லண்டன் உலக மெய்­வல்­லுநர் போட்டி 2017 : இலங்கையிலிருந்து நால்வர் பங்­கேற்பு!!

லண்டன், ஒலிம்பிக் விளை­யாட்­ட­ரங்கில் ஆகஸ்ட் 4ஆம் திக­தி­முதல் 13ஆம் திக­தி­வரை நடை­பெ­ற­வுள்ள­களில் இலங்­கை­யி­லி­ருந்து இரண்டு ஆண்­களும் இரண்டு பெண்­க­ளு­மாக நான்கு மெய்­வல்­லு­நர்கள் பங்­கு­பற்­ற­வுள்­ளனர்.

மரதன் ஓட்ட வீரர் அநு­ராத இந்த்­ரஜித் குரே, ஈட்டி எறிதல் வீரர் வருண லக் ஷான் தயா­ரட்ன, மரதன் ஓட்ட வீராங்­கனை ஹிருணி விஜே­ரத்ன, 800 மீற்றர் ஓட்ட வீராங்­கனை நிமாலி லிய­ன­ஆ­ராச்சி ஆகிய நால்­வரே இலங்கை சார்­பாக இம்­முறை பங்­கு­பற்­ற­வுள்­ளனர்.

உலக மெய்­வல்­லுநர் அரங்கில் சுசன்­திகா ஜய­சிங்­க­வுக்குப் பின்னர் இலங்­கையர் எவ­ருமே பதக்கம் வென்­றி­ராத நிலையில் இம்­முறை லண்­டனில் இலங்­கைக்கு பதக்கம் கிடைக்கும் என்று எதிர்­பார்க்­க­மு­டி­யாது.

ஏதென்ஸ் 1997 உலக மெய்­வல்­லுநர் போட்டி, ஒசாகா 2007 உலக மெய்­வல்­லுநர் போட்டி ஆகி­ய­வற்றில் பெண்­க­ளுக்­கான 200 மீற்றர் ஓட்­டத்தில் சுசன்­திகா ஜய­சிங்க முறையே வெண்­கலம், வெள்ளிப் பதக்­கங்­களை வென்­றி­ருந்தார். அத்­துடன் சிட்னி 2000 ஒலிம்பிக் விளை­யாட்டு விழா 200 மீற்றர் ஓட்டப் போட்­டியில் வெள்ளிப் பதக்கம் வென்­றி­ருந்தார்.

எனினும் லண்டன் உலக மெய்­வல்­லுநர் போட்­டியில் இலங்­கைக்கு பதக்கம் கிடைப்­ப­தென்­பது கன­விலும் நினைக்க முடி­யாத ஒன்று என இலங்கை மெய்­வல்­லுநர் சங்­கத செய­லாளர் பிரேமா பின்­ன­வெல தெரி­வித்தார். எனினும் இப் போட்­டி­களில் இலங்­கை­யரின் நேரப் பெறு­திகள் மற்றும் தூரப் பெறு­தி­களில் முன்­னேற்­றத்தை எதிர்­பா­ரப்­ப­தாக அவர் கூறினார்.

அநு­ராத இந்­தி­ரஜித் குறே (39 வயது) லண்­டனில் இருந்­த­வாறு இப் போட்­டியில் பங்­கு­பற்றும் அதே­வேளை ஐக்­கிய அமெ­ரிக்­காவில் வாழ்ந்­து­வரும் ஹிருணி விஜே­ரத்ன (27 வயது) அங்­கி­ருந்து லண்டன் செல்­கின்றார். இவர் சில மாதங்­க­ளுக்கு முன்னர் இயூ­ஜினில் நடை­பெற்ற மரதன் ஓட்­டத்தில் பெண்கள் பிரிவில் சம்­பி­ய­னா­கி­யி­ருந்தார்.

இங்­கி­ருந்து நிமாலி (27 வயது), வருண ஆகியோர் பயிற்­று­ந­ருடன் இன்று இரவு லண்டன் நோக்கி புறப்­ப­டு­கின்­றனர்.
இவர்­க­ளுடன் இலங்கை மெய்­வல்­லுநர் சங்கத் தலைவர் மேஜர் ஜெனரல் பாலித்த பெர்­னாண்டோ, செய­லாளர் பிரேமா பின்­ன­வெல, நிமா­லியின் பயிற்­றுநர் சுஜித் அபே­சே­கர ஆகி­யோரும் லண்டன் செல்­ல­வுள்­ள­தாகத் தெரி­ய­வ­ரு­கின்­றது.

இதே­வேளை, ஒலிம்பிக் விளை­யாட்டு விழாக்­களில் எட்டு தங்கப் பதக்­கங்­களை வென்­றெ­டுத்த ஜெமெய்க்­காவின் யூசெய்ன் போல்ட் உட்­பட உலகின் நட்­சத்­திர மெய்வல்லுநர்கள் பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

ரியோ 2016 ஒலிம்பிக் விளையாட்டு விழாவுடன் ஒலிம்பிக் அரங்கிலிருந்து விடைபெற்ற யூசெய்ன் போல்ட், சர்வதேச அரங்கில் பங்குபற்றவிருக்கும் கடைசி நிகழ்ச்சி இதுவாகும்.

குடி­நீ­ரின்றி தவிக்கும் 11 இலட்சம் மக்கள்!!

நாட்டின் 17 மாவட்­டங்­களில் ஏற்­பட்­டுள்ள கடு­மை­யான வரட்­சியின் கார­ண­மாக மக்கள் பெரும் அசௌ­க­ரி­யங்­களை எதிர்­நோக்­கி­யுள்­ளனர்.

இவ்­வ­ரு­டத்தின் இது­வ­ரை­யான காலப்­ப­கு­தியில் வரட்­சி­யினால் மாத்­திரம் 3 இலட்­சத்து 14 ஆயி­ரத்து 49 குடும்­பங்­களைச் சேர்ந்த 10 இலட்­சத்து 93 ஆயி­ரத்து 717 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் அறி­வித்­துள்­ளது.

வடக்கு, கிழக்கு மற்றும் வட மேல் மாகா­ணங்­க­ளி­லேயே அதி­க­ளா­வானோர் வரட்­சி­யினால் குடி­நீ­ரின்றி கடு­மை­யான பாதிப்­புக்­க­ளுக்கு முகங்­கொ­டுத்­துள்­ள­தா­கவும், அவர்­க­ளுக்­கான குடி­நீரை பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­வ­தா­கவும் அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலை­யத்தின் ஊடக பேச்­சாளர் பிரதிப் கொடிப்­பிலி தெரி­வித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரி­விக்­கையில்,

வட­மா­கா­ணத்தின் கிளி­நொச்சி மாவட்­டத்தில் 04 பிர­தேச செய­ல­கப்­பி­ரிவைச் சேர்ந்த 24 ஆயி­ரத்து 06 குடும்­பங்­களில் வசிக்கும் 83 ஆயி­ரத்து 378 பேரும், வவு­னியா மாவட்­டத்தில் 04 பிர­தேச செய­ல­கப்­பி­ரி­வைச்­சேர்ந்த 24 ஆயி­ரத்து 507 குடும்­பங்­களில் வசிக்கும் 85 ஆயி­ரத்து 771 பேரும் முல்­லைத்­தீவு மாவட்­டத்தின் 06 பிர­தேச செய­ல­கப்­பி­ரி­வைச்­சேர்ந்த 35 ஆயி­ரத்து 730 குடும்­பங்­களில் வசிக்கும் ஒரு இலட்­சத்து 15 ஆயி­ரத்து 308 பேரும், பாதிக்­கப்­பட்­டுள்­ளனர்.

யாழ்ப்­பாண மாவட்­டத்தின் 15 பிர­தேச செய­ல­கப்­பி­ரி­வைச்­சேர்ந்த 34 ஆயி­ரத்து 49 குடும்­பங்­களில் வசிக்கும் ஒரு இலட்­சத்து 24 ஆயி­ரத்து 206 பேரும், மன்னார்; மாவட்­டத்தில் 05 பிர­தேச செய­ல­கப்­பி­ரி­வைச்­சேர்ந்த 15 ஆயி­ரத்து 386 குடும்­பங்­களில் வசிக்கும் 52 ஆயி­ரத்து 152 பேரும் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர்.

கிழக்கு மாகா­ணத்தின் திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் 11 பிர­தேச செய­ல­கப்­பி­ரி­வைச்­சேர்ந்த 27 ஆயி­ரத்து 646 குடும்­பங்­களில் வசிக்கும் 1 இலட்­சத்து ஐயா­யி­ரத்து 947 பேரும் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் 09 பிர­தேச செய­ல­கப்­பி­ரி­வைச்­சேர்ந்து 19 ஆயி­ரத்து 685 குடும்­பங்­களில் வசிக்கும் 65 ஆயி­ரத்து 341 பேரும், அம்­பாறை மாவட்­டத்தில் 09 பிர­தேச செய­ல­கப்­பி­ரி­வைச்­சேர்ந்து 11 ஆயி­ரத்து 672 குடும்­பங்­களில் வசிக்கும் 40 ஆயி­ரத்து 548 பேரும் வரட்­சி­யினால் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர்.

புத்­தளம் மாவட்­டத்தில் 13 பிர­தேச செய­ல­கப்­பி­ரி­வைச்­சேர்ந்த 36 ஆயி­ரத்து 783 குடும்­பங்­களில் வசிக்கும் ஒரு இலட்­சத்து 31 ஆயி­ரத்து 51 பேரும் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர்.

வட­மத்­திய மாகா­ணத்தில் பொலன்­ன­றுவை மாவட்­டத்தின் 03 பிர­தேச செய­ல­கப்­பி­ரி­வைச்­சேர்ந்த 6 ஆயி­ரத்து 556 குடும்­பங்­களில் வசிக்கும் 23 ஆயி­ரத்து 919 பேரும், அனு­ரா­த­புரம் மாவட்­டத்தின்; 11 பிர­தேச செய­ல­கப்­பி­ரி­வைச்­சேர்ந்த 16 ஆயி­ரத்து 729 குடும்­பங்­களில் வசிக்கும் 55 ஆயி­ரத்து 683 பேரும் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர்.

மத்­திய மாகா­ணத்தில் மாத்­தளை மாவட்­டத்தில் 05 பிர­தேச செய­ல­கப்­பி­ரி­வைச்­சேர்ந்த 5 ஆயி­ரத்து 832 குடும்­பங்­களில் வசிக்கும் 20 ஆயி­ரத்து 341 பேரும் கண்டி மாவட்­டத்தில் 02 பிர­தேச செய­ல­கப்­பி­ரி­வைச்­சேர்ந்த 72 குடும்­பங்­களில் வசிக்கும் 300 பேரும் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர்.

வடக்கு, கிழக்கு மற்றும் வட மேல் மாகா­ணத்­தி­லேயே அதி­க­ள­வானோர் குறித்த வரட்­சி­யினால் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். தற்­போது இய­லு­மா­ன­வரை பாதிக்­கப்­பட்­டுள்­ளோ­ருக்­கான குடி­நீரை கொள்­க­லன்­களில் மூலம் விநி­யோ­கிப்­ப­தற்­கான நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. என்றார்.

இந்­நி­லையில் வட­மா­கா­ணத்தில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு குடி­நீரைப் பெற்றுக் கொடுப்­ப­தற்கு தேவை­யான நிதி மாவட்ட செயலாளர்களுக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதன்படி யாழ்ப்பாண மாவட்டத்துக்கு 48 இலட்சம் ரூபாவும், முல்லைத்தீவு மாவட்டத்துக்கு 21 இலட்சம் ரூபாவும், கிளிநொச்சி மாவட்டத்துக்கு 30 இலட்சம் ரூபாவும், வவுனியா மாவட்டத்துக்கு மூன்றரை இலட்சம் ரூபாவும் வழங்கப்பட்டிருப்பதாக அவ்வமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

ஆகஸ்ட் 8 ஆம் திகதி க.பொ.த. உயர்­தரப் பரீட்சை ஆரம்பம்!!

கல்விப் பொதுத்­த­ரா­தர உயர்­தர பரீட்­சைக்கு இவ்­வ­ருடம் தோற்­ற­வுள்ள மாண­வர்­க­ளுக்­கான மேல­திக வகுப்­புக்கள் மற்றும் கருத்­த­ரங்­கு­களை நாளை மறு­தினம் முதல் நடத்த தடை­வி­திக்­கப்­பட்­டுள்­ள­தாக பரீட்சை திணைக்­களம் அறி­வித்­துள்­ளது.

குறித்த உத்­த­ரவை மீறி வகுப்­பு­களை நடத்­துவோர் தொடர்பில் முறைப்­பாடு கள் கிடைக்கும் பட்­சத்தில் அவர்கள் மீது சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் எனவும் பரீட்­சைகள் ஆணை­யாளர் நாய கம் டபிள்யூ.எம்.என்.ஜே.புஷ்­ப­கு­மார தெரி­ வித்­துள்ளார்.

இது தொடர்பில் பரீட்­சைகள் ஆணை­யாளர் நாயகம் வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. அவ்­வ­றிக்­கையில் அவர் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

கல்விப் பொதுத் தரா­தர உயர்­தர பரீ ட்சை எதிர்­வரும் ஆகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி முதல் செப்­டெம்பர் மாதம் 2 ஆம் திகதி வரை 2230 பரீட்சை நிலை­யங்­களில் நடை­பெற உள்­ளது.

இந்­நி­லையில் குறித்த பரீட்­சைக்கு தோற்­ற­வுள்ள மாண­வர்­களை இலக்கு வைத்து நடத்­தப்­படும் மேல­திக வகுப்­புக்கள் மற்றும் கருத்­த­ரங்­கு­களை எதிர் ­வரும் ஆகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி நள்­ளி­ரவு முதல் நடத்­து­வ­தற்கு தடை­வி­திக்­கப்­பட்­டுள்­ளது.

அத்­துடன் பரீட்சை தொடர்­பி­லான மாதிரி வினாத்­தாள்­களை அச்­சிடல், அவ ற்றை விநி­யோ­கித்தல், மாதிரி வினாத்­தாள்­களை வழங்­கு­வ­தாக பதா­கைகள் ஒட்­டுதல், துண்டுப் பிரசு­ரங்­களை விநி­யோ­கித்தல் அல்­லது அச்சு ஊட­கங்கள் மூலம் பிர­சாரம் செய்தல் உள்­ளிட்ட செயற்­பா­டு­க­ளுக்கும் தடைவிதிக்­கப்­பட்­டுள்­ளது.

குறித்த உத்­த­ரவை மீறி வகுப்­பு­களை நடத்தும் தனி­நபர் அல்­லது நிறு­வ­ன­மொன்­றுக்கு எதி­ராக பரீட்­சைகள் திணைக்­க­ளத்தின் 1911 என்ற இலக்­கத்­துக்கோ அல்­லது அருகில் இருக்கும் பொலிஸ் நிலை­யத்­துக்கோ தொடர்புகொண்டு அறி­ விக்க முடியும். முறைப்­பா­டுகள் தொடர் பில் ஆராய்ந்து அவர்­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என வும் அவ்­வ­றிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­ டுள்­ளது.

இம்­முறை குறித்த பரீட்­சைக்கு 3 இலட்­சத்து 15 ஆயி­ரத்து 27 பரீட்­சார்த்­திகள் தோற்­று­வ­தற்குத் தகுதி பெற்றுள்ளனர். அவர்களில் 2 இலட்சத்து 37 ஆயிரத்து 943 பாடசாலை பரீட்சார்த்திகளும் 77 ஆயிரத்து 284 தனிப்பட்ட விண்ணப்பதாரிகளும் தோற்றுவதற்கு தகுதிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டு மக்களுக்கு மின்சார சபை விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!!

நாட்டின் பல பகுதிகளில் பகல் வேளைகளில் இடைக்கிடையே மின்வெட்டு அமுலாகுமென இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. இது தொடர்பில் இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளவை வருமாறு:-

“கடுமையான வறட்சியின் காரணமாக நீர் மின்சார உற்பத்தி வெகுவாகக் குறைந்துள்ளது. நுரைச்சோலை ‘லக்விஜய’ நிலக்கரி மின் நிலையம் கடந்த பத்து நாட்களாக பகுதியளவில் இயங்காததால் தேசிய மின் கட்டமைப்புக்கு 300 மெகாவோல்ட் மின் விநியோகம் தடைப்பட்டிருக்கிறது.

அத்துடன், கடந்த வெள்ளிக்கிழமை முதல் தனியார் மின்னுற்பத்தி நிலையமான களனிதிஸ்ஸ ‘சோஸிட்ஸ்’ செயலிழந்திருப்பதால் அதன் 163 மெகாவோல்ட் விநியோகமும் தடைப்பட்டுள்ளது.

நுரைச்சோலை மின் நிலையத்தின் பழுது பார்ப்பு வேலைகள் அடுத்த வார இறுதியிலேயே முடிவடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

நீர்த்தேக்கங்களிலுள்ள நீர் விவசாயத் தேவைகளுக்குப் பயன்படுத்தப்பட்டு வருவதால் பகல் நேர நீர் மின்சார உற்பத்தி 36 சதவிகிதமாகக் குறைவடைந்துள்ளது.

இவ்வாறான பிரச்சினைகளால் மின் பாவனை அதிகமாகவுள்ள பகல் வேளைகளில் அவ்வப்போது மின்வெட்டை அமுல்படுத்த வேண்டியுள்ளது.

இரவு நேரங்களில் நீர்த்தேக்கங்களிலுள்ள நீர் விவசாயத் தேவைக்கு வழங்கப்படாததால் இரவு வேளைகளில் மின்வெட்டைச் செய்யாமல் சமாளிக்க முடியும்.

பகல் வேளைகளில் முன்னறிவித்தல்கள் எதுவுமின்றி அமுலாக்கப்படும் மின்வெட்டு குறைந்த பட்சம் இரண்டு மணித்தியாலங்களுக்கு நீடிக்கலாம். இது நாளொன்றுக்கு இரண்டு முறை நடக்கலாம்.

எனவே, சுயமாக மின்பிறப்பாக்கிகளை (ஜெனரேட்டர்) வைத்திருப்பவர்கள் இயன்ற வரை பகல் வேளைகளில் அவற்றைப் பயன்படுத்துமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம்.

நுரைச்சோலை மற்றும் களனிதிஸ்ஸ மின் விநியோகங்கள் சீராகும் வரை இந்த மின்வெட்டு தவிர்க்க முடியாத ஒன்றாகும்” என்று கூறியுள்ளார்.

அனைத்து தொழிற்­சங்­கங்­க­ளு­டனும் இணைந்து நாடு ­த­ழு­விய ரீதியில் பாரிய வேலை­நி­றுத்தம்!!

அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தை முறை­கே­டான விதத்தில் சீனா­வுக்கு வழங்­கி­ய­தன்­ மூலம் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வி­னதும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வி­னதும் இய­லாமை வெளிப்­பட்­டுள்­ளது. இந்­நாட்டில் உள்ள உழைக்கும் வர்க்கம் காட்­டிக்­கொ­டுக்­கப்­பட்­டுள்­ளது என்று அகில இலங்கை துறை­முக சேவைகள் ஊழியர் பொது ஒன்­றியம் தெரி­வித்­துள்­ளது.

மேலும் இந்­நாட்டை பாது­காக்­கவும் துறை­மு­க­சே­வையில் பணி­பு­ரியும் பொது­மக்­களின் நல­னுக்­கா­கவும் தொடர்ந்து போரா­ட­வுள்­ள­தா­கவும் நாடு­த­ழு­விய ரீதியில் அனைத்து தொழிற்­சங்­கங்­க­ளையும் இணைத்­துக்­கொண்டு வேலை­நி­றுத்தப் போராட்­டத்­துக்கு செல்­ல­வுள்­ள­தா­கவும் அச்­சங்­கத்தின் தலைவர் சந்­தி­ர­சிறி மஹா­க­மகே தெரி­வித்தார்.

மரு­தான சன­ச­மூக நிலை­யத்தில் நேற்று நடை­பெற்ற ஊட­க­வி­ய­ளாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தை சீனா­வுக்கு 99 வரு­டங்­க­ளுக்கு குத்­த­கை­க­ஙகு வழங்­கி­யதன் மூலம் இந்­நாட்டில் உழைக்கும் வர்க்கம் கடு­மை­யாக பாதிக்­கப்­ப­டு­வ­தற்கு நல்­லாட்சி அர­சாங்கம் உத­வி­யுள்­ளது. இல­ங­கைக்கும் சீனா­வுக்­கு­மி­டையில் ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்ள ஒப்­பந்தம் முற்­றிலும் பொய்­யா­னது. நல்­லாட்சி அர­சாங்கம் அதன் வெளிப்­ப­டைத்­தன்­மையை ஒரு­போதும் மக்­க­ளுக்கு வெளிப்­ப­டுத்த விரும்­ப­வில்லை.

சீனா­வுக்கு இலா­பத்தில் 70 சத­வீ­தமும் இலங்­கைக்கு 30 சத­வீ­தமும் என்ற வகையில் ஒப்­பந்தம் மேற்­கொள்­ளப்­பட்­ட­தாக கூறு­கின்­றனர். ஆனால் நாம் முன்­னெ­டுத்த ஆர்ப்­பட்­டங்­களின் பின்­னரும் தொடர்ச்­சி­யான அழுத்­தங்­களின் பின்­ன­ருமே இந்த முடி­வுக்கு வந்­த­தாக அர­சாங்கம் கூறு­கின்­றது. முதலில் 80 க்கு 20 என பேசினோம். இப்­போது நமக்கு வெற்றி கிடைத்­துள்­ள­ள­தாக கூறு­கின்­றனர்.

இதில் என்ன வெற்றி இருக்­கின்­றது என தெரி­ய­வில்லை. உழைக்கும் வர்க்­கத்தை படு­கு­ழியில் தள்­ளி­விட்டு, எங்­க­ளுக்கு கொடுத்த வாக்­கு­று­தி­க­ளை­யெல்லாம் பொய்­யாக்­கி­விட்டு வெற்றி என கூறு­கின்­றனர். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நல்­லாட்சி அர­சாங்­கத்தில் உழைக்கும் வர்க்­கத்தை பாது­காப்­ப­தாக கூறு­கின்றார். ஆனால் எவ்­வித ஆளு­மை­யு­மின்றி சர்­வ­தே­சத்­துக்கு எமது நாட்டை காட்­டிக்­கொ­டுத்­துள்­ளனர்.

இன்று அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தை சீனா­வுக்கு தாரை வார்த்­த­வர்கள் இதன்­பின்னர் திரு­கோ­ண­மலை எண்ணைக் குதத்தை விற்­பனை செய்ய முடி­வெ­டுப்­பார்கள். இதற்கும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் துணை­நிற்­பார்கள். இதுவே இனிமேல் நடக்க போகின்­றது. இந்­நாட்டில் உள்ள வளத்தை சூறை­யா­டு­வ­தற்கு சர்­வ­தேச நாடு­க­ளுக்கு இட­ம­ளிப்­பது பெரும் துரோ­கச்­செ­ய­லாகும்.

இந்­நாட்டு மக்­களை ஏமாற்­றி­ய­மைக்கு ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் அமைச்­சர்­க­ளுமே பொறுப்பு கூற வேண்டும். இனி­வரும் அழி­வு­க­ளுக்கும் அச்­சு­றுத்­தல்­க­ளுக்கும் இவர்­களே பொறுப்பு கூற வேண்டும். இந்­நாட்டை பாது­காக்­கவும் துறை­மு­க­சே­வையில் பணி­பு­ரியும் பொது­மக்­களின் நல­னுக்­கா­கவும் நாம் தொடர்ந்து போரா­ட­வுள்ளோம். இனி­வரும் வாரங்­களில் நாடு­த­ழு­விய ரீதியில் அனைத்து தொழிற்­சங்­கங்­க­ளையும் இணைத்து கொண்டு வேலை­நி­றுத்த போராட்­டத்­துக்கும் செல்­ல­வுள்ளோம்.

கூட்டு எதி­ர­ணி­யி­ன­ருடன் சேர்ந்து ஆர்ப்­பாட்­டத்தில் ஈடுபடுவது தொடர்பில் நாம் தீர்மானிக்கவில்லை. அவர்கள் அம்பாந்தோட்டை பொருளாதார வலயத்தை சீனாவுக்கு விற்பதாக கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போதும் பாராளுமன்றத்துக்கு முன்னாள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட போதும் எப்படி நடந்து கொண்டார்கள் என்பது எமக்கு தெரியும். எனவே எமது ஆர்ப்பாட்டங்களும் எதிர்ப்பு நடவடிக்கைகளும் உண்மையானதாகவும் இந்நாட்டு மக்களுக்காகவானதாகவும் இருக்கும் என்றார்.

கமல்-காயத்ரிக்கு 100 கோடி கேட்டு வக்கீல் நோட்டீஸ்!!

புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி கோவையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

தனியார் தொலைகாட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகை காயத்ரி ரகுராம் சேரி பிகேவியர் என்ற வார்த்தையை பயன்படுத்தினார்.

இந்த வார்த்தை குறிப்பிட்ட ஒரு பிரிவினர் மனதை புண்படுத்தும் வகையில் இருந்தது. எடிட் செய்து அதை ஒலிபரப்பி இருக்கலாம். ஆனால் அவ்வாறு செய்யவில்லை.
எனவே அவரது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காயத்ரி ரகுராம், தனியார் டி.வி. நிறுவனம், தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் ஆகியோர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியிருந்தோம். ஆனால் 2 வாரத்துக்கும் மேலாகியும் மன்னிப்பு கேட்கவில்லை.

எனவே 100 கோடி நஷ்டஈடு கேட்டு எனது வக்கீல் மூலம் நேற்று நடிகர் கமல்ஹாசன், நடிகை காயத்ரி ரகுராம், தனியார் தொலைக்காட்சிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஒருவார காலத்துக்குள் உரிய விளக்கம் அளிக்காவிட்டால் அவர்கள் மீது சட்டரீதியாக கோர்ட்டில் வழக்கு தொடர உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து அப்துல் கலாம் மணிமண்டபத்தில் இன்று குரான், பைபிள் வைக்கப்பட்டது குறித்து நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதில் அளித்து கிருஷ்ணசாமி கூறியதாவது,
கலாம் மண்டபத்தில் பகவத் கீதை அருகே குரான், பைபிள் வைத்தது வரவேற்கத்தக்கது.

அதேநேரத்தில் திருக்குறளையும் வைக்க வேண்டும். இந்த வி‌டயத்தை தமிழக அரசியல் கட்சிகள் தேவையில்லாமல் பெரிதுப் படுத்துகின்றன. மத்திய அரசை விமர்சிக்க வேண்டும். மாநில அரசை வீழ்த்த வேண்டும் என்பதற்காக தமிழக அரசியல் கட்சிகள் எதை எடுத்தாலும் விமர்சிக்கக்கூடாது.

நாட்டின் ஒருமைப்பாட்டுக்கும், மனிதநேயத்திற்கும் எடுத்துக்காட்டாக திகழும் கலாம் பெயருக்கு களங்கம் ஏற்படாதவாறு அரசியல் கட்சிகள் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினா

யாழில் திடீரென மயங்கி விழுந்த இளைஞன் உயிரிழப்பு!!

யாழில் மேசன் வேலையில் ஈடுபட்டிருந்த இளைஞன் ஒருவர் திடீரென மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

யாழ். சரசாலைப் பகுதியைச் சேர்ந்த தேவராசா நந்தகுமார் (வயது 25) என்ற இளைஞரே இன்று முற்பகல் இவ்வாறு உயிரிழந்தவராவார். இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

குறித்த இளைஞர் கடந்த சில தினங்களாக தெல்லிப்பழைப் பிரதேசத்தில் மேசன் வேலையில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் இன்றைய தினம் வழமை போன்று மேசன் வேலையில் குறித்த இளைஞர் ஈடுபட்டிருந்த போது இன்று முற்பகல் 10 மணியளவில் திடீரென மயக்கமடைந்து நிலத்தில் விழுந்துள்ளார்.

இதனையடுத்து மேற்படி இளைஞருடன் இணைந்து மேசன் வேளையில் ஈடுபட்டிருந்த சக தொழிலாளர்கள் குறித்த இளைஞரை மீட்டுத் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

அங்கிருந்து அவர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெல்லிப்பழைப் பொலிஸார் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

கட்டாருக்கு வளைகுடா நாடுகள் மீண்டும் வைக்கப் போகும் செக்!!

கட்டாருக்கு பொருளாதார ரீதியாக இழப்புகளை ஏற்படுத்தும் வகையில் மேலும் சில நடவடிக்கைகளை மேற்கொள்ள வளைகுடா நாடுகள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கட்டாருக்கு தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு இருப்பதாக கூறி சவுதி அரேபியா, பஹ்ரைன், எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் அதனுடனான ராஜதந்திர உறவை முறித்துக் கொண்டன.

மீண்டும் உறவை புதுப்பிக்க அந்நாடுகள் சில நிபந்தனைகளை கட்டாருக்கு விதித்தது, ஆனால் அந்த நிபந்தனைகளை ஏற்க கட்டார் மறுத்து விட்டது.

இந்நிலையில் கட்டாருக்கு மீண்டும் அழுத்தம் கொடுக்க வளைகுடா நாடுகள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, பஹ்ரைன் தலைநகர் மனாமாவில் நான்கு நாடுகளைச் சேர்ந்த வெளியுறவு அமைச்சர்கள் கலந்து கொண்டு கட்டார் விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார்கள்.

இதில் கட்டாருக்கு பொருளாதார இழப்பை ஏற்படுத்தும் வகையில் மேலும் சில நடவடிக்கைகளை மேற்கொள்ள அமைச்சர்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

உச்சமடையும் பனிப்போர் : வடகொரிய வான்பரப்பில் அமெரிக்க போர் விமானங்கள்!!

வடகொரியாவை எச்சரிக்கும் நோக்கில் அந்நாட்டு வான்பரப்பில் அமெரிக்க போர் விமானங்கள் பறந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஐக்கிய நாடுகள் சபை, அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி வடகொரியா ஏவுகணை சோதனையில் ஈடுபட்டு வருகின்றது.

இந்நிலையில், வட கொரியா மீண்டும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை கடந்த வெள்ளிக்கிழமை வெற்றிகரமாக நடத்தியது.

அமெரிக்காவின் அலாஸ்கா பகுதியில் உள்ள இராணுவ தளத்தை குறி வைத்து எச்சரிக்கை விடுக்கும் வகையில் இந்த ஏவுகணை சோதனை நடத்தப்பட்டதாக சர்வதேச போர்க்கலை வல்லுனர்கள் கருதுகின்றனர்.

இதனையடுத்து வடகொரியாவை எச்சரிக்கும் வகையில் அமெரிக்க விமானப்படையை சேர்ந்த இரு B-1B ரக போர் விமானங்கள் அந்நாட்டு வான் பரப்பில் பறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அமெரிக்கா மற்றும் வடகொரியாவிற்கு இடையிலான பனிப்போர் வலுபெற்றுள்ளதாகவும், இதனையடுத்து கொரிய தீபகற்பத்தில் அசாதாரண நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நீரில் மூழ்கி இளைஞன் பலி!!

திருகோணமலை, நிலாவெளி கடலில் குளிக்கச் சென்ற மருதமுனையைச் சேர்ந்த நிதீஸ் முகம்மட் (24 வயது) எனும் இளைஞர், நேற்று மாலை நீரில் மூழ்கி பலியாகியுள்ளாரென, நிலாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

குடும்பத்துடன் சுற்றுலாச் சென்று, குளித்துக் கொண்டிருக்கும் போது, நீரில் மூழ்கிய தன் சகோதரனைக் காப்பாற்றச் சென்ற போதே, மேற்படி இளைஞர் நீரில் மூழ்கி பலியாகியுள்ளார்.

சம்பவத்தில் காப்பாற்றப்பட்டவர், நிலாவெளி வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேற்படி சகோதரர்கள் இருவரும், இரட்டையர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இளைஞனின் சடலத்தை, நேற்றிரவு (29) 8 மணியளவில் உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளதாகவும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் நிலாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

 

இலங்கையில் விரைவில்  மின்தடை?

நாட்டில் அனைத்து பகுதிகளுக்கும் தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக,மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

நீர்மின் உற்பத்திநிலையங்களுக்கு அருகிலுள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் குறைவடைந்துள்ளமையே இதற்கு காரணம் என, அமைச்சின் செயலாளர் சுலக்சன ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.

 

கடனில் இருந்து தப்பிக்க பிளாஸ்டிக் சேஜரி செய்துகொண்ட சீனப்பெண்!!

கடனில் இருந்து தப்பிப்பதற்காக சீனப் பெண் ஒருவர் பிளாஸ்டிக் சர்ஜரி மேற்கொண்ட விபரம் சீன ஊடகங்களில் வௌியாகியுள்ளது.

59 வயது சீனப் பெண் ஜூ நாஜூவான், சீனாவின் வூஹான் நகரத்தில் வசித்து வந்தார். சொந்தக் காரணங்களுக்காக வங்கிகளிடம் இருந்து சுமார் 24.5 கோடி ரூபா கடன் பெற்றிருந்தார்.

உரிய காலத்தில் கடனை நாஜூவானால் கட்ட முடியாத நிலையில், அவர் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும் என வூஹான் நகர நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதனால் கடன் கட்டுவதில் இருந்து தப்பிக்க பிளாஸ்டிக் சர்ஜரி செய்து, தன் முகத்தை மாற்றிக்கொண்டு தென்கிழக்கு சீன நகருக்குத் தப்பிச் சென்றார் ஜூ நாஜூவான். அங்கிருந்த போது, பொலிஸார் அவரைக் கைது செய்துள்ளனர்.

”நாங்கள் கைது செய்த பெண் 30 வயது மதிக்கத்தக்கவராக இருந்தார். எங்களிடம் இருந்த புகைப்படத்திற்கும் நேரில் பார்த்தவருக்கும் வித்தியாசம் இருந்தது. நாங்கள் இது எப்படி நிகழ முடியும் என்று ஆச்சரியப்பட்டோம்” என பொலிஸார் கூறியுள்ளனர்.

நாடு முழுதும் ரயிலில் பயணிக்க மற்றவர்களின் அடையாள அட்டைகளைப் பயன்படுத்தியதாகவும், வங்கிக் கடன் அட்டைகள் மூலம் பிளாஸ்டிக் சர்ஜரிக்குத் தேவையான செலவுகளைச் சமாளித்ததாகவும் நாஜூவான் கூறியுள்ளார்.

சீனாவின் 300-க்கும் மேற்பட்ட நகரங்களில் கடந்த ஜூலை மாதம் புதிய அறிவிப்பு வெளியானது. நாட்டின் ஜிடிபியை அதிகரிக்க நுகர்வோருக்கு ஏராளமான கடன் அட்டைகளை வழங்க முடிவு செய்யப்பட்டமை அறிவிப்பில் வௌியானது.

இதன்மூலம் ஏராளமான பொதுமக்கள் தற்போது கடனாளிகளாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு : இரண்டு பொலிஸார் காயம்!!

யாழ்ப்பாணத்தில் இரண்டு பொலிஸார் மீது இன்று மதியம் அடையாளம் தெரியாத இளைஞர்கள் குழுவினரினால் வாள் வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பொலிஸ் நடமாடும் கண்காணிப்பு பணியில் சென்று கொண்டிருந்த போதே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

வாள்வெட்டிற்கு இலக்காகி படுகாயமடைந்த இரு பொலிஸாரும் யாழ்.போதனா வைத்தியசாலை அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொக்குவில் பொற்பதி வீதிப் பகுதியில் 4 மோட்டார் சைக்கிளில் வந்த 10 ற்கும் மேற்பட்ட இளைஞர்கள் துரத்தி துரத்தி இன்று (30.07) இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

யாழ்ப்பாண கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் தமிழ் மற்றும் சிங்கள பொலிஸார் இருவரே வாள்வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

குறித்த இரு பொலிஸாரும் துப்பாக்கி கொண்டு செல்லாமல், பொது மக்களினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடுகளை விசாரிப்பதற்காக சென்ற போதே அடையாளம் தெரியாத இளைஞர்கள் பின்தொடர்ந்து சென்று வெட்டியுள்ளனர்.

சம்பவத்தினைக் கண்ட பொதுமக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் இருவரையும் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பிரித்தானியாவிலேயே ஆபத்தான வீடு இது தான்!!

 
லண்டனில் உள்ள வீடொன்று சரியாக பராமரிக்கப்படாத காரணத்தால் தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

கிழக்கு லண்டனின் Leyton மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஒரு வீடு மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. வீடானது தார்பாய்கள், தகரம் போன்றவைகளால் மூடப்பட்டுள்ளது, ஆங்காங்கே ஏணிகளும் உள்ளன.

இதோடு வீட்டின் வெளிப்புறத்தில் தெரியும்படி பல பொருட்கள் அதிகளவில் மூட்டை கட்டி வைக்கப்பட்டுள்ளன. அந்த பக்கமாக செல்வோர் மீது அந்த கனமான பொருட்கள் விழலாம் என்ற சூழலே உள்ளது.

மக்களுக்கு ஆபத்துக்களை ஏற்படுத்தும் இந்த வீட்டை சீரமைக்க நீதிமன்றம் உத்தரவிட்டும் வீட்டு உரிமையாளர் அதை செய்யாமல் உள்ளார். கடந்த 9 வருடங்களாகவே வீடு இந்த நிலையில் தான் உள்ளது.

வீடு இருக்கும் பகுதியில் வசிக்கும் நபர் ஒருவர் கூறுகையில், இந்த ஆபத்தான வீட்டில் நபர் ஒருவர் வசிக்கிறார், இது அவரின் சொந்த வீடாகும்.

வீட்டின் மேல்பக்கத்தில் அதிகளவு பொருட்கள் குவிக்கப்பட்டுள்ளதால் அதிகளவு எலி தொல்லை உள்ளது. வீட்டு உரிமையாளர் வீட்டின் உள்ளே ஏணி மூலமாக தான் செல்வார், பார்க்கவே திகிலாக இருக்கும் என கூறியுள்ளார்.

சில வருடங்களுக்கு முன்னர் அரசு லொறி மூலம் இந்த வீடு சுத்தப்படுத்தப்பட்டு பொருட்கள் எல்லாம் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் மீண்டும் சில வாரங்களில் பழையபடி உரிமையாளர் வீட்டை அசுத்தமாக மாற்றியுள்ளார்.

இந்த வீட்டின் புகைப்படத்தை எடுத்து வெளியிட்டுள்ள Richard Brock (52) கூறுகையில், வீட்டின் மேலே அடுக்கி வைக்கப்பட்டுள்ள பொருட்கள் யார் மீதாவது விழுந்தால் நிச்சயம் அவர்கள் உயிரிழந்து விடுவார்கள் என எச்சரித்துள்ளார்.

சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் உறுப்பினர் Cllr Clyde Loakes கூறுகையில், பல முறை வீட்டை சரி செய்ய அரசு சார்பில் கூறியும் உரிமையாளர் அதை செய்யவில்லை.

எப்படியிருந்தாலும் அந்த பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாக்கும் முயற்சியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம் என கூறியுள்ளார்.

சம்பளம் கேட்ட இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி!!

ஊதியம் கேட்ட பெண்ணின் கழுத்து மற்றும் முகத்தை வெட்டிய நபர்களின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் மும்பை நகரை சேர்ந்தவர்கள் காஜல் ஷிண்டே மற்றும் சித்ரா. சகோதரிகளான இருவரும் 12ஆம் வகுப்பு தேர்வு எழுதியிருந்த நிலையில், விடுமுறை நேரத்தில் வேலைக்கு செல்ல முடிவெடுத்தனர்.

அதன்படி அங்கிருந்த தொலைத்தொடர்பு நிறுவனத்தில் 7000 சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்தார்கள். வேலை பார்த்து ஒரு மாதம் நிறைவடைந்த நிலையில் அவர்களுக்கு கல்லூரியில் படிக்க இடம் கிடைத்தது.

இதனால் வேலையை ராஜினாமா செய்த இருவரும் தங்களின் ஒரு மாத சம்பளத்தை டீம் லீடர் கைக்வாத்திடம் கேட்க, அவர் 15 நாட்கள் கழித்து தருவதாக கூறினார்.

பின்னர், ஒருநாளில் காஜல் மற்றும் சித்ரா இருவரையும் மால் ஒன்றுக்கு வரும்படியும் அங்கு வைத்து சம்பளத்தை தருவதாகவும் வைக்வாத் கூறியிருக்கிறார்

இதையடுத்து மாலின் மேல்தளத்துக்கு காஜல் மட்டும் சென்றுள்ளார். அங்கு வைத்து சம்பளத்தை கேட்ட போது, ஏற்கனவே நின்றிருந்த இரண்டு பேர் அவரின் முகத்தையும் கழுத்தையும் கத்தியால் வெட்டியிருக்கின்றனர்.

ரத்தம் சொட்டிய நிலையில் அங்கிருந்து தப்பிய காஜல் அம்புலன்ஸ் உதவியுடன் மருத்துவமனை சென்றிருக்கிறார்.

சம்பவம் குறித்து வைக்வாத் மீது வழக்குப்பதிவு செய்த பொலிசார் அவரை தேடி வருகிறார்கள்.

 

மரணத்திலும் பிரியாத தம்பதிகள் : விபத்தில் பலி!!

குருணாகல் – பன்னல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் தம்பதியினர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குருணாகல் – நீர்கொழும்பு பிரதான வீதியின் கொஸ்கஸ் சந்தியில் இந்த விபத்து இன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். வான் ஒன்றும் மோட்டார் சைக்கிளும் மோதிக் கொண்டதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் மோதுண்ட தம்பதியினர் படுகாயமடைந்த நிலையில் தம்பதெனிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், எனினும் சிகிச்சை பலனின்றி அவர்கள் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அனுராதபுரத்தில் நடைபெற்ற பூஜை வழிபாடுகளில் பங்கேற்று கிரியுல்லவிலிருந்து பன்னல நோக்கிப் பயணித்த வான் வண்டியே மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது.

வான் வண்டியின் சாரதிக்கு ஏற்பட்ட நித்திரையால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதா? என்பது குறித்து விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக பன்னல பொலிஸார் தெரிவித்துள்ளனர்