வவுனியாவில் பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபருக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை!!

வவுனியா – ஆச்சிபுரம் கிராமத்தில் 2014ஆம் ஆண்டு 11 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபருக்கு 20 வருட கடூழிய சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைகள் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் முன்னிலையில் இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போதே குற்றவாளிக்கு 20 வருட கடூழிய சிறையும், 10 ஆயிரம் ரூபா தண்டப்பணமும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 5 இலட்சம் ரூபா நட்ட ஈடும் வழங்குமாறும் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார்.

மேலும், நட்ட ஈட்டுப்பணத்தை செலுத்தத்தவறும் பட்சத்தில் ஒரு வருட கடூழிய சிறைத்தண்டனையும், தண்டப்பணம் செலுத்தத்தவறும் பட்சத்தில் ஒரு மாதம் சாதாரண சிறையும் வழங்கப்பட்டுள்ளது.

வவுனியா சுகாதாரத் தொண்டர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க வட மாகாணசபைக்கு அதிகாரமும் இல்லை : செ.மயூரன்!!

 
இன்று (16.05) காலை 10.30 மணியளவில் சுகாதாரத் தொண்டர்களின் போராட்டகளத்திற்குச் சென்ற வடமாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன் சுகாதாரத் தொண்டர்கள் கடந்த 13வது நாளாக மேற்கொண்டு வரும் போராட்டத்தினை ஆதரித்து அவர்களைச் சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்..

சுகாதாரத் தொண்டர்களின் போராட்டம் நியாயமானது. அவர்களின் போராட்டத்தை வடக்கு மாகாண சபைக்கு திருப்பவது என்பது பொருத்தமில்லாதது. வடக்கு மகாகண சுகாதார அமைச்சரிடம் தொடர்பு கொண்டபோது வடக்கு மகாணசபைக்கும் தனது அமைச்சுக்கும் நியமனம் வழங்கவதற்கு அதிகாரம் இல்லை என்று தெளிவாக தெரிவித்துள்ளார். அத்துடன் மக்கள் பிரதிநிதிகள் போராட்டக்களத்திற்குச் சென்று தவறாக கருத்துக்களை தெரிவித்து வருவதாகவும் வருத்துத்துடன் தெரிவித்துள்ளார்.

இவ்வளவு போராட்டங்கள் நடைபெற்றும் இந்த வடக்கு மாகாண சபைக்கு எந்த ஒரு அதிகாரமும் இல்லை என்று தெரிந்த இந்த மத்திய அரசு ஏன் இவர்கள் தொடர்பான விடயத்திலே அக்கறைகொள்ளாமல் இருக்கின்றார்கள் என்ற கேள்வி எங்களுக்குள்ளே இருக்கின்றது.

வடக்கு மாகாணசபையை பல வருடங்கள் நடத்தாது முதன் முதலாக 2013ம் அண்டு வடக்கு மாகாண சபையை உருவாக்கி இதன் பின்னர் 2015ம் ஆண்டு 900 பேருக்கு விஷேட அதிகாரங்கள் மூலம் அல்லது விஷேட செல்வாக்கினைப் பயன்படுத்தி ஒரு வேலைவாய்ப்பினைக் கொடுத்துள்ளார்கள்.

மத்திய அரசு ஒரு விஷேட மான கோரிக்கையை கொண்டு வந்து இப்போது இருக்கின்ற வடமாகாணம் முழுவதும் இருக்கின்ற சுகாதாரத் தொண்டர்களுக்கு நிரந்தர நியமனத்தைக் கோருகின்றார்கள். கடந்த 20 வருடங்களாக வேலை செய்திருக்கின்றார்கள் என்று மேலும் தெரிவித்தார்.

வவுனியாவில் 10 வயது சிறுமி துஸ்பிரயோகம் : சந்தேகநபருக்கு பிணை வழங்க மறுப்பு!!

வவுனியாவில் சிறுமி ஒருவரை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட சந்தேகநபருக்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுத்துள்ளது.

நெடுங்கேணி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட ஒலுமடு கிராமத்தில் 10 வயது சிறுமி ஒருவர் கடந்த 24.05.2016 அன்று துஸ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு மீண்டும் இன்று (16.05.2017) வவுனியா உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் சந்தேகநபரை பிணையில் செல்வதற்கான அனுமதியை நீதிபதி மறுத்திருந்ததாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த சிறுமியின் தாயார்,

நெடுங்கேணி பொலிஸார் துஸ்பிரயோகம் தொடர்பான விசாரணைகளை உரிய முறையில் மேற்கொள்ளவில்லை என்றும் சிறுமியின் ஆடைகள் உட்பட தடயப்பொருட்கள் எதனையும் சேகரித்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவில்லை என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன், நீதிமன்றத்தை பிழையாக வழிநடத்தும் விதமாக சிறுமி மீது சந்தேகநபர் பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொள்ளவில்லை. மாறாக அவரை கண்டிக்கும் விதமாக அடித்துள்ளார் என பொய்யாக வழக்கு பதிவு செய்துள்ளதாக தெரிவித்து, பொலிஸாருக்கு விசாரணைகள் சரியான முறையில் நடத்தப்பட்டு நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், வவுனியா சிறுவர் துஸ்பிரயோக நன்னடத்தை அதிகாரிகள் இவ்விடயம் தொடர்பாக உரிய நடவடிக்கைககளை மேற்கொள்ளவில்லை என்பதுடன், சிறுவர் நன்னடத்தை அதிகாரி துஸ்பிரயோக சம்பவம் நடைபெற்று ஒரு மாதம் கடந்த நிலையிலேயே சிறுமியின் வீட்டிற்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்த நிலையில்,

சிறுவர் நன்னடத்தை அதிகாரியினால் நீதிமன்றில் சமர்ப்பித்த அறிக்கை தொடர்பாக நீதிமன்றம் விசேட கவனம் செலுத்தியுள்ளதாகவும் சிறுமியின் தாயார் மேலும் தெரிவித்தார்.
-தமிழ்வின்-

வவுனியாவில் தனியார் கல்வி நிலையங்கள் 6 மணிக்கு முன்னர் மூடப்பட வேண்டும் : செ.மயூரன்!!

வவுனியா மாவட்டத்தில் இயங்கும் தனியார் கல்வி நிலையங்கள் மாலை 6 மணிக்கு பின்னரும் இயங்குவதாக வடமாகாண சபை உறுப்பினர் செ.மயூரன் நேற்று நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தெரிவித்திருந்தார்.

இதன்காரணமாக பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்த அவர், கல்வி நிலையங்களுக்கு சில நேரக் கட்டுப்பாடுகளை முன்வைக்க வேண்டும் எனவும், ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை வழங்கி மாணவர்களுக்கு ஒரு நாளாவது வீட்டில் இருக்க சந்தர்ப்பம் வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இது தொடர்பில் கவனம் செலுத்திய இணைத்தலைவர்களான வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன், வர்த்தக கைத்தொழில் அமைச்சர் றிசாட் பதியுதீன் ஆகியோர் அதனை வடமாகாண கல்வி அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

இதற்கு பதிலளித்த வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, வடமாகாணத்தில் உள்ள தனியார் கல்வி நிலையங்கள் இயங்குவது தொடர்பில் ஏற்கனவே சுற்றறிக்கை தயாரிக்கப்பட்டு சம்மந்தப்பட்ட திணைக்களங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

ஆனால் அந்த நடைமுறை இங்கு பின்பற்றப்படவில்லை என்கிறீர்கள். அதனால் அதனை மீள அனைத்து பிரதேச செயலகம் மற்றும் உள்ளூராட்சி சபைகளுக்கும் அனுப்பி நடைமுறைப்படுத்துமாறு தெரிவிக்கின்றோம். மீறும் தனியார் கல்வி நிலையங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார். இதனை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவும் ஏற்றுக் கொண்டது.

வவுனியாவில் முறையாக நிர்மாணிக்கப்படாத புகையிரதக் கடவைகளை திருத்தி அமைக்க முடிவு!!

வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள புகையிரதக்கடவைகள் பல முறையாக நிர்மாணிக்கப்படாதுள்ளமை தொடர்பில் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் நேற்று நடைபெற்ற வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் தெரிவித்தார்.

குறிப்பாக பூங்காவீதி- வைரவபுளியங்குளம் கடவை, சிங்கள பிரதேச சபை வீதி- குருமண்காடு கடவை, தாண்டிக்குளம்- திருநாவற்குளம் கடவைகள் உட்பட வவுனியாவிலிருந்து ஓமந்தை வரையான புகையிரதக்கடவைகள் ஒழுங்கானமுறையில் நிர்மாணிக்கப்படவில்லையென்றும், தண்டவாளம் வீதிக்கு மேலாக தெரிவதாகவும் இதனால் பயணிக்கும் வாகனங்கள், மோட்டார் சைக்கிள்கள், பாடசாலை செல்லும் மாணவர்கள் பெரிதும் சிரமத்தை எதிர்நோக்குவதாகவும் இதனை திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டக்கொண்டார்.

இதனை ஏற்ற மாவட்ட ஒருங்கிணைப்’புக்குழு இது தொடர்பில் புகையிரதத் திணைக்களத்தை நடவடிக்கை எடுக்குமாறும் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து இலங்கை புகையிரதத் திணைக்களத்தின் அதிகாரிகள் மேற்படி இடங்களுக்கு விஜயம்செய்து அவற்றை பார்வையிட்டு அதனை திருத்தி அமைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தனர்.

மற்றுமொரு சைபர் தாக்குதல் : அவதானத்துடன் இருக்குமாறு நிபுணர்கள் எச்சரிக்கை!!

மற்றுமொரு சைபர் தாக்குதல் நடத்தப்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாக இருப்பதாக இங்கிலாந்து நிபுணர்கள் கணித்துள்ளனர்.

உலகின் சுமார் 100 நாடுகளில் உள்ள நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் கணினிகளில் ரன்சம்வேர் வைரஸ் மூலம் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ரான்சம்வேர் வைரஸ் தாக்குதலால், இந்தியா, ஸ்பெயின், இங்கிலாந்து, ரஷியா என கிட்டத்தட்ட 100 நாடுகள் பெரும் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றன.

இங்கிலாந்தில் மருத்துவ சேவைகள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன, இந்த தாக்குதலுக்கு காரணமானவர்கள் யார் என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்த நிலையில், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ‘மால்வேர் டெக்’ என்னும் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள், இந்த வைரஸ் தாக்குதலை ஓரளவு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.

அதே நேரத்தில் இன்னுமொரு சைபர் தாக்குதல் நடத்தப்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாக இருப்பதாக அவர்கள் கணித்துள்ளனர். அந்த தாக்குதல் அனேகமாக இன்று (திங்கட்கிழமை) நடைபெறலாம் என அவர்கள் யூகிக்கின்றனர்.

இந்தப் பிரச்சினை பெருமளவு சீர்செய்யப்பட்டுள்ளது எனினும் கணணி வைரஸிற்கு எதிராக மேலும் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட வேண்டும், என இங்கிலாந்து உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதுவரை இப்படி ஒரு சைபர் தாக்குதல் நடந்தது இல்லை என்று யூரோபோல் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பில் பாடசாலை மாணவி தற்கொலை!!

கொழும்பிலுள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 15 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்து உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவி தனது வீட்டின் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று முன் தினம் இடம்பெற்றுள்ளது.

மாணவியின் மரண விசாரணை களுபோவில தெற்கு வைத்தியசாலையின் திடீர் மரண பரிசோதகர் பாரிந்த கொட்டுகொட முன்னால் இடம்பெற்றுள்ளது.

தற்கொலைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.
கிருலப்பனை பொலிஸ் பரிசோதகர் உபுல் சமரசிங்கவின் ஆலோசனைக்கமைய அதிகாரிகள் குழுவொன்று மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது

தந்தையின் அகதி வாழ்க்கையை மீட்டுப்பார்த்த கனடா வாழ் இலங்கை தமிழ்ப் பெண்!!

புகலிடக் கோரிக்கையாளர்களாகச் சென்ற இலங்கைத் தமிழர்களின், அவர்களது அகதி வாழ்க்கை தொடர்பில் உலகளாவிய ரீதியில் அதிகம் பேசப்பட்டு வருகின்றது.

அந்த வகையில், கனடா வாழ் வைதிகா (Vaithiga) கருணாநிதி என்ற இலங்கை தமிழ்ப் பெண் ஒருவர் தனது அகதி வாழ்க்கை தொடர்பில் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

சமூக பணி தொடர்பிலான கற்கை நெறிகளை படித்த வைதிகா (Vaithiga) , தற்போது ஒரு மனநல சுகாதார ஊழியராக பணியாற்றி வருகின்றார்.

தனது தந்தை புகலிடக் கோரிக்கையாளராக நாட்டை விட்டு செல்லும் போது அவர் எதிர்நோக்கிய இன்னல்கள் குறித்து வைதிகா (Vaithiga) கருத்து தெரிவித்துள்ளார்.

“36 ஆண்டுகளுக்கு முன்னர், என் அப்பா இலங்கையை விட்டு வெளியேறினார், எனது அப்பாவின் குழந்தை பருவம் இலங்கையிலேயே ஆரம்பிக்கப்பட்டது. அவர் மகிழ்ச்சியையும் வலிகளையும் இலங்கையிலேயே அனுபவித்து வந்தார்.

எனது தந்தையின் இளம் வயதிலேயே அவரது தாயார் இறந்துவிட்டார். அவர் தனது குடும்பத்தை காப்பாற்ற பல முயற்சிகளை மேற்கொண்டார். எனவே கையில் குறைந்த பணத்துடன் ஏதாவது வேலையை தேடி இலங்கையை விட்டு வெளிநாடு சென்றார்.

இவ்வாறு வெளிநாட்டிற்குச் சென்ற எனது தந்தை, சுரங்கப்பாதை நிலையங்களிலும் மற்றும் சீரற்ற புகையிரத நிலையங்களிலும் பல இரவுகளை கழித்துள்ளார்.

இந்த நிலையில் அவர் தெரியாத நாடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். வெளிநாடுகளில் பேசப்படும் மொழி தொடர்பில எந்த அறிவும் இன்றி என தந்தை பல இன்னல்களுக்கு முகங்கொடுத்து வந்தார். மேலதிகமாக சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக குளிர்காலத்தில் கூட பெஞ்சுகளில் நித்திரை செய்துள்ளார்.

புலம்பெயர்ந்தோர் தங்கள் வேலையை திருட்டுத்தனமாகவே செய்து வருகின்றனர் என சிலர் கூறுகின்றனர். ஏன் அப்படி கூறுகின்றார்கள்?

என் அப்பாவைப் போல பெரும்பாலான புகலிடக் கோரிக்கையாளர்கள் இந்த சூழ்நிலைகளுக்குள் தள்ளப்படுகின்றார்கள், ஏனெனில் அவர்கள் தங்கள் சொந்த மண்ணை விட்டு வெளியேறி புதிதாக ஏதாவது முயற்சியில் ஈடுபடுகின்றனர்.

என் அப்பா அழுது கஸ்டப்பட்ட அந்த தருணங்களை, எண்ணற்ற எண்ணங்களை என்னால் கணக்கிட முடியும். இந்த நிலையில் அவர் மீண்டும் இலங்கை சென்ற போது நிலைமை மாறியது.

என் அப்பா தனது சிறுவயது வீட்டிற்கு திரும்பி சென்று பார்த்த போது அவர் உடைந்து போனார். அதற்குப் பிறகு அவர் என்னை அழைத்து, அவரது குழந்தை பருவத்தின் நினைவுகள் மற்றும் அவர் இழந்த எல்லாவற்றையும் நினைத்துப் பார்த்தேன் என என்னிடம் தெரிவித்தார்.

என் 22 வருட வாழ்க்கையில், முதல் தடவையாக, நான் என் பெற்றோரின் தியாகம் பற்றி உணர்ந்தேன், நான் பெற்றுக் கொண்ட இந்த அனுபவங்களை அடிக்கடி கவனத்திற் கொள்வேன்.

அவர்கள் குழந்தைகளுக்காக ஆரம்பித்த வாழ்க்கை ஆடம்பரமாக எப்போதும் தொடங்கியதில்லை. ஆகவே, குடியேறியவர்களுக்கும் அகதிகளுக்கும் தீர்ப்பு வழங்குவதற்கு முன்பு இருமுறை நாம் யோசிக்க வேண்டும்.

கணக்கிலடங்கா புலம்பெயர்ந்தோரின் கடின உழைப்பால் அவர்களுக்கு கனடாவில் புகலிடம் வழங்கப்பட்டது. இங்கு வசிப்பதற்கு நாம் எப்பொழுதும் பெருமைப்படுவோம்” என கனடா வாழ் இலங்கை தமிழ்ப் பெண் வைதிகா (Vaithiga) கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.

கிளிநொச்சியில் மேடையில்லாத பாடசாலைக்கு கிடைத்த வெற்றி!!

கிளிநொச்சியில் மேடை இல்லாத சிவபாதகலையகம் பாடசாலையில் இருந்து முதல் தடவையாக தமிழ் தினப்போட்டிக்கு கொண்டு செல்லப்பட்ட நாடகம் முதலாம் இடத்தை பெற்றுள்ளது.

சிவபாத கலையகம் என்பது சிங்கள வன்செயல்களால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் கலையகம் எனும் பெயரால் ஆரம்பிக்கப்பட்ட பாடாசாலையாகும். இங்கு தென்னிலங்கையில் ஏற்பட்ட கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் பிள்ளைகளே கல்வி கற்று வருகின்றனர்.

மேடையே இல்லாத பாடசாலை ஒன்றில் இருந்து கொண்டு செல்லப்பட்ட நாடகமே வரலாற்றில் முதலிடத்தை பெற்றுக்கொண்டுள்ளது.

முதலியம் எனும் பெயரில் ஆசிரியர் க.விஜயசேகரம் என்பவரால் நெறியாள்கை செய்யப்பட்ட நாடகமாகும்.

கோட்ட மட்டத்தில் வெற்றிப்பெற்று பின்னர் மாவட்ட மட்டத்திலும் வெற்றியை பெற்று மாகாண மட்டத்திற்கு தெரிவாகியுள்ளது.

கடந்த 1983 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட் பாடசாலை வரலாற்றில் தமிழ் தினப்போட்டி ஒன்றில் மாணவர்கள் பங்குகொண்டு நாடகம் ஒன்றை அரங்கேற்றி வெற்றிப்பெற்றுள்ளமை பிரதேச மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேடை உள்ளிட்ட பல்வேறு வளப்பற்றாக்குறைகளுடன் செயற்படுகின்ற ஒரு பாடசாலையில் இவ்வாறு மாணவர்கள் வெற்றிப்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த மாணவர்கள் தங்களது பாடசாலையிலிருந்து பத்து பன்னிரண்டு கிலோ மீற்றருக்கு அப்பால் உள்ள நகர்புற பாடசாலைகள் மற்றும் பண்பாட்டு மன்றங்களுக்கு சென்று பல நாட்களாக பயிற்சிகளை பெற்றுள்ளனர்.

கடந்த காலங்களில் குறித்த பாடசாலையில் இருந்து தமிழ் தினப்போட்டி உள்ளிட்ட இணைப்பாட செயற்பாடுகளில் மாணவர்கள் பங்குபற்றுகின்றமை மிக மிக குறைவாகவே இருந்து வந்துள்ளன.

மாணவர்களிடம் ஆற்றல்கள் இருந்த போதும் அவை பயன்படுத்தப்பட வில்லை என்பது பெற்றோர்களின் கருத்தாக இருக்கிறது.

மாகாண மட்டத்திலும் தங்களது பிள்ளைகள் வெற்றிப்பெற வேண்டும் என்பதில் இப்பொழுதே மாணவர்கள் பெரும் ஆர்வத்தோடு காணப்படுகின்றனர்

யாழில் மீண்டும் வாள்களுடன் இளைஞர்கள் அட்டகாசம்!!

யாழ். பருத்தித்துறை – கற்கோவளத்தில் இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோதலில் ஈடுபட்ட நபர்கள் வாள்களாலும், பொல்லுகளாலும் மோசமான தாக்குதலை நடத்தியுள்ளனர். இதன்போது இரண்டு வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டதுடன், பொருட்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளன.

இதையடுத்து குறித்த பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டதுடன், பொலிஸாரின் நடவடிக்கையால் கலவரம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இரு குழுக்களாக பிரிந்து நின்று இளைஞர்கள் வாள்களுடனும், பொல்லுகளுடனும் வீதியில் ஓடியுள்ளனர். இதனால் மக்கள் அச்சமடைந்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் யாரும் கைது செய்யப்படவில்லை. இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

குவைத்தில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட இரு இலங்கையர்கள் கைது!!

குவைத் – கய்தான் பகுதியில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த இரண்டு இலங்கைப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் இருவரில் பெண் ஒருவரும் உள்ளடங்குவதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த இலங்கையர்கள் தங்கள் விடுதியில் பாலியல் தொழிலை மேற்கொண்டு வந்துள்ளனர்.

இந்த நிலையில் அந்நாட்டு பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு இணங்க குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவத்தை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து, விடுதிக்கு வாடிக்கையாளர்களைக் கொண்டுவருவதாக சந்தேகநபர் ஒப்புக்கொண்டார்.

மேலும், இந்த தொழிலில் மூன்று மாதங்களாக ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட இரு இலங்கையர்கள் தொடர்பில் அந்நாட்டு பொலிஸ் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் எனவும் அந்நாட்டு ஊடகம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.

தாய்மை அடைய சரியான வயது எது?

இன்றைய நவீன கால சூழலில் பெண்கள் வேலைக்கு செல்ல ஆரம்பித்து விட்டார்கள்.

படித்து முடித்து, ஒரு பணியில் அமர்ந்து அப்பணியில் ஒரு நிலையை அடைந்த பிறகுதான் திருமணம் என்று எண்ணுவதால் 35 வயதுக்குப் பிறகு திருமணம் புரியும் பெண்கள் ஏராளம்.

30 வயதைத் தாண்டி திருமணம் செய்யும்போது கருமுட்டை உருவாகத் தாமதம், கருச்சிதைவு, குறைமாதப் பிரசவம், எடை குறைவான குழந்தை என்பது போன்ற பிரச்சனைகள் வரலாம்.

இது போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்க முடியும். திருமணத்துக்கு முன்பும், கருத்தரிப்பதற்கு முன்பும் மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியமானதாகும்.

மருத்துவரின் வழிகாட்டுதலோடு மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும். கருமுட்டையை முன்பே எடுத்து ஃப்ரீஸ் செய்து வைப்பதன் மூலம் எந்த வயதிலும் குழந்தை பெறலாம்.

ஆனால் அது சோதனைக்குழாய் மூலம்தான் சாத்தியப்படும். இதில் நூறு சதவிகிதம் உத்தரவாதம் அளிக்க முடியாது. குறிப்பிட்ட வயதுக்குள் தாய்மை அடைவது மட்டுமே சரியானது.

23 வயதிலிருந்து 28 வயது வரை தாய்மை அடைவதற்கான சரியான வயது. மீறிப்போனால் 30 வயது வரை கூட இருக்கலாம். கூடுமான வரைக்கும் 30 வயதுக்குள் தாய்மை அடைந்து விட வேண்டும்.

அதிக ஆயுளுடன் மகிழ்ச்சியாக வாழவேண்டுமா : இதைச் செய்யுங்கள்!!

உலகில் வாழும் எல்லா மனிதர்களுக்கும் தாங்கள் அதிக நாட்கள் நோய் நொடியின்றி வாழ வேண்டும் என்பதே விருப்பமாக இருக்கும். சில எளிதான விடயங்களை அன்றாட வாழ்க்கையில் மேற்கொண்டால் இது நிச்சயம் சாத்தியமாகும்.

உணவுகள்

இன்று பலருக்கு இதய நோய், சர்க்கரை நோய் போன்ற ஆபத்தான நோய்கள் வர காரணமே அவர்களின் தவறான உணவு பழக்கம் தான்.

கலோரிகள், கொழுப்புகள் அதிகம் கொண்ட உணவுகள் சாப்பிட கூடாது.

இறைச்சிகள், எண்ணெயில் பொரித்த உணவுகளை குறைந்த அளவில் உண்பது நலம்.

அதே சமயத்தில் காய்கறிகள், பழங்கள், தானியங்கள் போன்றவற்றை சாப்பிடுதல் உடலுக்கு நன்மைகளை கொடுக்கும் மற்றும் ஆயுளை கூட்டும்.

உடற்பயிற்சி மற்றும் நடைபயிற்சி

உடல் எடையை சரியான அளவில் வைத்து கொள்ளவும், இரத்த கொதிப்பு, சர்க்கரை நோய், இதய நோய் போன்ற பல்வேறு நோய்கள் வராமல் தடுக்க உடற்பயிற்சியும், நடைபயிற்சியும் உதவுகிறது.

அது மட்டுமில்லாமல் உடற்பயிற்சியை தினமும் செய்தால் அந்த நாள் சுறுசுறுப்பாக நகரும்.

ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டு அதிக நேரம் வேலை செய்யும் இந்த கணினி யுகத்தில் உடற்பயிற்சி செய்ய வேண்டியது ஆயுளை நீட்டிக்க உதவும்.

குடும்பத்தினர்/ நண்பர்களுடன் நேரம் செலவிடுவது

மன அழுத்தம் என்பது இன்று உலகில் பலருக்கும் இருக்கும் நோயாகி விட்டது.

இதிலிருந்து விடுபட நமது குடும்பத்தினர்கள் மற்றும் நமது மனதுக்கு நெருக்கமான நண்பர்களுடன் நேரம் செலவிட வேண்டியது அவசியமாகும்.

’வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்’ என்ற பழமொழிக்கேற்ப நமக்கு பிடித்தமானவர்களுடன் மகிழ்ச்சியாக நேரம் செலவழித்தாலே அது ஆயுளை கூட்டும்.

புகைப்பிடிப்பது மற்றும் மது அருந்துவது

இந்த பாஸ்ட் புட் யுகத்தில் நல்ல உணவுகளை சாப்பிட்டாலே அது உடலுக்கு கேடு விளைவிக்கிறது.

கேடு விளைவிக்கும் என தெரிந்தே புகை பிடிப்பதையும், மது அருந்துவதையும் செய்தால் எப்படி?

ஆகவே, இந்த பழக்கங்களை விட்டுவிடுவது நன்மை பெயர்க்கும்.

பிடித்ததை செய்யுங்கள்

சிலருக்கு புத்தகம் படிக்க பிடிக்கும், சிலருக்கு கிரிக்கெட் விளையாடுவது பிடிக்கும்.

அது போல பலருக்கு பலவிதமான விடயங்களில் ஈடுபாடு இருக்கும். எப்போதும் வேலை என மனதை இறுக்கமாக வைத்து கொள்ளாமல் மனதுக்கு பிடித்த விடயங்களில் நம்மை ஈடுபடுத்தி கொள்வது மனதுக்கும் உடலுக்கும் புத்துணர்ச்சியை கொடுத்து நம்மை இளமையாக வைக்க உதவும்.

7 வாகனங்கள் மோதி நிகழ்ந்த விபத்து : பரிதாபமாக பலியான 4 இளைஞர்கள்!!

கனடா நாட்டில் கார் மீது லொறி ஒன்று மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் 4 வாலிபர்கள் பலியாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஓண்டாரியோ மாகாணத்தில் உள்ள Kingston நகரில் தான் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இரு தினங்களுக்கு முன்னர் வாலிபர்கள் 4 பேர் நள்ளிரவு வேளையில் காரில் வெளியே புறப்பட்டுள்ளனர்.

சில மணி நேரப்பயணத்திற்கு பின்னர் நெடுஞ்சாலை எண் 401 சாலையில் கார் சென்றபோது இக்கோர விபத்து நிகழ்ந்துள்ளது. சாலையின் எதிர்ப்புறமாக வந்த லொறி ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து கார் மீது பயங்கரமாக மோதியுள்ளது.

லொறி மோதிய வேகத்தில் தீப்பிடித்து வேகமாக எரிந்ததால் அதில் பயணித்த 4 பேரும் வெளியேற முடியாமல் காருக்குள் பலியாகியுள்ளனர்.

இவ்விபத்து நிகழ்ந்த சில வினாடிகளில் அடுத்தடுத்து வந்த 5 வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருவருக்கு படுகாயம் ஏற்பட்டதால் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த வந்த பொலிசார் லொறி ஓட்டுனரான Dunhill Tabanao என்ற 37 வயதான நபரை கைது செய்தனர். எனினும், உயிரிழந்த 4 வாலிபர்கள் குறித்து பொலிசார் தகவல் எதுவும் வெளியிடவில்லை.

பொலிசார் நடத்திய விசாரணையில் லொறி ஓட்டுனர் மீது தவறு இருந்தது தெரியவந்துள்ளதால் பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அவரிடம் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏமாற்றிய காதலியால் 8 வருடமாக குப்பை பொறுக்கும் காதலன்!!

ஜேர்மனியை சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் பிலிப்பைன்ஸில் உள்ள ஒரு பெண்ணால் ஏமாற்றப்பட்டு கடந்த 8 ஆண்டுகளாக உணவுக்காக குப்பை பொறுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

சுற்றுலா மேற்கொள்வதற்கு சிறந்த இடமாக விளங்கும் பிலிப்பைன்ஸில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஏமாற்றப்படுவது அதிகமாக நடக்கிறது.

அந்த வகையில் கிறிஸ்டோப் எனும் 49 வயது ஜேர்மானிய நபர் ஒருவர், பிலிப்பைன்ஸில் உள்ள பெண்ணை தீவிரமாக காதலித்துள்ளார்.

சமூக வலைதளம் ஒன்றில் சந்தித்து கொண்ட இருவரும் நாளடைவில் காதலர்களாக மாறியுள்ளனர். பெண்ணை கண்டதுமே காதலிக்க தொடங்கிய கிறிஸ்டோப் அந்த பெண்ணை பின்னர் ராணி மாதிரி பார்த்துக்கொண்டுள்ளார்.

தன்னை கண்மூடித்தனமாக விரும்புவதை அறிந்த அந்தப்பெண் நேரம் பார்த்து கிறிஸ்டோபின் பணம், கடவுச்சீட்டு, விசா மற்றும் உடமைகள் அனைத்தையும் திருடிவிட்டு தப்பி சென்றுவிட்டார். இதனால் கடும் அதிர்ச்சிக்கு உள்ளான அந்த ஜேர்மானிய நபர் ஒருகட்டத்தில் தேடுவதை நிறுத்தி பிழைத்துக்கொள்ள வழி தேடியுள்ளார்.

பிலிப்பைன்ஸில் யாரையும் தெரியாது என்பதால் தெருக்களில் குப்பை பொறுக்கி கொண்டும், பிச்சை எடுத்துக்கொண்டும் கடந்த 8 ஆண்டுகளாக கிறிஸ்டோப் பிழைப்பு நடத்தி வருகிறார்.

இதனிடையே பிலிப்பைன்ஸ் சென்ற சுற்றுலா பயணி ஒருவர் கிறிஸ்டோப் குறித்து பேஸ்புக்கில் பதிவிட்ட பிறகு தான் இது போன்ற சிக்கலில் கிறில்டோப் இருப்பது தெரியவந்தது.

இது போன்று அதிக அளவில் பிலிப்பைன்ஸில் நடப்பதாகவும் கூறப்படுகிறது. பேஸ்புக் பாதிவைப் பார்த்து கிறிஸ்டோபை அவரது உறவினர்கள் தேடி வருவார்கள் என்று நம்புகின்றனர்.

மீண்டும் பயங்கரம் : காதலியை 6 பேருடன் சேர்ந்து பலாத்காரம் செய்து கொன்ற காதலன்!!

 
இந்தியாவில் திருமணம் செய்ய மறுத்த காதலியை 6 நண்பர்களுடன் சேர்ந்து பலாத்காரம் செய்து காதலன் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநிலத்தில் உள்ள Rohtak என்ற நகரில் தான் இக்கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதே நகரை சேர்ந்த 23 வயது இளம்பெண்ணை சுமித் குமார் என்பவர் காதலித்து வந்துள்ளார். ஆனால், ஒரு சூழலில் திருமணம் செய்ய முடியாது என காதலி மறுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த காதலன் சரியான நேரம் பார்த்து காத்திருந்துள்ளார். கடந்த மே 9ம் திகதி அலுவலகத்திற்கு செல்ல பெண் புறப்பட்டபோது அவரை காரில் காதலன் கடத்தியுள்ளார்.

பின்னர், தனது 6 நண்பர்களை வரவழைத்து இளம்பெண்ணை துடிக்க துடிக்க பலாத்காரம் செய்துள்ளான். இச்சம்பவத்திற்கு பின்னர் பொலிசாரிடம் சிக்கக்கூடாது என்பதற்காக இளம்பெண்ணின் தலையை கல்லால் அடித்து சிதைத்துள்ளனர்.

இதிலும் திருப்தி அடையாத கொடூரன்கள், இளம்பெண்ணை கீழே படுக்க வைத்து அவரது தலை மீது காரை ஏற்றியுள்ளனர். பின்னர், உடல் முழுவதும் சிதைக்கப்பட்டதும் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர்.

இச்சம்பவத்திற்கு பின்னர், ஓரிடத்தில் மனித உடலை நாய்கள் கடித்துக்கொண்டு இருப்பதை பார்த்த நபர் பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார்.

பொலிசார் சோதனை செய்தபோது அது காணாமல் போன இளம்பெண் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணையை தீவிரப்படுத்திய பொலிசார் சுமித் குமார் மற்றும் அவருடைய மற்ற ஒரு நபரை கைது செய்துள்ளனர். இளம்பெண்ணை பலாத்காரம் கொலை செய்ததாக இருவரும் பொலிசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ள நிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது.