இலங்கை உள்ளிட்ட தமிழகத்தின் தென் பகுதிகளில் கடும் மழை பெய்யக்கூடும் என பிபிசி வானிலை அவதான நிலையம் முன்னறிவிப்பு விடுத்துள்ளது.
பிபிசி வானிலை அவதான நிலையம் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, “கடந்த 24 மணி நேர செயற்கைக்கோள் படத்தின் அடிப்படையில், அதிக பருவமழை பெய்ய வாய்ப்புள்ளது. அத்துடன், இலங்கை மற்றும் தமிழகத்திலும் கடும் மழை பெய்யக்கூடும்” என அதில் கூறப்பட்டுள்ளது.
அகில இலங்கை ரீதியில் சாதனை படைத்த முல்லைத்தீவு, பாண்டியன் குளம் மகா வித்தியாலய தமிழ் மாணவிக்கு மலேசியா செல்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.
மாணவியான தர்சிகா அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட பளு தூக்கும் போட்டியில் 44 கிலோகிராம் பிரிவில் 78 கிலோகிராம் பளு தூக்கி தங்கப்பதக்கம் பெற்றிருந்தார்.
இந்த நிலையில் அவர் மலேசியாவில் நடைபெறும் பளு தூக்கும் போட்டியில் பங்குபெற தெரிவான நிலையில் போட்டிக்கு செல்வதற்கான வறுமை நிலையில் இருந்தமையால் உதவி கோரியிருந்தார்.
இதனைத் தொடரிந்து, அவருக்கு பல்வேறு தரப்பினராலும் 200,000 ரூபா வரையிலான நிதியுதவி வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அவிசாவளை – கொஸ்கம பிரதேசத்தில் காதலி முன்னாலேயே இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அவிசாவளை பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவரே நேற்றிரவு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அந்தப் பகுதி யுவதி ஒருவருடன் 3 மாதங்களுக்கு முன்னர் குறித்த இளைஞர் காதல் தொடர்பை ஏற்படுத்தி கொண்டுள்ள நிலையில், இளைஞரின் வீட்டார் தரப்பில் அதற்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நேற்று இரவு யுவதியின் தாயார் வீட்டில் இல்லாத நேரத்தில் இளைஞர் அங்கு சென்றுள்ளார். அங்கு இருவருக்கும் ஏற்பட்ட வாய்த்தகராறு முற்றியமையினால் கோபமடைந்த இளைஞன் யுவதியின் கைகளை ஜன்னலில் கட்டியுள்ளார்.
பின்னர் அவரின் முன்னால் இளைஞன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கொஸ்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த இளைஞன் இதற்கு முன்னரும் ஒரு தடவை தற்கொலைக்கு முயற்சித்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை மாணவியின் தந்தை மற்றும் சகோதரன் குறித்த வீட்டிலேயே சில காலங்களுக்கு முன்னர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிய வருகிறது.
குணப்படுத்த முடியாது என கைவிடப்பட்ட கண் நோய் தொடர்பான நோயாளர்களுக்கு இலகுவாக சிகிச்சை வழங்கும் வைத்தியர் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
வெளிநாட்டு வைத்திய முறைகளை பயன்படுத்தி, குணப்படுத்த முடியாது என உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வைத்தியர்களினால் கைவிடப்பட்ட பலருக்கு மீண்டும் கண்பார்வை கிடைத்துள்து.
கெலனிகம லந்தே கெதர பந்து எனப்படும் பெயரில் அழைக்கப்படுகின்ற பிரபல பாரம்பரிய வைத்தியரின் உதவியில் பல உள்நாட்டவர், வெளிநாட்டவர்களுக்கு கண் பார்வை கிடைத்துள்ளது.
முற்றிலும் உள்நாட்டு மருத்துவ மூலிகைகளினால் தயாரிக்கப்பட்ட மருந்துகளில் வைத்தியம் பார்த்து கண் நோய்களை குணப்படுத்துவதில் அவர் பிரபலமடைந்துள்ளார்.
அதிநவீன வசதிகளை கொண்ட வெளிநாட்டு வைத்தியசாலைகளில் குணப்படுத்த முடியாத கண் நோயாளர்கள் பலரை, ஆயுர்வேத வைத்தியரான லந்தே கெதர பந்து குணப்படுத்தியுள்ளார்.
இலங்கையில் ஆயுர்வேத வைத்தியம் வீழ்ச்சி அடைந்து செல்லும் நிலையில், அதனை பாதுகாக்க சுகாதாரத்துறை அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு வைத்தியம் தற்போதைய பரம்பரையை விட்டு தூரமாகும் யுகத்தில் இவ்வாறானவைகளை பாதுகாப்பதற்கு சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டு கொள்ளப்படுகின்றது.
அமெரிக்க ஜனாதிபதி கடுமையான கருத்துக்களை தொடர்ந்தும் வௌியிடும் பட்சத்தில், அந்நாடு பேரழிவை எதிர்கொள்ள நேரிடும் என வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி இன்று வடகொரியாவிற்கு பயணிக்கவுள்ள நிலையில் வடகொரியா இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
வட கொரியாவின் ஏவுகணைகளை ஜப்பான், அமெரிக்க ஆயுதங்களினால் சுட்டு வீழ்த்தும் என டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஜப்பானுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ட்ரம்ப், இந்த கருத்துக்களை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
எவ்வாறாயினும் வடகொரியாவின் துணிச்சல் மிக்க நடவடிக்கைகள் அமெரிக்கா தவறாக மதிப்பிட்டுள்ளதாகவும் வட கொரிய ஜனாதிபதி கூறியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
வடகொரியா, அனைத்து சக்திகளையும் ஒன்று திரட்டி ஒரு உறுதியான மற்றும் இரக்கமற்ற தண்டனையை விதிக்க நேரிடும் என கிம் ஜோங் உன் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் 14 இலட்சம் மாணவர்கள் காலை உணவு உட்கொள்வதில்லை என ஆய்வுகளில் இருந்து தெரியவந்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
குடும்பங்களின் பொருளாதாரப் பிரச்சினை இதில் அதிகம் தாக்கம் செலுத்துவதாக ஆய்வறிக்கைகள் சுட்டிக்காட்டியுள்ளன.
2016 ஆம் ஆண்டு கல்வி அமைச்சு வெளியிட்ட தகவல்களின்படி இலங்கையில் 10,162 பாடசாலைகளில் 41,43,330 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர்.
இந்த எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பகுதி அதாவது 14 இலட்சம் மாணவர்கள் காலை உணவு உட்கொள்வதில்லையென ஆய்வுகளில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை சுகாதார அமைச்சின் மருத்துவ ஆய்வு மையத்தின் போஷாக்குப் பிரிவு தெரிவித்துள்ளது.
பொருளாதாரப் பிரச்சினைகள் காரணமாக மாணவர்கள் காலை உணவை உட்கொள்ளாமல் பாடசாலைகளுக்கு செல்கின்ற அதேவேளை, பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்வதன் காரணமாக பல பிள்ளைகளுக்கு காலை உணவு விடுபடுவதாக ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, காலை உணவை உட்கொள்ளாவிட்டால் அது பிள்ளைகளின் மூளை வளர்ச்சியிலும் உடல் வளர்ச்சியிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், முட்டையின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் சுமார் 20 இலட்சம் முட்டைகள் வீண் விரயமாவதாகவும் அவற்றை குறைந்த விலையில் பாடசாலை மாணவர்களுக்கு நாளாந்தம் வழங்குவது தொடர்பில் கல்வி அமைச்சருடன் கலந்துரையாடியதாகவும் அகில இலங்கை கோழிப் பண்ணையாளர்கள் சங்கம் குறிப்பிட்டது.
வீண் விரயமாகும் உணவுகளை அரசாங்கம் முறையாக முகாமைத்துவம் செய்வதன் ஊடாக எமது சமூகத்தில் வறுமைக்கோட்டின் கீழுள்ள பலர் நன்மையடைவார்கள் அல்லவா?
யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் அமைப்பொன்று வைபவங்கள் போன்ற நிகழ்வுகளின் போது மீதப்படும் உணவுகளை குறித்த தரப்பினரிடம் இருந்து பெற்று, வறுமையிலுள்ள மக்களுக்கு விநியோகித்து வருகின்றது.
இவ்வாறானதொரு நடைமுறையை அரசாங்கத்தினால் ஏன் இன்னும் முன்னெடுக்க முடியவில்லை?
தெலுங்கில் இருந்து இந்தி பட உலகுக்கு சென்று இருப்பவர் இலியானா. தற்போது அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த புகைப்பட கலைஞர் ஆன்ட்ரூ நிபோனை காதலிக்கிறார்.
ஆரம்ப காலத்தில் தனது மனநிலை எப்படி இருந்தது என்பது பற்றி இலியானா தெரிவிக்கும்போது, “ஒரு காலத்தில் எப்போதுமே நான் சோர்வாகவும், கவலையுடனும் இருப்பேன். அந்த கால கட்டத்தில் ஒரு வகையான மனச்சிதைவு இருந்திருக்கிறது. அதுபற்றி அப்போது எனக்குத் தெரியாது. சில சமயங்களில் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று நினைத்தேன்.
தற்கொலை செய்தால் பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்துவிடும் என்று கருதினேன். மனஅழுத்தம் என்பது கற்பனை அல்ல. அது உண்மையானது. அது தானாகவே சரியாகிவிடும் என்று தயவு செய்து நினைக்க வேண்டாம். அதற்கு சிகிச்சை பெற வேண்டியது கட்டாயம். தயவு செய்து சிகிச்சை பெறுங்கள்.
நாம் எப்படி இருக்கிறோமோ அப்படியே ஏற்றுக்கொள்வது நல்லது. நடிகர், நடிகைகள் அழகாக இருக்கிறார்கள் என்று நினைக்க வேண்டாம். இதற்காக நாங்கள் 2 மணி நேரம் மேக்கப் செய்து தயார் ஆகிறோம். உங்கள் மனம் அழகாக இருந்தால் நீங்கள் அழகு தான். மன அழுத்தம் ஒரே நாளில் சரியாகிவிடாது. படிப்படியாகத் தான் சரியாகும். பொறுமையாக இருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
மத்திய தரைக்கடலில் 26 இளம்பெண்கள் இறந்து கிடந்தது தொடர்பாக இத்தாலி அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கி உள்ளனர்.
உள்நாட்டுப் போர் நடைபெற்று வரும் சிரியா, லிபியா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகள் சென்றவண்ணம் உள்ளனர். இவர்கள் மத்திய தரைக்கடல் வழியாக ஆபத்தான படகுப் பயணம் மேற்கொள்ளும்போது சில சமயங்களில் விபத்தில் சிக்கி உயிரிழக்கின்றனர்.
இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன் மத்திய தரைக்கடலில் இத்தாலி அதிகாரிகள் மேற்கொண்ட மீட்பு பணியின்போது, 22 இளம் பெண்களின் உடல்களை மீட்டுள்ளனர்.
14 முதல் 18 வயது வரை கொண்ட அந்தப் பெண்கள் நைஜர் மற்றும் நைஜீரியாவைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்றும், லிபியா வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல இந்த ஆபத்தான பாதையில் பயணித்திருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.
படகு மூழ்கியதால் அவர்கள் இறந்திருக்கலாம் என்று பொதுவாக கூறப்பட்டாலும், அவர்கள் சாவுக்கான உண்மையான காரணம் தெரியவில்லை. இறந்துபோன இளம்பெண்களின் உடல்கள் இன்று பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. விசாரணையும் தொடங்கி உள்ளது.
இதுபற்றி காவல்துறையின் மூத்த அதிகாரி லோரனா சிகோட்டி கூறும்போது, ‘இளம்பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதால் இது குறித்து விசாரணை நடத்தப்படும்.
ஆட்கடத்தல் தொடர்பாக எகிப்து மற்றும் லிபியாவைச் சேர்ந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்’ என்றார்.
வவுனியா வேப்பங்குளம் பகுதியிலுள்ள மயானத்தை அண்டியுள்ள குளத்தில் குப்பை கொட்டுவதற்கு நேற்று (06.11) மாலை 5.30 மணியளவில் கப் ரக வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்டபோது அப்பகுதியிலுள்ள மக்களின் எதிர்ப்பையடுத்து பொலிசார் தலையிட்டு வாகனத்தையும், சாரதியையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
வவுனியா வேப்பங்குளம் தட்சணாங்குளம் மயானத்தை அண்டிய குளத்தில் கப் ரக வாகனத்தில் குப்பைகளை கொட்டுவதற்கு எடுத்துவரப்பட்டபோது அப்பகுதியிலுள்ள மக்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதுடன் தடுத்து நிறுத்தி பொலிசாரை வரவளைத்து அவர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.
சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார் வாகனத்தின் சாரதியைக் கைது செய்ததுடன் வாகனத்தையும் மேலதிக விசாரணைகளுக்காக பண்டாரிக்குளம் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றதாகத் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதியில் பல பொதுமக்கள் வசித்து வருகின்றதுடன் இரவு வேளைகளில் சிலர் அப்பகுதியில் குப்பைகளை வீசிவிட்டுச் செல்வதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் இன்று (07.11) மாலை 5.30 மணியளவில் கேரள கஞ்சாவுடன் புத்தளத்தை சேர்ந்த இளைஞன் ஒருவரைக் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இவ் விடயம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
இன்று மாலை 5.30 மணியளவில் கிளிநொச்சியிலிருந்து புத்தளம் நோக்கி பேருந்தில் எடுத்துவரப்பட்ட கேரள கஞ்சா 1கிலோ 910கிராமினை வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் சோதனை மேற்கொண்டபோது கைப்பற்றியுள்ளதாகவும் குறித்த கஞ்சாவினை எடுத்து வந்த புத்தளத்தை சேர்ந்த 20 வயதுடைய தனுஷ்க சம்பத் என்ற இளைஞனை கைது செய்துள்ளதாகவும் விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
நாளுக்கு நாள் திருட்டு சம்பவம் அதிகரித்து வருகின்ற நிலையில், தற்போது பல்வேறு வர்த்தக நிலையங்களில் பாதுகாப்பு கெமராக்கள் பொருத்தப்பட்டுகின்றது.
இந்த நிலையில்,பாதுகாப்பு கெமராவின் உதவியுடன் மற்றுமொரு திருட்டு சம்பவம் ஹங்குரன்கெத்தவில் பதிவாகியுள்ளது.
ஹங்குரன்கெத்த, ரிகில்லகஸ்கட பகுதியிலுள்ள நகை கடையொன்றில் இந்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நகைக் கடை ஒன்றில் நகை வாங்க சென்ற பெண் ஒருவர் மோதிரங்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கும் போது, தங்க மோதிரத்தை பைக்குள் வைத்து கொண்டு போலியான மோதிரத்தை கடை உரிமையாளரிடம் கொடுத்துள்ளமை காணொளி மூலம் அம்பலமாகியுள்ளது.
குறித்த திருட்டு சம்பவத்தை பாதுகாப்பு கமரா உதவியுடன் கடை உரிமையாளர் கண்கானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ். உரும்பிராய் பகுதியில் தனது மனைவியின் தங்கைக்கு கூடுதல் சீதனம் கொடுக்கப்பட்டதால் கணவன் ஒருவர் தனது மனைவியை கடுமையாக தாக்கியுள்ள சம்பவம் ஒன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் குறித்த தாக்குதலில் காயமடைந்த மனைவி தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ். உரும்பிராய் பகுதியில் பிரபல வர்த்தகரின் இரு மகள்களில் இளைய மகளுக்கு கூடுதலான பணம் மற்றும் நகைகள், வீடு போன்றவற்றை சீதனமாக கொடுத்து அண்மையில் அரச உத்தியோகத்தர் ஒருவருக்கு திருமணம் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண்ணின் அக்காவின் கணவரும் ஒரு அரச உத்தியோகத்தர் ஆவார். தனது மனைவியின் தங்கைக்கு தனக்கு கொடுத்ததை விட அதிக அளவு சீதனம் கொடுத்து திருமணம் நடத்த முற்பட்டபோது குறித்த கணவன் அதனைத் தடுத்து நிறுத்த முற்பட்டுள்ளார்.
எனினும் இவரது பேச்சுக்கு அங்கு இடம் இல்லாமல் போகவே அவருக்கு கொடுக்கப்பட்டதை விட அதிக சீதனம் கொடுத்து தனது மனைவியின் தங்கைக்கு அதிக சீதனம் கொடுக்கப்பட்டு திருமணம் முடித்து வைக்கப்பட்டுள்ளது.
இதனால் கோபமுற்ற குறித்த கணவன் திருமண வீட்டிற்கும் செல்லாமல் திருமண வீட்டிற்கு சென்ற தனது மனைவியையும் கடுமையாகத் தாக்கியுள்ளார்.
இதன் காரணமாக காயமுற்ற மனைவி சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு – கண்டி பிரதான வீதியில் சடலம் ஒன்று இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. மாவனல்ல இலங்கை போக்குவரத்து சபைக்கு அருகிலுள்ள வாய்க்கால் ஒன்றிலிருந்து சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சடலத்தின் கால்கள் மாத்திரம் வெளியில் தெரிந்துள்ள நிலையில், அந்தப் பகுதியில் சென்ற பலர் அச்சமடைந்துள்ளனர்.
குறித்த நபர் வாய்க்காலிற்குள் விழுந்து உயிரிழந்துள்ளாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கிடைத்துள்ள தகவல்களுக்கமைய இந்த நபர் மானவல்ல பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
பிரேத பரிசோதனைக்காக சடலம் மாவனெல்ல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
IOC நிறுவனத்தால் இலங்கைக்கு தரமற்ற எரிபொருளைக் கொண்டுவந்த டோர்ம் அஸ்ட்ரீட் என்ற குறித்த கப்பல் 30,000 மெட்ரிக் தொன் பெற்றோலை ஏற்றிக்கொண்டு கடந்த மாதம் 15 ஆம் திகதி கொழும்பை வந்தடைந்தது. எனினும், பெற்றோலின் தரம் தொடர்பில் எழுந்த சிக்கல் காரணமாக 17 ஆம் திகதி கப்பலைத் திருப்பியனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது.
எனினும் கப்பல் தொடர்ந்தும் திருகோணமலை துறைமுகத்தை அண்மித்த கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டுள்ளது.
இந்தவிடயம் குறித்து சக்தி செய்திப் பிரிவினர் லங்கா IOC நிறுவனத்தினரிடம் வினாவினர் இதற்கு பதிலளித்த முகாமைத்துவ பணிப்பாளர் ஷியாம் போரா….
இதனை நிராகரிப்பதற்கு காரணம் அதிலுள்ள சுத்தம் இன்மை காரணமே எனினும் இதிலுள்ள இரசாயண தன்மை வழமைபோன்று உள்ளது. எனினும் அதன் தோற்றம் மாறாக உள்ளது அது தேவைக்கு பொருத்தமற்ற முறையில் உள்ளது. அதுதான் நிராகரிக்கப்படுவதற்கான காரணமாகும். இதனை ரஷ்ய நிறுவனம் ஒன்றிலிருந்து இறக்குமதி செய்தோம். அது உலக எண்ணெய் வழங்கலில்மு தல் 10 இடங்களில் ஒன்றாகும்.
வழங்குனர் உரிமையை மாற்றியிருக்க வேண்டும். அதனை அவர்களுக்கு அறிவித்திருந்தோம் அதனை மீள்பரிசீலனை செய்ய சந்தர்ப்பம் கோரியிருந்தனர். அந்தப் பரிசோதனையிலும் நிராகரிக்கப்பட்டது.
உடனடியாக விலைமனு கோரலுக்கு சென்றோம் அதன்பிறகு எமது உற்பத்தியை நேற்று கப்பலில் ஏற்றியுள்ளோம் 10 ஆம் திகதி கப்பலொன்று இங்கு வந்தடையும். அவர்கள் பின்பற்றிய வழிமுறைகளை ஆராய்ந்து பார்த்து இதற்கான நட்டத்தினை கோர நாம் எதிர்பார்த்துள்ளோம் பெற்றோலை மாற்றித்தர இதுவரை இணங்கவில்லை அதனை மாற்றாவிடின் சட்டநடவடிக்கை எடுப்போம். நாம் எமது பிரதான அலுவலகத்திற்கு அறிவித்துள்ளோம்.இலங்கைக்கு வெளியே இந்தக் கப்பலை கொண்டு செல்ல அனுமதி வேண்டும் சுங்கம் மற்றும் துறைமுகம் இதற்கு ஆவணசெய்யவேண்டும் என்றார்
பல்வேறு கோரிக்கைகனை முன்வைத்து ரயில்வே தொழிற்சங்க பணியாளர்கள் நாளை நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.
இலங்கை ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கத்தின் பிரதான செயலாளர் பி.என்.பி.பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார்.
நாளை நள்ளிரவு முதல் 48 மணித்தியாலங்களுக்கு இந்த பணிப்புறக்கணிப்பு தொடரும் எனஅவர் கூறியுள்ளார்.
இதற்கு முன்னர் தாம் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்தபோது தமது பிரச்சினைகளுக்கு இரண்டு வாரங்களில் தீர்வை பெற்றுக்கொடுப்பதாக போக்குவரத்து துறை பிரதி அமைச்சர் வழங்கிய உறுதிமொழி நிறைவேற்றப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.