யாழில் இளைஞர் மீது வாள்வெட்டு : துண்டானது விரல்!!

யாழ்ப்பாணம் திருநெல்வேலி கலட்டிச் சந்தியில் இளைஞர் ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டில் குறித்த இளைஞர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வாள்வெட்டுச் சம்பவத்தால் இளைஞனின் கைவிரல் துண்டிக்கப்பட்ட நிலையில் அவர் யாழ்.போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் புலோலி பகுதியைச் சேர்ந்த தினேஸ்குமார் சலோஜிதன் (வயது 18) என்ற இளைஞரே வாள்வெட்டுக்கு இலக்கானவராவார்.

கலட்டிச் சந்தியில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வேலைக்காக வந்த குறித்த இளைஞரின் கழுத்து மற்றும் வயிற்றுப் பகுதியில் வாளால் வெட்டியுள்ளனர்.

வாள்வெட்டுக்கு இலக்காகிய இளைஞர் பொது மக்களினால் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த வாள்வெட்டு சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அடையாளம் தெரியாமல் மாறும் பிரபல நடிகை!!

இன்றைய கால நடிகைகள் ஒரு கதைக்கு தேவை என்றால் தன்னை எப்படி வேண்டுமானாலும் மாற்றி நடிக்கின்றனர். அந்த வகையில் பொலிவுட்டில் பல சாதனைகளை புரிந்த பிரியங்கா சோப்ரா தற்போது ஹாலிவுட்டில் கலக்கி வருகிறார்.

புதிய படத்திற்காகவா இல்லை எதற்காக அவர் அப்படி ஒரு ஸ்டைலில் இருக்கிறார் என்பது தெரியவில்லை.
ஆனால் சமூக வலைதளங்களில் அவரது இந்த புதிய புகைப்படம் வெளியானதும் மிகவும் வைரலாக ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.

இலங்கைக்கு அதிகளவில் படையெடுக்கும் வெளிநாட்டுப் பெண்கள்!!

2016ம் ஆண்டு இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் மொத்த எண்ணிக்கை 2.05 மில்லியன் என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை அறிக்கை வெளியிட்டுள்ளது. இவ்வாறு வருகை தந்தவர்களில் அதிகமானோர் பெண்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

வருகை தந்த 2.05 மில்லியன் சுற்றுலாப் பயணிகளில் 1.12 மில்லியன் பேர் பெண்கள் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த எண்ணிக்கை 54.7 சதவீதம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த வருடத்தை விட இவ்வருடம் கூடுதலான பெண் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு விஜயம் செய்வார்கள் எனவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

மின்சார வேலியில் சிக்குண்டு குடும்பஸ்தர் ஒருவர் பலி!!

 
தூரியன் பழத்தை பாதுகாக்க போடப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்குண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

கினிகத்ஹேன, பொல்பிட்டிய, ஹிட்டிகே கம புலத்தவத்த பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான குலரத்ன என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக கினிகத்ஹேன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அப்பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது தூரியன் தோட்டத்தை பாதுகாப்பதற்காக தனது தோட்டத்தைச் சுற்றி மின்சார வேலி ஒன்றை அமைத்துள்ளார்.

இந்நிலையில் உயிரிழந்த நபர் தனது வீட்டில் குடிநீர் வராத காரணத்தினால் மின்சார வேலி அமைக்கப்பட்டுள்ள தோட்டப்பகுதிக்கு நீர்க்குழாயை திருத்துவதற்கு சென்ற நிலையில் மின்சார கம்பியில் சிக்குண்டு பலியாகியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கினிகத்ஹேன பொலிஸார் மின்சார வேலி அமைக்கப்பட்டுள்ள தோட்ட உரிமையாளரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதுடன், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

முள்ளியவளையில் மினி சூறாவளி!!

 
முல்லைத்தீவு மாவட்டத்தில் வறட்சியான காலநிலை தொடரும் நிலையில் முள்ளியவளையில் மினி சூறாவளி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மினி சூறாவளி காரணமாக முள்ளியவளை கலைமகள் பாடசாலையின் நூலகத்தின் கூரைத்தகடுகள், வர்த்தக நிலையங்கள், மின்சார கம்பிகள் என்பன சேதமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், சில பகுதிகளில் மரங்கள் முறிந்து வீதியில் விழுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சட்டக் கல்லூரி சட்ட மாணவர் தமிழ் மன்றம் நடாத்திய வித்தக விழா 2017!!

 
இலங்கை சட்டக் கல்லூரி சட்ட தமிழ் மாணவர் மன்றம் நடாத்திய வித்தக விழா 2017 கடந்த 22.07.2017 சனிக்கிழமை பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வடமாகாணசபை முதலமைச்சர் நீதியரசர் C.V.விக்னேஸ்வரன் கலந்துகொண்டதுடன் கெளரவ விருந்தினராக இலங்கை சட்டக்கல்லூரி அதிபர் திருமதி இந்திரா சமரசிங்க, மற்றும் சிறப்பு விருந்தினராக கல்முனை மேயர் M.நிசார் காரியப்பர், பாராளுமன்ற உறுப்பினர் M.A.சுமந்திரன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இந் நிகழ்வில் தமிழ் மாணவர்களால் கண்கவர் கலை நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டன.

 

 

வவுனியாவில் பொருத்து வீட்டால் பதற்றம் : பாரபட்சம் காட்டுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு!!

 
வவுனியாவில் வழங்கப்படவுள்ள பொருத்து வீடுகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு கட்சி சார்ந்த ரீதியில் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்பட்டு வருவதாக இன்று (27.07.2017) மாலை 4 மணியளவில் பாரதிபுரம் பொது நோக்கு மண்டபத்தில் ஒன்றிணைந்த அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டுத் தெரிவித்துள்ளனர்.

வவுனியா பாரதிபுரம் பகுதியில் பொருத்து வீடு கேட்டு விண்ணப்பித்தவர்களில் 20 பேருக்கு பொருத்து வீடு வழங்குவதற்கு மீள்குடியேற்ற அமைச்சினால் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு பொருத்துவீடு பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு பெயர் விபரங்கள் நேற்று வெளியாகியுள்ளது. இதையடுத்து அப்பகுதி மக்களிடையே ஒரு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகின்றது.

பாரதிபுரம் பகுதியில் 217 குடும்பங்கள் வசித்துவருகின்றனர். 115 வீடுகள் தமது கிராமத்திற்கு தேவைப்படுவதாகவும் விண்ணப்பித்துள்ளனர்.

தற்போது மீள் குடியேற்ற அமைச்சரினால் வழங்கப்படும் பொருத்து வீட்டிற்கு விண்ணப்பித்தவர்களில் நேற்று 20 பேருக்கு பொருத்துவீடு வழங்குவதற்கு சிபாரிசு செய்து பெயர் விபரங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

ஆனால் பொருத்துவீடுகள் வழங்கப்படும்போது பிரதேச செயலாளருக்கோ அப்பகுதி கிராம சேவையாளருக்கோ தெரியப்படுத்தப்படவில்லை. அவர்களிடம் சிபாரிசும் பெறப்படவில்லை என்று அப்பகுதி கிராம அபிவிருத்திச்சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார்.

தற்போது பொருத்துவீடு வழங்கப்பட்டுள்ளவர்கள் பெரும்பாலானவர்கள் கட்சி சார்ந்தவர்களைத் தெரிவு செய்து பொருத்துவீட்டிற்கு விண்ணப்பித்தவர்களில் முன்னுரிமை அடிப்படையில் குறித்த 20 பேரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதனால் எமது கிராமத்திற்குள் சண்டைகள் சச்சரவுகள் எற்பட்டுள்ளதாகவும் 115 பேருக்கு வீடுகள் தேவைப்படும்போது 20 பேருக்கு மட்டும் வழங்கப்படும்போது பல பிரச்சினைகள் எற்படவுள்ளதாகவும் தமது கிராமத்திற்கு முன்னரும் இதுபோன்ற செய்றபாடுகள் இடம்பெற்று வீட்டுத்திட்டம் இல்லாமல் சென்றுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் சட்டவிரோத மரக்கடத்தல் முறியடிப்பு!!

 
வவுனியாவில் நேற்று பிற்பகல் சட்டவிரோதமாக மரக்கடத்தலில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்துள்ளதாக வவுனியா குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி ஜ.பி.செனரத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,  வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் தலைமையில் செயற்படும் வவுனியா குற்றத்தடுப்புப்பிரிவு பொலிசார் நேற்று பிற்பகல் 12 மணியளவில் எல்லப்பர் மருதங்குளம் பகுதியில் 4பேர் சட்டவிரோத மரக்கடத்திலில் ஈடுபட்டு வருகின்றமை தெரியவந்துள்ளது.

இதையடுத்து சட்டவிரோதமாக கடத்தவிருந்த தேக்கு மரங்கள், வாகனம் உட்பட 4சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளதாகவும் குறித்த தேக்கு மரங்களை மொறட்டுவ பகுதிக்கு எடுத்துச் செல்லப்படவிருந்துள்ளதாகவும் விசாரணைகளின் பின்னர் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவள்ளதாகவும் வவுனியா குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி செனரத் தெரிவித்ததுடன் இந்நடவடிக்கையில் பி.சி. 39183 ஜானக, 87224 அசேல ஆகிய உத்தியோகத்தர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இளைஞர் கொடி தினம்!!

 
தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் இலங்கை இளைஞர் கழக சம்மேளனம் ஒன்றிணைந்து வருடாந்தம் நடாத்துகின்ற கொடி தினம் இன்று வவுனியா மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் தலைவர் சு.காண்டீபன் தலைமையில் நேற்று (26.07.2017) அனுஷ்டிக்கப்பட்டது.

வருடாந்த இளைஞர் கொடி தினம்,இளைஞர் கழகங்கள், இளைஞர் கழக பிரதேச சம்மேளனம், இளைஞர் கழக மாவட்ட சம்மேளனங்களின் அபிவிருத்தி செய்யும் பொருட்டு செயற்படுத்தப்பட்டுள்ளதோடு இதன் மூலம் இளைஞர் கழக செயற்பாட்டினை மிகவும் வலுவுடன் முன்னோக்கி கொண்டு செல்லும் நோக்கில் அனுஷ்டிக்கப்படுகிறது.

வவுனியாவில் உத்தியோகபூர்வமாக இளைஞர் கொடி வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பி.ஆர்.புஸ்பகுமார அவர்களுக்கு அணிவிக்கப்பட்டது.

தொடர்ந்து வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சிசிர குமார, வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரேஷ்குமார், உதவி மாவட்ட செயலாளர் கமலேஸ்வரன், வவுனியா பிரதேச செயலாளர் உதயராஜா, பிரதேச செயலக கணக்காளர் ஜெயபாஸ்கரன், நகரசபை செயலாளர் தயாபரன் ஆகியோருக்கு உத்தியோகபூர்வாக கொடிகள் அணிவிக்கப்பட்டன.

அரசாங்க திணைக்களங்கள், தனியார் நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் வியாபார நிலையங்களில் இளைஞர் தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி ஐ.சுகானி, மாவட்ட இளைஞர் கழக சம்மேளன தலைவர் சு.காண்டீபன், இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ.கேசவன், மாவட்ட இளைஞர் கழக சம்மேளன உப தலைவர் ந.குணவர்மன், முன்னாள் மாவட்ட இளைஞர் கழக சம்மேளன தலைவர் தே.அமுதராஜ், இளைஞர் சேவை அதிகாரி ரா.சசிகரன், விளையாட்டு உத்தியோகத்தர் தா.விந்துஜன் மற்றும் இளைஞர் கழக பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தொடர்ச்சியாக ஒரு வாரத்திற்கு இளைஞர் கொடி தினம் நாடளாவிய ரீதியில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

சந்திரனில் மிகப்பெரிய ஏரிகள்: விஞ்ஞானிகள் தகவல்!!

சந்திரனில் பாறைகளுக்கு அடியே மிகப்பெரிய ஏரிகள் இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அப்பல்லோ விண்கலத்தின் மூலம் கொண்டு வரப்பட்ட மண் மாதிரிகள் மற்றும் பாறைகளை கொண்டு சந்திரன் குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

சந்திரனில் தண்ணீர் இருப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டநிலையில், பாறைகளுக்கு அடியே மிகப்பெரிய ஏரி இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது விஞ்ஞானிகளுக்கு பெரும் உதவியாக இருக்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2008ம் ஆண்டு சந்திரனில் உள்ள எரிமலையிலிருந்து வெளியான கண்ணாடி துகள்களில் தண்ணீரின் பிம்பங்கள் கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஆங்கிலம் தவறாக பேசிய நபர் : ஒரே குத்தில் கொன்ற 15 வயதுச் சிறுவன்!!

பிரித்தானிய நாட்டில் ஆங்கில மொழியை தவறாக பேசிய நபரை 15 வயது சிறுவன் ஒரே குத்தில் கொன்றுள்ள வழக்கு தொடர்பான விசாரணை விரைவில் முடிவுக்கு வரவுள்ளது. இங்கிலாந்து நாட்டில் உள்ள Harlow நகரில் தான் இத்துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

போலந்து நாட்டை சேர்ந்த Arkadisusz Jozwik(40) என்பவர் தனது நண்பர்களுடன் இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார். கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் ஹார்லோ நகருக்கு நண்பர்களுடன் ஷொப்பிங் சென்றுள்ளார். அப்போது, இவருடன் 15 வயது சிறுவன் ஒருவன் உரையாடியுள்ளார்.

இருவரும் நடந்து சென்றபோது சிறுவனிடன் போலந்து நாட்டு நபர் ஆங்கிலத்தில் பேசியதாக கூறப்படுகிறது.

ஆனால், அவர் ஆங்கில மொழியை தவறாக பேசியபோது அதை சிறுவன் கிண்டலாக விமர்சனம் செய்துள்ளார்.

அப்போது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு கைகலப்பில் முடிந்தபோது சிறுவன் தனது கையால் பலமாக நபரின் பின் தலையில் தாக்கியுள்ளார்.

எதிர்பாராத தாக்குதலால் நிலைகுலைந்து போன நபர் சாலையில் விழுந்துள்ளார். நபரை மருத்துமனையில் அனுமதித்தபோது அவரது கபாலம் உடைந்தது மட்டுமின்றி மூளையும் பாதித்துள்ளதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர்.

மேலும், சிகிச்சை பலனளிக்காமல் இரண்டு தினங்களுக்கு பின்னர் நபர் உயிரிழந்துள்ளார். தற்போது 16 வயதாகவும் சிறுவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. எதிர்வரும் ஆகஸ்ட் 10-ம் திகதிக்குள் தீர்ப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க இராணுவத்தில் திருநங்கைகள் சேவையாற்ற முடியாது : டிரம்ப்!!

அமெரிக்க இராணுவத்தில் திருநங்கைள் எந்த விதத்திலும் சேவையாற்ற முடியாது என்று டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஒபாமா தலைமையிலான நிர்வாகம் அமெரிக்க இராணுவத்தில் திருநங்கைகள் வெளிப்படையாக சேவை செய்ய அனுமதிக்க முடிவு செய்தது.

அதன் பின் ஆறுமாத காலத்திற்கு பின்னர் திருநங்கைகளை பணியில் சேர்க்க பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜேம்ஸ் ஒப்புதல் அளித்தார்.

இதைத் தொடர்ந்து குடியரசு கட்சியைச் சேர்ந்த சிலர் திருநங்கைகள் பணியில் அமர்த்தப்படுவதற்கு எதிராக குரல் கொடுத்தனர்.

இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில், இராணுவப்படையின் அதிகாரிகள் மற்றும் வல்லுனர்களுடன் கலந்து ஆலோசித்த பின் அமெரிக்க அரசு எந்த விதத்திலும் திருநங்கைகளை பணியில் ஏற்றுக்கொள்ளவோ அல்லது அனுமதிக்கவோ கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பதிவேற்றம் செய்துள்ளார்.

நமது இராணுவம் தீர்க்கமான மற்றும் மாபெரும் வெற்றிகளை அடைவதில் கவனம் செலுத்த வேண்டுமே தவிர திருநங்கைகளை இராணுவத்தில் சேர்ப்பதால் உண்டாகும் வியக்கத்தக்க மருத்துவ செலவுகள் மற்றும் இடையூறுகளுக்கு உள்ளாகக்கூடாது எனவும் கூறியுள்ளார்.

டிரம்பின் இந்த முடிவிற்கு ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க இராணுவத்தில் சேவையாற்றி வரும் 1.2 மில்லியன் பேரில், 2,450 பேர் திருநங்கைகள் என கடந்த 2016-ஆம் ஆண்டு தி இண்டிபெண்டண்ட் ரேண்ட் கார்போரேசன் கணக்கிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பழிக்குப் பழிவாங்குவதற்காக குடும்பத்தினர் முன் 16 வயதுச் சிறுமிக்கு நேர்ந்த பரிதாபம்!!

பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணம், ராஜ்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் Umer Wadda. இவர் அங்குள்ள Ashfaq என்பவரின் சகோதரியை கடந்த ஜுலை மாதம் 16-ஆம் திகதி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதனால் இது தொடர்பாக அக்கிராமத்தில் உள்ள ஊர்பஞ்சாயத்து தலைவர்கள் சார்பில் பஞ்சாயத்து நடத்தப்பட்டுள்ளது.

இதை விசாரித்த தலைவர்கள் Umer Wadda-வின் சகோதரியை பாலியல் வன்கொடுமை செய்யும் படி தீர்ப்பு வழங்கியுள்ளனர். Umer Wadda-வின் சகோதரிக்கு 16-வயது அவரின் பெயர் தெரிவிக்கப்படவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த Umer Wadda-வின் குடும்பத்தினர் பஞ்சாயத்து தலைவர்களிடம் கெஞ்சியுள்ளனர். ஆனால் அவர்களோ இது போன்ற செயலுக்கு பழிக்கு பழி தான் சரி என்று கூறி தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

இந்த சம்பவம் அவர்கள் குடும்பத்தினர் முன்னரே அரங்கேறியுள்ளது. இச்சம்பவத்தை அறிந்த பொலிசார் உடனடியாக அக்கிராமத்திற்கு விரைந்துள்ளனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட 30 பேரை உடனடியாக கைது செய்துள்ளனர்.

இது குறித்து பொலிசார் கூறுகையில், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், வழக்கை சமரசம் செய்ய இயலாதவாறு, கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

ஒரே நேரத்தில் 25 பெண்களுடன் திருமணம் : மதத்தலைவர் மீது விரைவில் நடவடிக்கை!!

ஒரே நேரத்தில் 25 பேரை திருமணம் செய்து வாழ்ந்து வந்த கனடா நாட்டு மதத்தலைவர் மீது நடவடிக்கை பாயவுள்ளது.

அமெரிக்கா மற்றும் கனடாவில் வசித்து வரும் இனக்குழுவினர் மோர்மோன், இவர்களிலிருந்து லாட்டர் டே ஸைண்ட்ஸ் என்ற சிறு குழுவினர் தனியாக பிரிந்து சென்று தங்களை இயேசு ஆலய வழிபாட்டு முறையினை பின்பற்றுபவர்கள் என அறிவித்து கொண்டனர்.

இவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்களை செய்து கொள்வதில் நம்பிக்கை உடையவர்கள்.

இந்த பிரிவை சேர்ந்த வின்ஸ்டன் பிளாக்மோர் மற்றும் ஜேம்ஸ் ஓலர் மீது கனடா நாட்டு பலதார மணச்சட்டத்தின் கீழ் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

வின்ஸ்டன் 25 பெண்களையும், ஜேம்ஸ் 5 பெண்களையும் திருமணம் செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பான வழக்கு பல ஆண்டுகளாக நடந்து வந்த போதிலும், தற்போது தான் தெளிவான முடிவு கிடைத்துள்ளது.

இதுகுறித்து பிரிட்டிஷ் கொலம்பியா நீதிமன்ற நீதிபதி வழங்கியுள்ள தீர்ப்பில், வின்ஸ்டன் மற்றும் ஜேம்ஸ் பல பெண்களுடன் வாழ்ந்து வருவது ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது, விரைவில் தண்டனை அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

கனடா நாட்டு சட்டப்படி இருவருக்கும் தலா ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது.

தன்னுடைய மத நம்பிக்கையின்படி இவை அனைத்தும் தெய்வீக திருமணங்கள் என கருத்து தெரிவித்துள்ள வின்ஸ்டன், கனடா நாட்டு பலதார மணசட்டத்தினை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார்.

தமிழக சிறுவனுக்கு கிடைத்த கெளரவம்!!

பழங்குடியின சிறுவர்களின் முன்னேற்றத்துக்குப் பாடுபடும் தமிழகத்தைச் சேர்ந்த சக்தி என்ற சிறுவன் ஐ.நா-வின் சர்வதேசக் குழந்தைகள் அமைதிக்கான விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளான்.

தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுவன் சக்தி. இச்சிறுவன் அங்குள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறான்.

முதலில் பாசிமணி விற்றுக் கொண்டிருந்த சிறுவன், தொண்டு நிறுவனத்தின் உதவியின் மூலம் தற்போது படித்து வருகிறான்.

இந்நிலையில் சக்தி பள்ளியின் விடுமுறை நாட்களின் போது ஊசிமணி விற்கச் செல்லும் போது, தங்கள் சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளை பார்த்து பேசுவது வழக்கம்.

அப்படி பேசும் போது, சக்தி அவர்களிடம், நீங்கள் பள்ளியில் படித்தால் பெரிய ஆளாக வந்துவிடலாம், நான் உங்களை பள்ளியில் சேர்த்து படிக்கவைக்கிறேன் என்று கூறியுள்ளார்.

சக்தியின் பேச்சைக் கேட்ட சக குழந்தைகளும், அவர்கள் பெற்றோர்களிடம் சென்று இது குறித்து கூறியுள்ளனர்.

இது போன்று சக்தி மற்றும் அவரது நண்பர்கள் மூலம் 25 சிறுவர்கள் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து அவரின் சமூகத்தைச் சேர்ந்த பலரும் தற்போது பள்ளி வரத் துவங்கியுள்ளனர்.

இப்படி பழங்குடியின சிறுவர்களின் முன்னேற்றத்துக்குப் பாடுபடும் சிறுவன் சக்தியை ஊக்குவிக்கும் விதமாக ஹாண்ட் இன் ஹாண்ட் நிறுவனம், ஐ.நா-வின் சர்வதேசக் குழந்தைகள் அமைதிக்கான விருதுக்கு சக்தியை பரிந்துரை செய்துள்ளது

மீண்டும் பதிலடி கொடுத்த கமல்ஹாசன்!!

கட்சி நட்பு குடும்பபேதமின்றி எவ்வகை ஊழலையும் களைய முயல்வேன் என நடிகர் கமல்ஹாசன் மீண்டும் பதிலடி கொடுத்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக தமிழக அரசியல் நிலை குறித்து பரபரப்பான கருத்துகளை கூறி வருகிறார் கமல்ஹாசன்.

சமீபத்தில் எல்லாத்துறையிலும் ஊழல் உள்ளது என இவர் கூறியதற்கு ஆளும்கட்சி அமைச்சர்கள் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தனது டுவிட்டர் பக்கத்தில் மீண்டும் பதிலடி கொடுத்துள்ளார்.