வவுனியா இளைஞர் யுவதிகளை தேசிய இளைஞர் விருதுப்போட்டியில் பங்கேற்குமாறு அழைப்பு!!

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் 2017 ஆம் ஆண்டுக்கான 39 ஆவது தேசிய இளைஞர் விருதுப்போட்டிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இப்போட்டியானது பிரதேசம், மாவட்டம், தேசியம் என மூன்று மட்டங்களில் நடாத்தப்படவுள்ளன.

வவுனியா மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் யுவதிகளை இத் தேசிய இளைஞர் விருதுப் போட்டியில் பங்கேற்று, வெற்றிபெற்று மாவட்டத்தின் பெருமையை பறைசாற்ற வேண்டும் என இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ.கேசவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

போட்டிக்காக விண்ணப்பிப்பவர்கள் 13 வயதிற்கும், 29 வயதிற்கும் உட்பட்டவர்களாக இருக்க வேண்டியதோடு, நாடகப் போட்டிக்கு விண்ணப்பிப்பவர்கள் 15 வயதிற்கும், 35 வயதிற்கும் இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்திலக்கிய விருதுப் போட்டிகள், அறிவிப்பாளர் (ஆங்கிலம், தமிழ்), பேச்சு (ஆங்கிலம், தமிழ்), இளம்பாடகர் (ஆங்கிலம், தமிழ்), கிராமியப் பாடல், கிராமிய நடனம், புத்தாக்க நடனம், பரத நாட்டியம், அபிநயம், சாஸ்திரிய இசைக்குழுக் கருவிகள் இசைத்தல், புகைப்பட வடிவமைப்பு ஆகிய போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

இளைஞர் யுவதிகளின் கலை, கலாசார திறமைகளை தேசிய ரீதியில் கொண்டுசெல்வதற்கு மிகச் சிறந்த தளமாக இது அமையும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 31 ஆம் திகதி போட்டிக்கான விண்ணப்பிக்கும் திகதி முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போட்டிக்கான விண்ணப்பம் தொடர்பான மேலதிக விபரங்களை மாவட்ட இளைஞர் கழக சம்மேளன தலைவர் சு.காண்டீபன் (0763806990) அல்லது இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ.கேசவன் (0775058672) எனும் தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொண்டு அறிந்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் பெண்களின் புகைப்படங்களை காட்டி ஆண்களை ஏமாற்றும் மோசடி வர்த்தகம்!!

இணையத்தளத்தில் பெண்களின் புகைப்படங்களை வெளியிட்டு அவற்றில் விருப்பமான பெண்களுடன் ஒரு இரவை கழிப்பதற்கு வாய்ப்பு என கூறி ஈசி கேஷ் ஊடாக பணம் கொள்ளையடிக்கும் செயற்பாடு ஒன்று பதிவாகியுள்ளது.

குருணாகல் பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பெயரை குறிப்பிட்டு பேஸ்புக் கணக்கு ஒன்று தயாரிக்கப்பட்டு இந்த மோசடி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல பெண்களின் புகைப்படங்கள் அந்த பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு அந்த பெண்களின் பெயர், வசிக்கும் இடங்கள், வயது மற்றும் ஒரு பெண்ணுக்கான செலவு ஆகியன குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் குறித்த பெண்களை விரும்புபவர்கள் ஒரு பெண் அல்லது பல பெண்களுடன் நேரத்தை செலவிடுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாகவும் அந்த பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

அதற்கமைய விருப்பமான பெண்ணின் புகைப்படத்தை தெரிவு செய்து அதில் குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பு மேற்கொண்டதன் பின்னர், முதலாவதாக வழங்கப்படும் இலக்கத்திற்கு ஈசி கேஷ் ஊடாக பணம் செலுத்துமாறு தொலைபேசி அழைப்பினை ஏற்கும் நபர் தெரிவிப்பார்.

பணம் வைப்பிலிட்டதன் பின்னர் அந்த பெண் தங்கியிருக்கும் விலாசம் அறிவிக்கப்படும் எனவும் கூறியுள்ளனர்.

அத்துடன் பணம் வைப்பிலிடாமல் பெண் தங்கியிருக்கும் இடத்தை அறிவிக்க முடியாதெனவும், முழுமையான பணத்தை வைப்பிலிட்டால் மாத்திரமே விலாசம் அறிவிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து பெண்களையும் தொடர்பு கொள்வதற்காக ஒரே தொலைபேசி இலக்கம் மாத்திரமே காணப்படுகின்ற நிலையில் ஈசி கேஷ் செய்வதற்காக வேறு தொலைபேசி இலக்கம் வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த புகைப்படங்களை பார்த்து ஏமாற்றமடைந்து பணம் வைப்பிலிட்ட பலர் உள்ளதாகவும், பணம் வைப்பிலிட்ட பின்னர் குறித்த தொலைபேசி இலக்கத்தை அடைய முடியாமல் போய்விடும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இரகசியமாகவே இவ்வாறான மோசடி நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த நிலையில் இது தொடர்பில் பொது மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

உலகை உலுக்கிய டொப் 5 இணையத் தாக்குதல்கள்!!

சென்ற வாரம் ஹாக்கர் குழுக்களால் தொடுக்கப்பட்ட இணைய வழி தாக்குதலில் 250-க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள நிறுவனங்களின் கணினி அமைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தச் சமயத்தில் இது போல ஹாக்கர் குழுக்களால் உலகை உலுக்கிய டொப் 5 இணைய வழி தாக்குதல்கள் குறித்த தகவல்கள் உங்களுக்காக..

2009 கூகுள் சீனா

சீனாவில் நடத்தப்பட்ட இந்த இணையத் தாக்குதல்களில் 30 பெரு நிறுவனங்களின் அறிவுசார் சொத்துக்கள் பாதிக்கப்பட்டது.

2011 ப்ளே ஸ்டேஷன் நெட்வோர்க் (PLAY STATION NETWORK) :

ப்ளே ஸ்டேஷன் வீடியோ கேம் இணையச் சேவை 23 நாட்களுக்கு முடங்கியது. இதில் சுமார் 8 கோடி பேர் பாதிக்கப்பட்டனர். இதனால் 900 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது.

2012-2014 ஹார்ட் பிலீட் (HEART BLEED)

இந்த ஹார்ட் பிலீட் தாக்குதலில் உலகில் இருக்கும் 17 சதவிகித இணையத்தளங்கள் பாதிப்பு – பல்வேறு தரப்பு மக்களின் அந்தரங்க உரையாடல்களை ஹாக்கர்கள் கைப்பற்றினர்.

2012 – 2014 யாஹூ (YAHOO)

யாஹூ தளத்தை பயன்படுத்தி வந்த 50 கோடி பேரின் தனிப்பட்ட தகவல்கள், மொபைல் எண்கள் ஹாக்கர்களால் திருடப்பட்டது.

2014 சோனி பிக்சர்ஸ்

சோனி நிறுவனத்தின் மீது ’கார்டியன்ஸ் ஆஃப் பீஸ்’ என்ற ஹாக்கர் குழு நடத்திய தாக்குதலில், பிரபல நடிகர்களின் மருத்துவ ஆவணங்கள், வெளிவரவிருக்கும் படங்களின் திரைக்கதைகள் ஹாக்கர்களால் திருடப்பட்டது.

உலகளவில் வெளியாகிருந்த “தி இண்டர்வியூ” திரைப்படம் ஹாக்கர் குழுவின் மிரட்டலால் தியேட்டர்களில் திரையிடுபடுவது நிறுத்தப்பட்டது.

30 தெரு நாய்கள் கூட்டமாக தாக்கியதில் இளம்பெண் உயிரிழப்பு!!

கனடாவில் இளம்பெண் ஒருவரை 30 தெரு நாய்கள் கூட்டமாக கடித்து குதறியதில் அவர் உடல் சிதைந்து பரிதாபமாக பலியாகியுள்ளார்.

மனிடோபா மாகாணத்தில் உள்ள Little Grand Rapids நகரில் Donnelly Rose Eaglestick(24) என்பவர் தனது 3 வயது மகனுடன் வசித்து வந்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை அன்று பணிக்கு சென்றுவிட்டு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணியளவில் வீடு திரும்பியுள்ளார்.

அப்போது, அந்நகரில் சுற்றி திரிந்த தெரு நாய்கள் சில கூட்டமாக சேர்ந்து தாயாரை கொடூரமாக தாக்கியுள்ளது.

சில மணி நேரத்திற்கு பின்னர், பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர்.

பொலிசார் வந்தபோது உடல் சிதைந்த நிலையில் கிடந்த இடத்தை சுற்றி சுமார் 30 தெரு நாய்கள் கூட்டமாக இருந்துள்ளன. பொலிசாரை கண்டு ஒரு நாய் ஆவேசமாக பாய்ந்ததால் அதனை பொலிசார் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளனர்.

பெண்ணின் சடலத்தை கைப்பற்றியபோது நாய்கள் கடித்து அவர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.

சடலத்தை நேரில் பார்த்த தோழி ஒருவர் பேசியபோது அதிகாலை நேரத்தில் நாய்கள் அதிகளவில் சத்தம் எழுப்பியபோது சந்தேகம் ஏற்பட்டது.

தற்போது தெரு நாய்களுக்கு தாயார் ஒருவர் பலியாகியுள்ளது வேதனையாக உள்ளது’ என கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

மேலும், தெரு நாய்கள் மூலம் மற்றொரு ஆபத்து நிகழாமல் இருக்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் பொலிசாரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மகனைப் பிரிந்த ஏக்கத்தில் பெண் மருத்துவர் செய்த செயல் : அதிர்ச்சியில் குடும்பம்!!

மகனை பிரிந்துவாழ்ந்த ஏக்கத்தில், பெண் மருத்துவர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே பெரும் துக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் சூளைமேடுபகுதியில் வசித்தவர் சுதா மல்லிகா. சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வந்தார்.

சுதாமல்லிகாவின் கணவர் சதீஷ்குமாரும் அதே மருத்துவமனையில் மருத்துவராக உள்ளார். எம்.பி.பி.எஸ். படிக்கும் போது இவர்களுக்குள் மலர்ந்த காதல் இருவீட்டார் சம்மதத்துடன் இரண்டாண்டுகளுக்கு முன் திருமணத்தில் முடிந்தது.

மருத்துவ தம்பதியருக்கு ஒன்றரை வயதில் ஒரு மகன் இருக்கிறான். கணவன் மனைவி இருவரும் அன்றாட பணிக்கு வந்து விடுவதால் குழந்தையை பராமரிக்க ஆள் இல்லாமல் வேதனையில் திணறினர்.

ஈரோட்டில் இருக்கும் சுதா மல்லிகாவின் பெற்றோர் குழந்தையை தாங்கள் பார்த்துக் கொள்வதாக முன்வந்ததால் குழந்தையை அங்கேயே விட்டுவிட்டனர்.

குழந்தை தன்னுடைய தாயாரிடம் இருந்தாலும் சுதாமல்லிகாவின் மனம் சென்னையில் நிம்மதியாக இல்லை. தினமும் தாயாருக்குப் போன் செய்து குழந்தையின் குரலை போனில் கேட்டு வருவதை வழக்கமாக வைத்திருந்தார்.

இந்நிலையில் நேற்று வழக்கமான நேரத்தில் தாயாருக்கு சுதாமல்லிகா போன் செய்யவில்லை. சுதாமல்லிகாவின் போன் வராததோடு அவரது எண்ணிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை.

இதையடுத்து அவரது தாயார் சுதாமல்லிகாவின் கணவர் சதீஷ்குமார் போனில் தொடர்பு கொண்டார். இதனால் பதறிய சதீஷ்குமார் வீட்டில் சுதாமல்லிகாவை தேடியுள்ளார்.

அப்போது தனியறையில் சுடிதாரின் துப்பட்டாவில் சுதாமல்லிகா தூக்கிட்ட நிலையில் பிணமாகக் கிடந்ததை சதீஷ்குமார் காண நேர்ந்தது.

தற்கொலைக்கான காரணமாக ஒரு கடிதத்தையும் சுதா மல்லிகா எழுதியுள்ளார். அதில், ‘தாய்ப்பாசத்தில் ஒவ்வொரு நாளும் துடிக்கிறேன் மகனே’, என்று தொடங்கி மகனின் பிரிவால் படும் துயரத்தை மட்டுமே எழுதி வைத்துள்ளார்.

சுதாமல்லிகாவின் பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. சுதாமல்லிகாவின் உடல், உடற்கூறு ஆய்வுக்காக அவர் பணியாற்றிய அதே ஸ்டான்லி மருத்துவமனைக்கு பொலிசாரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

ஒரே ஒரு புகைப்படத்தால் முச்சக்கரவண்டி ஓட்டுநருக்கு கிடைத்த உதவி!!

மும்பையில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தனது மகனை மடியில் வைத்துக்கொண்டு ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சயீத்- யாசிம் தம்பதியினருக்கு 1 மகனும், 3 மாத குழந்தையும் உள்ளது. இளம் வயது யாசீமை பக்கவாதம் தாக்கியதால் அவரால் தனது பச்சிளம் குழந்தையை சரியாக பார்த்துக்கொள்ள முடியவில்லை.

இந்தத் தம்பதிக்கு உறவினர்களும் கிடையாது. ஆட்டோ ஓட்டினால்தான் அரை வயிறு கஞ்சியாவது குடிக்க முடியும். மீண்டும் வேலைக்குச் செல்லவேண்டிய கட்டாயம்.

மூன்று மாதக் குழந்தையைப் பக்கத்து வீட்டுக்காரர் பார்த்துக்கொள்ள, மகனை என்ன செய்வது எனத் தெரியவில்லை.

சரி… நம்முடனே இருக்கட்டும் என வைத்துக்கொண்டார். வாடிக்கையாளர்கள் வந்தால், மகனை முன் இருக்கையில் தன்னுடன் வைத்துக்கொள்வார். சிறுவன் என்பதால் அடிக்கடி உறங்கிவிடுவான்.

அப்போது முன் இருக்கையில் மகனை மடியில் கிடத்தியவாறே ஆட்டோ ஓட்டுவதை முகமது சயீத் வழக்கமாக வைத்திருந்தார்.

இதனை அந்த ஆட்டோவில் பயணம் செய்த வினோத் என்பவர் புகைப்படம் எடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

சயீத்தின் தொலைபேசி எண், வங்கி கணக்கு எண் ஆகியவற்றை தனது டுவிட்டர் பக்கத்தில் வினோத் வெளியிட்டதால், சயீத்தின் மனைவிக்கு தற்போது பல்வேறு தரப்பில் இருந்து உதவிகள் குவிந்துள்ளன.

மீண்டு பிரபுதேவாவுடன் இணையவுள்ள நயன்தாரா!!

பீட்சா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ்.

அடுத்ததாக அவர் இயக்கத்தில் வெளியான ஜிகர்தண்டா, இறைவி உள்ளிட்ட படங்கள் வெளியாகி பாராட்டுக்களை பெற்றன. இதையடுத்து சிறிய இடைவேளைக்குப் பிறகு, தனது அடுத்த படத்தை இயக்க முடிவு செய்த கார்த்திக் சுப்புராஜ், அப்படத்தில் தனுஷை இயக்க முடிவு செய்திருந்தார்.

இந்நிலையில், தனுஷிற்கு பதிலாக அப்படத்தில் பிரபுதேவா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
நீண்ட இடைவேளைக்குப் பிறகு நடிகர் பிரபுதேவா தமிழ் சினிமாவில் `தேவி’ படத்தின் மூலம் மீண்டு தலைக்காட்டினார்.

இந்நிலையில், யங் மங் சங், கொலையுதிர்காலம் படத்தின் இந்தி பதிப்பு உள்ளிட்ட படங்களில் தற்போது நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் விஷால் – கார்த்தி இணைந்து நடிக்க உள்ள கருப்புராஜா வெள்ளைராஜா படத்தையும் இயக்குகிறார்.

இதையடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் பிரபுதேவா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இப்படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக சம்யுக்தா ஹெக்டே என்ற கன்னட நடிகை ஒப்பந்தமாகி இருந்த நிலையில், கன்னடர்கள் எதிர்ப்பால் இப்படத்தில் இருந்து தான் விலகுவதாக சம்யுக்தா அறிவித்திருந்தார்.

இதையடுத்து பிரபுதேவாவுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது, ஆனால், படக்குழு சார்பில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இளம் விஞ்ஞானி காரா மெக்கல்லோ அமெரிக்க அழகியாகத் தெரிவு!!

 
பிரபஞ்ச அழகி போட்டிக்கான அழகிகளின் தெரிவு இடம்பெற்று வரும் நிலையில், அமெரிக்க அழகியாக வேதியியல் துறையில் பட்டம் பெற்று, அமெரிக்க அணு ஒழுங்குமுறை ஆணையத்தில் விஞ்ஞானியாகப் பணியாற்றி வரும் காரா மெக்கல்லோ தெரிவாகியுள்ளார்.

அமெரிக்க அழகிப் போட்டி நெவாடா மாகாணத்தின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்றது. வெவ்வேறு மாநிலங்களின் சார்பில் 50 க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இவர்களில் 3 பேர் இறுதிப்போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டனர். அவர்கள் வாஷிங்டன் மாகாணத்தின் கொலம்பியா மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயதான காரா மெக்கல்லோ, நியூஜெர்ஸி மாகாணத்தைச் சேர்ந்த சாவ்வி வெர்ஜ், மினசோட்டா மாகாணத்தைச் சேர்ந்த மெரிடித் கோல்ட் ஆவர்.

இறுதிப்போட்டியாளர்களிடம் நடுவர்கள் முன்வைத்த கேள்விகளுக்கு காரா மெக்கல்லோ சாதூர்யமாக பதிலளித்தார். அதனைத் தொடர்ந்து அவர் மிஸ் அமெரிக்காவாக தெரிவு செய்யப்பட்டார்.

அமெரிக்க அழகியாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் காரா மெக்கல்லோ, இந்த ஆண்டு நடைபெறும் பிரபஞ்ச அழகி போட்டியில் அமெரிக்காவின் சார்பில் பங்கேற்பார். அவர் ஏற்கனவே மிஸ் வாஷிங்டன் பட்டம் வென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் கணனி கட்டமைப்புக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை : ஹரின் பெர்ணான்டோ!!

உலகின் பல நாடுகளுக்கு சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எனினும் இதனால் இலங்கையின் கணனி கட்டமைப்புக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை. எனினும் இது குறித்து அவதானத்துடன் இருக்கின்றோம் என தொலை தொடர்பு மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று நடைபெற்ற ஊடவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஐ.பி.எல் வீரர் ஹட்ரிக் எடுக்க உதவிய 12 வயதுச் சிறுவனின் டிப்ஸ்!!

இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) தொடரில் கடந்த சனிக்கிழமையன்று நடந்த போட்டியில் புனே சூப்பர் ஜெயன்ட் அணியை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஜெயதேவ் உனட்கட், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஒரு ஹட்ரிக் உள்பட ஐந்து விக்கெட்டுக்களை எடுத்தார்.

உனட்கட் ஹட்ரிக் எடுக்க ஆலோசனை தந்த ஓம்கார் இந்த போட்டியில் ஜெயதேவ் உனட்கட்டின் சிறப்பான பந்துவீச்சால் புனே அணி 12 ரன்களில் வென்றது.

தனது சிறப்பான பந்துவீச்சுக்கும், தான் ஹட்ரிக் எடுத்ததற்கும் காரணமான ரகசியம் மற்றும் சூட்சுமத்தை உனட்கட் பகிர்ந்துள்ளார்.

புனே நகரில் உள்ள ஏ.பி.எஸ்.எஸ் பள்ளியை சேர்ந்த 12 வயது மாணவனை தான் சந்தித்ததையும், அந்தச் சிறுவனின் ஆலோசனை தனது பந்துவீச்சு மெருகேறுவதற்கு உதவியதையும் உனட்கட் எடுத்துரைத்தார்.

கடந்த எப்ரல் 28-ஆம் திகதியன்று, உனட்கட், புனே அணியின் கேப்டன் ஸ்டிவன் ஸ்மித் மற்றும் பிளஸிஸ் ஆகியோருடன் இணைந்து மாணவர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சி ஒன்றை நடத்தினர்.

இதில் கலந்து கொண்ட ஓம்கார் பவார் என்ற மாணவன் சற்றும் தயக்கமில்லாமல் எவ்வாறு ஹட்ரிக் எடுப்பது என்று ஆலோசனை வழங்கியுள்ளான்.

கிராஸ்-ஸீம் எனப்படும் குறுக்கு வெட்டாக போடப்படும் வேகப்பந்து வீச்சில் சில நுணுக்கங்களை ஆலோசனையாக ஓம்கார் வழங்கியுள்ளான்.

இடதுகை பந்துவீச்சாளரான உனட்கட், ஓம்கார் தந்த ஆலோசனையால் மிகவும் ஈர்க்கப்பட்டு, மற்ற மாணவர்கள் முன்னிலையில் இந்த நுணுக்கத்தை பலமுறைகள் இருவரும் பயிற்சி பெற்றனர்.

சிறுவனின் ஆலோசனையால் தனது அணிக்காக போட்டியை வெல்ல உதவிய உனட்கட், இன்ஸ்டாகிராம் சமூகவலைதளத்தில் இது தொடர்பாக ஒரு காணொளியை வெளியிட்டுள்ளார்.

மேலும், இது தான் ஓம்கார் அளித்த பந்துவீச்சு மந்திரம். இதனால்தான் நான் ஹட்ரிக் எடுத்தேன். குட்டிப் பையனுக்கு எனது நன்றி என்று உனட்கட் பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தில் ஆட்டத்தை ஆரம்பித்த அக்னி பகவான் : திருத்தணியில் 112 டிகிரி வெப்பம்!!

தமிழகத்தில் வெயில் சுட்டெரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது போலவே பல நகரங்கள் சுட்டெரிக்கின்றன. திருத்தணியில் அதிகபட்சமாக 112 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.

வட தமிழகத்தில் அனல் காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அக்னி நட்சத்திர காலத்தை மக்கள் உணரத் தொடங்கியுள்ளனர். திகுதிகுவென பற்றி எரிகின்றன. பல நகரங்களில் அனலை வாரி இறைத்தது போல வெப்பம் சுட்டெரிக்கிறது.

வெப்பத்தின் பாதிப்பை தாங்க முடியாத மக்கள் வீடுகளுக்குள்ளே முடங்கியுள்ளனர். வெயில் தணிந்த பின்னர் வெளியில் போகலாம் என்று தங்களின் பணிகளை ஒத்தி வைத்துள்ளனர்.

அனலடிக்கும் சென்னை சென்னையில் நேற்று முதலே வெப்பம் அதிகரித்துள்ளது. இன்று காலை முதலே 100 டிகிரி பாரனைட்டை தாண்டி பதிவாகி வருகிறது.

இதனால் புழுக்கம் அதிகரித்துள்ளது. கடல் காற்று வீசியும் அனலின் வேகத்தை மக்களால் தாக்கு பிடிக்க முடியவில்லை. திகுதிகு திருத்தணி திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் காலை முதலே வெயில் வாட்டி எடுக்கிறது.

இன்று மாநிலத்திலேயே அதிகபட்சமாக 112 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. மக்கள் நடமாட்டம் குறைந்து சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

100 டிகிரி பாரன்ஹீட் கடந்த வாரங்களில் வெப்பம் சற்றே தணிந்திருந்த நிலையில் நேற்று முதல் மீண்டும் அக்னி பகவான் தனது ஆட்டத்தை ஆரம்பித்து விட்டார்.

மாநிலம் முழுவதும் வெயில் வாட்டி வருகிறது. வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பல நகரங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் அதிகமான வெப்பம் பதிவாகியுள்ளது.

வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர்.

அனல்காற்று எச்சரிக்கை வடதமிழகம், புதுச்சேரியில் அனல் காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்கத்தில் உள், தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யலாம் என்றும் தெரிவித்துள்ளது.

அதிவேக வீதியில் விதிகளை மீறிய சுமார் 20,000 சாரதிகள் கைது!!

இவ் வருடத்தின் இதுவரையாக காலப் பகுதியில் அதிவேக வீதியில் விதிகளை மீறிய சுமார் 20,000 சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் நேற்று வரை தெற்கு அதிவேக வீதி மற்றும் கட்டுநாயக்க அதிவேக வீதிகளில், விதிகளை மீறிய 19,837 பேர் இவ்வாறு கைதாகியுள்ளனர்.

இதற்கமைய, அதிக வேகமாக வாகனத்தை செலுத்திய குற்றச்சாட்டிலேயே பெருமளவானோர் கைதாகியுள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மனைவியை சமைத்துச் சாப்பிட முயன்ற கணவர் தற்கொலை!!

மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சினையால் அவரைக் கொலை செய்து துண்டு துண்டாக வெட்டிச் சமைத்துக்கொண்டிருந்த கணவர், பொலிஸாரிடமிருந்து தப்பிக்க தற்கொலை செய்துகொண்டார். மூன்றாண்டுகளுக்கு முன் இடம்பெற்ற இச்சம்பவம் தற்போதே வெளிவந்துள்ளது.

அவுஸ்திரேலியாவின் குயீன்ஸ்லேண்ட் நகரைச் சேர்ந்தவர் மார்க்கஸ் வோல்கி (27). இவரது மனைவி மயேங் ப்ரெசிட்டியோ(23). இவர் இந்தோனேசியாவைச் சேர்ந்தவர். ஆடம்பர வாழ்க்கை மீது இருவருக்கும் அதீத ஈடுபாடு இருந்தபோதும், இருவரது வருமானமும் தங்களது விருப்பத்தைப் பூர்த்திசெய்துகொள்ளப் போதுமானதாக இருக்கவில்லை.

தாம் விரும்பும் வாழ்க்கையை வாழ்ந்தே தீருவது என்று முடிவெடுத்த மயேங், தனது கணவர் வோல்கியின் அனுமதியுடன் பாலியல் தொழிலில் ஈடுபட்டார்.

வெளிநாடுகளில் இருந்தும் மயேங்குக்கு அழைப்புகள் வரத் தொடங்கின. இதனால், அவர்கள் எதிர்பார்த்த வாழ்க்கை அவர்கள் இருவருக்கும் கிடைத்தது. எனினும் இருவருக்கும் இடையே மன வேறுபாட்டால் அடிக்கடி சச்சரவுகள் ஏற்படத் தொடங்கியுள்ளன.

கடந்த 2014ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம், இருவருக்கும் இடையே பலமான வாக்குவாதம் எழுந்தது. இதில் கடும் கோபமடைந்த வோல்கி, மயாங்கைக் குத்திக் கொலை செய்தார். அப்படியும் ஆத்திரம் தீராத வோல்கி, மயாங்கின் உடலைத் துண்டுதுண்டாக வெட்டி அதைச் சமைக்கவும் முயற்சித்துள்ளார்.

அதன்போது, மின் இணைப்பில் கோளாறு ஏற்படவே அது குறித்து மின் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன் பேரில் பழுதைச் சரிசெய்ய வந்த ஊழியர்கள், சமையலறையில் இறைச்சிக்குப் பதிலாக பாரிய சதைப் பிண்டங்களைக் கண்டு அதிர்ச்சியுற்றனர். எனினும் பழுதைச் சரிசெய்துவிட்டு வெளியேறிய அவர்கள், தங்கள் சந்தேகத்தை பொலிஸில் தெரிவித்துச் சென்றனர்.

அதன்பேரில் வோல்கியின் வீட்டுக்கு வந்த பொலிஸார், சமையலறையைச் சோதனையிட ஆரம்பித்தனர்.

தனது குட்டு வெளிப்பட்டு விடும் எனப் பயந்த வோல்கி பக்கத்துக் அறைக்குத் தப்பிச் சென்று கத்தியால் தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்துகொண்டார்

பிரித்தானியாவில் சிறுமிகளை பலாத்காரம் செய்த வழக்கில் தமிழர்களுக்கு சிறைத் தண்டனை!!

பிரித்தானியாவில் சிறுமிகள் மீது பாலியல் தாக்குதல் நிகழ்த்திய குற்றங்களுக்காக இரண்டு தமிழர்களுக்கு அந்நாட்டு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது.

இங்கிலாந்து நாட்டில் உள்ள Wallasey நகரை சேர்ந்த இளவரசன்(26) என்பவரும் Wigan நகரை சேர்ந்த வினோதன் ராஜேந்திரம்(27) என்பவரும் சகோதர்கள் ஆவர்.

தமிழர்களான இருவரும் கடந்த 2010 முதல் 2016ம் ஆண்டு வரை Birkenhead, Walton மற்றும் Garston நகரங்களில் உள்ள வர்த்தக மையங்களில் பணிபுரிந்து வந்துள்ளனர்.

இந்த காலக்கட்டத்தில் இவர்களது கடைகளுக்கு வந்த சிறுமிகளிடம் அன்பாகவும், பாசமாகவும் இருப்பது போல் பாசாங்கு செய்து வந்துள்ளனர்.

சிறுமிகளுக்கு இலவசமாக இனிப்புகள், அவர்களது செல்போன்களுக்கு இலவசமாக ரீ-சார்ஜ் செய்வது உள்ளிட்ட உதவிகளை செய்து அவர்களின் நம்பிக்கையை பெற்று வந்துள்ளனர்.

சகோதர்கள் மீது நம்பிக்கை கொண்ட 9 சிறுமிகள் அவர்களது கடைகளுக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளனர். சிறுமிகளுடன் இருவரும் அடிக்கடி வெளியே சென்று பொழுதை கழித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், 14 மற்றும் 15 வயதுடைய சிறுமிகளை சகோதரர்கள் இருவரும் காரில் அழைத்துச்சென்றுள்ளனர்.
ஆட்கள் நடமாட்டம் இல்லாத குடியிருப்பு ஒன்றிற்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு மதுவை ஊற்றி கொடுத்துள்ளனர்.

பின்னர், மதுபோதையில் இருந்த சிறுமிகளுடன் சகோதரர்கள் இருவரும் பாலியல் தாக்குதலை நடத்தியுள்ளனர். இவ்விவகாரம் வெளிச்சத்திற்கு வந்த நிலையில், இருவரையும் பொலிசார் கைது செய்தனர்.

லிவர்பூல் நீதிமன்றத்தில் இவ்வழக்கின் இறுதி விசாரணை நேற்று வந்துள்ளது. அப்போது, சிறுமிகளை பாலியல் ரீதியாக தாக்குவதற்காகவே அவர்களிடம் நண்பர்களை போல் இருவரும் நடித்து வந்துள்ளனர்.

இருவரின் குற்றங்களும் மன்னிக்க முடியாதது. எனவே, முதன்மை குற்றவாளியான இளவரசனுக்கு 22 ஆண்டுகள் மற்றும் 6 மாதங்களும், இரண்டாவது குற்றவாளியான வினோதனுக்கு 18 ஆண்டுகள் மற்றும் 6 மாதங்கள் சிறை தண்டனை விதிப்பதாக நீதிபதி அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளார்.

வவுனியாவில் இடம்பெறும் போராட்டத்திற்கு ஆதரவாக யாழ்ப்பாணத்திலிருந்து மக்கள் வருகை!!

 
​வவுனியாவில் போராட்டத்தினை மேற்கொண்டு வரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தொடர்ந்தும் சுழற்சி முறையில் இன்று (1​6​.05.2017) 8​2​வது நாளாகவும் தற்காலிக தகரக் கொட்டகைக்குள் தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

இவர்களுக்கு யாழ்ப்பாணத்திருந்து வந்த ​​​காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ​ஆதரவினை வழங்கியதுடன் நாங்கள் சாகும்வரை எமது ​பிள்ளைகளை தேடிக்கொண்டு தான் இருப்போம் என்று ​தெரிவித்தனர். இது தொடர்பில் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்..

கடந்த 1996ம் ஆண்டு முதல் எங்களுடைய பிள்ளைகள் காணாமற்போயுள்ளனர்​.​ 1997ம் ஆண்டு இலங்கை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு காணாமற்போனோர் பெற்றோர் பாதுகாவலர் சங்கம் ​அன்றிலிருந்து இன்று வரையும் எமது ​பிள்ளைகளை தேடிக்கொண்டு ​இருக்கின்றோம்.

எங்களினால் எவ்வளவோ போராட்டம் ​மேற்கொள்ளப்பட்டது.​ ​ஒன்றிற்கும் தீர்வு கிடைக்கவில்லை. இன்று வவுனியாவில் 82​ ​நாள்களாக போராட்டம் மேற்கொண்டு ​வருபவர்களுக்கு அதரவு வழங்குவதற்காக இன்று யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியாவிற்கு வந்துள்ளோம்​ எனத்​ ​தெரிவித்தனர்.

வவுனியா பம்மைமடு வைகறை நோயாளிகளுக்கு காற்று மெத்தை வழங்கிவைப்பு!!

 
வவுனியா மன்னார் வீதியில், வவுனியா நகரத்திலிருந்து சுமார் 4 கிலோமீற்றர் தொலைவில் உள்ள வைகறை புனர்வாழ்வு நிலையம் வடக்கின் முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வில் நம்பிக்கை ஓளியை ஏற்றும் இடமாக மாறிவருகின்றது.

இவற்றில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் நிலமையினை கருத்தில் கொண்டு வவுனியா தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் கண்ணன் ஏற்ப்பாட்டில் லண்டன் துர்க்கை அம்மன் ஆலயத்தின் நிதி பங்களிப்பினால் இன்று (16.05.2017) மாலை 3.30 மணியளவில் சுமார் ஒரு லட்சம் பெறுமதியான ஒன்பது காற்று மெத்தை (bubble matress) வழங்கி வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் கு.அகிலேந்திரன், மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் எஸ்.எஸ்.வாசன், வைத்தியசாலையின் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

வடக்கு கிழக்கு மற்றும் ஏனைய மாவட்டங்களை சேர்ந்த 13க்கும் மேற்ப்பட்ட நோயாளிகள் இங்கு சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.