மனைவியின் நடத்தையில் சந்தேகம் : கணவன் செய்த வெறித்தனமான செயல்!!

தமிழ்நாட்டில் மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு அவரை அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ள கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள உபகாரமாதாபுரத்தைச் சேர்ந்தவர் ஜான்பால் (37) இவர் மனைவி பொன் இசக்கி (28). இவர்களுக்கு பிரசாந்த் (7) மற்றும் செல்வ ரோஜா (6) என இரு மகள்கள் உள்ளனர்.

சில மாதங்களாக இசக்கியின் நடத்தையில் ஜான்பாலுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வெளியில் சென்று விட்டு நேற்றிரவு ஒரு மணிக்கு ஜான்பால் வீட்டுக்கு வந்துள்ளார்.

வீட்டின் கதவை அவர் தட்ட, வெகுநேரம் கழித்தே இசக்கி கதவை திறந்துள்ளார். இவ்வளவு நேரம் வீட்டின் உள்ளே என்ன செய்து கொண்டிருந்தாய் என ஆத்திரமடைந்த ஜான்பால் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து வந்து மனைவியை சரமாரியாக வெட்டியுள்ளார்.

ரத்த வெள்ளத்தில் துடித்த இசக்கி கீழே சரிந்து அந்த இடத்திலேயே உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து ஜான்பால் நேராக காவல் நிலையம் சென்று சரணடைந்துள்ளார்.

இசக்கியின் சடலத்தை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பிய பொலிசார் இது குறித்து ஜான்பாலிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மகளைக் கொன்றவர்களை கண் முன்னே தூக்கிலிடுங்கள் : கதறிய தாய்!!

தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்தவர்களை தன் கண் முன்னால் தூக்கிலிட வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் கூறியுள்ளார்.

ஹரியானா மாநிலம் ரோத்தக்கில் இளம்பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு மிகக்கொடூரமான முறையில் கொல்லப்பட்டார்.

அவரது முகத்தில் கல்லை தூக்கிப்போட்டு கொலை செய்துள்ளனர். சடலத்தை ஒதுக்குப்புறமான இடத்தில் விட்டுச் சென்றதால் நாய்கள் சடலத்தை குதறி சிதைத்தன. ஒட்டுமொத்த இந்தியாவும் இச்சம்பவத்தால் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.

இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக அவரது குடும்பத்தினர் பகிர்ந்து கொண்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

“அவள் எங்கள் வீட்டின் கண்ணுக்கினிய பொம்மை. நாங்கள் எங்கள் மகனைக் காட்டிலும் மகளை அதிகளவில் நேசித்தோம். அவளுடைய கனவுகளை நிறைவேற்ற இயன்றவரை முயற்சித்தோம்.

உடை, உணவு போன்ற சிறு தேவைகளில்கூட கவனம் செலுத்தினோம். வெளியூர் சென்று திரும்பும் போதெல்லாம் அவளுக்கு சிறிய பரிசு வாங்கிவருவது எனது வழக்கம்.

என் மகள் நன்றாகப் படிப்பாள். ஆசிரியையாக வேண்டும் என்பதே அவளது கனவு. ஆனால், என்னால் நிதியுதவி செய்ய முடியவில்லை.

எனது கடன் சுமையைப் புரிந்து கொண்டு அருகில் இருந்த மருந்துக் கடையில் வேலைக்குச் சென்றார்” எனத் தனது மகளைப் பற்றிய சில சம்பவங்களை நினைவு கூர்ந்தார் அவரது தந்தை.

எனது மகளைக் கொன்றவர்கள் வெறும் 5 நிமிடங்களில் அந்தக் கொடூரத்தை செய்துவிட்டனர். அவர்களை என் கண் முன்னால் தூக்கிலிட்டு கொல்லுங்கள்.

இதற்காக நான் வாரக் கணக்கில், மாதக் கணக்கில் காத்திருக்க முடியாது. என் மகள் ஆசைப்பட்டாள் என்றே இரண்டு நாட்களுக்கு முன் அவளுக்கு ஒரு சங்கிலி வாங்கிக் கொடுத்தேன்.

அவள் ஆசைப்பட்ட அந்த சங்கிலிதான் அவள் சடலத்தை அடையாளம் காட்ட உதவும் என நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை.

எனது மகளுக்கு நேர்ந்த கொடுமை நிர்பயாவுக்கு நேர்ந்த கொடுமையைக் காட்டிலும் மோசமானது என்று கதறி அழுதுள்ளார் அவரது தாயார்.

மலேசிய விமானநிலையத்தில் 330 அரியவகை ஆமைகளை கைப்பற்றியுள்ள சுங்கத்துறையினர்!!

 
உலகில் மிகவும் அறியதும், ஆபத்தான நிலையில் உள்ள ஆமையினமாக அறிவிக்கப்பட்டுள்ள 330 ஆமைகளை கோலாலம்பூர் சர்வதேச விமான நிலைய சுங்கப்பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.

உலகில் ஆபத்து நிறைந்த ஆமைகளை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் மலேசிய சுங்கத்துறை அதிகாரிகள் மும்முரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் மடகஸ்கர் தீவிலிருந்து கடத்திவரப்பட்டுள்ள சுமார் 5 கோடி பெறுமதியுள்ள 330 அரிய ஆமைகளை பறிமுதல் செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.

மேலும் பிடிக்கப்பட்ட ஆமைகள் அனைத்தும் கதிர்விச்சு பாய்ச்சலுக்குட்பட்ட நிலையில், மேலோடுகள் மிகவும் அழகாக இருப்பதோடு, இவற்றின் தோற்றம் காரணமாக சர்வதேசமளவில் குறித்த ஆமைகளுக்கான கேள்விகள் அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளமாய் குறிப்பிடத்தக்கது.

சிறையை உடைத்து தப்பிய 17 குற்றவாளிகள் சுட்டுக்கொலை!!

பப்புவா நியூகினியாவில் புய்மோ சிறையை உடைத்து, தப்பித்து சென்ற குற்றவாளிகளை தேடும் நடவடிக்கையின் போது, சுமார் 17 கைதிகள் சுட்டு கொல்லப்பட்டுள்ளதாகவும், மேலும் 57 பேரை தேடும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக புய்மோ சிறைசாலை பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது.

பப்புவா நியூ கினியாவின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான லே நகரிலுள்ள புய்மோ சிறையில் கொலை, கொள்ளை உள்ளிட்ட பாரிய குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்ட கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், கடந்து வெள்ளிக்கிழமை கைதிகள் குழுவொன்று சிறையின் சுற்றுச்சுவரை உடைத்து தப்பிசென்றுள்ளனர். இச்சூழலில் பாதுகாப்பு பணியிலிருந்த பொலிஸார் தப்பியோடிய கைதிகள் மீது நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சுமார் 17 கைதிகள் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.

மேலும் சிறைக்கு அண்மையில் பதுங்கியுள்ளதாக நம்பப்படும் 57 கைதிகளை தேடும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு கடந்த வருடம் குறித்த சிறைச்சாலையிலிருந்து தப்பியோடிய 12 கைதிகள் சுட்டுக் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

லண்டனில் சரே அணிக்காக சதம் விளாசிய சங்கக்கார!!

இங்கிலாந்தின் லண்டனில் நடைபெற்றுவரும் ரோயல் லண்டன் ஒருாநாள் கிண்ணத் தொடரின் நேற்றைய ஹம்சையர் அணிக்கெதிரான போட்டியில் குமார் சங்கக்கார 124 ஓட்டங்களை விளாசியுள்ளார்.

இந்த போட்டியில் 238 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு சரே அணி துடுப்பெடுத்தாடிய போதே சங்கக்கார சதம் விளாசியுள்ளார்.

இவர் ஆட்டமிழக்காமல் 121 பந்துகளில் 2 ஆறு ஓட்டங்கள் மற்றும் 13 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 124 ஓட்டங்களை குவித்து சரே அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்துள்ளார்.

இலங்கை அணியின் முன்னாள் வீரர் குமார் சங்கக்கார தற்போது லண்டனில் நடைபெற்றுவரும் ரோயல் லண்டன் ஒருநாள் கிண்ணத் தொடரில் சரே அணிக்காக விளையாடிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நபரொருவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை!!

கம்பஹா ரயில் நிலையத்துக்கு அருகில் வைத்து நபரொருவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

சம்பவத்தில் மினுவாங்கொடை பகுதியைச் சேர்ந்த 38 வயதான நபரொருவரே இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

குறித்த நபர் கலால் திணைக்களத்தில் வாகன சாரதியாக பணியாற்றி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த நபர் தற்கொலை செய்துக்கொண்டதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லையென்பதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ் பல்கலை மாணவர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில்!!

இன்று காலை 11.30 அளவில் யாழ் பல்கலைக்கழகத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று மாணவர்களால் முன்னெடுக்கப்படவுள்ளது.

புங்குடுத்தீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் விசாரணைகளை யாழ் மேல் நீதிமன்றில் நடாத்த கோரியும், யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரால் கொல்லப்பட்டமைக்கு நீதி கோரியும் மேற்குறித்த இரு விடயங்களுக்கும் அரசு 30 நாட்களுக்குள் உரிய பதிலை வழங்க வேண்டும் என தெரிவித்தும் அவர்கள் இந்த நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளனர்.

வவுனியாவில் நிரந்தர நியமனம் கோரி 12வது நாளாக சுகாதார தொண்டர்கள் போராட்டம்!!

 
நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி கடந்த 04.05.2017 பிராந்திய வைத்திய அதிகாரியின் அலுவலகத்திற்கு முன்பாக வவுனியா சுகாதார தொண்டர்கள் முன்னெடுத்துள்ள கவனயீர்ப்பு போராட்டம் 12வது நாளாக இன்றும் (15.05.2017) தொடர்கின்றது.

வடக்கில் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக பணியாற்றிய சுகாதார தொண்டர்களே இக் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சுகாதார தொண்டர்கள், தமக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லையென குறிப்பிட்டுள்ளனர்.

கஷ்டப் பிரதேசங்களிலும், இக்கட்டான சூழ்நிலைகளிலும் சேவையாற்றிய தமது நியமனம் குறித்து இதற்கு முன்னர் பல போராட்டங்களை முன்னெடுத்திருந்த போது வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லையென தெரிவிக்கும் சுகாதார தொண்டர்கள், இம்முறை தமக்கு உறுதியான தீர்மானம் வழங்கப்படும் வரை போராட்டம் தொடருமென குறிப்பிட்டுள்ளனர்.

சுகாதார தொண்டர்களின் போராட்டத்திற்கு சென்ற வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் போராட்டகாரர்களுடன் கலந்துரையாடி அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்ததுடன் தீர்வை பெற்று தருவதாகவும் உறுதிமொழி வழங்கியிருந்தார்.

       

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்ட இடத்திற்கு மஸ்தான் எம்.பி விஜயம்!!

 
வவுனியாவில் போராட்டத்தினை மேற்கொண்டு வரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தொடர்ந்தும் சுழற்சி முறையில் இன்று (15.05.2017) 81வது நாளாகவும் மழை, வெயில் என்பவற்றை பெருட்படுத்தாது தற்காலிக தகரக் கொட்டகைக்குள் தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

கையளிக்கப்பட்ட தமது உறவினர்களை விடுவிக்கக்கோரியும், அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரியும், பயங்கரவாதச் சட்டத்தினை நீக்குமாறு கோரியும் தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

இப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் சென்று பார்வையிட்டதுடன் அவர்களுடன் கலந்துரையாடினர்.

இதன்போது தீர்வு கிடைக்கும் வரை இச் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்தனர்.

வவுனியாவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சுகாதார தொண்டர்களை சந்தித்த மஸ்தான் எம்.பி!!

 
கடந்த யுத்த காலத்தில் சுகாதார தொண்டர்களாக பணியாற்றியும் தமக்கான நிரந்தர நியமனங்கள் வழங்கப்படாததன் காரணமாக தமக்கான நிரந்தர நியமனம் கிடைக்கும் வரை வவுனியா சுகாதார வைத்திய அதிகாரியின் பிரதான அலுவலகத்திற்கு முன்பாக தொடர் ஈடுபட்டுள்ளவர்களை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இனத்தலைவருமான கே.காதர் மஸ்தான் நேரில் சென்று சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களால் வட மாகாணத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 820 தொண்டர்களுக்கும் நிரந்தர நியமனத்தை பெற்றுத்தர உதவுமாறு கேட்டுக்கொண்டனர்.

அத்துடன் கடந்த யுத்த காலத்தில் பல வருடங்களாக பணியாற்றிய தமக்கு நியமனங்கள் வழங்கப்படாமல் பின்னர் பலருக்கு அரசியல் ரீதியாக வழங்கப்பட்டுள்ளதாகவும் தற்போதைய அரசாங்கத்தின் சுற்றறிக்கையின் அடிப்படையில் தாம் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்தனர்.

மேலும் வடக்கில் இறுதியாக இடம்பெற்ற டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தில் தாம் கலந்துகொண்டு பணியாற்றியதாகவும் குறித்த வேலைத்திட்டம் முடிந்த பின்னர் தாமும் கை விடப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து மஸ்தான் எம்.பி கருத்து தெரிவிக்கையில், உண்மையிலேயே யுத்த காலத்தில் வைத்திய, சுகாதார துறைகளில் பணியாற்றியவர்கள் போற்றப்படக்கூடியர்கள் கடந்த ஆட்சியில் தாம் விரும்பியவர்களுக்கு அரசியல்வாதிகளால் வேலைவாய்ப்புக்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டாலும் இந்த நால்லாட்சியில் தகுதி உடையவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகின்றது.

எனினும் இந்த தொண்டர்கள் யுத்த காலத்தில் சேவையாற்றியவர்கள். ஒரு சிலர் 15 வருடங்களும் சேவையாற்றி இருக்கின்றனர் எனவே இவ்வாறானவர்களுக்கு தகமை அடிப்படையன்றி சேவை அடிப்படையிலாவது அவர்களுக்கான நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும்.

மேலும் எமது நல்லாட்சியின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் ஜனாதிபதியாவதற்கு முன்னர் சுகாதார அமைச்சராகவே இருந்திருக்கின்றார் ஆகவே இந்த விடயம் தொடர்பில் அவரிடம் நேரடியாகவே கலந்துரையாடி இந்த தொண்டர்களின் நிலையினை உணர்த்தி அவர்களுக்கான வேலை வாய்ப்பினை பெற்றுக்கொடுக்க முயற்சிப்பேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

வவுனியாவில் அரசியல் பிரமுகர்கள் முன்னிலையில் ஊடகவியலாளர் மீது தாக்குதல்!!

வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டம் இன்று (15.05.2017)இடம்பெற்ற நிலையில் ஊடகவியலாளர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார்.

குறித்த கூட்டம் அமைச்சர் ரிசாட் பதியுதீன், முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், காதர் மஸ்தான் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிலையில் குறித்த கூட்டத்தின் போது செய்தி சேகரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர் ஒருவரை மாவட்ட செயலக அரச அதிகாரி ஒருவர் தாக்கி அங்கிருந்து வெளியேற்ற முற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் இடம்பெற்றபோது அங்கு நின்ற ஏனைய ஊடகவியலாளர்களும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து மாவட்ட செயலக அரச அதிகாரி அதிலிருந்து விலகிச் சென்றுள்ளார்.

வவுனியா ஊடகவியலாளர் சங்கத்திற்கும் இடம் ஒதுக்க வேண்டும் : காதர் மஸ்தான்!!

 
வவுனியா மாவட்டத்திலுள்ள வர்த்தக சங்கம், கட்டிட நிர்மாணப்பொருள்கள் விற்பனையாளர்கள் சங்கம் என்பனவற்றிற்கு இடம் ஒதுக்கும்போது, முச்சக்கரவண்டி சங்கம் , ஊடகவியலாளர் சங்கம் என்பவற்றுக்கும் இடம் ஒதுக்குமாறு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான கே.காதர் மஸ்தான் தெரிவித்தார்.

மாவட்ட அரசாங்க அதிபர் ரோஹன புஷ்பகுமார தலைமையில் இன்று (15.05.2017) இடம்பெற்ற வவுனியா மாவட்டத்துக்கான மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

வவுனியா மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பேரூந்து தரிப்பட மத்திய நிலையத்துக்கு அருகாமையில் முதலமைச்சர் அனுமதி வழங்கினால் வவுனியா வர்தக சங்கத்திற்கும் கட்டிட நிர்மாணப்பொருள்கள் விற்பனையாளர் சங்கம் என்பவற்றுக்கு இடம் ஒதுக்கும்பொழுது அவற்றுடன் ஊடகவியலாளர் சங்கத்திற்கும் முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கத்திற்கும் இடம் ஒதுக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

மேலும் குறித்த கலந்துரையாடலில் வவுனியா புதிய பேரூந்து பஸ் தரிப்பிட நிலையத்தை மீண்டும் பயன்படுத்துதல், வவுனியா மன்னார் பிரதான வீதியை விரைவில் காபட் வீதியாக மாற்றுதல், காணிகள் தொடர்பான பிரச்சினைகள், மற்றும் இந்த வருடத்தில் செயற்படுத்தப்பட்ட அபிவிருத்தி வேலைத் திட்டங்கள், எதிர்கால திட்டமிட்டல்கள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டன.

குறித்த மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டத்தில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அமைச்சர் றிசாட் பதியுதீன், பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், சி.சிவமோகன், சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா உட்பட மாகாண அமைச்சர்கள், உறுப்பினர்கள், நிர்வாகம் சார் உயரதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

வவுனியா இளைஞர்கள் குத்துச் சண்டையில் 7 தங்கப்பதக்கங்களைப் பெற்று சாதனை!!

 
வவுனியாவைச் சேர்ந்த இளைஞர்கள் குத்துச் சண்டையில் 7 தங்கப்பதக்கங்களையும் 2 வெள்ளிப்பதக்கங்களையும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

அகில இலங்கை ரீதியில் கடந்த 12 மற்றும் 13.05.2017 திகதிகளில் இரண்டு நாட்கள் கண்டியில் நடைபெற்ற குத்துச்சண்டைப் போட்டியில் 9 பதக்கங்களை வெற்றி பெற்ற மாணவர்கள் இந்தியாவில் நடைபெறவுள்ள குத்துச்சண்டை போட்டிக்கு தெரிவாகியுள்ளனர்.

இக் குத்துச்சண்டைப் போட்டியில் இரண்டு பெண் வீராங்களைகள் மற்றும் 7 வீரர்கள் கலந்துகொண்டு வடமாகாணத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

பி.கரிஸ்ணா, சி.சிறிதர்சன், ம.சுஜித், எம்,சப்னா, த.தர்சிகா விணோசினி,ப.சுஜிவலக்மால் ஆகியோர் தங்கப் பதக்கத்தையும், எஸ்.சங்கீதன், த.டினேஸ் வெள்ளிப்பதக்கங்களையும் தனதாக்கியுள்ளனர்.

இந்தியாவில் நடைபெறவுள்ள குத்துச்சண்டை போட்டிக்கு தெரிவாகியுள்ள குத்துச்சண்டை மாணவர்கள் தகுந்த பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் வவுனியா நகரசபை மன்டபத்தில் பயிற்சியில் ஈடுபடுவதை காணக்கூடியதாக இருக்கிறது. இவர்களில் 5 பேர் பாடசாலை மாணவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வவுனியா மாவட்டத்தின் குத்துச்சண்டை பயிற்றுவிப்பாளராகிய எஸ்.நந்தகுமார் இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில்..

கடந்த காலங்களில் வடமாகாணத்தை பிரநிதித்துவப்படுத்தி வவுனியாவிலிருந்து குத்துச்சண்டை மாணவர்களை தயார்படுத்தி வெற்றிகளை பெற்று வந்துள்ளோம். எமது மாணவர்கள் குறைந்த வளங்களுடன் தொடர்ச்சியாக பயிற்சியில் ஈடுபட்டு வெற்றிபெற்று வருகிறார்கள்.

இது தொடர்பாக விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் அதிகாரிகளுடன் தொடர்புகளை மேற்கொண்டு அறிவித்து வருகிறேன் எமது மாணவர்கள் மிகவும் வறுமைக் கோட்டுக்கு உட்பட்டவர்களாக இருக்கிறார்கள், அவர்களுக்கான சத்துணவு கொடுப்பனவுகள் வழங்கப்பட்டால் எமது மாணவர்கள் மென்மேலும் சாதனை படைப்பார்கள் என தெரிவித்தார்.

 

வவுனியாவில் புகையிரதக்கடவையில் ரயில்மோதி இருவர் பலி!!

 
வவுனியா, புதூர் செல்லும் வீதியிலுள்ள புகையிரதக் கடவையில் இன்று (15.05) பிற்பகல் ரயிலுடன் உழவு இயந்திரம் மோதிய விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

கொழும்பிலிருந்து இன்று பிற்பகல் 1.35 மணியளவில் யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற ரயில் வவுனியா, புளியங்குளம் புதூர் ஆலயப்பகுதியிலிருந்து பிரதான கண்டி வீதிக்கு மணல் ஏற்றப்பட்ட உழவு இயந்திரம் சென்றபோது புதூர் பகுதியிலுள்ள பாதுகாப்பற்ற புகையிரதக்கடவையை உழவு இயந்திரம் கடக்கும்போது திடீரென வந்த ரயிலுடன் உழவு இயந்திரம் மோதியதில் உழவு இயந்திரத்தின் சாரதி, மற்றும் உதவியாளரான ஜெகநாதன் ரவீதரன் வயது 20, ரவீந்திரன் கீர்த்தீபன் 21வயது புதூர், மற்றும் புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த இருவரும் உயிரிழந்துள்ளனர் ​.​

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை புளியங்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் குடும்பப் பெண் சடலமாக மீட்பு!!

 
வவுனியா நெளுக்குளத்தில் இன்று (15.05.2017) காலை 9.30 மணியளவில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் குடும்பப் பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியா நெளுக்குளம், புதையல்பிட்டியில் வசித்துவரும் ஆறு மாத கைக்குழந்தையின் தாயான சுதன் வாணி (வயது 24) என்ற இளம் குடும்பப் பெண்ணே இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் இவரது சொந்த இடமான கிளிநொச்சிக்கு அவரது வீட்டுக்கு காலை சென்று மீண்டும் மாலை வீடு திரும்பியுள்ளார். இன்று காலை எழுந்து வீட்டு வேலைகள் எல்லாம் முடித்து மாமனாருக்கு காலை உணவைத் தயார் செய்து அவருக்கு வழங்கியுள்ளார். மாமனார் கூலி வேலைக்கு சென்றுள்ளார்.

கணவன் கடைக்கு பொருட்கள் வாங்க சென்று வீட்டுக்கு திரும்பி வரும் போது ஆறு மாதக் கைக்குழந்தை தொட்டிலில் இருந்து அழுதுகொண்டிருந்துள்ளது. குறித்த பெண்ணின் கணவர் குழந்தையை தூக்கி கொண்டு தாயை தேடிய போது தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.

இவரின் மரணத்திற்கான காரணம் என்ன என நெளுக்குள பொலிஸார் வவுனியா குற்றத்தடுப்பு பொலிசாருடன் இணைந்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

இலங்கையின் வறுமைக்கு போதைப் பொருள் பாவனையே பிரதான காரணம்!!

இலங்­கையின் வறு­மைக்கு போதைப்­பொருள் பாவ­னையே பிர­தான கார­ண­மாகும் .இந்த நிலை­மையே உலக நாடு­க­ளிலும் காணப்­ப­டு­கின்­றது. எனவே அனைத்து பௌத்த நாடு­க­ளையும் உள்­ள­டக்­கிய சர்­வ­தேச பௌத்த வலை­ய­மைப்பு ஒன்றை கண்டி பிர­க­டனம் ஊடாக உரு­வாக்­கப்­ப­டும் என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார்.

சர்­வ­தேச வெசாக் தின இறுதி நாள் நிகழ்­வுகள் நேற்று கண்டி தலதா மாளி­கையில் இடம்­பெற்­றன. இதில் கலந்­து­கொண்டு உரை­யாற்றும் போதே ஜனா­தி­பதி மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் அங்கு தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்,

பல தசாப்­­தங்­களின் பின்னர் இலங்­கை க்கு இவ்­வா­றா­ன­தொரு சந்­தர்ப்பம் கிடைத்­துள்­ளது. சுதந்­தி­ரத்­திற்கு பின்னர் உலகில் 72 நாடுகள் இலங்கை வந்து பௌத்த மாநாடு ஒன்றில் கலந்­து­கொண்­டுள்­ளன. சர்­வ­தேச வெசாக் தினத்தில் பௌத்த சிந்­த­னை­களை உல­கிற்கு கற்றுக் கொடுக்கும் வகையில் ஒரு வார­கா­ல­மாக நடத்­திய பெளத்த மாநா ட்டின் இறுதி நாள் இன்­றாகும்.

இவ்­வா­றா­ன­தொரு பௌத்த மாநாட்டை இலங்­கையில் நடத்த கிடைத்­தமை பெரும் பாக்­கி­ய­மா­கவே கருத முடி­கின்­றது. இந்­திய பிர­தமர் மற்றும் நேபாள ஜனா­தி­பதி உள்­ளிட்ட 72 உலக நாடு­களின் முக்­கி­யஸ்­தர்கள் இலங்கை வந்துள்ளமை என்­பது எளி­தான விட­ய­மல்ல.

நிலை­யான அபி­வி­ருத்தி மற்றும் நிலை ­யான சமா­தானம் என்­ப­வற்றை கருப்­பொ­ரு­ளாக கொண்டு சர்­வ­தேச பௌத்த மாநாடு நடை­பெறுகின்­றது. உலக மக்­க­ளுக்கு பௌத்த தர்ம சிந்­த­னை­களை கற்­பிக்க வேண்­டிய தேவை தற்­போது காணப்­ப­டு­கின்­றது. இதனால் தான் இங்கு வருகை தந்த 72 நாடு­களின் இணக்­கப்­பாட்­டுடன் கண்டி பிர­க­டனம் அறி­விக்­கப்­ப­டு­கின்­றது.

பௌத்த தர்­மத்தின் எதிர்­கால உலக நட­வ­டிக்­கைகள் தொடர்பில் பிர­க­டனம் ஒன்றை வெளியிட கிடைத்­தமை இலங்­கைக்கு முக்­கி­ய­மா­ன­தாகும். உலகில் அனைத்து இடங்­க­ளிலும் மோதல்கள் காணப்­ப­டு­கின்­றன. இவ்­வா­றான மோதல்கள் குடும்­பத்­தி­லி­ருந்து அனைத்து இடங்­க­ளிலும் காணப்­ப­டு­கின்­றன. பல்­வேறு மோதல்கள் காணப்­ப­டு­கின்­றன. வட கொரியா மற்றும் தென் கொரி­யா­விற்கும் இடையில் மிகவும் தீர்க்­க­மான நிலை­மையே ஏற்­பட்­டுள்­ளது.

அதனால் கண்டி பிர­க­ட­னத்தின் ஊடான உலக வாழ் அனைத்து பௌத்­தர்­க­ளையும் ஒன்­றி­ணைத்து சர்­வ­தேச வலை­ய­மைப்பை உரு­வாக்கி உலக சமா­தா­னத்­திற்­காக செயற்­பட வேண்­டி­யுள்­ளது. இது பெரு­மைக்­குரிய விட­ய­மாகும். வறுமை தொடர்பில் பேசும் போது அனைத்து நாடு­க­ளுக்கும் பொது­வான பிரச்­சி­னையே காணப்­ப­டு­கின்­றது. போதைப்­பொ­ருளை அதி­க­மாக பயன்­ப­டுத்­து­வது ஏழை மக்­க­ளாகும்.

இலங்­கையில் வறுமை அதி­க­ரிக்க போதைப்­பொருள் பயன்­பாடே பிர­தான காரணம் என ஆய்வு அறிக்­கைகள் கூறு­கின்­றன. வலய நாடு­க­ளிலும் இந்த நிலை­மையே காணப்படுகின்றது. எனவே கண்டி பிரகடனத்தின் ஊடாக பிரச்சினைகளை தீர்த்து கொள்ள வாய்ப்பு கிடைக்கின்றது. எனவே கண்டி பிரகடனத்திற்காக அனைத்து உலக பௌத்த நாடுகளும் ஒன்றிணைந்து வலையமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும். இதற்கு தலைமைதாங்க இல ங்கை பங்களிப்புடன் செயற்படும்.