பிரபல சிங்கள நடிகர் தசுன் நிஷான் டி சில்வா தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். சிங்கள தொலைக்காட்சி நாடகங்களில் நடித்துள்ள தசுன், பல இசை காணொளிகளிலும் நடித்துள்ளார்.
பிரபல கலைஞரான தசுன் தனிப்பட்ட காரணத்திற்காக இன்று தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார் என தெரியவந்துள்ளது.
பல பாத்திரங்களில் நடித்துள்ள இவர் மக்கள் மத்தியில் ஆதரவு பெற்ற கலைஞராவார். பன்னிப்பிட்டிய பிரதேசத்தில் நடித்து வந்த தசுன் தான் தங்கியிருந்த அறையில் இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
வடமாகாண ஆரம்ப பிள்ளைப் பருவ அபிவிருத்திப்பிரிவு, கல்வி பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில் வவுனியா, மன்னார் மாவட்டங்களின் மழலைகள் விளையாட்டு விழா – 2016 இன்று (25.09.2017) மதியம் 2.30 மணியளவில் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றது.
பிரதம விருந்தினர் நிகழ்வை ஆரம்பித்து வைத்ததுடன் தடை தாண்டிப் பாய்தல், வட்டத்தில் நீர் நிறைத்தல், குளத்தில் மீன் பிடித்தல் , கோபுரம் அமைத்தல், வளைய அஞ்சல், பந்து பரிமாறல், கூடையில் பந்து போடுதல் என பல்வேறு விளையாட்டுக்கள் நடைபெற்றன.
கல்வி பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக வடமாகாண சுகாதார அமைச்சர் ஞா.குணசிலன், அதிதிகளாக வவுனியா வலயக்கல்விப்பணிப்பாளர் இராதகிருஸ்னன், வவுனியா வலய பிரதி கல்வி பணிப்பாளர்கள், உதவிக்கல்வி பணிப்பாளர்கள், முன்பள்ளி உதவி கல்விப் பணிப்பாளர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
1987 செப்டெம்பர் 15ஆம் திகதி ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதத்தை ஆரம்பித்த திலீபன் (பார்த்திபன் இராசையா) 1987ஆம் ஆண்டு செப்டெம்பர் 26ஆம் திகதி சனிக்கிழமை காலை 10.48 மணிக்கு லெப்டினன் கேணலாக, யாழ்.மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்து மரணம் எய்தினார்.
அவரின் நினைவு தினைத்தினை முன்னிட்டு வவுனியாவில் சுழற்சி முறையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவினர்கள் இன்று (25.09.2017) காலை 9.30 மணியளவில் வவுனியா கந்தசுவாமி ஆலயத்தில் பூஜை வழிபாடுகளை மேற்கொண்டு போராட்ட இடத்திற்கு சென்று ( 25.09.2017 / 26.09.2017) ஆகிய இரு நாட்கள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இன்றுடன் 214வது நாளாக வவுனியா வவுனியா, வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு முன்பாக தமது உறவுகளைத் தேடி வெயில் , மழையினை பொருட்படுத்தாது போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பொருளாதார சிக்கலால் வீதியில் காய்கறி விற்றுக் கொண்டிருக்கும் சிறுவனை பள்ளியில் சேர்க்க தான் விரும்புவதாக பிலிப்பைன்ஸ் நடிகை ஷரோன் குனெட்டா கூறியுள்ளார்.
பிலிப்பைன்ஸில் வறுமை அதிகளவில் தலைவிரித்து ஆடுவதால் அந்நாட்டு சிறுவர்கள் பலர் பள்ளிக்கூடத்துக்கு செல்ல முடியாமல் குழந்தை தொழிலாளியாக வேலைக்கு செல்கிறார்கள்.
இந்நிலையில் பார்க்கவே அனுதாபப்படும் வகையில் ஒரு சிறுவன் பிலிப்பைன்ஸ் சாலையில் காய்கறி விற்றுக் கொண்டிருக்கும் படம் ஒன்று இணையத்தில் வைரலானது.
இதை புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள அந்நாட்டின் பிரபல நடிகையும், பாடகியுமான ஷரோன் குனெட்டா, சிறுவன் விற்கும் அனைத்து காய்கறிகளையும் தான் வாங்கி கொள்ள விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
அதோடு, குறித்த சிறுவனை பள்ளிக்கூடத்துக்கு படிக்க அனுப்ப தான் நினைப்பதாகவும் பதிவிட்டுள்ளார்.
அமெரிக்க போர் விமானம் ஒன்றை வடகொரியாவின் ஏவுகணை தாக்கி அழிப்பது போன்ற புகைப்படம் ஒன்றை அந்நாடு வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p>குறித்த புகைப்படமானது வடகொரியாவின் ஏவுகணை தாக்குதலில் அமெரிக்க விமானம் சுக்கலாக வெடித்துச் சிதறுவது போன்று காட்டப்பட்டுள்ளது.
ஆனால் அது போலி எனவும், அதுபோன்ற ஒரு நிகழ்வு நடந்திருக்க வாய்ப்பு இல்லை எனவும் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
வடகொரிய வெளிவிவகார அமைச்சர் டிரம்ப் அரசை எச்சரித்த அடுத்த நாளே இதுபோன்ற ஒரு புகைப்படத்தை வடகொரியா வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக அமெரிக்காவின் படைபலத்தை வெளிக்காட்டும் வகையில், வட கொரியாவின் கிழக்கு கடற்கரையோரமாக அமெரிக்க போர் விமானங்கள் பறந்துள்ளன. எந்தவிதமான அச்சுறுத்தல்களையும் முறியடிக்க அமெரிக்க ஜனாதிபதி ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள தயங்கமாட்டார் என்பதை காட்டும் வகையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.
வடகொரியாவின் அணு ஆயுதத் திட்டம் தொடர்பாக, அமெரிக்காவும், வட கொரியாவும் சமீப காலமாக சொற்போரை நடத்தி வருகின்றன. இதனால் பதட்டம் அதிகரித்து வருகிறது.
அமெரிக்கா தன்னை தற்காத்து கொள்ளக்கூடிய கட்டாயம் ஏற்பட்டால், வட கொரியாவை முற்றிலும் அழித்துவிடும் என்று செவ்வாய்கிழமை ஐக்கிய நாடுகள் மாமன்றத்தில் பேசிய ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மட்டுமின்றி வடகொரியா மீதான அமெரிக்காவின் பொருளாதார தடைகளுக்கு கண்டனம் தெரிவித்து தலைநர் பியாங் யாங்கில் உள்ள கிம் டூ சங் சதுக்கத்தில் நேற்றைய தினம் லட்சக் கணக்கானோர் ஒன்று திரண்டு பேரணியாக சென்றனர். அப்போது, அமெரிக்காவிற்கு எதிரான முழக்கங்களை அவர்கள் எழுப்பினர்.
தமிழகத்தில் இறந்த முதியவரின் உடலை அடக்கம் செய்யும் வரை, காகம் ஒன்று கூடவே இருந்ததைக் கண்ட அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த முதியவர் மாரிமுத்து. இவர் சமீபத்தில் உயிரிழந்துள்ளார். இதனால் இவரின் உடலை அடக்கம் செய்த போது, காகம் ஒன்று அடக்கம் செய்யும் வரை உடன் இருந்துள்ளது.
இறந்த நம் உறவினர்கள் காகமாக மாறுவார்கள் என்று இந்து மத நம்பிக்கை கூறப்படுகிறது. இதன் படி பித்ருக்களுக்கு மரியாதை செய்யும் விதமாகவும், அவர்களின் ஆன்மா சாந்தியடைய வழிபாடுகள் நடத்தி காகத்திற்கு சாதம் வைப்பது வழக்கம்.
இப்படி இருக்க, உடல் நலக் குறைவால் இறந்த மாரிமுத்துவின் சடலத்திற்கு அருகே, அங்கு படையல் செய்து வைக்கப்பட்டிருந்த அரிசி மீது காகம் ஒன்று சுமார் 3 மணி நேரம் அங்கேயே அமைதியாக அமர்ந்திருந்தது.
தொடர்ந்து அதை விரட்டியும் அது பறக்காததால், அப்பகுதி மக்கள் வியப்புடன் பார்த்தனர். மேலும் மாரிமுத்துவின் மனைவி பொன்னுபாப்பு கடந்த ஆண்டு இதே நாளில் உயிரிழந்தார், அவர் தான் காகமாக வந்துள்ளார் என உறவினர்கள், பொதுமக்கள் தெரிவித்தனர்.
திருமணமான மூன்று மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில், அவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தாய் பொலிசில் புகார் அளித்துள்ளார்.
தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சின்னதுரை (53) இவரது மனைவி சுசீலா (48) இவர்களது 2வது மகள் இந்துமதி (20).
இவருக்கும் வேணுகோபால் (25) என்பவருக்கும் கடந்த யூன் மாதம் 28-ம் திகதி திருமணம் நடந்தது. திருமணத்தின் போது வரதட்சணையாக 10 பவுன் நகை மற்றும் ஒரு பைக் வாங்கி தருவதாக பெண் வீட்டார் தெரிவித்த நிலையில் நகையை மட்டும் போட்டு, பைக் பிறகு வாங்கி தருவதாக கூறியுள்ளனர்.
திருமணம் முடிந்து சில நாட்களிலேயே, மனைவியை வேணுகோபால் பைக் வாங்கி வரும்படி தகராறு செய்து அடித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று காலை இந்துமதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து தனது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக இந்துமதியின் தாய் சுசீலா பொலிசில் புகார் அளித்துள்ளார்.
இந்துமதி வரதட்சணை கொடுமையால் இறந்து போனாரா? என பொலிசார் விசாரித்து வருகிறார்கள்.
65 வயது ஷேக்கை திருமணம் செய்து கொண்ட 16 வயது சிறுமி தனது வீட்டுக்கு செல்ல மறுப்பு தெரிவித்துள்ளார் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஐதராபாத் அருகே உள்ள நவாப் சாஹெப் குண்டாவை சேர்ந்த சையதா உன்னிசா என்பவரது 16 வயது மகளை ஓமனை சேர்ந்த ஷேக் அஹமது(60) என்பவர் விலைக்கு வாங்கி திருமணம் செய்துகொண்டதாக சிறுமியின் தாயார் பொலிசில் புகார் அளித்தார்.
கடந்த ரம்ஜானிற்கு முன்பு ஐதராபாத் வந்த ஷேக், எனது மகளை திருமணம் செய்துகொள்ள கேட்டார், அதற்கு எனது மகள் மறுத்துவிட்டார். பின்பு, ஓமனில் சொகுசாக வாழலாம் என்று கூறி சில வீடியோக்களை சிக்கந்தர் எனது மகளிடம் காட்டி அவளை ஏமாற்றி திருமணம் செய்துகொண்டார், எனது மகளை மீட்டுத்தரவேண்டும் என பொலிசில் புகார் அளித்திருந்தார்.
இதுகுறித்து ஓமன் காவல்துறையின் உதவியோடு ஷேக் மற்றும் சிறுமியிடம் பொலிசார் விசாரணை நடத்தியுள்ளனர். இதில், அந்த சிறுமி பொலிசில் அளித்துள்ள வாக்குமூலத்தில், நான் இங்கு சந்தோஷமாக இருக்கிறேன், எனது பெற்றோர் பணம் சம்பாதிப்பதற்காக இவ்வாறு செய்கின்றனர் என கூறியதோடு மட்டுமல்லாமல் எனது வீட்டிற்கு செல்வதற்கு விருப்பமில்லை என தெரிவித்துள்ளார்.
இருப்பினும், ஷேக்கிடம் இருந்து சிறுமியை மீட்பதில் நாங்கள் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறோம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சிறிய வீட்டில் சொற்ப வருமானத்தில் குடும்பம் நடத்தி வந்த நபருக்கு லொட்டரி மூலம் பத்து கோடி பரிசு விழுந்திருப்பதில் அவர் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளார்.
கேரளாவை சேர்ந்தவர் முஸ்தபா (46), தேங்காய் விற்பனை நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். முஸ்தபா தனது மனைவி, இரண்டு மகன்கள் மற்றும் வயதான தாயுடன் சிறிய வீட்டில் வசித்து வருகிறார். இவரின் இரண்டு மகள்களுக்கும் ஏற்கனவே திருமணமாகி விட்டது, லொட்டரி சீட்டு வாங்கும் பழக்கம் கொண்ட முஸ்தபா பம்பர் குலுக்கல் சீட்டு ஒன்றை வாங்கியுள்ளார்.
இதில் அவருக்கு 10 கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளது, வரி மற்றும் முகவர் கமிஷன் போக முஸ்தபாவுக்கு ரூ.6.3 கோடி பரிசு தொகை கிடைக்கும்.
தனக்கு பரிசு விழுந்த செய்தியை கேட்டதும் முஸ்தபா மகிழ்ச்சியில் வாயடைத்துப் போயுள்ளார்.
அவர் கூறுகையில், எனக்கு சிறிய அளவிலான பரிசு லொட்டரியில் விழுந்துள்ளது, ஆனால் இவ்வளவு பெரிய தொகை கிடைத்தது ஆச்சரியமாக உள்ளது.
என் வீடு மிகவும் பழையதாகிவிட்ட நிலையில், அதை உடனடியாக சரி செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன்.
பரிசு பணத்தின் மூலம் நான் வாங்கிய கடன்களை அடைத்து விடுவதோடு, என் உடல் நலக்கோளாறுகளுக்கு நல்ல சிகிச்சையும் எடுத்து கொள்வேன்.
என் இரண்டு மகன்களும் படித்து வரும் நிலையில், தற்போது என்னால் அவர்களுக்கு தரமான கல்வியை அளிக்க முடியும். இந்த பரிசை எனக்கு கொடுத்த கடவுளுக்கு நன்றி கூறி கொள்கிறேன் என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
தனக்கு கொலை மிரட்டல் விடுத்தாக புகார் அளித்த கவர்ச்சி நடிகை ஜோதி மீனா அந்த புகாரை உடனடியாக திரும்ப பெற்றுள்ளார்.
சென்னை பாண்டிபஜார் பொலிஸ் நிலையத்தில் ஜோதிமீனா பரபரப்பு புகார் மனு அளித்தார். அதில், என்னுடைய வீட்டுக்குள் நேற்றுமுன்தினம் மதியம் 2 மணியளவில் ராகுல், நவீன், பிரவீன் ஆகிய 3 பேர் புகுந்தனர், அவர்கள் என்னிடம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்தனர்.
நான் பணம் தர மறுத்துவிட்டேன், இதனால் அவர்கள் என்னை தாக்கினர், மேலும் என்னையும், எனது மகனையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்து சென்று விட்டனர் என்று கூறியிருந்தார்.
ஜோதிமீனாவுக்கு 3 பேரும் நண்பர்கள் என்று கூறப்படுகிறது, இந்தநிலையில் தான் அளித்த புகார் மனுவை ஜோதிமீனா உடனடியாக திரும்ப பெற்றுவிட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் வேகமாக நிர்மாணிக்கப்பட்டு வரும் தாமரை கோபுரம் அடுத்த வருடம் மார்ச் மாதம் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்படவுள்ளது.
350 மீற்றர் உயரமான இந்த கோபுரம், தொலைக்காட்சி மற்றும் வானொலிகளுக்கு முதன்மை பரிமாற்று கோபுரமாக அமையவுள்ளது.
தாமரை கோபுரத்தில் இருந்து காலநிலை சீரான நாட்களில் சிவனொளிபாத மலையை கூட பார்வையிடலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த கோபுர திறப்பின் மூலம் பெருமளவு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவர முடியுமென எதிர்பார்க்கப்படுகிறது.
பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியிலும் நிர்மாணிப்பு பணிகள் திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தாமரை கோபுர திட்ட முகாமையாளரான Cai XIaofeng தெரிவித்துள்ளார்.
D.R. விஜேவர்தன மாவத்தை, கொழும்பு 10 இல் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற இந்த திட்டத்திற்கு 104 மில்லியன் டொலர் செலவிடப்படுகிறது.
50 தொலைக்காட்சி சேவைகள் மற்றும் 35 வானொலி நிலையங்கள் ஆகியவற்றிற்கான சமிக்ஞைகளை இந்த கோபுரத்தின் மூலம் எளிதாக பெற்றுக்கொள்ள முடியும்.
சீனாவின் எக்ஸ்சிம் வங்கியினால் 104.3 மில்லியன் டொலர் நிதியளிக்கப்பட்ட திட்டம் 2012ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத் திட்டத்தின்படி 912 நாட்களுக்குள் இந்த திட்டம் நிறைவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த திட்டம் தொலைத்தொடர்பு கோபுரத்தின் முக்கிய செயல்பாடாக இருந்தாலும், அது பல செயல்பாட்டு கட்டடங்களாக வடிவமைக்கப்படும்.
தாமரை கோபுர தளம் பல்வேறு வர்த்தக மையங்கள், உணவகங்களை கொண்டுள்ளதுடன், அருங்காட்சியகம் ஒன்றை நிர்மாணிப்பதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த கோபுரத்தில் விருந்து அரங்கு உள்ளதுடன், எட்டாவது மாடியில் ஒரு கண்காணிப்பு தளமும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐ.நா. பொதுச் சபையில் வடகொரிய அதிபரின் கொள்கைகளை முன்வைத்து அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் தொடர்ந்து பேசினால் அவர்கள் நீண்ட காலத்திற்கு இருக்கமாட்டார்கள் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வடகொரியாவின் அதிபரான கிம் ஜாங் உன் உலக நாடுகள் கடும் எதிர்ப்பை மீறி அணு சோதனை, மற்றும் ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு மிரட்டி வருகிறார்.
6 முறை அணு சோதனைகளையும், ஒரே ஆண்டில் 12 ஏவுகணை சோதனைகளையும் அவர் நடத்தியுள்ளார். வடகொரியாவை கட்டுப்படுத்தும் வகையில், கடுமையான பல தடைகளை விதிப்பதற்கான தீர்மானத்தை, ஐ.நா., சபையில் நிறைவேற்றுவதற்கான முயற்சியில், அமெரிக்கா ஈடுபட்டுள்ளது.
கடந்த செவ்வாய் கிழமையன்று ஐ.நா. பொதுச்சபையில் உரையாற்றிய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வடகொரியாவை கடுமையாக விமர்சித்து பேசினார்.
அதன்பின்னர் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பும், வடகொரியா தலைவர் கிம் ஜாங் உன்னும் தொடர்ந்து வார்த்தை மோதல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
வட கொரியாவை அழித்து விடுவேன் என ட்ரம்ப் மிரட்டினார். உடனே கிம் ஜாங் உன், “ட்ரம்புக்கு மனநிலை பாதித்து விட்டது, முதுமையினால் மனத்தளர்ச்சி அடைந்து விட்டார்” என விமர்சித்தார்.
அதற்கு ட்ரம்ப், “ கிம் ஜாங் உன் பைத்தியக்காரர். சொந்த மக்களையே பட்டினி போடுகின்றார், கொல்கின்றார். இதுவரையில் இல்லாத வகையில் அவர் சோதனைக்கு ஆளாக்கப்படுவார்” என எச்சரித்தார்.
இப்படி ஒருவருக்கொருவர் வார்த்தைகளை ஏவுகணை போல ஏவி விடுவது உலக அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், ஐ.நா.சபையில் பேசிய வடகொரிய வெளியுறவுத்துறை மந்திரி, ‘ட்ரம்புக்கு மனநிலை சரியில்லை.
அவரது மிரட்டல்கள் இரு நாடுகளுக்கிடையே ராணுவ மோதலை தூண்டிவிடுவதாக இருக்கிறது’, என கூறினார். மேலும் ட்ரம்பை ‘துக்கத்தின் தளபதி’, ‘பொய் மன்னர்’, ‘தீய அதிபர்’ என குறிப்பிட்டார்.
இதற்கு ட்ரம்ப் டுவிட்டரில் பதிலளித்துள்ளார். அதில், “ஐ.நா.வில் வடகொரிய வெளியுறவுத்துறை மந்திரி பேசியதை இப்போதுதான் கேட்டேன். அவர் குட்டி ராக்கெட் மனிதரின் எண்ணங்களை எதிரொலித்து பேசினால், அவர்கள் நீண்ட காலத்திற்கு இருக்கமாட்டார்கள்”, என கூறியுள்ளார்.
புத்தளம் – வணதவில்லு பகுதியில் 15 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டுக்காக இராணுவ சிப்பாய் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இதில் மிஹிந்தலை இராணுவ முகாமில் இருக்கும் 40 வயதுடைய சிப்பாயை வணதவில்லு பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.
கடந்த 18ஆம் திகதி விடுமுறையை கழிப்பதற்காக வீட்டிற்கு வந்திருந்த குறித்த நபர், பக்கத்து வீட்டில் இருக்கும் 15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகப்படுத்தி உள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த சிறுமி வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இடம்பெற்ற விபத்துக்களின் 1789 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த வருடத்தின் ஜனவரி முதலாம் திகதியிலிருந்து ஜூலை மாதம் 31 ஆம் திகதி வரை இடம்பெற்ற விபத்துக்களில் 533 பாதசாரிகள் உயிரிழந்துள்ளதாக தேசிய வீதி போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது.
மோட்டார் சைக்கிள் சாரதிகள் 588 பேர் உயிரிழந்துள்ளதுடன் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து பயணித்து விபத்திற்குள்ளாகியதில் 106 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜனவரி முதலாம் திகதியிலிருந்து ஜூன் மாதம் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் வாகன விபத்துக்களில் 142 சாரதிகள் உயிரிழந்துள்ளதுடன் 256 பயணிகள் காயமடைந்துள்ளனர்.
இதுதவிர இந்த காலப்பகுதியில் 164 பாதசாரிகள் உயிரிழந்துள்ளதாக தேசிய வீதி போக்குவரத்திற்கான அதிகார சபை தெரிவித்துள்ளது.
வடக்கு மார்க்கத்திலான ரயில் சேவை வழமைக்குத் திரும்பியுள்ளது. தம்புத்தேகம பகுதியில் ரயிலொன்று தடம் புரண்டமையால் வடக்கு மார்க்கத்திலான ரயில் சேவை நேற்று (24.09) மாலை முதல் தடைப்பட்டது.
நேற்றிரவு 9.45 அளவில் தடம்புரண்ட ரயில் மீண்டும் தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.
வடக்கு ரயில் மார்க்கத்திலான ரயில் சேவையை வழமைக்கு கொண்டுவந்துள்ள போதிலும், ரயில் தடம்புரண்ட பகுதியில் போக்குவரத்திற்கு தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் தண்டவாளங்களை சீரமைக்கும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.
கொழும்பிலிருந்து காங்கேசன் துறை நோக்கி பயணித்த அஞ்சல் ரயிலில் அநுராதபுரம், யாழ்ப்பாணம் பிரதான வீதியில் யாழ்ப்பாண சந்திக்கருகிலுள்ள ரயில் கடவையில் லொறி ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த விபத்தில் வவுனியாவிலிருந்து தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலையத்திற்கு பழங்களை ஏற்றிச் சென்ற லொறியின் சாரதியே படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.