வவுனியா மாவட்ட கமக்காரர் அமைப்புக்களை வலுப்படுத்தலும், எதிர்காலத் திட்டங்களை இனங்காணலும் எனும் தலைப்பில் கமக்கார அமைப்பினருக்கான விசேட நிகழ்வு ஒன்று இன்று நடைபெற்றது.
வவுனியா கலாச்சார மண்டபத்தில் வவுனியா மாவட்ட கமக்காரர் ஒழுங்கமைப்பு அதிகார சபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் கமக்கார அமைப்புக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், எதிர்கால திட்டங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
மேலும் எதிர்கால திட்டங்கள் தொடர்பான முன்மொழிவுகளும் இந்நிகழ்வில் முன்வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் உதவி ஆணையாளர் இ.விஜயகுமார், விவசாய விரிவாக்கத்தின் உதவி ஆணையாளர் மற்றும் கமக்கார அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
வட்ஸ் அப்பில் அனுப்பிய குறுந்தகவலை திரும்பப் பெறும் வகையில் ‘Recall’ என்னும் சிறப்பம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தவறான அல்லது பிழையான குறுந்தகவலை வட்ஸ் அப் வாயிலாக நாம் அனுப்பிவிட்டால் அதனை அழித்தாலும் தகவலைப் பெறுபவருக்கு சென்று விடும்.
இதனை போக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள Recall என்ற option மூலமாக தகவலை அனுப்பிய ஏழு நிமிடங்களுக்குள் திரும்பப் பெறலாம் அல்லது அழிக்கலாம்.
பெறுநருக்கு நீங்கள் அனுப்பிய குறுந்தகவலின் நகல் போன்ற போலியான தகவல் மட்டுமே செல்லும். அவரின் chat history-யிலும் அது சேமிக்கப்படாது.
மேலும் குறுந்தகவல் வந்ததற்க்கான எந்தவொரு அறிவிப்பையும் அவர் பெறமாட்டார். இந்த வசதி ஜிமெயிலின் Undo போல செயல்படும். குறுந்தகவலைப் போலவே GIF, படங்கள், குரல் பதிவுகள், லொகேஷன், ஸ்டிக்கர்கள், தொடர்பு எண்கள் மற்றும் ஸ்டேட்டஸ் ரிப்ளை போன்ற அனைத்து வகையான தகவல்களையும் திரும்ப பெறலாம்.
எய்ட்ஸ் நோயை உருவாக்கும் எச்.ஐ.வி கிருமியை வேண்டுமென்றே 30 பெண்களிடம் பரப்பிய நபருக்கு நீதிமன்றம் 24 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்துள்ளது.
இத்தாலியை சேர்ந்தவர் வாலெண்டினோ டலுடோ (33), இவர் கடந்த 2006-ஆம் ஆண்டு மருத்துவ பரிசோதனை செய்துகொண்ட போது எச்.ஐ.வி தொற்று தனக்கு இருப்பதை அறிந்து கொண்டார்.
இதன் பின்னரும் 53 பெண்களுடன் பாதுகாப்பற்ற முறையில் டலுடோ உடலுறவு கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஹார்ட் ஸ்டைல் என்ற புனைப்பெயரை பயன்படுத்தி சமூக வலைத்தளங்கள் வாயிலாக பெண்களை டலுடோ தனது வலையில் வீழ்த்தியுள்ளார்.
இந்த குற்றச்செயலை செய்த டலுடோவை பொலிசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள்.
டலுடோவின் நடவடிக்கை உள்நோக்கம் கொண்டதல்ல என அவரின் வழக்கறிஞர் வாதாடினார், ஆனால் இதை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. உடலுறவின் போது, ஆணுறை அணிய டலுடோவிடம் வலியுறுத்தப்பட்டபோது தனக்கு ஒவ்வாமை அல்லது தான் எச் ஐ வி பரிசோதனை மேற்கொண்டுவிட்டதாக பெண்களிடம் அவர் கூறியது தெரியவந்துள்ளது.
டலுடோ மீதான குற்றம் நிரூபிக்கபட்டதையடுத்து அவருக்கு 24 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
டலுடோவால் நேரடியாக பாதிக்கப்பட்ட பெண்களை தவிர்த்து மேலும் நான்கு பேர் எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புதுடெல்லியில் தன் மனைவியை கொன்றுவிட்டு கூலிப்படை கொன்றதாக நாடகமாடியவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியின் பகர்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் பங்கஜ் மெஹ்ரா, இவரது மனைவி பிரியா மற்றும் இரண்டு வயது மகனுடன் கடந்த செவ்வாய் அன்று ஷாலிமர் பாக் என்னும் பகுதிக்கு சென்றுள்ளார்.
அன்றைய தினம் இரவு இவர்கள் வீடு திரும்பிய போது அடையாளம் தெரியாத நபர்களால் பிரியா சுடப்பட்டதாக் கூறி மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார் பங்கஜ்.
ஆனால் ஏற்கனவே பிரியா இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து விசாரித்த பொலிசாரிடம் தான் வாங்கிய கடனுக்காக கடன் கொடுத்தவர்கள் கூலிப்படை மூலமாக தன் மனைவியை கொன்றுவிட்டதாகவும், தானும் தன் மகனும் மட்டும் உயிர் தப்பித்ததாகவும் பங்கஜ் தெரிவித்திருந்தார்.
ஆனால் அதனை நம்ப மறுத்த பொலிசார், பங்கஜிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் முடிவில் காவல்துறை இணை ஆணையர் மிலிந்த் கூறுகையில், பங்கஜ் தான் பிரியாவை கொன்றுவிட்டு அந்த பழியை கடன் கொடுத்தவர்கள் மீது விழுமாறு நாடகமாடியுள்ளார். மேலும் அவருக்கு இன்னொரு மனைவியும் இருக்கிறார் என தெரிவித்துள்ளார்.
சென்னையில் கவின் கலைக்கல்லூரி மாணவன் பிரகாஷ் தற்கொலை செய்து கொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை எழும்பூரில் அமைந்துள்ளது அரசு கவின் கலைக்கல்லூரி, இங்கு பி.எப்.ஏ துறையில் இறுதி ஆண்டு பயின்று வந்த மாணவர் பிரகாஷ் தற்கொலை செய்து கொண்டார்.
தனது சாவுக்கு காரணம் துறைத்தலைவர் தான் என அவர் கடிதம் ஒன்று எழுதி வைத்து விட்டு, வேலூரில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இந்நிலையில் பிரகாஷ் பதிவு செய்த வீடியோ வெளியாகி உள்ளது. அதில், இன்னொரு மதத்தினை பின்பற்றுவது தவறு என துறைத்தலைவர் கூறியதாகவும், எந்த வேலையும் செய்ய விடாமல் மன உளைச்சல் கொடுத்ததால் தற்கொலை முடிவை எடுத்ததாகவும் கூறியுள்ளார்.
இதற்கிடையே நேற்று கல்லூரி மாணவர்கள் துறைத்தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தின் இராமநாதபுரம் கன்னிராஜபுரத்தைச் சேர்ந்த மெய்கண்டன், உச்சிபுளி அருகே குஞ்சாறுவளசை கிராமத்தை சேர்ந்த செல்வம் என்பவரின் ஹோட்டலில் பணியாற்றுவதற்காக கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் மலேசியா சென்றிருந்தார்.
மலேசியா சென்ற அவரை அவர்கள் அங்கு கொத்தடிமை போல் நடத்தியுள்ளனர். அதாவது தண்ணீர் மற்றும் உணவு எதுவும் கொடுக்காமலும், அதுமட்டுமின்றி தன்னுடைய ஊதியத்தை அவர் கேட்டதற்கு அவரை கடுமையாக தாக்கியும் உள்ளனர்.
இதனால் அந்த இளைஞர அவர்களிடமிருந்து தப்பித்து பூங்கா ஒன்றிற்கு சென்றுள்ளார். அங்கு சென்ற அவர் வீடியோ ஒன்றில் செல்வத்தை எதிர்த்து பேசியதால், அவர் கூலிப்படையினர் வைத்து கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.
அப்படி நான் கொல்லப்பட்டால் அதற்கு செல்வம் தான் முழு பொறுப்பு என வாக்குமூலம் கொடுத்திருந்தார். அந்த வீடியோ வைரலானதால், உயிர் பயத்தில் தவிக்கும் தனது கணவரை மீட்க வேண்டும் என்று அவரது மனைவி இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தார்.
இந்நிலையில் மலேசியாவில் ஓட்டல் தொழில் செய்துவரும் தமிழ் அமைப்பினர் உடனடியாக குறித்த இடத்திற்கு சென்று மெய்கண்டனை மீட்டனர்.
அதன் பின் இது குறித்து விசாரித்த போது மெய்கண்டன் கூறியது அனைத்துமே பொய் என்று தெரியவந்தது. மெய்கண்டன் கடந்த ஒரு மாதமாக ஹோட்டலுக்கு வேலைக்கு செல்லாமல் ஊதாரியாக சுற்றியுள்ளார்.
அவ்வப்போது செலவுக்கு பணத்தை பெற்றுக்கொண்டு வேலைக்கு வராததால் அவரை செல்வம் கண்டித்துள்ளார். இதையடுத்து மெய்கண்டன் செலவுக்கு 50 வெள்ளி தரும் படி தான் வேலை பார்க்கும் ஹோட்டலில் உள்ள கடை ஊழியரிடம் கேட்டுள்ளார்.
ஆனால் அவரோ தர மறுத்ததால், மலேசியாவிலே உன் கடை இல்லாமல் செய்கிறேன் பார் என்று கூறி இது போன்ற பொய்யான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
திறன்கள் அபிவிருத்தி மற்றும் வாழ்க்கைத் தொழிற்பயிற்சி அமைச்சின் தொழில்நுட்பக் கல்வி மற்றும் பயிற்சி திணக்களத்தின் கீழியங்கும் தொழில்நுட்பவியல் கல்லூரிகளில் பணியாற்ற வெளியக விரிவுரையாளர்களுக்கான மற்றும் போதனாசிரியர்களுக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
நாட்டிலுள்ள 39 தொழில்நுட்பவியல் கல்லூரிகளில் பகுதி நேரம் பணியாற்ற இவ்வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான விண்ணப்பங்களை அந்தந்த தொழில்நுட்பவியல் கல்லூரி பணிப்பாளர் அல்லது அதிபர்களிடம் பெற்று விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய இறுதித் திகதி 24.11.2017 ஆகும். தெரிவாகும் விரிவுரையாளர் ஒருவருக்கு மணித்தியாலயத்திற்கு 500 ருபா முதல் 1000 ருபா வரை கொடுப்பனவு வழங்கப்படும்.
இப்பதவி 2018ஆம் ஆண்டிற்கு மட்டும் உரியதாகும் என திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பி.என்.கே.மளலசேகர அறிவித்துள்ளார்.
இதற்கான மேலதிக விபரங்களை 27.10.2017 இன்றைய வர்த்தமானியில் பார்க்கலாம்.
சட்டவிரோதமான முறையில் வயிற்றில் மறைத்து வைத்து தங்கம் கடத்திச் சென்ற இலங்கையர்கள் இருவர் விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் வைத்து கைத்து செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பில் இருந்து ஸ்ரீலங்க விமான சேவைக்கு சொந்தமான UL-159 என்ற விமானத்தில் சென்ற ஷரீஃபீடன் மஹ்மத் மஹ்ரூப் என்ற நபர் கைது செய்யட்டிருந்தார்.
இவர் இரண்டு தங்க பிஸ்கட்டுகள் விழுங்கியிருப்தை ஒப்புக்கொண்டதையடுத்து கிங் ஜோர்ஜ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை மூலமாக தங்கம் வெளியேற்றப்பட்டிருந்தது.
இதேவேளை, ஹஜிரா உமா ஜீனூப் அபேடன் என்ற நபர் சட்டவிரோதமான முறையில் 88 கிராம் தங்க நகை கொண்டு சென்ற நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவரிடம் இருந்து நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், அதன் சந்தைப் பெறுமதி 241,807 (இந்திய ரூபாய்) ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவங்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் 43 வருடங்களின் பின்னர் இலத்திரனியல் அடையாள அட்டை நேற்று அறிமுகம் செய்யப்பட்டது.
நவீன தொழில்நுட்பத்திலான புதிய ஸ்மார்ட் தேசிய அடையாள அட்டையே இவ்வாறு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அதற்கமைய 12 இலக்கங்களை கொண்ட இந்த தேசிய அடையாள அட்டைக்கு சர்வதேச சிவில் விமான போக்குவரத்து அமைப்பின் தரத்திலான புகைப்படங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் Barcode முறைகள் இந்த அடையாள அட்டைக்கு பொருத்தப்பட்டுள்ளது. நபர்கள் தொடர்பான பயோமெற்றிக் உயிரியியல் விபரங்கள் அடையாள அட்டையில் சேர்க்கப்பட்டிருக்கும்.
பெயர், பிறப்பிடம், விலாசம், பால் ஆகிய தகவல்கள் மூன்று மொழிகளிலும் அச்சிடப்பட்டுள்ளது. அடையாள அட்டை உரிமையாளர்களின் கையொப்பம் உள்ளடக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த ஸ்மார்ட் அடையாள அட்டை சர்வதேசம் ஏற்றுக் கொண்ட அடையாள அட்டை தரத்தை கொண்டுள்ளது.
மேலும் அதன் ஊடாக மிகவும் இலகுவாகவும், வசதியாகவும் தங்களை சேவையை நிறைவேற்றி கொள்ள முடியும் என குறிப்பிடப்படுகின்றது.
தற்போது பயன்படுத்தும் அடையாள அட்டை நல்ல நிலையில் இருந்தால் புதிய அடையாள அட்டையை பெறும் அவசியம் இல்லை என ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.
உலகில் வளர்ச்சியடைந்த நாடுகளில் அதிக தேவையுடையதான விசேட பழம் ஒன்று நுவரெலியாவில் காய்த்துள்ளது. பெப்பினோ என்ற மருத்துவ பழம் ஒன்றே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளது.
நுவரெலியா, ஹாவாலெிய பிரதேசத்தை சேர்ந்த ஹெட்டிஆராச்சி மற்றும் ஜயந்த பெரேரா ஆகிய இரண்டு இளைஞர்களினால் இணையத்தளத்தின் ஊடாக மேற்கொண்ட சோதனையின் பின்னர் இந்த பழம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மிளகாய் இலைக்கு சமமான இலையின் செடியிலேயே இந்த பழம் காய்த்துள்ளது. ஒரே செடியில் 3 அல்லது 4 காய்கள் காய்ப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
சில சந்தர்ப்பங்களில் தோட்ட பகுதிகளில் உள்ள தமிழ் மக்கள் சமைப்பதற்கு கொண்டு செல்வதாக கூறப்படுகின்றது. இது தொடர்பில் ஆராய்ந்த போது, நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த மருந்தாக அந்த பழம் காணப்படுகின்றது.
இந்த பழத்தை வெட்டி உண்ணும் போது நீர் தன்மை மற்றும் புளிப்பு தன்மை ஒன்று காணப்படும். எனினும் பழம் பழுத்தவுடன் மஞ்சள் நிறத்தில் காணப்படுவதோடு, தேன் போன்ற சுவை காணப்படும்.
பல மருத்துவ நன்மை கொண்ட இந்த பழத்தில் பல நோய்களை குணப்படுத்த முடியும் என உலக சுகாதார அமைப்பினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
நீரழிவு நோய், இருந்த நோய், உயர் இரத்த அழுத்தம், சிறுநீரக நோய், பக்கவாதம் மற்றும் புற்றுநோய் போன்ற நோய்களுக்கு சிறந்த மருந்தாக இந்த பழம் காணப்பட்டுள்ளது.
பல்வேறு மருத்துவ தேவைக்கு பயன்படுத்தும் இந்த பழம் இலங்கையில் கிடைப்பது சாதாரண விடயமல்ல. இதனை பெற்றுக்கொள்ள பல நாடுகள் முயற்சித்து வருவதாக தெரிய வருகிறது.
மலையாளப் படங்களில் நடிப்பதால் ஒரு நடிகையை மலையாளி எனலாமா என சாய் பல்லவி கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ் பெண்ணான சாய் பல்லவி, பிரேமம் என்கிற மலையாளப் படம் மூலமாக உச்சகட்ட புகழை அடைந்தார்.
தாம்தூம் படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தாலும், அவரை உலகுக்குப் பெரிதாக அறிமுகப்படுத்தியது பிரேமம் படம் தான்.
இதன் பிறகு மலையாளப் படமொன்றிலும் தெலுங்கிலும் நடித்துவிட்டார். தமிழில் கரு, மாரி – 2 என இரு படங்களில் நடித்து வந்தாலும் எதுவும் இன்னும் வெளிவரவில்லை.
சமீபத்தில், சாய் பல்லவியை தெலுங்கு ஊடகங்கள் மலையாளி என்று குறிப்பிடுவதால் அவர் வருத்தமடைந்துள்ளார்.
”நான் கோயம்புத்தூரைச் சேர்ந்த தமிழ் பெண், எனவே என்னை மலையாளியாகக் கருத வேண்டாம்,” என தெலுங்கு பத்திரிகையாளர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இச்செய்தி மலையாள ஊடகங்களில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
அனைத்து பஸ்களையும் GPS தொழில்நுட்பத்தின் ஊடாகக் கண்காணிப்பதற்கு இலங்கை போக்குவரத்து சபை தீர்மானித்துள்ளது.
இதுவரையில் 2000 பஸ்களுக்கு தொழில்நுட்பக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் நடவடிக்கை பிரிவு அத்தியட்சகர் ஆர். பீ. சந்திரசிறி தெரிவித்தார்.
எதிர்வரும் ஜனவரி மாதத்திற்குள் அனைத்து பஸ்களுக்கும் GPS தொழில்நுட்பக் கருவிகளைப் பொருத்தவுள்ளதாகவும் அவர் கூறினார்.
பஸ் போக்குவரத்தை கண்காணித்தல், அதனை வினைத்திறனாக்குதல் உள்ளிட்ட முக்கிய செயற்பாடுகள் இதனூடாக முன்னெடுக்கப்படவுள்ளதாக ஆர்.பி.சந்திரசிறி குறிப்பிடார்.
இதன் மூலம் பயணிகளுக்கு தரமான போக்குவரத்து சேவையை வழங்குவதே நோக்கம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, பிற்கொடுப்பனவு அட்டையை பயன்படுத்துதல் தொடர்பிலும் தற்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை குறிப்பிட்டுள்ளது.
சிறுவன் ஒருவனின் விளையாட்டுப் புத்தி அவனுக்கே வினையான சம்பவம் சைப்ரஸில் இடம்பெற்றுள்ளது.
பதினொரு வயது நிறைந்த இச்சிறுவன், காந்தப் பந்துகள் இரண்டை மூக்கின் துளைகளில் வைத்துப் பரிசோதித்திருக்கிறான். அவை இரண்டும் பக்கவாட்டில் ஈர்க்கும் என்று அச்சிறுவன் எதிர்பார்த்திருந்தான்.
ஆனால், அவன் சற்றும் எதிர்பாராமல், ஈர்ப்பு சக்தி ஒரு துளை வழியாக மற்றொரு காந்தத்தை ஈர்த்ததால், இரண்டு காந்தப் பந்துகளும் மூக்கின் உட்பகுதியில் சென்று ஒட்டிக்கொண்டன.
இதனால் அவனது மூக்கின் நடுத்தண்டு பாதிக்கப்பட்டதுடன் இரத்தமும் வடியத் தொடங்கியது.
உடனடியாக அச்சிறுவன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டான். அங்கே, மருத்துவர் பெரிய காந்தங்கள் இரண்டை ஒரே நேரத்தில் மூக்கின் இரு துளைகளிலும் காட்டவே, இரண்டு காந்தப் பந்துகளும் உடனடியாக வெளியேறின.
இப்போது அச்சிறுவனின் மூக்கு முற்றிலுமாக குணப்படுத்தப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் அட்லியின் இயக்கத்தில் வெளியான மெர்சல் திரைப்படம் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டுள்ளது.
200 கோடி வசூலை நெருங்கியுள்ள மெர்சல் படம் பல எதிர்பார்ப்புகளின் மத்தியில் தீபாவளியன்று தினத்தன்று வெளியாகியது.
இந்தத் திரைப்படத்தில் இந்திய அரசாங்கத்தின் செயற்றிட்டங்களை விமர்சிக்கும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மெர்சல் படத்தில் இலங்கை பெண் ஒருவரின் பங்களிப்பு காணப்பட்டது. சிறிய கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்த போதிலும், அது பலராலும் பெரிதாக பேசப்பட்டு வருகிறது.
மட்டக்களப்பை சேர்ந்த ஷனா மகேந்திரன் என்பவர் விமான நிலைய காவல் அதிகாரியாக நடித்திருந்தார். லண்டனில் தற்போது வசித்து வரும் ஷனா மகேந்திரன் சொந்தமாக மீடியா நிறுவனம் ஒன்றை நடத்தி வருவதுடன் தொலைக்காட்சி தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார்.
மெர்சல் படத்தின் ஆரம்பத்திலேயே விஜய் பிரான்ஸ் நாட்டில் வந்து இறங்கியவுடன், அவரை பிரான்ஸ் பொலிஸார் சந்தேகத்துடன் பார்ப்பார்கள். உடனே அவரின் ஆடையை களைத்து பரிசோதனை செய்வார்கள். பிறகு விஜய் வைத்தியர் என்பதை தெரிந்துக்கொண்டு விட்டுவிடுவார்கள்.<
அப்போது ஒரு இலங்கை பெண் ‘அண்ணா மன்னித்து விடுங்கள்…அவர்களுக்காக நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கின்றேன், உங்கள் உடையை பார்த்து அவர்கள் அப்படி நினைத்திருப்பார்கள்’ என்று ஆறுதல் கூறுவார்.
உடனே விஜய் ‘பரவாயில்லம்மா, கமல் சார், கலாம் சாருக்கே இதெல்லாம் நடக்கும் போது நாமெல்லாம் யார்?’ என்று கூறுவார். இந்த காட்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.
மெர்சல் படத்தில் இவர் ஒரு காட்சியில் வந்து சென்றாலும், அந்த காட்சி வசனங்கள் மிகவும் வலுவாக இருந்ததால் எல்லோர் மத்தியிலும் மிகவும் பிரபலமடைந்து வருகின்றது.
இதேவேளை இலங்கையில் தயாரித்த மண் என்ற திரைப்படத்தில் ஷனா மகேந்திரன் கதாநாயகியாக அறிமுகமாகி நடித்திருந்தார். இந்தப்படம் 2004ம் ஆண்டு வெளியாகி இருந்தது.
மண் திரைப்படம் இலங்கையில் தயாரிக்கப்பட்ட போதிலும், பிரபலமான இந்திய தொழில்நுட்ப கலைஞர்கள் அதில் பணியாற்றி இருந்தனர்.
மண் திரைப்படத்தின் நடித்த ஷனா சிறந்த கதாநாயகியாக தெரிவு செய்யப்பட்டார். தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான இயக்குநர்களில் பாலு மகேந்திராவும் ஒருவர் ஆவார். அவரும் மட்டக்களப்பை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சவூதி அரேபியாவிற்கு பணி பெண்ணாக சென்று, சித்திரவதைகளை அனுபவித்த இலங்கை பெண் ஒருவர் 17 வருடங்களிற்கு பின் நாடு திரும்பியுள்ளார்.
குறித்த பெண் இலங்கை வெளிவிவகாரச் செயலகத்தின் மத்தியஸ்தத்தின் ஊடாக இன்று இலங்கைக்கு வந்துள்ளார்.
கடந்த 2000ஆம் ஆண்டு செப்டம்பர் 23ஆம் திகதி கே.ஜி.குசுமவாத்தி என்ற இலங்கை பெண் சவூதி அரேபியாவில் உள்ள வீடொன்றிற்கு பணி பெண்ணாக சென்றுள்ளார்.
கடந்த 15 ஆண்டுகளாக ஆடு மற்றும் குட்டிகளை பார்த்து கொள்ளும் பணியில் ஈடுபட்ட அவர் தொடர்பில் கடந்த ஒன்றரை வருடங்களாக குடும்பத்திற்கு தகவல் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில், வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலாத்த அத்துகோரல ஆகியோரின் முயற்சியால் இவர் இலங்கைக்கு வந்தடைந்துள்ளார்.
இதேவேளை, நீண்ட காலத்திற்கு பின்னர் இவர் நாடுதிரும்பியமையால் இவரின் குடும்பத்தினர் மிக்க மகிழ்ச்சியடைந்துள்ளனர்.