வவுனியாவில் பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!!

 
வவுனியா தரணிக்குளத்தில் பல்வகைப் பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்கும் பெற்றோரில் ஒருவரை இழந்த குடும்பங்களில் உள்ள பிள்ளைகளைத்தெரிவு செய்து அவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (14.10.2017) வவுனியா வெளிச்சம் அறக்கட்டளை நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டது.

அதன் தலைவர் பா.லம்போதரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் செ.ஸ்ரீநிவாசன் வெளிச்சம் நிறுவனத்தின் செயலாளர் தி.கார்த்திக் கிராம அபிவிருத்திச்சங்கத் தலைவர் ராகுல் , வடமாகாண சபை உறுப்பினரின் இணைப்பாளர் பா.சிந்துஜன், தமிழ் தேசிய இளைஞர் கழக உறுப்பினர் வ.பிரதீபன் மற்றும் சங்க உறுப்பினர்கள் பெற்றோர் பிள்ளைகள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர் .

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் விடுத்த கோரிக்கைக்கு அமைய இவ்வுதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.

வவுனியாவில் ‘இந்துத் தமிழர்களே, இந்துத் தமிழ் வர்த்தகர்களே உசாராகுங்கள்’ என சுவரொட்டிகள்!!

 
தீபாவளியை நமது இந்துத் தமிழ்க் கடைகளில் பொருட்களை வாங்கிக் கொண்டாடுங்கள் பிறமதக்கடைகளில் பண்டிகைப் பொருட்கள் வாங்குவதைத் தவிருங்கள், இந்துத் தமிழ் வர்த்தகர்களே உசாராகுங்கள் என சிவசேனா அமைப்பின் பெயருடன் வவுனியாவில் பல்வேறு பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

இச் சுவரொட்டிகள் இன்று (15.10.2017) அதிகாலை வேளையில் ஒட்டப்பட்டுள்ளன. வவுனியா நகரம், புகையிரத நிலைய வீதி , சுற்றுவட்ட வீதி, பஜார் வீதி போன்ற பகுதிகளில் இச் சுவரொட்டிகளை காணக்கூடியதாக உள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

வவுனியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் வைத்தியசாலையில்!!

 
வவுனியா ஈரட்டைபெரியகுளத்தில் இன்று (15.10.2017) அதிகாலை 3.30 மணியளவில் வீதியினை விட்டு விலகி பாலத்தினுள் வீழ்த்து பட்டா ரக வாகனம் விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

கொழும்பிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த பட்டா ரக வாகனம் இன்று அதிகாலை 3.30 மணியளவில் ஈரட்டைபெரியகுளம் பகுதியில் வீதியினை விட்டு விலகி மதகுடன் மோதி விபத்துக்குள்ளானது. இவ் விபத்தில் வாகனத்தில் பயணித்த சாரதி உட்பட இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சாரதியின் துக்கமின்மை காரணமாகவே இவ் விபத்து இடம்பெற்றதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாவும் ஈரட்டைபெரியகுளம் பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா நெடுங்கேணியில் பாடசாலை மாணவியை வீடு புகுந்து கடத்த முயற்சி முறியடிப்பு!!

வவுனியா நெடுங்கேணி கீரிசுட்டான் கிராமத்தில் பத்து வயது சிறுமியை கடந்த வியாழக்கிழமை (12.10.2017) கடத்தி செல்ல முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நெடுங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒலுமடு வித்தியாலயத்தில் கல்வி கற்று வரும் பத்து வயது சிறுமியை நள்ளிரவு வீட்டுக்குள் நுழைந்து மர்ம நபரொருவர் கடத்திச் செல்ல முயற்சித்தவேளை சிறுமியின் சத்தம் கேட்ட தந்தை எழும்பிய போது குறித்த நபர் சிறுமியை கிழே போட்டு விட்டு தம்பிச் சென்றுள்ளார்.

இச் சம்பவம் குறித்து சிறுமியின் தந்தை நெடுங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொண்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் (13.10.2017) பொலிஸார் வீட்டிற்கு சென்று சந்தேக நபர் தொடர்பான தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இதன் போது சந்தேகநபரின் என சந்தேகப்படும் செருப்பினை பொலிஸார் கைப்பற்றி விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த சிறுமி கடந்த சில மாதங்களுக்கு முன் 60 வயது நபர் ஒருவரினால் பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்ட நிலையில் அவருக்கு வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் பிணை மறுக்கப்பட்டு வருவதுடன் குறித்த குறித்த நபர் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறித்த சிறுமியின் பெற்றோர் தெரியவிக்கின்றனர்.

64 லட்ச ரூபாய் மதிப்புள்ள காரை குளத்திற்குள் நிறுத்திய மொடல் அழகி : பொங்கிய காதலன்!!

 
ரஷ்யாவை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் தனது காதலி 64 லட்சம் ரூபாய் மதிப்புள்ள காரினை குளத்திற்குள் நிறுத்தியதால் தனது காதல் உறவை முறித்துக்கொண்டார்.

Kristina Kuchma(24) என்ற மொடல்அழகி, தொழிலதிபரான jilted என்பவரை காதலித்து வந்துள்ளார்.ஒரு முறை இவர்கள் இருவரும் வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பியபோது, jilted வின் 64 லட்சம் மதிப்பிலான காரினை குளத்திற்குள்கொண்டு போய் நிறுத்தியுள்ளார்.

இதனைப்பார்த்து கோபம் அடைந்த jilted, தனது காதலியை பயங்கரமாக திட்டியுள்ளார், எனது வெற்றிக்கு நீ உறுதுணையாக இருப்பாய் என்று நினைத்தால், என்னை நஷ்டமடைய செய்யும் வேலைகளில் ஈடுபடுகிறார் என கூறியுள்ளார்.

இவர்கள் இருவரும் 4 மணிநேரம் போராடி காரினை வெளியில் எடுத்துள்ளனர். இதுகுறித்து jilted கூறியதாவது, கார் குளத்திற்குள் சென்ற போது அதற்குள் எனது காதலியும் இருக்கிறாள் என அச்சம் கொண்டேன், ஆனால் அவள் காருக்குள் இல்லை, வேண்டுமென்றே இவ்வாறு செய்துள்ளாள் என கூறியுள்ளார்.

வீதியில் உதயமான கடல்கன்னி : நடிகையின் வித்தியாசமான போராட்டம்!!

பெங்களூரு சாலையை சரிசெய்யக்கோரி நடிகை ஒருவர் கடல்கன்னி போன்று வேடமணிந்து வித்தியாசமான போராட்டத்தில் ஈடுபட்டார்.

கடந்த இரண்டு மாதங்களாக கனமழை பெய்து வருவதால் பெங்களூரு சாலைகள் கடுமையாக சேதமடைந்துள்ளன.
இதனால் தண்ணீர் தேங்கியுள்ளதுடன் விபத்துகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் பெங்களூரைச் சேர்ந்த ஓவியர் பாதல் நஞ்சுண்டசாமி சாலை பள்ளங்களை சரிசெய்யக்கோரி வித்தியாசமான போராட்டத்தை நடத்தினார்.

சாலையில் தேங்கியிருந்த நீரை நீல நிற பொடி தூவி கடல் போல் மாற்றினார், இதில் சோனு என்ற நடிகை கடல்கன்னி போல் வேடமணிந்து போராட தொடங்கினார்.

ஊடகங்களிலும், மக்கள் மத்தியிலும் இது வைரலாகவே கர்நாடக அரசின் கவனத்தை ஈர்த்தது. இதுகுறித்து பெங்களூரு மாநகர வளர்ச்சி துறை அமைச்சர் ஜார்ஜ், சாலைகளை சீரமைக்கும் பணி வேகமாக நடந்து வருவதாகவும், அரசியல் கட்சியின் உதவியால் பெங்களூருவின் பெயரை கெடுக்க சிலர் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

சவுதியில் உயிரிழந்த மகன் : அதிர்ச்சித் தகவலை கேட்ட பெற்றோருக்கு நேர்ந்த சோகம்!!

கேரளாவைச் சேர்ந்த இளைஞர் சவுதியில் 46 நாட்களுக்கு முன்னர் உயிரிழந்த நிலையில் அவரின் சடலம் இன்னும் இந்தியாவுக்கு கொண்டு வரப்படாத வருத்தத்தில் இளைஞரின் பெற்றோர் நோய் வாய்ப்பட்டுள்ளனர்.

கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள பம்பும்கயம் கிராமத்தை சேர்ந்த ஜோஸ் செபஸ்டின் மற்றும் மோலி தம்பதிகளின் மகன் டின்ஸ் ஜோஸ் எட்டனியெய்ல்.

கடந்த ஒன்றரை வருடத்துக்கு முன்னர் சவுதி அரேபியாவுக்கு சென்ற டின்ஸ் அங்கு கார் ஓட்டுனர் பணி செய்து வந்தார்.
இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி டின்ஸ் தங்கிருந்த அறையில் இருந்த ஏ.சி-யிருந்து வெளியேறிய நச்சு வாயு தாக்கியதில் அவர் உயிரிழந்தார்.

அவர் உயிரிழந்த தகவலை டின்ஸின் நண்பர் கேரளாவில் உள்ள குடும்பத்தாருக்கு தெரிவித்துள்ளார்.

டின்ஸ் உயிரிழந்து 46 நாட்கள் ஆகியும் அவரின் சடலம் சொந்த ஊருக்கு இன்னும் அனுப்பிவைக்கப்படவில்லை.

இதுகுறித்து அவரின் குடும்பத்தார் கூறுகையில், தடவியல் அறிக்கை வந்தால் தான் சடலத்தை அனுப்ப முடியும் எனவும், அது வர இன்னும் சில வாரங்கள் கூட ஆகலாம் எனவும் சவுதி அதிகாரிகள் தங்களிடம் கூறியதாக தெரிவித்துள்ளனர்.

சவுதியில் உள்ள மலையாள அமைப்புகளும் டின்ஸ் சடலத்தை இந்தியாவுக்கு கொண்டு வர அதரவு அளித்து வருகின்றன.

ஏழ்மையான டின்ஸ்-ன் குடும்பம் அவரின் வருமானத்தை மட்டுமே அதிகம் நம்பியிருந்த நிலையில் அவரின் மரணம் பெற்றோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த மன அழுத்தம் காரணமாக ஜோஸ் மற்றும் மோலி நோய்வாய்ப்பட்டு தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஆண்களை மட்டும் குறிவைத்து தாக்கும் பெண் பேய்!!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கிராமம் ஒன்றில் ஆண்களை மட்டுமே பெண் பேய் குறிவைத்து தாக்கி வருவதால் அந்த கிராம ஆண்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

தெலுங்கானா மாநிலம் நிர்மல் மாவட்டத்தில் உள்ள காசிகுடா என்ற கிராமத்தில் 60க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றது.

இந்த கிராமத்தை சமீப காலமாக பெண் பேய் ஒன்று அச்சுறுத்தி வருகிறது, மேலும் அந்த பெண் பேய், ஆண்களை மட்டுமே குறிவைத்து தாக்கிவருவதாக கூறப்படுகிறது.

இதனால், சிலர் அந்த கிராமத்தை விட்டு இடம்பெயர்ந்து சென்றுவிட்டனர், சிலர் மட்டும் அங்கு வசித்து வருகின்றனர்.

அவர்கள் இரவு பொழுது தொடங்கும் முன் வீட்டின் கதவை பூட்டிக்கொண்டு முடங்கி விடுகிறார்கள், மறுநாள் சூரியன் உதித்த பிறகு வெளியே நடமாடுகின்றனர். இதனால் அந்த கிராமமே வெறிச்சோடிய நிலையில் காணப்படுகிறது.

வைபர், வட்ஸ்அப் பயன்படுத்துவோருக்கு இலங்கை கணனி பிரிவு எச்சரிக்கை!!

இலங்கையில் இணைய தொடர்பாடல் செயலிகளான வைபர் – வட்ஸ்அப் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கையடக்க தொலைபேசியில் வைபர், வட்ஸ்அப் செயலிகளை பயன்படுத்தும் போது அவற்றிற்கான தரவு மற்றும் கடவுச்சொற்களை ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என இலங்கை கணனி அவசர பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

வேறு நபர்களின் தொலைபேசி இலக்கங்களை பயன்படுத்தி போலியான தொலைபேசி செயலிகள் இயக்கப்படுகின்றமை தொடர்பில் இதுவரையில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

அதற்கமைய இவற்றினை பயன்படுத்தும் போது மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும் என கணனி அவசர பிரிவின் தகவல் பொறியியலாளர் ரொஷான் சந்திரகுப்தா தெரிவித்துள்ளார்.

இந்த போலி கணக்குகளை பயன்படுத்தி பல்வேறு குற்றங்களை மேற்கொள்ள முடியும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் குறித்த தகவல்களை வேறு எந்த ஒரு நபரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என ரொஷான் சந்திரகுப்தா குறிப்பிட்டுள்ளார்.

ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்ற இளம் தாய்!!

ஹொரனை வைத்தியசாலை வரலாற்றில் முதல் முறையாக ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்துள்ளது.

ஹொரனை ஆரம்ப வைத்தியசாலையில் கடந்த 11ஆம் திகதி இரவு இந்த குழந்தைகள் பிறந்துள்ளது. அகலவத்தை, கெலிகந்த பிரதேசத்தை சேர்ந்த 19 வயதுடைய விஷ்மி மேகலா என்ற பெண்ணுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் மற்றும் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது.

தான் இந்த குழந்தைகள் குறித்து மகிழ்ச்சியடைகின்ற போதிலும் எதிர்காலம் குறித்து அச்சம் கொண்டுள்ளதாக தாயார் தெரிவித்துள்ளார்.

குழந்தைகளின் தந்தைக்கு நிரந்தர தொழில் ஒன்று இல்லாமையே அதற்கு காரணமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹொரனை வைத்தியசாலை வரலாற்றில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும் என வைத்தியர்கள் தெரிவித்துளளனர்.

2.150, 1.900, 1.685 ஆகிய நிறைகளில் பிறந்த குழந்தைகள் தற்போது ஆரோக்கியமாக உள்ளதென வைத்தியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மலையகத்தில் சில பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன!!

 
மலையகத்தில் இன்று காலை முதல் நிலவி வரும் கடும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.

குறிப்பாக, நுவரெலியா மாவட்டத்தில் வேகமான காற்றுடனான மழை பெய்வதுடன், நுவரெலியா, ஹட்டன் மற்றும் கொழும்பு வீதிகளில் பனிமூட்டம் நிறைந்து காணப்படுகிறது.

இதனால் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஹட்டன், தலவாக்கலை மற்றும் நுவரெலியா உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வோர் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

அத்துடன் இவ்வாறு வரும்போது சாரதிகளை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

இதேவேளை ஹட்டன் பொலிஸ் நிலைய விளையாட்டு மைதானம், ஹட்டன் புகையிரத நிலைய வளாகம் உட்பட பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

வாகனங்களில் முன் விளக்குகளை ஒளிரவிட்டு வாகனத்தை செலுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் 10 பாடசாலைகளில் இலங்கை மக்கள் அரங்க செயற்திட்டம் பூர்த்தி!!

 
இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர் மன்றத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் இலங்கை மக்கள் அரங்க செயற்திட்டமானது வடமாகாணத்தில் தெரிவுசெய்யப்பட்ட 40 பாடசாலைகளில் மன்னார், கிளிநொச்சி, வவுனியா, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் 10 பாடசாலைகளின் விகிதம் மன்னார், வவுனியா, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் இதுவரை 27 பாடசாலைகளில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் சுமார் 15650 மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் இத்திட்டம் சென்றடைந்துள்ளது.

இலங்கை மக்கள் அரங்கச் செயற்றிட்டமானது வேற்றுமைகளுக்கு முறையான மதிப்பளித்து இலங்கையர் என்னும் கூட்டான அடையாளமொன்றை அமைத்துருவாக்குவதில் ஆக்கத்திறன் விமர்சன ரீதியில் சிந்திக்கும் ஆற்றல் புத்தாக்க யோசனைகள் மற்றும் சுதந்திரமான கருத்து வெளிப்பாடு என்பவற்றைத் தம்மகத்தே கொண்டுள்ளது.

இலங்கை மக்கள் அரங்கச் செயற்றிட்டத்தின் நான்காம் கட்டமானது இலங்கை அபிவிருத்தி ஊடகவியலாளர் மன்றத்தினால் அமுல்படுத்தப்பட்டது.

வயது வந்தோர் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் (16-19 வயதுடையோர்) ஆகியோருக்கு மத்தியில் அகிம்சைக் கலாசாரத்தினையும் சகிப்புத்தன்மை வேற்றுமைகளை ஏற்றுக்கொள்ளல் வேறுபாடுகளுக்கு மதிப்பளித்தல் சமத்துவம், நீதி, சமூகப் பிரச்சினைகளைக் கையாளுதல் வன்முறையற்ற விதத்தில் பிரச்சினைகளைத் தீர்த்துவைத்தல் போன்ற பன்மைத்துவ விழுமியங்களையும் ஊக்குவிப்பதை இது குறிக்கோளாகக் கொண்டிருந்தது.

இளம் அரங்கக் கலைஞர்கள் பன்மைத்துவ விழுமியங்களை அகவயப்படுத்தி ஊக்குவிப்பதற்கும் சிறுவர்களும் இளைஞர்களும் முரண்பாடுகளை அகிம்சை முறையில் தீர்த்துக்கொள்ளும் பொருட்டு தமது சுதந்திரமான பேச்சு, விமர்சன ரீதியிலான சிந்தனை மற்றும் புத்தாக்கத் திறன்களை வடிவமைத்துக்கொள்வதற்கும் உதவுவதே இச்செயற்றிட்டத்தின் நோக்கமாகும்.

வடமாகாணத்தில் கிளிநொச்சி வவுனியா மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய நான்கு மாவட்டங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 40 பாடசாலைகளில் மக்கள் அரங்கச் செயற்பாடுகளை செயலாற்றுகை செய்வதற்கென சுமார் 48 இளம் மக்கள் அரங்கக் கலைஞர்களைப் (ஆண்கள்: 32 பெண்கள் 16) பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை அபிவிருத்தி ஊடகவியலாளர் மன்றமானது இச்செயற்றிட்டத்தை அமுல்படுத்தும் பொருட்டு வட மாகாண கல்வி அமைச்சு, மாகாண கல்வித் திணைக்களம் (வடக்கு) மற்றும் அரங்கக் கலைகள் பல்கலைக்கழகம், யாழ்ப்பாண பல்கலைக்கழகம் மற்றும் தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சு ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி வருகின்றது.

இதன் அடிப்படையில் மக்கள் அரங்க செயற்திட்டத்திட்டத்திற்கான உத்தியோகபூர்வ கையேடு ஒன்று வெளியிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

வவுனியா பிரதேச கலைஞர்களின் விபரங்கள் கோரல்!!

வவுனியா பிரதேசத்தில் வசிக்கும் கலைஞர்களின் விபரக்கைநூல் தயாரிக்கும் பணிகளில் வவுனியா பிரதேச செயலகம் ஈடுபட்டுள்ளது.

இதற்கு அமைவாக வவுனியாவில் வசிக்கும் கலைஞர்கள் தங்களின் விபரங்கள், சான்றிதழ்களை எதிர்வரும் 25ஆம் திகதிக்கு முன்பாக வவுனியா பிரதேச கலாச்சார உத்தியோகத்தரிடம் கையளிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

பிரதேச கலாச்சார வளர்ச்சிக்குப் பங்காற்றியோருக்கு முன்னுரிமை அடிப்படையில் இக்கைநூல் தயாரிக்கப்படவுள்ளதாக வவுனியா பிரதேச கலாச்சார பேரவையினர் தெரிவித்துள்ளனர்.

மரித்துபோன மனிதநேயம் : வீதியில் உயிருக்குப் போராடிய நபர் : கண்டுகொள்ளாத மக்கள்!!

வீதியில் மாரடைப்பால் நபர் ஒருவர் துடிதுடித்து உயிரிழந்த நிலையில் அங்கிருந்த மக்கள் யாருமே அவரை கண்டுகொள்ளாத செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியபிரதேச மாநிலத்தில் மக்கள் அதிகமாக நடமாடும் வீதியில் உள்ள சிசிடிவி கமெராவில் பதிவான வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

அதில் வீதி ஓரத்தில் உள்ள நாற்காலியில் நபர் ஒருவர் உட்கார்ந்துள்ளார், அப்போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட அப்படியே தரையில் விழுகிறார்.

குறித்த நபரின் அருகில் பலர் உட்கார்ந்திருந்தாலும் ஒருவர் கூட உதவ முன்வரவில்லை. அந்தவழியே பலர் இருசக்கர வாகனத்தில் சென்ற போதிலும் ஒருவர் கூட வண்டியை நிறுத்தவில்லை.

உதவ தான் மனமில்லை என்றாலும், அம்புலன்ஸுக்கு கூட யாரும் தகவல் தரவில்லை. இதனிடையில் மாரடைப்பு ஏற்பட்ட நபர் வலியால் துடிதுடித்து பரிதாபமாக அங்கேயே உயிரிழந்தார்.

பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் அவரின் சடலத்தை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து அவதூறு பரப்பி வந்தால் தற்கொலை செய்து கொள்வேன் : பாலாஜியின் மனைவி நித்யா!!

என்னை பற்றி தவறான அவதூறுகளை நடிகர் தாடி பாலாஜி தொடர்ந்து பரப்பி வந்தால் எனது குழந்தையோடு தற்கொலை செய்துகொள்வேன் என அவரது மனைவி நித்யா தெரிவித்துள்ளார்.

நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜிக்கும், அவரது மனைவி நித்யாவுக்கும் தொடர்ந்து பிரச்சனை ஏற்பட்டு வந்த காரணத்தால் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

குடித்துவிட்டு வந்து தனது கணவர் தன்னை உடல்ரீதியாவும், மனரீதியாகவும் துன்புறுத்துகிறார் என்றும் இனிமேல் அவருடன் சேர்ந்து வாழமுடியாது என விவாகரத்து கோரினார் நித்யா.

இதற்கிடையில் தனது மனைவிக்கு வேறு நபர்களுடன் தவறான தொடர்பு இருப்பதால் தான் எங்கள் குடும்பத்தில் பிரச்சனை ஏற்படுகிறது என்ற குற்றச்சாட்டை பாலாஜி கூறினார்.

இதனை மறுத்த நித்யா, எனது கணவர் என்னையும் எனது மகளையும் தீவைத்து எரித்து கொலை செய்யப்பார்த்தார் என்பதற்கான ஆதாரத்தை வெளியிட்டார். மேலும் அவர் கூறியதாவது, என்னை பல்வேறு ஆண்களுடன் இணைத்து பேசினால், அதனை கேட்டு மனமுடைந்து அவருடன் சேர்ந்து வாழ்வேன் என்று பாலாஜி நினைக்கிறார்.

குடித்துவிட்டு கணவன் பிரச்சனை செய்வது என்பது எல்லோர் வீட்டிலும் நடக்கும் ஒன்றுதான், ஆனால் எனது கணவர் சைக்கோ போன்று நடந்துகொள்கிறார், இதனை எங்களால் தாங்கிகொள்ள முடியவில்லை.

அவரின் அரசியல் நண்பர்களை வைத்து கொலை மிரட்டல் விடுக்கிறார். தற்போது எனது மகளையும் என்னிடம் இருந்து பிரிக்க பார்க்கிறார். தினம் தினம் என்னை பற்றி சமூகவலைதளங்களில் அவதூறுகள் வந்துகொண்டே இருக்கின்றன.

நான் மிகவும் தைரியமான பெண் தான், ஆனால் என்னை பற்றி தவறாக பேசினால் அது எனது குழந்தையின் எதிர்காலத்தையும் பாதிக்கும், இவ்வாறு பாலாஜி தொடர்ந்து செய்துகொண்டிருந்தால் நானும் எனது குழந்தையும் தற்கொலை செய்துகொள்வோம் என தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் பிச்சையெடுக்க விரும்பும் ரஷ்ய இளைஞர்!!

இந்தியாவில் தொடர்ந்து பிச்சையெடுத்து அதன் மூலம் பயணம் செய்வேன் என ரஷ்ய இளைஞர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்கு சுற்றுலா வந்த ரஷ்யாவைச் சேர்ந்த இளைஞர் எவ்ஜினி பெர்டிகோவ் என்பவரின் எடிஎம் கார்டு லொக் ஆகிவிட்ட காரணத்தால் தமிழ்நாட்டில் உள்ள கோயிலில் பிச்சையெடுத்துள்ளார்.

இதனைப்பார்த்த காவல்துறையினர் அவரை மீட்டு ரஷ்ய தூதரகத்திற்கு அனுப்பி வைத்தனர், ஆனால் அவர் வரவில்லை என ரஷ்ய தூதரகம் தெரிவித்ததையடுத்து, அவரை தேடும் பணியில் சென்னை பொலிசார் ஈடுபட்டனர்.

இந்நிலையில், சென்னை திநகரில் பத்திரிகையாளர் ஒருவரிடம் பேசிய இவர், எனக்கு ரஷ்ய தூதரகத்தின் உதவி தேவையில்லை, என்னை பற்றிய செய்தி ஊடகங்களில் வெளியானதால் அனைவரும் என்னிடம் வந்து பேசுகின்றனர், அவர்களிடம் 100 ரூபாய் மட்டும் கேட்கிறேன்.

எனக்கு பிச்சை எடுப்பது பிடித்திருக்கிறது, தொடர்ந்து பிச்சையெடுப்பேன். தற்போது அடுத்ததாக பெங்களூர் செல்ல திட்டமிட்டிருக்கிறேன் என கூறியுள்ளார். இவரது விசாக்காலம் நவம்பர் 22 ஆம் திகதியுடன் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.