மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றில் இருந்து அழுகிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நேற்று மாலை குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
களுவாஞ்சிகுடி – எருவில் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில், கைவிடப்பட்ட காணியொன்றில் உள்ள கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது.
இது தொடர்பில் பிரதேச மக்கள் பொலிஸ் அவசர இலக்கத்திற்கு தகவல் வழங்கிய நிலையில், குறித்த பகுதிக்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.










2















