நுவரெலியாவில் இளைஞர் ஒருவர் தனது திறமையால் ஆளில்லாமல் தூரத்தில் இருந்து கட்டுப்படுத்தும் வகையில் முச்சக்கரவண்டியை தயாரித்துள்ளார்.
நுவரெலியா – களுகெலை பிரதேசத்தை சேர்ந்த சமிந்த ருவான் குமார என்ற 31 வயதுடைய இளைஞரே இவ்வாறு தானியக்க முச்சக்கரவண்டியை கண்டுபிடித்துள்ளார்.
இவர் (ரிமோட் கொன்ரோல்) ஊடாக இயங்கக்கூடிய வகையில் 5 நாட்களில் முச்சக்கரவண்டியை தயாரித்துள்ளார்.
இயந்திரவியல் தொழிலில்ஈடுபட்டுவரும் குறித்த நபர், எரிபொருள் ஊடாக இயக்க வைக்கும் முச்சக்கரவண்டியை (ரிமோட் கொன்ரோல்) ஊடாக இயங்க வைப்பதற்கு எடுத்துக்கொண்ட முயற்சி பலனளிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு தயாரிக்கப்பட்ட முச்சக்கரவண்டியை தலவாக்கலை நகரசபை மைதானத்தில் பார்வையாளர்களுக்கு மத்தியில் இயங்க வைத்தமை அனைவரினதும் கவனத்தை ஈர்த்துள்ளது.
தனது சொந்த செலவில் தயார் செய்யப்பட்ட இந்த முச்சக்கரவண்டியை போல எதிர்காலத்தில் இன்னும் பல (ரிமோட் கொன்ரோல்) மூலம் கட்டுப்படுத்தக்கூடிய இயந்திரங்களை கண்டுபிடிக்க முடியும் என்றும் சமிந்தருவான் குமார நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அதற்கான பொருளாதார ரீதியில் உதவிகளை செய்யுமிடத்து இன்னும் பல்வேறு வகையான தொழில்நுட்ப ரீதியான செயற்பாடுகளை கண்டுபிடிக்க முடியும் என்றும் அவர் ஊடகவியலாளர்கள் மத்தியில் தெரிவித்துள்ளார்.









































