பேஸ்புக்கில் சுமார் 27 கோடி வாடிக்கையாளர்கள் போலியானவர்கள்!!

பேஸ்புக் நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு வருவாய் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இத்துடன் பேஸ்புக் தளத்தில் பல போலி மற்றும் நகல் கணக்குகள் இருப்பதாக தெரிவித்துள்ளது.

இத்துடன் 210 கோடி மாதாந்த பயனாளிகளில் கிட்டதட்ட இரண்டு அல்லது மூன்று மடங்கு கணக்குகள் தவறான வகைப்படுத்தியோ அல்லது தகுதியற்ற முறையில் இடம்பெற்றுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிஜ பேஸ்புக் பயனாளிகளில் கிட்டதட்ட 10 சதவிகித கணக்குகள் போலியானவை, இது கடந்த ஆண்டை விட இருமடங்கு அளவு அதிகரித்துள்ளது. அந்த வகையில் 210 கோடி வாடிக்கையாளர்களில் 13 சதவிகிதம் பேர் அதாவது சுமார் 27 கோடி வாடிக்கையாளர்கள் போலியானவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக் முதலீடுகள் சார்ந்த தகவல்களில் அந்நிறுவனம் போலி செய்திகளை தடுத்து நிறுத்தவும், கடுமையான நடவடிக்கைகள் மீது நடவடிக்கை எடுப்பது போன்றவற்றில் முதலிடூ செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது. இதன் மூலம் பேஸ்புக் வருவாயை எதிர்காலத்தில் அதிகரிக்க முடியும் என பேஸ்புக் தெரிவித்துள்ளது.

வங்கதேச வீரரின் மனைவியை வறுத்தெடுத்த ரசிகர்கள்!!

வங்கதேச அணியின் வேகப்பந்து வீச்சாளர் மனைவியை ரசிகர்கள் வறுத்தெடுத்தது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

வங்கதேச அணியின் வேகப்பந்து வீச்சாளரான Taskin Ahmed(22), தென் ஆப்பிரிக்கா அணியுடனான தொடர் முடிந்து நாடு திரும்பியவுடன், தனது நீண்டகால தோழியான Sayeda Rabeya Naima-வை கடந்த வெள்ளிக் கிழமை திருமணம் செய்து கொண்டார்.

இதையடுத்து அவர் திருமணத்தில் தனது மனைவியான Sayeda Rabeya Naima-வுடன் எடுத்த புகைப்படங்களை அவரின் அட்மின், Taskin Ahmed பேஸ் புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்தார்.

இதைக் கண்ட ரசிகர்கள் அனைவரும் இதயம் நொறுங்கிவிட்டது, இவருக்கு என்று அழகிய பெண் ரசிகைகள் பலர் உள்ளனர்.

ஆனால் இவர் என்னவோ இப்படிப்பட்ட பெண் ஒருவரை திருமணம் செய்துள்ளாரே என்று அவரது முகம் போன்றவைகளை குறிப்பிட்டு ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

சில இணையவாசிகள் Taskin Ahmed உங்களுக்கு தற்போது தான் 22 வயதாகிறது அதற்குள் ஏன் இந்த அவசர திருமணம்? இருப்பினும் வாழ்த்துக்கள். இதைவிட்டு விட்டு கிரிக்கெட்டை பாருங்கள் எனவும், உங்கள் வாழ்க்கையையை நீங்களே கெடுத்துக்கிட்டீங்களே என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

மகளையே ஆண்கள் திருமணம் செய்து கொள்ளலாம் : மத குருவின் சர்ச்சை பேச்சு!!

எகிப்தின் பிரபல மத குரு ஒருவர், ஆண்கள் ரத்தபந்தமல்லாத சொந்த மகள்களை திருமணம் செய்துகொள்ள இஸ்லாம் அனுமதிப்பதாக தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

எகிப்தின் பிரபல சலாஃபிஸ்ட் மதகுருவாக இருப்பவர் Al-Shafi’i, இவரே விவாதத்துக்குரிய கருத்தை வெளியிட்டுள்ளார்.

ரத்தபந்தமற்ற மகள்களுடன் பாலியல் உறவு வைத்துக் கொள்ளலாம் என்பது மட்டுமல்ல தேவை என்றால் திருமண பந்தத்திலும் ஏற்படலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

மத குருவின் இந்த கருத்தை மேற்கோள் காட்டி பேசிய பேராசிரியர் Mazen Al-Sersawi இன் காணொளி ஒன்று சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகியுள்ளது. மட்டுமின்றி குறித்த காணொளிக்கு பொதுமக்கள் மத்தில் கடும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.

கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான இந்த காணொளியானது தற்போது சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

திருமண பந்தத்தில் பிறக்காத மகள்கள் சொந்த மகள்கள் இல்லை என்பதால், ஆண்கள் அவர்களை திருமணம் செய்து கொள்வதில தவறில்லை என்றார். ஷாரியா சட்டத்தின்படி குறித்த பெண் அந்த ஆணுக்கு மகளாக முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த கருத்துகளுக்கு பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருவதுடன், மன நிலை பாதித்தவர்கள் தான் இதுபோன்ற கருத்துகளை வெளியிடுவார்கள் எனவும் பதிவிட்டு வருகின்றனர்.

இளைஞரின் வயிற்றில் இருந்த 17.93 லட்சம் மதிப்புள்ள தங்கக் கட்டிகள்!!

கோவை விமான நிலையத்தில் இளைஞர் ஒருவர் வயிற்றில் வைத்து தங்கம் கடத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

சார்ஜாவில் இருந்து ஏர்அரேபியா விமானத்தில், இளைஞர் ஒருவர் வந்துள்ளார். அவரது நடவடிக்கையில் சந்தேகமடைந்த, சுங்கத்துறை அதிகாரிகள் அவரிடம் சோதனை நடத்தினர்.

மருத்துவமனைக்கு சென்று அவருக்கு எக்ஸ்ரே செய்து பார்த்ததில், அவரது வயிற்றில் தங்கக் கட்டிகள் இருந்துள்ளது. இதையடுத்து, அவரது வயிற்றில் இருந்து 5 தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

பறிமுதல் செய்யப்பட்ட தங்கக் கட்டிக 583 கிராம் என்றும் அவற்றின் மதிப்பு 17.93 லட்சம் இந்திய ரூபாய்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அந்த நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் கேரளா மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த முகமது சாலிஹ் (29) என்பது தெரியவந்தது. வேலைவாய்ப்புத் தேடி அவர் துபாய் சென்றதாகவும், ஆனால், அவருக்கு அங்கு வேலை கிடைக்கவில்லை என்றும் தெரியவந்துள்ளது.

இந்த ஆண்டு கோவை விமான நிலையத்தில் 12 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் 3 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

யாழில் வெளிநாட்டு மோகத்தால் பணத்தை பறிகொடுத்த நபர் : ஒருவர் கைது!!

யாழ். வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் பண மோசடியில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டுக்கு அனுப்புவதாகக் கூறி பண மோசடி செய்த குற்றச்சாட்டில் குறித்த நபரை கைது செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மருதங்கேணி பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய நபர் பருத்தித்துறையில் வைத்து நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் மருதங்கேணியைச் சேர்ந்த ஒருவரிடம் வெளிநாட்டுக்கு அனுப்புவதாகக் கூறி 6 இலட்சம் ரூபாவை வாங்கியுள்ளார். எனினும் பணம் கொடுக்கப்பட்டு நீண்ட காலம் ஆகியும் குறித்த நபர் அவரை வெளிநாட்டுக்கு அனுப்பும் எந்தச் செயலிலும் ஈடுபடாமல் தலைமறைவானார் என பாதிக்கப்பட்ட நபர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பருத்தித்துறை பொலிஸார் குறித்த சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.

சித்தி, மைத்துனரால் கொடுமைப்படுத்தப்பட்ட சிறுமி: வைத்தியசாலையில் அனுமதி!!

 
பொகவந்தலாவ, போனோகோட் தோட்டத்தில் 10 வயது சிறுமியை துன்புறுத்திய குற்றச்சாட்டின் பேரில் குறித்த சிறுமியின் சித்தியும், மைத்துனரும் பொகவந்தலாவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், பாதிக்கப்பட்ட தர்மராஜ் சர்மிலா என்ற 10 வயதுடைய குறித்த சிறுமியையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

குறித்த சிறுமியின் தாயார் வெளிநாட்டில் பணிபுரிந்துவரும் நிலையில், அவரது தந்தையும் கொழும்பில் பணி புரிந்து வருகின்றார்.

இந்த சிறுமி கடந்த ஒன்பது வருடங்களாக தனது பாட்டியின் அரவணைப்பில் வாழ்ந்து வந்த நிலையில் கடந்த வருடம் குறித்த சிறுமியை அவரது சித்தியின் பொறுப்பில் விட்டுவிட்டு பாட்டி கொழும்புக்கு வேலைக்குச் சென்றுள்ளார்.

இந்நிலையில், குறித்த சிறுமியின் கல்வி நடவடிக்கைகளிற்காகவும், சிறுமியின் உணவு போன்ற செலவுகளுக்கும் மாதாந்தம் அவரின் தாயார் வெளிநாட்டில் இருந்து பணம் அனுப்புவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் குறித்த சிறுமியின் சித்தி சிறுமியை வீட்டு வேலைகளைச் செய்ய துன்புறுத்தியும், தடியினால் தாக்கியும் கொடுமை செய்துள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளிலிருந்து தெரியவருகின்றது.

இது தொடர்பில் குறித்த தோட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதன் காரணமாக குறித்த சிறுமியின் சித்தியும், மைத்துனரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு மீட்கப்பட்டுள்ள சிறுமியின் உடலில் காயங்கள் காணப்படுவதாகவும், சட்ட வைத்திய அதிகாரியின் மருத்துவ பரிசோதனைக்காக சிறுமியை டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்ட இருவரும், இன்றைய தினம் ஹட்டன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் சென்ற பெண்ணுக்கு ஏற்பட்ட நிலை : நால்வர் கைது!!

யாழ்ப்பாணம் நோக்கி பேருந்தில் பயணித்த பெண் ஒருவரிடம் இருந்து 15 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 27 தொடக்கம் 47 வயதுக்கு உட்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பணம் சம்பாதிக்கும் நோக்கில் குறித்த நபர்கள் நீண்ட காலமாக இவ்வாறு கொள்ளை நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இருக்கும் உறவினர் வீட்டுக்கு பேருந்தில் சென்ற பெண்ணின் கைப்பையை வெட்டியெடுத்துக்கொண்டு நகையுடன் கொள்ளையர்கள் தப்பிச்சென்றிருந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் செய்யப்பட்ட முறைப்பாடுக்கு அமைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வெளிநாட்டில் சினிமா பாணியில் இலங்கையர்களின் மோசடி : நாடுகடத்த உத்தரவு!!

வெளிநாடொன்றில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட ஆறு இலங்கையர்களுக்கு தலா 3 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

டுபாயில் பாரிய பணத்தொகையை கொள்ளையடித்த இலங்கையர்களுக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த மே 6 ஆம் திகதி தாம் பணியாற்றும் நிறுவனத்திற்கு சொந்தமான வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட பணப்பொதிகளில் இருந்து 1.198 மில்லியன் டினார் பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.

22 மற்றும் 29 வயதிற்குட்பட்ட இலங்கை காவலர்களே இவ்வாறு கொள்ளையடித்துள்ளனர். குறித்த ஆறு இலங்கையர்களும் ஒன்றாக திட்டமிட்டுள்ளதுடன், Al Muraqqabat பகுதியில் வாகனம் நிறுத்தப்பட்ட போது அவர்கள் பணத்தை திருடியுள்ளனர்.

திருடப்பட்ட சில தொகை பணத்தை வைத்திருந்த இரு இலங்கை சுத்திகரிப்பாளர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.  குறித்த இரண்டு சுத்திகரிப்பாளர்களும் தங்கள் அடையாள அட்டைகளை பயன்படுத்தி, இலங்கை கணக்கிற்கு 84,000 டினார்களை மாற்றியுள்ளனர்.

அந்த 6 காவலர்களும் பெரிய பண தொகையை திருடியது போது அவர்களில் ஒருவர் அந்த பணத்தை பாதுகாத்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பின்னர் அவர்கள் Al Rashidiyaவில் ஒரு குடியிருப்பு கட்டடத்தை பெற்றுக் கொண்டனர். அங்கு ஒவ்வொருவரும் 16,000 டினார் பணத்தை பெற்றுக் கொண்டனர். மீதமிருந்த ஏனைய செலவீனங்களுக்காக பயன்படுத்தி கொண்டுள்ளனர்.

பின்னர் பிரித்துக்கொண்ட பணத்தின் பெரும்பகுதி பணத்தை, பண பரிமாற்ற நிலையங்கள் மூலம் தங்கள் வீடுகளுக்கு அனுப்ப முடிவு செய்துள்ள நிலையில் பொலிஸாரிடம் சிக்கியுள்ளனர்.
இந்த நிலையில் இதுவரை டுபாய் குற்றவியல் நீதிமன்றத்தில் குறித்த 6 இலங்கையர்கள் தொடர்பில் இடம்பெற்ற வழக்கு விசாரணையில் குற்றச்சாட்டு உறுதியாகியுள்ளது.

அதற்கமைய அனைவருக்கும் தலா 3 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிறைத்தண்டனையின் பின்னர் குற்றவாளிகளை நாடு கடத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உலக கோடீஸ்வரர் ஒருவர் உட்பட 11 இளவரசர்கள் கைது: சவுதி பட்டத்து இளவரசர் உத்தரவு!!

உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான அல்வாலித் பின் தலால் உட்பட அரச குடும்பத்தைச் சேர்ந்த 11 இளவரசர்களை கைது செய்ய இளவரசர் முகம்மது பின் சல்மான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

உலக அரங்கில் சவுதி அரேபியாவின் மீது உள்ள பழமைவாத கருத்துக்களை மாற்றும் வகையில் சில முக்கிய நடவடிக்கைகளை இளவரசர் முகம்மது பின் சல்மான் எடுத்துவருகிறார்.

இந்நிலையில் இளவரசர் தலைமையில் ஊழல் தடுப்பு குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழு அமைக்கப்பட்டு சில மணி நேரங்களிலேயே உலக முன்னணி கோடீஸ்வரர்களில் ஒருவரான அல்வாலித் பின் தலால் உட்பட 11 இளவரசர்கள் கைது செய்யப்பட்டதாக சவுதி அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

அல்வாலித் கைது செய்யப்பட்டது அரசியல் அரங்கில் மட்டுமல்லாமல் பொருளாதார உலகிலும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது கைது செய்யப்பட்ட மற்ற இளவரசர்களில் பலர் முக்கிய அமைச்சர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மக்களின் தேவைக்கருதி 2800 மெற்றிக்தொன் எரிபொருளை சந்தைக்கு கொண்டு வருவதற்கு தீர்மானம்!!

மக்களின் தேவைக்கருதி 2800 மெற்றிக்தொன் எரிபொருளை சந்தைக்கு கொண்டு வருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக எரிபொருள் களஞ்சிய சாலை முனையம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் நாட்டில் நிலவிவரும் எரிபொருள் தட்டுப்பாடு நிவர்த்தி செய்யப்படும் என அதன் நிர்வாக இயக்குனர் சஞ்ஜீவ விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இதனிடேயே தரமற்ற எரிபொருளை திருகோணமலை ஐ.ஓ.சியில் இறக்குவதற்கு தயாராகும் செயற்பாடு ஒன்று நிலவுவதாகவும் அதற்கு அரசாங்கம் இடமளிக்காது எனவும் சுதந்திர சேவையாளர் சங்க பெற்றோலிய கிளையின் செயலாளர் ஜயந்த பரேயிகம குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து தடைகளையும் உடைத்தெறிந்த மெர்சல்!!

விஜய் நடிப்பில் வெளியாகி இருக்கும் மெர்சல் படம் விமர்சனங்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், அதன் தெலுங்கு பதிப்பிற்கு நீடித்த வந்த தடை தற்போது நீங்கியிருக்கிறது.

விஜய் நடித்து வெளியாகி இருக்கும் மெர்சல் படம் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. அரசியல் ரீதியான ஆதரவு மற்றும் எதிர்ப்பின் காரணமாக இந்திய அளவில் பேசப்பட்டது.

விமர்சனங்களுக்கு இடையே மெர்சல் படம் உலகம் முழுவதும் 200 கோடியை தாண்டி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இது ஒருபுறம் இருக்க மெர்சல் படத்தின் தெலுங்கு பதிப்பான அதிரிந்தி படத்திற்கு சென்சார் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் படம் தீபாவளிக்கு வெளியாகவில்லை.

மெர்சல் பிரச்சனையால் அதிரிந்தி படத்திற்கு சென்சார் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில், `அதிரிந்தி’ படத்திற்கு தணிக்கைகுழு `யு/ஏ’ சான்றிதழ் வழங்கி இருக்கிறது. இதனை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவம் சார்பில் ஹேமா ருக்மணி அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். படம் விரைவில் ரிலீசாக இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

அட்லி இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் விஜய் மூன்று கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். நித்யா மேனன், காஜல் அகர்வால், சமந்தா, எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, சத்யராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஐஸ்வர்யா ராயின் இளமைக்கு இதுதான் காரணமாம்!!

இருவர் படத்தின் மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் ஐஸ்வர்யா ராய். இதை தொடர்ந்து இந்திய சினிமாவின் நம்பர் வன் நடிகையாக ஒரு சில வருடங்களுக்கு முன் வலம் வந்தவர்.
பின் நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்துக்கொண்டு இல்லற வாழ்க்கையில் செட்டில் ஆக, அதை தொடர்ந்து மீண்டும் நடிக்க வந்துள்ளார்.

முன்பை விட கொஞ்சம் குண்டாக இருந்த ஐஸ்வர்யா ராய் சமீபத்தில் மிகவும் ஸ்லீம் ஆகியுள்ளார், இதை கண்ட அனைவருக்குமே ஆச்சரியம் தான்.

அந்த வகையில் இவர் எப்படி இவ்வாறு மாறினார் என்றால் கேரளாவில் இதற்காகவே ஸ்பெஷலாக செய்யும் ஸ்லீம்மிங் மற்றும் டோனிங் எண்ணெய் தான் இவர் பயன்படுத்தி வருகின்றாராம்.

டயகமவில் பஸ் குடைசாய்ந்து 28 பேர் படுகாயம்!!

 
டயகமவிலிருந்து போடைஸ் ஊடாக ஹட்டன் நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று குடைசாய்ந்ததில் 28 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

டயகம ஹட்டன் பிரதான வீதியில் போடைஸ் என்.சி தோட்டப் பகுதியில் குறித்த பஸ் தலைகீழாக குடைசாய்ந்துள்ளது.

டயகம பகுதியிலிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு அட்டன் பகுதிக்கு சென்ற குறித்த பஸ் இன்று (04) மாலை பாதையை விட்டு விலகி சுமார் 80 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

பஸ் சாரதி கட்டுப்பாட்டை இழந்ததன் காரணமாகவே இந்த விபத்து நேர்ந்ததாக தெரியவந்துள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்த 28 பேரில் 6 பேர் பேராதெனிய வைத்தியசாலைக்கு, மாற்றப்பட்டுள்ளதாகவும், ஏனையோர் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

மாற்றப்பட்டவர்களில் பெண் ஒருவர், நான்கு ஆண்கள், ஒரு குழந்தை என வைத்தியசாலை தரப்பினர் தெரிவித்தனர்.

அமெரிக்காவில் தேவாலயத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 26 பேர் பலி!!

 
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் அமைந்துள்ள பாப்டிஸ்ட் தேவாலயத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 26 உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள சதர்லேண்ட் ஸ்பிரிங்ஸ் பகுதியில் அமைந்துள்ள தேவாலயத்திலேயே நேற்று இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பம் இடம்பெற்றுள்ளது.

இனந்தெரியாத நபரொருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்காகி 26 பேர் உயிரிழந்துள்ளதோடு 24 இற்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவலறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளதோடு படுகாயம் அடைந்தவர்களை ஹெலிகொப்டரின் உதவியுடன் மீட்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

காயமடைநதவர்கள் அருகில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீரில் அடித்து செல்லப்பட்ட மேலுமொரு சிறுமியின் சடலம் மீட்பு!!

 
மாத்தளையில் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்து காணாமல்போயிருந்த மூன்று சிறுமிகளில் இருவரின் உடல்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று காலை காணாமல் போயிருந்த மூன்று சிறுமிகளில் ஒருவரின் சடலம், சம்பவ இடத்திலிருந்து 4 கிலோமீற்றர் தூரத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஏனைய இரு சிறுமிகளை மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையிலேயே இன்னுமொரு சிறுமியின் உடலும் மீட்கப்பட்டுள்ளது.

தற்பொழுது எஞ்சியுள்ள ஒரு சிறுமியை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு உயிரிழந்தவர்கள் மற்றும் காணாமற் போனவர்களின் பெயர்கள் கிங்சிலி ரத்நாயக்க (வயது 40) சந்திராகாந்தி (வயது 59), வினுக்கி ரத்நாயக்க (வயது 13), ஹிருனி ரத்நாயக்க (வயது 4), ரவிந்திர லசந்த (வயது 39), ருவனி டில்ருக்ஷி (வயது 38) ரிஷாதி வீகிஷா (வயது 12), சந்துனி (வயது 12).

வவுனியாவில் தலைகவசமின்றி மோட்டார் சயிக்கிளில் பாடசாலை சென்ற மாணவர்களுக்கு எதிராக நடவடிக்கை!

வவுனியாவில் இன்று காலை மோட்டார் சைக்கிளில் பாடசாலைக்குச் சென்ற மாணவர்கள் பலருக்கு எதிராக பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

குறித்த மாணவர்கள் தலைக்கவசம் அணியாது மோட்டார் சைக்கிளில் சென்ற காரணத்தினால், வவுனியா புகையிரத நிலைய வீதியில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் இவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வவுனியா பொலிஸ் நிலையத்தில் நேற்று போக்குவரத்து விதிமுறைகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்றை பொலிஸார் மேற்கொண்டிருந்தனர்.

இதில் வவுனியா வர்த்தகர் சங்கம், முச்சக்கரவண்டி சாரதிகள், சிவில் பிரமுகர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது வவுனியா நகர போக்குவரத்து நடைமுறைகள் தொடர்பாகவும், முச்சக்கரவண்டி சாரதிகள் வெளிமாவட்டத்திலிருந்து வரும் பயணிகளை அழைத்துச் செல்லும்போது சந்தேகத்திற்கிடமான முறையில் நடவடிக்கைகள் அமைந்திருந்தால் பொலிஸாருக்கு தகவல்களை வழங்குமாறும், பாடசாலைகளில் பொலிஸார் கடமைகளில் உள்ளதாகவும் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் பாடசாலைகளுக்கு மாணவர்களை மோட்டார் சைக்கிளில் அழைத்துச் செல்லும் பெற்றோர்கள் மாணவர்களுக்கு தலைக்கவசம் கட்டாயம் அணிந்து செல்லுமாறும், பாடசாலை மாணவர்கள் மோட்டார் சைக்கிளில் பாடசாலைக்கு செல்லும் போது அவர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிந்திருக்க வேண்டும். அவ்வாறு செல்லாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்தே இன்று காலை பாடசாலைக்கு மோட்டார் சைக்கிளில் தலைக்கவசம் அணிந்து செல்லாத மாணவர்களுக்கு எதிராக பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.