140 பேருடன் தரையிறங்க முயன்ற ஏர் கனடா விமானம், பெரும் ஆபத்திலிருந்து தப்பியிருப்பது சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
சான் பிரான்சிஸ்கோ விமான நிலையத்தில் தரையிறங்க முயன்ற ஏர் கனடா விமானமே ஆபத்திலிருந்து தப்பியிருப்பது தெரியவந்துள்ளது.
ஓடுபாதையில் தரித்து நின்ற மற்றொரு விமானத்திலிருந்து 30 மீட்டருக்கும் குறைவான இடைவெளியில் அது பறந்திருக்கிறது என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டோரோன்டோவிலிருந்து சான் பிரான்சிஸ்கோ சென்ற AC 759 விமானம், தரையிறங்கத் தயாரானது. அப்போது ஓடுபாதையில் இருந்த நான்கு விமானங்களை உரசி சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
அதில் ஒரு விமானத்துடன் ஏர் கனடாவுக்கு இருந்த இடைவெளி 30 மீட்டர் மட்டுமே என்று கனடாவின் போக்குவரத்துப் பாதுகாப்பு அமைப்பு அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.
எச்சரிக்கை சமிக்ஞை கிடைத்தவுடன் விமானி விமானத்தை மேலே ஏற்றியதால், ஏற்படவிருந்த பேரனர்த்தம் தவிர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சைப்ரஸ் நாட்டின் Larnaca பொது மருத்துவமனையில் இருந்து இலங்கை பெண்ணொருவர் தப்பிச் சென்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் அறிவித்துள்ளன.
39 வயதான இலங்கை பெண் ஒருவர் தப்பி ஓடியதால், அந்நாட்டு அதிகாரிக்கு ஒருவருக்கு எதிராக பொலிஸார் ஒழுக்காற்று விசாரணை ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.
Menogia பொலிஸாரின் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த அந்த பெண், குறிப்பிடப்படாத நோயினால் பாதிப்பப்பட்ட நிலையில் அந்த பெண்ணுக்கு அறுவை கிசிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை அந்த பெண் வைத்தியசாலையில் இருந்து தப்பி சென்றுள்ளார்.
அந்த பெண்ணை பாதுகாத்த அதிகாரிக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை மேற்கொள்ளுமாறு பொலிஸ் தலைமை அதிகாரியினால் உத்தரவிடப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் Stelios Stylianou தெரிவித்துள்ளார்.
அந்த பெண்ணை கண்டுபிடிப்பதற்கு பொலிஸார் பொதுமக்கள் உதவியை நாடியுள்ளனர்.
அந்த பெண் தொடர்பில் தகவல் அறிந்தால் Larnaca குற்ற விசாரணை பிரிவின் 24804060 என்ற இலக்கத்திற்கு அறிவிக்குமாறு பொது மக்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
எப்படியிருப்பினும் அந்த பெண் என்ன காரணத்திற்காக தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்தார் என்பதற்கான தகவல்கள் வெளியாகவில்லை.
கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்த தபால் ரயில் நேற்று அதிகாலை 2 மணியளவில் ஹட்டன் – கொட்டகலை ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட 60 அடி பாலத்துக்கு அருகில் தடம்புரண்டது, விபத்தின்போது மூவர் காயமடைந்து கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளனர்.
இதேவேளை, ஹட்டன் – கொட்டகலைக்கு இடையில் தடம்புரண்டுள்ள மூன்று ரயில் பெட்டிகளை தண்டாவளத்தில் உரிய முறையில் சீராக நிறுத்துவதற்கு சுமார் 2 வாரங்களாகும் என ரயில் மார்க்க பராமரிப்பு பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.
கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்த தபால் ரயில் நேற்று அதிகாலை 2 மணியளவில் ஹட்டன் கொட்டகலை ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட 60 அடி பாலத்துக்கு அருகில் தடம்புரண்டது, விபத்தின்போது மூவர் காயமடைந்து கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளனர்.
தடம்புரண்டுள்ள ரயில் பெட்டிகளை தண்டாளத்தில் நிறுத்துவதற்கு பாரம்தூக்கி இயந்திரமொன்றை கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் விபத்தினால் சிதைவடைந்துள்ள பாலத்தை சீர்செய்ததன் பின்னரே பாரம் தூக்கி இயந்திரத்தை கொண்டு சென்று ரயில் பெட்டிகளை தண்டவாளத்தில் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சுமார் 150 வருடத்துக்கும் பழைமையான இந்த பாலத்தை சீர் செய்வதற்காக இது போன்றை இரும்புகளை தேடிக்கொள்வதில் சிக்கல் நிலவுவதாகவும் ரயில்வே பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவத்தினால் சிதைவடைந்துள்ள 1 கிலோமீற்றர் தூரம் வரையான ரயில் பாதை இருவாரங்களுக்கு சீர் செய்யப்படும் எனவும் அதுவரையில் கொழும்பிலிருந்து செல்லும் ரயில்கள் ஹட்டன் ரயில் நிலையத்துடனும் பதுளையிலிருந்து வரும் ரயில்கள் கொட்டகலை ரயில் நிலையத்துடனும் மட்டுப்படுத்தப்படும்.
இந்த ரயில்களில் வரும் பயணிகளுக்காக ஹட்டன் மற்றும் கொட்டகலை ரயில் நிலையங்களுக்கு இடையில் பஸ் சேவையொன்றை ஈடுபடுத்த ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதேவேளை, நேற்றைய தினம் இரவு எட்டு மணிக்கு கொழும்பிலிருந்து புறப்படவிருந்த தபால் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது.
இந்தியாவில் பீகார் மாநிலத்திலுள்ள அரச அலுவலகமொன்று இடிந்து விழும் நிலையில் இருப்பதால் ஊழியர்கள் தலைகவசம் அணிந்து கொண்டு பணி புரிந்து வருகின்றனர்.
பீகாரின் கிழக்கு சாம்பரன் மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியர் அலுவலகக் கட்டிடம் மோசமான நிலையில் இருப்பதால் குறித்த அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் தலைகவசம் அணிந்து பணிபுரிந்து வருகின்றனர்.
மேலும் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வரும் பொதுமக்களும் தங்களைக் காத்துக்கொள்வதற்காக தலைகவசத்துடன் வருகின்றனர்.
குறித்த கட்டிடம் உபயோகப்படுத்த ஏதுவானது அல்ல என பீகார் பொதுப்பணித்துறை கடந்த வருடமே அறிவித்திட்ட போதும் இதுவரை அலுவலகத்துக்காக புதிய கட்டிடம் ஒதுக்கப்படவில்லை என்று ஊழியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதனால், அந்த ஆபத்தான கட்டிடத்திலேயே வட்டாட்சியர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. மேலும் அடிக்கடி கற்கள் பெயர்ந்து விழுந்ததில் ஊழியர்கள் பலர் காயமடைந்துள்ளதாகவும், மழை நேரத்தில் கட்டிடத்தின் மேற்கூரையில் இருந்து தண்ணீர் வருவதும் வழமையானது என ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் மலேரியா நோயினை முற்றாக அழித்த போதிலும் டெங்கு நோயினை அழிக்க முடியாதுள்ளது. இலங்கையில் எச். ஐ.வி மற்றும் டெங்கு நோய் பரவல் அதிகரித்துள்ளது என சுகாதாரத் துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
இந்த மாதத்தின் பின்னர் டெங்கு நோய் பரவல் குறைவடையும் எனினும் ஒக்டோபர் மாதத்தின் பின்னர் மீண்டும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
நாட்டில் டெங்கு பரவல் அதிகரித்து வருகின்றது. மிகவும் மோசமான வகையில் எதிர்பார்க்காத அளவில் டெங்கு நோய் பரவி வருகின்றது. நாட்டில் 12 மாவட்டங்களில் டெங்கு நோய் மோசமாக பரவும் அபாயம் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. ஆகவே இவற்றை தடுக்கும் நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்து வருகின்றோம். இலங்கையில் முன்னர் மலேரியா நோய் மிகப்பெரிய சவாலாக காணப்பட்டது. எனினும் அதனை நாம் முற்றாக அழித்துள்ளோம்.
எனினும் டெங்கு நுளம்புகளை முற்றாக அழிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்க முடித்து உள்ளது. நுளம்பு பரவலை கட்டுப்படுத்துவது மிகப்பெரிய சவாலாக உள்ளது. நாம் சுகாதார அமைச்சுடன் இணைந்து நடவடிக்கைகளை முன்னெடுத்த போதிலும் பொதுமக்களின் பூரண ஒத்துழைப்புகள் இல்லாது எம்மால் முழுமையாக செயற்பட முடியாது.
மேலும் கடந்த ஏழு மாதங்களில் சராசரியாக 90 ஆயிரம் பேர் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும் இந்த மாதம் இறுதியுடன் நோய் பரவல் குறைவடையும் வாய்ப்புகள் உள்ளது. காலநிலை சீராக அமையும் நிலையில் எம்மால் டெங்கு பரவலை கட்டுப்படுத்த முடியும்.
அதேபோல் ஒக்டோபர் மாதத்தின் பின்னர் மீண்டும் டெங்கு காய்ச்சல் பரவக்கூடிய சூழ்நிலை உள்ளது. மீண்டும் நாட்டில் சீரற்ற காலநிலை உருவாக்ககூடிய வாய்ப்புகள் உள்ளது எனவே மீண்டும் நிலைமைகள் மோசமடையும். எனினும் அரசாங்கமாக நாம் சகல ஆயதங்களையும் முன்னெடுத்து வருகின்றோம்.
எனினும் டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் அதிகமாக இருந்த போதிலும் மரண வீதமானது மிகவும் குறைந்த அளவில் காணப்படுகின்றது. அதாவது 0.3 வீதம் டெங்கு மரண வீதம் அடையாளம் காணப்பட்டுள்ளது. உலக சுகாதார ஸ்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளது. எனினும் நாட்டில் எச். ஐ.வி மற்றும் டெங்கு நோய் பரவல் மிகவும் வேகமாக அதிகரித்து வருகின்றது. இதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மிகவும் வேகமாக முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் இளைஞரணியின் நங்கூரம் விளையாட்டுக் கழகத்தின் ஒழுங்கமைப்பில் வீரமக்கள் தினத்திற்கான கண்காட்சி போட்டிகள் இன்று (13.07.2017) மாலை 3.30 மணிக்கு வவுனியா நெளுக்குளம் ஊர்மிளா கோட்ட மைதானத்தில் நடைபெற்றது.
கண்காட்சி போட்டியில் புளொட் அமைப்பின் மறைந்த உப தலைவர் அமரர் தோழர் நா.மாணிக்கதாசன் ஞாபகார்த்த கண்காட்சி வெற்றிக் கிண்ணங்களின் போட்டியில் நியூ பைட் விளையாட்டுக் கழகம் எதிர் ABC விளையாட்டுக் கழகங்கள் பங்குபற்றியிருந்தன.
புளொட் அமைப்பின் மறைந்த வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமரர் தோழர் த.சண்முகநாதன்(வசந்தன்) ஞாபகார்த்த கரப்பந்தாட்ட கண்காட்சி போட்டியில் சுப்பர் ஸ்ரார் எதிர் யங் பைற் அணிகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இன்றைய நிகழ்வின் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் மற்றும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினரும் வட மாகாண சபை உறுப்பினருமான ஜி.ரி.லிங்கநாதன் கலந்து கொண்டதுடன்.
சிறப்பு அதிதிகளாக புளொட் அமைப்பின் உப தலைவர்களில் ஒருவரும் வவுனியா நகர சபையின் முன்னாள் உப தலைவருமான திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) , ஈரோஸ் அமைப்பின் தலைவர் ச. துஷ்யந்தன், புளொட் அமைப்பின் மத்திய குழு உறுப்பினரும் செட்டிகுளம் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சு.ஜெகதீஸ்வரன் (சிவம்) , நங்கூரம் விளையாட்டுக் கழகத்தின் செயலாளர் எம்.விஸ்வநாதன், ரி-மொபைல் உரிமையாளர் செந்தில் மற்றும் கழகத்தின் தோழர்கள் ஆதரவாளர்களுடன் இளைஞரணியும் கலந்து சிறப்பித்தார்கள்.
தொடர்ந்து சுற்றுப் போட்டியின் போட்டிகள் ஆரம்பமாகியது.
வவுனியா வடக்கில் மருதோடை, பட்டிக்குடியிருப்பு, ஒலுமடு ஆகிய கிராமங்கள் யானையினால் பெரும்பாதிப்புக்குள்ளாகியுள்ளது. அத்துடன் ஒரு மாதத்திற்கு முன்னர் கூட ஒருவர் யானையினால் தாக்கப்பட்டதாகவும், பட்டிக்குடியிருப்பு பகுதியில் யானை வேலிக்காக மரங்கள் இறக்கப்பட்ட போதும் அது பின்னர் வேறு இடத்திற்கு கொண்டு செல்லப்ட்டுள்ளது.
அத்துடன் நெடுங்கேணி பகுதிகளில் யானைகளின் தாக்கம் உள்ள கிராமங்களில் குறிப்பிட்ட சில கிராமங்களின் குடியிருப்புக்களை சூழ்ந்து யானை வேலி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் வயல்களிற்கு மின்சார வேலிகள் அமைக்கவில்லை.
ஆனால் பதவியா போன்ற எல்லையோர சிங்களக் கிராமங்களிற்கு வயலிற்கும் சேர்த்தே மின்சார வேலி அமைக்கப்பட்டுள்ளதாக நெடுங்கேணியை சேர்ந்த தேவராஜரால் கூறப்பட்டது. இதற்கு வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரி வயலிற்கும் சேர்த்து மின்சார வேலி அமைக்க தமக்கு அனுமதி இல்லை என்றும், மருதோடை கிராமத்திற்கான மின்சார வேலி ஒன்றரை மாதங்களில் செய்யப்படுவதாக தெரிவித்தார்.
இதன் போது கருத்து தெரிவித்த ஜி.ரி.லிங்கநாதன் வனஜீவராசிகள் தினைக்களம், வனவள திணைக்களங்களங்கள் அபிவிருத்தி குழுவில் எடுக்கும் முடிவுகளினை செயற்படுத்துவதில்லை என்று தெரிவித்தார்.
இதன் அடிப்படையில் பிரதேச அபிவிருத்தி குழு இணைத்தலைவர்களினால் பிரதேச அபிவிருத்தி குழுவில் எடுக்கப்படும் முடிவுகளிற்கு சம்மந்தப்பட்ட திணைக்களங்கள் நடைமுறைப்படுத்ததவரின் அத்தினைக்களங்களிற்கு சம்மந்தப்பட்ட அமைச்சுக்கள் அல்லது அமைச்சின் செயலாளர்களிற்கு அறிவிக்கப்படும் என்று தீர்மானம் எடுக்கப்பட்டது.
வவுனியா வடக்கு பிரதேச செயலக அபிவிருத்திக் குழுக் கூட்டம் வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் இணைத் தலைவருமான கே.கே.மஸ்தான், ந.சிவசக்தி ஆனந்தன் ஆகியோரின் தலைமையில் இன்று காலை 10 மணியளவில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் வடமாகாண சபை சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வடமாகாணசபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், செ.மயூரன், இ.இந்திரராசா, ம.தியாகராஜா, வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் க.பரந்தாமன், நெடுங்கேணி மற்றும் புளியங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், மற்றும் திணைக்கள அதிகாரிகள், கிராமசேவகர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்தக் கூட்டத்தில் வீட்டுத்திட்ட பிரச்சனை, யானைப் பிரச்சனை, மலசலகூட பிரச்சனை, குளக்கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் கடும் வாதப் பிரதிவாதங்களுக்கு மத்தியில் நடைபெற்றது.
நீதிமன்ற வளாகத்தில் மோதிக்கொண்ட இரு பெண்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். கல்கிஸை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் மரண தண்டனைக் கைதியான வெலே சுதாவின் சகோதரருக்கு உரிமை கோரி இரு பெண்கள் மோதிக் கொண்டுள்ளனர்.
சட்டபூர்வ மனைவி தான் என தெஹிவளை பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவரும், தானே மனைவி என பன்னிபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவருமே இவ்வாறு மோதிக்கொண்டுள்ளனர்.
இதனையடுத்து தலையிட்ட பொலிஸார் குறித்த இரு பெண்களையும் கைது செய்யுள்ளனர்.
இதிலுள்ள நீர்ச்சத்து மற்றும் பொட்டாசியம் ரத்தத்தில் சேரும் கொழுப்பைக் குறைக்க உதவுகிறது.
நார்ச்சத்து பசியை கட்டுப்படுத்தி, உடல் எடையை குறைக்க உதவுவதுடன், இதயத்தின் பலத்தை அதிகரிக்கிறது.
இதிலுள்ள பல்வேறு ஊட்டச்சத்துகள் நம் உடலுக்கு மென்மை மற்றும் பலத்தை அதிகரிக்க உதவுகிறது.
மலச்சிக்கலைப் போக்கி, சர்க்கரை நோய் வராமல் தடுக்கிறது.
கால்களில் வீக்கம் ஏற்பட்டால், அதற்கு கத்திரிக்காயை அரைத்து வீக்கமுள்ள இடத்தின் மீது தேய்த்து வந்தால், வீக்கம் குறையும்.
கத்திரிக்காயை வேகவைத்து அதனுடன் பெருங்காயம், பூண்டு, உப்பு சேர்த்து சூப் செய்து சாப்பிட்டால், வயிற்று தொடர்பான பிரச்சனைகள் குணமாகும்.
வேகவைத்த கத்திரிக்காய் மற்றும் சிறிதளவு தேன் கலந்து மாலை நேரத்தில் சாப்பிட்டு வந்தால், தூக்கமின்மை அகலும்.
கத்திரிக்காயை நெருப்பில் சுட்டு வேகவைத்து, அதனுடன் சர்க்கரை சேர்த்து வெறும் வயிற்றில் சாப்பிட்டால், மலேரியா, மண்ணீரல் வீக்கம் குறையும்.
கத்திரிக்காய் அடிக்கடி உணவில் சேர்ப்பதால் இதயம், ரத்த நாளங்களில் ஏற்படும் நோய்கள் மற்றும் மாரடைப்பு ஏற்படுவது தடுக்கப்படும்.
விண்டோஸ் போன் உபயோகிப்பவர்களுக்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் ஓர் அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அது விண்டோஸ் 8.1 மற்றும் அதற்கு முந்தைய ஒப்ரேட்டிங் சிஸ்டம் கொண்டிருக்கும் போன்களுக்கு தனது சப்போர்ட்டை நிறுத்திக் கொள்வதாக மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.
அதே சமயம் அதன் புதிய ஓ.எஸ் ஆன விண்டோஸ் 10-க்கு தொடர்ந்து சேவையை வழங்குவோம் என குறிப்பிட்டுள்ளது. மேலும், விரைவில் புதிய அதிரடி திட்டங்களோடு திரும்ப வருவோம் என நம்பிக்கை தெரிவித்துள்ளது.
உலகில் விண்டோஸ் 8.1 மற்றும் அதற்கு முந்தை ஓ.எஸ் உபயோகிப்பவர்களின் நிலை கேள்வி குறியாக உள்ளது.
இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க வாய்ப்பில்லை.
டோனி, ரெய்னா, பிராவோ, மெக்குல்லம், அஸ்வின் மற்றும் ஜடேஜா என ஒரு நட்சத்திர பட்டாளத்தையே கொண்டிருந்தது சென்னை அணி.
இதனால் இரண்டு முறை ஐ.பி.எல் சம்பியன், இரண்டு முறை சாம்பியன்ஸ் லீக் சாம்பியன், நான்கு முறை ஐ.பி.எல் ரன்னர்ஸ்-அப், இரண்டு முறை அரையிறுதிப் போட்டிக்கு தகுதி என்று அசத்தியுள்ளது.
அதுமட்டுமின்றி பங்கேற்ற அனைத்து ஐ.பி.எல் போட்டிகளிலும் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற ஒரே அணி எது என்று கேட்டால் அதுவும் சென்னை அணிதான்.
இந்தியாவில் குழந்தை வரம் வேண்டும் பெண்கள் மீது கடவுள் என்று கூறி நபர் ஒருவர் அவர்கள் மீது ஏறிச் சென்று ஆசீர்வாதம் வழங்கும் வினோத வழிபாடு நடைபெற்றுள்ளது.
இந்தியாவின் Andhra Pradesh மாநிலத்தில் உள்ள Anantapur மாவட்டத்தில் அமைந்துள்ள Lakshmi Narasimha Swami கோவிலில் ஆண்டுதோறும் ஏகாதசி திருவிழா நடைபெறுவது வழக்கம். அது இந்தாண்டிற்கான ஏகாதசி திருவிழா இந்தமாதம் நடைபெற்றுள்ளது.
இத்திருவிழாவில் கலந்து கொண்டு கடவுளின் ஆசிர்வாதம் பெற வேண்டும் என்று ஏராளமானோர் அங்கு கூடியிருந்தனர்.
அந்த நேரத்தில் உள்ளூர் மற்றும் வெளியூரைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் திடீரென்று தரையில் விழுந்து, கடவுளை வணங்கினர்.
அப்போது நபர் ஒருவர் அங்கிருக்கும் பெண்கள் மற்றும் ஆண்கள் மீது ஏறிச் செல்கிறார், ஆசிர்வாதம் வழங்குற்கிறார்.
இது குறித்து அக்கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், குழந்தை இல்லாதவர்கள் இத்திருவிழாவின் போது,வந்து கடவுளை வணங்கினால் குழந்தை கிடைக்கும் என்றும், அதே போன்று நபர் ஒருவர் மீது கடவுள் இறங்கி அனைவருக்கும் ஆசிர்வாதம் வழங்குவார் என்று தெரிவித்துள்ளனர்.
நீண்ட இடைவெளியின் பின்னர் குழந்தை பாக்கியம் கிடைத்த தாய் ஒருவர், மகிழ்ச்சி தாங்கிக்கொள்ள முடியாது மாரடைப்பினால் மரணமடைந்துள்ளார்.
திருமணம் முடிந்து சில ஆண்டுகளின் பின்னர் முதல் குழந்தையை ஈன்றெடுத்த தாய் ஒருவர், சிசுவைப் பார்த்து அந்த சந்தோசத்தை தாங்கிக்கொள்ள முடியாது மரணித்துள்ளார்.
தம்புத்தேகம வைத்தியசாலையில் நேற்று முன்தினம் இந்த துரதிஸ்டவசமான சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதயம் வெடித்து குறித்த பெண் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தம்புத்தேகம தெல்ஹிரிய என்னும் இடத்தைச் சேர்ந்த 31 வயதான தினுசிகா சந்தமாலி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவ்வாறான மரணங்கள் ஆயிரக்கணக்கானோரில் ஒரு மரணமே சம்பவிக்கும் என சட்ட வைத்திய அதிகாரி டாக்டர் எச்.பீ. கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
குழந்தை ஈன்றெடுத்த போது தாய் ஆரோக்கியமாக இருந்தார் என தம்புத்தேகம வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குழந்தை நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
தெற்காசிய எல்லைக்குள் விசா இன்றி விமான பயணங்கள் மேற்கொள்வது தொடர்பில் பரீசீலனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
சார்க் எல்லை சட்டம் மற்றும் ஒழுங்கு உள்துறை அமைச்சர்களின் மாநாட்டு அமர்வுகள் நேற்று கொழும்பு, காலி முகத்திடல் ஹோட்டலில் இடம்பெற்றுள்ளது.பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இந்த அமர்வுகள் இடம்பெற்றுள்ளது.
எல்லை ரீதியில் முகம் கொடுக்கப்படும் பயங்கரவாத பிரச்சினை போதைப்பொருள் வர்த்தகம், ஆயுதம் கடத்தல் போன்ற நடவடிக்கைகளுக்கு எதிராக எல்லை என்ற ரீதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை தொடர்பில் இங்கு கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை தெற்காசிய எல்லைக்குள் பொது விசா அற்ற பயணங்களை அறிமுகப்படுத்தி வைப்பது தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது.
காதலனை வீட்டுக்கு அழைத்து காதலில் ஈடுபட்டவேளையில் வீட்டிற்குள் நுழைந்த தாயாரால் அசிட் வீச்சு மேற்கொள்ளப்பட்ட சம்பவமொன்று தெடிகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
தாய் இறப்பர் பால் எடுக்கசென்ற வேளை, மகளொருவர் தனது காதலனை வீட்டுக்கு அழைத்துள்ளார். தாயார் இறப்பர் பால் எடுத்து வீட்டுக்கு திரும்பிய வேளை வீட்டில் காதலனுடன் தனது மகள் இருந்தததைக் கண்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த தாய் தனது கையில் வைத்திருந்த கத்தியால் மகள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில், தனது காதலியை கத்தியால் தாக்குவதை பொறுக்கமுடியாத காதலன் தாயிடமிருந்த கத்தியைப் பறித்து அவர் மீது பதில் தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.
இதையடுத்து தாயார் குறித்த காதலனை வீட்டின் அறைக்குள் அடைத்து வைத்து யன்னல் ஊடாக அசிட் வீச்சு தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.
அசிட் மற்றும் கத்தி தாக்குதலில் மகளும் காதலனும் காயமடைந்த நிலையில் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச் சம்பவத்துடன் தொடர்புடைய தாயார் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய காதலனால் ஏற்கனவே பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய பெண் ஒரு வருடகாலமாக நன்னடத்தை பள்ளியில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இச் சம்பம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.