10ம் திகதிக்குள் நீதிமன்றில் நேரில் ஆஜராக நடிகை அமலா பாலுக்கு உத்தரவு!!

பிரபல நடிகை அமலாபால் கடந்த ஆகஸ்டு மாதம் 1 கோடி மதிப்பில் பென்ஸ் எஸ் கிளாஸ் ரக சொகுசு கார் வாங்கினார். இந்த காரை அவர் தமிழகத்திலோ அல்லது கேரளாவிலோ பதிவு செய்ய வேண்டும் என்றால் அதற்கு பதிவு கட்டணமாக 20 லட்சம் வரை செலவாகும். ஆனால் புதுச்சேரி மாநிலத்தில் பதிவு செய்ய வேண்டும் என்றால் 1½ லட்சத்தில் பதிவு செய்து விடலாம்.

இதற்கு புதுச்சேரியில் தங்கியிருப்பதற்கான ஆதாரத்தை தாக்கல் செய்ய வேண்டும். அதன்படி, அமலாபால் புதுச்சேரியில் நம்பர் 6, செயின்ட் தெரசா தெரு, திலாஸ்பெட், புதுச்சேரி என்ற முகவரியில் தங்கியிருப்பதாக ஆவணம் தாக்கல் செய்து காரை பதிவு செய்தார்.

அந்த காரை அவர், கேரளாவில் ஓட்டி வந்தார். பிற மாநிலத்தில் பதிவு செய்த கார்கள், கேரளாவில் தொடர்ந்து ஓட வேண்டும் என்றால் அங்குள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சான்றிதழ் பெற வேண்டும். இல்லையென்றால் அவர்கள் வாகன உரிமையாளர் மீது நடவடிக்கை எடுப்பார்கள்.

அதன்படி அமலாபாலின் சொகுசு கார் குறித்த விவரங்களை எர்ணாகுளம் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது அமலாபால் ஆவணத்தில் தெரிவித்திருந்த புதுச்சேரி முகவரி போலி என தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக போக்குவரத்து அதிகாரிகள் அமலாபாலுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். அதில், வருகிற 10ம் திகதிக்குள் சொகுசு கார் குறித்த உண்மை ஆவணங்களுடன் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும். இல்லையேல் வாகனத்திற்கான கேரள பதிவுக்கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

அமலாபாலின் புதுச்சேரி முகவரியில் கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த இன்னொருவரின் சொகுசுக் காரும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி அந்த நபரிடம் நிருபர்கள் தொடர்பு கொண்டு கேட்டனர். அதற்கு அமலாபால் தங்கியிருந்தது தரை தளம். நான், அந்த வீட்டின் முதல் தளத்தில் தங்கியிருந்தேன். எனவே தான் இருவரும் ஒரே முகவரியை கொடுத்ததாக கூறி உள்ளார்.
இது குறித்தும் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வவுனியா இந்துக் கல்லூரியின் பழைய மாணவர்களுக்கான ஒன்றுகூடல்!!

 
வவுனியா இந்துக் கல்லூரியின் பழைய மாணவர்களுக்கான ஒன்று கூடல் நேற்று (08.11.2017) பழைய மாணவர் து.நிரோஷன் தலைமையில் நடைபெற்றது.

பழைய மாணவர்களின் ஒன்று கூடலுக்கு வவுனியா இந்துக் கல்லூரியின் அதிபர் திரு.பூலோகசிங்கம் அவர்களும், முன்னைய இந்துக் கல்லூரியின் அதிபர் திரு.சிவஞானம் மற்றும் ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

இவ் ஒன்றுகூடலில் பாடசாலை அபிவிருத்தி தொடர்பாகவும், மற்றும் பழைய மாணவர்களின் புதிய அங்கத்துவத்தில் இணைவது தொடர்பாகவும், கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் புணரமைப்பு தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

பேராசிரியர் வல்லிபுரம் மகேஸ்வரனின் பணிநயப்பு விழாவும் நூல் வெளியீடும்!!

பேராசிரியர் வல்லிபுரம் மகேஸ்வரனின் பணிநயப்பு விழாவும் நூல் வெளியீட்டு விழாவும் எதிர்வரும் (12.11.2016) ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 யாழ் இணுவில் மத்திய கல்லூரி மண்டபத்தில் பேராதனை பல்கலைக்கழக தகைசார் பேராசிரியர் கலாகீர்த்தி சி.தில்லைநாதன் தலைமையில் நடைபெறவுள்ளது.

இவ்விழாவில் பிரதம விருந்தினர்களாக யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் இ.விக்னேஸ்வரன் திருமதி பவானி விக்னேஸ்வரன் சிறப்பு விருந்தினர்களாக இந்திய துணைத்தூதர் ஆ.நடரா ஶ்ரீமதி சாந்தி நடராஜா கலந்து சிற்ப்பிக்கவுள்ளனர்

இந்நிகழ்வில் விழா ஏற்பாட்டுக்குழுவின் தலைவர் கலாநிதி க.ஶ்ரீகணேசன் வரவேற்புரையினை நிகழ்த்த ஆசியுரையினை சிவஶ்ரீ சோ.பிரசன்னா குருக்களும் தகைசார் பேராசிரியர் ப.கோபாலகிருஷ்ண ஐயரும் கலாநிதி ஆறு.திருமுருகனும் நிகழ்த்துவர்.

வாழ்த்துரையினை தகைசார் பேராசிரியர் அ.சண்முகதாஸ் பேராசிரியர் மா.வேதநாதன் பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் பேராசிரியர் க.தேவராஜா யாழ் தேசிய கல்வியியற் கல்லூரி அதிபர் எஸ்.அமிர்தலிங்கம் வலிகாமம் வலய கல்விபணிப்பாளர் செ.சந்திரராஜா இணுவில் மத்திய கல்லூரி அதிபர் இ.துரைசிங்கம் கொழும்பு தமிழ்சங்கத்தலைவர் தம்புசிவசுப்பிரமணியம் ஆகியோர் நிகழ்த்துவர்
அதனைத்தொடர்ந்து பணிநயப்பு மலர் வெளியீடு நிகழ்வு இடம் பெறும் வெளியீட்டுரையினை பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா நிகழ்த்துவார்.

அதனைத்தொடர்ந்து பேராசிரியர் வ.மகேஸ்வரன் எழுதிய பெரியதும் சிறியதும் நூல் வெளியீடு இடம்பெறும் நூலின் நயவுரையினை பேராசிரியர் கி.விசாகரூபன் நிகழ்த்துவார் அதனைத்தொடர்ந்து சிறப்புரை பிரதம விருந்தினர் ஏற்புரை என்பவற்றை தொடர்ந்து விழா ஏற்பாட்டு குழுவின் செயலாளர் மு.கௌரிகாந்தின் நன்றியுரையுடன் நிகழ்வு இனிதே நிறைவு பெறும்.

வவுனியாவில் மாபெரும் தொழிற்சந்தை!!

வவுனியா பம்பைமடு பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகிய இரு தினங்களும் மாபெரும் தொழிற்சந்தை இடம்பெறவுள்ளதாக இன்று மாலை வவுனியா பூங்கா விதியிலுள்ள பல்கலைக்கழக வாளாகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் பல்கலைக்கழக முதல்வர் தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

நாளை வெள்ளிக்கிழமை காலை 9 மணிமுதல் அனைத்துப் பட்டதாரிகள், பல்கலைக்கழக மற்றும் உயர் கல்வி நிறுவனங்களின் இறுதியாண்டு மாணவர்களுக்காகவும், 11ஆம் திகதி நாளை மறுதினம் சனிக்கிழமை அனைத்து தொழில் வாய்ப்புக்களையும் தேடுபவர்களுக்காகவும் இத் தொழிற்சந்தை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் இந்நிகழ்வில் தகவல் தொழிநுட்பம், வங்கிகள், காப்புறுதி நிறுவனங்கள், ஆடைத் தொழிற்சாலை நிறுவனங்கள், மற்றும் உயர்கல்வி தொழில்சார் கற்கை தொழிற்பயிற்சிகளை வழங்கும் நிறுவனங்கள் உட்பட 30ற்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன.

இந் நிறுவனங்கள் தமக்குத் தேவையான வல்லுநர்களை பல்வேறு துறைகளில் நேரடியாக தெரிவு செய்து வேலை வாய்ப்புக்களை வழங்கவுள்ளனர்.

இத் தொழிற்சந்தையில் வவுனியா நகரிலிருந்து கலந்துகொள்வதற்காக விஷேட பேருந்து சேவைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன் இலவச தொழில்காட்டல் கருத்தரங்குகள் இரண்டு நாட்களும் இடம்பெறவுள்ளது

தொழிற்சந்தைக்கு வருகை தருபவர்கள் தமது சுயவிபரக் கோவையின் பல பிரதிகளை எடுத்துவருமாறும் இது தொடர்பாக மேலதிக விபரங்களைப் பெற விரும்புவர்கள் 0769450346 இலக்கத்துடன் தொடர்புகொண்டு மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்ளுமாறும் மேலும் தெரிவித்தார்.

வெளிநாட்டு விமான நிலையத்தில் பசியால் உயிரிழந்த இலங்கைப் பெண்!!

வெளிநாடு ஒன்றுக்கு பணிப்பெண்ணாக சென்ற இலங்கையை சேர்ந்த பெண்ணொருவர் விமான நிலையத்தில் உயிரிழந்துள்ளார்.

பஸ்ஸரை, அரசியாகம பிரதேசத்தை சேர்ந்த 30 வயதான பிரியங்கா என்ற இரு பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் நீண்ட நாட்கள் உணவின்றி விமான நிலையத்தில் காத்திருந்தமையினால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

குறித்த பெண் கடுமையான சித்திரவதைகளை அனுபவித்த நிலையில் இலங்கைக்கு வருவதற்கு அவரது உறவினர்களினால் விமான டிக்கெட் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

எனினும் பயணத்திற்கான திகதியை மாற்றி வீட்டு உரிமையாளர்களினால் அவரிடம் டிக்கட் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இலங்கை நோக்கி செல்லும் விமானத்திற்கு விமான நிலையத்தில் பல நாட்கள் அவர் காத்திருந்துள்ளார்.

இறுதியில் அவர் உணவின்றி உயிரிழந்துள்ளதாக நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட மரண விசாரணையில் தெரியவந்துள்ளது.

மரண விசாரணையின் போது உயிரிழந்த பெண்ணின் தந்தை சாட்சி வழங்கியுள்ளார். அவரது சாட்சியில்,

“எனக்கு 8 பிள்ளைகள் உள்ளனர். சம்பவத்தில் உயிரிழந்தவர் எனது இரண்டாவது மகள். அவருக்கு இரு பிள்ளைகள் உள்ளனர். எனினும் அவர்கள் எங்கிருக்கின்றார்கள் என தெரியவில்லை.

எனது 2016ஆம் ஆண்டு ஜுலை மாதம் 2ஆம் திகதி பணிப்பெண்ணாக டுபாய் நாட்டிற்கு சென்றார். சில காலம் நல்லதொரு இடத்தில் பணி செய்வதாக குறிப்பிட்டார். பின்னர் தனக்கு இடம்பெறும் சித்திரவதை தொடர்பில் அவர் தனது உறவினர்களிடம் அறிவித்தார்.

அதற்கமைய அவருக்கு இலங்கை வருவதற்கான டிக்கட் ஒன்றை உறவினர்கள் அனுப்பி வைத்தனர். விமான நிலையத்திற்கு சென்றவரிடம் இன்று அல்லது நாளை இலங்கை செல்வதற்கான விமான சேவை இல்லை என விமான நிலைய அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

எனினும் அவர் சில நாட்களாக விமான நிலையத்தில் காத்திருந்த போதிலும் இலங்கைக்கான விமானம் ஒன்று கிடைக்கவில்லை. இறுதியில் உணவின்றி விமான நிலையத்திலேயே உயிரிழந்துள்ளார்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வவுனியாவில் பல்வேறு பகுதிகளில் கேரள கஞ்சாவுடன் ஐவர் கைது : கஞ்சா பரிமாறும் இடமாக வவுனியா?

வவுனியா நகரின் பல்வேறு பகுதிகளில் கேரள கஞ்சாவுடன் ஐவர் வவுனியா மது ஒழிப்பு பிரிவு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் இருந்து 10 கிலோ 430 கிராம் கேரளா கஞ்சாவும் கைப்பற்றப்பட்டுள்ளது. இது தொடர்பில் பொலிசார் மேலும் தெரிவித்ததாவது,

வவுனியா நகரப்பகுதியில் சந்தேகத்திடமான நபர்களை சோதனை செய்த போது கேரள கஞ்சாவுடன் ஐந்து பேர் வேறு வேறு பகுதிகளில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சியிலிருந்து புத்தளம் நோக்கி பேருந்தில் கொண்டு செல்லப்பட்ட நிலையில் வவுனியா பேரூந்து நிலையத்தில் வைத்து 1 கிலோ 910 கிராம் கேரளா கஞ்சாவுடன் புத்தளம் புகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலைக்கு கொண்டு சென்ற நிலையில் வவுனியா நகரப்பகுதியில் வைத்து 2 கிலோ 70 கிராம் கஞ்சாவுடன் திருகோணமலை இளைஞர் ஒருவர் நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சியில் இருந்து மதவாச்சிக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் வவுனியா பேரூந்து நிலையத்தில் வைத்து மதவாச்சியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் 2 கிலோ 150 கிராம் கேரளா கஞ்சாவுடன் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், கிளிநொச்சியில் இருந்து அனுராதபுரம் கொண்டு செல்லப்பட்ட நிலையில் வவுனியா பேரூந்து நிலையத்தில் வைத்து 2 கிலோ 200 கிராம் கேரளா கஞ்சாவுடன் கிளிநொச்சி இளைஞர் ஒருவர் கைது இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

மற்றொரு நபர் கிளிநொச்சியில் இருந்து மிஹிந்தலைக்கு கேரள கஞ்சாவினை கொண்டு சென்ற நிலையில் வவுனியா நகரப்பகுதியில் வைத்து இன்று கைது செய்யப்பட்டார். புல்மோட்டையைச் சேர்ந்த குறித்த நபரிடம் இருந்து 2 கசிலோ 100 கிராம் கேரளா கஞ்சா கைப்பட்டுள்ளது.

வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வழிகாட்டலில், எஸ்.ஐ.சுபசிங்க, பொலிஸ் சார்ஜன்களான சூரசேன (24778), அனுர (43210), பொலிஸ் கொன்ஸ்டபிள்களான பண்டார (14957), ஹேரத் (40117), பிரதீப் (45980), கொத்தலாவே (66412), கீர்த்தி (41672), குமார (66701) ஆகியோர் அடங்கிய பொலிஸ் குழுவினரே குறித்த நபர்களை கைது செய்தனர்.

குறித்த நான்கு பேரையும் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் வவுனியா மது ஒழிப்பு பிரிவு பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

மன்னார் கடலில் சிக்கிய விசித்திரமான மீன்!!

 
மன்னார் – வங்காலை பகுதி கடலில் விசித்திரமான பாரிய மீன் சிக்கியுள்ளது. குறித்த மீன் நேற்று முன் தினம் பிடிக்கபட்டுள்ளது.

சுறாவை ஒத்த தோற்றமுள்ள மீன் ஒன்று மீனவர்களின் வலையில் வீழ்ந்துள்ளது. அத்துடன், மீனை கரைக்கு கொண்டு வந்த மீனவர்கள் அதனை பொதுமக்களுக்கு விற்பனை செய்ததாக கூறப்படுகின்றது.

மேலும், இந்த மீனை பார்வையிட நூற்றுக் கணக்கான மக்கள் திரண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியாவில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தலைமறைவான நபர் கைது!!

பல காலமாக தேடப்பட்டு 6 திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் தலைமறைவாகியிருந்த நபர் ஒருவர் நேற்று வவுனியா பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் பொலிசார் மேலும் தெரியவருவதாவது,

குறித்த நபர் வவுனியா, வேப்பங்குளம் பகுதியில் வீடு ஒன்றினை உடைத்து திருடிய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணைகளை மேற்கொண்ட போதே அவர் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் என்பதும் நீதிமன்றால் 6 திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றம், மட்டக்களப்பு நீதிமன்றம், கம்பளை நீதிமன்றம் உள்ளிட்ட பல்வேறு நீதிமன்றங்களால் குறித்த நபருக்கு எதிராக 6 திறந்த பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

குறித்த நபரிடம் இருந்து வேப்பங்குளம் பகுதியில் உள்ள வீட்டில் திருடப்பட்ட பொருட்களும் மீட்கப்பட்டுள்ளது. வவுனியா பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தென்னக்கோன் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் பியசிறி பெர்ணாந்து ஆகியோரின் வழிகாட்டலில் பிராந்திய தீர்க்கப்படாத குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி கோரலேகெதர அவர்களின் தலைமையில் பொலிஸ் சார்ஜன்ட் ஜேசுதாசன் (42521), பொலிஸ் கொன்தாபிள்காளான ஜீவாநந்தன் (45401), ரணதுங்க (59246), நிசாந்த ((59517), விஜேயசிங்க (46846), வீரசேன (78448), இந்திக்க (88610), அதுல (80891) ஆகியோர் அடங்கிய குழுவினரே குறித்த நபரை கைது செய்தனர்.

விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

பேருந்தில் யுவதிகள் மூவர் செய்த காரியம்!!

பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த பெண் ஒருவரின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்ற சம்பவம் தொடர்பில் யுவதிகள் மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பண்டாரவளையிலிருந்து பதுளைக்கு சென்ற அரச பேருந்தில் பயணித்த பெண்ணிடமிருந்தே 40 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்கச் சங்கிலி அறுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் எல்ல பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கமைய, குறித்த யுவதிகள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார்கள் என எல்ல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எம்.எம். அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

வங்கக் கடலில் கடும் புயல் : தாக்கப்படுமா இலங்கை?

வங்கக் கடலில் அந்தமான் தீவுப் பகுதியில் புயல் சின்னம் உருவாகியுள்ளதாகவும் இதனால் சென்னை உட்பட பல பகுதிகள் பாதிப்படையும் வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த பகுதியில் நேற்றைய தினம் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்று உருவாகி அது மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற்றமடைந்து வருவதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறினால், சென்னை, நெல்லூர் மற்றும் ஒடிசா என எந்த திசையிலும் கடக்கும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், இதன் காரணமாக புதுச்சேரி தொடக்கம் சென்னை வரையிலும், ஆந்திராவின் தெற்கு பகுதி கடற்கரைகளிலும் கன மழை பொழியும் சாத்தியக் கூறுகள் ஏற்பட்டுள்ளதாகவும் வானிலை ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும், குறித்த புயல் தொடர்பிலும், காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்பிலும் எதிர்வரும் 10ஆம் திகதியே இறுதித் தகவல்கள் வெளிப்படுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை, கடலூர் போன்ற பகுதிகளில் பெய்த வடகிழக்கு பருவமழை காரணமாக கடும் பாதிப்புகள் ஏற்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனாலும் இதனது தாக்கம் இலங்கையில் இருக்குமா என்பது தொடர்பில் இலங்கை வானிலை ஆய்வாளர்கள் எந்த ஒரு தகவலும் வெளியிடவில்லை.

கை வெட்டப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு!!

 
பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொகவந்தலாவ டின்சின் தோட்டத்தில் பெண்ணின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்ட பெண் பழனியான்டி சின்னம்மா 63 வயதுடையவர் என பொகவந்தலாவை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

உயிரிழந்த பெண்ணின் இடது கை வெட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதால் சடலம் தொடர்பில் பல்வேறு கோணங்களில் சந்தேகங்கள் காணப்படுவதாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸார் தெரிவித்தனர்.

அத்தோடு சடலம் தொடர்பில் ஹட்டன் நீதிமன்ற நீதவான் மரண விசாரணையை நேரில் வருகைதந்து மேற்கொண்டதன் பின்னர் சட்டவைத்திய பிரேத பரிசோதணைக்காக சடலம் நாவலப்பிட்டிய வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

பெண்ணின் கால்களிலிருந்து தானாக வெளியேறும் ஊசிகள் : விசித்திர நோயால் தவிக்கும் அவலம்!!

 
பெண் ஒருவர் கால்களிலிருந்து ஊசிகள், ஆணிகள் கடந்த ஆறு ஆண்டுகளாக வெளியேறி வருவதால் வலியால் துடிக்கும் தன்னை மருத்துவர்கள் காப்பாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள சிறிய கிராமத்தில் வசிக்கும் அனுஷியா தேவி (35) என்ற பெண் தான் இந்த விசித்திர பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2012-லிருந்து அனுஷியாவின் கால்களிலிருந்து ஊசிகள், ஆணிகள் மற்றும் மருத்துவமனையில் பயன்படுத்தும் சிரஞ்சுகள் வெளியில் வருகின்றன.

இதன் காரணமாக அவரின் கால்கள் பெரிதும் பாதித்துள்ளதோடு, நடக்க, நிற்க மற்றும் உட்கார முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்.

அனுஷியாவின் கணவர் ஏற்கனவே இறந்துவிட்டதால் சகோதரர் அவதிஷ் குமாருடன் அவர் வசித்து வருகிறார். அவராகவே கால்களில் ஊசி மற்றும் ஆணிகளை குத்தி கொள்கிறாரா என்ற சந்தேகம் சிலருக்கு வந்த நிலையில் நான் அனுஷியா உடன் பல வருடங்களாக வசிக்கிறேன், அவர் தானாகவே இப்படி செய்கிறார் என நான் நம்பவில்லை என அவதிஷ் குமார் கூறியுள்ளார்.

அனுஷியா கூறுகையில், வலியால் அவதிப்படும் என்னை மருத்துவர்கள் தான் காப்பாற்ற வேண்டும் என கூறியுள்ளார். உள்ளூர் மருத்துவர்கள் பலரிடம் காட்டியும் அவர்களால் அனுஷாவுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனையை கண்டுபிடிக்க முடியவில்லை.

இறுதியாக கடந்த மாதம் 25-ஆம் திகதி பத்திப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுஷியா சென்றுள்ளார்.

மருத்துவர்கள் அவர் கால் பகுதியை X-ray எடுத்த நிலையில் அதிர்ந்து போனார்கள். காரணம் கால்களுக்கு உள்ளே 70 ஆணிகள், ஊசிகள் இருப்பது அதில் தெரிந்தது.

இது குறித்து அரசு மருத்துவர் நரேஷ் விஷால் கூறுகையில், அனுஷியா கால்களில் மட்டுமே ஊசிகள் இருக்கிறது, வேறு உடல் பகுதியில் இல்லை. இது போன்ற விசித்தர நோயை நான் இதுவரை கண்டதில்லை. அவராகவே இந்த பொருட்களை கால்களில் குத்தி கொள்கிறாரா என்ற சந்தேகம் உள்ளது.

அனுஷியாவுக்கு மனநல கோளாறு உள்ளதா எனவும் தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது. இவ்வளவு வலியை இத்தனை வருடங்கள் எப்படி பொருத்து கொண்டார் என தெரியவில்லை.

உயர் மருத்துவர்களிடம் அனுஷியாவின் நிலை குறித்து பேசி வருகிறோம், அவர் பிரச்சனையை தீர்க்க எங்களால் முடிந்த உதவியை நிச்சயம் செய்வோம் என கூறியுள்ளார்.

 

பார்வையற்றவர்கள் உலகை காண மூன்றாவது கண் கண்டுபிடிப்பு!!

 
முற்றிலும் பார்வையற்றவர்களுக்காக செகண்ட் சைட் எனும் நிறுவனம் ‘பயோனிக் ஐ’ என்ற பெயரில் சாதனை கண்டுபிடிப்பு ஒன்றை வெற்றிகரமாக அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த பயோனிக் ஐ சாதனத்தின் மூலம் பார்வை பறிபோனவர்களுக்கு மீண்டும் பார்வையைளிக்க முடியும் என்பதை பிரிட்டன் நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இதனை நிரூபித்துள்ளனர்.

லண்டன் அரசாங்கத்தின் தேசிய சுகாதார சேவையின் சார்பில் தேர்வு செய்யப்பட்ட பார்வை பறிபோன பத்து பேருக்கு கண் பார்வையளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மருத்துவ சிகிச்சை இரண்டு மருத்துவமனைகளில் வழங்கவும் ஏற்பாடு செய்யப்படவுள்ளது.

அதிவேகமாக காட்சிகளை படமாக்கும் 500 பிக்ஸல்ஸ்களை கொண்ட நவீன கேமரா, படமாக்கப்பட்ட புகைப்படங்களை திறன்பட மூளைக்கு பரிமாற்றம் செய்ய சிப்செட்கள் மற்றும், காட்சியை மூளை மண்டலத்துக்கு அனுப்பி, பிம்பமாக்கி பார்வையை வழங்கும் அதிநவீன கண்ணாடிகள் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி, பார்வை பறிபோனவர்களுக்கும் பார்வையை வழங்க இந்த ‘பயோனிக் ஐ’ உதவுகின்றது.

அறுவை சிகிச்சை மூலம் பயோனிக் ஐ பொருத்தப்பட்டு பயோனிக் ஐ மூலம் படமாக்கப்பட்ட புகைப்படங்கள் மூளையின் பார்வையை வழங்கும் நரம்புகளுக்கு அனுப்புகிறது பின் மூளையில் இருந்து பயனர் ஒளியின் மூலம் காட்சிகள் பிரதிபலிக்கப்படுகின்றன.

இந்த புதிய முறையின் மூலம் மீண்டும் கண்பார்வையை வழங்கும் பரிசோதனைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன எனவும் இதில் பயோனிக் ஐ பொருத்தப்பட்ட சிலரால் பெரிய எழுத்துகளையும் பார்க்க முடிந்தது என மான்செஸ்டர் மருத்துவமனையின் பேராசிரியர் பாலோ ஸ்டங்கா தெரிவித்துள்ளார்.

180 டிகிரிக்கு சாய்வாக தொங்கும் தலை : 9 வயது சிறுமிக்கு நேர்ந்த துயரம்!!

பாகிஸ்தானில் 9 வயது சிறுமி ஒருவர், இயல்பான பிற பெண் குழந்தைகளைப் போன்ற கழுத்து இல்லாமல், நாள் தோறும் அவதிப்பட்டு வருவது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானைச் சேர்ந்த அப்சீன் என்ற சிறுமி பிறக்கும் போது, சாதரண பெண்கள் போன்று தான் பிறந்துள்ளார். இதையடுத்து இவர் 8ஆம் மாததில் தன் வீட்டின் வெளியே சகோதரர்களுடன் விளையாடிக் கொண்டிருக்கையில் கீழே விழுந்ததால் அவளுக்கு கழுத்தில் பலமான அடி பட்டுள்ளது.

இதனால் அப்சீனின் கழுத்து தலையில் நிற்கவே இல்லை. 180 டிகிரிக்கு சாய்வாக தொங்கிப் போய் இருக்கிறது. இது குறித்து தெரிவிக்கையில், அப்சீனுக்கு சிறுவயதில் இருக்கும் போதே தொடர்ந்து கழுத்து வலி ஏற்பட்டுள்ளது. ஆனால் பெற்றோர்கள் வலியின் காரணமாகத் தான் அழுகிறாள் என்று அங்கிருக்கும் உள்ளூர் மருத்துவர்களிடம் அழைத்துச் சென்றனர்.

அப்போது பரிசோதித்த மருத்துவர்கள் அப்சீனுக்கு புது விதமான தசைக்குறைபாடு நோய் ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை நகரத்தில் இருக்கும் நவீன தொழில்நுட்ப வசதிகள் நிறைந்த பெரிய மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சோதித்துப் பார்ப்பதே பலனளிக்கக் கூடும் என்று பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.

ஆனால் அப்சீனை நகரத்திற்கு அழைத்துச் சென்று சிகிச்சை மேற்கொள்வதற்கு பெற்றோரிடம் உரிய பணம் இல்லாத காரணத்தினால், அவர்கள் இதை பெரிதும் எடுத்துக் கொள்ளாமல் விட்டுள்ளனர். அதன் விளைவாக இந்த பிரச்சனை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது 9 வயதாகும் அவளுக்கு, அவள் வளர, வளர அவளது தசைக்குறைபாட்டு நோயும் வளர்ச்சியடைந்து கொண்டே செல்கிறது.

இதன் காரணமாக தினமும் தாங்கவியலாத கழுத்து வலியால் நொந்து போய் அவதிப்படுகிறாள் அப்சீன். இது குறித்து அப்சீனின் பெற்றோர் கூறுகையில், தங்களது 9 வயது மகளுக்கு வந்திருக்கும் இந்த வித்யாசமான தசைக்குறைபாட்டு பாதிப்பை போக்கி அவளை இயல்பான பிற குழந்தைகளைப் போல ஓடியாடி விளையாடித் திரிய வைக்கும் ஆர்வமும், ஆதங்கமும் அப்சீனின் அதிகமாக இருந்தும் கூட வறுமையின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கும் எங்களால் என்ன பண்ண முடியும் என்று கண்ணீர் வடிக்கின்றனர்.

 

குட்டி யானைக்கு தீ வைத்த கும்பல் : புகைப்படத்திற்கு கிடைத்தது விருது!!

இந்தியாவில் குட்டியானை ஒன்றின் மேல் மர்ம கும்பல் தீயை கொளுத்தி போட்ட போது, அதை புகைப்படம் எடுத்த புகைப்படக் கலைஞர் பிப்லா ஹசாராவுக்கு, சிறந்த புகைப்பட கலைஞருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் குட்டி யானை ஒன்று சாலையை கடக்க முயன்ற போது, அதன் மீது மர்மநபர்கள் சிலர் தீயை கொளுத்தி போட்டதில், அந்த யானையின் உடல் தீப்பற்றி எரிகிறது, அதன் உடன் இருந்த யானையின் கால்களிலும் தீப்பற்றி எரிந்ததால், இரு யானைகளும் உயிருக்கு பயந்து ஓடுகின்றன.

இதை வன உயிரினப் புகைப்படக் கலைஞர் பிப்லா ஹசாரா தத்ரூபமாக புகைப்படம் எடுத்து பதிவு செய்திருந்தார். செங்கற்சூளை ஒன்றை நடத்தி வரும் பிப்லா ஹசாரா, வன உயிரினங்கள் மீது கொண்டுள்ள ஆர்வத்தால், காடுகளைக் காப்பது குறித்து விழிப்பு உணர்வு ஏற்படுத்திவருகிறார்.

இந்நிலையில் இந்த ஆண்டு ஆசியா முழுவதும் எடுக்கப்பட்ட 5,000 புகைப்படங்களிலிருந்து சிறந்த புகைப்படமாகப் பிப்லா ஹஸ்ராவின் இந்த புகைப்படம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான விருதை மும்பையைச் சேர்ந்த Sanctuary Nature Foundation என்ற அமைப்பு வழங்கியுள்ளது.

இது குறித்து அவர் கூறுகையில், தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, அஸ்ஸாம் மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில், யானை மற்றும் மனிதர்களுக்கிடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.

இதன் காரணமாக மனிதர்களுக்கு ஆபத்து ஏற்படுகிறது. இதனால் யனைகளும் கொல்லப்படுகின்றன. உயிர்ச் சங்கிலியின் அதிமுக்கியமான யானை இனத்தைக் அழிப்பது நம்மை நாமே அழித்து கொள்வதற்கு சமம், இதனால் யானை இனத்தை காப்பது குறித்து அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஆசிரியைகள் செய்த மோசமான செயல்: உயிரை விட்ட பாடசாலை மாணவி!!

தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவிக்கு இரண்டு ஆசிரியைகள் தொந்தரவு கொடுத்து துன்புறுத்தியது தொடர்பான அறிக்கையை பொலிசார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

கேரளாவின் கொல்லம் நகரை சேர்ந்த கவுரி நெஹா (15) என்ற பள்ளி மாணவி தான் படிக்கும் பள்ளிக்கூடத்தின் மூன்றாவது மாடியிலிருந்து கீழே குதித்து கடந்த மாதம் 20-ஆம் திகதி தற்கொலை செய்து கொண்டார்.

பள்ளியில் ஆசிரியைகளாக இருக்கும் சிந்து மற்றும் கிரிசண்ட் ஆகியோர் மாணவியை துன்புறுத்தியதால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கவுரியின் பெற்றோர் குற்றம்சாட்டியிருந்தார்கள்.

இதுகுறித்து பொலிசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் சிந்துவும், கிரிசண்டும் தலைமறைவானார்கள். தற்போது பொலிஸ் விசாரணை முடிந்துள்ள நிலையில் இரண்டு ஆசிரியைகளுக்கு கவுரியை அதிகமாக துன்புறுத்தியது உறுதியாகியுள்ளது.

இது தொடர்பான அறிக்கையை பொலிசார் நீதிமன்றத்தில் சமர்பித்துள்ளார். மேலும், பிணை கேட்டுள்ள இரண்டு ஆசிரியைகளுக்கு அதை வழங்க கூடாது எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

பிணை மனு மீதான விசாரணை இன்று நீதிமன்றத்தில் வரவுள்ளது. கவுரி எந்த மாதிரியான துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார் என்பதை கூற பொலிசார் மறுத்துவிட்டனர்.

சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு ஆசிரியைகளையும் பள்ளி நிர்வாகம் தற்காலிக பணிநீக்கம் செய்துள்ளது.