வவுனியா ஈச்சங்குளம் ப.நோ.கூ சங்கத்தினுள் திருடர்கள் கைவரிசை : நால்வர் கைது!!

 
வவுனியா ஈச்சங்குளம் ப.நோ.கூ சங்கத்தின் மகாகணபதி கிளையினை நேற்றிரவு (11.11.2017) உடைத்து திருடப்பட்டுள்ளது. இத் திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் நால்வரை ஈச்சங்குளம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஈச்சங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுபாஸ் ஆரியரத்ன வழிகாட்டலில் பொலிஸ் துணை இன்ஸ்பெக்டர் விஜயரத்ன தலைமையிலான பொலிஸ் கொஸ்தபர்களான சந்திரவன்ச (74660), செனரத்ன (56557), உபுல் (34911) ஆகியோரினால் ஈச்சங்குளம் பகுதியில் வைத்து சந்தேகநபர்கள் நால்வரை கைது செய்ததுடன் அவர்கள் பயணித்த முச்சக்கரவண்டியினையும், திருடப்பட்ட பொருட்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

ப.நோ.கூ சங்கத்தின் பின் யன்னல் கதவினையுடைத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் ஒன்டரைலட்சம் பெறுமதியான பொருட்கள் மற்றும் 16000 ரூபா பணமும் திருடப்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளிருந்து தெரிய வருகின்றது.

கைது செய்யப்பட்டபவர்கள் 19, 20, 25, 27 வயதுடைய இளைஞர்கள் எனவும் இவர்கள் வவுனியா முருகனூர், முல்லைத்தீவு, ஒமந்தை பகுதிகளை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்

இத் திருட்டுச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை வவுனியா குற்றத்தடவியல் பொலிஸாருடன் இணைந்து ஈச்சங்குளம் பொலிஸாரும் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் நடைபெறும் தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக்கூட்டம்!!

 
வவுனியா இரண்டாம் குறுக்குதெருவில் அமைந்துள்ள வன்னி இன் விருந்தினர் விடுதியில் இன்று (12.11.2017) காலை 10.30 மணியளவில் இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக் கூட்டம் கட்சியின் தலைவரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தலைமையில் ஆரம்பமாகியுள்ளது..

இந்நிகழ்வில் தமிழ்க்கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன், கூட்­ட­மைப்பின் ஊட­கப்­பேச்­சா­ள­ரான எம்.ஏ.சுமந்­திரன் , பாராளுமன்ற உறுப்பினரான சாந்தி சிறீஸ்கந்தராசா, உட்பட கட்சியின் முக்கிய உயர்பீட உறுப்பினர்களுடன் கட்சியின் மத்திய குழுக்கூட்டம் ஆரம்பமாகியுள்ளதுடன் தற்போதைய கள நிலைமைகள் தொடர்பாக முக்கிய முடிவுகள் இன்று எடுக்கப்படவுள்ளதாக தெரியவருகின்றது.

வவுனியாவில் துப்பாக்கி முனையில் இளைஞனை கடத்த முயற்சி!!(வீடியோ)

 
வவுனியா புகையிரத நிலைய வீதி சுத்தானந்த மண்டபத்திற்கு முன்பாக இன்று (12.11.2017) காலை 5.45 மணியளவில் இளைஞனை துப்பாக்கி முனையில் கடத்த முயற்சித்த சம்பவம் பொதுமக்களினால் முறியடிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.


வவுனியா நகரிலிருந்து புகையிரத நிலைய வீதியூடாக வாகனத்தில் பயணித்த வவுனியா கூமாங்குளத்தை சேர்ந்த கஜேந்திரன் (வயது 30) என்பவரை இரு சோகுசு வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட குழுவினர் வழிமறித்து தங்களது வாகனத்தில் ஏறுமாறு தெரிவித்துள்ளனர். எனினும் குறித்த இளைஞன் வாகனத்தில் ஏற மறுப்பு தெரிவித்தமையடுத்து துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளனர்.

உடனே பொதுமக்கள் அவ்விடத்தில் கூடியதுடன் 3 நபர்கள் ஒரு வாகனத்தில் தப்பித்து சென்றுள்ளதாகவும் மற்றை 3 நபர்களையும் அவர்களின் வாகனத்தையும் பொதுமக்கள் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சிறு கொடுக்கல் வாங்கல் பிரச்சனையே இவ் சம்பவத்திற்கு காரணம் எனவும் தற்போது துப்பாக்கியை காட்டி கடத்த முயற்சித்த புத்தளத்தினை சேர்ந்த 31,31,34 வயதுடைய சந்தேகநபர்கள் மூவரிடம் தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருவதாக வவுனியா பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

லட்சுமி மேனனுக்கு புதிய தடை!!

பாண்டியநாடு, சுந்தரபாண்டியன், வேதாளம் என பல படங்களில் ரசிகர்களை கவர்ந்தவர் லட்சுமி மேனன். இவர் நடித்த பல படங்கள் ஹிட் வரிசையில் இடம்பிடித்துள்ளது.

அப்படியிருந்தும் இவருக்கு கடந்த இரண்டு வருடத்தில் பட வாய்ப்புக்கள் பாதியாக குறைந்துள்ளது, என்ன என்று விசாரித்தால் அவரின் உடல் எடை அதிகமாகிவிட்டது அதனால் தான் நடிப்பதில்லை என்றார்கள்.

அவரும் அதற்காக தன் உடல் எடையை குறைத்தார், ஆனால், தற்போது லட்சுமி மேனனின் அம்மா முதலில் கல்லூரிக்கு செல், படமெல்லாம் பிறகு நடித்துக்கொள்ளலாம் என ஸ்டிரிட்டாக சொல்லிவிட்டாராம்.

சொர்க்கத்திலும் இணைந்த தம்பதி : கணவர் இறந்த செய்தி கேட்டு உயிரிழந்த மனைவி!!

மதுரை மாவட்டத்தில் கணவனின் இறப்பினை தாங்கி கொள்ள முடியாத மனைவியும் உயிரிழந்துள்ளார்.

பொட்டப்பட்டியை சேர்ந்த விஸ்வநாதன்( 65), பரணி(60) தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர், இவர்கள் இருவரும் வெளிநாட்டில் வேலை செய்து வருகின்றனர்.

பொட்டப்பட்டியில் உள்ள வீட்டில் கணவன்- மனைவி இருவரும் வசித்து வந்துள்ளனர், இந்நிலையில் நேற்று விஸ்வநாதனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். கணவர் இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்த பரணி திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

பரணியை மருத்துவமனையில் அனுமதித்தும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அடுத்தடுத்து கணவன், மனைவி இருவரும் உயிரிழந்ததால் அப்பகுதி மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

உயிருக்கு போராடும் சிறுவனுக்காக பெற்றோர் செய்த செயல் : நெகிழ்ச்சி சம்பவம்!!

 
அமெரிக்காவில் புற்று நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் சிறுவனுக்காக பெற்றோர் கிறிஸ்துமஸ் விழாவினை முன்னரே கொண்டாடி மகிழ்வித்துள்ளனர்.

சிறுவர்களை தாக்கும் ஒருவகை புற்று நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார் 9 வயதான லிட்டில் ஜேக்கப் தாம்சன். கடந்த மாதம் அமெரிக்காவின் Maine பகுதியில் அமைந்துள்ள சிறுவர்களுக்கான மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், சிறுவன் லிட்டில் ஜேக்கப் தாம்சன் இனி சில வாரங்களே உயிர் வாழ்வான் என்ற தகவலை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.

இந்த நிலையில், சிறுவனை மகிழ்விக்க அவரது பெற்றோர் கிறிஸ்துமஸ் விழாவினை முன்னரே கொண்டாட முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.

மட்டுமின்றி பேஸ்புக் பக்கத்தில் சிறுவனின் இதுவரையான போராட்டங்களை பதிவிட்டு, வாழ்த்து அட்டைகளை அனுப்ப கேட்டுக் கொண்டனர். வியப்பளிக்கும் வகையில் பேஸ்புக் பதிவிட்ட சில மணி நேரத்திலேயே சிறுவனுக்கு சாழ்த்துச் செய்திகள் குவிந்த வண்ணம் உள்ளது.

மட்டுமின்றி பிரபல நடிகரும் கலிபோர்னியாவின் முன்னாள் ஆளுநருமான அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர் சிறப்பு வாழ்த்தும் தெரிவித்துள்ளார். மேலும் உலகெங்கிலும் இருந்து சிறுவனை வாழ்த்தி இதுவரை 66,000 வாழ்த்து அட்டைகள் குவிந்துள்ளதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

குறித்த வாழ்த்து அட்டைகள் அனைத்தையும் மருத்துவமனையில் சிறுவன் அனுமதிக்கப்பட்டிருக்கும் அறையின் சுவற்றில் பதித்து வைத்துள்ளனர்.

இந்த வார இறுதியில் சனி மற்றும் ஞாயிறு என இருதினங்களில் சிறுவன் லிட்டில் ஜேக்கப் தாம்சன் பெற்றோர் மற்றும் நண்பர்களுடன் தனது கடைசி கிறிஸ்துமஸ் விழாவினை கொண்டாட இருக்கிறான்.

கணவரின் முகத்தை வேறொரு ஆணின் உடலில் பார்த்த மனைவி : நெகிழ்ச்சியான தருணம்!!

 
அமெரிக்காவில் பெண் ஒருவர் இறந்துபோன தனது கணவரின் முகத்தினை வேறாரு நபரின் உடலில் பார்த்து ஆனந்த கண்ணீர் விட்டுள்ளார்.

தனது கணவர் Calen – டன் வசித்து வந்த Lilly Ross 8 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் தற்கொலை செய்துகொண்ட Calen, தனது உடல்பாகங்களை தானமாக வழங்குவதற்கு ஒப்புக்கொண்டார்.

அதன்படி, Lilly Ross தனது கணவரின் உடல் உறுப்புகளை Mayo Clinic என்ற சுகாதார நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளார்.

Calen- இன் முகத்தின கடந்த 2006 ஆம் ஆண்டு துப்பாக்கி சூட்டில் சிக்கிய Andy Sandness என்ற இளைஞருக்கு பொருத்துவதற்கு மருத்துவர்கள் முடிவு செய்தனர்.

முகமாற்று அறுவை சிகிச்சையை செய்வதற்கு முன்னர் Mayo Clinic மருத்துவர்கள் சுமார் 30 முறை ஒத்திகை பார்த்துள்ளனர். இறுதியில் 50 மணிநேரம் அறுவை சிகிச்சையானது வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.

ந்த தகவல், Rose – க்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து கிளினிக்கு வந்த அவர், தனது கணவரின் முகத்தினை பார்த்து ஆனந்த கண்ணீர் விட்டுள்ளார், மேலும் Andy யின் முகத்தினை தனது கைகளால் தொட்டு பார்த்து கட்டியணைத்துக்கொண்டது பார்ப்பவர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சிகிச்சை குறித்து Andy Sandness கூறியதாவது, 21 வயதில் நான் எனது முகத்தினை தொலைத்துவிட்டேன். தற்போது அறுவை சிகிச்சையால் நான் நலம் பெற்றுள்ளேன், இதனை விவரிக்க என்னிடம் வார்த்தைகளே இல்லை. இனிமேல் தான் நான் சந்தோஷமாக வாழப்போகிறேன் என கூறியுள்ளார்.

செவ்வாய் கிரகத்திற்கு சிலிக்கான் சிப்பில் பெயர்களை அனுப்ப ஒரு இலட்சம் இந்தியர்கள் பதிவு!!

2018 ஆம் ஆண்டு செவ்வாய் கிரகத்திற்கு செல்லவுள்ள நாசாவின் இன்சைட் விண்கலத்தில் தங்கள் பெயர்கள் அடங்கிய சிலிக்கான் சிப்பை அனுப்ப 1 இலட்சம் இந்தியர்கள் பதிவு செய்துள்ளனர்.

செவ்வாய் கிரகத்தின் தட்பவெட்ப நிலை, காலநிலை மாற்றம், தண்ணீர் போன்றவை குறித்து ஆய்வு செய்வதற்காக இந்தியா மங்கல்யான் என்ற செயற்கைக்கோளை அனுப்பியுள்ளது.

இதேபோன்று நாசாவில் இருந்து செவ்வாய் கிரகத்தின் சூழல் குறித்து ஆய்வு செய்ய மேலும்மொரு விண்கலம் அனுப்பப்படவுள்ளது.

அந்த விண்கலத்தில் மனிதர்களின் பெயர்களை சிலிக்கான் சிப்பில், தலைமுடியை விட சிறிய அளவில் எழுதி, அதனை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்புவர்.

அதற்காக பல நாடுகளைச் சேர்ந்த மக்கள் தங்கள் பெயர்களை இணையம் மூலம் பதிவு செய்து வருகின்றனர்.

உலகம் முழுவதுமிலிருந்து 24 இலட்சம் பேர் இதுவரை பதிவு செய்துள்ளனர். இந்தியாவிலிருந்து மாத்திரம் 1 இலட்சம் பேர் தமது பெயர்களைப் பதிவு செய்துள்ளனர். இந்தியா இந்த வரிசையில் அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு அடுத்து மூன்றாவது இடத்தில் உள்ளது.

பல்வேறு செயற்கைக்கோள்களை பல பில்லியன் டொலர்களில் உருவாக்கி செவ்வாயில் நாசா ஆய்வு செய்து வரும் நிலையில், மனிதர்களை அங்கு குடியேறச் செய்யும் திட்டம் நாசாவின் முக்கிய கனவுகளில் ஒன்றாக இருந்து வருகிறது

வவுனியா மறவன்குளத்தில் 1.51 மில்லியன் பெறுமதியான வாழ்வாதார திட்டங்கள்!!

 
சமுர்த்தி திணைக்கத்தின் நிதியுதவியுடன் மக்களின் பங்களிப்பிலும் ஆரமபிக்கப்பட்ட 1.51 மில்லியன் பெறுமதியான வாழ்வாதார திட்டத்தை நேற்று முன்தினம் (10.11.2017) அன்று வவுனியா மாவட்ட சமுர்த்தி திணைக்கள பிரதிப்பணிப்பாளர் திருமதி பத்மரஞ்சனால் மக்களுக்கு கையளிக்கப்பட்டது.

வலுப்படுத்தும் குடும்பங்களுக்கான வாழ்வாதார வேலைத்திட்டத்தின் கீழ் வவுனியா ஈச்சங்குளம் கிராமஅலுவலர் பிரிவுக்குட்பட்ட மறவன்குளம் கிராமத்தை சேர்ந்த 9 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது

சமுர்த்தி உத்தியோகத்தர் ம.ரமேசால் முன்னெடுக்கப்படுகின்ற இவ்வேலைதிட்டத்தில் உணவகம் 1, அரைக்கும் ஆலை 1, புகைபட பிரதி கடை 1, துவிசக்கர வண்டி திருத்தும் கடை 2, மூன்று பேருக்கு பால்மாடுகள் வீட்டுத்திட்டம் 1 அடங்குகின்றது.

இன் நிகழ்வில் தலைமைபீட முகாமையாளர் திருமதி சந்திரகுமார் முகாமையாளர் செல்வி ஜானகி உத்தியோகத்தர்களான திரு.யூடிக்குமார், ம.விக்னேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

மருத்துவமனையில் தாலி கட்டிய சவுதி மாப்பிள்ளை!!

திருமணத்துக்கு முந்தைய நாள் இரவு மணமகளுக்கு தீக்காயம் ஏற்பட்ட காரணத்தால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து, மருத்துவ அறையில் வைத்து மணமகளுக்கு மணமகன் தாலி கட்டியுள்ளார்.

சவுதியை சேர்ந்த Shahnawaz Alam என்பவர் மெக்கானிக்கல் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் ஹைதராபாத்தை சேர்ந்த Heyra Javed என்பவருக்கும் பெரியோர்களால் திருமணம் நிச்சியிக்கப்பட்டிருந்தது.

அதன்படி திருமணம் கொல்கத்தாவில் உள்ள மண்டபம் ஒன்றில் நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் திருமணத்திற்கு முந்தைய நாள் இரவு வீட்டில் சிறிய தீவிபத்து ஏற்பட்டதில் மணப்பெண் காயமடைந்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டது.

மணப்பெண்ணின் மூக்கில் டியூப் மாற்றப்பட்டிருந்தது. குறித்த நாளில் திருமணம் நடைபெறவேண்டும் என்பதால் மருத்துவமனை நிர்வாகத்தின் உதவியோடு, அங்கிருந்த Conferrence அறையில் 15 உறவினர்கள் முன்னிலையில் இவர்களது திருமணம் நடைபெற்றுள்ளது.

அதன்பின்னர், மணமகளை மருத்துவமனையில் இருக்கவைத்துவிட்டு, மண்டபத்திற்கு சென்ற மணமகன் வந்திருந்த உறவினர் மற்றும் நண்பர்களுக்கு மட்டன் பிரியாணி விருந்து கொடுத்து வழியனுப்பி வைத்துள்ளார்.

3 வயது குழந்தையை கொடூரமாக கொன்றது ஏன் : பெண்ணின் பரபரப்பு வாக்குமூலம்!!

சென்னையில் குப்பைமேட்டில் சடலமாக மீட்கப்பட்ட மூன்று வயது குழந்தையை பக்கத்து வீட்டு பெண்ணே கொலை செய்தது தெரியவந்துள்ளது.

சென்னை வில்லிவாக்கம் பாரதிநகர் இரண்டாவது தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன், இவரது மகள் காவ்யா(வயது 3). சம்பவதினத்தன்று வெங்கடேசனின் மனைவி ஜெயந்து காவ்யாவை வீட்டுக்குள் பூட்டி வைத்து விட்டு அருகிலுள்ள கடைக்கு சென்றுள்ளார்.

திரும்பி வந்து பார்த்த போது காவ்யாவை காணவில்லை, அனைத்து இடங்களில் தேடியும் குழந்தை கிடைக்கவில்லை. இதனையடுத்து வில்லிவாக்கம் பொலிஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. குழந்தை அருகிலுள்ள குப்பைமேட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

குழந்தையின் சடலத்தை கைப்பற்றிய பொலிசார் தீவிர விசாரணை நடத்தினர், பிரேத பரிசோதனையில் காவ்யா தண்ணீரில் மூழ்கடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதனைதொடர்ந்து பக்கத்து வீட்டு பெண்ணான தேவி மீது சந்தேகம் இருப்பதாக காவ்யாவின் பெற்றோர் தெரிவித்தனர். இதன் அடிப்படையில் அவர்களிடம் விசாரணை நடத்தியதில், தேவி காவ்யாவை கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ஏற்கனவே இரு குடும்பத்தாருக்கும் முன்விரோதம் இருந்த நிலையில், பழிவாங்குவதற்காக காவ்யாவை கொன்றுள்ளார். அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில், ஜெயந்தியின் குழந்தை நன்றாக பேசும், என் குழந்தை வாய் பேசாது என்பதால் விரக்தியில் இருந்தேன்.

அடிக்கடி எனக்கும் ஜெயந்திக்கும் தண்ணீர் பிடிப்பதில் தகராறு ஏற்பட்டது, எனவே ஆத்திரத்தில் இருந்த நான் ஜெயந்தி வீட்டில் இல்லாத சமயம் பார்த்து குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்து கொன்றுவிட்டேன்.

சடலத்தை துணியில் சுருட்டி மறைவிடத்தில் வைத்திருந்து அதிகாலையில் முட்புதரில் போட்டதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து தேவியை பொலிசார் கைது செய்தனர்.

கேட்பாரற்று கிடந்த 5.75 லட்ச ரூபாய்: கோடீஸ்வரரை நெகிழவைத்த முதியவர்!!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த 5.75 லட்சம் தொகையை முதியவர் ஒருவர் நேர்மையாக பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளார்.

சேலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ரவிக்குமார் என்பவர் கடந்த 1ம் திகதி சேலம் விரைவு ரயிலில் சென்னை வந்தபோது அவர் கொண்டுவந்த பையில் 10.75 லட்சம் ரூபாயை பையுடன் தவறவிட்டார்.

இதுகுறித்து எழும்பூர் ரயில்வே பொலிசாரிடம் புகார் அளித்தார், அவர் அளித்த புகாரின் பேரில் ரயில்வே காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர்.

இந்த நிலையில் கேட்பாரற்றுக் கிடந்த பையில் உள்ள பணத்தை எடுத்த பொய்யாமொழி என்பவர் அதனை பொலிசில் ஒப்படைத்துள்ளார்.

ஆனால் 10.75 லட்சரூபாயில் 5.75 லட்சம் மட்டுமே இருந்த காரணத்தால், ரயில்வே பொலிசார் கண்காணிப்பு கமெராவை ஆய்வு செய்தபோது, மர்மநபர் ஒருவர் அதில் இருந்த பணத்தை எடுத்துச் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.

பணத்தைக் கொண்டுவந்து கொடுத்த முதியவர் பொய்யாமொழிக்கு ரயில்வே நிர்வாக ஆர்டிஓ பரிசு ஒன்றையும் வழங்கினார்.

திராவிடக் கொள்கையைப் பின்பற்றும் நான் அடுத்தவரின் பொருளுக்கு ஆசைப்படதாவன், பெரியாரை பின்பற்றும் நான் நேர்மையாக நடக்க வேண்டும் என நினைப்பவன் என பொய்யாமொழி கூறியுள்ளார்.

தற்போது இந்த பணம் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என பொலிசார் தெரிவித்துள்ளனர். பெரியவரின் நேர்மையை பார்த்து நெகிழ்ச்சியடைந்த கோடீஸ்வரர், அவருக்கு பணம் கொடுத்தும் அதனை அவர் வாங்க மறுத்துவிட்டார்.

புத்திசாலித்தனமாக பெட்ரோலை திருடி குடிக்கும் குரங்கு!!

இந்தியாவிலுள்ள ஹரியானா மாவட்டத்தில் உள்ள பானிபட்டில் உள்ள குரங்கு ஒன்று இருசக்கர வாகனங்களிலிருந்து பெட்ரோலை திருடி குடித்து வருகிறது. இதனால் அப் பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த குரங்கு வாகன ஓட்டிகளின் இருசக்கர வாகனங்களிலில் எஞ்சினுக்குச் செல்லும் பெட்ரோல் ட்யூபை பிடுங்கி புத்திசாலித்தனமாக பெட்ரோலை திருடி குடிக்கின்றது.

இதனால் வாகன ஓட்டிகள் சில சமயங்களில் பெட்ரோல் இன்றி திண்டாடும் நிலையும் ஏற்பட்டுள்ளதாம்.

வேலை நேரம் முடிந்துவிட்டது என்று புறப்பட்ட விமானி : பாதியிலேயே இறக்கிவிடப்பட்ட பயணிகள்!!

ஏர் இந்தியா விமானத்தின் விமானஓட்டுநர் ஒருவர் தனது பணிநேரம் முடிந்துவிட்டது எனக்கூறி பாதியிலேயே சென்றுவிட்ட காரணத்தால்,விமான பயணிகள் பெரும் திண்டாட்டத்தற்கு ஆளாகியுள்ளனர்.

லக்னோவில் இருந்து ஜெய்ப்பூர் வழியாக டெல்லிக்கு செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானம், ஜெய்ப்பூருக்கு சரியாக இரவு 9 மணிக்கு செல்ல வேண்டிய நேரத்தை தாண்டி நள்ளிரவு 1.30 மணிக்கு சென்று இருக்கிறது.

மேலும் ஜெய்ப்பூரில் இருந்துடெல்லி புறப்படுவதிலும் காலதாமதம் ஏற்பட்டு இருக்கிறது. 1.30 மணிக்குஜெய்ப்பூர் வந்த விமானம் அங்கிருந்து கிளம்பாமல் அப்படியே நின்றுள்ளது.

ஏனெனில் விமானி 2 மணியுடன் தனதுபணிநேரம் முடிவடைந்துவிட்டது என்ற கூறி விமானத்தை விட்டு இறங்கி சென்றுவிட்டார். அந்த விமானத்தை அப்போது உடனடியாக இயக்குவதற்கும் எந்த விமானியும் அப்போதைய பணி நேரத்தில்இல்லை.

இந்த நிலையில் அந்த விமானத்தின் பயணிகள் அனைவரும் பாதியில் இறக்கி விடப்பட்டனர். அதுமட்டும் இல்லாமல் பயணிகளிடம் ”உங்களுக்கு பணம் அளிக்கப்டும் பேருந்தின் மூலம் டெல்லிக்கு சென்றுவிடுங்கள் என்று நிறுவனம்கூறியுள்ளது.

இதனைத்தொடர்ந்து, 48 பயணிகளும் பேருந்துமூலம் ஜெய்ப்பூரில் இருந்து டெல்லிக்கு அனுப்பப்பட்டனர்.

மனைவியின் நடத்தையில் சந்தேகம் : கணவர் செய்த அதிர்ச்சி செயல்!!

 
மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதையடுத்து அவரை கத்தியால் குத்தி கொலை செய்த கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தர் நகரத்தை சேர்ந்தவர் சஞ்சய் குமார். இவர் மனைவி ஷோபா சர்மா (44). தம்பதிக்கு காஜல் (19), கிரண் (18) மற்றும் ஆஷிமா (17) என்ற மூன்று மகள்கள் உள்ளனர். இவர்களில் ஆஷிமா மட்டும் பெற்றோருடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

குடிப்பழக்கம் கொண்ட சஞ்சய்குமார் தினமும் குடித்துவிட்டு வந்து ஷோபாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவருடன் தகராறு செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்றும் கணவன், மனைவிக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சஞ்சய்குமார் ஷோபாவை இரண்டு கத்தியை கொண்டு உடல் முழுவதும் குத்தியுள்ளார்.

இதை தடுக்க முயன்ற ஆஷிமா கையிலும் கத்தியால் குத்தியுள்ளார். வலியால் துடித்த ஷோபாவின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஷோபாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். காயமடைந்த ஆஷிமாவுக்கு கையில் கட்டு போடப்பட்டுள்ளது.

சம்பவத்தை தொடர்ந்து சஞ்சய்குமார் ஜலந்தர் காவல் நிலையத்துக்கு சென்று சரணடைந்தார். பொலிசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சுவிஸில் இலங்கை இளைஞர்கள் திடீர் கைது!!

 
சுவிஸில் அகதித் தஞ்சம் கோரி விண்ணப்பித்திருந்த இரு இலங்கை இளைஞர்களை நேற்று மாலை சுவிஸ் பொலிஸார் திடீரென கைது செய்துள்ளனர்.

சம்பவத்தில் ஜெயமநோகரன் தர்சன் மற்றும் முகமது அசார் இன்ஃபிராஸ் ஆகிய இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த இளைஞர்கள் இருவரும் அகதித் தஞ்சம் கோரி விண்ணப்பித்திருந்த நிலையில் 28 மாதங்கள் சென்ற பின்னர் தஞ்சக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

இந்த சந்தர்ப்பத்தில் மீண்டும் மேல் முறையீடு செய்து விட்டு பதிலுக்காக காத்திருந்த வேளையில், அவர்கள் வசிக்கும் மாநில காவல்துறையால் திடீரென கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் இருவரும் முறையான ஆதாரங்களை குடிவரவு மற்றும் குடியகழ்வு அதிகாரிகளுக்கு வழங்கியிருந்த வேளையிலும் இந்த கைது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இருவரின் குற்றச்சாட்டும் இலங்கை அரசிற்கு எதிராக இருந்ததால் இவர்களின் தஞ்சக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டிருந்தது என்பது கவனத்தில் எடுக்கப்பட வேண்டிய விடயம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை சம்பவம் தொடர்பில், மனித உரிமை நிறுவனங்கள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்களின் உதவியை இளைஞர்களின் பெற்றோர் நாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.