குளிர்பானங்களை விடவும் பியர் உடலுக்கு நன்மையானது!!

அதிக சீனியைக் கொண்ட குளிர்பானங்களை விடவும், பியர் வகைகள் உடலுக்கு நன்மையளிக்கும் என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், சீனி சேர்க்கப்பட்ட குளிர் பானங்களை அருந்துவதனை விடவும், பியர் அருந்துவது நல்லது.

அநேக நாடுகளில் நூற்றுக்கு 80 வீதமானவர்கள் பியர் அருந்துகின்றார்கள். குறைந்தளவானவர்களே அல்கஹோல் செறிவு கூடிய மதுபானம் அருந்துகின்றனர்.

எனினும், இலங்கையில் 84 வீதமானவர்கள் அல்கஹோல் செறிவு அதிகமான மதுபானம் அருந்துகின்றனர்.
பியர் கொஞ்சம் அருந்துவதனை நான் பிழையாக கருதவில்லை. குளிர்பானத்திற்கு சீனி சேர்க்கும் போது உற்பத்தியாளர் மீது வரி அறவீடு செய்யப்படுகின்றது.
அவ்வாறு அன்றி சீனிக்கு வரி அறவீடு செய்யப்படாது. ஒரு சிறிய மென்பான போத்தலில் 100 கிராம் சீனி சேர்க்கப்படுகின்றது என மங்கள சமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.

சீனிக்கு வரி விதிக்கப்பட்டுள்ளதாக ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி கூறிய போது அதற்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

உழவு இயந்திர சில்லுக்குள் சிக்கி இளைஞன் பலி!!

 
திருகோணமலை – சேறுநுவர, உடப்புக்கேணி பகுதியில் உழவு இயந்திரம் தடம் புரண்டதில் சில்லுக்குள் சிக்குண்டு இளைஞரொருவர் பலியாகியுள்ளார். குறித்த சம்பவம் நேற்று மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக சேறுநுவர பொலிஸார் கூறியுள்ளனர்.

உழவு இயந்திரத்தை கழுவுவதற்காக தண்ணீர் காணப்பட்ட இடத்திற்குள் இறக்கியுள்ள நிலையில், உழவு இயந்திரம் புரண்ட போது சில்லுக்குள் சிக்குண்டடு இளைஞன் உயிரிழந்ததாக தெரியவருகின்றது.

சம்பவத்தில் ஈச்சிலம்பற்று – விநாயகபுரம் பகுதியை சேர்ந்த சிறிகாந் சுரேன் (18வயது) எனும் இளைஞரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் உயிரிழந்த இளைஞர் இந்த ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சை எழுதிவிட்டு, பரீட்சை முடிவுகளுக்காக காத்திருந்தவர் எனவும், இலக்கியம் மற்றும் தொழில்துறைகளில் சிறந்த ஆர்வம் உள்ளவர் எனவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, உயிரிழந்த இளைஞனின் சடலம் ஈச்சிலம்பற்று பிரதேச வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விசாரணைகளை சேறுநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தொலைபேசி பாவனையாளர்களுக்கு முக்கிய அறிவித்தல்!!

தொலைத்தொடர்பாடல் கோபுரங்களுடன் இணைக்கப்படும் அனைத்து தொலைபேசி அழைப்புகளுக்கும் 2 ரூபா வரையில் புதிய வரி அறிவிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2018ஆம் ஆண்டிற்கான புதிய வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து நிதி அமைச்சர் மங்கள சமரவீர இதனை குறிப்பிட்டுள்ளார்.

கையடக்க தொலைபேசி கோபுர திட்டங்களை ஊக்கப்படுத்தாமல் இருப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் கூறியுள்ளார்.

இதேவேளை பொலீத்தின் உற்பத்தியை ஊக்கப்படுத்த கூடாதென்பதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

அதற்காக ஒரு கிலோ பொலத்தீனுக்கு 10 ரூபாய் வரி அறிவிடப்படவுள்ளதாக வரவு செலவுத்திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.

வெள்ளத்தில் மூழ்கும் பேராபத்தில் கொழும்பு : அபாய எச்சரிக்கை!!

கடும் மழை பெய்யுமாயின் கொழும்பு நகரமும், நாடாளுமன்றமும் வெள்ளத்தில் மூழ்கும் பேராபத்து காணப்படுவதாக மாநகர சபை மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

2018ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தின் மீதான நேற்றைய விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில், 100 ஆண்டுகளுக்கு முன்பு பிரித்தானியர்களால் கட்டப்பட்ட அம்பத்தளை மற்றும் நாகலகம் வீதி அணைக்கட்டுக்கள் ஆகிய ஆபத்தில் காணப்படுகின்றன.

குறித்த அணைக்கட்டுகளே கொழும்பு மற்றும் களனி ஆகிய பகுதிகளை பாதுகாத்து வருகின்றன.
இந்த நிலையில் அந்த அணைகள் இரண்டும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளன. இன்னுமொரு கடுமையான மழையை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டால், தப்பிக்க முடியாது.

இது தொடர்பில் உடனடி கவனம் செலுத்தப்படாவிட்டால், கொழும்பு நகரமும், நாடாளுமன்றமும் வௌ்ளத்தில் மூழ்கும் என குறிப்பிட்டுள்ளார்.

நடிகை தற்கொலைக்கு இதுவே காரணம் : பிரபல நடிகை வெளியிட்ட தகவல்!!

கடந்த வருடம் சில சின்னத்திரை பிரபலங்களின் மரணங்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தது. அதில் நடிகை சபர்ணாவின் திடீர் தற்கொலைக்கு என்ன காரணம் என்று இப்போது கூட சரியாக தகவல் வெளியாகவில்லை.

இந்த நிலையில் அவருடன் நெருங்கி பழகி வந்த நடிகை உஷா எலிசபெத் ஒரு பேட்டியில், நானும், சபர்ணாவும் மிகவும் நெருங்கி பழகினோம். ஒரு வருடமாக அவள் தனக்கு எந்த வாய்ப்பும் வரவில்லை என்று எப்போதும் என்னிடம் புலம்புவாள், நான் சரியாகிவிடும் என்று ஆறுதல் கூறிவந்தேன்.

ஆனால் இப்படி ஒரு முடிவை சபர்ணா எடுப்பாள் என்று நான் நினைக்கவில்லை. அவளின் தற்கொலைக்கு ஏதாவது பிரச்சனையா என்பதை விட வாய்ப்பு இல்லாததுதான் இறப்புக்குக் காரணம் என்று கூறியுள்ளார்.

நள்ளிரவு முதல் விலைகள் குறைவதாக அறிவிக்கப்பட்ட போதிலும் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை!!

இறக்குமதி செய்யப்படுகின்ற அத்தியவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விஷேட பண்ட வரி குறைக்கப்பட்ட போதிலும் அவற்றின் பிரதிபலன் நுகர்வோருக்கு கிடைப்பதற்கு இன்னும் சில நாட்களாகலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 08ம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் நிதியமைச்சர மங்கள சமரவீரவினால் இவற்றின் விலைகள் குறைக்கப்பட்டன.

எவ்வாறாயினும் அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இதுவரை வௌியிடப்படவில்லை என்பதுடன், அடுத்த வாரமளவில் வர்த்தமானி வௌியிடப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

விலை குறைக்கப்பட்ட அத்தியவசிப் பொருட்களுக்காக புதிய விலை நிர்ணயிப்பதற்குறிய அரம்ப கட்ட பேச்சுவார்த்தை தற்சமயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், நுகர்வோர் சபையினால் விலைகள் குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்பட உள்ளது.

உருளைக் கிழங்கு ஒரு கிலோ கிராம் மற்றும் பெரிய வெங்காயம் ஒரு கிலோ அகியவற்றுக்கான வரி 39 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், ஒரு கிலோ கிராம் பருப்பிற்கான வரி 12 ரூபாவினால் குறைக்கப்பட்டது.

இது தவிர மேலும் சில அத்தியவசியப் பொருட்களின் விலைகளும் குறைக்கப்பட்டுள்ளன.

குழியில் விழுந்து 12 வயது சிறுவன் பலி!!

மாத்தறை – ஹம்பாந்தோட்டை அதிவேக நெடுஞ்சாலையில் பாதுகாப்பற்ற வகையில் வெட்டப்பட்டிருந்த குழியில் விழுந்து சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பெலியத்த – கிரிந்த பிரதேசத்தை சேர்ந்த சேஹான் என்ற 12 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் பெலியத்த – கிரிந்த பிரதான வீதிக்கு அருகில் குழி ஆழமாக வெட்டப்பட்டுள்ளது. தற்போது பெய்து வரும் மழையால் அந்த குழி நீரில் மூழ்கியுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

குறித்த சிறுவன் தனது பாட்டியுடன் இருந்த வேளை காணாமல்போனதாக தெரிவிக்கப்படுகிறது
இந்நிலையில், சிறுவனை காணாத நிலையில் பாட்டி பிரதேசவாசிகளுடன் இணைந்து அவரை தேடியபோது, சிறுவன் குழியில் சடலமாக காணப்பட்டுள்ளார்.

இதனையடுத்து சிறுவனின் சடலம் மீட்கப்பட்டு, பிரதே பரிசோதனைக்காக ஹம்பாந்தோட்டை பொது மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு!!

அம்பலாந்தோட்டை, கொக்கல்ல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் வணிகசூரிய கூறியுள்ளார்.

நேற்று இரவு இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

லொறியொன்று பொலிஸாரின் கட்டளையை மீறிச்சென்றதையடுத்து பொலிஸாருக்கும் அந்தக் குழுவுக்கும் இடையில் துப்பாக்கிச் சண்டை இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் வணிகசூரிய கூறியுள்ளார்.

வவுனியா திருநாவற்குளத்தில் Youth With Talent சிரமசக்தி வேலைத்திட்டம்!!

 
தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் அமைச்சின் வழிகாட்டலின் கீழ் தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் இலங்கை இளைஞர் கழக சம்மேளனமும் இணைந்து இளைஞர் பாராளுமன்றத்திற்கு ஒதுக்குகின்ற நிதியின் கீழ் Youth with Talent மக்கள் அபிவிருத்தி வேலைத்திட்டம் நாடாளாவிய ரீதியில் இளைஞர் கழகங்கள் ஊடாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

வவுனியா மாவட்டத்தில் 22 அபிவிவிருத்தி வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில் வவுனியா பிரதேச செயலக பிரிவில் அமைந்துள்ள திருநாவற்குளம் பிரதேசத்தில் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தினால் கிராம மக்களின் வெள்ளப்பாதிப்பை கட்டுப்படுத்தும் முகமாக இளைஞர்களினால் முன்னெடுக்கப்படும் பிரதான வடிகால் அகலமாக்கும் செயற்றிட்டத்தை வடமாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன், வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதாவும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் வவுனியா மாவட்ட பொறுப்பாளருமான க.சந்திரகுலசிங்கம் (மோகன்), தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவரும் மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் தலைவருமான சுந்தரலிங்கம் காண்டீபன், ஆட்டோ சங்கத் தலைவர் சி.ரவீந்திரன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய அமைப்பாளர் திரு.யோகன், தனியார் பேருந்து போக்குவரத்து சங்க தலைவர் திரு.ரஞ்சன், சமூக ஆர்வலர்களான நாகராஜா தர்மலிங்கம், கைலரஞ்சன் (சிவம்), தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் அமெரிக்க கிளைப் பொறுப்பாளர் கோபி கழகத்தின் உப தலைவர் கெர்சோன் உறுப்பினர்களான பிரதீபன், சதீஸ் ஆகியோர் அண்மையில் பார்வையிட்டனர்.

வவுனியா திருநாவற்குளம் உமாமகேஸ்வரன் முன்பள்ளியின் கல்விக்கண்காட்சி!!

 
திருநாவற்குளம் உமாமகேஸ்வரன் முன்பள்ளியில் இன்று (10.11.2017) வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு முன்பள்ளியின் ஆசிரியர் திருமதி.மீரா குணசீலன் தலைமையில் கல்விக்கண்காட்சி சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவின் பிரதம விருந்தினராக வடமாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன், சிறப்பு விருந்தினர்களாக வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதாவும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் வவுனியா மாவட்ட பொறுப்பாளருமான க.சந்திரகுலசிங்கம் (மோகன்), வவுனியா தெற்கு வலய முன்பள்ளி உதவி கல்வி பணிப்பாளர் திரு.தர்மபாலன், முன்பள்ளி மாவட்ட இணைப்பாளர் திருமதி அருள்வேல்நாயகி, கௌரவ விருந்தினர்களாக ஆட்டோ சங்கத் தலைவர் சி.ரவீந்திரன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் நிர்வாக உறுப்பினர் திரு.ஜெகதீஸ்வரன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய அமைப்பாளர் திரு.யோகன், தனியார் பேருந்து போக்குவரத்து சங்க தலைவர் திரு.ரஞ்சன் முன்பள்ளி பிரதேச இணைப்பாளர் எஸ்.சசிகலா, தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவரும் மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் தலைவருமான சுந்தரலிங்கம் காண்டீபன், சமூக ஆர்வலர் திரு.நாகராஜா தர்மலிங்கம், மாதர் அபிவிருத்தி சங்க தலைவி திரு. நகுலேஸ்வரம்பிள்ளை, தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் அமெரிக்க கிளை பொறுப்பாளர் திரு.கோபி மற்றும் உறுப்பினர்களான கெர்சோன், பிரதீபன், சதீஸ் ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தனர் .

இந் நிகழ்விற்கு புளொட் அமைப்பின் பிரித்தானியா கிளை உறுப்பினர் திரு.தர்மலிங்கம் நாகராஜா (பொக்கன்) அவர்கள் நிதி அனுசரணை வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் டெங்கு ஒழிப்பு செயற்றிட்டம்!!

 
டெங்கு நோயற்ற வவுனியாவை உருவாக்குவோம் எனும் தொனிபொருளில் இன்று (10.11) காலை 9 மணி தொடக்கம் 11 மணி வரை வவுனியா நகரசபையுடன் வவுனியா நகர சிறு வியாபார சங்கமும் வவுனியா பொலிஸாரும் இணைந்து வவுனியா நகர பகுதிகளில் டெங்கு ஒழிப்பு சிரமதானப்பணியில் ஈடுபட்டனர்.

இலங்கையில் பல மாவட்டங்களில் டெங்கினால் பல நூற்றுக்கணக்கான உயிர்கள் காவு கொள்ளப்பட்டுள்ளன. ஆகையால் எங்கள் நகரத்தையும், மக்களையும் பாதுகாத்துக்கொள்ளும் நோக்கில் இச் செயற்திட்டம் மேற்கொள்ளபட்டது.

மலையகத்தில் வியப்பை ஏற்படுத்திய பாரிய முட்டை கோஸ்!!

மலையகத்தின் ஹைபொரஸ்ட் பிரதேசத்தில் பாரிய முட்டை கோஸ் ஒன்று வளர்ந்துள்ளது. இதன் நிறை 12 கிலோ கிராம் என அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

ஹைபொரஸ்ட் பகுதியில் மரக்கறி கொள்வனவு செய்ய சென்ற ஆர்.எம்.விஜேகோன் பண்டாவுக்கு அந்த மிகப்பரெிய முட்டை கோஸ் கிடைத்துள்ளது.

பாரிய முட்டை கோஸ் கார்கில்சினால் நடத்தி செல்லப்படும் மரக்கறி நிலையத்திடம் ஒப்படைத்துள்ளார்.

அங்கிருந்து கண்டியை சேர்ந்த ஒருவர் 1200 ரூபாய் கொள்வனவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மிகப் பெரிய முட்டை கோஸினை பார்வையிட்ட மக்கள் பலர் வியப்படைந்துள்ளனர்.

வவுனியாவில் 2 கிலோ ஹெரோயினுடன் ஒருவர் கைது!!

வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் இரண்டு கிலோ ஹெரோயினுடன் யாழ்பாணத்தைச் சேர்ந்த நபர் ஒருவரை நேற்று (09.11.2017) மாலை 4 மணியளவில் வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி இ.போ.ச பேரூந்தில் 2 கிலோ ஹெரோயினை பயணப்பொதியில் மறைத்து வைத்து கடத்தி செல்ல முற்பட்ட சமயத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 52 வயதுடைய நபர் ஒருவரை வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவரை மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியாவில் முன்னாள் சுகாதார அமைச்சரால் பொது அமைப்புகளுக்கு தளபாடங்கள் வழங்கிவைப்பு!!

 
வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் மருத்துவர் ப.சத்தியலிங்கத்தின் மாகாண பிரமாண அடிப்படையிலான குறித்தொதுக்கப்பட்ட நிதியில் கொள்ளவனவு செய்யப்பட்ட தளபாடங்கள் பொது அமைப்புகளுக்கு நேற்று முன்தினம் (08.11.2017) வழங்கி வைக்கப்பட்டன.

வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மருதோடை பெண்கள் கிராம அபிவிருத்திச்சங்கம், கோவில்புளியங்குளம் கிராம அபிவிருத்திச்சங்கம், ஊஞ்சால்கட்டி கமக்காரர் அமைப்பு என்பவற்றிற்கு தளபாடங்கள் முன்னாள் அமைச்சரால் வழங்கிவைக்கப்பட்டன.

இந் நிகழ்வில் இணைப்புச்செயலாளர் சஜீவன், இலங்கை தமிழரசுக்கட்சியின் வடக்கு பிரதேச முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.

இந்தியாவை சமாளிப்பதற்கு சண்டிமால் வகுத்துள்ள திட்டம்!!

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது.

இதற்கான இலங்கை அணியும் நேற்று கொல்கத்தா வந்தடைந்தது. இந்நிலையில் இலங்கை அணியின் தலைவர் தினேஷ் சண்டிமால், பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 5 பந்து வீச்சாளர்கள் மற்றும் 6 துடுப்பாட்ட வீரர்களுடன் களமிறங்கினோம், அதற்கு பலனும் கிடைத்தது.

நான்கு பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கி வெற்றி பெறுவது என்று கடினமான விடயம். ஆனால் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நான்கு பந்து வீச்சாளர்களுடன் களமிறக்க திட்டமிட்டுள்ளதாகவும், அதே சமயம் இந்திய அணியில் திறமை வாய்ந்த பந்து வீச்சாளர்கள் உள்ளதால், அதை சமாளிப்பதற்கு துடுப்பாட்ட வீரர்கள் வேண்டும், இதனால் அணியில் சகல துறை வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் அன்றைய போட்டியின் போது, மைதானத்தின் தன்மையை பொறுத்தே முடிவு எடுக்கப்படும்.

இந்திய அணியின் நம்பர் 1 மற்றும் நம்பர் 2 பந்து வீச்சாளர்களான அஸ்வின், ஜடேஜாவின் பந்து வீச்சுகளை எப்படி எதிர்கொள்வது என்பதில் கவனமாக இருப்பதாகவும், முடிந்த அளவிற்கு ஸ்வீப் சொட்டுகள் மூலம் சமாளிக்க முடியும் என்று நம்புவதாகவும் கூறியுள்ளார்.

மனைவியை கொடூரமாக சித்திரவதை செய்வதை நேரலை செய்த நபர்!!

ஜேர்மனியில் தமது மனைவியை கொடூரமாக சித்திரவதை செய்வதை அவரது பெற்றோருக்கு வெப்கேமில் நேரலை செய்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

குறித்த விவகாரம் தொடர்பில் ககன்தீப்(35) மற்றும் அவரது சகோதரர் அமன்தீப்(21) ஆகிய இருவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.

ஜேர்மனியின் முனிச் நகரில் ககன்தீப் தமது மனைவி தல்ஜீத் வீட்டாரிடம் இருந்து அதிக வரதட்சினை கேட்டு தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த வியாழன் அன்று தல்ஜீத் தமது பேஸ்புக் பக்கத்தில் ’காதல் தொடர்ந்து நீடிக்கும். உன்னால் எனது வாழ்க்கை சிறப்புற்றது’ என பதிவிட்டிருந்தார்.

அதன் அடுத்த நாள் இரவு உள்ளூர் நேரப்படி 11 மணி அளவில் இந்தியாவில் டெல்லியில் குடியிருக்கும் தல்ஜீத்தின் பெற்றோரை வெக்கேம் நேரலையில் அழைத்த ககன்தீப், தமது சகோதரருடன் இணைந்து மனைவியை கொடூரமாக தாக்கியுள்ளனர்.

இதில் கடுமையாக பாதிக்கப்பட்ட அவரது நிலைகண்டு பொறுக்கமுடியாத குடும்ப உறுப்பினர் ஒருவர் அவரது நண்பர் வழியாக பொலிசில் தொடர்பு கொண்டுள்ளனர்.

முனிச் நகரில் உள்ள குடியிருப்பில் பொலிசார் வந்து சேர்வதற்குள் தல்ஜீத் அங்கிருந்து தப்பியுள்ளார். தொடர்ந்து தேடுதல் வேட்டையில் இறங்கிய பொலிசாருக்கு, சாலையில் உதவி கேட்டு யாசிக்கும் தல்ஜீத் சிக்கினார்.

இதனிடையே மனைவி மாயமானது தெரிந்தும் சகோதரருடன் இணைந்து ககன்தீப் மது அருந்திக் கொண்டு இருந்துள்ளார். இருவரையும் கைது செய்த பொலிசார் துன்புறுத்துதல், மிரட்டல் விடுத்தல், கொள்ளையடிக்க முயற்சித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிந்துள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில், தல்ஜீத்தின் பெற்றோர் வரதட்சினையாக 50,000 யூரோ வழங்க ஒப்புக்கொண்டதாகவும் ஆனால் இதுவரை அந்த தொகையை வழங்கவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்பு வீரராக பணி புரியும் ககன்தீப், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் ஜேர்மனி வந்துள்ளார். முனிச் அருகே Ismaning பகுதியில் குடியிருக்கும் இவர் கடந்த ஆண்டு இந்தியாவில் பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் பகுதியில் உள்ள தல்ஜீத் என்பவரை திருமணம் செய்துள்ளார்.