்சனைக்கு முக்கிய காரணாமே ஜனனி அவரின் பெற்றோர் வீட்டுக்கு செல்வது, அப்படிப் போவதால், குடும்பத்துக்குள் சண்டை வலுத்து வருவதாக நினைத்த கணபதி, தனது மனைவியை அவரின் சொந்த ஊருக்குச் செல்லக்கூடாது என்று அடிக்கடி கூறியுள்ளார்.
இதே போன்று ஒரு முறை சண்டை வந்துள்ளது. அப்போது கணபதி வீட்டிற்கு போகக்கூடாது என்று சொல்ல, அதற்கு ஜனனி இப்படியே செய்தால் நான் இறந்துவிடுவேன் என்று கூறியுள்ளார்.
இதை பொருட்படுத்தாமல் கணபதி வேலை விவகாரம் தொடர்பாக வெளியில் சென்றுள்ளார். அப்போது திரும்பி வந்து பார்த்தபோது ஜனனி, தூக்கில் தொங்கியபடி இருந்துள்ளார், இருவருக்குள்ளும் இருந்த ஈகோ பிரச்னையே அனைத்திற்கும் காரணம் என்று தெரியவந்துள்ளது.
சவுதி அரேபியாவில் இடம்பெற்ற மிகப்பெரிய ஊழல் எதிர்ப்பு நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட 11 இளவரசர்கள், அமைச்சர்கள் மற்றும் தொழிலதிபர்கள் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.
இவர்கள் தரையில் போடப்பட்ட மெல்லிய மெத்தையில் வரிசையாக உறங்கும் படம் ஒன்றை பிரிட்டன் நாட்டு நாளிதழான டெய்லி மெயில் வெளியிட்டுள்ளது.
சவுதி தலைநகர் ரியாதில் இருக்கும் ரிட்ஸ் கார்லடன் ஹோட்டலிலேயே இவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக தெரியவருகிறது.
போர்வையால் போர்த்தியபடி உறங்கும் படம் ஒன்றே வெளியாகியுள்ளது. இவர்களில் உலகின் பெரும் செல்வந்தர்களில் ஒருவரான இளவரசர் அல் வலீத் பின் தலாலும் இருப்பதாக சவுதி வட்டாரத்தை மேற்கோள் காட்டி அந்த பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
சவூதி மன்னரின் மைத்துனரான அல் வலீத்தின் சொத்து மதிப்பு 18 பில்லியன் டொலர்களாகும். சவுதி அரச வட்டாரத்தில் இருந்தே இந்த புகைப்படம் கிடைத்ததாக டெய்லி மெயில் குறிப்பிட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சிலர் ரிட்ஸ் கார்லடன் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டிருக்கும் செய்தியை ரொய்ட்டர்ஸ் மற்றும் வோல் ஸ்டிரீட் ஜெர்னல் வெளியிட்டது.
492 அறைகள் கொண்ட அந்த ஹோட்டல் நவம்பர் இறுதி வரை முழுமையாக பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் டிசம்பரில் மீண்டும் முன்பதிவுகள் பெறப்படவிருப்பதாகவும் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
கடந்த வார இறுதியில், இந்த ஹோட்டலில் இருந்த விருந்தினர் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டிருப்பதாக குறிப்பிடப்படுகின்றன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை காலையில் ஹோட்டலின் பிரதான வாயில் மூடப்பட்டு பாதுகாப்பு காரணங்களை கூறி செய்தியாளர்கள் அங்கிருந்து திருப்பி அனுப்பப்பட்டதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
ஹோட்டலுக்கு தனியார் கார்கள், அம்புலன்ஸ்கள் நுழைவதாகவும் ரொய்ட்டர்ஸ் செய்தியில் கூறப்பட்டுள்ளது. அதேபோன்று எதிர்பாராத சூழ்நிலை காரணமாக அடுத்த அறிவிப்பு வரும்வரை ஹோட்டலின் இணையத்தள மற்றும் தொலைபேசி தொடர்புகள் துண்டிக்கப்படுவதாக அந்த ஹோட்டலின் இணைய பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் இந்த கைதிகள் ஊழலை ஒழிக்கும் நடவடிக்கையின் ஆரம்பம் என்று சட்டமா அதிபர் ஷெய்க் சவூத் அல் முஜிப் வெளியிட்ட அறிவிப்பொன்றில் கூறப்பட்டுள்ளது. ஊழலை ஒழிக்கும் ஒரு முக்கிய வழிமுறையில் இது வெறும் ஆரம்பமாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இந்த ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள் சவூதியின் முடிக்குரிய இளவரசரான முஹமது பின் சல்மானின் அதிகாரத்தை பலப்படுத்தும் வகையில் இருப்பதாக பரவலாக கருதப்படுகிறது.
32 வயதான முடிக்குரிய இளவரசரின் தலைமையிலான ஊழல் எதிர்ப்பு குழுவே 11 இளவரசர்கள், நான்கு அமைச்சர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்களை கைது செய்ய உத்தரவிட்டுள்ளது.
சவுதி அரேபியாவின் இந்த நடவடிக்கையை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் வரவேற்றுள்ளார். ‘சவுதி மன்னர் சல்மானும் முடிக்குரிய இளவரசரும் தாம் என்ன செய்கிறோம் என்று புரிந்தே செயற்படுகிறார்கள் என்று நான்கு உறுதியாக நம்புகிறேன்’ என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
‘இன்று அவர்களால் கடுமையான நடவடிக்கைகளுக்கு உள்ளாக்கப்படுபவர்கள் எல்லாம் பல காலமாக நாட்டின் வளங்களைக் கொள்ளையடித்து வந்தவர்கள்’ என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விசாரணையின் முதல் கட்டம் பூர்த்தி அடைந்திருப்பதாக ஷெய்க் சவூத் அல் முஜிப் குறிப்பிட்டுள்ளார். பெருமளவான ஆதாரங்கள் ஏற்கனவே சேகரிக்கப்பட்டுள்ளன. விரிவான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய திகதி வரை, சந்தேகத்திற்கு உரியவர்கள் அனைவருக்கும், சட்டரீதியான உதவிகளை பெறுவதற்கான முழு அணுகுமுறை அனுமதி அளிக்கப்பட்டுள்ளதோடு, விசாரணை சரியான நேரத்திலும், வெளிப்படைத்தன்மையுடனும் நடக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
ஊழல் குறித்த நடவடிக்கைகளின் அடுத்தகட்டமாக, அதிகாரிகள், சவுதி அரேபியாவின் எல்லையில் நடந்த ஹெலிகொப்டர் விபத்து குறித்தும் விசாரித்து வருகின்றனர்.
ஞாயிற்றுக்கிழமை அசிர் பிராந்தியத்தின் இணை ஆளுநரான இளவரசர் மன்சூர் பின் மிக்ரின், ஆய்வுப்பயணத்தை முடித்து திரும்பும் போது, அப்ஹா அருகில் அவரின் ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானது, விபத்திற்கான காரணம் இன்னும் தெளிவாக தெரியவரவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையில் கடந்த சில தினங்களாக ஏற்பட்ட எரிபொருள் நெருக்கடியினால் பல்வேறு அசௌகரியங்களுக்கு பலரும் முகங்கொடுத்தனர்.
அவ்வாறான நெருக்கடியை தீர்க்கும் வகையில் எரிபொருளை ஏற்றிய கப்பல் வருவதாக அரசாங்கம் அறிவித்திருந்தது. இந்தக் கப்பல் எப்போது வரும் என ஒட்டுமொத்த இலங்கையர்களும் அதற்காக ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர்.
அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் நெவஸ்கா லேடி என்ற கப்பல் நேற்றிரவு இலங்கையை வந்தடைந்தது. இதன்மூலம் எரிபொருளுக்காக பல நாட்கள் நீண்ட வரிசையில் காத்திருந்த சாரதிகளின் மனதில் மகிழ்ச்சி ஏற்பட்டது.
கடந்த சில தினங்களாக இலங்கையில் அதிகம் பேசப்பட்ட விடயமாக நெவஸ்கா லேடியின் வருகையே காணப்பட்டது. நெவஸ்கா லேடி குறித்து பலருக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளன.
இந்நிலையில் நெவஸ்கா லேடி கப்பல் இலங்கை மக்கள் மத்தியில் மிகவும் பிரபல்யம் அடைந்துள்ளது. 40 ஆயிரம் மெற்றிக் தொன் எரிபொருளுடன் நெவஸ்கா லேடி கப்பல் நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இதன்மூலம் நாட்டில் நிலவிய எரிபொருள் நெருக்கடி நீக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஹோமாகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான சேர் ஜோன் டாபட் கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளின் இரண்டாம் நாளான இன்றைய தினம் ஹாட்லி மாணவன் சுசீந்திரகுமார் மிதுன்ராஜ் 15 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான தட்டெறிதல் நிகழ்ச்சியில் புதிய சாதனை நிலைநாட்டியுள்ளார்.
இவர் தட்டெறிதல் போட்டியில் 53.23 மீற்றர் தூரம் எறிந்தே இந்த புதிய சாதனையை நிலைநாட்டினார். முன்னைய சாதனையைவிட இது 7 மீற்றர் அதிகமானதாகும்.
இதே போட்டியில் இவரது கல்லூரியைச் சேர்ந்த பிரேமகுமார் மிதுஷான் 43.43 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்து வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
புதனன்று நடைபெற்ற 15 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் சுசீந்திரகுமார் மிதுன்ராஜ் (13.41 மீற்றர்) வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார்.
இதேவேளை கடந்த புதன்கிழமை ஆரம்பமான இப் போட்டிகளில் நேற்று பிற்பகல் 3.00 மணிவரை 14 புதிய சாதனைகள் நிலைநாட்டப்பட்டன.
முதலாம் நாளன்று 3 புதிய சாதனைகளும் நேற்றைய தினம் 11 சாதனைகளும் நிலைநாட்டப்பட்டன. நாளை போட்டியின் கடைசி நாளாகும்.
விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் மருத்துவ (STEM Subjects) பாடங்களை கற்பிப்பதற்கான முறைமை மாற்றியமைக்கப்படும் என்று வரவு செலவு திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேவைக்கேற்றவாறு பாடத்திட்டத்தினை மறுசீரமைப்பு செய்யும் நோக்கத்துடன் மாணவர்களுக்கு கணித உபகரணங்கள் வழங்கப்படுவதுடன் கணித ஆய்வு கூடங்களும் தரமுயர்த்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
அதேவேளை அனைத்து பல்கலைக்கழக மாணவர்களுக்கும் சுகாதார காப்புறுதித் திட்டமொன்று அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
மகாபொல புலமைப் பரிசில் திட்டத்திற்கான தகைமைபெறு குடும்ப வருமான எல்லையினை ஆண்டொன்றுக்கு ரூபா 300,000 இலிருந்து ரூபா 500,000 ஆக அதிகரிப்பதுடன், இதன் மூலம் மேலதிகமாக 3,000 மாணவர்கள் நன்மையடைவர் என்றும் நிதியமைச்சர் மங்கள சமரவீர கூறினார்.
யாழ்ப்பாணத்தில் 1996 ஆம் ஆண்டு இராணுவத்தால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை மீள விடுவிக்குமாறு கோரி யாழ்.மேல் நீதிமன்றில் பன்னிரன்டு ஆட்கொணர்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
பன்னிரன்டு மனுக்களில் ஒன்பது பேரின் மனுக்கள் ஏற்கனவே அநுராதபுரம் நீதிமன்றில் விசாரணையில் உள்ள நிலையில் அந்த ஒன்பது மனுக்களையும் நிராகரித்து ஏனைய மூன்று வழக்குகள் மீதான விசாரணையும் எதிர்வரும் 14 ஆம் திகதிக்கு ஒத்திவைத்து யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் கட்டளை பிறப்பித்துள்ளார்.
தன்னில் சட்டத்தரணி சுபாஜினி கிஷோர் ஊடாக தாக்கல் செய்யப்பட்ட இவ் ஆட்கொணர்வு மனுவில் சட்டத்தரணி குருபரன் மனுத் தொடர்பாக விவாதம் செய்திருந்தார்.
இதன்படி அவ் ஆட்கொணர்வு மனுவில், யாழ்ப்பாணம் விடுதலைப் புலிகளது கட்டுப்பாட்டில் இருந்த போது ஒப்ரேசன் ரிவிரெஸ ஊடாக யாழ்ப்பாணம் முழுவதும் இராணுவத்தின் பூரண கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது.
அதன் போது யாழ்ப்பாணத்தில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் மீளவும் 1996 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் குடியமர்ந்தார்கள்.
இதன்போது சாவகச்சேரி நாவற்குழி அரியாலை பகுதிகளில் இராணுவத்தால் கடத்தப்பட்டு இராணுவத்தாலேயே இவர்கள் காணாமல் ஆக்கப்பட்டிருந்தார்கள் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
தெற்காசியாவின் மிக சிறந்த விமான சேவையாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை விருது வென்றுள்ளது.
2017 ஆம் ஆண்டு தெற்காசிய சுற்றுலா விருது வழங்கும் விழாவில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
மாலைத்தீவு அன்து நகரத்தில் இந்த விருது வழங்கும் விழா இடம்பெற்றுள்ளது.
அதற்கமைய இந்த விழாவில் தெற்காசியாவின் மிக சிறந்த விமான சேவையாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை விருது வென்றுள்ளது.
வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியின் பரிசளிப்பு விழாவும் பிரகாசம் சஞ்சிகை வெளியீடும் இன்று (09.11.2017) காலை 9.30 மணிக்கு நகரசபை கலாச்சார மண்டபத்தில் கல்லூரி முதல்வர் பா.கமலேஸ்வரி தலைமையில் இடம்பெற்றது.
மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாக நிகழ்வில் வரவேற்பு நடனம், ஆங்கில மற்றும் சிங்களப் பாடல், நாடகம், பிரகாசம் சஞ்சிகை வெளியீடு, நூலின் ஆய்வுரை, பரிசளிப்பு வைபவம், பிரதம, கௌரவ விருந்தினர் உரை என பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.
இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் கந்தையா சர்வேஸ்வரன், கௌரவ விருந்தினராக வவுனியா தெற்கு வலயக்கல்வி வவுனியா தெற்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் எம்.பீ.நடராஜ், வவுனியா சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர் யோ.கென்னடி , விருந்தினர்களாக சமய மதத்தலைவர்கள், அரச அரசார்பற்ற உத்தியோகத்தர்கள், சமூக ஆர்வளர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
வவுனியாவில் விசமிகளால் தீ வைத்து சேதமாக்கப்பட்ட வேளாங்கண்ணி சிலை இன்று (09.11) புனர்நிர்மாணம் செய்யப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.
வவுனியா உக்குளாங்குளம் பகுதியில் அமைந்திருந்த வேளாங்கண்ணி சிலையானது ஒக்டோபர் 23ம் திகதி இரவு விசமிகள் சிலரால் தீயிடப்பட்டு சேதமாக்கப்பட்ட நிலையில் அச்சிலையானது உக்குளாங்குளம் கிராம மக்களின் பங்களிப்புடன் சமய வேறுபாடுகள் இன்றி புனர்நிர்மாணம் செய்யப்பட்டு இன்று சிவில் பாதுகாப்புக் குழு மத்திய குழு ஆலோசகரும், சமூக சேவையாளருமான தியாகராஜா மகேந்திரராஜா தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.
புனர்நிர்மாணம் செய்யப்பட்ட வேளாங்கண்ணி சிலையானது அருட்பணி அடிகளார் லக்ஸ்ரன் டி சில்வா அவர்களால் திறந்து வைக்கப்பட்டு விசேட திருப்பலி பூஜை வழிபாடும் நடாத்தப்பட்டது.
சேதமாக்கப்பட்ட வேளாங்கண்ணி சிலையை புனர்நிர்மாணம் செய்வதற்கு முன்நின்று உழைத்தவர்கள் மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டிருந்தனர்.
நிகழ்வில் உக்குளாங்குளம் கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் எஸ்.பரமேஸ்வரன், சிவன் ஆலயத் தலைவர் கெ.கீர்த்திசிங்கம், பண்டாரிக்குளம் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் ரி.துரைசிங்கம், பண்டாரிக்குளம் குளக்கட்டு சித்திவிநாயகர் ஆலயத்தலைவர் எஸ்.சண்முகராஜா, உக்குளாங்குளம் ஆலய பிரதம குரு சிவசிறி தியாகராஜன் சர்மா சந்திரன் குருக்கள், பண்டாரிக்குளம் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி டி.இ.எ.விஜியகோன் மற்றும் கிராம மக்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டிருந்தனர்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தாமோதரம்பிள்ளை சிவசிதம்பரம் அவர்களின் நினைவு தினம் இன்று (09.11.2017) காலை 8.30 மணியளவில் வவுனியா வைரப்புளியங்குளத்தில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத்தூபியில் தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்தரகுமார் கண்ணன் தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் வவுனியா மாவட்ட மூத்த சட்டத்தரணியும் மாவட்ட அபிவிருத்திச்சங்கத் தலைவரும் அமரர் சிவசிதம்பரத்தின் திருவுருவச்சிலையை நிறுவியவருமான முருகேசு சிற்றம்பலம், முன்னாள் வடமாகாண சுகாதார அமைச்சரும் வடமாகாண சபை உறுப்பினருமான மருத்துவர் ப.சத்தியலிங்கம், முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோதாராலிங்கம், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன், வவுனியா முன்னாள் உப நகரபிதா சந்திரகுலசிங்கம் மோகன், சமுக சேவைகள் திணைக்கள உத்தியோகத்தர் எஸ்.எஸ்.வாசன் , தமிழரசுக்கட்சியின் உறுப்பினர்கள், புளொட் அமைப்பின் உறுப்பினர்கள், ரெலோ அமைப்பின் உறுப்பினர்கள், சமூக சேவையாளர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் , பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு அன்னாரின் திருவுருவச்சிலைக்கு மாலையிட்டு மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.
வவுனியா தொகுதியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர்.தாமோதரம்பிள்ளை சிவசிதம்பரம் அவர்களின் நினைவான இச் சிலை நிறுவப்பெற்றுள்ளது. ஞாபகார்த்த சிலை அமைப்புக்குழுவினரதும் அதன் தலைவர் நா.சேனாதிராசா ஆகியோரதும் வேண்டுகோளுக்கிணங்க வவுனியாவின் மூத்த சட்டத்தரணி முருகேசு சிற்றப்பலம் அவர்களினால் கடந்த 2015ஆண்டு 07ம் மாதம் 25ம் திகதி இச் சிலை திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்றில் நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் மேற்கொள்ளப்பட்ட 2018ஆம் ஆண்டிற்கான வரவு – செலவுத் திட்டம் மீதான உரையில் வாகனங்கள் தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அந்த வகையில் சொகுசு ரக வாகனங்களுக்கான விலைகளை 25 இலட்சத்தால் அதிகரிப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை முச்சக்கரவண்டிகளுக்கான இறக்குமதி விலையை 50,000 ரூபாவினால் அதிகரிக்கும் திட்டமொன்றும் முன்மொழியப்பட்டுள்ளது.
மேலும், 2040 அளவில் எரிபொருள் அல்லாத மாற்று சக்தி வாகனங்கள் பயன்பாடு அதிகரிப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களுக்கான விலை 10 இலட்சத்தால் குறைப்பது தொடர்பிலும் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அதிசொகுசு ரக வாகனம் மற்றும் முச்சக்கர வண்டி வாங்க காத்திருப்போருக்கு இது அதிர்ச்சியளிக்கும் செய்தியாக காணப்படும் என பல தரப்பினராலும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.