வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி மகோற்சவம்-2017 நாளை ஆரம்பம்!

சமய குரவர்களால் பாடல் பெற்ற சிவகுகஸ்தலங்கள் நிறைந்த இலங்கா தீபத்தின் வடபால்  அகிலாண்டேஸ்வரம்  எனப் போற்றப்படும் வவுனியா கோவில்குளம் திவியசேத்திரத்தில் அடியார்கள் வேண்டியதை அருளும் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பாள் மகோற்சவம்  நாளை மதியம் 12.00  மணியளவில் சிவஸ்ரீ. ரகுநாத கமலேஸ்வர குருக்கள்   தலைமையில்  கொடிஏற்றதுடன் ஆரம்பமாகவுள்ளது.

மேற்படி  உற்சவத்தில்

கொடியேற்றம்  17.07.2017  திங்கட்கிழமை

ஆடி அமாவாசை -23.07.2017 ஞாயிற்று கிழமையும்

சப்பர திருவிழா -24.07.2017  திங்கட்கிழமையும்

தேர்த்திருவிழா -25.07.2017 செவ்வாய்கிழமையும்

தீர்த்த திருவிழா -26.07.2017   புதன்கிழமையும்   இடம்பெறும்!

வவுனியாவில் வீரமக்கள் தினத்தை முன்னிட்டு நங்கூரம் விளையாட்டுக் கழகத்தினால் பாத்தினீயம் ஒழிப்பு!!

 
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் இளைஞரணியின் நங்கூரம் விளையாட்டுக் கழகத்தின் ஒழுங்கமைப்பில் வீரமக்கள் தினத்திற்கான பாத்தினீயம் ஒழிப்பு பணி இன்று (15.07.2017) இன்றையதினம் காலை 8 மணிக்கு வவுனியா கோவிக்குளத்திலுள்ள உமாமகேஸ்வரன் நினைவு இல்லத்தில் நடைபெற்றது.

 

 

தேசிய ரீதியில் ஐந்தாம் ஆண்டு புலமைபரிசில் பரீட்சையில் தமிழ் மொழிமூலம் முதலிடம் பெற்ற வவுனியாவை சேர்ந்த அபிசிகன் யப்பானுக்கு விஜயம்!(படங்கள்)

கடந்த வருடம்இடம்பெற்ற  (2016) தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் தமிழ்மொழி மூலம் அகில இலங்கை ரீதியில் வவுனியா இறம்பைகுளம் மகளிர் கல்லூரி மாணவன் கோகுலதாசன் அபிசிகன் 195 புள்ளிகளைப் பெற்று தேசிய ரீதியில் முதலிடம் பெற்று வடக்கிற்கு பெருமை சேர்த்திருந்தார்.

மேற்படி மாணவன் புலமைபரிசில் பரீட்சையில் சித்தியடைந்தமையை தொடர்ந்து   யப்பானில் இடம்பெறும் The Asian-Pacific Children’s Convention (APCC) in FUKUOKA  என்னும் சர்வதேச சிறுவர் மாநாட்டுக்காக கடந்த 13.07.2017 இல் இலங்கையை பிரதிநிதித்துவபடுத்தும் வகையில்  கல்வியமைச்சின் ஏற்பாட்டில் புறப்பட்டு சென்றனர் .

மேற்படி சிறுவர் மாநாட்டுக்காக இலங்கையிலிருந்து 06 மாணவர்கள் தெரிவு செய்யபட்டிருந்ததமை குறிப்பிடத்தக்கது .

இவர்களில்  அகில இலங்கை ரீதியில்  இரண்டாம் மூன்றாம் இடங்களை பெற்ற  அபிசிகனும்  யாழ். இந்து ஆரம்ப பாடசாலையில் இருந்து 194  புள்ளிகள் பெற்ற உமாசங்கர் ஜெயனியும் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது ..

ஐந்தாமாண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் 196 புள்ளிகளைப்  முதலிடம் பெற்ற சிங்கள் மாணவன் பெற்ற மாத்தறை மெதடிஸ்ட் வித்தியாலய மாணவன் சஜீத் நிரான் சமரவிக்ரம ம கடைசி நேரத்தில் அம்மை  நோயினால் பாதிக்கபட்டமையால்  அவரால் மேற்படி மாநாட்டில் கலந்து கொள்ளமுடியவில்லை ..

மேற்படி சர்வதேச சிறுவர் மாநாடு இரண்டு  வாரம் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது .

மேலதிக விபரங்களுக்கு

http://www.apcc.gr.jp    

https://www.facebook.com/APCCFukuoka

திட்ட முன்மொழிவுகளை தமிழில் வழங்குமாறு ஜி.ரி.லிங்கநாதன் வேண்டுகோள்!!

திட்ட முன்மொழிவுகள் காட்சிப்படுத்தும் நடவடிக்கைகளை எதிர்காலத்தில் தமிழ் மொழியில் மேற்கொள்ளுமாறு வடமாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

வவுனியா பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் இன்று காலை 10 மணியளவில் ஆரம்பமாகியிருந்தது.

வவுனியா பிரதேச செயலாளர் க.உதயராஜா தலைமையில் ஆரம்பமாகிய குறித்த ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,

இன்று பிரதேச செயலகத்தினால் மெற்கொள்ளப்பட்ட திட்ட வழங்கல் முன்மொழிவுகளை காட்சிப்படுத்தும் நடவடிக்கைகள் ஆங்கில மொழியில் இடம்பெற்றுள்ளன.

இருப்பினும், எதிர்காலத்தில் திட்ட வழங்கல் முன்மொழிவுகளை தமிழ் மொழியில் மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பிரதேச செயலாளரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.

அத்துடன், இன்று இடம்பெற்ற அனைத்து திட்ட முன்மொழிவுகளும் உத்தியோகத்தர்களினால் ஆங்கில மொழியிலே மேற்கொள்ளப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் காணி அற்றவர்களுக்கு காணிகளை பெற்றுக்கொடுக்குமாறு கோரிக்கை!!

வவுனியா – ஓமந்தை அரச ஊழியர் வீட்டுத்திட்டம் பகுதியில் குடியேறாமல் இருக்கும் காணிகளை காணியற்றவர்களுக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வடமாகாணசபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன் தெரிவித்துள்ளார்.

வவுனியா பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் இன்று(15.07) காலை 10 மணியளவில் ஆரம்பமாகியிருந்தது.

இதில் ஓமந்தை அரச ஊழியர்கள் வீட்டுத்திட்ட பகுதியில் பலர் காணியினைப் பெற்றுக்கொள்வதற்கு விண்ணப்பித்த போதும் தற்போது 45 குடும்பங்களே வசித்து வருவதாக ஓமந்தை கிராம அலுவலகர் அனுசியா சுட்டிக்காட்டினார்.

இந்த நிலையிலேயே, அரச ஊழியர் வீட்டுத்திட்ட பகுதியில் பல வருட காலமாக குடியேறாமல் இருக்கும் காணிகளை தெரிவு செய்து காணி அற்றவர்களுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தேசிய வீடமைப்பு அதிகார சபையின் பணிப்பாளரிடம் வடமாகாணசபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா பாடசாலைகள் சிலவற்றில் போதைப்பொருள் பாவனை!!

வவுனியாவில் குறிப்பிட்ட சில பாடசாலைகளினுள் போதைப்பொருள்கள் பாவிக்கப்படுவதாக தொடர்ந்து எனக்கு தகவல்கள்வந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக வவுனியா தெற்கு வலய பாடசாலைகளில் இவ்வாறான நடவடிக்கைகளில் மாணவர்கள் ஈடுபடுகின்றனர்.

இதற்கு வலயக்கல்விப் பணிமனையினால் எவ்வகையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று வடமாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன் கேள்வியெழுப்பினார். இன்று(15.07) நடைபெற்ற வவுனியா பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் போதே இவ்வாறு கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த தெற்கு வலய கல்விப் பணிப்பாளர் இராதாகிருஸ்ணன், இப்பிரச்சினை வவுனியா மட்டுமல்ல இலங்கை பூராகவும் உள்ளது. வவுனியா தெற்கு வலயத்தில் உள்ள பாடசாலைகளை பொறுத்தவரை பாடசாலைகளிற்குள் எவ்வாறு வருகின்றது என்பதை சரியாக உறுதிப்படுத்த முடியாதுள்ளது.

ஏனெனில் இது சம்பந்தமாக ஆசிரியர்களாலும் கதைக்கப்பட்டாலும் அதனை ஆதாரத்துடன் கொண்டு வர முடியவில்லை. என்றாலும் இப்போதைப்பொருள் செயற்பாடு மாணவர்கள் மத்தியில் தான் உள்ளது.

இதற்காக பொலிஸாருடன் இணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான செயற்பாடு எல்லா பாடசாலைகளிலும் நடைபெறுகின்றது.

குறிப்பாக ஒவ்வொரு பாடசாலையிலும் இதற்கான கடித பெட்டி வைத்துள்ளனர். அதில் மாணவர்கள் தங்களது குறிப்புக்களை போடுவதற்கு ஏதுவாக்கப்பட்டுள்ளது என்றார்.

மத்திய அரசின் நிதியுதவியின்றி மாகாணத்தை அபிவிருத்தி செய்வதற்கு மாகாண சபையொன்றும் தனியரசல்ல!!

 
மத்திய அரசின் நிதியுதவியின்றி மாகாணத்தை அபிவிருத்தி செய்வதற்கு மாகாண சபையொன்றும் தனியரசல்ல. அல்லது சுயாட்சி அதிகாரமுடைய மாநிலமும் அல்ல. மத்திய மாகாண சபைகள் உள்ளுராட்சி அமைச்சின் கீழ் வருகின்ற ஒரு சபையே மாகாண சபையாகும்.

மத்திய சுகாதார அமைச்சுடன் இணைந்து மாகாணத்தின் சுகாதார சேவையை அபிவிருத்தி செய்ய முயற்சிகளை மேற்கொள்ளும் போது மத்திய அரசுடன் தொடர்புகளை பேணுவதாக என்மீது துரோகிப்பட்டம் சாட்டப்படுகின்றது என்று சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் தெரிவித்தார்.

வவுனியா பாலமோட்டை மடத்துவிளாங்குளம் கிராமத்தில் நடைபெற்ற பாலர்பாடசாலைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட உரையாற்றியபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

மாகாண முத்திரை வரி வருமானத்தில் மாகாண சபை உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்ட விசேட நிதிஒதுக்கீட்டில் வவுனியா மாவட்டத்தில் நேற்று முன்தினம் (13.07) மூன்று பாலர் பாடசாலைகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. மருக்காரம்பளை, கணேசபுரம், சாளம்பைக்கும் சோபாலர்புளியங்கும் மற்றும் பாலமோட்டை மடத்து விளாங்குளம் கிராமங்களிலேயே பாலர்பாடசாலைகள் அமைக்கப்படவுள்ளன. இங்கு மேலும் அமைச்சர் தெரிவித்ததாவது..

மாகாண சபை முறைமை அது இலங்கையில் அறிமுகப்படத்தப்பட்ட காலத்திலேயே விடுதலைப்புலிகளால் நிராகரிப்பட்ட ஆட்சிமுறையாகும். ஒருகையால் கொடுத்து மறுகையால் பறிக்கும் அதிகார பரவலாகல் முறையாகும். எனினும் நீண்டகால யுத்தத்தாலும் மனிதப்பேரவலத்தாலும் துவண்டுபோயுள்ள எமது மக்களுக்கு மூச்சுவிடுவதற்கு அல்லது இழைப்பாறுவதற்கு கிடைத்த ஒரு சந்தர்ப்பமே மாகாண சபையாகும்.

மாகாண சபை தனியரசல்ல அல்லது சுயாட்சி அதிகாரம் பொருந்திய மாநில அரசமல்ல. வரையறுக்கப்பட்ட அதிகாரங்களுடன் இயங்கும் பிரதிநிதிகளைக் கொண்ட மக்கள் சபை. இதற்கான அனைத்து செலவினங்களுக்கு மத்திய திறைசேரியே நிதியொதுக்கீடுகளை செய்கிறது. இந்த நிலையில் மாகாணத்தின் பௌதீக வளங்களை அபிவிருத்தி செய்து மக்கள் பயன்பாட்டுக்கு வழங்குவதற்கு மத்திய அரசின் நிதியுதவிகளுக்களை பெறுவதற்காக துறைசார்ந்த நிரல் அமைச்சுடன் தொடர்புகளை பேணுவது எந்த வகையில் பிழையாகும். அவ்வாறு செய்வதனால் எமது இறைமையை நாம் விட்டுக்கொடுப்பதாக கருதமுடியாது.

வடக்கு மாகாண சபையின் சுகாதார அமைச்சை பொறுப்பேற்றுக்கொண்ட பின்னர் மாகாண சுகாதார சேவை பாரிய அபிவிருத்தி கண்டுள்ளது. மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் சுகாதார சேவையின் தரம் அதிகரித்துள்ளது.

நகரங்களை அண்டியதான சுகாதார சேவை தற்பொது கிராமங்களை நோக்கி நகர்த்தப்பட்டுள்ளது. மாகாண சபைக்கு ஒதுக்கப்படும் நிதி போதாமலிருந்தாலும் வெளிநாட்டு நிறுவனங்களின் பாரிய நிதியுதவியுடன் மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் எதிர்வரும் காலங்களில் விசேட வைத்திய சிகிச்சைப்பிரிவுகளை ஆரம்பிக்கவுள்ளோம். குறிப்பாக நெதர்லாந்து நாட்டின் நிதியுதவியுடன் வவுனியாவில் இருதய சத்திரசிகிச்சைப்பிரிவும் மன்னாரில் சிறுவர்களுக்கான விசேட சிகிச்சைப்பிரிவும் கிளிநொச்சியில் பெண்ணியல் நோய்களுக்கான விசேட சிகிச்சைப்பரிவும் முல்லைத்தீவில் அங்கவீனர்களுக்கான மருத்துவ புனர்வாழ்வுப்பிரிவும் யாழ்ப்பாணத்தில் அவசர விபத்து சேவை நிலையங்களும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

2020ம் ஆண்டளவில் வடக்கு மாகாணத்தில் வாழுகின்ற மக்கள் எமது மாகாணத்திலேயே தங்களுக்கான அனைத்து சுகாதார தேவைகளையும் சிகிச்சைகளையும் பெற்றுக்கொள்ளக்கூடிய வசதிகள் காணப்படும்

இதற்கான பூரண அனுசரணையை மத்திய சுகாதார அமைச்சு வழங்கி வருகின்றது. இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சுடன் இணைந்து மாகாணத்தின் சுகாதார சேவையை அபிவிருத்தி செய்ய முயற்சிகளை மேற்கொள்ளும் போது மத்திய அரசுடன் தொடர்புகளை பேணுவதாக என்மீது துரோகிப்பட்டம் சாட்டப்படுகின்றது என்றார்.

 

பேஸ்புக்கை அதிகம் பயன்படுத்தும் நாடு எது தெரியுமா?

உலகளவில் பேஸ்புக்கை அதிகம் பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. இந்தியாவில் மட்டும் சுமார் 24.1 கோடி பேர் பேஸ்புக்கை பயன்படுத்துகின்றனர், இதுவரையிலும் அமெரிக்காவே முதலிடத்தில் இருந்து வந்தது.

இந்தியாவை பொறுத்தவரை கடந்த ஆறு மாதங்களில் மட்டும் பேஸ்புக் பயனாளர்களின் எண்ணிக்கை 5 கோடி அதிகரித்துள்ளது.

எனினும் இந்தியாவின் மக்கள்தொகையோடு ஒப்பிடும் போது பேஸ்புக் பயன்படுத்தும் நபர்களின் எண்ணிக்கை குறைவு தான் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2011 உலக கிண்ண இறுதிப் போட்டியில் மோசடி?

2009ம் ஆண்டு பாகிஸ்தானின் லாகூர் நகரில் வைத்து இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதல் தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொள்ளுமாறு தானும் கோருவதாக, அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அதேபோல் 2011ம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் என்ன நடந்தது என்பது தொடர்பிலும் உரிய விசாரணைகளை முன்னெடுக்குமாறு அவர் கோரியுள்ளார். கொழும்பில் நேற்று காலை ஊடகவியலாளர்களிடம் அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

வெள்ளை ஆடையில் மூடிக்கொண்டிருக்கும் விளையாட்டு வீரர்களின் உள்ளுக்குள் என்ன இருக்கிற்து என்பது எனக்கு நன்றாக தெரியும்.

கடந்த 2009ம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட போது இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகாரியாக அன்றைய விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளராக பணியாற்றிய எஸ்.லியனகம இருந்தார்.

சங்கக்கார விசாரணை நடத்த வேண்டும் என்கிறார். நானும் அதனையே கூறுகிறேன். லாகூர் சம்பவத்திற்கு சில மாதங்களுக்கு முன்னர் நான் ஆசிய கிரிக்கெட் பேரவையின் தலைவராக இருந்த போது ஆசிய கிரிக்கெட் போட்டியை பாகிஸ்தானில் நடத்தினோம்.

அப்போது இலங்கை அணியின் வீரர்களுக்கு சிறந்த பாதுகாப்பு இருந்தது. இதன் பிறகு ஐ.பி.எல். போட்டிகளுக்கு செல்ல வேண்டும் என சாலி ஒஸ்டினின் அணியினர் என்னிடம் கூறினர்.

நாட்டை காட்டிக்கொடுத்து அதற்கான கடிதத்தில் என்னால் கையெழுத்திட முடியாது என்று நான் சொன்னேன்.இதற்கு பிறகு முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் காமினி லொக்குகே என்னை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையில் இருந்து விலகினார்.

அதற்கு பிறகே பாகிஸ்தான் சுற்றுப் பயணம் நடந்தது. அங்கு இலங்கை கிரிக்கெட் அணியினர் ஆபத்துக்கு உள்ளாகினர்.

இதனால் விசாரணை நடத்த வேண்டும் என்று நான் நினைக்கின்றேன். ஆனால், ஒன்றை மறக்க வேண்டாம் பாகிஸ்தானுக்கு சென்ற வீரர்கள் அதற்கு முன்னர் அங்கு நடந்த ஆசிய கிண்ணப் போட்டிகளுக்கும் சென்றிருந்தனர்.

இந்தியாவில் ஐ.பி.எல் போட்டிகள் நடக்கும் போது குண்டுத் தாக்குதல் அச்சுறுத்தல்கள் இருக்கின்றன. இந்தியாவில் குண்டு தாக்குதல் நடக்கும் ஐ.பி.எல். வேண்டாம் என எமது வீரர்கள் கூறுவார்களா?. ஆனால், நாட்டுக்காக விளையாடும் போது குண்டு தாக்குதல் நடக்கும் என பேசும் பல வீரர்கள் உள்ளனர் எனவும் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.

சயனைட் உட்கொண்டு குடும்பத்துடன் தற்கொலை!!

இந்தியாவில் கடன் தொல்லையால் நகைக்கடை அதிபர் தனது குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவின் உடுப்பியை சேர்ந்தவர் சங்கர் ஆச்சார்யா(வயது 50), இவரது மனைவி நிர்மலா, இவர்களுக்கு சுருதி, ஸ்ரேயா என இரண்டு மகள்கள் உள்ளனர்.

நகைக்கடை அதிபரான சங்கருக்கு தொழில் நஷ்டமடைந்துள்ளது, இதனால் மனமுடைந்த சங்கர் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தார்.

இதன்படி குடும்பத்துடன் சயனைட் உட்கொண்டு பரிதாபமாக உயிரிழந்தனர், நால்வரின் உடலையும் கைப்பற்றிய பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எம்பிஏ முடித்துள்ள சுருதிக்கு வருகிற செப்டம்பர் மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஹோட்டலில் மருத்துவ மாணவியுடன் 18 வயதான மாணவன் தற்கொலை : நடந்தது என்ன?

இந்தியாவில் மருத்துவ மாணவி ஒருவருடன் 18 வயது மாணவன் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் உள்ள ஹார்டிங் மருத்துவக் கல்லூரி முதலாமாண்டு படித்து வரும் மாணவியும்(19) ஜனக்பூரி பகுதியைச் சேர்ந்த மாணவனும்(18) அங்குள்ள ஹேட்டலில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இது குறித்து தகவல்கள் தெரிவிக்கையில், தற்கொலை செய்து மாணவியின் தந்தை ரோஹினி பகுதியில் உள்ள துணை இராணுவப் படையில் வேலை செய்து வருவதாகவும், மாணவியுடன் தற்கொலை செய்து கொண்ட மாணவன் தனக்கு பயிற்சி வகுப்பு இருப்பதாக கூறி மாணவியுடன் ஒன்றாக சேர்ந்து, துவாராகாவில் உள்ள ஒரு ஹோட்டலில் ஆன்லைன் மூலமாக அறை வாடகைக்கு எடுத்துள்ளனர்.

இவர்கள் நேற்று வரைக்குமே வாடகைக்கு எடுத்திருந்த நிலையில், வெகு நேரம் ஆகியும் வெளியில் வராததால், ஹோட்டல் ஊழியர்கள் அவர்கள் இருக்கும் அறைக்கு சென்று கதவை தட்டியுள்ளனர்.

ஆனால் அவர்கள் திறக்காததால், பொலிசாருக்கு இது குறித்து தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக ஹோட்டலுக்கு வந்த பொலிசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, இருவரும் அங்கிருந்த பெட் சீட்டை பேனில் கட்டிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது காதல் பிரச்சனையாகக் கூட இருக்கக்கூடும் என்ற கோணத்தில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் பின்னர் இருவரது உடலையும் கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் இருவரது தற்கொலை குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

ஒருவேளை காதல் பிரச்சனையாக கூட இருக்கலாம் என்று போலீசார் எண்ணுவதாக கூறப்படுகிறது. இந்த தற்கொலை குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் பிரபல நடிகர், நடிகைகளுக்கு தொடர்பு!!

போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக நடிகர், நடிகைகள் உட்பட 12 பேருக்கு போதைப் பொருள் தடுப்பு பிரிவு பொலிசார் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

தெலுங்கு திரைப்பட உலகில் போதைப் பொருட்கள் புழக்கம் கணிசமாக இருப்பதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.
நடிகர், நடிகைகள் சிகரெட், ஊசி, சுவாசித்தல் போன்றவற்றின் மூலமாக கொக்கைன் போன்ற போதை பொருட்களை பயன்படுத்துவதாகவும் கூறப்பட்டது.

நவ்தீப், சர்மி, முமைத்கான், தருண், தனிஷ், நந்து போன்ற நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கும், இயக்குனர் பூரி ஜெகன்நாத் உட்பட 12 திரையுலகை சேர்ந்தவர்களுக்கும் போதை மருந்து கும்பலுடன் தொடர்பு இருப்பதாக தெலுங்கு சனல்கள் செய்திகள் வெளியிட்டன. ஆனால் இவர்கள் பெயரை பொலிசார் வெளியிடவில்லை.

இந்நிலையில் தென் ஆபிரிக்காவை சேர்ந்த கெல்வின் என்ற போதைப் பொருள் கடத்தல்காரரை பொலிசார் கைது செய்து விசாரித்தனர்.

அவர் ஐதராபாத்துக்கு போதைப் பொருட்களை கடத்தி வந்து பியூஸ் என்பவர் மூலம் நடிகர்–நடிகைகளுக்கு சப்ளை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதையடுத்து 12 பேரும் 19ம் திகதி முதல் 28ஆம் திகதி வரை நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என போதைப் பொருள் தடுப்பு பிரிவு பொலிசார் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

பொலிஸ் விசாரணைக்கு பிறகே அவர்கள் கைது செய்யப்படுவார்களா என்பது தெரியவரும்.

இதனிடையில் தனக்கு போதைப் பழக்கம் கிடையாது எனவும், போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பும் இல்லை எனவும் நடிகர் நவ்தீப் கூறியுள்ளா

உயிருள்ள சிலை : சென்னையில் அதிசயம்!!

 
சிலை என்றால் நாம் மரத்தினால் அல்லது கல்லினால் செய்த சிலையை தான் நினைப்போம். ஆனால் வாழும் சிலை மனிதன் உள்ளார். அதிலும் சென்னையில்.

ஆம், சென்னை விஜிபி கோல்டன் கடற்கரையில் 32 ஆண்டுகளாக ஒரே இடத்தில் நிற்கும் வேலையை அப்துல் அஜீஜ் செய்து வருகின்றார். தினமும் 6 மணி நேரம் ஒரே இடத்தில் ஆடாமல், அசையாமல் நிர்ப்பது தான் வேலை.

விஜிபி நிறுவனத்தின் தலைவர் 1985ல் இங்கிலாந்துக்கு சென்றுள்ளார். அங்கு பக்கிங்காம் அரண்மனை முன், அசையாமல் நிற்கும் பாதுகாப்பு ஊழியர்களை பார்த்து நாமும் இதே போல சிலரை நிறுத்தினால் என்ன என்ற யோசனை ஏற்பட்டது.

இந்தியா திரும்பிய உடனே தன்னிடம் செக்யூரிட்டியாக வேலை பார்க்கும் நபர்களை அழைத்து ஒரே இடத்தில் ஆடாமல், அசையாமல் நிற்க சொல்லியுள்ளார். அதில் அப்துல் அஜீஜ் மட்டும் இந்த பணியை சரியாக செய்துள்ளார்.

அப்போது முதல் இன்று வரை சிலை போல நின்று 32 வருடங்களை கழித்துள்ளார். இவரை பார்ப்பதற்காகவே சுற்றுலாப் பயணிகள் பலர் இங்கு வருவதாக விஜிபி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த சிலை மனிதருக்கு மாதம் 10,000 சம்பளமாக தரப்படுகின்றதாம். சிலையாக நிற்பது சாதாரண விஷயமல்ல, அப்படி நின்றார் ரத்த ஓட்டம் பாதிப்படையும், அதனால் தினமும் யோகா செய்து வருவதாக அப்துல் அஜீஜ் தெரிவித்துள்ளார்.

முறிகண்டியில் ரயிலில் இருந்து தவறி வீழ்ந்தவரை காணவில்லை : தேடுதல் தீவிரம்!!

கொழும்பிலிருந்து யாழ் நோக்கிச் சென்று கொண்டிருந்த புகையிரதத்தில் இருந்து ஒருவர் தவறி விழுந்துள்ளார்.

நேற்று முற்பகல் 11.50 மணியாவில் புறப்பட்ட புகையிரதம் மாங்குளம் புகையிரத நிலையத்தை மாலை ஆறு மணியளவில் கடந்து சென்று கொண்டிருந்த வேளை, முறிகண்டிப் பகுதிக்கு இடையில் குறித்த நபர் தவறி விழுந்துள்ளார்.

குறித்த புகையிரதம் கிளிநொச்சி புகையிரத நிலையத்தில் நிறுத்தப்பட்டு மாங்குளம் பொலிசாரிற்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, குறித்த நபரை தேடும் பணியில் மாங்குளம் பொலிஸ் குழு ஒன்று ஈடுபட்டு வருகின்றது.

இருப்பினும் இதுவரை எதுவித தகவல்களும் கிடைக்கவில்லை என அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார். மேலும் குறித்த நபர் மதுபோதையில் இருந்திருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்

ரயிலில் மோதுண்டு இளம் பெண் பலி!!

களுத்துறை ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலில் மோதுண்டு இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று மாலை 6.30 மணியளவில் அவர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது 25 வயதுடைய இளம் பெண் ஒருவரே உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

சமுத்ரா தேவி ரயில் பயணித்து கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் இந்த பெண் ரயிலில் குதித்துள்ளதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்கொலைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 

சசிகலா அடைக்கப்பட்டுள்ள சிறையில் நடக்கும் அட்டூழியங்கள் : அதிகாரி பரபரப்பு அறிக்கை!!

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு விஐபி சலுகைகள் வழங்கப்பட்டிருப்பதாக சிறை டிஐஜி ரூபா தெரிவித்துள்ளார். இதற்காக சிறைத்துறை டிஜிபிக்கு சசிகலா தரப்பு 2 கோடி ரூபாய் லஞ்சம் வழங்கியுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா கடந்த பெப்ரவரி மாதம் சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார்.

அவருடன் அவரது அண்ணியான இளவரசி, அக்காள் மகன் சுதாகரன் ஆகியோரும் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சசிகலாவுக்கு சிறையில் விஐபிகளுக்கான சலுகைகள் வழங்கப்படுவதாக அடிக்கடி குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனால் சிறை நிர்வாகம் இதனை மறுத்து வந்தது.

இந்நிலையில் சசிகலாவுக்கு விஐபி சலுகைகளை வழங்க சிறைத்துறை டிஜிபி ஹெச்எஸ்என் ராவ், சசிகலா தரப்பிடம் இருந்து 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக சிறை டிஐஜி ரூபா குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக தனது மேல் அதிகாரிகளுக்கும் அவர் கடிதம் எழுதியுள்ளார். அதில் சசிகலா மற்றும் பல தண்டனை கைதிகளுக்கு லஞ்சம் பெற்றுக்கொண்டு சட்டத்திற்கு புறம்பான சலுகைகள் வழங்கப்பட்டிருப்பதாக அவர் கூறியுள்ளார்.

சசிகலாவுக்கு விசேட சமையலறை அமைத்து கொடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இது சிறை விதிகளை மீறிய செயல் என்றும் டிஐஜி ரூபா தெரிவித்துள்ளார்.

சசிகலாவுக்கு சலுகைகள் அளிக்கப்படுவதாக கூறப்படுவது வதந்தி என கூறப்பட்டது. ஆனால் அவை இன்னும் தொடர்கிறது.சிறையில் சில வசதிகளை பெற சசிகலா தரப்பு 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்துள்ளது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதுதொடர்பான விசாரணையில் தான் இறங்கியது முதல் சிறைத்துறை டிஜிபி ஹெச்எஸ்என் ராவ் தனது வேலையில் குறுக்கிட்டு வருவதாகவும், கடந்த 11ம் திகதி தனக்கு மெமோ கொடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் தனது மெமோவில் எதற்காக சென்ட்ரல் ஜெயிலுக்கு சென்றேன் என விளக்கமும் கோரியுள்ளார், தனக்கு சென்ட்ரல் சிறைக்கு செல்ல முழு அதிகாரமும் உள்ளது என்றும் டிஐஜி ரூபா கூறியுள்ளார்.

முத்திரைத்தாள் மோசடி குற்றவாளி அப்துல் கரீம் தெல்கி 4 உதவியாளர்களுடன் சிறை வாழ்க்கையை கொண்டாடி வருகிறார். அவருக்கு உதவியாளர்கள் மசாஜ் கூட செய்து விடுகின்றனர். அவரது வீல்சேரை தள்ளுவதற்கு கோர்ட் ஒரு உதவியாளரைதான் அனுமதித்தது.

ஆனால் அவருக்கு 4 உதவியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனை சிசிடிவி கேமரா மூலம் நீங்களே பார்க்க முடியும் என நம்புகிறேன் என்றும் தனது உயர் அதிகாரியிடம் ரூபா தெரிவித்துள்ளார்.

கடந்த 29ம் திகதி தலைமை மருத்துவ ஊழியர் உட்பட 10 பேர் கைதி ஒருவரால் தாக்கப்பட்டுள்ளனர். இரும்பு கம்பியால் அவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். பணியில் இருந்த பாதுகாப்பு அதிகாரியையும் காணவில்லை. ஆனால் இதுகுறித்து கைதி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

போதை பொருள் பயன்படுத்துவது தொடர்பாக 25 கைதிகளை ஆய்வு செய்ததில் அவர்களில் 18 பேர் போதை பொருள் பயன்படுத்துவதாக தகவல் வந்துள்ளது. சிறைக்குள் கஞ்சா எப்படி விநியோகிக்கப்படுகிறது. இதுகுறித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் ரூபா கூறியுள்ளார்.

கைதிகள் மருத்துவ அறிக்கைகளை அழிக்க முயற்சிக்கின்றனர். நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க இருந்த சில மருத்துவ அறிக்கைகள் மாயமாகியுள்ளன என்றும் ரூபா தனது உயர் அதிகாரிகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சிறையில் உள்ள மருந்தகத்தையும் கைதிகள் ஆட்கொண்டுவிட்டனர். தூக்க மாத்திரை போன்றவை அவர்களுக்கு எளிதாக கிடைக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

வெளியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கக்கோரி கைதிகள் மருத்துவர்களை அச்சுறுத்துகின்றனர். பல மருத்துவர்களுக்கு கொலை மிரட்டல்களும் விடுக்கப்படுகின்றன என்றும் டிஐஜி ரூபா குற்றம்சாட்டியுள்ளார்.

சிறைத்துறை டிஜிபி மறுப்பு டிஜிபி ஹெச்எஸ்என் ராவுக்கு சிறையில் நடப்பதெல்லாம் தெரியவில்லை. அவரை சில அறிக்கைகள் சென்றடைவதும் இல்லை என்றும் ரூபா தனது உயர் அதிகாரிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகளை டிஜிபி ராவ் மறுத்துள்ளார்.